Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-5972.jpg

நான் கறுப்பு ஜேர்மன்காரன்  :cool:

நான் கறுப்பு ஜேர்மன்காரன் -
நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை...
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  கஷ்ரப்பட்டு செய்யாத  வேலைகள் இல்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  கூட்டாத றோட்டுக்கள் இல்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை.
நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  பப்புக்கு போகாத நாளில்லை
நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆர் வீட்டை போகேக்கையும் ரெலிபோன் அடிக்காமல் நேர போய் நிப்பன்

நான் கறுப்பு ஜேர்மன்காரன்  ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது
நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஏதும் பேப்பர் நிரப்போணும் எண்டால் கதை கந்தல்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும்
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  கார் லைசன்ஸ் தமிழிலதான் செய்தனான்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் சோறு வெரி இம்போட்டன்ற்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் செவ்வாய் வெள்ளி நோ மச்சம்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுவாசல்ல தேசிக்காய் செத்தல் மிளகாய் கட்டி தொங்க விட்டிருப்பன்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் தூர இடம் கார்ல போறதெண்டால் பக்திப்பாட்டுதான் கேட்டுக்கொண்டு போவன்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் எப்பவும் ராசிபலன் பாத்துதான் நடப்பன்

நான் கறுப்பு ஜேர்மன்காரன்  எங்கட கொண்ட்டாட்டங்களுக்கு போய் வீட்டுக்குள்ள வாறதெண்டால்  மூண்டுதரம் துப்பிப்போட்டுதான் வீட்டுங்குள்ள வருவன்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுக்குள்ள 24மணி நேரமும் தமிழ் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆனால் ஜேர்மன்காரன் நம்பவே மாட்டான் ஜேர்மன் பாசையில பிச்சு வாங்குவன்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 40,50வருசம் இஞ்ச இருக்கிறத பெருமையாய் நினைப்பன்
நான் கறுப்பு ஜேர்மன்காரன்  இன்னும் சாதி பாப்பன்
நான் கறுப்பு ஜேர்மன்காரன் சிலோன்காரரை கண்டால் கொப்பர் என்ன தொழில் எண்டு கேட்பன்

இப்படிக்கு
கறுவல் குமாரசாமி

  • Like 9
  • Haha 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட கறுப்பு ஜேர்மன்காரா இவ்வளவு சுதந்திரமும் போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பிறந்த "மண் வாசனை" ..வெளிநாட்டுக்கு வந்தாலும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட என்னுடைய கதை தான் ஆனால் நான் கருவல். இல்லை     தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கலாம்   வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா  ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ?? 🤣😀😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கறுவல் குமாரசாமி

அய்யா  கறுவல்...இப்பதான் கேள்விப் படுகின்றேன்...கறுவல் ஜேர்மன்காரர் பற்றி ...இன்னமும் யோசித்துப் பாருங்கோ ..விட்டது ஏதாவது இருக்கும்...வீக்கெண்டு ..உங்களுக்கு மட்டுமல்ல ..எமக்கும் கொண்டாட்டம்தான்..

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kandiah57 said:

கிட்டத்தட்ட என்னுடைய கதை தான் ஆனால் நான் கருவல். இல்லை     தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கலாம்   வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா  ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ?? 🤣😀😂

கொக்கி போடுகிறாரோ?!

7 hours ago, குமாரசாமி said:

இப்படிக்கு
கறுவல் குமாரசாமி

கறுப்பு வெள்ளையில் ஒன்றுமில்லை அண்ணை, உங்களோட பழகினவை சொல்வதைப் பார்த்தால் கறுப்புத் தோலிற்குள் ஒரு வெள்ளை மனசு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது சமூகத்தில் கருப்பு வெள்ளை என்பதெல்லாம் அடி மட்டத்தில்தான் இன்னும் இருக்கின்றது . ...... ஏதாவது ஒரு விதத்தில் தமது திறமையால், புகழால், பணத்தால் உயர்ந்து விட்டால் அவை கவனிக்கப் படுவதில்லை . .........இன்றைய ஐரோப்பிய கால்பந்து, கூடைப்பந்து அணிகளைப் பார்த்தால் புரியும் . ......நான் இங்கு வந்தபோது பெயருக்கு ஓரிருவர் மட்டும் அணிகளுக்குள் இருப்பார்கள் ........இப்போது நிலைமை அப்படியில்லை . ........ முக்கால்வாசிப் பேர் கருப்பு இனத்தவர்கள்தான் விளையாடுகின்றனர் . ........!

ஆனால் நம்ம கு. சா அவர்கள் எமக்கேயுரிய கலாச்சார விழுமியங்களுடன் வாழ்ந்து வருவது பெருமையாய் இருக்கின்றது . .......!  😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

அட கறுப்பு ஜேர்மன்காரா இவ்வளவு சுதந்திரமும் போதாதா?

நான் கறுப்பு ஜேர்மன்காரன் எத்தினை கோடிகள் இருந்தாலும் பத்தியப்படமாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, Kandiah57 said:

ஆனால்நான் கருவல். இல்லை

ஓ நினைப்பு வேறையோ.. வந்திருக்கிறது அடுத்தவன்ர கோடிக்கை இதிலையும் தான் எங்கள் எல்லாரையும் விட மேலையாம்.. எல்லாரும் கேளுங்க இதை.. தமிழன்ர நாய்க்குணம் இதுதான்.. இதுதான் எங்கடைஆக்களிற்ற குணம்.. தனக்குள்ளயே தன்னை கொஞ்சம் மேலை எண்டு நினைக்கிறது.. சாதி மாதிரி.. ஆனால் வெள்ளைக்கு ஆசியன் பூர சிமெலிங் டேற்றி சிற் தான்.. இது விளங்கினாத்தான.. எண்ணம் மட்டும் பெரிசு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, நிலாமதி said:

இது பிறந்த "மண் வாசனை" ..வெளிநாட்டுக்கு வந்தாலும் இருக்கும்.

நான் கறுப்பு ஜேர்மன்காரனாக இருந்தாலும் சோத்து வாசனை முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓ நினைப்பு வேறையோ.. வந்திருக்கிறது அடுத்தவன்ர கோடிக்கை இதிலையும் தான் எங்கள் எல்லாரையும் விட மேலையாம்.. எல்லாரும் கேளுங்க இதை.. தமிழன்ர நாய்க்குணம் இதுதான்.. இதுதான் எங்கடைஆக்களிற்ற குணம்.. தனக்குள்ளயே தன்னை கொஞ்சம் மேலை எண்டு நினைக்கிறது.. சாதி மாதிரி.. ஆனால் வெள்ளைக்கு ஆசியன் பூர சிமெலிங் டேற்றி சிற் தான்.. இது விளங்கினாத்தான.. எண்ணம் மட்டும் பெரிசு..

உள்ளதை தான் சொன்னேன்    கருத்துகள் எழுதும் போது கொஞ்சம் யோசித்து எழுதவும்   அவர் நான் கருவல்.  என்று சொல்லலாம் என்றால்  எனது நிறத்தை நான் ஏன்  சொல்ல கூடாது   ??  உங்கள் கருத்துகள் பைத்தியக்காரத்தனமானது   முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது   கருத்து கள உறவுகளை மோதி பார்க்கும் செயல் ஆகும் 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, Kandiah57 said:

உள்ளதை தான் சொன்னேன்    கருத்துகள் எழுதும் போது கொஞ்சம் யோசித்து எழுதவும்   அவர் நான் கருவல்.  என்று சொல்லலாம் என்றால்  எனது நிறத்தை நான் ஏன்  சொல்ல கூடாது   ??  உங்கள் கருத்துகள் பைத்தியக்காரத்தனமானது   முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது   கருத்து கள உறவுகளை மோதி பார்க்கும் செயல் ஆகும் 

ஓ அப்போ நீங்க வெள்ளைக்கார தொரயா.. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஒரு வெல்லைக்கார குடும்பத்தில் பிறந்து ஜேர்மனிற்கு வந்து தமிழில் எழுதும் கந்தையா அண்ணை என்று எனக்கு சத்தியமா தெரியாதுங்ணா.. அய்யய்யோ இது தெரியாம நான் ஏதோ எழுதிட்டன் மன்னிச்சுக்குங்க.. இனிமேல் எழுதும்போது தாங்கள் சொல்லியதுபோல் சோசிச்சு எழுதுரேன்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

கிட்டத்தட்ட என்னுடைய கதை தான் ஆனால் நான் கருவல். இல்லை     தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கலாம்   வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா  ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ?? 🤣😀😂

ஓ நீங்கள் வெள்ளைப்பாண் 😁

Brot

ஒணாண்டியார் பிறவுண் பாண்😂

Dunkles Landbrot

நான் கறுத்த பாண் 😎

Brot #33 - Schwarzes Brot - Selbstgemacht - Der Foodblog

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@வீரப் பையன்26 பையா…. நீங்கள், குமாரசாமி அண்ணை… அஜித் மாதிரி… தக்காளிப்பழ நிறத்திலை இருப்பார் என்று சொன்னீங்கள்.
எல்லாம் பொய்யா… பையா… 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kandiah57 said:

வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா  ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ??

அதையேன் பேசுவான் அவையள் என்ர கைய புடிச்சு இழுக்க நான் அவையின்ர கைய புடிச்சு இழுக்க.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, குமாரசாமி said:

நான் கறுப்பு ஜேர்மன்காரன்

தமிழ்நாட்டுக்காரனைக் கேட்டால் நம்ம நிறம் தானையா தமிழன்

மற்றைய எல்லோருமே குடியேறி என்பார்கள்.

19 minutes ago, குமாரசாமி said:
21 hours ago, Kandiah57 said:

வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா  ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ??

அதையேன் பேசுவான் அவையள் என்ர கைய புடிச்சு இழுக்க நான் அவையின்ர கைய புடிச்சு இழுக்க

அதுசரி அப்புறமா கால்ல விழுந்து கும்புட்டதை எழுதவேயில்லையே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓ அப்போ நீங்க வெள்ளைக்கார தொரயா.. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஒரு வெல்லைக்கார குடும்பத்தில் பிறந்து ஜேர்மனிற்கு வந்து தமிழில் எழுதும் கந்தையா அண்ணை என்று எனக்கு சத்தியமா தெரியாதுங்ணா.. அய்யய்யோ இது தெரியாம நான் ஏதோ எழுதிட்டன் மன்னிச்சுக்குங்க.. இனிமேல் எழுதும்போது தாங்கள் சொல்லியதுபோல் சோசிச்சு எழுதுரேன்..😂

உங்களுக்கு என்ன பிரச்சனை ??  புரியவில்லை    நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா??    எனது அம்மா கருப்பு  தம்பியும். கருப்பு  .....எல்லாம் நிறம்கள். தான்   எந்த நிறத்தையும். சிறந்தது  உயர்ந்தது   என்று நான் சொல்லவில்லை   நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள்   நன்றி வணக்கம்… 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

உங்களுக்கு என்ன பிரச்சனை ??  புரியவில்லை    நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா??    எனது அம்மா கருப்பு  தம்பியும். கருப்பு  .....எல்லாம் நிறம்கள். தான்   எந்த நிறத்தையும். சிறந்தது  உயர்ந்தது   என்று நான் சொல்லவில்லை   நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள்   நன்றி வணக்கம்… 🙏

கந்தையா57 அவர்களே! எனக்காக இளமங்கை ஒருவரைப் பெண்பார்க்கும் தெய்வமே!! எனக்கு கறுப்பும் வேண்டாம், வெள்ளையும் வேண்டாம், றோஸ்கலரில் ஒன்றைப் பாருங்கள் சாமி.🙏🌸

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

உங்களுக்கு என்ன பிரச்சனை ??  புரியவில்லை    நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா??    எனது அம்மா கருப்பு  தம்பியும். கருப்பு  .....எல்லாம் நிறம்கள். தான்   எந்த நிறத்தையும். சிறந்தது  உயர்ந்தது   என்று நான் சொல்லவில்லை   நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள்   நன்றி வணக்கம்… 🙏

திரும்பவும் அந்த இதுக்குள்ளையே நிக்குது இந்த மனுசன்.. யோவ் தமிழனே கருப்புதான்யா.. முதல்ல நீங்க வெள்ளை எண்ட நினைப்ப விட்டு வெளில வாங்க.. நீங்க எல்லாம் வெள்ளை எண்டா அப்ப வெளைக்காரன் என்ன..? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்க எல்லாம் வெள்ளை எண்டா அப்ப வெளைக்காரன் என்ன..? 

ஐயா ஓணாண்டி அவர்களே! கறுப்பன் வெயிலில் நின்றாலும் கறுப்பன்தான், நிறம் மாறாது. வெள்ளையன் நின்றால்….. ஓணான்போல் நிறம்மாறிவிடுவானே!!🤪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, Paanch said:

ஐயா ஓணாண்டி அவர்களே! கறுப்பன் வெயிலில் நின்றாலும் கறுப்பன்தான், நிறம் மாறாது. வெள்ளையன் நின்றால்….. ஓணான்போல் நிறம்மாறிவிடுவானே!!🤪

நல்லா செவில்ல விழுறமாரி கந்தையாண்ணைக்கு சொல்லுங்கோ.. அந்த மனுசன் தான் வெள்ளைக்காரன் எண்ட நினைப்பிலையே இருக்கு.. இத சட்னி எண்டா இட்லியே நம்பாது எண்டகதைதான்..😂 நானும் ரவுடிதாண்டா என்னையும் அரஸ்ட் பண்ணுங்கடா எண்டு வடிவேலு பொலிஸ் ஜீப்புக்கு பின்னால ஓடினமாதிரி கந்தையாண்ணையும் நான் வெள்ளைக்காரண்டா தமிழன் இல்லை எண்டு ஓடுப்படுறார் இந்த திரியில..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லா செவில்ல விழுறமாரி கந்தையாண்ணைக்கு சொல்லுங்கோ.. அந்த மனுசன் தான் வெள்ளைக்காரன் எண்ட நினைப்பிலையே இருக்கு..

மன்னிக்கவும், நான் கந்தையாண்ணையோடு நேரடியாக மோதப்போவதில்லை. அவர் எனக்கு புதுப்பெண் பார்க்கும் படலத்தில் இருப்பவர், அதுவும் இளம்பெண்.😆🥰

அதிகமாக நான் அமெரிக்கர்களோடு வேலை பார்த்தவன், அனேகமாக அவர்கள் தங்கள் மனைவியை அறிமுகப்படுத்தும்போது இது இரண்டாவது இது மூன்றாவது என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவார்கள், நான் பேந்தப் பேந்த முழிப்பேன்.😳

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Paanch said:

மன்னிக்கவும், நான் கந்தையாண்ணையோடு நேரடியாக மோதப்போவதில்லை. அவர் எனக்கு புதுப்பெண் பார்க்கும் படலத்தில் இருப்பவர், அதுவும் இளம்பெண்.😆🥰

அதிகமாக நான் அமெரிக்கர்களோடு வேலை பார்த்தவன், அனேகமாக அவர்கள் தங்கள் மனைவியை அறிமுகப்படுத்தும்போது இது இரண்டாவது இது மூன்றாவது என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவார்கள், நான் பேந்தப் பேந்த முழிப்பேன்.😳

ஐயா பாஞ்ச் அவர்களே உங்களுக்கு நாக்கிலும் எழுத்திலும் சனீஸ்வரன் கதகளி ஆடுகின்றான் போல . ...... இவர்களுடைய உசுப்பேத்தலுக்கு ஜொள்ளு விட்டு கடைசீல சோறு வடித்த கஞ்சித்தண்ணிக்கும் ஆபத்து வரும்போல கிடக்கு . ........!   😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

கடைசீல சோறு வடித்த கஞ்சித்தண்ணிக்கும் ஆபத்து வரும்போல கிடக்கு . ........!

என் ஜாதகத்திலேயே சொல்லிவிட்டார்கள். என் ஆயுள்வரை சோற்றுக்குப் பஞ்சமில்லையாம்.😆🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Kandiah57 said:

உங்களுக்கு என்ன பிரச்சனை ??  புரியவில்லை    நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா??    எனது அம்மா கருப்பு  தம்பியும். கருப்பு  .....எல்லாம் நிறம்கள். தான்   எந்த நிறத்தையும். சிறந்தது  உயர்ந்தது   என்று நான் சொல்லவில்லை   நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள்   நன்றி வணக்கம்… 🙏

 அண்ணே இந்த நிறப்பிரச்சினை இன்று  நேற்று அல்ல எல்லா நாட்டிலையும் காலம் காலமாக  இருக்கிறது.  இதை தூக்கிப்படிப்பவர்கள் பகிடியை பகிடியாய் எடுத்தால் எல்லாம் சுபம்.  எந்த நிறத்தவனுக்கும்   ரத்தம் என்னவோ சிவப்பு தான்.

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
    • லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.