Jump to content

ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

யுக்ரேன் செவ்வாயன்று ரஷ்ய எல்லைக்குள் தனது தாக்குதலைத் தொடங்கியது. ரஷ்யாவிற்குள் 10 கிமீ (ஆறு மைல்கள்) தூரத்துக்கு முன்னேறியுள்ளது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யா யுக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை தொடங்கிய பிறகு ரஷ்யாவுக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

யுக்ரேனில் தலைநகர் கீவ் மற்றும் பல பகுதிகள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் அதிபரின் வீடியோ உரை

தனது உரையில், அதிபர் ஜெலென்ஸ்கி யுக்ரேனின் "போர் வீரர்களுக்கு" நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து யுக்ரேனின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் ஆலோசனை செய்ததாகக் கூறினார்.

"யுக்ரேன் நீதியை மீட்டெடுக்க முடியும் என்றும் ஆக்கிரமிப்பாளர் மீது தேவையான அழுத்தத்தை கொடுக்க முடியும் என்பதையும் நிரூபித்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,TELEGRAM ZELENSKIY / OFFICIAL

பாதுகாப்பு தேடும் ரஷ்ய மக்கள்

குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ள போதிலும் பலன் கிடைக்கவில்லை.

இதனால், அந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்துவிட்டனர்.

குர்ஸ்க், பெல்கோரோட், பிரையன்ஸ் ஆகிய பிராந்தியங்களில் பயங்கரவாத எதிர்ப்பு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன் பொருள், அந்த பிராந்தியங்களில், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம். தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, கண்காணிப்பது போன்ற பிற நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

யுக்ரேனின் "துரோக" தாக்குதல்

ரஷ்ய எல்லைக்குள் ரஷ்யா - யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கும் இடையிலான மோதல்கள் சனிக்கிழமை இரவு முதலே நடந்து வருவதாகத் தெரிகிறது. குர்ஸ்க் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதலில் மக்கள் காயமடைந்ததை சுட்டிக்காட்டி, யுக்ரேனின் "துரோக" தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

சனிக்கிழமை பிராந்திய தலைநகர் குர்ஸ்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது யுக்ரேனிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

யுக்ரேன் எல்லையே ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் வோரோனேஜ் பிராந்தியங்களிலும் ஒரே இரவில் யுக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக அவற்றின் ஆளுநர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சேதங்கள் பற்றி அவர்கள் ஏதும் குறிப்பிடவில்லை.

அதேநேரத்தில், யுக்ரேன் தலைநகர் கீவ் பகுதியில் ராக்கெட் பாகம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்ததில் 35 வயது ஆணும் அவரது நான்கு வயது மகனும் கொல்லப்பட்டதாக அவசர சேவை அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. 13 வயது குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டெலிகிராமில் வான் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக "செயல்படுகின்றன" என்றும் பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

ரஷ்யாவிற்குள் நுழைந்த யுக்ரேனிய படைகள் என்ன செய்கிறது ? : யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி சொன்ன தகவல்

பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE

படக்குறிப்பு,டாங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் ஆகியவற்றை ரஷ்யா குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது

யுக்ரேனிய படைகள் திடீர் ஊடுருவல்

ரஷ்யாவுக்குள் யுக்ரேனின் `அரிதான’ ஊடுருவல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அப்போது 1,000 வீரர்கள் அடங்கிய படை, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

யுக்ரேனியர்கள் பல கிராமங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் சுட்ஜா நகரையும் அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

வெள்ளியன்று, ஆயுதமேந்திய யுக்ரேனியப் படை வீரர்கள் நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறும் வீடியோவும், காஸ்ப்ரோம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு முக்கிய ரஷ்ய எரிவாயு மையத்தையும் கைப்பற்றிவிட்டதாக காட்டும் வீடியோவும் வெளியானது.

யுக்ரேன் எல்லையில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள சுட்ஷாவின் வடமேற்கு புறநகரில் எடுக்கப்பட்ட வீடியோ அது என்பதை `பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது.

முழு நகரத்தையும் யுக்ரேனிய துருப்புகள் கைப்பற்றியதாகக் கூறப்படும் வீடியோவை பிபிசி சரிபார்க்கவில்லை.

ரஷ்யாவிற்குள் நுழைந்த யுக்ரேனிய படைகள் என்ன செய்கிறது ? : யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி சொன்ன தகவல்

பட மூலாதாரம்,UNKNOWN

படக்குறிப்பு,ரஷ்ய நகரமான சுட்ஷாவில் உள்ள காஸ்ப்ரோம் எரிவாயு நிலையத்தில் யுக்ரேனிய வீரர்கள் நிற்கும் காட்சி

ரஷ்ய ராணுவம் சொல்வது என்ன?

ரஷ்ய ராணுவ வீடியோ பதிவுகள், சுட்ஜா நகரம் இன்னும் ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவின் இருப்பிடத்தை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியது.

ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 38 கிமீ தொலைவில் உள்ள ஒக்டியாப்ர்ஸ்கோ நகரத்தின் வழியாக ஒரு சாலையில் 15 வாகனங்கள் கொண்ட ரஷ்ய கான்வாய் சேதமடைந்ததால் கைவிடப்பட்டதை அந்த வீடியோ காட்டுகிறது.

இந்த காட்சிகளில் ரஷ்ய வீரர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் காயமடைந்தவர்கள், சிலர் இறந்திருக்கலாம் - மேலும் சிலர் வாகனங்களில் இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.

குர்ஸ்க் பிராந்தியத்திற்கு டாங்கிகள் மற்றும் ராக்கெட்-லாஞ்சர் அமைப்புகள் உட்பட கூடுதல் ஆயுத தளவாடங்களை ரஷயா அனுப்பியுள்ளது. ரஷ்ய துருப்புகள் யுக்ரேனியப் படைகளின் "முயற்சியை முறியடிக்கத் தொடர்ந்து முன்னேறுகின்றன" என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.

ரஷ்ய தரப்பு வீடியோ பிபிசியால் இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

மோதல் நடக்கும் இடத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் அச்சம்

வெள்ளிக்கிழமையன்று, ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளையும் "அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு" ஐநா அணுசக்தி அமைப்பு வலியுறுத்தியது. ஏனெனில் மோதல்கள் நடக்கும் பகுதி குர்ஸ்க் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இது ரஷ்யாவின் மிகப்பெரிய அணுசக்தி தளங்களில் ஒன்று.

சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, "கடுமையான கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அணுசக்தி விபத்தைத் தவிர்க்க" நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

சுட்ஜாவிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டி

valavan

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்க

nunavilan

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்க

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனின் "துரோக" தாக்குதல்

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘கடுமையான பதிலடி தரப்படும்’

ரஷ்யா மீதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேனின் பகுதிகள் மீதும் யுக்ரேன் நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு ‘கடினமான பதிலடி’ கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவின் அமைதியான மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் கியேவ் ஆட்சி தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது," என்று கூறியுள்ளார்.

ரஷ்யா, யுக்ரேன்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ரஷ்ய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா

சமீபத்திய தாக்குதல்களுக்கு "ராணுவக் கண்ணோட்டத்தில் எந்த அர்த்தமும் இல்லை" என்பதை யுக்ரேன் "நன்றாகப் புரிந்து கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜாகரோவா கடந்த 24 மணி நேரத்தில் யுக்ரேன் நடத்திய பல தாக்குதல்களைக் குறிப்பிட்டார். பிராந்திய தலைநகரான குர்ஸ்க் மீது ஒரே இரவில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

முன்னதாக, யுக்ரேனின் ஏவுகணைச் சிதைவுகள் குர்ஸ்க் நகரில் ஒரு பல மாடிக் கட்டிடத்தின் மீது விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அந்நகரின் உள்ளூர் கவர்னர் கூறினார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் என்ன சொன்னது?

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனியப் படைகளின் ‘ஆக்கிரமிப்பு முயற்சியை ரஷ்யத் துருப்புக்கள் தொடர்ந்து முறியடிக்கின்றன’ என்று ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.

"ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிச் செல்ல எதிரி குழுக்களின் கவச வாகனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன," என்று அவ்வறிக்கை கூறுகிறது.

யுக்ரேனின் எல்லையில் இருந்து 25கி.மீ., மற்றும் 30கி.மீ., தொலைவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று இடங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது.

யுக்ரேன் கடந்த 24 மணி நேரத்தில் 230 ராணுவ வீரர்களையும் 38 கவச வாகனங்களையும் இழந்தது, என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை. இந்த அறிக்கை முந்தைய நாட்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுடன் ஒத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள்  ஜப்பான் தூதர் கசுஹிகோ டோகோ, (தற்போதைய நிலையில் உக்ரேன் பேச்சுவார்த்தையை  உதறிவிட்டு யுத்தத்தை  மேலும் தொடருமானால் ) கியேவின் பேரம்பேசும் வலு மேலும் மேலும் மோசமடையும், என எச்சரித்துள்ளார்.


சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் அவருடன் நடத்திய நேர்காணலில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மறுத்தது முக்கியமான முடிவாகும், இது "உக்ரைன் மூன்று பகுதிகளாக சிதைவதற்கு வழிவகுக்கலாம்" என டோகோ குறிப்பிட்டார்.


"அடுத்த மூன்று மாதங்களில், ரஷ்யா அதன் முழுத்திறனைப் பாவித்து முன்நோக்கி முன்னேறி, சாத்தியமான அளவுக்கு (நிலப்பரப்பைக் கைப்பற்றும்) அடுத்து, உக்ரைன் மீண்டும் எந்தவிதமான முறையிலும் எழ முடியாதபடி உறுதிப்படுத்தி விடும், இது,  [அமெரிக்க ஜனாதிபதிகளான] பைடன் அல்லது ஹாரிஸ் அல்லது டிரம்ப் ஆட்சியில் இருந்தாலும்) உக்ரைன் மூன்று பகுதிகளாக சிதைந்துவிடும்: கிழக்கு பகுதி [ரஷ்யாவுக்கு, மேற்கு பகுதி மேற்கு ஐரோப்பாவுக்கு, மற்றும் நடுவில் கியேவ் [அதன் தலைநகராக] கொண்ட சிறிய உக்ரைன் இருக்கும்."

இது இன்றைய செய்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

யுக்ரேனின் பகுதிகள் மீதும் யுக்ரேன் நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு ‘கடினமான பதிலடி’ கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்ஜினி பிரிகோஜினுக்கு பயந்து ஒளிந்துகொண்ட ரஷ்ய படைகள் பதிலடிகொடுக்கும் என்பது நல்லதொரு வேடிக்கை. முன்னைய சோவியத் ஒன்றியத்தின் பலமிக்க இராணுவ படையணியாக உக்ரேன் தான் இருந்திருக்கின்றது என இப்போதுதான் புரிகின்றது.  ரஷ்யாவின் மாய விம்பம் உடைந்து வெகுநாளாயிற்று!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

எவ்ஜினி பிரிகோஜினுக்கு பயந்து ஒளிந்துகொண்ட ரஷ்ய படைகள் பதிலடிகொடுக்கும் என்பது நல்லதொரு வேடிக்கை. முன்னைய சோவியத் ஒன்றியத்தின் பலமிக்க இராணுவ படையணியாக உக்ரேன் தான் இருந்திருக்கின்றது என இப்போதுதான் புரிகின்றது.  ரஷ்யாவின் மாய விம்பம் உடைந்து வெகுநாளாயிற்று!

நீங்கள் கூறியபடிதான் NATO வும் முடிவுக்கு வந்தது. 

ஆனால் நடப்பது நேரெதிராக,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஷ்யாவுக்குள் 30 கிமீ ஊடுருவல், ஆயிரக்கணக்கானவர்களை அனுப்புவது என்பது துணிச்சலாக - daring இருக்க வேண்டும், அல்லது தற்கொலை முயற்சியாக இருக்க வேண்டும். ஆனால்,  கிழக்கு எல்லைகளில் சில இடங்களில் இருந்த இராணுவ நெருக்கடியைக் குறைத்திருக்கிறார்கள் என சில செய்திகளில் தெரிகிறது.

நான் நினைக்கிறேன் இறக்கும் படையினர் போக எஞ்சியோர்   சிறு சிறு அணிகளாகப் பிரிந்து மிக உள்ளே போய் ஒளிந்து கொள்வார்கள் போல. சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணைந்த பிறகு இவை நடக்கின்றன. பின்லாந்து  இது போன்ற நடவடிக்கைளில் நிபுணத்துவம் கொண்ட படைகளை வைத்திருக்கிறது.  

"Kursk's acting governor Alexei Smirnov is now speaking at Putin's meeting with officials.

Smirnov tells him that Ukraine controls 28 villages in the region.

"The situation remains difficult," he says.

Ukrainian forces are 7.4 miles (12 km) deep inside the region, and the front line there is 40 km wide, he says.

🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped".

 

Edited by Justin
கீழ் இணைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped".
 

அமெரிக்க powerball lottery ல் 100 மில்லியன் $ கிடைக்கும் என நம்பியிருந்த ஒருவருக்கு ஆறுதல் பரிசாக  free ticket கிடைத்தபோன்ற ஆற்றுப்படுத்தல்தான்  மேலேயுள்ள விடயம்,...🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped".
 

அமெரிக்க powerball lottery ல் 100 முல்லியன் கிடைக்கும் என நம்பியிருந்த ஒருவருக்கு ஆறுதல் பரிசாக  free ticket கிடைத்தபோன்ற ஆற்றுப்படுத்தல்தான்  மேலேயுள்ள விடயம்,...🤣

முல்லியன். என்றால் என்ன???   எனக்கு தெரியாத தமிழ் சொற்களைப். படிக்க விரும்புகிறேன் 🤣

18 hours ago, Kapithan said:

நீங்கள் கூறியபடிதான் NATO வும் முடிவுக்கு வந்தது. 

ஆனால் நடப்பது நேரெதிராக,.

உண்மை தான்  இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது   தொடர்ந்து நடக்கும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, Kandiah57 said:

முல்லியன். என்றால் என்ன???   எனக்கு தெரியாத தமிழ் சொற்களைப். படிக்க விரும்புகிறேன் 🤣

உண்மை தான்  இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது   தொடர்ந்து நடக்கும்   

கணிப்பீட்டின்படி இந்த யுத்தம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உக்ரேனிய ஆளணி தளபாட இழப்புக்களும், ஆளணிப் பற்றாக்குறையும் அவர்களை இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நிர்ப்பந்தப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

கணிப்பீட்டின்படி இந்த யுத்தம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உக்ரேனிய ஆளணி தளபாட இழப்புக்களும், ஆளணிப் பற்றாக்குறையும் அவர்களை இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நிர்ப்பந்தப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

இதையும் போர் தொடங்கிய நாள் தொட்டு  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் இப்படி சொல்வது கூட ஒரு போர் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அவர்களை இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நிர்ப்பந்தப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிர்ப்பந்தங்களும் அவசியங்களும் என்றோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
பேரம் பேசப்படுகின்றது என நினைக்கின்றேன்.

தேவையில்லாமல் மாட்டுப்பட்டு அழிந்தவர்கள் ஜேர்மனியும் உக்ரேனும் என நான் நினைக்கின்றேன்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிர்ப்பந்தங்களும் அவசியங்களும் என்றோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
பேரம் பேசப்படுகின்றது என நினைக்கின்றேன்.

தேவையில்லாமல் மாட்டுப்பட்டு அழிந்தவர்கள் ஜேர்மனியும் உக்ரேனும் என நான் நினைக்கின்றேன்.😂

முற்றாக உருக்குலைந்துபோனது உக்ரேன்தான். 

🥺

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடாபெஸ்ட் மெமோராண்டம்.  என்ற பெயரில் 

5-12-94 இல் ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்கிரேனின் சுதந்திரம் மற்றும் இயையாண்மை மேலும் தற்போதுள்ள எல்லைகளுக்கு மதிப்பளிகிறோம் என்று இந்த குறிப்பானை. உத்தரவுவாதம் அளிக்கிறது  இதில் உக்கிரேனுடன். சேரந்து. அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா   கையெழுத்திட்டது     ஆனால் மேற்படி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது   ரஷ்யாவின். ஒரு பகுதி உக்கிரேன்  எனில்   உக்கிரேன். கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை 

 

மேலும் போரிஸ் பில் கிளிடன்   பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர்   உக்கிரேனிய ஐனதிபதி லியோனிட்  குச்மா ஆகியோர் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள்  அது உக்கிரேனின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள்,..உக்கிரேனியர்கள் தற்பாதுகாப்குக்காக தவிர உக்கிரேனுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை எதனையும் பயன்படுத்தமாட்டார்கள்,......இந்த ஒப்பந்தம் கிரிமியா இணக்கும்போது ரஷ்யா மீறி விட்டது” 

1877 இலும் ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது      எப்போதும் உக்கிரேன். தனிநாடாக  எற்றுக்கொண்டு உள்ளார்கள்      உக்கிரேன். ரஷ்யாவில் ஒரு பகுதி இல்லை   என்பதற்கு ஆதாரம் ஆகும்   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

புடாபெஸ்ட் மெமோராண்டம்.  என்ற பெயரில் 

5-12-94 இல் ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்கிரேனின் சுதந்திரம் மற்றும் இயையாண்மை மேலும் தற்போதுள்ள எல்லைகளுக்கு மதிப்பளிகிறோம் என்று இந்த குறிப்பானை. உத்தரவுவாதம் அளிக்கிறது  இதில் உக்கிரேனுடன். சேரந்து. அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா   கையெழுத்திட்டது     ஆனால் மேற்படி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது   ரஷ்யாவின். ஒரு பகுதி உக்கிரேன்  எனில்   உக்கிரேன். கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை 

 

மேலும் போரிஸ் பில் கிளிடன்   பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர்   உக்கிரேனிய ஐனதிபதி லியோனிட்  குச்மா ஆகியோர் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள்  அது உக்கிரேனின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள்,..உக்கிரேனியர்கள் தற்பாதுகாப்குக்காக தவிர உக்கிரேனுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை எதனையும் பயன்படுத்தமாட்டார்கள்,......இந்த ஒப்பந்தம் கிரிமியா இணக்கும்போது ரஷ்யா மீறி விட்டது” 

1877 இலும் ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது      எப்போதும் உக்கிரேன். தனிநாடாக  எற்றுக்கொண்டு உள்ளார்கள்      உக்கிரேன். ரஷ்யாவில் ஒரு பகுதி இல்லை   என்பதற்கு ஆதாரம் ஆகும்   

ஒப்பந்தள் எழுதப்படுவது கிழிப்பதற்குத்தானே,.🤨

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றர் உக்ரைன் படையினரிடம் - 28 கிராமங்களையும் கைப்பற்றினர்.

Published By: RAJEEBAN   13 AUG, 2024 | 06:16 AM

image
 

ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இரண்டரை வருடகால யுத்தத்தில் முதல்தடவையாக உக்ரைன் படையினர் ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை உக்ரைன் படையினர் தங்கள் கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா யுத்தத்தை ஏனையவர்களின் வாசலிற்கு கொண்டு சென்றது, தற்போது அது ரஸ்யாவின் வாசலிற்கு சென்றுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலிடெமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தாக்குதலை பாரிய தூண்டும் நடவடிக்கை என வர்ணித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிலிருந்து உக்ரைன் படையினரை உதைத்து வெளியே அனுப்பபோவதாக தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து பெருமளவு மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190953

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றர் உக்ரைன் படையினரிடம் - 28 கிராமங்களையும் கைப்பற்றினர்.

Published By: RAJEEBAN   13 AUG, 2024 | 06:16 AM

image
 

ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190953

 

28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது இதைத் தான். இனி போர் ரசியாவுக்குள் தான்....

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்ஸ்கில் உதவி செய்வதற்காக கார்கிவ் பகுதியில் உள்ள முன் வரிசையில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

 மூலோபாய ரீதியாகப் படைகளை ரஸ்யாவுக்குள் நகர்த்தியதன் ஊடாக உக்ரேன் எல்லைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு ரஸ்யப் படைகளைப் பின்னகர்த்த வேண்டியேற்படலாம். அல்லது உக்ரேன் பிடித்த இடங்களில் இழப்புகளைச் சமாளித்து உறுதியாக நிலைகொண்டால் பேச்சவார்த்தையின்போது உக்ரேனின் பேரம்பேசலுக்கான வலுவைத் தக்கவைக்கலாம். இந்த இரண்டில் ஒன்றிற்கன நகர்வாகவே பார்க்கமுடியும்.
 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, விசுகு said:


. இனி போர் ரசியாவுக்குள் தான்....

எங்கேயோ கேட்ட குரல்,.😁

இப்படி உசுப்பிவிட்டுத்தான் எல்லாவற்றையும் அழித்தனீங்கள். 

😏

Edited by Kapithan
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 சதுர கி.மீ ரஷ்ய பகுதியை கைப்பற்றிய யுக்ரேன் படைகள்- என்ன நடக்கிறது?

குரஸ்க் பகுதி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,குர்ஸ்க் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜியான்லூகா அவாக்னினா மற்றும் ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு துறை நிருபர்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

1000 சதுர கிலோ மீட்டர் ரஷ்ய பகுதியை யுக்ரேன் படைகள் கைபற்றி உள்ளதாக யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி கூறியுள்ளார். ரஷ்யா யுக்ரேன் இடையில் முழு கட்ட போர் தொடங்கிய இரண்டரை வருடத்தில் இதுவே யுக்ரேனின் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகும்.

இந்த தாக்குதல் தொடங்கிய ஏழு நாட்களுக்கு பிறகு யுக்ரேன் படைகள் ''குர்ஸ்க் பகுதியில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை'' மேற்கொண்டுள்ளதாக ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது. இப்போது ரஷ்யா மீதே போர் திரும்பியிருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

யுக்ரேனின் இந்த தாக்குதலை ஒரு ''ஆத்திரமூட்டும் செயல்'' என கூறிய ரஷ்ய அதிபர் புதின், ''எதிரி படைகளை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேற்ற'' ரஷ்ய படைகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

வெளியேற்றப்படும் மக்கள்

பாதுகாப்பிற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் மேற்கு ரஷ்யா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 59,000 மக்களும் வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள 28 கிராமங்கள் யுக்ரேன் படைகளால் கைபற்றப்பட்டுள்ளதாகவும், 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு ''மிகவும் கடினமான சூழல்'' நிலவுவதாகவும் உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீர் தாக்குதலைத் தொடங்கி யுக்ரேன் படைகள், ரஷ்ய எல்லைக்குள் 18 மைல்கள் (30கிமீ) வரை ஊடுருவி உள்ளன.

இந்த தாக்குதல் யுக்ரேன் நாட்டுக்கு மனரீதியில் வலிமை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தி யுக்ரேனுக்கு புதிய ஆபத்துகளை கொண்டுவரும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஊடுருவலால் ரஷ்யா மிகவும் கோபமடைந்து யுக்ரேனின் குடிமக்கள் மற்றும் கட்டமைப்பின் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்கக்கூடும் என பெயர் கூற விரும்பாத பிரிட்டனின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

"முரண்பாடுகளை விதைப்பது, சச்சரவு ஏற்படுத்துவது, மக்களை அச்சுறுத்துவது, ரஷ்ய சமுதாயத்தின் ஒற்றுமையை குலைப்பது இதுவே எதிரிகளின் வெளிப்படையான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது" திங்கட்கிழமை அன்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட உரையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

"நமது நாட்டில் இருந்து எதிரி படைகளை விரட்டுவதே பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய பணியாகும்", என்று அதிகாரிகளுடனான சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யா அனுப்பிய படைகளின் படம்

பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE

படக்குறிப்பு,இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யா அனுப்பிய படைகளின் படம்

1 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அப்பகுதியின் ஆளுநர் கூறினார். யுக்ரேன் படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய குடிமக்கள் தங்கியிருப்பதாக அவர் புதினிடம் தெரிவித்துள்ளார்.

"அவர்களின் நிலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது", என்று அவர் கூறினார்.

ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க ஜன்னல்கள் இல்லாத,உறுதியான சுவர்கள் கொண்ட வீடுகளில் தஞ்சம் அடையுமாறு அவர் மக்களை எச்சரித்துள்ளார்.

குர்ஸ்கிற்கு அருகிலுள்ள பெல்கோரோடில், சுமார் 11,000 மக்கள் வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

கிராஸ்னயா யருகா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடம் "எல்லையில் எதிரிகளின் செயல்பாடு" காரணமாக அவர்கள் வெளியேற்றப்படுவதாக ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.

இதே போல அவர் இங்கு ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார், மேலும் மக்களை அவர்கள் வீடுகளின் அடித்தளங்களில் தங்குமாறு கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற யுக்ரேன் அதிபர்"புதின் மிகவும் மோசமாக போரிட விரும்பினால், இது போன்ற நிலைக்கு ரஷ்யா பழகிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

'ரஷ்யா மீதே போர் திரும்பியுள்ளது'

"மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது, இப்போது ரஷ்யா மீது போர் திரும்பியுள்ளது. யுக்ரேன் எப்போதும் அமைதியை மட்டுமே விரும்புகிறது, நாங்கள் நிச்சயமாக அமைதியை உறுதி செய்வோம்" என்றும் யுக்ரேன் அதிபர் கூறினார்.

சிறிய ஊடுருவல் நடைபெறுவதாக தொடக்கத்தில் ரஷ்ய எல்லைக் காவலர்களால் கூறப்பட்டதைவிட , ஆயிரக்கணக்கான யுக்ரேன் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ரஷ்யாவில் அதிகபட்ச இழப்புகளை ஏற்படுத்துவது மற்றும் அந்நாட்டின் நிலைமையை சீர்குலைப்பதே' யுக்ரேன் படையின் நோக்கமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகைமையிடம் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு உள்நாட்டில் அரசியலில் செல்வாக்கு குறையக்கூடும் என்று நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் பேசியகர்ட் வோல்கர் பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார்.

அதிபர் புதின் மற்றும் அவர் இந்த போரை நடத்திய விதத்தின் காரணத்தால் மட்டுமே ரஷ்ய எல்லைக்குள் யுக்ரேன் படைகளின் ஊடுருவல் நடைபெற்றது என்று அவர் கூறினார்.

"இதனால் ரஷ்யாவில் பொது மக்களுக்கு மட்டுமே பாதிப்பு, பணக்காரர்களுக்கு அல்ல. ரஷ்ய நாட்டின் மீதான தாக்குதலை புதினே தூண்டிவிட்டு,தற்போது மக்கள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்'' என அவர் கூறினார்.

அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து

பட மூலாதாரம்,UKRAINIAN PRESIDENCY/HANDOUT

படக்குறிப்பு,யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது

திங்கட்கிழமையன்று கீவ் நகரில் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான சந்திப்பின் போது, யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய போர்த் தாக்குதலை "புத்திசாலித்தனமானது" மற்றும் "தைரியமானது" என்று குறிப்பிட்ட அமெரிக்க செனடர் லிண்ட்சே க்ராஹம், யுக்ரேனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குமாறு அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

குர்ஸ்க் பகுதிக்குள் யுக்ரேன் எவ்வாறு நுழைய முடிந்தது என்று ரஷ்யாவில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஷ்ய சார்புடைய போர் குறித்த வலைதள எழுத்தளரான பொடோல்யாகா இந்த நிலைமையை "ஆபத்தானது" என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, இந்த நிலைக்கு ரஷ்யாவின் ஆயுதப் படைகள் கடுமையான பதிலடி கொடுக்க "நீண்ட காலம் எடுக்காது" என்றார்.

ரஷ்ய நட்பு நாடான பெலாரஸ், யுக்ரேன் தனது வான்வெளிக்குள் டிரோன் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அந்நாட்டின் எல்லையில் தனது சொந்த படைகளை வலுப்படுத்தவிருப்பதாக கூறியுள்ளது.

இதற்கிடையில், திங்கள்கிழமை அன்று யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. ஆனால் உடனடியாக தீக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

யுக்ரேனை அச்சுறுத்தவே ரஷ்யா வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று அதிபர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். மறுபுறம் யுக்ரேனின் தாக்குதலாலே இது ஏற்பட்டது என்று ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட அப்பகுதி உள்ளூர் ஆளுநர் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதில் உக்கிரைன் படைகள் அல்ல  என்றும் . மேற்கு, UK இல்  பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை  சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை.

(உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) #

உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம்.

நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது

Edited by Kadancha
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kadancha said:

இதில் உக்கிரைன் படைகள் அல்ல  என்றும் . மேற்கு, UK இல்  பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை  சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை.

(உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) #

உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம்.

நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது

உங்கள் "மனதில்" இருப்பதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு உங்களை அவமானம் செய்ய விரும்பவில்லை😎.

ஆனால், இது போன்ற விடயங்களை பொது இடங்களில் எழுத முதல் லொஜிக்கை யோசியுங்கள்: ரஷ்ய நிலப்பரப்பினுள் நேட்டோவின் உறுப்பு நாடுகள் படைகளை அனுப்புவது எவ்வளவு சீரியசான விடயம்? நேட்டோ படைகளை ரஷ்ய நிலப்பரப்பினுள் அனுப்ப, அது ரஷ்யாவிற்கு தெரியாமல் இருக்கிறது. அல்லது தெரிந்தும் தொண்டையில் முள்ளு சிக்கி சொல்லாமல் தவிர்க்கிறது என்று நம்புகிறீர்களா?

ஏற்கனவே "-நேட்டோ வருகிறது" என்று பூதம் காட்டித் தான் புரின் பதவியில் இருக்கிறார். இப்ப நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆட்கள் நுழைந்திருந்தால்  ஆதாரத்தை எடுத்து உள்ளூர் செய்தியிலாவது கட்டி விட மாட்டார்களா ஐயா😂?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதில் உக்கிரைன் படைகள் அல்ல  என்றும் . மேற்கு, UK இல்  பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை  சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை.

(உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) #

உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம்.

நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது

இதைத்தான் நானும் யோசித்தேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.