Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?

vijay TVK Flag Introduction: Do you know what the color is?
 

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், தற்போது அக்கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி என்று ரசிகர்களால் அழைக்கக்கூடிய பிரபல நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதிகாரப்பூர்வமாக ’தமிழக வெற்றிக் கழகம் கட்சி’ பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தார்.

கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

மாநாட்டுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார் விஜய். முறையாக அழைப்பு கொடுப்பதற்கு முன்பு நான்கு முதல்வரிடமும் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

மாநாட்டுக்கு முன்பாக ஈசிஆர் சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார்.

இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் என 300 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொடியின் வர்ணங்கள் பற்றி தவெக நிர்வாகியிடம் விசாரித்தோம்.

அதற்கு, “மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ண நிறத்தின் மத்தியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது.

வாகை பூ வெற்றியை உணர்த்தும். சங்ககாலத்தில் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு வாகை பூக்களை சூடுவார்கள்.

அந்த வகையில் மூவர்ண கொடியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் பயணம் வெற்றியை நோக்கிதான்” என்கிறார் தவெக நிர்வாகி ஒருவர்.
 

https://minnambalam.com/political-news/vijay-tvk-flag-introduction-do-you-know-what-the-color-is/

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் கட்சியின் கொடி அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், வரும் 22ஆம் திகதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது.

தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது.

 

https://thinakkural.lk/article/308091

  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்- கழக கொடியும் ,பாடலும் நாளை அறிமுகம் – விஜய் அறிக்கை

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்- கழக கொடியும், பாடலும் நாளை அறிமுகம் – விஜய் அறிக்கை.

நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

GVf73fnbUAED0_n.jpeg?resize=464,600

https://athavannews.com/2024/1396702

  • கருத்துக்கள உறவுகள்

500x300_4118197-vijay-tvk-flag.webp?resi

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று காலை 9.15க்கு அறிமுகம் செய்து வைத்து ஏற்றி வைத்துள்ளார்.

கட்சிகொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளவாறு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் ஆரம்பத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

குறித்த உறுதிமொழியல் , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்றும்,

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1396759

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK HQ

22 ஆகஸ்ட் 2024, 04:05 GMT
புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று சென்னையி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நடிகர் விஜய் சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உறுதி மொழி ஏற்ற கட்சியினர்

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.

"நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்பு உள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்."

 
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK HQ

"மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பேரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன்" என்ற உறுதிமொழியை அவர் வாசிக்க அவரது கட்சித் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.

த.வெ.க. கட்சிக் கொடியின் முக்கிய அம்சங்கள் என்ன?

கட்சிக்கொடி சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பட்டையில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன.

நடுவில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. 28 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்தார்.

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ளது விஜயின் கட்சி.

 

நடிகர் விஜய் என்ன பேசினார்?

விஜய் ஆகஸ்ட் 22 அன்று அவர் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்

பட மூலாதாரம்,@ACTORVIJAY/X

படக்குறிப்பு,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் (கோப்பு புகைப்படம்)

கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஒரு தேதியை, கட்சியின் மாநாட்டு தேதியை, விரைவில் அறிவிப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய்.

கூடிய விரைவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மட்டுமின்றி கட்சிக் கொடிக்கான விளக்கம் என்ன என்பதையும் அறிவிக்க இருப்பதாகக் கூறினார்.

முறையான அனுமதியைப் பெற்று அந்த மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்த விஜய், இந்தக் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமை அடைந்ததாகவும் கூறினார்.

 

கட்சி மாநாடு எப்போது?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK HQ

"இன்று நம் அனைவருக்குமே ஒரு சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் துவங்கி, அதன் தொடக்கப் புள்ளியாக நமது கட்சியின் பெயரைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றைய நாளில் இருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நம் முதல் மாநில மாநாடு," என்று தனது பேச்சைத் தொடங்கினார் நடிகர் விஜய்.

இன்று கொடியை அறிமுகம் செய்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், "என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்பும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்பும் இந்தக் கொடியை அறிமுகப்படுத்துவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி வரும் காலங்களில் ஒரு கட்சியாக நம்மைத் தயார் செய்துகொண்டு, தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்," என்று கூறினார்.

மேலும், "ஒரு புயலுக்கு பின் அமைதி, ஆர்பரிப்பு, ஆராவாரம் இருப்பதைப் போல் நம்முடைய கட்சிக் கொடிக்குப் பின்னும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதை நீங்கள் அனைவரும் காத்திருக்கும் அந்த நாளில், கட்சியின் கொள்கைகள், செயல் திட்டம் மட்டுமின்றி கொடிக்குப் பின்னால் இருக்கும் விளக்கத்தையும் கூறுகிறோம்," என்றும் தெரிவித்தார் நடிகர் விஜய்.

அதோடு, "நான் இதை வெறும் கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறையினரின் வெற்றிக்கான கொடியாகத்தான் பார்க்கிறேன்," என்றும் விஜய் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற கட்சி விழாக்களில் உரையாடுவது போல் நீண்டநேரம் எடுத்துக் கொள்ளாமல் கட்சி மாநாடு குறித்த தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு அவர் வெளியேனார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணி

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ ஆகியவற்றை எதிர்த்துத் தனது அரசியல் அமையும் என்று தெரிவித்திருந்தார்.

 
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்

பட மூலாதாரம்,@VIJAYFC/X

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில்,"விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது," என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால் தலையைப் பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

கடந்த 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

முன்னதாக பிபிசியிடம் பேசிய மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம், நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது கூறினார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்.

இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்?

Kumaresan MAug 22, 2024 10:54AM
W37ULyt5-vijay-tvk-flag.jpg

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்

அடர்சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலருக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன.

தமிழ் நிலத்தில்  சொல்லப்பட்டுள்ள ஐந்து நிலங்களில், ஒவ்வொரு நிலத்தின் பெயரும், அங்கு முக்கியமாக வளரும் மரம், அல்லது செடியின் பெயரைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும்.

வாகைப் பூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் நூலில் போர் காலங்களில் வீரர்கள் அணியும் பூக்கள் பற்றிச் சொல்லும் பாடலில், வாகைப் பூப் பற்றி கூறப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றியை கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. “வெற்றி வாகைச் சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கில் உள்ளது.

இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயன்கள் கொண்டவை. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று. இது, தமிழீழத்தின் தேசிய மரமாகும்.

வாகைப் பூக்களைப் போல் தூங்கு மூஞ்சி மரப் பூக்களும் தோன்றுவதால் வாகை மரமானது தூங்கு மூஞ்சி மரமென்றே பலரும் கருதி கொள்கின்றனர்.

ஆனால் வாகை மரமென்பது Flea Tree ரகத்தை சேர்ந்தது ஆகும். தூங்கு மூஞ்சி மரம் Rain Tree ரகத்தை சேர்ந்தது. ஆகும். இரண்டும் வெவ்வேறு மரங்களென்றாலும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/political-news/why-actor-vijay-choose-vaagai-flower-in-tvk-party-flag/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

களைகட்டும் தவெக கொடி அறிமுக விழா : விஜய்க்கு சீமான் வாழ்த்து!

Aug 22, 2024 07:51AM IST ஷேர் செய்ய : 
TVK flag launch ceremony: Seeman congratulates Vijay!
 

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்த உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்.

எனினும் அக்கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் நேற்று அறிவித்தார்.

மேலும் கட்சியின் இசையமைப்பாளர் தமன் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட உள்ளார்.

இதனையடுத்து பனையூரில் கட்சி கொடி விழா அறிமுகப்படுத்தவதற்கான நிகழ்ச்சி இன்று காலை முதலே களைகட்டியுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/tvk-flag-launch-ceremony-seeman-congratulates-vijay/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றுக் கழகத்தின் கொடி ஸ்பெயின் தொடக்கம்  பல இடங்களில் இருந்து கொப்பியடிக்கப்பட்டது போல் உள்ளது. large.IMG_7024.jpeg.395b8e4e1e2d1ca62bcec44f7d8f91af.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் புதுக் கட்சிகளுக்கு தெரிவுகள் குறைந்து கொண்டே வருகின்றது.

தமிழர்களாக இருந்து கொண்டு சிங்கத்தை கொடியில் வைக்கமுடியாது.

புலியை கருணாஸ், சிறுத்தையை தொல். திருமா, யானையை விஜய்......... அடுத்து விஷால் ஒரு கட்சி தொடங்கினால் கரடி தான் அவருக்கிருக்கின்றது.

பூவிலும் தாமரை இனத்தை தொடவே முடியாது. தொட்டார் கெட்டார் தமிழ்நாட்டில். ஆனாலும் தாழம்பூ, முள்முருக்கை பூ என்று சிவப்பு மஞ்சள் பூக்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.

இரண்டு யானைகளுக்கு நடுவில் ஒரு மயில் தோகை விரித்து நிற்கின்றது என்று டெயிலி மிர்ரரில் விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். 'க்' தேவையா, இல்லையா என்று குழம்பி கட்சிப் பெயரில் ஒரு திருத்தம் வந்தது போல, எதிர்காலத்தில் கொடியில் ஒரு மயிலுக்கும் இடம் கொடுக்கலாம்.........    

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

 

புலியை கருணாஸ், சிறுத்தையை தொல். திருமா, யானையை விஜய்......... அடுத்து விஷால் ஒரு கட்சி தொடங்கினால் கரடி தான் அவருக்கிருக்கின்றது.

 

உடனேயே யானைக்கு ஆபத்து வந்துவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. யானை சின்னத்தை எந்த வடிவிலும் அசாம், சிக்கிம் மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது என்று சட்டம் இருக்கின்றதாம். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திடம், அவர்களின் கொடி வெளியீட்டின் பின், இதைச் சொல்லியுள்ளார்கள். பரிசீலித்து முடிவெடுக்கின்றோம் என்று தவெக இப்போது சொல்லுகின்றது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரசோதரன் said:

பூவிலும் தாமரை இனத்தை தொடவே முடியாது. தொட்டார் கெட்டார் தமிழ்நாட்டில். ஆனாலும் தாழம்பூ, முள்முருக்கை பூ என்று சிவப்பு மஞ்சள் பூக்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.

பூவரசம் பூ சும்மாதானே கிடக்கு  😁

1092734.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

பூவரசம் பூ சும்மாதானே கிடக்கு  😁

1092734.jpg

🤣.......

இதுவும் நல்ல ஒரு தெரிவு தான்......... சிவப்பும் கலந்த பூவரசம் பூவும் இருக்குது தானே, அது தான் கொடிக்கு நன்றாக இருக்கும். பூ + அரசன் என்று நாலு வரிகள் பாடலில் எழுதுவதற்கும் இது நல்ல வசதி.......

என்ன ஒரு பாடல்.............🫣.

சமஸ் சில காலத்தின் முன் வேறு ஒரு விடயத்திற்காக எழுதியிருந்த ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்லியிருந்தார்: காலம் ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. நாங்கள் தான் சில வேளைகளில் பின்னோக்கிப் போகின்றோம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொடியின் நிறங்கள் விடுதலைப் புலிகளின் கொடி போலவே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

456207946_3733057336936234_5939475628412

எங்கள் நாட்டில் ஒரு யானை வைத்திருந்த ரணிலே ஜனாதிபதி ஆகும்போது,
இரண்டு யானை வைத்திருக்கும் விஜய்க்கு... முதலமைச்சர், பிரதமர் ஆகும் யோகம் இருக்கு மேடம்.😂  

  • கருத்துக்கள உறவுகள்

456506614_26970367369221333_198305411205

இரண்டு யானை... ஐடியாவை, 
இலங்கை நெருப்புப் பெட்டியில் இருந்து சுட்டு இருப்பார்களோ... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த கொடியின் நிறங்கள் விடுதலைப் புலிகளின் கொடி போலவே உள்ளன.

இஸ்பேனிய‌ன் நாட்டு கொடி போல் உள்ள‌து ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா....................🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொடிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கும் கட்சியை இப்போது தான் முதலில் படிக்கின்றேன்.

14 hours ago, கிருபன் said:

இசையமைப்பாளர் தமன் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட உள்ளார்.

தமன் என்று ஒரு தமிழ் இசையமைப்பாளர் இருக்கின்றாரா
உறவு தந்த இசை புத்தகத்தை எடுத்து நான்  தேடினால் இந்த பெயர் இருக்கவில்லை  எப்போதும் தமிழன் தந்த விசுவநாதனும் இல்லை

இசை ஞானி இளையராஜா

இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்

தேனிசை தென்ற‌ல் தேவா

சிர்ப்பி

ஸ் ஏ ராஜ்குமார்

வித்தியா சாக‌ர்

வ‌ர‌த் வாஜ்

யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா

ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

விஸ்வநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு கொடிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கும் கட்சியை இப்போது தான் முதலில் படிக்கின்றேன்.

தமன் என்று ஒரு தமிழ் இசையமைப்பாளர் இருக்கின்றாரா
உறவு தந்த இசை புத்தகத்தை எடுத்து நான்  தேடினால் இந்த பெயர் இருக்கவில்லை  எப்போதும் தமிழன் தந்த விசுவநாதனும் இல்லை

இசை ஞானி இளையராஜா

இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்

தேனிசை தென்ற‌ல் தேவா

சிர்ப்பி

ஸ் ஏ ராஜ்குமார்

வித்தியா சாக‌ர்

வ‌ர‌த் வாஜ்

யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா

ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

விஸ்வநாதன்

அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜி.வி. பிரகாஷ் பெயர்கள் கூட உங்களின் லிஸ்டில் இல்லை. நாங்கள் ஒரு நூறு இசையமைப்பாளர்களையாவது பார்த்து இருப்போம் என்று நினைக்கின்றேன்.

தமன் ஒரு இசையமப்பாளர் மட்டும் கிடையாது, அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் கூட...........

கொடிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்றால்...................... தற்போதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு வேறு எதுவும் அங்கு கிடையாது என்பதாலேயே. இனி முக்கியமாக வரவிருப்பது நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி என்னும் செய்தி மட்டுமே........

5  +  5  = 5 என்று முடியுதோ தெரியவில்லை..............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜி,வி, பிரகாஷ் பெயர்கள் கூட உங்களின் லிஸ்டில் இல்லை. நாங்கள் ஒரு நூறு இசையமைப்பாளர்களையாவது பார்த்து இருப்போம் என்று நினைக்கின்றேன்.

சந்தோஷ் நாராயணன் நான் யழ்களத்தில் அறிந்தது மகள் பாடிய பாட்டு வந்தது பார்த்திருக்கிறேன்.  தமனா யாழ்பாணம் வருவதற்கு முதல் சந்தோஷ் நாராயணன் வந்து நிகழ்ச்சி நடத்தியவர்

எனக்கு  லிஸ்ட் தந்த உறவு அனிருத் சந்தோஷ் நாராயணனை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கின்றேன்😄

31 minutes ago, ரசோதரன் said:

கொடிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்றால்......................

விளங்கியது 🤣

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு கொடிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கும் கட்சியை இப்போது தான் முதலில் படிக்கின்றேன்.

தமன் என்று ஒரு தமிழ் இசையமைப்பாளர் இருக்கின்றாரா
உறவு தந்த இசை புத்தகத்தை எடுத்து நான்  தேடினால் இந்த பெயர் இருக்கவில்லை  எப்போதும் தமிழன் தந்த விசுவநாதனும் இல்லை

இசை ஞானி இளையராஜா

இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான்

தேனிசை தென்ற‌ல் தேவா

சிர்ப்பி

ஸ் ஏ ராஜ்குமார்

வித்தியா சாக‌ர்

வ‌ர‌த் வாஜ்

யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா

ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ்

விஸ்வநாதன்

தமன் இப்படி கலக்கல் பாட்டுக்கள் போடுவதில் வல்லவர். இசை தெரிவு ஒன்றில் நடுவராகவும் உள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக_அரசியல் – நேற்று வெளியிடப்பட்ட அரசியல் கட்சிக்கொடி, ஸ்பெயின் நாட்டுக் கொடியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக புகார் அளிக்கபட்டது.

தமிழக வெற்றிக் கழக இருப்பதாக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.

அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

https://madawalaenews.com/3015.html

  • கருத்துக்கள உறவுகள்

tvk-vijay.webp?resize=750,375&ssl=1

த.வெ.க கொடியினால் சர்ச்சை – ஸ்பெயினை அவமதித்ததாக விஜய் மீது குற்றச்சாட்டு.

தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.

அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1396911

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு கொடிக்கு இவ்வளவு எதிர்ப்புகள் வருவதை நல்ல விடயமாகப் பார்க்கிறேன். விஜையின் அரசியல் வருகையை எல்லோரும் வரவேற்றிருக்கும் நிலையில் திமுக பதற்படுகிறது. அவர்கனேள கொடி பற்றிய சர்சைகளைப் பரப்பி வருகின்றனர். அதிமுக அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி பாடலை எதிர்த்து அதை உலக அளவில்பிரபலமாக்கிய திமுக 200 டமரூபா ஊபிக்களின் ஐடீ விங்க் விஜையின் கொடியையும் நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். கொடியில் இருக்கும் சிவப்பு மஞ்சள் இனி கட்சி தொடங்கும் யாரும் தமிழத் தேசியத்தை விலகிச் செல்ல முடியாது என்பதையும் திராவிட சிந்ததாந்தம் அழிந்து கொண்டு போகின்றது என்பதையும் எடுத்தக் காட்டகின்றது. விஜைய்க்கு ஊழலற்ற கட்சியாக ஒரே தெரிவு நாம்தமிழர்கட்சி மட்டும் தான் இரண்டும் இணைந்தால் 2026 தமிழகத்தின் ஆட்சியில் பல மாற்றங்களை உருவாக்கலாம். யார் தலைமையேற்பது ன்பதில்தான் சிக்கல் இருக்கிறது. மேலும் அவர்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

 ஒரு கொடிக்கு இவ்வளவு எதிர்ப்புகள் வருவதை நல்ல விடயமாகப் பார்க்கிறேன். விஜையின் அரசியல் வருகையை எல்லோரும் வரவேற்றிருக்கும் நிலையில் திமுக பதற்படுகிறது. அவர்கனேள கொடி பற்றிய சர்சைகளைப் பரப்பி வருகின்றனர். அதிமுக அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி பாடலை எதிர்த்து அதை உலக அளவில்பிரபலமாக்கிய திமுக 200 டமரூபா ஊபிக்களின் ஐடீ விங்க் விஜையின் கொடியையும் நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். கொடியில் இருக்கும் சிவப்பு மஞ்சள் இனி கட்சி தொடங்கும் யாரும் தமிழத் தேசியத்தை விலகிச் செல்ல முடியாது என்பதையும் திராவிட சிந்ததாந்தம் அழிந்து கொண்டு போகின்றது என்பதையும் எடுத்தக் காட்டகின்றது. விஜைய்க்கு ஊழலற்ற கட்சியாக ஒரே தெரிவு நாம்தமிழர்கட்சி மட்டும் தான் இரண்டும் இணைந்தால் 2026 தமிழகத்தின் ஆட்சியில் பல மாற்றங்களை உருவாக்கலாம். யார் தலைமையேற்பது ன்பதில்தான் சிக்கல் இருக்கிறது. மேலும் அவர்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

samayam-tamil-96204305.jpg?imgsize=49398

உதயநிதியை முதலமைச்சர் ஆக்க முதல், விஜய் கட்சி தொடங்கினால்... 
200 ரூபாய் உடன்பிறப்புகள் பதற்றம் அடையத்தானே செய்வார்கள். animiertes-gefuehl-smilies-bild-0191.gif  animiertes-gefuehl-smilies-bild-0185.gif animiertes-gefuehl-smilies-bild-0048.gif 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.