Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர்.

நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரண்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/v/prxb4BYdqQSjydXq/

  • Replies 165
  • Views 10.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை.  இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இரு

  • சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள்.  மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்க

  • நிழலி
    நிழலி

    சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம்.

-சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சுமந்திரனின் வாய் அப்படி.

பாவம் சஜித்துக்கு... கிடைக்க இருந்த வாக்கையும் இந்தாள் கெடுத்துப் போட்டுது.

சுமந்திரன்,  சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டார்.

+++++++  +++++++  +++++++  +++++++ 

"சிலர் வாயை திறந்து பேசினால்... வெள்ளி கொடுக்கலாம்.

சிலர் வாயை மூடிக் கொண்டிருந்தாலே... பவுண் கொடுக்கலாம்." 😂

👆- துருக்கிய பழமொழி -👆

சுமந்திரன் எந்த வகை.... என்பதை, உங்கள் தெரிவிற்கே விட்டு விடுகின்றேன்🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

🫢........

முந்தி சுமந்திரனுக்கு இந்தப் பக்கத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. இப்ப அந்த கூட்டத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பிறகு அங்கஜன் அங்கே முன்னுக்கு வந்தார். இப்ப எல்லாரும் அங்கஜன் பக்கம் போய் விட்டார்களோ.....

டக்ளஸுக்கும் அங்கே ஒரு கூட்டம் இருக்குது.

அங்கே சிலர் அரியநேத்திரனுக்கும் போடுவார்கள்.

அநுரவிற்கும், நாமலுக்கும் உடுப்பிட்டித் தொகுதியில் எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பது ஒரு மர்மம் தான்.............     

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 

இல்லையேல்......?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 

இல்லையேல்......?

அப்படித்தான் ஒன்றாக இருந்தோம், விசுகு ஐயா. உங்களுக்கு இங்கிருக்கும் பலரை விட மிக நன்றாகவே எங்களின் வரலாறு தெரியும். ஆரம்பத்தில் இந்தப் பிரதேசம் பல கூறுகளாகப் பிரிந்தே கிடந்தது. என்னுடைய ஊரே இரண்டாகப் பிரிந்து இருந்தது. பின்னர் ஒன்றாகியது. ஒரு தலைமை, ஒரு கொள்கை, ஒரு இலட்சியம், அதை விட முக்கியமாக அந்த தலைமையின் அந்த இலட்சியத்தை அடைந்து விடலாம் என்று நாங்கள் எல்லோரும் அன்று நம்பியது, இவை தான் அந்த ஒற்றுமைக்கு காரணம். 

இன்று அப்படியான ஒரு நம்பிக்கையை கொடுப்போர் என்று எவரும் எங்கள் மத்தியில் இல்லை..............😌.   

  • கருத்துக்கள உறவுகள்

839130789.jpg

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது!

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஒருவர் கூட சமூகம் அளிக்காத நிலையில் கூட்டம் கைவிடப்பட்டது.

இப்  பிரச்சாரக் கூட்டம் வடமராட்சி  குஞ்சர்கடை கொலின்ஸ்  விளையாட்டு கழக மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் 10. 00 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. 

பிரச்சார கூட்டத்திற்கு சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி, மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 10 மணிக்கு பிரச்சார கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. அங்கு இசை நிகழ்வு கதிரைகள் மட்டும் பார்வையாளராக இருக்க  இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

ஆனால் 11.00 மணிக்கு கூட்டம் எடும்பெறும் 12 .00 மணிக்கு இடம்பெறும் என மாற்றி மாற்றி கூறிய நிலையில் பிற்பகல் 2.00 மணி ஆகியும் கூட்டத்துக்கு ஒருவர் கூட சமூகமளிக்காக நிலையில் பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் ஐவர், பாதுகாப்புக்கு வருகை தந்த இருபது வரையான  பொலிஸார் ஊடகவியலாளர்கள் சிலர் மட்டுமே அங்கு காணப்பட்டனர். 

கூட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் தமது கடமைகளை கைவிட்டு சென்றனர்.  (ப)

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் றத்து! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் 3 மணி நேரம் முன்

ஐக்கிய மக்கள் சக்தியின்: தேர்தல் பிரசாரக் கூட்டம்!

816607147.jpg

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இன்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.  (ப)

ஐக்கிய மக்கள் சக்தியின்: தேர்தல் பிரசாரக் கூட்டம்! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

newuthayan.com இரண்டு விதமாக செய்தி எழுதுகின்றதே 🖕

இல்லை  newuthayan.com  சரியாகவே எழுதியுள்ளது 👍

5 hours ago, ரசோதரன் said:

இப்ப எல்லாரும் அங்கஜன் பக்கம் போய் விட்டார்களோ.....

டக்ளஸுக்கும் அங்கே ஒரு கூட்டம் இருக்குது.

அங்கே சிலர் அரியநேத்திரனுக்கும் போடுவார்கள்.

7 கட்சிகள் + 83 அமைப்புக்களினால் நிறுத்தபட்ட ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு சிலர் தான் வாக்கு போடுவார்கள் உண்மை நிலையை தெரிவித்துள்ளீர்கள்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 

இல்லையேல்......?

இலங்கையில்,..இலங்கை தமிழர்கள் ஒன்று பட்டால் வாழ்வு” உண்டா ??? ஆச்சரியமாய் இருக்கிறது   நம்ப முடியவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின் வாய் அப்படி.

பாவம் சஜித்துக்கு... கிடைக்க இருந்த வாக்கையும் இந்தாள் கெடுத்துப் போட்டுது.

சுமந்திரன்,  சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டார்.

+++++++  +++++++  +++++++  +++++++ 

"சிலர் வாயை திறந்து பேசினால்... வெள்ளி கொடுக்கலாம்.

சிலர் வாயை மூடிக் கொண்டிருந்தாலே... பவுண் கொடுக்கலாம்." 😂

👆- துருக்கிய பழமொழி -👆

சுமந்திரன் எந்த வகை.... என்பதை, உங்கள் தெரிவிற்கே விட்டு விடுகின்றேன்🤣

யார் பவுன் கொடுப்பார்கள் என்பதை தெளிவாக உறுதியாக சொல்லுங்கள்   சுமத்திரன்.  மட்டுமல்ல யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருப்போம்   🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

newuthayan.com இரண்டு விதமாக செய்தி எழுதுகின்றதே 🖕

7 கட்சிகள் + 83 அமைப்புக்களினால் நிறுத்தபட்ட ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு சிலர் தான் வாக்கு போடுவார்கள் உண்மை நிலையை தெரிவித்துள்ளீர்கள்

கொடிகாமத்தில் செய்தது போலவே, உடுப்பிட்டியிலும் ஒரு பரிசளிப்பு விழாவையும் சேர்த்தே வைத்திருந்தால் உடுப்பிட்டியிலும் கொஞ்சமாவது கூட்டம் வந்திருக்கும். 

ஆனால் வடமராட்சியில் இப்போது மூன்று லீக்குகள் இருக்கின்றதென்று நினைக்கின்றேன் - வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு. இதில் யாரைக் கூப்பிடுவது, யாரை விடுவது என்று அது வேற ஒரு பிரச்சனை இருக்குது. ஏன் தேவையில்லாத வம்பு என்று தான் உடுப்பிட்டியில் பரிசளிப்பு விழா நடத்தவில்லை போல.........

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அப்படித்தான் ஒன்றாக இருந்தோம், விசுகு ஐயா. உங்களுக்கு இங்கிருக்கும் பலரை விட மிக நன்றாகவே எங்களின் வரலாறு தெரியும். ஆரம்பத்தில் இந்தப் பிரதேசம் பல கூறுகளாகப் பிரிந்தே கிடந்தது. என்னுடைய ஊரே இரண்டாகப் பிரிந்து இருந்தது. பின்னர் ஒன்றாகியது. ஒரு தலைமை, ஒரு கொள்கை, ஒரு இலட்சியம், அதை விட முக்கியமாக அந்த தலைமையின் அந்த இலட்சியத்தை அடைந்து விடலாம் என்று நாங்கள் எல்லோரும் அன்று நம்பியது, இவை தான் அந்த ஒற்றுமைக்கு காரணம். 

இன்று அப்படியான ஒரு நம்பிக்கையை கொடுப்போர் என்று எவரும் எங்கள் மத்தியில் இல்லை..............😌.   

அதிஉயர் தியாகம் 

இழக்க முடியாத கொடுக்கக்கூடிய விலையை விட அதிகமாக கொடுத்த தோல்விநிலை. 

இதற்கு மேல் என்ன செய்வது எதை இதற்கு மேல் ஈகை செய்வது என்ற பரிதாப நிலை. 

இந்த நிலையில் தோற்று போன ஒரு இனத்தின் கையேறு நிலை தான் இது.

ஆனால் தமிழரின் வரலாறை இயக்குவது தமிழர்கள் இல்லை அது சிங்களவரால் இயக்கப்படுகிறது இயக்கப்படும். பார்க்கலாம். நன்றி நேரத்திற்கு. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2024 at 18:46, வாலி said:

இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂

அப்போ எல்லா வேட்பாளர்களும் வாக்குகளை பிரிக்க தான் போட்டியிடுகிறார்கள் என எடுக்கலாம் தானே. இதுவும் பொயின்ட் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

கொடிகாமத்தில் செய்தது போலவே, உடுப்பிட்டியிலும் ஒரு பரிசளிப்பு விழாவையும் சேர்த்தே வைத்திருந்தால் உடுப்பிட்டியிலும் கொஞ்சமாவது கூட்டம் வந்திருக்கும். 

நான் தான் ஒரே  இடம் என்று தவறாக விளங்கிவிட்டேன்.  செய்தியை தெளிவுபடுத்தியதற்கு நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

459135621_522558250183392_64194058427392

சுமந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் கூட  வரவில்லையா. 😂 🤣

Selvarajah Kalmunai

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 

இல்லையேல்......?

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்..

தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்..

இப்படிஅமைந்த பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்தபடி எப்படி ஒற்றுமை வகுப்பை எடுக்க முடியும்..?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்..

அரியத்தார் தான் எப்பவும் தமிழரசுக் கட்சி தானாம்!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்..

தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்..

இப்படிஅமைந்த பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்தபடி எப்படி ஒற்றுமை வகுப்பை எடுக்க முடியும்..?

உங்களுக்கு ஒற்றுமையின் அர்த்தமே புரியவில்லை. 

கூட்டமைப்பு சார்ந்து நீங்கள் 15 வருடங்களுக்கு முன்னர் நான் நின்ற இடத்தில் நிற்கிறீர்கள். பட்டு வாருங்கள் 2040 இல் பேசலாம். அதற்கிடையில் நீங்கள் பிச்சை எடுக்கும் நிலையிலும் கூட்டமைப்பினர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணம் 3 மணி நேரம் முன்

ஐக்கிய மக்கள் சக்தியின்: தேர்தல் பிரசாரக் கூட்டம்!

816607147.jpg

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இன்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.  (ப)

ஐக்கிய மக்கள் சக்தியின்: தேர்தல் பிரசாரக் கூட்டம்! (newuthayan.com)

May be an image of 3 people and text that says 'லவ்லி கிறீம் ஹவுஸ் 6 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இன்னிசை நிகழ்வு ஈழத்தின் பிரபல சாந்தன் இசைக்குழுவினர் மற்றும் பிரபல பாடகி கில்மிஷா கலந்துகொள்கின்றனர். KAO காலம்- 10 10-09- 09 2024 நேரம் மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை இடம்- நட்சத்திர மஹால் வீதி, கொடிகாமம் அனுமதி இலவசம் அனைவரைய அனைவ அனைவரையும்அன்போடு ரையும் ரைம ம் அன் போடு அழைக்கின்றோம் D நிர்வாகத்தினர், லவ்லி கிறீம் கவுஸ்'

458407465_2169264903443811_8803079244552

//லவ்லி கிறீம் ஹவுஸ் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்னிசை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

யாழ் சாவகச்சேரி லவ்லி கிரறீம் ஹவுஸ் நிறுவனத்தின் ஆறாமாண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி பரிசளிப்பு விழாவும் இன்னிசை நிகழ்வும் 10-09-2024 ( செவ்வாய்க்கிழமை ) மாலை 2 தொடக்கம் 4 மணி வரை யாழ் கொடிகாமம் நட்சத்திரமகால் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஈழத்தின் பிரபல பாடகி கில்மிஷா மற்றும் சாந்தன் இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.

அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்.//

Kunalan Karunagaran

தமிழரசுட்சியின் (சுமந்திரன் அணி) அடுத்த பிரட்டு வெளிப்பட்டது.

ஒரு ஐஸ் கிரீம் கடையின்... ஆறாவது ஆண்டு நிறைவுடன் நடந்த கில்மிஷாவின் இசை நிகழ்ச்சிக்கும், பரிசளிப்பு விழாவிற்கும் ... சஜித் பிரேமதாசாவை கூப்பிட்டு, தேர்தல் பிரசாரக் கூட்டம் என்று அங்கு வந்திருந்த மக்களை காட்டி ஏமாற்றியுள்ளார்கள்.

அந்த ஐஸ் கிரீம் கடை கொடுத்த விளம்பரத்தில், எந்த ஒரு இடத்திலும்... சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார கூட்ம் என்று குறிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை!

adminSeptember 12, 2024
Sumanthiran-SriLanka.jpg

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவு உறுதி செய்ததாக அதன் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப் போவதில்லை எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுலாக்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகிறது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

https://globaltamilnews.net/2024/206654/

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2024 at 22:02, நிழலி said:

உங்களது கருத்துக்கு மேல் உள்ள,  நான் ஏராளனுக்கு எழுதிய பதிலில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளது.

முதல் விருப்பு வாக்கை அரியேந்திரனுக்கு போட்டு விட்டு இரண்டாவது விருப்புவாக்கை அவர்கள் விரும்பும் பேரினவாதி ஒருவருக்கு போட்டாலும் பிரச்சனை இல்லைதானே! ஏனென்றால் ஒருவருக்கும் ஐம்பது சதவீத வாக்குகளுக்குமேல் வரப்போவதில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.

திரும்ப திரும்ப சுமந்திரன் மட்டுமே இதைச் சொல்கிறார்.

தமிழரசுக்  கட்சியின் மற்றைய உறுப்பினர்கள் வேறமாதிரி சொல்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2024 at 06:59, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்..

தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்..

இப்படிஅமைந்த பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்தபடி எப்படி ஒற்றுமை வகுப்பை எடுக்க முடியும்..?

சாணக்கியனும், சுமந்திரனும் சஜித்துக்கு வாக்களிக்க கேட்பதன் மூலம் ஒற்றுமையை  உருவாக்க முடியும்.😋 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

முதல் விருப்பு வாக்கை அரியேந்திரனுக்கு போட்டு விட்டு இரண்டாவது விருப்புவாக்கை அவர்கள் விரும்பும் பேரினவாதி ஒருவருக்கு போட்டாலும் பிரச்சனை இல்லைதானே! ஏனென்றால் ஒருவருக்கும் ஐம்பது சதவீத வாக்குகளுக்குமேல் வரப்போவதில்லையே!!

பொதுவேட்பாளருக்கு மட்டும் புள்ளடி போடச் சொல்கிறார்கள் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்தோர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2024 at 06:59, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்..

அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சியில் போட்டியிடுவது தமிழ் அரசு கட்சியை விட்டு விலகிச் செல்வதாக கருதப்படலாம். நான் இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெறவில்லை.  இப்பொழுதும் தமிழ் அரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். நான் தமிழ் தேசிய கொள்கையுடையவன். கட்சியின் கொள்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே போன்று எனது தமிழ் தேசிய கொள்கையினையும் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/193514

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.