Jump to content

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1723098589-ariyanenthiran-2.jpg?resize=6

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவா் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1397827

@Kapithan 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தமிழீழம் பிரிச்சுத் தருவேன் என்றுகூட அவர் கூறலாம். ஏனென்றால் அவர்தான் வெல்லப்போவதில்லையே. 

மக்களை முட்டாளாக்குவதற்கு என்னவெல்லாமோ கூறுகிறார்கள். 

அவர் வாக்குகளைப் பிரிப்பதற்கு இந்தியாவால் களமிறக்கப்பட்டவர். இறுதியில் TNA கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவிப்பார். 

இத்துடன் TNA தேங்காய்ச் சிதறல்களாக உடைந்து போகும். அதற்கான பலியாடாக சுமந்திரன் வேள்வியில் கழுத்து வெட்டப்படுவார். அனேகமாக சிங்களம்  தேடியப் பட்டியலூடாக அவரை MP ஆக நியமிக்கும். 

ஆனால் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, கையில் ஆயுதமும் பயிற்சியிம் தந்து,?தனது இராணுவத்தை நாட்டினுள் இறக்கிது முதல் இறுதிப் போரில் தனது இராணுவத்தைக் கொண்டு எமது போராட்டத்தையும் மக்களையும் அழித்தொழித்தது வரையான சகல அழிவுகளுக்கும் மூலகாரணம் இந்தியா என்பதை நாம் இலகுவாக மறந்துவிடுவோம்.

திரும்பவும் இந்தியா புராணம் பாடுவோம். 

ஆனால் நாங்கள் இலங்கையரும் அல்ல இந்தியரும் அல்ல. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது; முழுமையான விபரம் உள்ளே

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில்,
தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்படது.

இந்நிகழ்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முழுமையான தேர்தல் விஞ்ஞாபனம் இதோ…

”தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது.

இப்போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும்.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள்;, தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில், உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும்.

இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும்.

ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும்.

தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள்.

அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும்.

இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது.

இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது.

கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது.

கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான Bobigny,Sevran,Choisy-Le-Roi,Vitry-Sur-Seine என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில்(Congress) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை; இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக,

1-திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால்; ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன.

மேலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் இது.

2-மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன.

வாகரை. கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவை.

4-அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு மாவட்டம் இது.

5-வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள்.

அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.

முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி அகழ்வானது பன்னாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.

6-வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

7-மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது.

மன்னார் புதைகுழி தொடர்பான உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை

8-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சொத்துகளை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது.

9-யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன.

நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது.

10-தமிழர் தாயகம் எங்கும் தனியார் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதாக அரச புள்ளி விபரங்கள் பொய் கூறுகின்றன.

தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவு நிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன.

மேற்குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

11-புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

12-தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

13-அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்படவும் இல்லை.

14-மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்;, அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

15-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவி விடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்பது, அங்கே சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களே.

இந்த நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை.

தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன.

பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள்.

நிலப்பறிப்பு, சிங்களபௌத்தமயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமான அரசைப்போல செயற்படுகின்றது.

அதில் வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது

இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்ப வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமறுத்து இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு கடனாளியாகியது. எனவே, இப்பொழுது நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காகப் வாங்கிய கடன் சுமைதான்.

இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.

யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை.

அந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு சிறப்பு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை.

யுத்தத்துக்காகப் படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது.

இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதி படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்கு கிழக்கில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை.

மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான இராணுவ பொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்பட்டமாடடார்கள். அண்மைக் காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.

தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள், சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான இராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம்.

தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒரு பின்னணியில் இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பாஅரியநேத்திரன் அவர்களை முன் நிறுத்துகிறோம்.

கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்;. 2009க்குப் பின் 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைத் தரவும் இல்லை; இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை.

கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார்.

இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது.

1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.

4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.

5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது.

6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.

7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும்.

இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.

8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும் நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.

இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும்.

9-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார்.

ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும்.

சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம்.

https://thinakkural.lk/article/308918

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

இதைச் சொல்லவாவது இவ்வாறு ஒன்றும் அதற்கு முன் வரக் கூடிய ஒருவரும் தேவை. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம், சித்தார்த்தனை காணவில்லை

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞான வெளியீட்டில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இவ்விரு தலைவர்கள் ஏற்கனவே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/308928

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க,.எங்க,.எங்க,...

விஞ்ஞாபனம் எங்கேயப்பா,.? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை பற்றி தெளிவாக பேசப்பட்டுள்ளது. 
சில இடங்களில் சொற்பதங்கள் தெளிவு இல்லை. மலையக மக்கள் தேசிய இனம் என்று கூறியிருந்தால் சிறப்பு. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியத்தாருக்கு போதிய வாக்குகள் விழாவிடின் நட்டம் அவருக்கல்ல!!

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக்கட்டமைப்பு தனியே பொதுவேட்பாளருடன் நிற்காமல்

அடுத்தடுத்த தேர்தல்களில் எல்லோரையும் இணைத்து களம்காண வேண்டும்.

அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

பொதுக்கட்டமைப்பு தனியே பொதுவேட்பாளருடன் நிற்காமல்

அடுத்தடுத்த தேர்தல்களில் எல்லோரையும் இணைத்து களம்காண வேண்டும்.

அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல்  பரப்பின் சித்து விளையாட்டின் கனவான்கள், மிதவாதிகள் , சந்தர்ப்பவாதிகள், குழப்பவாதிகள் யாரென்று அடையாளப்படுத்தி ஆணிகளை இறுக்கி கொஞ்சமாவது ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்தால் சிறப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நன்றி 

இதைச் சொல்லவாவது இவ்வாறு ஒன்றும் அதற்கு முன் வரக் கூடிய ஒருவரும் தேவை. 

விசுகு... சரியாக சொன்னீர்கள். 
நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும்  சொல்லிக் கொண்டு இருப்பம்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... சரியாக சொன்னீர்கள். 
நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும்  சொல்லிக் கொண்டு இருப்பம்.  

2009 க்கு பின்னர் எந்த ஒரு அசைவும் அற்ற இனமாக எம் இனம் இருப்பதற்கு காரணம் புலிகள் இல்லாத இந்த இடைவெளியை அவர்கள் எப்பொழுது தொலைவார்கள் என்று காத்திருந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்து காத்திருந்த காவாலிகள் அந்த இடங்களில் புகுந்து விட்டது தான். 😡 தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே நிலை தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

2009 க்கு பின்னர் எந்த ஒரு அசைவும் அற்ற இனமாக எம் இனம் இருப்பதற்கு காரணம் புலிகள் இல்லாத இந்த இடைவெளியை அவர்கள் எப்பொழுது தொலைவார்கள் என்று காத்திருந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்து காத்திருந்த காவாலிகள் அந்த இடங்களில் புகுந்து விட்டது தான். 😡 தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே நிலை தான்.

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனை இல்லை பிரபாகரனின் கையில் அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது  என்று கங்கணம் கட்டி, போராட்டத்தையும் பொதுமக்களையும் திட்டம் போட்டு தொலைத்தது  புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறித் திரிந்த  புலம்பெயர் காவாலிகள் என்பதையும், அவர்கள் யார் யார்  என்பதை  உலகமே அறியும் விசுகர்.  

உங்களுக்கும் தெரியும் அவர்களில்  யார் யார் முக்கியமானவர்களென்று,  ஆனாலும் உங்கள் கைதான் சுத்தமாச்சே. ... நீங்கள் ஒருவரையும் கைகாட்ட மாட்டீர்கள் . ஆனாலும் ஊருக்கு வகுப்பெடுக்க வருவீர்கள்...,. 😏

1 hour ago, தமிழ் சிறி said:

விசுகு... சரியாக சொன்னீர்கள். 
நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும்  சொல்லிக் கொண்டு இருப்பம்.  

அரியநேந்திரன் என்ன செய்வார்? என்ன செய்யமாட்டார்? 

ஒன்றை உங்களால் கூறமுடியுமா? 

ஏன் இந்தப் புடுங்குப்பாடு என்று இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? 

☹️

4 hours ago, ஏராளன் said:

அரியத்தாருக்கு போதிய வாக்குகள் விழாவிடின் நட்டம் அவருக்கல்ல!!

இலங்கையில் நிலைமை ஸ்திரமடைந்தால் யாருக்கு நட்டம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனை இல்லை பிரபாகரனின் கையில் அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது  என்று கங்கணம் கட்டி, போராட்டத்தையும் பொதுமக்களையும் திட்டம் போட்டு தொலைத்தது  புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறித் திரிந்த  புலம்பெயர் காவாலிகள் என்பதையும், அவர்கள் யார் யார்  என்பதை  உலகமே அறியும் விசுகர்.  

உங்களுக்கும் தெரியும் அவர்களில்  யார் யார் முக்கியமானவர்களென்று,  ஆனாலும் உங்கள் கைதான் சுத்தமாச்சே. ... நீங்கள் ஒருவரையும் கைகாட்ட மாட்டீர்கள் . ஆனாலும் ஊருக்கு வகுப்பெடுக்க வருவீர்கள்...,. 😏

☹️

காட்டி கூட்டி கொடுக்கும் காவாலிகள் பற்றி பேசியதும் ஏன் உங்களுக்கு எரியுது??

உண்மை கசப்பானது.  ஆனால் எதிர் கொண்டவர் நாம். எனவே நீங்கள் தூரமாக நின்று உங்கள் கரசேவையை தொடருங்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

காட்டி கூட்டி கொடுக்கும் காவாலிகள் பற்றி பேசியதும் ஏன் உங்களுக்கு எரியுது??

உண்மை கசப்பானது.  ஆனால் எதிர் கொண்டவர் நாம். எனவே நீங்கள் தூரமாக நின்று உங்கள் கரசேவையை தொடருங்கள். 

எனக்கு எரியவில்லை விசுகர். 

சகலதும் தெரிந்தும் மெளனமாக நின்று பிறர் மீது பழிபோட்டு நாடகமாடுகிறீர்களே அதுதான் சகிக்க முடியவில்லை. 

நான்  நேராகவே கூறுகிறேன் விசுகர், 

விபு களின் பணத்தைச் சூறையாடியவர்கள், 2005 பேச்சுவார்த்தையைக் குழப்பிஅடித்தவர்கள், பிரபாகரனின் கையில் அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி நின்றவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் நின்ற நாடு எது என்று எல்லாமே உங்களுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும்.

தெரிந்திருந்தும் அவர்களை வெளிக்காட்டாது அவர்களை நீங்கள்  பாதகாத்து பிறர் மீது பழி போடுவது ஏன் ? 

அதுதான் சகிக்க முடியவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எனக்கு எரியவில்லை விசுகர். 

சகலதும் தெரிந்தும் மெளனமாக நின்று பிறர் மீது பழிபோட்டு நாடகமாடுகிறீர்களே அதுதான் சகிக்க முடியவில்லை. 

நான்  நேராகவே கூறுகிறேன் விசுகர், 

விபு களின் பணத்தைச் சூறையாடியவர்கள், 2005 பேச்சுவார்த்தையைக் குழப்பிஅடித்தவர்கள், பிரபாகரனின் கையில் அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி நின்றவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் நின்ற நாடு எது என்று எல்லாமே உங்களுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும்.

தெரிந்திருந்தும் அவர்களை வெளிக்காட்டாது அவர்களை நீங்கள்  பாதகாத்து பிறர் மீது பழி போடுவது ஏன் ? 

அதுதான் சகிக்க முடியவில்லை  

உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. யாராலேயோ வளர்க்கப்பட்டு அவர்கள் அழிக்க நினைக்கும் இடங்களில் போடப்பட்டவர் தாங்கள் என்பதும் தெரியும். உங்களைப் போன்ற பலரும் பல அமைப்புகளிலும் பரவிக் கிடக்கிறார்கள். அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான். ஏனெனில் எனக்கு அந்தளவுக்கு முள்ளமாரித்தனம் தெரியாது. ஒத்துக் கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. யாராலேயோ வளர்க்கப்பட்டு அவர்கள் அழிக்க நினைக்கும் இடங்களில் போடப்பட்டவர் தாங்கள் என்பதும் தெரியும். உங்களைப் போன்ற பலரும் பல அமைப்புகளிலும் பரவிக் கிடக்கிறார்கள். அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான். ஏனெனில் எனக்கு அந்தளவுக்கு முள்ளமாரித்தனம் தெரியாது. ஒத்துக் கொள்கிறேன். 

என்னைக் கைகாட்டுவதால் தாங்கள் மறக்கப்பட்டுவிடுவீர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். இந்தக் கேள்வி உங்களை தொடர்ந்துகொண்டே இருக்கும். 

👇

விபு களின் பணத்தைச் சூறையாடியவர்கள், 2005 பேச்சுவார்த்தையைக் குழப்பிஅடித்தவர்கள், பிரபாகரனின் கையில் அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி நின்றவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் நின்ற நாடு எது என்று எல்லாமே உங்களுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும்.

தெரிந்திருந்தும் அவர்களை வெளிக்காட்டாது அவர்களை நீங்கள்  பாதகாத்து பிறர் மீது பழி போடுவது ஏன் ? 

  • Downvote 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பேச்சுவார்த்தையைக் குழப்பிஅடித்தவர்கள்,

எதையும் சொல்லுங்கள்   பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது  என்று கூற வேண்டாம்  காரணம் தமிழருக்கு 

1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி  கொடுப்பது இல்லை 

2,..வடக்கு    கிழக்கு    மாகணங்களுக்கு  காணி பொலிஸ்   அதிகாரங்களை கொடுப்பது இல்லை    

3,..வெளிநாடுகளிடமிருந்து  நிதியுதவி பெறும்  அதிகாரமில்லை   எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை   

4,.  இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே   இலங்கை அரசு  குழப்பி அடித்து விட்டது 

5.     தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 

6...  இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால்  

டக்ளஸ் முதலமைச்சர் 

கருணா    பாதுகாப்பு அமைச்சர் 

பிள்ளையான்    உள்நாட்டு அமைச்சர் 

சாணக்கியன்   நிதியமைச்சர் 

சுமத்திரன்.  நீதி அமைச்சர் 

சுமத்திரன்.  வெளிநாட்டு அமைச்சர் 

இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் 

யார் மறிப்பது??? எவருமில்லை  ஆனால்   இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை  

எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

 

 

https://www.facebook.com/watch?v=1071579011636009

ஜனாதிபதி தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்குகிறார்.!!

பக்கா அரசியல்வாதி என்பதை இதை தானோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பெருமாள் 

உங்களுக்கும் விசயம் தெரியும் போல,....-1 போடுறியள்

🤣

5 hours ago, Kandiah57 said:

எதையும் சொல்லுங்கள்   பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது  என்று கூற வேண்டாம்  காரணம் தமிழருக்கு 

1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி  கொடுப்பது இல்லை 

2,..வடக்கு    கிழக்கு    மாகணங்களுக்கு  காணி பொலிஸ்   அதிகாரங்களை கொடுப்பது இல்லை    

3,..வெளிநாடுகளிடமிருந்து  நிதியுதவி பெறும்  அதிகாரமில்லை   எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை   

4,.  இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே   இலங்கை அரசு  குழப்பி அடித்து விட்டது 

5.     தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 

6...  இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால்  

டக்ளஸ் முதலமைச்சர் 

கருணா    பாதுகாப்பு அமைச்சர் 

பிள்ளையான்    உள்நாட்டு அமைச்சர் 

சாணக்கியன்   நிதியமைச்சர் 

சுமத்திரன்.  நீதி அமைச்சர் 

சுமத்திரன்.  வெளிநாட்டு அமைச்சர் 

இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் 

யார் மறிப்பது??? எவருமில்லை  ஆனால்   இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை  

எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏

இலங்கைத் தமிழர் இந்தியாவிற்குக் காவடி தூக்கும்வரை ஒன்றுமே நடவாது கண்டியளோ,... 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

டக்ளஸ் முதலமைச்சர் 

கருணா    பாதுகாப்பு அமைச்சர் 

பிள்ளையான்    உள்நாட்டு அமைச்சர் 

சாணக்கியன்   நிதியமைச்சர் 

சுமத்திரன்.  நீதி அமைச்சர் 

சுமத்திரன்.  வெளிநாட்டு அமைச்சர் 

இவர்களைவிட செல்வம், சிறீக்காந்தா, சிவாஜி, சித்தார்த்தன், அனந்தி வகையறா புலமைசார் மேன்மக்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள்!

இதில் பிள்ளையான் சூப்பர் தெரிவு, குழந்தைப் போராளியாக இருந்து பின்னர் கிழக்கு மாகாண முதல்வராகி தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

ஶ்ரீதரனுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுக்கலாம்.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாலி said:

இவர்களைவிட செல்வம், சிறீக்காந்தா, சிவாஜி, சித்தார்த்தன், அனந்தி வகையறா புலமைசார் மேன்மக்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள்!

இதில் பிள்ளையான் சூப்பர் தெரிவு, குழந்தைப் போராளியாக இருந்து பின்னர் கிழக்கு மாகாண முதல்வராகி தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

ஶ்ரீதரனுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுக்கலாம்.

 

உண்மை தான்    நான்  தெரிவு செய்தவர்கள் இலங்கை அரசின் சொல்படி நடப்பவர்கள்.   அவர்களுக்கே மாநில ஆட்சியை நடத்தும் பணியை ஒப்படைக்க மாட்டார்கள் நீங்கள் குறிப்பிட்டவர்கள். தமிழ் ஈழப்பிரகடனம்.  செய்து போடுவார்கள்   😂🙏

1 hour ago, Kapithan said:

@பெருமாள் 

உங்களுக்கும் விசயம் தெரியும் போல,....-1 போடுறியள்

🤣

இலங்கைத் தமிழர் இந்தியாவிற்குக் காவடி தூக்கும்வரை ஒன்றுமே நடவாது கண்டியளோ,... 😉

இலங்கை தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் குழப்பவில்லை   என்பதைத் தான் சுட்டி காட்டுகிறேன்   அது இயங்கங்கள். தமிழ் அரசியல் கட்சிகள்   யாராக இருந்த போதிலும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் பேச்சுவார்ததைகளை என்றுமே குழப்பவில்லை. தமிழீழ தமிழர்களும் ஐரோப்பிய தமிழர்களும் இலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் தான் தான் குழப்பினார்கள். 😂😂😂

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.

தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துவிட்டது.
அந்த அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக முன் வைக்கின்றது. முதலாவதாக, அது தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பன்னாட்டுப் பொறிமுறையின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

இரண்டாவதாக, அந்த அறிக்கையானது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரிக்கின்றது. அதேசமயம் இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை தீவின் புதிய யாப்பானது பன்மை தேசிய அரசாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

மூன்றாவதாக, இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதியை அந்த அறிக்கை கோரி நிற்கின்றது. பரிகாரநீதி என்பது அதன் அதன் பிரயோக வடிவத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை உள்ளடக்கியதுதான் என்ற ஒரு வியாக்கியானம் உண்டு.

அந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிக்கையில் பன்மைத் தேசியம் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பன்மைத் தேசிய அரசு என்ற பதம் கடந்த தசாப்தங்களில் அறிமுகத்துக்கு வந்தது.1980 களின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் சுதேச மலைவாழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தை அது.பொலிவியாவின் புதிய யாப்பின்படி அங்கு இருப்பது பன்மை தேசிய அரசு என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் பொலிவியா என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. பன்மைத் தேசிய பண்புடைய ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர பொலிவியாவைப்போல என்று கூறப்படவில்லை. பொலிவியாவில் இருப்பது போன்ற ஒரு தீர்வை இங்கு உருவாக்க வேண்டும் என்று அந்த தேர்தல் அறிக்கை எங்கேயும் கேட்கவில்லை.

தேர்தல் அறிக்கையில் இருப்பது ஒரு கருத்துருவதைக் குறிக்கும் வார்த்தை.பொலிவியாவில் இருப்பது ஒரு கட்டமைப்பு.இரண்டையும் ஒன்றை மற்றத்துடன் மாறாட்டம் செய்யத் தேவையில்லை.மேலும்,கஜேந்திரக்குமார் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ற் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாரும்போது அந்த வார்தையைப் பயன்படுத்துகிறார்.அவர் தனது உரையில் “ஸ்ரீலங்கா ஒரு பன்மைத் \தேசிய நாடு”என்று கூறுகிறார்.அவர் அப்படிக் கூறியதற்காக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது, அவருடைய கட்சியின் பகிஷ்கரிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என்று பொருள் கொள்ளலாமா?

அந்த தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக ஈழத் தமிழர்கள் இறமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்; தேசம் என்று கூறுகின்றது. ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வை அது நிராகரிக்கின்றது. அதுமட்டுமில்லை,அந்த தேர்தல் அறிக்கையானது நிலை மாறுகால நீதியை நிராகரித்து, பரிகார நீதியைக் கேட்கின்றது. பரிகார நீதி என்பது இனப்படுகொலைக்கு எதிராகத் தரப்படுவது. அது பெரும்பாலும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தனக்கு என்ன தேவை என்பதனை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பதற்கு உரிமை உடையது என்பதனை ஏற்றுக் கொள்கிறது.அந்த அடிப்படையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதே பரிகாரநீதியின் பிரயோக யதார்த்தமாக காணப்படுகின்றது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் பொதுஜனவாக்கடுப்பு வெளிப்படையாக கேட்கப்படவில்லை, பொலிவியாவைப்போல ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு கேட்கப்படுகிறது என்றெல்லாம் வியாக்கியானங்கள் தரப்படுகின்றன. இந்த வியாக்கியானங்கள் உள்நோக்கமுடையவை. அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்து விட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் யானை பார்த்த குருடர்களின் விமர்சனங்கள்.

தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 40 நாள் குழந்தை அது.ஒரு 40 நாள் வயதான ஒரு கட்டமைப்பானது ஒரு பொது முடிவுக்கு வருவதில் பல நெருக்கடிகள் இருக்கும். அந்த கட்டமைப்புக்குள் ஏழு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் 7 கட்சித் தலைவர்களும் உண்டு. மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்குள்ளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்ட சிவில் சமூகங்கள் உண்டு. அதுபோல கட்சித் தலைவர்கள் மத்தியிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னுறுத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அதற்காக எல்லா விடயங்களிலும் அவர்கள் உருகி பிணைந்த ஒரு கட்டமைப்பாக மாறிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு. ஒரு புதிய பண்பாடு. இது இனிமேல் எப்படி வளரப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையில் உறுப்பாக உள்ள குடிமக்கள் சமூகம் ஒன்று அந்த அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் வர வேண்டும் என்று கேட்டது.

அதுபோல தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில பொது வாக்கெடுப்பை வெளிப்படையாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தின.மொத்தம் 14 பேர்களைக் கொண்ட அந்த கட்டமைப்புக்குள் ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.அந்த பொது முடிவுதான் வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கையாகும்.

அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் அதை விமர்சிப்பவர்கள் பெருமளவுக்கு தாங்கள் எதிர்பார்த்த தீர்வு முன்மொழிவுகள் அங்கே இல்லை என்பதை ஒரு காரணமாக முன்வைக்கின்றார்கள்.ஒரு பகுதியினர் சமஸ்ரி என்பது தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு என்ற விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தாங்கள் வசிக்கும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களோடு உரையாடும் பொழுது இந்த ஆவணத்தை முன்வைத்து உரையாட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், இந்த ஆவணம் தமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

எனினும் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து அந்த ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தபடியால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு நிலைமை அங்கே இருக்கவில்லை என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அந்த அறிக்கை தொடர்பில் இதுவரையிலும் வெளிவந்த பிரதிபலிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை தாயகத்திலும் டயஸ்போறாவிலும் பரவலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதனை எல்லாரும் பரபரப்போடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அந்த அறிக்கைக்குள் தங்களுடைய விருப்பங்கள் கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிடமும் இருந்திருக்கிறது. இது எதைக் காட்டுகின்றது?

அப்படி ஒரு அறிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,தவிப்போடு ஒருவிதத்தில் ஏக்கத்தோடு தமிழ்ச் சமூகம் களத்திலும் புலத்திலும் காத்திருந்தது என்பதை காட்டுகின்றதா?

அதுதான் உண்மை. தமிழ் மக்கள் பேரவைக்குப் பின் கடந்த சுமார் எட்டு வருடங்களாக தமிழ் மக்கள் பேரவையை போல ஒரு கூட்டு வராதா ? அது மீண்டும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாதா? என்ற தவிப்போடு பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டுகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கும் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று பொருள்.ஆயின் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்களா?

https://athavannews.com/2024/1398565

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா? ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.   http://www.samakalam.com/தேர்தலின்-பின்னர்-அவசரநி/
    • ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி, உள்நாட்டில் வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டை என்பது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய தொகுதியை அடையாளம் காண்பதற்கும் வாக்குச்சாவடியில் தமது தொடரிலக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமே வழங்கப்படுகிறது.அந்த அடிப்படையில் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309342
    • தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம் - யாழ் பல்கலை சமூகம் அழைப்பு வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம். தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும் 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம். எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்! சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக? தமிழர் தேசமாய்த் திரள்வோம்! தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது. தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர்! தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர். இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம். நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309418
    • படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. நூற்றாண்டு கால கப்பல் போக்குவரத்து வரலாற்றை கொண்ட நாகை இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார். "பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் 2,500 ஆண்டுகளாக தமிழகத்தின் துறைமுகங்களில் நங்கூரம் இட்டன. தமிழகத்தின் வணிகர்கள், வணிகக் குழுக்களாக இணைந்து பல்வேறு நாடுகளோடு வர்த்தகம் செய்ததாகக் கூறும் சு.இராசவேலு, "அவ்வகையில் நாகப்பட்டினம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக நகராக விளங்கி வந்திருக்கிறது," என்றார். அவரது கூற்றுப்படி, நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது. கிரேக்கப் பயணியான தாலமி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள நிகமா என்னும் துறைமுக நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "நிகமா என்று அவர் குறிப்பிடும் துறைமுக நகரம் நாகப்பட்டினம்தான் என ஸ்காட்லாந்தை சார்ந்த நிலவியல் அறிஞரும் கடலோடியுமான கர்னல் யூல் கி.பி.1873ஆம் ஆண்டு அடையாளம் கண்டார். சங்க காலத்தில் காவேரிப்பூம்பட்டினம் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கி வந்ததால், சங்க கால இலக்கியங்களில் நாகப்பட்டினம் துறைமுகம் தொடர்பான செய்திகள் அதிகம் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் நிகமா என்னும் பெயர் நாகப்பட்டினத்தைக் குறிக்கலாம் என்ற குறிப்பிலிருந்து இக்கடற்கரை நகரம் கடல் வாணிகம் செய்து வந்த பெருவணிகர்களைக் கொண்டு விளங்கி வந்துள்ளதை அறிய முடிவதாக" கூறுகிறார் பேராசிரியர் சு.இராசவேலு.   வர்த்தக தலைநகரமாகத் திகழ்ந்த பண்டைய நாகை பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு நிகமா என்னும் சொல் தமிழிக் கல்வெட்டுகளிலும், மட்கல ஓடுகளிலும் குறிக்கப்பட்டுள்ள வணிகக் குழுவோடு தொடர்புடையது. நிகமம் என்றால் பெருவணிகர்கள் வாழ்கின்ற ஊர் எனப் பொருள்படும். எனவே நாகப்பட்டினம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த வணிக நகரமாக விளங்கியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் இராசவேலு. கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராப் பாடல்களில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாட மாளிகைகளையும் மணிமண்டபங்களையும் நெடிய மாடங்களையும் நீண்ட வீதிகளையும் கொண்டு, அலை தழுவும் நகரமாகவும் கோட்டை மதிலுடன் கூடிய நகரமாகவும் இந்நகரைப் பற்றி தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. இந்நகரில் பல வணிகர்கள் வாழ்ந்ததையும் பல நாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதையும் குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதையும் தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. தொடக்க கால கல்வெட்டுகளிலும் தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகை எனும் பெயரில்தான் வழங்கப்பட்டுள்ளது. நாகையில் சீனக் காசுககளும் சீனர்கள் பயன்படுத்திய பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இதனால், சீனாவிலிருந்து கப்பல்கள் இத்துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பின்னர் இலங்கைத் தீவிற்கும் பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் உள்ள தனிக்கல் ஒன்றில் "நாகைப் பெருந்தட்டான்" என்ற பெயர் காணப்படுகிறது. கிபி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கும் பழமையான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பல்லவர் கால எழுத்து வடிவில் இருக்கிறது. எனவே பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகை விளங்கியிருக்கலாம் எனக் கூறுகிறார் சு.இராசவேலு. "தட்டான் என்பது உலோக வேலைப்பாடுகள் செய்கின்ற மக்களைக் குறிக்கும். சோழர் காலத்தில் நாகையில் தயாரிக்கப்பட்ட பல பௌத்த படிமங்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் சென்றுள்ளன."   சோழர்களின் கப்பற்படை தளமாக செயல்பட்ட நாகை படக்குறிப்பு, நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து 2000 ஆண்டுகால வரலாற்றை கொண்டது சிற்பிகளும் வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இந்நகரம் இருந்திருக்கிறது என்பதை வரலாற்று, இலக்கிய, மற்றும் தொல்லியல் தரவுகள் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்நகரம் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடவையாறு மற்றும் உப்பனாறு ஆகிய ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தேவாரத்தில் இந்நகர் "கழி சூழ் கடல் நாகை" எனக் குறிப்பிடப்படுகிறது. அப்பரும், சம்பந்தரும் நாகை துறைமுகத்தில் பல்வகை கலங்கள் நின்றிருந்ததைக் குறிப்பிடுவதுடன் இத்துறைமுகத்தில் கற்பூரமும் யானைகளும் கப்பல்களில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததையும் துறைமுக கண்காணிப்பாளர்கள் இவற்றுக்குச் சுங்கவரி வசூலித்ததையும் குறிப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் நாகை எனக் குறிப்பிடப்பட்ட இந்நகரம், சோழர் காலத்தில்தான் பட்டினம் என்னும் வார்த்தையுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. நாகை என்னும் பெயர் கடல் சங்கைக் குறிக்கும் நாகு என்னும் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் சு.ராசவேலு. பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கள் தொன்மைத் துறைமுகமான காவேரிப்பூம்பட்டினத்தைத் தவிர்த்து நாகப்பட்டினத் துறைமுகத்திற்குச் சிறப்பிடம் அளித்தனர். இவர்கள் காலத்தில் இந்நகரம் மிகச் சிறந்த வணிக நகரமாகவும் சோழர்களின் கப்பற்படை இருந்த நகரமாகவும் விளங்கியது.   படக்குறிப்பு, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் முதலாம் பராந்தக சோழர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஈழத்தைக் கைப்பற்றி 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்னும் பட்டத்தை வைத்துக் கொள்கின்றார். எனவே இந்த மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே சோழர்கள் சிறந்ததொரு கப்பற்படையை வைத்திருந்துள்ளனர் என அறியலாம். அதன்மூலம் இலங்கையைக் கைப்பற்றியதுடன் இலங்கை அரசர்களுடன் நட்புறவு பாராட்டிய பாண்டியர்களையும் முதலாம் பராந்தக சோழர் வெற்றி பெற்றார். தொடர்ந்து சோழ மன்னன் ராஜராஜன் காலத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் நாகப்பட்டினத்தை சோழர்களின் சிறந்த துறைமுக நகரமாக மாற்றியதோடு பல கப்பல்களை அங்கிருந்து செலுத்தும் வகையில் நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தினார். கேரளப் பகுதியிலிருந்து வந்த வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் செல்ல நாகைப்பட்டினத் துறைமுகத்தையே பயன்படுத்தியுள்ளனர். நாகை அருகேயுள்ள கீழையூர் சிவன் கோவிலில் யவனர்கள் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோவிலில் கி.பி.1287ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் "யவனர் திடர்" என்ற சொற்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாட்டுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான். 'யவனர் திடர்' என்பது 'யவனர் திடல்' எனப் பொருள்படும். இது, யவனர்கள், அதாவது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது.   படக்குறிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது சோழர்களுக்குப் பின் தஞ்சாவூர் நாயக்கர் காலத்திலும் இத்துறைமுக நகரம் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. போதிய பயணிகள் இன்மையால், அந்தச் சேவை நிறுத்தப்பட்டு, இந்த ஆண்டு மறுபடியும் தொடங்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2ylzmlndjo
    • தியாக தீபத்தின் நினைவேந்தல் adminSeptember 15, 2024 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடியால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.   https://globaltamilnews.net/2024/206764/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.