Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tik-tok.jpg?resize=750,375

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.

இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்தநிலையில்  25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார்.

டிக்டொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பறிமாற்றம் நடந்திருக்கின்றது. சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 லட்சம் ரூபா வரையில் கொடுத்திருக்கின்றார்.

அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக்டொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது.

அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் டிக்டொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன.

அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் கறந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.

அத்துடன், இவர்களின் ‘அன்ரி’ (aunty) என்று அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.

ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை கறந்துள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

https://athavannews.com/2024/1398281

  • Replies 51
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன்.  இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை.  இவர் செய்த பிழை என்

  • விசுகு
    விசுகு

    இதை கொடுமை என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது???

  • நிழலி
    நிழலி

    அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இவருக்கு தேவையான வேளைகளில் சிரித்து சிரித்து பேசி மயக்கி காமம் ஊட்டி கரசேவைக்கு உதவியதற்கான கூலி கணிக்கப்பட்டு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சுதியில் ஆடவேண்டியது. பின்னர் அழவேண்டியது. தூ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்படியானால் இவருக்கு தேவையான வேளைகளில் சிரித்து சிரித்து பேசி மயக்கி காமம் ஊட்டி கரசேவைக்கு உதவியதற்கான கூலி கணிக்கப்பட்டு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சுதியில் ஆடவேண்டியது. பின்னர் அழவேண்டியது. தூ....

3 hours ago, தமிழ் சிறி said:

டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார்.

சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால்,
கணக்கு சரிதானே... விசுகர். 😂
அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிர‌பலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிர‌பலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.

giphy.gif?cid=6c09b952bgbwq8zs03llucgxel

சுவிஸ்கார அண்ணை, காட்டின  கத்தியையும் அவர்கள் பார்த்து விட்டு, 
47 இலட்சத்தையும் கறந்து போட்டு விட்டு விட்டார்கள். நாடு ரொம்ப மோசமப்பா... 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது நாட்டில் மக்கள் உழைக்காமல் விரைவில் பணம் தேடவேண்டும் என்னும் பேராசையில் அலைகின்றார்கள் ........ அவர்களின் இலக்கு வெளிநாட்டினர் ....... இவர்களில் பலர் பணத்தை வைத்துக் கொண்டு சுகம் தேடி அலைப்பவர்களாக இருக்கின்றார்கள் . ........இதுதான் துரதிஷ்டம்......! 😢

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்த வயது போனவர்கள் நினைப்பது தாங்கள் ஊரை விட்டு வெளியேறிய நிலையில்தான் இன்னும் இன்றைய யாழ் தமிழ் மக்களை நினைக்கின்றார்கள், அந்த நிலை மாறும் வரை இவரைபோல் பல வழிகளில் ஏமாற புலம்பெயர் தமிழ......................🤣

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நபருக்கு. சுதி வந்தால்! அதன் விலை 47இலட்சம். அப்போ லண்டன், கனடா, யேர்மனி நபர்களுக்கு சுதி வந்தால்???😳😩🥱

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரத்துக்குள்ள பரமானந்தம் என்று போய் வந்து சொல்பவர்கள் கதை எல்லாம் பொய்யா கோபாலு? 🤑☺️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால்,
கணக்கு சரிதானே... விசுகர். 😂
அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣

இலகுவான வழி அந்த மூன்று பெண்களையும். அந்த நபருக்கு கொடுப்பது தான்    அவருக்கு காசு தேவையில்லை    பணம் பெண்களிடம் இருக்கட்டும்    🤣🤣🤣🤣.  அந்த மனிதரை பேச வேண்டாம்    நீங்களும் கூட முயற்சித்தால் வெற்றி பெற முடியும்  🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இந்த வயது போனவர்கள் நினைப்பது தாங்கள் ஊரை விட்டு வெளியேறிய நிலையில்தான் இன்னும் இன்றைய யாழ் தமிழ் மக்களை நினைக்கின்றார்கள், அந்த நிலை மாறும் வரை இவரைபோல் பல வழிகளில் ஏமாற புலம்பெயர் தமிழ......................🤣

உங்களின் கருத்து 100 % சரியான கருத்து உடையார் . ....... என்றாலும் 80/90 களில் புலம் பெயர்ந்தவர்கள், அப்பவே இங்கு வந்தவர்கள் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்கும்பொழுது நீங்கள் "இந்த வயது போனவர்கள் "  விளிப்பது இங்கு உலாவும்  என்போன்ற பலரின் இதயத்தில் சிறு வலியை ஏற்படுத்துவது புரிகின்றதா உங்களுக்கு உடையார் . .......!  😢

  • கருத்துக்கள உறவுகள்

காத்துவாக்கில காதில விழுந்தது.

சம்பவம் 1: 25 பவுண் நகை, பணம் 50 லட்சத்திற்கு மேல் ஒரு பெண்ணுக்கு வழங்கி குடும்பத்தை விட்டுவிட்டு யாழில் வந்து செற்றிலானவரை அந்த பெண்ணே பொலிஸ் மூலம் அவரை தனது ஊருக்கு வரவிடாது வெருட்டி நடுத்தெருவில் விட மனைவி இரக்கப்பட்டு மீள வெளிநாட்டுக்கு அழைத்து பாஸ்போட்டை பறித்து வீட்டோடை வைத்திருக்கிறாராம்!

சம்பவம் 2: வகுப்புத் தோழி கணவரைப் பிரிந்து வாழ்கிறார் என பண(40லட்சம் வரை) உதவி செய்தார் வெளிநாட்டில் உள்ள நண்பர். ஊருக்குநேரில் வந்த இடத்தில் போனை எதேச்சையாக வாங்கிப் பார்த்தபோது இன்னுமொருவருடனும் தொடர்பு உள்ளதை கண்டுபிடித்து சண்டை பிடிக்க வகுப்பத்தோழி தலைமறைவு! இவ்வளவுக்கும் பணம் கொடுத்தவர் காதலித்து மணம் புரிந்து பிள்ளைகளுடன் வாழ்கிறார்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......!   😂

சீ சீ அவ்வளவு சம்பவங்கள் இல்லை அண்ணை, ஆனால் காதில விழுந்தால் பகிர்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

காத்துவாக்கில காதில விழுந்தது.

சம்பவம் 2: வகுப்புத் தோழி 

7 minutes ago, suvy said:

அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......!   😂

இந்நாள் என்ர ஆசையில் மண்ணை போடுது. அண்ணை???

😜

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

உங்களின் கருத்து 100 % சரியான கருத்து உடையார் . ....... என்றாலும் 80/90 களில் புலம் பெயர்ந்தவர்கள், அப்பவே இங்கு வந்தவர்கள் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்கும்பொழுது நீங்கள் "இந்த வயது போனவர்கள் "  விளிப்பது இங்கு உலாவும்  என்போன்ற பலரின் இதயத்தில் சிறு வலியை ஏற்படுத்துவது புரிகின்றதா உங்களுக்கு உடையார் . .......!  😢

அப்ப என்ன அண்ணை  ??  வயோதிபர்களை   இளைஞனர்கள். என்ற சொல்ல முடியும்??  🤣🤣. நானும் உங்களுக்கு கிட்டத் தான்  ஆனாலும்  முதுமை.  என்பது வரம். ஆகும்   அது எல்லோருக்கும் கிடைக்காது    குறிப்பிடதக்க. தொகை வயோதிபர்கள்  உடலும் மனமும்  இளமையாகவே இருக்கிறது  அவர்கள் தான்   இப்படியான செயல்களை செய்கிறார்கள்    என்ன செய்வது…???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இந்நாள் என்ர ஆசையில் மண்ணை போடுது. அண்ணை???

😜

என்ர காதில விழுந்ததால் உங்கள் ஆசையில் மண்ணைப் போட வாய்ப்புள்ளதாக நான் கனவிலும் எண்ணவில்லை அண்ணை. 
ஆனால் யாழைப் பார்த்தால் பாஸ்போட்டை பறித்து வீட்டுக் காவலில் வைக்க சந்தர்ப்பம் உள்ளதாகப் பட்சி சொல்லுது!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இந்நாள் என்ர ஆசையில் மண்ணை போடுது. அண்ணை???

😜

உங்கள் ஆசை தான் என்ன  ???  நாலு பிள்ளைகள் உண்டு   பேரப்பிள்ளைகளுமுண்டு 

இன்னும் என்ன ஆசை?? 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

 குறிப்பிடதக்க தொகை வயோதிபர்கள்  உடலும் மனமும்  இளமையாகவே இருக்கிறது,  அவர்கள் தான்   இப்படியான செயல்களை செய்கிறார்கள். என்ன செய்வது…???

அண்ணை வயதுக்கேற்ப உடல் தளர்ந்து கொண்டு செல்லும்! ஆனால் மனம் என்றும் பதினாறு மார்க்கண்டேயனாக எண்ணும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால்,
கணக்கு சரிதானே... விசுகர். 😂
அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣

சுத்து மாத்து செய்திருப்பதால் படங்கள் பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் குறைவு. மற்றும் படி நான் குறிப்பிட்ட விடயத்திற்கு தொலைபேசி வாயிலாக சந்தர்ப்பம் அதிகம். (இவருக்கு எல்லாத்தையும் கோடிட்டு காட்டவேண்டும்🤪)

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

உங்கள் ஆசை தான் என்ன  ???  நாலு பிள்ளைகள் உண்டு   பேரப்பிள்ளைகளுமுண்டு 

இன்னும் என்ன ஆசை?? 🤣😂

அடுத்த சுற்று அண்ணா... 

ஆவியாக பின்னர் அமையக்கூடாது அல்லவா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அடுத்த சுற்று அண்ணா... 

ஆவியாக பின்னர் அமையக்கூடாது அல்லவா?🤣

அடுத்த சுற்றா ??

குழந்தையை எதிர்பார்த்தால்.  ....இளம் பெண் வேண்டும் அதாவது 30. வயதில் இல்லை சும்மா சேர்த்து சுற்றி திரிவது எனில் வயது போனாவார்களை இலகுவாக தேடலாம்.   😂😂.  இந்த சமூகம் அடிக்க. வந்து விடும்    கவனம் 🤣🤣🙏.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அடுத்த சுற்றா ??

குழந்தையை எதிர்பார்த்தால்.  ....இளம் பெண் வேண்டும் அதாவது 30. வயதில் இல்லை சும்மா சேர்த்து சுற்றி திரிவது எனில் வயது போனாவார்களை இலகுவாக தேடலாம்.   😂😂.  இந்த சமூகம் அடிக்க. வந்து விடும்    கவனம் 🤣🤣🙏.   

அதுக்கு தானே அண்ணா வகுப்புத் தோழியர் என்று எழுதினேன். 

ஒரு திருமணம் தான் செய்யலாம் என்றதால் கொஞ்ச ஏக்கங்கள் தள்ளி போடுதல்கள் பாக்கி இருக்கிறது. இனி டேஞ்சர் இல்லை 😜தானே.??

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
  • கருத்துக்கள உறவுகள்

52 வயது என்பது ஒரு மனிதன் பேரன் பேத்திகளை காணும் வயசு. இந்த வயசில் 25 வயசு பெண் தனக்கு மாட்டிவிட்டது என்று நினைத்து ஏகப்பட்ட லட்சங்களை என்ன ஏது என்று சரியாக விசாரிக்காமல் எடுத்து விசுக்கியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சபலம்?

இவர்களை பருவ வயதில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு அங்கிள் தாத்தா என்று சொல்லி வரவேற்பதுகூட மிக அபாயகரமானது.

கல்யாணம் என்பது சிலருக்கு அந்தந்த வயதில் தவறிபோகலாம், ஆனால் வசதியும் வதிவிட உரிமையும் உள்ள இவர் விதவைகளாக , இனி வாழ்வு எங்கே சென்று முடியும் என்று தெரியாமல்  கல்யாண வயதை கடந்தும் இன்றும் முதிர் கன்னிகளாக ஏழைகளாக வாழ்விழந்து போயிருக்கும் ஏகப்பட்ட நடுத்தர வயது பெண்கள் வாழும் எம் மண்ணில் சட்டப்படி அணுகி  திருமணம் செய்திருந்தால் இவரை வாழ்த்துவதற்கு வரிசையில் பலர் நின்றிருப்பார்கள்.

இவரை குறிப்பிடவில்லை, எல்லோரையும் குறிப்பிடவுமில்லை பெரும்பாலும் இவர் வயதையொத்த வெளிநாட்டில் நீண்டகாலம் திருமணம் செய்யாதவர்களில் பெரும்பாலோனோர் ஆபத்துக்குரியவர்கள்.

வாலிப வயது முழுக்க வேலைக்கும் போகாமல் கஞ்சா, தண்ணியடி, காட்ஸ் விளையாட்டு , அடுத்தவன்கிட்ட கடன் வாங்கிவிட்டு குடுக்காமல் விடுறது, காலம் முழுக்க ஆபாச படங்களுடன் காலம்  கழிப்பது,கடன் அட்டை ஏமாத்துவேலை என்று வயதுகளை தவற விட்ட பின்னர் வாழும் நாட்டில் இவர்களைபற்றி தெரிந்து விடுவதால் நாடுகள் கடந்து யாரையாவது காசையும் விசாவையும் காட்டி வலையில் விழுத்தி நாசமாக்க பார்ப்பார்கள்.

இவர்களை மோசடிபேர்வழிகளே மிக இலகுவில் வலையில் வீழ்த்துவார்கள் அந்த வலையில் ஐயாவும் தன்னை சொருகி கொண்டார்.

செக்ஸ் என்பது மனிதனின் வாழ்வியலின் ஒரு அங்கம் வழிமுறை தவறி போகாதவரை அது ஒன்றும் கொலை குற்றமும் அல்ல,, இப்படி ஏமாளியாகி அள்ளியிறைத்த பணத்திற்கு மேற்குநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாலியல் நிலையங்கள் சென்று பல வருடங்கள் தமது உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இப்படி எல்லாத்தையும் பறி கொடுத்து யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் செய்திகளை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு இவரின் செய்தியை பிரதானமாக்கும் அளவிற்கு போயிருக்க கூடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.