Jump to content

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்

September 9, 2024

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றும் போது அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் எழிலனை இராணுவத்திடம் நேரடியாக கையளித்து இன்று 15 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கிறேன். கடந்த தேர்களில் மாறி மாறி சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம். ஆனால் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இம்முறை தமிழ் மக்கள் சார்பில் கூட்டாக பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் கொண்டுவரப்பட்டுள்ளார். தமிழர்களுடைய வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

தமக்காக வாழாது எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரகளது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட மக்களது இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர்களின் உரிமைச் சின்னமான சங்கு சின்னத்திற்கு நேராக ஒரே ஒரு புள்ளடியை போட்டு தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

இப்பரப்புரை கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று ஜனாதிபதித்தேர்தலில் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தனர். இதன் போது அப்பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
 
https://www.ilakku.org/lets-vote-for-sangh-with-the-memory-of-heroes/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சிறு விளக்குமாறைக் காவின கதைதான்  😏

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

மூஞ்சிறு விளக்குமாறைக் காவின கதைதான்  😏

உங்கள் ஊரில் மூஞ்சூறு விளக்குமாறை காவி உள்ளதா?😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன்

large.IMG_6992.jpeg.67f4d3bf1f8b4bd18b6b

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

உங்கள் ஊரில் மூஞ்சூறு விளக்குமாறை காவி உள்ளதா?😁

எதற்கெல்லாம் மாவீரரை இழுப்பது என்று ஒரு வரைமுறை இல்லையா? 

😏

  • Like 1
Link to comment
Share on other sites

இதை விட மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்தி கொச்சைப்படுத்தி விட முடியாது.

இலங்கையின் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் தலைவரான நிறைவேற்றதிகாரம் உள்ள ஒரு சனாதிபதியை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் தேர்தலில் பங்குகொள்ளும் ஒரு வேட்பாளருக்கு(இவரின் பின்னால் இருக்கும் பொதுச்சபை இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றது என சந்தேகம் பரவ தொடங்கியுள்ள நேரத்தில்) ,  சுதந்திர தமிழீழத்துக்காக தம் உயிர்களை ஆகுதியாக்கியவர்களின் தியாகத்தை சொல்லி வாக்கு கேட்கின்றார் அனந்தி.

அடுத்தது உள்ளூராட்சி தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் இலங்கையில் வரிசை கட்டி நிற்கின்றன. இத் தேர்தல்களின் போது இன்னும் அதிகமாக புலிகளின் தியாகத்தை கொச்சைபடுத்த போகின்றார்.

ஒரு பக்கம் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரைச் சொல்லி, பங்கு பிரிப்பு சண்டை. இன்னொரு பக்கம், புலத்தில் அனந்தி போன்றவர்களின் கொச்சைப்படுத்தல்கள்.

சிங்களவர்களை விட நாம்தாம் புலிகளை இழிவுக்குள்ளாக்குகின்றோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் அரசியற் போராளியின் மனைவி அரசியல் செய்யக்கூடாதா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஓர் அரசியற் போராளியின் மனைவி அரசியல் செய்யக்கூடாதா? 🤔

தாராளமாகச் செய்யலாம். எழிலனின் மனைவி என்கிற தகுதி அவருக்கு இன்னும் அதிக தகுதியை வழங்குகிறது . 

ஆனால் மாவீரரை தற்போதைய  குப்பை அரசியலுக்கு ஏன்  இழுப்பது வாழ்த்துதலுக்குரிய செயல் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் நின்றது போலவே தான் அரியநேத்திரனும் நிற்கின்றார் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், இன்டர்நெட் ட்ராபிக் கொஞ்சம் குறைந்திருக்கும்...........தேவையில்லாமல் எவ்வளவு கட்டுரைகளையும், பத்திகளையும் வாசித்தும், எழுதியும் விட்டோம்............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள்  தமது  நற்பெயருக்கோ

தமது சொந்த  அரசியலுக்காகவோ  போராடவில்லை மரணிக்கவில்லை

அவர்களின் கனவுகளை எந்த வேட்பாளர் ஒரளவாவது  கனம்  செய்கிறார்  என்பது இங்கே  பார்க்கப்படவேண்டும்

அப்படி  பார்க்கும்போது தமிழரின் அபிலாசைகளை ஒரு  அளவுக்கேனும் தெளிவாக  அறிக்கைப்படுத்தி  இருக்கும் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கூறும் ஆனந்தியின் கூற்று  உண்மையே... 

எல்லாவற்றையும் கலைந்து  விட்டு சிங்களத்துடன் இரண்டறக்கலந்து  விடலாம் என்பதைக்கூட அங்கே  போராடியவர்கள்  போராட்டத்துக்கு  முகம் கொடுப்பவர்கள்  அந்த மண்ணில் மீதியிருந்து மாவீரர்களின் கனவுகளை இன்னும் மறவாதிருப்பவர்கள் தான் சொல்லணும். அதில் ஆனந்தியின் பங்கும் உண்டு.

Link to comment
Share on other sites

3 சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க சொல்லி அனந்தி கேட் கவில்லை என்று இங்கு சிலருக்கு கோபம் உள்ளது போலுள்ளது.
சிங்கள  வேட்பாளருக்கு பின் இந்தியா நிற்கிறது என்று என்றார்கள். இப்போ இந்தியா தமிழ் வேட்பாளருக்கு பின் நிற்கிறார்களாம். 
தனது கணவனை இழந்தவரை  கண்டு பிடிக்க முடியாத சிங்கள அரசுக்கு வாக்களிக்கும் படி யாராவது கூறுவார்களா? அத்தோடு எளிலனும் ஒரு மாவீரர் என்பதால்  அனந்திக்கு மாவீரர் பற்றி பேச உரிமை உண்டு. அத்தோடு தமிழர் மண்ணில் இருந்து பேசுகிறார். புலம் பெயர்ந்தவர்கள் அவருக்கு  அரசியல்  வகுப்பு எடுக்க தேவையில்லை என நினைக்கிறேன்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சிவாஜிலிங்கம் நின்றது போலவே தான் அரியநேத்திரனும் நிற்கின்றார் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், இன்டர்நெட் ட்ராபிக் கொஞ்சம் குறைந்திருக்கும்...........தேவையில்லாமல் எவ்வளவு கட்டுரைகளையும், பத்திகளையும் வாசித்தும், எழுதியும் விட்டோம்............

அப்பவும் பிரச்சினை இருக்கிறது ரசோதரன்.

ஒருதடவை அல்ல இரண்டு முறை சிவாஜிலிங்கம் நின்றிருக்கிறார். அப்பொழுதெல்லாம் சர்வதேசத்துக்கு ஒற்றுமையைக் காட்டவோ? சிங்களத்துக்கு சேதி சொல்லவோ தமிழ் அரசியல்வாதிகளுக்கோ நிலாந்தன் போன்றவர்களுக்கோ சிந்திக்க நேரமும் கிடைக்கவில்லை. அறிவும் சரியாக வேலை செய்யவில்லை. இப்பொழுதுதான் அவர்களுக்கு எல்லாமே கூடி வந்திருக்கிறது.

இருக்கிற கட்சிகளிலேயே வெளிநாடுகளுடன் கதைப்பதில் முன்னிலையில் நின்றது தமிழரசுக் கட்சிதான். அதையும் உடைத்து விட்டால்,

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி

அவன் நாலாறுமாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான்டி ஒரு தோன்டி

அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி”

என்று தமிழர்கள் சங்கெடுத்து ஊத வேண்டியதுதான்.

என்னைப் பொறுத்த வரையில், இந்தத் தேர்தல் முடிந்தவுடன் அரியநேத்திரன் மட்டுமல்ல பொதுவேட்பாளர் தொடர்பில்  பங்களித்த அத்தனை அரசியல்வாதிகளும் ஒதுங்கிப் போவதுதான் தமிழர்களுக்கான பேர் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

அப்பவும் பிரச்சினை இருக்கிறது ரசோதரன்.

ஒருதடவை அல்ல இரண்டு முறை சிவாஜிலிங்கம் நின்றிருக்கிறார். அப்பொழுதெல்லாம் சர்வதேசத்துக்கு ஒற்றுமையைக் காட்டவோ? சிங்களத்துக்கு சேதி சொல்லவோ தமிழ் அரசியல்வாதிகளுக்கோ நிலாந்தன் போன்றவர்களுக்கோ சிந்திக்க நேரமும் கிடைக்கவில்லை. அறிவும் சரியாக வேலை செய்யவில்லை. இப்பொழுதுதான் அவர்களுக்கு எல்லாமே கூடி வந்திருக்கிறது.

சிவாஜிலிங்கம் மிக சிறுபிள்ளைத்தனமானவர். எத்தனையோ உதாரணங்கள் உண்டு. வல்வை நகரசபையின்  வரவு - செலவுத் திட்டம் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டதும், அதற்கு பின்னுள்ள காரணமும் இவர்களே சொல்லிக் கொள்ளும் தமிழ் தேசியத்திற்கு எவ்வளவு முரணானது. இவர் தான் அதன் பின்னணி. இப்படி பல உண்டு. சிலது கோமாளித்தனமானவை.

இவர் ஒரு வேட்பாளர் என்றால், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்......... புதிதாக வந்த அரியநேத்திரனையும் இவருடன் ஒப்பிடுகின்றார்களே........🫣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமது சொந்த  அரசியலுக்காகவோ  போராடவில்லை மரணிக்கவில்லை

அவர்களின் கனவுகளை எந்த வேட்பாளர் ஒரளவாவது  கனம்  செய்கிறார்  என்பது இங்கே  பார்க்கப்படவேண்டும்

விசுகு,அவர்களது போராட்டத்தில் ஒரு தீர்வுதான் அது தமிழீழம்.  ஓரளவாவது என்று அவர்கள் உடன்பட்டிருந்தால்  இத்தனை மாவீரர்கள் இல்லை.

அரசியல் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் அனந்தியும் அடக்கம்.

மாவீரர்கள் மதிப்புக்குரியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது தியாகம் அளப்பரியது. அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும், அரசியல் செய்வதும் ஏற்புடையது அல்ல.

மாவீரர்களை எப்படி அனந்தி இதயத்தில் வைத்திருக்கின்றாரோ அது போல்தான் மற்றவர்களும். அனந்தி தனது சாக்கடை அரசியலுக்குள்  புனிதமான மாவீரர்களை இழுத்து சேரடிக்காமல் இருக்க வேண்டும். 

பொது வேட்பாளரை மாவீரன் பிரபாகரனே ஏற்கமாட்டார்.

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

இவர் ஒரு வேட்பாளர் என்றால், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்......... புதிதாக வந்த அரியநேத்திரனையும் இவருடன் ஒப்பிடுகின்றார்களே........🫣.

பொது வேட்பாளர் ஒரு குறியீடு மட்டுமே. அவர் ஜனாதிபதித் தேர்தலிலே வெல்ல மாட்டார் என்பது தெரிந்த விடயம். அது சிவாஜிலிங்கமா?  அரியநேத்திரனா? என்பது பிரச்சினையில்லை. ஆனால் ஒரு கட்சிக்குள் அதுவும் மத்தியகுழு உறுப்பினராக  இருந்து கொண்டு அந்தக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் பிற கட்சிகளுடன் இணைந்து ஒருவர் பொதுவேட்பாளராகப் போட்டியிடுகின்றார் என்றால் இங்கே  யார் அறிவில் கீழே இருக்கிறார் என்ற கேள்வி ஒன்று வரத்தான் செய்கிறது. அதேநேரம் இவர்களுக்கு வந்த ‘பொது வேட்பாளர்’ என்ற எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சிவாஜிலிங்கத்துக்கு வந்திருக்கிறது என்றால் சிவாஜிலிங்கம் அறிவில் இவர்களுக்குள் உயர்ந்து நிற்கின்றாரல்லவா? என்ற கேள்வியும் இருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

சிலருக்கு தாங்களும் ஒரு சமூகத்தின் 'பேசு பொருளாக' எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவா அளவுக்கு மீறி இருக்கின்றது. சிவாஜிலிங்கம், சீலரத்ன தேரர், இப்படி ஒரு கூட்டமே இந்த வகையில் உலகெங்கும் இருக்கின்றது. அதற்காக என்ன குத்துகரணமும் போடுவார்கள். இவர்களைப் போன்றோரால் வேறு பலரால் முன்னெடுக்கப்படும் காத்திரமான முன்னெடுப்புகள் கூட மக்களால் கவனிக்கப்படாத, நிராகரிக்கப்படும் ஒரு நிலை இறுதியில் வரும். இவர்கள் எல்லோருமே வெறும் கோமாளிகளோ என்று நினைப்பு வருவது தவிர்க்க முடியாதது.

நீங்கள் சொல்லுவது போலவே இவரா அல்லது அவரா என்ற ஒரு தனிநபர் பற்றிய விவாதம் அல்ல இது. சிவாஜிலிங்கத்தின் பெயரை அனந்தி குறிப்பிட்டிருந்தபடியால் இதை எழுத வேண்டியதாகப் போய்விட்டது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

சிலருக்கு தாங்களும் ஒரு சமூகத்தின் 'பேசு பொருளாக' எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவா அளவுக்கு மீறி இருக்கின்றது.

😄 அப்படி இருப்பதன் மூலம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு செல்வாக்குடன் வெற்றி பெறலாம் என்ற ஆசை நம்பிக்கையும் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இதை விட மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்தி கொச்சைப்படுத்தி விட முடியாது.

இலங்கையின் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் தலைவரான நிறைவேற்றதிகாரம் உள்ள ஒரு சனாதிபதியை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் தேர்தலில் பங்குகொள்ளும் ஒரு வேட்பாளருக்கு(இவரின் பின்னால் இருக்கும் பொதுச்சபை இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றது என சந்தேகம் பரவ தொடங்கியுள்ள நேரத்தில்) ,  சுதந்திர தமிழீழத்துக்காக தம் உயிர்களை ஆகுதியாக்கியவர்களின் தியாகத்தை சொல்லி வாக்கு கேட்கின்றார் அனந்தி.

அடுத்தது உள்ளூராட்சி தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் இலங்கையில் வரிசை கட்டி நிற்கின்றன. இத் தேர்தல்களின் போது இன்னும் அதிகமாக புலிகளின் தியாகத்தை கொச்சைபடுத்த போகின்றார்.

ஒரு பக்கம் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரைச் சொல்லி, பங்கு பிரிப்பு சண்டை. இன்னொரு பக்கம், புலத்தில் அனந்தி போன்றவர்களின் கொச்சைப்படுத்தல்கள்.

சிங்களவர்களை விட நாம்தாம் புலிகளை இழிவுக்குள்ளாக்குகின்றோம்.

சிங்களம் ஒருபோதும் புலிகளை இழிவுபடுத்தவில்லை. அவர்களுக்கு இருப்பது கோபமும் பயமும் மரியாதையும் . அவர்களது செயல்கள் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. 

நாமோ  மாவீரர் தியாகத்தை குடும்பச் சண்டைக்கும் பாவிக்கிறோம். 

4 hours ago, விசுகு said:

மாவீரர்கள்  தமது  நற்பெயருக்கோ

தமது சொந்த  அரசியலுக்காகவோ  போராடவில்லை மரணிக்கவில்லை

அவர்களின் கனவுகளை எந்த வேட்பாளர் ஒரளவாவது  கனம்  செய்கிறார்  என்பது இங்கே  பார்க்கப்படவேண்டும்

அப்படி  பார்க்கும்போது தமிழரின் அபிலாசைகளை ஒரு  அளவுக்கேனும் தெளிவாக  அறிக்கைப்படுத்தி  இருக்கும் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கூறும் ஆனந்தியின் கூற்று  உண்மையே... 

எல்லாவற்றையும் கலைந்து  விட்டு சிங்களத்துடன் இரண்டறக்கலந்து  விடலாம் என்பதைக்கூட அங்கே  போராடியவர்கள்  போராட்டத்துக்கு  முகம் கொடுப்பவர்கள்  அந்த மண்ணில் மீதியிருந்து மாவீரர்களின் கனவுகளை இன்னும் மறவாதிருப்பவர்கள் தான் சொல்லணும். அதில் ஆனந்தியின் பங்கும் உண்டு.

சங்குச் சின்னத்திற்கு வாக்களித்தால் தமிழ்த்  தேசியவாதிகள். சங்கு தவிர்ந்த வேறு சின்னத்திற்கு வாக்களித்தால் துரோகிகள். 

வாக்களிக்காதோரை என்ன சொல்லப்போகிறீர்கள்? 

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

இலக்கிற்கு நல்ல தமிழறிவு

என் கண்களுக்கும் தப்பிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களை வைத்து நிலைப்பாடு எடுப்பது என்றால் தேர்தலை புறக்கணிப்பதோ அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதோ சரியான முடிவாக அமையும். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.