Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எம்.எல்.எம்.மன்சூர்

சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் ‘தீர­ணாத்­மக’ என்­பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்’ என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது.

முன்னர் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்ட ஓர் இயல்பை கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தல்­களில் இது­வ­ரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்­டி­யாக மாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது முத­லா­வது விசேஷம். பலர் நாமல் ராஜ­பக்­சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்­முனைப் போட்டி’ என்று சொல்லி வந்­தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்­பி­டத்­தக்க போட்­டி­யா­ள­ராக இருந்து வரு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

தேர்­தல்­களில் இது­வ­ரையில் 5% க்கு குறை­வான வாக்­கு­களை மட்­டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்­டி­யா­ள­ராக எழுச்­சி­ய­டைந்­தி­ருப்­பது இரண்­டா­வது சிறப்­பம்சம். 1990கள் தொடக்கம் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சா­ரங்­களின் போது சிங்­கள சமூ­கத்தின் கொடிய எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த தமிழ் பிரி­வி­னை­வாதம், டயஸ்­போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்­வைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் போன்ற கோஷங்கள் பிரச்­சார மேடை­க­ளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருப்­பது. அடுத்த விசேஷம். அதா­வது, கடந்த 20 ஆண்­டு­களில் வெளிப்­ப­டை­யாக இன­வாதம் பேசப்­ப­டாமல் நடத்­தப்­படும் முத­லா­வது தேர்தல் இது.

சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் (Sinhala Heartland) தெளி­வா­கவே ஒரு ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு அலை நிலவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக வெவ்­வேறு தரப்­புக்­களால் பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்­புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கின்­றன. அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அணி மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் கூட ‘ஆம் அவர்­க­ளுக்கு ஒரு ஆத­ரவு அலை இருந்து வரு­கி­றது; அதை மறுக்க முடி­யாது’ என்ற பீடி­கை­யு­ட­னேயே தமது கருத்­துக்­களை முன்­வைக்­கி­றார்கள்.
அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்­வைத்­தி­ருக்கும் பிரச்­சார சுலோ­கங்கள் பெரி­தாக வாக்­கா­ளர்­களை கவ­ரக்­கூ­டி­ய­வை­யாக இருந்து வர­வில்லை. சார்­பு­ரீ­தியில், ஜேவிபி / என்­பிபி அணிக்குக் கிடைத்­தி­ருக்கும் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அனு­கூலம் – ‘எதிரி யார்’ என்­பதை தெளி­வாக அடை­யாளம் காட்டக் கூடிய ஆற்றல்.

சஜித் அணியை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்­பது அவர்­க­ளுக்கே தெளி­வில்­லாமல் இருப்­பது முக்­கி­ய­மான ஒரு பல­வீனம். ராஜ­பக்­ச­களின் அர­வ­ணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்­ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திரு­டர்­களை களை எடுப்போம்’ போன்ற ஜன­ரஞ்­சக சுலோ­கங்­களை முன்­வைக்கும் தார்­மீக உரி­மையை இழந்­தி­ருக்­கிறார் சஜித்.

அவ­ரு­டைய மற்­றொரு பல­வீனம் இன்­றைய இலங்­கையின் பொரு­ளா­தார யதார்த்­தங்­க­ளுக்கு துளியும் சம்­பந்­த­மில்­லாத விதத்தில் கோமா­ளித்­த­ன­மான வாக்­கு­று­தி­களை வழங்­கு­வது. சொல்­லப்­போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­கி­ர­ம­ரத்ன போன்ற நாட்டு நடப்­புக்­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் SJB முக்­கி­யஸ்­தர்­களை பெரும் சங்­க­டத்தில் நெளிய வைக்கும் வாக்­கு­று­திகள் அவை.

‘அநுர குமா­ரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்­வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்­க­ளுக்கும் கொடுத்துப் பார்ப்­போமே’ என்­பது. அதா­வது, ‘இவ்­வ­ளவு காலமும் எத்­த­னையோ பேருக்கு வாக்­க­ளித்து ஏமாந்­தி­ருக்­கிறோம். கடை­சியில் இன்­றைய வங்­கு­ரோத்து நிலைதான் எமக்கு எஞ்­சி­யி­ருக்­கின்­றது’ என்ற ஆதங்­கமே இந்தப் பேச்­சுக்­களில் தொனிக்­கி­றது. அத­னையே அதா­வது – ‘ இந்தத் தடவை திசை­காட்­டிக்கு’ என்று மக்கள் சொல்­வ­தையே – ஜேவிபி/ என்­பிபி அணி தனது பிரச்­சார சுலோ­க­மாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

குறிப்­பாக, 2022 அற­க­லய மக்கள் எழுச்­சிக்குப் பின்னர் நாட்டில் உரு­வாக்­கி­யி­ருக்கும் ஜேவிபி/ என்­பிபி ஆத­ரவு அலையின் குடி­ச­ன­வியல் பண்­புகள் (Demographic Features) எவை, புதி­தாக ஜேவிபி ஆத­ர­வா­ளர்­க­ளாக சேர்ந்­தி­ருக்கும் பல இலட்சக் கணக்­கா­ன­வர்கள் எங்­கி­ருந்து வந்­தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்­களைத் தள்­ளிய சமூக, உள­வியல் கார­ணிகள் எவை போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்­நோக்கிச் செல்ல வேண்டும்.

2004 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜாதிக ஹெல உரு­மய (JHU) கட்சி சார்பில் மேல் மாகா­ணத்தில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் 9 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­னார்கள். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் புத்த பிக்­குகள். விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போரை சந்­தி­ரிகா – மங்­கள அர­சாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்­கள -பௌத்த உணர்­வா­ளர்­களின் ஒரு பிரி­வி­னரே இவ்­விதம் திடீர் JHU ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறி­யி­ருந்­தார்கள். அவர்­களை அவ்­விதம் அணி திரட்­டு­வதில் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க முதன்­மை­யான ஒரு பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்தார். கங்­கொ­ட­வில சோம தேரர் உரு­வாக்­கிய பௌத்த எழுச்சி அலை­யினால் தூண்­டப்­பட்­டி­ருந்த ஒரு பிரி­வி­னரின் இன உணர்­வு­களை அச்­சந்­தர்ப்­பத்தில் ரண­வக்க மிகவும் சாதுர்­ய­மாக தனக்கு சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.

இந்தச் சமூகப் பிரி­வினர் மேல் மாகா­ணத்தில் – குறிப்­பாக கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் – செறிந்து வாழ்ந்து வரு­கி­றார்கள். 1980 களில் உரு­வா­கிய தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்று, வெளி மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வந்து கொழும்பு புற நகர் பகு­தி­களில் குடி­யே­றி­ய­வர்கள். ஜே.ஆர். அறி­முகம் செய்து வைத்த திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் மூலம் பய­ன­டைந்த முதல் தலை­மு­றை­யினர் கிட்­டத்­தட்ட இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும் கெஸ்­பாவ, கடு­வெல, கோட்டே, மக­ர­கம, ஹோமா­கம போன்ற கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகு­தி­களில் இந்த வகுப்­பி­னரின் பிர­சன்னம் அதிகம்.

சிங்­கள மத்­திய தர வரக்­கத்தின் ஒரு புதிய பிரி­வி­னரின் எழுச்­சி­யாக (Sociological Phenomenon) அப்­பொ­ழுது அது பார்க்­கப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்தில் கெஸ்­பாவ மற்றும் மக­ர­கம போன்ற தொகு­தி­களில் வாக்­கு­களின் அடிப்­ப­டையில் யூஎன்­பியை மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளி­விட்டு, JHU இரண்­டா­வது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அள­வுக்கு அப்­போ­தைய சிங்­கள பௌத்த அலை வலு­வா­ன­தாக இருந்து வந்­தது. இதே­போல கம்­பஹா மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் JHU கணி­ச­மான அள­வி­லான வாக்­கு­களை பெற்றுக் கொண்­டி­ருந்­தது.

அதன் பின்னர் இந்தப் பிரி­வினர் 21 ஆம் நூற்­றாண்டு சிங்­கள பெருந் தேசி­ய­வா­தத்தின் ‘Trendsetter’ களாக உரு­வா­கி­ய­துடன், அவர்கள் தூண்­டி­விட்ட அந்த உணர்வு சிங்­கள சமூகம் நெடு­கிலும் மிக வேக­மாக பர­வி­யது. 2010, 2019 ஜனா­தி­பதி தேர்­தல்­களில் முறையே மஹிந்­த­வுக்கும், கோட்­டா­ப­ய­வுக்கும் இப்­பி­ரி­வி­னரே அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.
2022 பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பா­டுகள் போன்ற பிரச்­சி­னைகள் அவர்கள் இது­வ­ரையில் அனு­ப­வித்து வந்த ‘Comfort Zone’ இலி­ருந்து அவர்­களை வெளியில் எடுத்து வந்­தன. அந்த நிலையில், ராஜ­பக்­ச­களை ஆத­ரித்த அதே அளவு தீவி­ரத்­துடன் அவர்­களை எதிர்க்­கவும் தொடங்­கி­னார்கள்.

சுருக்­க­மாகச் சொன்னால் 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கிய படித்த சிங்­கள நடுத்­தர வர்க்­கத்தை சேர்ந்­த­வர்கள் பல இலட்­சக்­க­ணக்கில் இப்­பொ­ழுது திசை­காட்­டியின் பக்கம் வந்­தி­ருக்­கி­றார்கள்.

இந்த அலை ‘கம்­யூனிஸ்ட் / சோஷ­லிச ஆத­ரவு அலை அல்ல’. என்­பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமா­ரவும், அந்த அணியின் ஏனைய தலை­வர்­களும் (குறிப்­பாக லால் காந்த போன்­ற­வர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். ஜேவிபி / என்­பிபி மேடையில் கழுத்­துப்­பட்டி அணிந்த கன­வான்கள் ஏராளம் பேர் உட்­கார்ந்­தி­ருக்கும் காட்சி மற்­றொரு சுவா­ரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்­திர கட்சி போன்ற பாரம்­ப­ரிய கட்­சி­களின் பிரச்­சார மேடை­களில் கூட முன்னர் அந்த மாதி­ரி­யான காட்­சிகள் தென்­ப­ட­வில்லை. கட்­சிக்கு ஒரு கண்­ணி­ய­மான, மத்­திய தர வர்க்க முகத்­தோற்­றத்தை முன்­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தின் குறி­யீடு அது. ஒரு பெரும்­போக்கு அர­சியல் கட்­சி­யாக (Mainstream Political Party) மாற்­ற­ம­டை­வ­தற்கு ஜேவிபி செலுத்­தி­யி­ருக்கும் விலையே என்­பிபி அணியின் இணைப்பு.

1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்­சி­களின் போது நில­விய இலங்கை சமூகம் – குறிப்­பாக சிங்­கள சமூகம் – இப்­பொ­ழுது பெரும் மாற்­றங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது. நகர்ப்­பு­றங்­க­ளிலும், கிராமப் புறங்­க­ளிலும் புதிய மத்­திய தர வர்க்­கத்­தினர் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். இன்­றைய இலங்­கையின் நுகர்வு கலா­சா­ரத்தின் பிர­மாண்­மான வளர்ச்­சியின் பின்­ன­ணியில் இருந்து வரு­ப­வர்கள் அவர்கள். முன்­னைய தலை­மு­றை­க­ளிலும் பார்க்க முற்­றிலும் வேறு­பட்ட அபி­லா­ஷை­களை கொண்­டி­ருப்­ப­வர்கள்.

இலங்கை பொது சமூ­கத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உட­ன­டி­யாக எமக்­கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்­தி­ய­டிப்போம்’ போன்ற கோஷங்­களை இச்­ச­மூகப் பிரி­வி­னரே கையில் எடுத்­தி­ருக்­கி­றார்கள். காலி­மு­கத்­திடல் அற­க­லய பூமியில் குமார் குண­ரத்­னத்தின் ‘பெரட்­டு­காமி’ கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட சுலோ­கங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்­யூ­னிஸ்­டுகள் காண விழையும் சமூக மாற்­றத்தை வலி­யு­றுத்­து­பவை. ஆனால், இன்­றைய இலங்­கையில் அச்­சு­லோ­கங்கள் அதே அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை இங்கு முக்­கி­ய­மாக சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தக் கோஷங்­களை முன்­வைத்து வரு­ப­வர்கள் எதிர்­பார்க்கும் உண்­மை­யான ‘System Change’ எது? இன்­றைய ஊழல் அர­சி­யல்­வா­தி­களை பிர­தி­யீடு செய்யும் பொருட்டு எந்த வகை­யான மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்? அவர்­க­ளு­டைய ஆதர்ச புர்­ஷர்கள் யார்?

தனது முறை வரும் வரையில் பொறு­மை­யுடன் கியூ வரி­சையில் காத்­தி­ருக்கும் ஒரு ஜனா­தி­பதி. போக்­கு­வ­ரத்து விதி மீற­லொன்றை இழைத்து விட்டு அதற்கு அப­ராதம் செலுத்தும் ஒரு பிர­தம மந்­திரி. தனது பிள்­ளையை பொறுப்­புடன் பள்­ளிக்கு அழைத்துச் செல்லும் தந்­தை­யான ஒரு அரச தலைவர் போன்­ற­வர்­களை காட்டும் காணொ­ளி­களை புதிய தலை­மு­றை­யினர் பிர­மிப்­புடன் பார்க்­கி­றார்கள். தமது ஆதர்­சங்­க­ளாக அவர்­களை கொண்­டாடி வரு­கி­றார்கள்.
ஆனால், மேற்­படி உதா­ர­ணங்கள் அனைத்தும் லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டவை என்­பது தான் இங்­குள்ள சுவா­ரஸ்யம்.

ஊழல், முறை­கே­டுகள் இல்­லாத எவ­ருக்கும் பார­பட்சம் காட்­டாத அரச நிர்­வாக கட்­ட­மைப்­புக்­க­ளுக்­கான ஆதர்­சங்­க­ளா­கவும் இந்த மேலைய லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளையே இவர்கள் சுட்டிக் காட்­டு­கி­றார்கள்.

“நான் சுதந்­தி­ரத்­திற்கு முன்னர் பிறந்­தவன். வாழ்நாள் முழு­வதும் ஒரு தேசா­பி­மா­னி­யா­கவே இருந்­தி­ருக்­கிறேன். எனது வாழ்க்­கையின் முதல் 75 ஆண்­டு­களை இந்த மண்­ணி­லேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடி­யாத நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளைகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்கள். அவர்­க­ளு­டைய வற்­பு­றுத்­தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடு­க­ளையும் ஒப்­பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அள­வுக்கு சீர­ழிந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது” என்­கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்­சியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஒரு முன்­னணி சிங்­கள நாடகக் கலைஞர்.

மேற்­படி கூற்று இன்று ஜேவிபி / என்­பிபி அணியின் பின்னால் திரண்­டி­ருக்கும் சிங்­கள மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் மதிப்­பீ­டுகள் மற்றும் எதிர்­பார்ப்­புக்கள் என்­ப­வற்றின் துல்­லி­ய­மான ஒரு பிர­தி­ப­லிப்பு எனச் சொல்லலாம்.

சரி­யாகச் சொன்னால் இலங்­கையின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை. இவர்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் நவ லிபரல் பொரு­ளா­தா­ரத்தின் ஆத­ர­வா­ளர்கள். ஆகவே, இந்தப் பின்­ன­ணியில், அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வைக்கும் விட­யத்­திலும், அவர்­களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விட­யத்­திலும் ஒரு எதிர்­கால ஜேவிபி / என்­பிபி அர­சாங்கம் கடும் சவால்­களை எதிர்­நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/17705

  • Like 5
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, colomban said:

தனது முறை வரும் வரையில் பொறு­மை­யுடன் கியூ வரி­சையில் காத்­தி­ருக்கும் ஒரு ஜனா­தி­பதி. போக்­கு­வ­ரத்து விதி மீற­லொன்றை இழைத்து விட்டு அதற்கு அப­ராதம் செலுத்தும் ஒரு பிர­தம மந்­திரி. தனது பிள்­ளையை பொறுப்­புடன் பள்­ளிக்கு அழைத்துச் செல்லும் தந்­தை­யான ஒரு அரச தலைவர் போன்­ற­வர்­களை காட்டும் காணொ­ளி­களை புதிய தலை­மு­றை­யினர் பிர­மிப்­புடன் பார்க்­கி­றார்கள். தமது ஆதர்­சங்­க­ளாக அவர்­களை கொண்­டாடி வரு­கி­றார்கள்.

இதுபோன்று இங்க நடக்க வாய்ப்பு இருக்கிறதா?!

Posted

நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி

4 hours ago, colomban said:

 

“நான் சுதந்­தி­ரத்­திற்கு முன்னர் பிறந்­தவன். வாழ்நாள் முழு­வதும் ஒரு தேசா­பி­மா­னி­யா­கவே இருந்­தி­ருக்­கிறேன். எனது வாழ்க்­கையின் முதல் 75 ஆண்­டு­களை இந்த மண்­ணி­லேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடி­யாத நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளைகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்கள். அவர்­க­ளு­டைய வற்­பு­றுத்­தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடு­க­ளையும் ஒப்­பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அள­வுக்கு சீர­ழிந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது” என்­கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்­சியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஒரு முன்­னணி சிங்­கள நாடகக் கலைஞர்.

 

1970 களில் பிறந்த, கடும் சிங்கள தேசியவாதியான என் சிங்கள நண்பர் ஒருவரும் அச்சொட்டாக இதனையே தெரிவித்தார் / தெரிவிக்கின்றார். தன் பிள்ளைகள் ஒரு போதும் மீண்டும் இலங்கை செல்வதை தான் விரும்பவில்லை என்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

4 hours ago, colomban said:

‘அநுர குமா­ரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்­வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்­க­ளுக்கும் கொடுத்துப் பார்ப்­போமே’ என்­பது. அதா­வது, ‘இவ்­வ­ளவு காலமும் எத்­த­னையோ பேருக்கு வாக்­க­ளித்து ஏமாந்­தி­ருக்­கிறோம். கடை­சியில் இன்­றைய வங்­கு­ரோத்து நிலைதான் எமக்கு எஞ்­சி­யி­ருக்­கின்­றது’ என்ற ஆதங்­கமே இந்தப் பேச்­சுக்­களில் தொனிக்­கி­றது. அத­னையே அதா­வது – ‘ இந்தத் தடவை திசை­காட்­டிக்கு’ என்று மக்கள் சொல்­வ­தையே – ஜேவிபி/ என்­பிபி அணி தனது பிரச்­சார சுலோ­க­மாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

👍.................. நல்ல ஒரு கட்டுரை.

ஜேவிபியினருக்கு இந்தத் தடவை நாடு முழுவதும் காணப்படும் ஆதரவு அலை ஆச்சரியமானதே. ஆனால் முன்னைய காலங்களில் அவர்களுக்கு இருந்தததாகக் காட்டப்பட்ட ஆதரவு ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒன்றே, அவை உண்மையான அளவுகள் அல்ல. முன்னர் அவர்களுக்கு இருந்ததாக சொல்லப்பட்ட ஆதரவு கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் சீமானுக்கு இருக்கும் ஆதரவாக பொதுவெளியில் உண்டாக்கப்படும் மாய விம்பம் போன்றதே. இவர்களின் பிரச்சாரங்களின் பலத்தை விட, பிரச்சாரத்தின் தன்மை அந்த தோற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை. இவர்களின் அடி மட்டத் தொண்டர்களும் ஓயாதவர்கள், அது இன்னொரு காரணம்.

அலை அப்படியே சிதறாமல் வாக்குகளாக மாறி, அநுரவால் ரணிலையோ அல்லது சஜித்தையோ தாண்ட முடியுமா என்பது சந்தேகமே. ஆனாலும் 30 வீத அளவில் வாக்குகளைப் பெற்று முதல் மூவரில் ஒருவராக வந்தாலே, அது ஜேவிபியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையே.

'இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே...........' என்று ஒருவரையோ அல்லது ஒரு கட்சியையோ தேர்ந்தெடுப்பது சரியான ஒரு தெரிவல்ல. அது ஒரு உணர்ச்சிகரமான முடிவிற்கு சமம். ஏற்கனவே ஒரு கட்சிக்கு அல்லது தனிநபருக்கு ஆதரவாக இல்லாமல், நடுநிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாக்காளர்கள் இப்படியான ஒரு எண்ணத்துடன் ஒரு வேட்பாளருக்கு பெருமளவில் வாக்கப்பளிப்பது நடைமுறையில் சாத்தியம் குறைந்த ஒரு நிகழ்வு.     

    

  • Thanks 1
Posted
4 hours ago, ஏராளன் said:

இதுபோன்று இங்க நடக்க வாய்ப்பு இருக்கிறதா?!

யாழ்ப்பாணத்தில் இவருக்கு ஆதரவு உள்ளதா?

சில இடங்களில் அரியத்தை பின்னிற்கு தள்ளி மூன்றாவதாக வரும் சாத்தியம் உள்ளது என என் நண்பர்கள் சொல்கின்றனர்; அப்படி வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, நிழலி said:

யாழ்ப்பாணத்தில் இவருக்கு ஆதரவு உள்ளதா?

அவர்களுக்கு இங்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லை, ஆனால் தெற்கே கற்கும் பல்கலைக் கழக மாணவர்கள் ஊடாக பெற்றோர், உறவினரிடம் வாக்கு சேகரிக்க முயலுவதாக சிலர் கூறினார்கள்!

 

4 minutes ago, நிழலி said:

சில இடங்களில் அரியத்தை பின்னிற்கு தள்ளி மூன்றாவதாக வரும் சாத்தியம் உள்ளது என என் நண்பர்கள் சொல்கின்றனர்; அப்படி வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா?

வாய்ப்பில்லை என நினைக்கிறேன் அண்ணை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அறிந்த வரையியில் வடக்கில் ரனில் ஆதரவு தான் உள்ளது.ஆனால் நான் சந்தித்தவர்கள் வாக்குசிட்டை பாவிக்கத் தெரியாதவரகள் போல தெரியிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையியில் வடக்கில் ரனில் ஆதரவு தான் உள்ளது.ஆனால் நான் சந்தித்தவர்கள் வாக்குசிட்டை பாவிக்கத் தெரியாதவரகள் போல தெரியிகிறார்கள்.

கொஞ்சம் சொல்லிக் குடுங்கோ அண்ணை, சீட்டின் நீளத்தால தேடிப்பிடிக்க சிரமப்படவேணும்!

Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையியில் வடக்கில் ரனில் ஆதரவு தான் உள்ளது.ஆனால் நான் சந்தித்தவர்கள் வாக்குசிட்டை பாவிக்கத் தெரியாதவரகள் போல தெரியிகிறார்கள்.

கடந்த சனாதிபதித் தேர்தலில் கழுகிற்கும் அன்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், ஆரியவன்ச க்கும் நூற்றுக் கணக்கில் வாக்கு போட்டவர்கள் அல்லவா யாழ்ப்பாணத்தினர்!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

1970 களில் பிறந்த, கடும் சிங்கள தேசியவாதியான என் சிங்கள நண்பர் ஒருவரும் அச்சொட்டாக இதனையே தெரிவித்தார் / தெரிவிக்கின்றார். தன் பிள்ளைகள் ஒரு போதும் மீண்டும் இலங்கை செல்வதை தான் விரும்பவில்லை என்கின்றார்.

தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இரண்டு பகுதியும் தங்களின் அரசியல் இருப்புக்கு இனம்களின் சந்தேகத்தை நீக்காமல் இனவாதத்தை வளர்த்து விட்டு இன்று இரண்டு பகுதியுமே வெளிநாடு என்று ஓடித்தப்புகின்றனர் .

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையியில் வடக்கில் ரனில் ஆதரவு தான் உள்ளது.ஆனால் நான் சந்தித்தவர்கள் வாக்குசிட்டை பாவிக்கத் தெரியாதவரகள் போல தெரியிகிறார்கள்.

இந்தத் தடவை பல வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

அவர்களுக்கு இருந்தததாகக் காட்டப்பட்ட ஆதரவு ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒன்றே, அவை உண்மையான அளவுகள் அல்ல. முன்னர் அவர்களுக்கு இருந்ததாக சொல்லப்பட்ட ஆதரவு கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் சீமானுக்கு இருக்கும் ஆதரவாக பொதுவெளியில் உண்டாக்கப்படும் மாய விம்பம் போன்றதே

அதே தான்.
 வட்சப் குழுவில் சில பொதுவான செய்தி காணொளிகளை சிலவற்றை அனுப்பி அதில் உள்ள பின்னோட்டங்களை கவனித்து பார் என்றார்கள். சஜீத்துக்கு வெற்றி  ரணிலுக்கு வெற்றி  ஜேவிபிக்கு வெற்றி என்று அவர்கள் ஆதரவாளர்கள்  எழுதி இருக்கின்றார்கள்  என்று நினைத்தேன்.ஆனால்  அப்படி எல்லாம்  இல்லையாம் .ஜேவிபிக்கு மூன்று பெயர்கள் உள்ளதாம்

JVP
NPP
AKD
அதனால் JVP வெற்றி  NPP வெற்றி  AKD வெற்றி என்று எழுதி சீமான் தமிழ்நாட்டு தேர்தலில் செய்த பாணியிலான பெரிய அளவிலான  ஒரு  வெற்றி தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்த ஜேவிபி பிரசார பின்னோட்டங்களுக்கிடையில் தமிழ் ஜனாதிபதிக்கு சங்கு ஊதி பிரசாரங்களும் நடைபெறுகின்றது

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையியில் வடக்கில் ரனில் ஆதரவு தான் உள்ளது.ஆனால் நான் சந்தித்தவர்கள் வாக்குசிட்டை பாவிக்கத் தெரியாதவரகள் போல தெரியிகிறார்கள்.

அதனால்தான், “சங்குக்கு மட்டும் புள்ளடி போடுங்கள் வேறொன்றும் செய்யாதீர்கள்” என பொது வேட்பாளர் பிரச்சாரம் செய்கிறார் போலே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு பகிர்வு கொழும்பான் 👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பெருமாள் said:

தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இரண்டு பகுதியும் தங்களின் அரசியல் இருப்புக்கு இனம்களின் சந்தேகத்தை நீக்காமல் இனவாதத்தை வளர்த்து விட்டு இன்று இரண்டு பகுதியுமே வெளிநாடு என்று ஓடித்தப்புகின்றனர் .

ஆம் 70களின் ஆரம்பத்தில் பிறந்த என் வயதையொத்த‌ என் சிங்கள நண்பர்கள் 1990 களின் நடுப்பகுதியில் தாங்களை ஒரு தேசாபிமானியாக காட்டிக்கொண்டார்கள். பழக இனிமையானவர்கள் என்றாலும் இனவாதமும் சிங்கள பவுத்த மேலாதிக்கம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும். புலிகளையும், தமிழ் மக்களையும் பற்றி இழிவாகவே கதைப்பார்கள், என்ன ஆச்சர்யம், இன்று இவர்களில் பலர் வெளினாடுகளிலேயே இருக்கின்றார்கள்.
தாங்கள் பிள்ளைகளை வெளினாடுகளுக்கு அனுப்பிவிட்டு 50 வயதை கடந்த இவர்களும் வெளினாடுகளுக்கு ஓடி விட்டார்கள் அங்கிருந்து இலங்கையயை தூசிக்கின்றார்கள். காலம் எப்படி இவர்களை மாற்றிவிட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:

ஏற்கனவே ஒரு கட்சிக்கு அல்லது தனிநபருக்கு ஆதரவாக இல்லாமல், நடுநிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாக்காளர்கள் இப்படியான ஒரு எண்ணத்துடன் ஒரு வேட்பாளருக்கு பெருமளவில் வாக்கப்பளிப்பது நடைமுறையில் சாத்தியம் குறைந்த ஒரு நிகழ்வு.     

சுனாமி எப்போதாவது ஒருதடவைதான் வருகிறது.  ஒரு புதுமுகம் ஆட்சிக்கு வந்துதான் பார்க்கட்டுமே. 

20 minutes ago, colomban said:

ஆம் 70களின் ஆரம்பத்தில் பிறந்த என் வயதையொத்த‌ என் சிங்கள நண்பர்கள் 1990 களின் நடுப்பகுதியில் தாங்களை ஒரு தேசாபிமானியாக காட்டிக்கொண்டார்கள். பழக இனிமையானவர்கள் என்றாலும் இனவாதமும் சிங்கள பவுத்த மேலாதிக்கம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும். புலிகளையும், தமிழ் மக்களையும் பற்றி இழிவாகவே கதைப்பார்கள்

போர் நடந்த காலங்களில் அவர்களும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுர அலை

2024 ஜனாதிபதித் தேர்தல்

anura.jpg?w=800

ஊடகங்கள் -முக்கியமாக சமூகவலைத் தளங்கள்- உருவாக்கிக் காட்டுகிற அநுர அலை இலங்கையின் யதார்த்த அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை. இருந்தபோதும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இம்முறை இந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு “அரகல” 2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் அரசியல் விளைவுதான் முக்கிய காரணமேயொழிய, கடந்த அரசாங்கங்களின் ஊழல் இலஞ்சம், ஏமாற்றுகள் அல்ல. இந்தச் சேற்றில் உழலும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அரசியல்வாதிகளும் ஜனநாயக முகமூடியை அணிந்து நடனமாடுவது ஒன்றும் புதிதல்ல. 

இந்த அதிகாரத்துடன் மோதி மாற்றமுடியாதென வாழாவிருந்த மக்களிடம் காலிமுகத்திடல் போராட்டம் சாத்தியப்பாடொன்றின் கீற்றுகளை பரவ விட்டது. அது ஒரு தன்னியல்பான மக்கள் எழுச்சி. அதை ஜேவிபியினர் முன்னின்று நடத்தவில்லை. அதை லாவகமாக கையாண்டார்கள். இப்போ அறுவடை செய்கிறார்கள்.

அரகலவை விதைத்தவர்கள் -கட்சிகள் கடந்த- இளம் சந்ததியும் மாணவர்களும் ஆவர். அவர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டனர். அரகல ராஜபக்ச அன்ட் கோ வினரின் ஆட்சிக்கு எதிரானது என்பது மட்டுமானதல்ல, அதிகாரத்துக்கு எதிரானது என்பதும்தான். அத்தோடு இனவாதத்துக்கு எதிராகவும் இலஞ்ச ஊழலுக்கு எதிராகவும் பண்பாட்டுத் தளத்தில் முனைப்பாகவும் அந்த இளம் குரல் ஒலித்தது. அதாவது “முறைமை மாற்றம்” (sytem change) என்பது அதன் அடிநாதமாக ஒலித்தது. அந்தக் குரலை, அவர்களின் உழைப்பை இன்று ஜேவிபி தனதாக்கியிருக்கிறது.

இதற்கு வெளியில் அநுர புதிதாக எதையுமே மேடைகளில் பேசவில்லை. அதற்கு அவர்கள் உண்மையாக இருக்க முடியும் என ஒரு பொதுமனம் ஏங்குவது அரகல ஏற்படுத்திய விழிப்பின்பாற்பட்டது. அதாவது சாத்தியப்பாடுகளை உணர்த்தியதன்பாற்பட்டது. நம்பிக்கையின் பாற்பட்டது. அதனடிப்படையில் அநுரவை ஆதரிக்கும் மக்களது நம்பிக்கையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்த விடயம். இன்றைய ஜனநாயக முறைமை என்பதற்கு அழகான விளக்கங்களும் விரிவுபடுத்தலும் செழுமைப்படுத்தலும் இருக்கிறபோதும் நடைமுறையில் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளிலும் ஆட்சி நடைமுறை அதற்கு முரண்நிலையில் இயங்குகிறது. நம்பிக்கை அடிப்படையில் ஆட்சியை தெரிவதும், பின் நடைமுறை கண்டு வெறுப்பதும் மாறிமாறி நடக்கின்றன. அடுத்த தேர்தலில் தமது நம்பிக்கைக்கான தீனியை இன்னொரு ஆட்சியதிகாரத்திடம் எதிர்பார்க்கிறார்கள். வாக்களிக்கிறார்கள். தேர்தல் மூலம் அரசாங்கத்தை மாற்றுவதுதான் அவர்கள் அளவில் மாற்றம் என்றாகியிருக்கிறது. இதற்குப் பெயர் “முறைமை மாற்றம்” என்பதல்ல. தவிர்க்க முடியாத கையறு நிலையில் அதிகாரமற்றவர்களின் தேர்வு அதுவாக தொடர்கிறது. மகிந்தவின் ஆட்சியை காணச் சகிக்காது -நல்லாட்சி என கோசத்தை முன்வைத்த- மைத்திரியை தேர்ந்தார்கள். தரப்பட்ட விடைகளில் ஒன்றுக்கு புள்ளடியிட்டுத்தானே ஆக வேண்டும். பிசாசுகளுக்குள் ஒரு ‘நல்ல’ பிசாசை தேர்ந்தெடுத்தல் என்பது தவிர்க்க முடியாததாகிறது. அதைச் செய்தார்கள். இனியும் செய்வார்கள். அவர்களுக்கு வேறு தேர்வில்லை.

முறைமை மாற்றம் என்பதை புரிந்து கொள்வதற்கு அரசு (state) என்பதற்கும் அரசாங்கம் (government) என்பதற்குமான வேறுபாட்டையும் ஊடாட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு அநுர பேசுவது அரசாங்கம் என்ற எல்லைக்குள் நின்றுதான். அரசு தனது கொள்ளை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த ‘அரசாங்கம்’ என்ற ஒன்றை தனது அங்கமாக வைத்திருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கங்கள் தெரிவுசெய்யப்படும். அரசு அப்படியல்ல. அது நிரந்தரமானது. காட்சிப்புலத்தில் தெரிவதும் தெரியாததுமான கட்டமைப்புத்தான் அரசு வடிவம். அது வெளித் தெரியக்கூடிய அரச இயந்திரங்களான இராணுவம், பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றோடு மக்கள் திரளையும் உள்ளடக்கியது. இவை வெளித் தெரிகிற அம்சங்கள். அதேநேரம் தனது அதிகாரத்தை பேணுகிற கருத்தியலை கொள்கை வகுப்பாளர்கள், வரலாற்றாசிரியர்கள் உட்பட்ட (நிர்வாகப்) புத்திசீவிகளின் துணையோடு உருவாக்குகிறது. அவற்றை இற்றைப்படுத்தியபடி நகர்கிறது. இந்த கருத்தியலை பயிற்றுவிக்கிற, விதைக்கிற களங்களாக பாடசாலை, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற சிவில் நிறுவனங்களும் ஊடகங்களும் உள்ளன. அது பொதுப்புத்தியில் தாக்கம் செலுத்தியபடி இருக்கின்றன. விமர்சன பூர்வமான சிந்தனைமுறை இல்லாமல் இதன் நுண்களங்களை புரிந்துகொள்ள முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை இந்த அரசு வடிவத்தின் கருத்தியல்தளம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும், அதற்கான தர்க்கத்தையும், பெரும்பான்மைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சோசலிச சாயம் பூசினாலென்ன, சிவப்புச் சட்டை அணிந்தாலென்ன, புரட்சி என்பதை ‘மாற்றம்’ என ஒரு பொதுச்சொல்லால் உருமாற்றினாலென்ன ஆட்சியை கொண்டுநடத்த பௌத்த மத பீடங்களின் ஆசீர்வாதம் வேண்டும். எல்லா சனாதிபதிகளையும் போல் பௌத்த பீடத்தின் காலை தொட்டு வணங்கி ஆட்சியைத் தொடங்குவதில் அநுரவும் விதிவிலக்காகிவிட முடியாது.

முறைமை மாற்றம் என்பது இந்த அரசு வடிவத்துள் கட்டமைக்கப்பட்ட பௌத்த மேலாதிக்க கருத்தியலை அசைத்துப் பார்ப்பதுதான். அது பெரும்பான்மைவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கி அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பன்முகத்தன்மையை உருவாக்க முயற்சிப்பதுதான். அதன்மூலம்தான் சிறுபான்மையின மக்களின் உரிமை பேணப்படும். வாழ்வுக்கான உத்தரவாதம் கிடைக்கும். அத்தோடு பன்முகப் பண்பாடு உருவாகும். சகமனிதர்களை மொழி கடந்து நேசிக்க அது கற்றுக் கொடுக்கும். தப்பபிப்பிராயங்களை விலக்கும்.

ஊழலற்ற ஆட்சியை நடத்துவது, ஊழலை சகல மட்டங்களிலும் ஒழிப்பது என்பதை ஓர் மக்கள்நல அரசாங்கம் சட்ட ரீதியில் கறாராக நடைமுறைப்படுத்த முடியும். அதுதான் அதன் எல்லை. ஊழலும் அதிகாரமும் சமூகமயமாகவிட்ட நிலையில் அதை பண்பாட்டுத்தளத்தில் எதிர்கொள்ள சமூக நிறுவனங்கள் உதவ வேண்டும்.

அதேநேரம் பாராளுமன்ற வரலாறானது வாக்குறுதிகளை தேர்தலில் வெற்றிபெற உபயோகிப்பதும் பின் தூக்கியெறிவதும் என்பதற்கு அப்பால் நகர்ந்து காட்டியதில்லை. வாக்குறுதிகளை காப்பாற்ற அவர்கள் விரும்பினாலும்கூட அதன் எல்லை எந்தளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியே. காரணம் அரசு என்ற கட்டுமானத்துள் அவர்கள் எந்தளவுக்கு மாறுதல் ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி இருக்கிறது. ஓர் அரசாங்கமும் சனாதிபதியும் தமக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தின் எல்லைக்குள் செயற்படுகிறபோது அது அரசு வடிவத்துள் இடைஞ்சலை ஏற்படுத்தாது. 

அநுர குறிப்பிடுகிற இனவாதப் பிரச்சினையை அணுக அரசு வடிவத்துள் தலையீடு செய்தாக வேண்டும். அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. மாறாக பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் அதிகார எல்லைக்குள் அவர்கள் இனவாதத்துக்கு எதிராக அதிகபட்சம் சட்ட ரீதியில் செயற்படலாம். அது இனவாதத்தை செயற்பாடற்றதாக ஆக்கப் போதுமானதல்ல. அரசாங்கத்தில் ஊழல்கள் செய்தவர்கள் குறித்தும் அதற்கான சட்ட நடவடிக்கை குறித்தும் பேச முடிகிற அநுரவால் இனப்படுகொலையின் போது போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கான சட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவதில்லை. காரணம் இராணுவம் அரசின் ஒரு வன்முறை இயந்திரம் என்பதால் அதன் எல்லைக்குள் தலையீடு செய்வதிலுள்ள தயக்கமாக இருக்கலாம்.

அநுர முன்வைக்கிற “புதிய பாதை”, “மாற்றம்” என்ற இரு வார்த்தைகளும் அவரது மொழியில் ஒன்றுதான். பழைய ஆட்சியாளரின் ஆட்சி முறைகேடுகளை பழைய பாதை எனவும் அதிலிருந்து விடுபடும் ஆட்சிமுறையை புதிய பாதை எனவும் வரைவுசெய்கிறார். வழமையான எல்லா கட்சிகளினதும் தேர்தல் பிரசார முறையிலிருந்து இது ஒன்றும் வேறுபட்டதல்ல, புதிய பாதை என்ற அழகான சொல்லைத் தவிர!.

இந்த எளிமையான விடயத்தை மாற்றம் என கொள்ள முடியுமா. இந்த அடிப்படையில் அமைந்த அவரது யாழ் பேச்சு நீங்கள் பழைய பாதையை தேரப்போகிறீர்களா புதிய பாதையைத் தேரப் போகிறீர்களா என கேள்வியை அடுக்கடுக்காக முன்வைத்து நகர்கிறது. ஒரு சிந்தனை அதிர்ச்சி தரும் விடயமொன்றையும் அவரது பேச்சில் கேட்க முடிகிறது. தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். யாழ்ப்பாண மக்கள் அதற்கு எதிராக நிற்கலாமா. அப்படி நின்றால் அது தெற்கில் என்னவிதமான விளைவை ஏற்படுத்தும் என வினவுகிறார். இது (சிங்கள இனப்) பெரும்பான்மைவாத மனநிலையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. எந்த ஜனநாயக முறைமையிலும் சிறுபான்மையினர்ின் (அது இன மத அடையாளத்துக்கு வெளியிலும்கூட இருக்கலாம்) கருத்துகளை, தேர்வுகளை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையானது. இந்த அடிப்படைப் புரிதலைத் தாண்டி அவரைப் பேசவைத்தது சிங்கள இனப் பெரும்பான்மைவாதம்தான் என்பதும் அது இனவாத மனநிலை சுவறியது என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.

அவர் இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார். “உங்களிடம் வருபவர்கள் 13 ஐத் தருவம்; 13 பிளஸ் இனைத் தருவம் எண்டெல்லாம் பொய் வாக்குறுதிகளைத் தருவது போல நான் தர மாட்டேன்” என தன்னை நேர்மையாளனாக காட்டுகிற உத்தி அது. அரசியல்வாதிகள் வாக்குறுதி தருவதும் அதை நிறைவேற்றாமல் விடுவதும் என்ற விடயம் பொதுமக்களளுக்கு புதிதல்ல. ஆச்சரியம் தருவதுமல்ல. இந்த நிலையில் 13 குறித்து வாக்குறுதி தருபவரும் தராமல் இருப்பவரும் ஒன்றுதான்.

40 வருடங்களுக்கு முன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியா முன்தள்ளிய தீர்வுத் திட்டம் 13. இந்த 40 வருடத்தில் காலம் இயங்காமலா இருந்தது. எவளவு மாற்றங்களும் அதிர்ச்சிகளும் பிரளயமும் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இயங்கியலை மறுத்து இப்போதும்கூட காலாவதியாகாமல் 13 பேசப்படுகிறது என்றால் அது அரசினதும், அரசாங்கங்களினதும் அரசியல்வாதிகளினதும் அறிவினதும் வங்குரோத்துத் தன்மையின் அடையாளம். சோசலிசம் பேசிய ஜேவிபி வழிவந்த அநுரவுக்கு இந்த மார்ச்சிய இயங்கியல் புரியாமலா இருக்கிறது. அவர் 13 இனை தாண்டிய ஒரு முன்மொழிவை ஓர் அபிப்பிராயமாகத் தன்னும் முன்வைத்து, 13 குறித்து பேசுபவர்களை இடம்பெயர்க்க வேண்டும். பொய்சொல்ல மாட்டேன் என்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒழுக்கவாதத்தால் அல்ல.

ஒடுக்குமுறையானது அதற்கெதிரான போராட்டத்தையும் விளைபொருளாக்கும் என்ற இயங்கியல்வாத அடிப்படையிலாவது, (நடந்து தொலைச்ச) தமிழ் மக்களின் போராட்டத்துக்கான விளைநிலத்தை காண முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என புரிய மறுக்கிறாரா அநுர. இலங்கை முழுவதுக்குமான பிரச்சினையை ஓர் வக்கப் பிரச்சினையாக மட்டும் குறுக்கி சிறுபான்மையினரின் பிரச்சினையை உள்ளமுக்குகிறாரா அநுர. மகிந்தவின் one nation, one country யிலிருந்து எங்கே அவர் வேறுபடுகிறார். இவற்றை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதை வெளிப்படையாகச் சொன்னால், சிங்கள மக்களின் வாக்குகளை தான் இழக்க நேரும் என பயந்தாலே அங்கு இனவாத சிந்தனை குடிகொண்டுவிடும்.

உலகில் ஒருசில வல்லரசு நாடுகளைத் தவிர எவையும் முழுதான இறையாண்மையுடன் செயற்பட முடியாத நிலையை ஒற்றை உலக ஒழுங்கும் சுரண்டல் முறைமை கொண்ட உலகமயமாக்கலும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மக்களுக்கு மட்டுமல்ல, பூகோள அரசியலுக்கும் இடம் இருக்கிறது. அது தத்தமது நலனுக்கு ஏற்ப நாடுகளை இலகுவில் கையாள்வதற்கு ஊழல் நிறைந்த அரசாங்கம் தேவை. அது வாய்க்காவிடில் அந்த ஆட்சிகளை அவர்கள் கவிழ்த்த வரலாறுகள் பல உண்டு.

தமது இறையாண்மைக்கும் பொருளாதார நலனுக்கும் அரகல போராட்டத்தின்போது காலிமுகத்திடல் நோக்கி இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்திய ஜேவிபியின் ஊர்வலம் (மொரட்டுவ என நினைக்கிறேன்) இடையில் நிறுத்தப்பட்ட போது, அநுரவும் அமெரிக்கத் தூதரும் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் வெளிவந்தது. இதை அநுர அமெரிக்காவின் ஆள் என்று மொழிபெயர்க்காமல், அமெரிக்கா இந்த போராட்டங்களை தம் நலன் சார்ந்து தலையிடுகிறதின் சாட்சியாக கொள்ள வேண்டும். அதேவேளை பூகோள அரசியலைத் தாண்டி ஓர் அரசாங்கம் இலங்கையில் சுயமாக இயங்க முடியாது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். அதை இராஜதந்திர அடிப்படையில் அணுகுவதுதான் ஒரு தேர்வு.

எனவே முறைமை மாற்றம் என்பதை ஓர் அரசாங்கம் தனியாக நிகழ்த்த முடியாது. ஆனால் தனது அதிகார எல்லைக்குள் ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும். அது அரசியல் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் சமூக, பண்பாட்டுத் தளத்திலும் நிர்வாகத் தளத்திலும் நிகழுகிற ஊழல் மற்றும் அதிகாரத்துவச் செயற்பாடுகளை அகற்றி, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பன்மைத்துவத்துடன் முன்னோக்கி பயணிக்க முடிகிற ஒரு சமூகநலன் அரசை நிர்மாணித்தாலே பெரிய விசயம். அதற்கு இலாயக்கு இல்லாதவர்கள் என மாறிமாறி ஆட்சி செய்த கட்சிகளும் தலைவர்களும் நிரூபித்துவிட்டதால், “அநுரவுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்ப்பமே” என்ற தர்க்கம் நியாயமானதுதான்!. அவர் வெல்லும் பட்சத்தில், நல்ல பிசாசா அல்லது கெட்ட பிசாசா என்பதை அவரது ஆட்சிக்காலம் எழுதும்!
 

https://sudumanal.com/2024/09/08/அநுர-அலை/#more-6361

Posted

ஒரு பாரிய அரசியல் மாற்றம் வேண்டி சிறிலங்கா மக்கள் நிற்கிறார்கள். ஆட்சி மாற்றம் வந்த பின் சப்பென்று போவதும் சகஜம்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
    • உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.