Jump to content

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ariya-n-ethran.jpg?resize=600,375

அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2024/1400077

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

56 minutes ago, தமிழ் சிறி said:

ariya-n-ethran.jpg?resize=600,375

அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2024/1400077

முப்படைத் தளபதியாக இருக்கும் சிங்கள சனாதிபதியின், சிங்கள அரசின்,  சிங்கள காவல் துறையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அரியம் அண்ணைக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

முப்படைத் தளபதியாக இருக்கும் சிங்கள சனாதிபதியின், சிங்கள அரசின்,  சிங்கள காவல் துறையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அரியம் அண்ணைக்கு வாழ்த்துகள்.

images?q=tbn:ANd9GcQC_633i8A-mHWuaGCtVbE 

M.A.Sumanthiran-1.jpg

3-m.a.sumanthiran.jpg

அரியநேத்திரனுக்கு முன்பே... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படையின் பாதுகாப்போடு ஊருக்குள் பல்லைக்காட்டிக் கொண்டு வந்தவர்தான்.... சுமந்திரன். 😁 😂

இதுக்கெல்லாம் வழிகாட்டி அவர்தான்.  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

20 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQC_633i8A-mHWuaGCtVbE 

M.A.Sumanthiran-1.jpg

3-m.a.sumanthiran.jpg

அரியநேத்திரனுக்கு முன்பே... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படையின் பாதுகாப்போடு ஊருக்குள் பல்லைக்காட்டிக் கொண்டு வந்தவர்தான்.... சுமந்திரன். 😁 😂

இதுக்கெல்லாம் வழிகாட்டி அவர்தான்.  🤣

சும் சும்மா இல்லை .. இரண்டு தமிழர்களை சிறைக்குள் தள்ளியவர். அரியம் அண்ணைக்கு இன்னும் காலம் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

முப்படைத் தளபதியாக இருக்கும் சிங்கள சனாதிபதியின், சிங்கள அரசின்,  சிங்கள காவல் துறையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அரியம் அண்ணைக்கு வாழ்த்துகள்.

சங்கே முழங்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

சும் சும்மா இல்லை .. இரண்டு தமிழர்களை சிறைக்குள் தள்ளியவர்.

அதில் ஒருவர் ஊனமுற்றவர் என வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அரியத்தை பப்பாவில ஏத்திவிட்டிருக்கு.

வடக்கிலையும் இல்லை கிழக்கிலையும் இல்லை ஊ ஊ ஊ ஊ  🐚 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ரணில் சர்வதேசத்துடன் சேர்ந்து ஒஸ்லோவில் உடன்பாடு செய்தபடியான சமஸ்டிக்குள் தீர்வு  கண்டு விடுவார்களோ என்ற பயத்தில் ரணிலுக்கு தண்டனை வழங்கி இனவாதியான போர் வெறியுடன் இருந்த மகிந்தவை கொண்டுவந்தால் தான் தமிழீழ போரை கொண்டு நடத்தலாம் என்று பாரிய தப்பு கணக்கு போட்டு பேரழிவை அடைந்து இன்று எதுவும் கிடைக்காத கையறு நிலை.  அந்த மோசமான அரசியலை பாராட்டும் அளவுக்கு   அரசியல் தற்குறியே இந்த அரியம் என்ற  பொது வேட்பாளர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை; தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

sumo-sanakeyan.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நான் பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனக்கு தற்போது பிரமுகர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த (MSD) இருவரை பாதுகாப்புக்கு தந்துள்ளார்கள்.

பொது வேட்பாளராக நான் போட்டியிடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ, சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக அவர்களால் எனக்கு ஆபத்து வரும் என நான் நம்பவில்லை.

அதேவேளை என்னை வேட்பாளரின் இருந்து விலகுமாறு யாரும் என்னிடம் நேரில் கேட்கவில்லை. எனக்கு அந்த விதமான அழுத்தங்களையும் தரவில்லை. நான் போட்டியிடுவதால் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதற்காக யாரும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ , அழுத்தம் தரவோ இல்லை என மேலும் தெரிவித்தார்.
 
https://akkinikkunchu.com/?p=292099

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.