Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ariya-n-ethran.jpg?resize=600,375

அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2024/1400077

  • Replies 62
  • Views 3.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    அரிய நேந்திரனுக்கு வாக்குப்போடாதவன் தமிழன் இல்லையாம் சிங்களவனுக்கு பிறந்தவனாம்.. இப்ப புதிசா ஆரம்பிச்சிருக்கிறாங்கள்..  இதை சங்கே முழங்கு என்டு கொஞ்சம் செயார் பண்ணீட்டு திரியுதுகள்.. வெளிநாட

  • நிழலி
    நிழலி

    முதலாவது மைத்திரியை ஆதரித்தமை பிழையான முடிவு அல்ல. மகிந்தவின் தமிழர்களுக்கு எதிரான மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விலகி தமிழர்கள் மூச்சு விடக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதற்காக எடுத்த முடிவு

56 minutes ago, தமிழ் சிறி said:

ariya-n-ethran.jpg?resize=600,375

அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2024/1400077

முப்படைத் தளபதியாக இருக்கும் சிங்கள சனாதிபதியின், சிங்கள அரசின்,  சிங்கள காவல் துறையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அரியம் அண்ணைக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

முப்படைத் தளபதியாக இருக்கும் சிங்கள சனாதிபதியின், சிங்கள அரசின்,  சிங்கள காவல் துறையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அரியம் அண்ணைக்கு வாழ்த்துகள்.

images?q=tbn:ANd9GcQC_633i8A-mHWuaGCtVbE 

M.A.Sumanthiran-1.jpg

3-m.a.sumanthiran.jpg

அரியநேத்திரனுக்கு முன்பே... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படையின் பாதுகாப்போடு ஊருக்குள் பல்லைக்காட்டிக் கொண்டு வந்தவர்தான்.... சுமந்திரன். 😁 😂

இதுக்கெல்லாம் வழிகாட்டி அவர்தான்.  🤣

Edited by தமிழ் சிறி

20 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQC_633i8A-mHWuaGCtVbE 

M.A.Sumanthiran-1.jpg

3-m.a.sumanthiran.jpg

அரியநேத்திரனுக்கு முன்பே... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படையின் பாதுகாப்போடு ஊருக்குள் பல்லைக்காட்டிக் கொண்டு வந்தவர்தான்.... சுமந்திரன். 😁 😂

இதுக்கெல்லாம் வழிகாட்டி அவர்தான்.  🤣

சும் சும்மா இல்லை .. இரண்டு தமிழர்களை சிறைக்குள் தள்ளியவர். அரியம் அண்ணைக்கு இன்னும் காலம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

முப்படைத் தளபதியாக இருக்கும் சிங்கள சனாதிபதியின், சிங்கள அரசின்,  சிங்கள காவல் துறையின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்ட அரியம் அண்ணைக்கு வாழ்த்துகள்.

சங்கே முழங்கு

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

சும் சும்மா இல்லை .. இரண்டு தமிழர்களை சிறைக்குள் தள்ளியவர்.

அதில் ஒருவர் ஊனமுற்றவர் என வாசித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அரியத்தை பப்பாவில ஏத்திவிட்டிருக்கு.

வடக்கிலையும் இல்லை கிழக்கிலையும் இல்லை ஊ ஊ ஊ ஊ  🐚 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ரணில் சர்வதேசத்துடன் சேர்ந்து ஒஸ்லோவில் உடன்பாடு செய்தபடியான சமஸ்டிக்குள் தீர்வு  கண்டு விடுவார்களோ என்ற பயத்தில் ரணிலுக்கு தண்டனை வழங்கி இனவாதியான போர் வெறியுடன் இருந்த மகிந்தவை கொண்டுவந்தால் தான் தமிழீழ போரை கொண்டு நடத்தலாம் என்று பாரிய தப்பு கணக்கு போட்டு பேரழிவை அடைந்து இன்று எதுவும் கிடைக்காத கையறு நிலை.  அந்த மோசமான அரசியலை பாராட்டும் அளவுக்கு   அரசியல் தற்குறியே இந்த அரியம் என்ற  பொது வேட்பாளர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை; தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

sumo-sanakeyan.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நான் பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனக்கு தற்போது பிரமுகர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த (MSD) இருவரை பாதுகாப்புக்கு தந்துள்ளார்கள்.

பொது வேட்பாளராக நான் போட்டியிடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ, சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக அவர்களால் எனக்கு ஆபத்து வரும் என நான் நம்பவில்லை.

அதேவேளை என்னை வேட்பாளரின் இருந்து விலகுமாறு யாரும் என்னிடம் நேரில் கேட்கவில்லை. எனக்கு அந்த விதமான அழுத்தங்களையும் தரவில்லை. நான் போட்டியிடுவதால் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதற்காக யாரும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ , அழுத்தம் தரவோ இல்லை என மேலும் தெரிவித்தார்.
 

https://akkinikkunchu.com/?p=292099

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த  விஞ்ஞானக் கட்டுரை வெளிவந்துவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த  விஞ்ஞானக் கட்டுரை வெளிவந்துவிட்டதா?

இருட்டடிக்கு ஆயத்தம் போல.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளரில் தங்கியுள்ள தமிழர் சுய மரியாதை!

-நஜீப் பின் கபூர்-

இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சரியாக இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரப்பணிகள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிடும். இது நமது வாக்காளர்களுக்கும் தெரியும். வேட்பாளர்கள் முற்பத்து ஒன்பது பேரில் புத்தளத்தை சேர்ந்த மு.கா. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் மரணித்துவிட்டாலும் அவரது பெயர் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன்னரும் இந்த இல்யாஸ் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டிக்கு வருவதை சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்திருக்கின்றார்.

என்னதான் முப்பத்து ஒன்பது பேர் களத்தில் இருந்தாலும் இவர்களில் டசன் கணக்கானவர்கள் பிரதான வேட்பாளர்களின் டம்மிகளாகத்தான் தேர்தலில் குதித்திருக்கின்றார்கள். வேட்பாளர்களாக பதிவு செய்தவர்களில் நான்கு பேரை காணவில்லை. காணவில்லை என்பதன் அர்த்தம் அவர்கள் தொலைபேசி இணைப்புக்குக் கூட வரத் தயாராக இல்லை. அவர்களின் புகைப்படங்களை கூட நமக்குத் தர அவர்கள் தயாராக இல்லை.

இன்னும் பத்தொன்பது பேர் பிரதான வேட்பாளர்களின் கையாட்களாக போட்டியில் குதித்திருக்கின்றார்கள். இதற்கு முன்னரும் இப்படி நடந்திருக்கின்றது. இன்று டசன் கணக்கானவர்கள் இருந்தாலும் முக்கியமான வேட்பாளர்கள் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் நாம் அவர்களை ஐந்து பேர் என்ற அளவில் வைத்துக் (அனுர, சஜித், நாமல், ரணில், அரியம்) கொண்டு தமிழர்களின் சுயமரியாதை பற்றிப் பார்ப்போம்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் நிறையவே தேர்தல் பற்றியும் வேட்பாளர்கள் பற்றியும் நமது வார இதழில் பேசி இருந்தோம். அந்த வரிசையில் கடைசி சில தகவல்களைத்தான் இப்போது நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம். ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களின் மொட்டுக் கட்சியை பிளந்து கொண்டு அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நம்பி களத்தில் இறங்கி இருக்கின்றார். ஜனாதிபதி ரணில் இது விடயத்தில் மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை பிளந்து கொண்டு தனிக்கட்சி அமைத்த சஜித் பிரேமதாச தொலைபேசி சின்னத்தில் ரணிலுக்கு எதிரான கட்சியை அமைத்து வேட்பாளராக வந்திருக்கின்றார். இங்கும் அவர் ஐ.தே. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை தன்னுடன் வைத்திருக்கின்றார். இதனால்தான் கடந்த தேர்தலில் ரணிலுக்கு ஒரு ஆசனத்தை கூட போட்டி போட்டு வெற்றி கொள்ள முடியாமல் போனது. இதனால் இன்று ரணிலும் சஜித்தும் அரசியல் எதிரிகள்.

அடுத்து நாடாளுமன்றத்தில் இரண்டு டசன் வேட்பாளர்கள் அளவில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்கள் தரப்பில் இருந்து அவர்களது அரசியல் வாரிசு நாமல் மொட்டுக் கட்சி சார்பில் போட்டிக்கு வந்திருக்கின்றார்.தனிப்பட்ட ரீதியில் சீனியர் மஹிந்த ராஜபக்ஸ தமது தரப்பில் இருந்து ஒரு வேட்பாளர் ரணிலுக்கு எதிராக 2024ல் களத்துக்கு வருவதை விரும்பவில்லை. என்றாலும் தனது புதல்வரின் பலவந்தம் காரணமாகத்தான் மஹிந்த அவரை ஆதரிக்கின்ற தீர்மானத்துக்கு வர வேண்டி வந்தது. இது தொடர்பாக ராஜபக்ஸக்களின் குடும்பத்துக்குள் நடந்த மோதல்கள் பற்றி நாம் முன்பு பல தகவல்களை சொல்லி இருந்தோம். அவை ஊகங்கள் அல்ல யதார்த்தமான கதைகள்.

அடுத்து இப்போது தெற்கு அரசியலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ஜே.வி.பி-என்.பி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க. அவர் மீதுதான் ஏனைய பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தமது விமர்சனங்களை செய்து கொண்டிருக்கின்றனர். காய் இருக்கின்ற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள் என்பது போலதான் இது. இதிலிருந்து அனுர ஒரு செல்வாக்கான வேட்பாளராக இருக்கின்றார் என்பதனை அவரது அரசியல் எதிரிகளே உறுதி செய்து அவருக்கு ஒரு பிரசாரத்தை கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

தெற்கு அரசியலில் நான்கு முனைப் போட்டி என்று களம் இருக்கின்றது. ஆனால் நமது பார்வையில் அங்கு இருமுனைப் போட்டிதான். மூன்றாம் இடத்துக்குத்தான் இருவர் பலப் பரீட்சையில் இருக்கின்றார்கள். இது எப்படி? அவர்கள் யார் என்று நமது வாசகர்கள் யோசிக்கலாம். அடுத்த கட்டுரையில் வாசகர்களே கள நிலைவரங்களைக் கண்டறிவதற்கான வகையில் (சுய கணிப்பு) ஒரு கட்டுரையில் நிலமையை புரிய வைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். எனவே இன்று கருத்துக் கணிப்புக்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை வாசகர்கள் தமது தலைகளில் போட்டுக் கொள்ளக்கூடாது என்பது நமது கருத்து.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இன்று மக்களுக்கு உண்மைக்குப் புறம்பான கதைகளைச் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் பொருளாதார நலன்களும் அதில் இருக்கின்றன என்பதனை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரணில் நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்ற கதையும் சஜித்துக்கு தொண்ணூறு இலட்சம் வாக்குகள். அனுரவுக்கு ஒரு கோடி வாக்குகள் என்பவைகள் எல்லாம் கற்பனைக் கதைகள் என்பது இருபத்தி இரண்டாம் திகதி பின்னிரவில் நாம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு புறத்தில் பார்க்கின்ற போது தமது ஆதரவாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கூஜா தூக்குகின்ற ஊடகங்களும் இப்படியான கதைகளை சந்தைப்படுத்தி வருகின்றன. இதனை குடிமக்கள் புரிந்து கொண்டால் அவர்கள் குழப்பமடைய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் இப்படியான கதைகளை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கின்ற கூட்டத்தினர்தான் சமூகத்தில் டென்சனாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவிலும் அரசியலில் இப்படியான காட்சிகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. இதனால்தான் இன்று அனுர, சஜித், ரணில், நாமல் தமக்கே வெற்றி என்று கதை சொல்லிக் கொண்டு வருகின்றார்கள்.

இப்போது நாம் தலைப்பில் சொல்லி இருக்கின்ற தமிழர்களின் சுயமரியாதை பற்றி நமது கருப் பொருளுக்குள் பிரவேசிப்போம். இந்த சுயமரியாதை என்ற பதம் ஒவ்வொரு தனிமனிதனினதும் உயிரினங்களின் உணர்வுகளிலும் இரண்டறக் கலந்திருக்கின்ற ஒரு அம்சம். அது உணர்வுக்குள் அடங்கிப் போய் இருக்கும். தனக்கு அல்லது தனது இனத்துக்கு சமூகத்துக்கு தேசத்துக்கு ஒரு கௌரவப் பிரச்சினை வரும் போது சுயமரியாதை என்ற உருவத்தில் அது வெளிப்படும்.

மேற்சொன்ன நான்கு வேட்பாளர்கள் மத்தியில் ஐந்தாம் ஆளாக தமிழர்களின் பொது வேட்பாளரையும் நாம் ஒரு கனதியான வேட்பாளராக எடுத்துக் கொள்ள முடியும். அவருக்கு சமூகம் எந்தளவுக்கு வாக்கு கொடுக்கின்றதோ அந்தளவுக்குத்தான் அவர்களுக்கான மரியாதையும் சுயகௌரவமும் பாதுகாப்பும் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரை அவர்தான் அந்த சமூகத்தின் ஜனாதிபதி வேட்பாளர்.

தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேத்திரனைக் களத்தில் இறக்கி இருப்பது ஒரு இனத்தின் குறியீடாகத்தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. என்றாலும் வெற்றி பெற முடியாத ஒருவர் ஏன் களத்திற்கு வரவேண்டும் என்று தமிழர் தரப்பிலிருந்தே சில அரசியல்வாதிகள் கேட்டிருந்தார்கள். எனவே வெற்றி பெறக்கூடிய தெற்கு அரசியல்வாதி ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவர் ஊடாக தமிழர்கள் உரிமைகளை அடைவதற்கு இது தடை என்பது அவர்கள் வாதமாகவும் இருக்கின்றது.

இவர்களிடம் நாம் கேட்பது போட்டியிடுகின்ற 39 பேரில் ஒருவர்தானே வெற்றி பெற முடியும். எனவே வெற்றி பெற முடியாத ஏனையோர் அப்படியாக இருந்தால் எதற்காக அங்கு போட்டிக்கு வந்திருக்கின்றார்கள்? அடுத்து இவர்கள் இனம் காட்டுகின்ற வேட்பாளர்தான் தெற்கில் வெற்றி பெறுவார் என்பதற்கு என்னதான் உத்தரவாதம் இருக்கின்றது. அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் பிரதான பங்காளியாக இருந்த இவர்கள் அன்று வாய்ப்பான நேரத்தில் தமிழர்களுக்கு என்னதான் பெற்றுக் கொடுத்திருந்தார்கள்.

ரணிலை நம்பி கடைசி வரையிலும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் இந்த பொது வேட்பாளரை எதிர்ப்பதிலும் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயல்பாடுகளின் போது அவர்களை எந்த இடத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது தொடர்பிலான தீர்மானங்களையும் இப்போது தமிழர்கள் எடுத்தாக வேண்டும். இதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. தமிழர்களின் அரசியல் அரங்கை தூய்மைப்படுத்தும் ஒரு காலமாக இதனை தமிழர்கள் உபயோகித்துக் கொள்ள முடியும்.

 
சந்தர்ப்பவாத அரசியல் செய்தவர்களுக்கும் செய்கின்றவர்களுக்கும் இனங்களின் அரசியல் உணர்வுகள், போராட்டங்கள், தியாகங்களைப் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால்  இன உணர்வுடன் செயல்படுகின்றவர்கள் இவர்கள் விடயத்தில் இன்னும் அடக்கி வாசிப்பது புரிந்து கொள்ள முடியாத விடயமாக இருக்கின்றது. ஈகோ பிரச்சினைகளோ தெரியாது.! தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற ஏனைய தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளருக்கு ஆதரவு என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதால் அவர்களும் முதுகெலும்பு இல்லாத தலைவர்கள் என்பதனை தம்மை சமூகத்திற்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சுமந்திரன் ஒரு முறை, 2024 செப்டெம்பர் இருபதாம் திகதி வரை பொது வேட்பாளர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க காலம் இருக்கின்றது என்று ஒரு கதையை ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார். அவரது அந்தக் கதையிலிருந்து எதனை உணர முடிகின்றது. ஒருவர் இனத்தின் சார்பில் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்ற தீர்க்கமான இந்த நேரத்தில் இறுதி நிமிடம் வரை தமிழரசுக் கட்சி முடிவு சொல்லும் வரை காத்திரு என்ற வார்த்தை எவ்வளவு தூரம் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகின்ற விடயமாக இருக்க முடியும்.  இது தொடர்பாக தமிழரசுக் கட்சி இன்னும் மௌனம் காப்பது ஏன்? தெற்கின் அரசியல் முகவர் தமிழரசுக் கட்சித் தீர்மானம் பற்றிக் கேட்ட போது அந்த முகவர் 20ம் திகதி வரை பொறுத்திரு என்று சொல்லி இருந்தார். இது எவ்வளவு தூரம் துரோகமான கதை.

அடுத்து கிழக்கில் ஒருவருக்கு அறுபது கோடியும் வடக்கில் ஒருவருக்கு நாற்பது கோடியும் என்று ஜனாதிபதி ரணில் நிதி ஒதுக்கி இருக்கின்றார் என்று தயாசிறி ஜயசேகர பகிரங்கமாக பெயர் குறிப்பிட்டு கூறி வருகின்றார். இவர்கள்தான் இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி இருக்கும் முக்கிய புள்ளிகள். மறுபுறத்தில் இப்படி ரணிலிடம் பணம் வாங்கி தமது அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்கள் எப்படிப் பொது வேட்பாளரை ஆதரிக்க முடியும்?

கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் இப்படி தன்னிஸ்டத்துக்கு அபிவிருத்தி பணிகளுக்கு பணம் வாங்கி சமூக விரோத அரசியல் செய்வது தொடர்பாக தமிழரசுக் கட்சி  இன்றுவரை கேள்வி எழுப்பியதும் கிடையாது. சிறிதரன் என்னதான் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் அவர் ஏட்டுச் சுரைக்காய் வடிவில்தான் தனது பதவியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றார். அல்லது தெற்கு அரசியல் முகவர்களுக்கு அவர் பயந்து முடிவுகளை எடுக்க பின்வாங்கி வருகின்றார்.

இப்படியான ஒரு பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னால் வருகின்ற பொதுத் தேர்தலில் தற்போது பொது வேட்பாளரை களத்தில் ஆதரிக்கின்ற சக்திகள் புதியதோர் அரசியல் இயக்கமாக வருகின்ற தேர்தலில் தமிழ் மக்களின் அங்கீகாரத்துக்கு வரலாம். அப்போது இந்த தமிழரசுக் கட்சியும் சிறிதரன் போன்றவர்களும் இலவுகாத்த கிளியின் நிலைக்கு ஆளாகலாம்.

தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தின் அவதானத்தை ஈர்ப்பதற்கும் இங்குள்ள தமிழர்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் பொது வேட்பாளர் பெறுகின்ற வாக்குகள் நிச்சயம் துணைபுரியும். பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் மக்களின் எழுபத்தி ஐந்து சதவீதமான வாக்குகளுக்கு அதிகம் பெறத் தவறுவாராக இருந்தால் அது தமிழர்களுக்கான தலை குனிவாகத்தான் அமையும். இந்த நாட்டில் தமிழர்களுக்கு நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றுதான் அது அர்த்தத்தைக் கொடுக்கும்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் மீது தெற்கு அரசியல்வாதிகள் தமது அவதானத்தை செலுத்துவதற்கும் அரியநேத்திரன் பெறுகின்ற வாக்குகள் உறுதுணையாகவும் இருக்கும்.  பணத்துக்காகவும் தெற்கு அரசியல் தலைமைகளுடன் கொடுக்கல் வாங்கல் அரசியல் செய்ய முனைகின்றவர்களுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு தேர்தலாகவும் தமிழர்கள் இந்த 2024 ஜனாதிபதித் தேர்தலை பாவிக்க முடியும்.

நாம் வாழ்கின்ற சமூகத்தில் தன்னலன்களுக்காக கோடாறிக் காம்புகள் தமது பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கும். இதற்கு மத்தியில்தான் சமூக விமோசனங்களுக்கான பணிகளும் போராட்டங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கின்றது என்பதனை நாம் வரலாறு பூராவிலும் பார்த்துத் தான் வருகின்றோம்.

அனுர, சஜித், நாமல், ரணில் ஆகியோருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளராக தமிழர்களின் பொது வேட்பாளர் வருவார் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரு கருத்துக் கணிப்பாகவும் உலகம் பார்க்கும் ஒரு நிலையும் இந்தத் தேர்தலில் இருக்கின்றது. இதனை உலகம் பூராவிலும் வாழ்கின்ற தமிழ் சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.

https://thinakkural.lk/article/308733

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2024 at 20:24, வாலி said:

பாவம் அரியத்தை பப்பாவில ஏத்திவிட்டிருக்கு.

வடக்கிலையும் இல்லை கிழக்கிலையும் இல்லை ஊ ஊ ஊ ஊ  🐚 

அவர் செய்தது சரி 

On 18/9/2024 at 19:30, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQC_633i8A-mHWuaGCtVbE 

M.A.Sumanthiran-1.jpg

3-m.a.sumanthiran.jpg

அரியநேத்திரனுக்கு முன்பே... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படையின் பாதுகாப்போடு ஊருக்குள் பல்லைக்காட்டிக் கொண்டு வந்தவர்தான்.... சுமந்திரன். 😁 😂

இதுக்கெல்லாம் வழிகாட்டி அவர்தான்.  🤣

இவர். இந்த தேர்தலில் பின் காணமால். போக வேண்டும்  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.