Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அதுக்கு…. அவர், வாற பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமே.
மக்கள் அவருக்கு வாக்குப் போட தயார் இல்லையே…
போன முறை மாதிரி… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடிக் கொண்டு பின்கதவால் வந்தது போல், இந்த முறையும் ஆரையும் ஏமாத்தி, சுத்துமாத்து செய்துதான் பாராளுமன்றம் போய் அமைச்சு பதவி எடுக்க வேண்டும்.
சஜித்தை…. ஆதரித்து, அனுரவை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆளுக்கு எப்படி  அமைச்சு பதவி கொடுப்பார்கள்.

ஜிஎல் பீரிஸ் யார் அரசு அமைத்தாலும் ஒரு அமைச்சராக வருவார்.

ஆனால் தேர்தலில் நிற்கமாட்டார்.

அந்த இடத்துக்கு இவர் வரலாம்.

  • Replies 131
  • Views 7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும்

  • சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

  • பிழம்பு
    பிழம்பு

    // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

ரணிலுடன் கூடி ஏமாற்றப்பட்டு என்பதை மறந்ததேனோ??? 

ரணிலுடன் கூடி ஏமாந்தது, மைத்திரியுடன் கூடி ஏமாந்தது, 
போர்க் குற்றங்களை விசாரிக்க வெளியார் தேவையில்லை… உள்ளக விசாரணையே போதும் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்து மகிந்தவிடம் ஏமாந்தது என்று… இவர்களின் அரசியல் பயணம் முழுக்க ஏமாந்த கதைதான்.
இதற்குள் சட்டம் படித்தவர்கள் என்று பீத்தல் வேறை.
ஓருவன் ஒரு முறை ஏமாறலம், இரு முறை ஏமாறலாம்.
ஆனால் வாழ்க்கை முழுக்க ஏமாறுவது என்றால்…  என்ன அர்த்தம். முட்டாள் பயலுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கொள்கையில் நிலையாக உறுதியாக இருந்தால் ஏமாற்ற முடியாது. நாமளே உருட்டும் பிரட்டும் என்றால் ????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

460963708_1058312669637815_6001598680015

சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறை மக்களே.... 
அரியநேத்திரனுக்குத்தான் அதிக வாக்குகளைப் போட்டுள்ளார்கள். 
இதற்குள் தான் சொல்லித்தான் தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்குப் போட்டது என்று 
பச்சைப் பொய் சொல்லி, தனக்குத்தானே... முதுகு  சொறிந்து  விடுகிறார் பித்தலாட்டக் காரன். 🤣

கூரை ஏறி... கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம்.
இந்தக் கதையைப் போய்  முழு  லூசுகளுக்கு சொன்னால் நம்புவார்கள். 😃
அதை விட்டுட்டு... சுமந்திரன்  தான் செய்த முட்டாள் தனத்துக்கு... 
விளக்கமும், வியாக்கியானமும்  சொல்லிக் கொண்டு இருக்கிறாராம். 😂

உண்மைதான், ஆனால் சஜித் தெற்கு மக்களின் ஆதரவோடு வென்றிருந்தால்கூட  சும் மற்றும் சிறிலங்கா தேசியவாதிகளால் உங்களது *** மும் உருவப்பட்டிருக்கும். நல்லவேளை சஜித்தின் தோல்வியால் தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

அதுக்கு…. அவர், வாற பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமே.
மக்கள் அவருக்கு வாக்குப் போட தயார் இல்லையே…
போன முறை மாதிரி… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடிக் கொண்டு பின்கதவால் வந்தது போல், இந்த முறையும் ஆரையும் ஏமாத்தி, சுத்துமாத்து செய்துதான் பாராளுமன்றம் போய் அமைச்சு பதவி எடுக்க வேண்டும்.
சஜித்தை…. ஆதரித்து, அனுரவை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆளுக்கு எப்படி  அமைச்சு பதவி கொடுப்பார்கள்.

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

உண்மைதான், ஆனால் சஜித் தெற்கு மக்களின் ஆதரவோடு வென்றிருந்தால்கூட  சும் மற்றும் சிறிலங்கா தேசியவாதிகளால் உங்களது *** மும் உருவப்பட்டிருக்கும். நல்லவேளை சஜித்தின் தோல்வியால் தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அவர் கை காட்டின சஜித் தோற்றதும் நன்மைக்கே. 😂
ஏதோ…. நல்ல காலம் இருந்திருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது,  யாழ். மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்திற்கு பின்கதவால் சுமந்திரன் சென்ற காணொளியும், பின் இராணுவ பாதுகாப்புடன் வெளியே வந்த காணொளியும், அதைப் பார்த்து வெளியே கூடியிருந்த மக்கள்…  “கள்ளா… கள்ளா” என்று கூக்குரல் இட்டதையும், பல காணொளி வடிவங்களில்….. யாழ். களத்தில் கூட இணைக்கப் பட்டு இருந்ததே. நீங்கள் பார்க்கவில்லையா… 😂
அல்லது உங்களுக்கு, மறதி வியாதி… மிகவும் அதிகமா.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

ரணிலுடன் கூடி ஏமாந்தது, மைத்திரியுடன் கூடி ஏமாந்தது, 
போர்க் குற்றங்களை விசாரிக்க வெளியார் தேவையில்லை… உள்ளக விசாரணையே போதும் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்து மகிந்தவிடம் ஏமாந்தது என்று… இவர்களின் அரசியல் பயணம் முழுக்க ஏமாந்த கதைதான்.
இதற்குள் சட்டம் படித்தவர்கள் என்று பீத்தல் வேறை.
ஓருவன் ஒரு முறை ஏமாறலம், இரு முறை ஏமாறலாம்.
ஆனால் வாழ்க்கை முழுக்க ஏமாறுவது என்றால்…  என்ன அர்த்தம். முட்டாள் பயலுகள். 

இலங்கையின் குற்றிவியல் சட்டங்களைப் படித்தார்களேயன்றி, அரசறிவியலைப் படித்திருப்பார்களா? அதனால்தான் சிங்களத்திடம் தொடர் ஏமாற்றம். சிங்களத்தின் ஒவ்வொரு அரச தூதுவர் முதல் அரச அதிகாரிகள் வரை எப்படி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள். யுத்த காலத்திற் கடும்போக்காளரான மகிந்த குடும்பத்திற்கும், அவர்கள் நாட்டைப் பொருண்மிய ரீதியாக வீழ்த்தியபோது அறகலயவாகத்திரண்டு துரத்தியடித்தமை, இன்று யே.வி.பியோடு என்று காலத்தைக் கணித்துத் தமது தலைமையைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், தமிழர்களில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான அற்பர்கள் கொழும்பு மற்றும் இந்தியா என வசதியான வசிப்பிடங்களை வைத்துக்கொண்டு, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே பலிகொடுத்து வருகிறார்கள். இவர்களது முகாமைத்துவம் இருக்கும்வரை தமிழினத்தால் சுழியத்திலிருந்து மீளமுடியாது.
இன்றொரு காணொளி பார்த்தேன் இலங்கையில் தொடருந்து உல்லாசப் பயணம் பற்றிய விவரணமாக டீ.டபிள்யூ(DW) ஒளிபரப்பியது. அதில் கண்டியின் கடைசி மன்னன் சிங்களவனென்றும், தேயிலை உற்பத்தியைக் காட்டும்போது இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர் என்றும் போகிறது. எப்படிக் கனகச்சிதமாக வரலாற்றுத் திரிபு நடக்கிறது. ஆனால் எமது வரலாற்றாய்வாளர்களோ, சட்டவாளர்களோ மற்றும் அறிவுலகத்தினரோ(ஒரு சிலரைத் தவிர) எதிர்வினையாற்ற முடியாத மௌனிகளாக இருப்பதும் ஒருவகையில் அழிவுக்கு உதவுதலேயாகும். கண்டியின் கடைசிமன்னன்  சிறீ வேங்கடப்பெருமாள் சிறீ சுப்பம்மாவின் மகனான சிறீ விக்கிரம ராஜசிங்கன் எனத் தகவல்கள் இணைய உலகில் உள்ளபோதும் சிங்களம் எப்படித் தமக்கேற்றவாறு பரப்புரை செய்கிறது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

உண்மை. நிச்சயம் திருடி இருப்பார்.  அவர்களில் பல திருடர்கள் உண்டு தானே! 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசிடம் உலக  அரசறிவியல் தெரியாதவர்களாக வெறும் உணர்சசி அரசியல் செய்து  தோற்றவர்கள் பட்டியல். 

ஜி.ஜி பொன்னம்பலம்

எஸ். ஜே. வி. செல்வநாயகம்

அ. அமிர்தலிங்கம்

வே. பிரபாகரன்

ஆர். சம்பந்தன்

சுமந்திரன்

எதிர் காலத்திலாவது  அறிவை பயன்படுத்தி அரசியலை செய்தால் வெற்றி கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

வெறும் உணர்சசி அரசியல் செய்து  தோற்றவர்கள் பட்டியல்.

சிறிதரன் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்று இப்படி நிறைய பெயர்கள் வரும் அதனால் அவர்களை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????

2 hours ago, தமிழ் சிறி said:

. மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்திற்கு பின்கதவால் சுமந்திரன் சென்ற காணொளியும், பின் இராணுவ பாதுகாப்புடன் வெளியே வந்த காணொளியும், அதைப் பார்த்து வெளியே கூடியிருந்த மக்கள்…  “கள்ளா… கள்ளா🤣

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2024 at 03:13, Kapithan said:

ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா?

உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம்.  தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் ********** இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன.    சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள்  உண்டு.  அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????

51 minutes ago, Kapithan said:

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

27 minutes ago, island said:

உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம்.  தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் அல்லக்கைகளால் இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன.    சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள்  உண்டு.  அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள். 

உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். 

இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி?

சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! 

இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சுமந்திரனின் தவறுகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

பெரும்பாலான யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்து எதனை சாதித்துள்ளார்கள். ?
யாரென்றே தெரியாத பியதாசாவுக்கு வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களா?
ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுர எத்தனை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவார்?
சொல்லுங்கள் உங்கள் தூர நோக்கங்களை?

நிச்சயமாக, சுமந்திரன் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தனர், வாக்களிக்காமல் விட்டனர் என்பதெல்லாம் தங்களை தாங்களே ஏமாற்றும் செயல் மட்டுமல்ல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் கூட. சரி, சும் சொல்லித்தான் சஜித்துக்கு போட்டார்கள், அரியத்துக்கு போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், யார் சொல்லி ரணிலுக்கு போட்டார்கள் ?  பியதாசாவுக்கு போட்டார்கள்? பியதாசாவுக்கு போட தெரிந்தவர்களுக்கு இவர்கள் கைகாட்டியவர்களுக்கு போடத்தெரியவில்லையா? அது அவரவர் விருப்பம். ஒன்று, வெறுப்பு, ஏமாற்றம், யார் வந்து நமக்கு என்ன ஆகப்போகுது சும்மா போட்டுவிடுவோம் என்கிற மனநிலை. ஏன், ஒருவர் வாக்குசீட்டை கிழித்துப்போட்டார், அதை செய்யச்சொல்லி யார் சொன்னது? சரி... இவர் கைகாட்டின வேட்பாளர் வென்றாரா? எல்லோரும் அவருக்கு வாக்கு போட்டிருந்தால், அனுராவுடன் எந்த மூஞ்சியோடு போய் பேசுவார். அவர் ஒரு வெற்றியாளரை இனங்காண முடியாதவர் மூன்று பேரிடமும் பேசினாராம் ஆனால் சஜித்தை தெரிவு செய்ய முடிவு செய்தாராம். காரணத்தை ஏன் மக்களுக்கு அறிவிக்கவில்லை? மக்களிடம் வாக்கு கேட்பவர் அதற்கான காரணத்தை விளக்காதது ஏன் ?அப்படியென்றால் அவர்கள் அதை அறிவதற்கு தகுதியற்றவர்களா? இந்த வாதம் ஒரு மக்களின் பிரதிநிதிக்கு ஏற்றதா? சர்வாதிகாரம் போல் தெரியவில்லையா?

8 hours ago, Kapithan said:

சொன்னால்தான் தாங்கள் என்ன நம்பவாபோகிறீர்கள்? இல்லையல்லவா. பிறகேன் கேட்கிறீர்கள்?

நம்புவதா இல்லையா என்பது மக்களின் பொறுப்பு. விளக்க வேண்டியது இவரின் கடமை. கேள்வி கேட்பது வாக்களிக்கும் மக்களின் உரிமை. நம்ப மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? அப்படியானால் உங்களுக்கே தெரியும் தகுந்த காரணமில்லை, அல்லது அந்தகாரணம் மக்களுக்கானதல்ல என்பது. காரணம் சொல்லாமல் கைகாட்டி வாக்கு போட்டு களைத்ததால் தான் மக்கள் தங்கள் முடிவை தாங்களே எடுக்கத் தொடங்கினர். அதற்கு அவர்களை குற்றம் சொல்வதும் சாபமிடுவதும் கேலி பண்ணுவதும் முறையல்ல. நான் ஜனாதிபதியாவேன் என்று அரியம் நினைக்கவில்லை மக்களும் நினைத்துப்போடவில்லை அது நடக்கிற காரியமுமில்லை. நாங்கள் இவர்களுக்கு வாக்களித்துக்கொண்டேயிருக்கிறோம், ஆனால் இவர்கள் எங்களை அந்நியராக நடத்துகின்றனர், நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்கின்றனர், இவர்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்? எங்களது இந்த முடிவுக்கு காரணம் என்பதை கேளுங்கள்! என்கிற தோற்றப்பாடே, இந்த பொது வேடபாளர். எந்த காரணத்தை வைத்து இது முன்னிறுத்தப்பட்டதோ அதை அனுரா தெளிவாக பத்திரிகை பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார். எங்களது கோரிக்கை போக வேண்டிய இடத்துக்கு போயிருக்கிறது. சர்வதேசம் ஒன்று கூறுமாம், சிங்களம் ஒன்று கூறுமாம். ம்..... நாங்கள் அடித்து விரட்டப்படும்போது இவர்கள் என்ன செய்தார்கள், சொன்னார்கள்? அவர்கள் எதை செய்தாலென்ன, சொன்னாளென அனுபவிப்பது நாமல்லவா? எனது புண்ணுக்கு நான் தான் மருந்து தேட வேண்டும். அவர் வந்த வேலை தமிழ் தேசியத்தை சிதைப்பது. ஆ அது இன்னும் மூச்சிழுக்கிறது என்பதே அவரது ஆதங்கம். இனிமேல், மக்கள் மத்தியில் தன் வார்த்தை எடுபடாது, அதை வைத்து பிழைக்க முடியாது, தான் எடுத்த பணி நிறைவுறாமல் பாதியிலே தேங்கி நிக்கிறதே என்கிற ஏமாற்றம். அவரை பணியிலமர்த்திய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, அகற்றப்பட்டுவிட்டதே என்கிற கவலை இப்படியெல்லாம் குற்றம் சாட்ட வைக்கிறது. இவர் சொல்லித்தான் மக்கள் வாக்குப்போட்டனர் என்கிற காரணம் அடுத்த தேர்தலில் நிரூபணமாகும். அதுவரை பொறுத்திருங்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான ஆட்களுடன் மோதுகிறோம் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

https://www.facebook.com/reel/979372050232234?mibextid=ngobeXctTp5pD3Zm

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

நான் நடந்த ஒரு சம்பவத்தை எழுதினேன். நீங்கள் அதை வைத்து உங்கள் பாணியில் இல்லாத ஒன்றை உருவாக்க முனைகிறீர்கள். பாலும் கள்ளும் ஒன்றுதான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் விளக்கம் என்னால் தரமுடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். 

இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி?

சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! 

இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

விரிவான தகவல்களுக்கு நன்றி. 

இந்த தேசியவாத வியாதி பிடித்தவர்களின் எப்போதுமே கருத்தியல் ரீதியில் உரையாட மாட்டார்கள். எடுத்தவுடன் ஒருவரை பற்றி அவதூறு புரிந்து அந்த அவதூறை மட்டுமே ஆயுதமாக பயன் படுத்துவர்.  அதிலும்  இந்த தீவிர தமிழ்  தேசியவாதம் பேசுபவர்கள் அதில் ஒருபடி மேலே சென்று மற்றவரை நம்ப வைப்பதற்காக  தாமே கட்டமைத்த பொய்களையும்  பிம்பங்களையும் மாயைகளையும் அவர்களே ஒரு கட்டத்தில் பேதைகள் போல  நம்ப தொடங்கி,  அதன் பின்னர் அவர்களே அதற்கு பலியாகி தம்மை நம்பிய மக்களையும் பலியாக்குவர். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

 ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி கொண்டு வந்தால் அது உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தான்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி கொண்டு வந்தால் அது உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தான்

அங்கே 

அதன் பின்னர் அரசியல் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே...?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் நடந்த ஒரு சம்பவத்தை எழுதினேன். நீங்கள் அதை வைத்து உங்கள் பாணியில் இல்லாத ஒன்றை உருவாக்க முனைகிறீர்கள். பாலும் கள்ளும் ஒன்றுதான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் விளக்கம் என்னால் தரமுடியுமா??

எல்லாம் ஒன்றுதான் விசுகர். கூட்டிக் கழித்துப் பாருங்கள், கணக்கு சரியாக வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு  குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். 

இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி?

சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! 

இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.  

https://www.sundaytimes.lk/200809/columns/clash-at-jaffna-counting-centre-row-over-votes-for-sumanthiran-and-sasikala-411860.html

விடியற்காலை 1.30 ற்கு ஏன் அரசாங்க அதிபரை சந்திக்கபோனவர்.

கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ......

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ,    .....😁

யாரும் கள்ளன் என கத்தியதாக தெரியவில்லை.😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.