Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
 
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரைப் பாதுகாக்க முன்வந்துள்ளார்.

“தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலும் ஏனையோரினாலும், இந்;த கருத்து, வடமாகாண மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என்று விமர்சிக்கப்பட்டது.

எனினும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கள் இனவாதத் தூண்டுதலானது என்ற கருத்தை மறுத்தார். “தோழர் அநுரகுமார இந்த வார்த்தைகளை இனவாத உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் கூறியதாக நான் நினைக்கவில்லை. எனக்கும் அவரை நன்றாக தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல” என சுமந்திரன் கூறினார். 

“உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார். எனவே, இந்த விடயத்தில் எங்களுக்கு வேறுபட்ட உணர்வுகள் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திஸாநாயக்கவின் கருத்துக்களை விமர்சித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,வடக்கு தமிழ் மக்களிடமும் தெற்கிலும் உள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திஸாநாயக்கவிடம் அழைப்பு விடுத்திருந்தார். 
 
https://malainaadu.lk/Anurakumaras-manifestation-is-not-a-threat-:-Sumandran-protects

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரனை கொஞ்சநாளைக்கு வாய் திறக்க வேண்டாம் எண்டு ஆராவது சொல்லித்தொலையுங்கப்பா 😁

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  September 26ம் திகதி. இந்தச் செய்தி வெளி வந்ததோ September 08. 

அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்

EditorEditor 
Sep 8, 2024 - 11:13

ஆக அதரப் பழசான செய்தி ஒன்றைத் தூசு தட்டிக் கொண்டுவரப்பட்டு இங்கே பசைபூசி ஒட்டிவிடப்பட்டுள்ளது. 

நுணாவிலான் இன்னமும் கலண்டர் பார்க்கவில்லையோ,.....🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இன்று  September 26ம் திகதி. இந்தச் செய்தி வெளி வந்ததோ September 08. 

அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்

EditorEditor 
Sep 8, 2024 - 11:13

ஆக அதரப் பழசான செய்தி ஒன்றைத் தூசு தட்டிக் கொண்டுவரப்பட்டு இங்கே பசைபூசி ஒட்டிவிடப்பட்டுள்ளது. 

நுணாவிலான் இன்னமும் கலண்டர் பார்க்கவில்லையோ,.....🤣

இதென்ன பிரமாதம்? இன்னொரு திரியில் 2020 இல் சிவகரன் தினக்குரலுக்குக் கொடுத்த அறிக்கையை, திகதி, விளக்கம் எதுவுமில்லாமல் கொண்டு வந்து இணைத்திருந்தார்.

சுமந்திரனை எதனாலும் அடிக்கலாம், அது பொய்யா, மெய்யா, செருப்பா என்பதெல்லாம் பொருட்டல்ல, அடிக்கோணும் - அவ்வளவு தான்😂!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
 
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரைப் பாதுகாக்க முன்வந்துள்ளார்.

“தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலும் ஏனையோரினாலும், இந்;த கருத்து, வடமாகாண மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என்று விமர்சிக்கப்பட்டது.

எனினும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கள் இனவாதத் தூண்டுதலானது என்ற கருத்தை மறுத்தார். “தோழர் அநுரகுமார இந்த வார்த்தைகளை இனவாத உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் கூறியதாக நான் நினைக்கவில்லை. எனக்கும் அவரை நன்றாக தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல” என சுமந்திரன் கூறினார். 

“உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார். எனவே, இந்த விடயத்தில் எங்களுக்கு வேறுபட்ட உணர்வுகள் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திஸாநாயக்கவின் கருத்துக்களை விமர்சித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,வடக்கு தமிழ் மக்களிடமும் தெற்கிலும் உள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திஸாநாயக்கவிடம் அழைப்பு விடுத்திருந்தார். 
 
https://malainaadu.lk/Anurakumaras-manifestation-is-not-a-threat-:-Sumandran-protects

சாதாரண பொது விடயங்களில் அரவனைத்து போதல் எவ்வளவு முக்கியமாக இருக்கும் போது, ஒரு நாட்டினை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பிற்கு போட்டியிடுவரது வாதமாக இதனை பார்க்கும் போது அவர் எந்தளவிற்கு இந்த பதவிக்கு தகுதியானவர் எனும் எண்ணம் வருகிறது, இங்கு மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதனை  கூற எனக்கு எந்த உரிமையும் கிடையாது, இவர் கடுமையான இடது சாரி அடக்குமுறையாளராக வருவதற்கு தற்போதுள்ள இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வேறு அவருக்கு உதவ போகிறது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனை கொஞ்சநாளைக்கு வாய் திறக்க வேண்டாம் எண்டு ஆராவது சொல்லித்தொலையுங்கப்பா 😁

அவர் செய்த திருகுதாளம்களை அனுரா வந்தால் வெளிபடுத்தி விடுவாரோ என்ற பயத்தில் சுமத்திரன் உளறி தள்ளுகிறார் 

16 hours ago, nunavilan said:

“தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார். 

இப்படி சொன்னவரா சஜித்துக்கு வாக்கு போடுங்க என்று சொன்னவர் ?

இப்படி நிறம் மாறும் ஓணான் கூட தற்கொலை பண்ணும் இவரின் செய்கைககளை பார்த்து .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

அவர் செய்த திருகுதாளம்களை அனுரா வந்தால் வெளிபடுத்தி விடுவாரோ என்ற பயத்தில் சுமத்திரன் உளறி தள்ளுகிறார் 

சீச்சி... அவரது கை அசுத்தமடையாத கை. ஏன் பயப்பிட வேண்டமு;. அதைவிட கிறிமினல்.. சட்டம் படித்தவராயிற்றே..

14 minutes ago, பெருமாள் said:

இப்படி சொன்னவரா சஜித்துக்கு வாக்கு போடுங்க என்று சொன்னவர் ?

இப்படி நிறம் மாறும் ஓணான் கூட தற்கொலை பண்ணும் இவரின் செய்கைககளை பார்த்து .

நீங்கள் அந்தப் பச்சோந்தி வகையையா சொல்கிறீர்கள்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

இப்படி நிறம் மாறும் ஓணான் கூட தற்கொலை பண்ணும் இவரின் செய்கைககளை பார்த்து .

யோப் பெருசு,....

நீங்களெல்லாம் உயிருடன் இருக்கும்போது பாவம் அந்த வீணாய்ப்போன ஓணான் மட்டும்  ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்,....ரெல் மீ ..ரெல் மீ,.......🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

யோப் பெருசு,....

நீங்களெல்லாம் உயிருடன் இருக்கும்போது பாவம் அந்த வீணாய்ப்போன ஓணான் மட்டும்  ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்,....ரெல் மீ ..ரெல் மீ,.......🤣

பேராண்டி உங்க ஆள் நிறம் மாறும் ஓனானை விட சிறப்பானவர் எப்படியும் தப்பி விடுவார் ஆனால் வெளிநாட்டில் பதுக்கிய பணம் அங்கு வாங்கிய தொடர் மாடி வீடுகள் தற்போது யாரின் பெயரில் உள்ளது அதாவது பினாமி பினாமி என்பார்களே அவரின் பெயரும் நமக்கு தெரியும் ஒரு மெயில் காணும் உங்க ஆள் மயிலாடுவார் சும்மா வாயை கிண்டிக்கொண்டு இருக்காதிங்க .

ஐஸ் தொழில் நடாத்தி வந்த விசுவாசி அந்த பினாமி இப்ப நம்மவர்களுக்கு விளங்கி இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

பெருசு,...

சும்மா அடிச்சு விடுகிறது போல, அவிழ்த்தும் விட வேண்டியதுதானே,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

பெருசு,...

சும்மா அடிச்சு விடுகிறது போல, அவிழ்த்தும் விட வேண்டியதுதானே,..🤣

பொறுங்க உங்க ஆள் கனடாவிலும் கிழிந்த தவக்கை போல் இருப்பார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இதென்ன பிரமாதம்? இன்னொரு திரியில் 2020 இல் சிவகரன் தினக்குரலுக்குக் கொடுத்த அறிக்கையை, திகதி, விளக்கம் எதுவுமில்லாமல் கொண்டு வந்து இணைத்திருந்தார்.

சுமந்திரனை எதனாலும் அடிக்கலாம், அது பொய்யா, மெய்யா, செருப்பா என்பதெல்லாம் பொருட்டல்ல, அடிக்கோணும் - அவ்வளவு தான்😂!

வரலாறு முக்கியம் தல. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இதை கூறியது தேர்தலுக்கு முன்பு, அதாவது சஜித்தை அவர் ஆதரித்த போது வடக்கிற்கு அநுர வந்து அவர் பேசிய பேச்சை தமிழ் ஊடகங்கள் தமிழர்களை அவர் அச்சுறுத்துகிறார் என்று கூறியபோது ரணிலும் அப்படி  கூறியபோது,    அப்படியல்ல தமிழர்களை எச்சரிக்கும்  தொனியில் அநுர பேசவில்லை என்று உடனடியாகவே தனது கருத்தை கூறியிருந்தார்.  இப்போது இந்த பழைய செய்தி  இணைக்கப்பட்ட காரணம்,  அநுர வெற்றி பெற்ற பின் அநுரவுக்கு  ஆதரவாக சுமந்திரன்  மாறிப்பேசுகிறார் என்று மடை மாற்ற. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

பொறுங்க உங்க ஆள் கனடாவிலும் கிழிந்த தவக்கை போல் இருப்பார் .

உங்க ஆளோ அல்லது எங்க ஆளோ,.....

அனுரவின் வருகையுடன் புலம்பெயர்ஸ் கதை கந்தல்போலத் தென்படுகிறது,..🤣

இலங்கையில் இனப்பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்று சுமந்திரன் ஆட்கள்  முயன்றபோதெல்லாம் முட்டையடிக் கோஸ்ரி சகலவற்றையும் போட்டுடைத்தது எவ்வளவு முட்டாள்தனம்  என்று மிக விரைவில் உணர்வீர்கள்,.....

இலங்கை அரசுடன் நிலத்தில் உள்ளோரும் சேர்ந்து புலம்பெயர்ஸ் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்லப்போகிறார்கள. எதற்கும் ஆயத்தமாக இருங்கள்,... 🤣

2 hours ago, island said:

சுமந்திரன் இதை கூறியது தேர்தலுக்கு முன்பு, அதாவது சஜித்தை அவர் ஆதரித்த போது வடக்கிற்கு அநுர வந்து அவர் பேசிய பேச்சை தமிழ் ஊடகங்கள் தமிழர்களை அவர் அச்சுறுத்துகிறார் என்று கூறியபோது ரணிலும் அப்படி  கூறியபோது,    அப்படியல்ல தமிழர்களை எச்சரிக்கும்  தொனியில் அநுர பேசவில்லை என்று உடனடியாகவே தனது கருத்தை கூறியிருந்தார்.  இப்போது இந்த பழைய செய்தி  இணைக்கப்பட்ட காரணம்,  அநுர வெற்றி பெற்ற பின் அநுரவுக்கு  ஆதரவாக சுமந்திரன்  மாறிப்பேசுகிறார் என்று மடை மாற்ற. 

இங்குள்ள பலர் இந்தியாவின் கோமியம்ஸ் பருகுபவர்கள் மற்றும் பருக ஆயத்தமாக உள்ளவர்கள். அவர்களது ஒரே இலக்கு சுமந்திரனை எப்படியாவது அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். Based on his religious belief . அதை வெளிப்படையாகக் சொல்ல இவர்களுக்குப்  பயம். 

"இலங்கைத் தமிழர்களின் பிரதான  எதிரி புலம்பெயர்ஸ்" என்றாகி 15 வருடங்களாகிவிட்டன. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

“உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார்.

ம்...... அப்படியென்றால்; மற்றவர்கள் இனவாதத்தை வளர்ப்பவர்கள் என்று சொல்ல வந்தாரோ என்னவோ?அதில் இணைந்தால்; தானும் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தே அவர்களுக்கு வாக்களித்தாரோ? இதுதான் இவரது ராஜதந்திரம், தூர நோக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.