Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து ஓய்ந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல்வாதிகள் தமது நாடாளுமன்ற பதவிகளை பெற்றுக்கொள்ள மக்களிடம் வாக்குகளை கேட்கத் தயாராகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

புள்ளிவிபரங்கள்  

முன்னரை விட தற்போது மாறுபட்ட அரசியல் களம் உருவாகி உள்ளது. இலகுவாக மக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! | Sri Lanka Parliament Election 2024 Tamil Members

இந்நிலையில் எவ்வாறான பொய்களை கூறி தமது இருப்புக்களை தமிழ் அரசியல்வாதிகள் தக்க வைக்கப் போகின்றார்கள் என்பதே தற்போதுள்ள சவாலாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையிலான புள்ளிவிபரங்களை நோக்கும்பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என தாம் என ஏமாற்றித் திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியிருந்தனர்.

தமிழர் பகுதி 

இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் சஜித் முன்னிலை பெற்ற போதும் இரண்டாம் மூன்றாம் நிலையை எட்டியவர்களின் வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளமை தமிழரசு கட்சிக்கு பெரும் தோல்வியாக மாறியுள்ளது.

பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! | Sri Lanka Parliament Election 2024 Tamil Members

தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் சஜித் முன்னிலை பெற்ற போதும், தமிழரசு கட்சியிற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரம் வருமாறு,

யாழ். மாவட்டத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய பா.அரியநேத்திரன் 116688 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 84558 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 27086 பெற்றனர்.

வன்னி மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 52573 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36377 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 21412 வாக்குகளையும் பெற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 91132 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 38832 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36905 வாக்குகளையும் பெற்றனர்.

வாக்கு எண்ணிக்கைகள் 

திருகோணமலை மாவட்டத்தில் அநுரகுமார திசாநாயக்க 49886 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 40496 வாக்குகளையும், பா.அரியநேத்திரன் 18524 வாக்குகளையும் பெற்றனர்.

வடக்கு, கிழக்கில் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் தேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயற்படவில்லை. ஆனாலும் அதிகப்படியான அது வாக்குகளை பெற்றுள்ளது.

இனிவரும் காலங்களில் இது பல மடங்காக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியாக உள்ள அநுரகுமார திசாநாயக்க வெறும் நான்கு இலட்சம் வாக்குகளை பெற்றார்.

அவர்களின் அசாத்திய வளர்ச்சி காரணமாக ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 இலட்சம் வாக்குகளை பெறுக்கொள்ளும் நிலைமை மாறியுள்ளது. இதில் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்ற இளம் பாராயத்தினரும் அதிகளவில் அடங்கும்.

வடக்கு - கிழக்கு

இவ்வாறானதொரு மாற்றம் தமிழர்கள் மத்தியிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! | Sri Lanka Parliament Election 2024 Tamil Members

வடக்கு - கிழக்கு தமிழர்களின் நிலைமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவிக்கையில்,

எமது கட்சி, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சியம் இல்லாத ஒன்று. எனினும், ஜனாதிபதியின் அநுரகுமாரவின் அணுகுமுறைகள் தொடர்பில் அவர்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்படும். அடுத்து வரும் தேர்தல்களில் அதன் வெளிப்பாடு நேரடியாக தெரிய வரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் மத்தியில் தற்போது மெருகூட்டப்பட்ட புது இரத்தம் பாய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளைவேட்டி கட்டிய வயதான அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அவர்கள் செவிமடுப்பார்கள் என்பது சந்தேகம்.

அடுத்து வரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. இதற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன.

இழுபறிநிலை 

தமது சொந்த சுயநலத்திற்காக மக்களை ஈடு வைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் தமிழ் அரசியல்வாதிகளே தற்போது உள்ளனர்.

பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! | Sri Lanka Parliament Election 2024 Tamil Members

மக்கள் நலன்சார்ந்து எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பதில்லை. அதனையும் தாண்டி  தமது கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தமது தலைமை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பல வருடங்களாக இழுபறிநிலை தொடர்கிறது.

இந்நிலையில் இவ்வாறான அரசியல்வாதிகளை தொடர்ந்தும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

அதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை வாய்ப்பாக மக்கள் பயன்படுத்தி கொள்வர்.

தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்களை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் பணியினை பலர் முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞர் அணி

இதற்காக இளைஞர் அணியொன்றையும் உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! | Sri Lanka Parliament Election 2024 Tamil Members

இவ்வாறான அரசியல் மாற்றங்களை சுயநலத்திற்காக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் அடுத்த வரும் தேர்தல்களில் ஒற்றுமையில்லாத வயதான அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வழங்கி, மக்கள் நலன் சார்ந்து செயற்படும் இளைஞர்களை தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது.

அது சாத்தியமானால் தற்போது தமது சுயத்திற்காக மட்டுமே அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள் என்பது யதார்த்தம். அடுத்து வரும் தேர்தல் களம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

https://tamilwin.com/article/sri-lanka-parliament-election-2024-tamil-members-1727259397

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

இவ்வாறானதொரு நிலையில் அடுத்த வரும் தேர்தல்களில் ஒற்றுமையில்லாத வயதான அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வழங்கி, மக்கள் நலன் சார்ந்து செயற்படும் இளைஞர்களை தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது.

பலரும் வெளிப்படையாக எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இளையோரிடம் எந்தக் கட்டமைப்புகளும் இல்லை, புதிதாக கட்டமைக்க கால அவகாசமும் இல்லை.
மக்கள் ஒன்று செய்யலாம், முன்னர் பா.உ வாக இருப்போரைத் தவிர்த்து இதுவரை வெற்றிபெறாத புதிதாக கட்சிகளூடாக வருவோரைத் தெரிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

Posted

கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான்.  

நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும்.

இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர்.

தக்கண பிழைக்கும். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னர் ஒரு சர்தார்ஜி பகிடி சொல்வார்கள் - இன அடையாளங்களை நக்கல் செய்வது கண்டனத்திற்குரியது என்பதால், சர்தார்ஜியை நீக்கி விட்டு அந்தப் பகிடி இப்போது பல வடிவங்களில் உலவுகிறது.

ஒருவர் ஒரு கடையில் "பளபளப்பான தொலைக்காட்சிப்" பெட்டியைக் கண்டு, உடனே கடைக்காரரிடம் போய் "இந்த தொலைக்காட்சிப் பெட்டியை நான் வாங்க வெண்டும்" என்றிருக்கிறார். கடைக்காரர் முடியாது என்று விட்டார். வாங்க வந்தவருக்கு ஒரு வேளை "என் தோற்றம் காரணமாக கடைக்காரர் இதை விற்க மறுக்கிறாரோ?" என்ற சந்தேகம். மேலும் இரு முறைகள், வெவ்வேறு மாறு வேடங்களில் வந்து "இந்த தொலைக்காட்சிப் பெட்டியை" எனக்கு விற்பாயா என்று கேட்டிருக்கிறார். கடைக்காரரோ மறுத்து விட்டார். இறுதியில் வெறுத்துப் போய் "ஏன் நான் எந்த வேடத்தில் வந்தாலும் இப்படி விற்க மறுக்கிறாய்?" என்று கேட்ட போது தான் கடைக்காரர் சொன்னாராம்: "நீ எந்த வேடத்தில் வந்தாலும் நான் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை விற்க முடியாது, ஏனெனில் அது தொலைக்காட்சிப் பெட்டியல்ல, மைக்ரொவேவ் சூடாக்கி" .

ஊரில் என்ன நினைக்கிறார்கள் என்பது ஏராளனுக்குத் தெரிந்திருக்கும் - மறுக்கவில்லை.

ஆனால், மேலே தமிழ் வின்னின் படங்களைப் பார்க்கையில் "சுமந்திரனைத் தூக்க வேண்டும்" என்பதை மாறு வேடத்தில் வந்து கேட்கும் வழி தான் இந்த "இளைஞர்களை முன்னுக்கு விட வேண்டுமென்ற திடீர் அக்கறை".  மாறு வேடத்தைக் கூடச் சரியாகப் போடத் தெரியாமல் தள்ளாடுகிறது சுமந்திரன் எதிர்ப்பு ஊடகமான தமிழ்வின்😂!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான்.  

நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும்.

இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர்.

தக்கண பிழைக்கும். 

இதுவே எனது கருத்தும். விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்த பலமான காலத்தில் கூட தமிழீழம் என்பது சாத்தியமாக இருக்கவில்லை. அன்றைய யுத்தவெற்றிகளின் புளகாங்கிதத்தில் தமிழ் ஊடகங்களும் தமிழருக்குள்ளான பரப்புரைகளும் இவ்வாறான மாயைகளை, பிம்பங்களை  தமிழ் மக்களிடையே  மட்டும் உருவாக்கியிருந்த போதிலும்,  அனைத்துலக அரசியல் ராஜதந்திர மட்டத்தில்  அதற்கான சூழ்நிலையை நாம் அடையவில்லை.   இன்னும் சொல்லப்போனால் அதை நெருங்க கூட இல்லை. அதற்கான உலக அரசியல் வேலைத்திட்டங்களை தமிழர் தரப்பு செய்யவும் இல்லை. 

ஆனால், உலகத்தின்  உயர் அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஒரு கூட்டாட்சிக்கான சூழ்நிலையும் அதற்கு அழுத்தம் கொடுக்க கூடிய பலமும் தமிழர் தரப்புக்கு நிறையவே இருந்தது. வழமைபோல் அதீத எதிர்பார்பபிலும், தவறான அரசியல் வழிகாட்டுதலாலும்,  யுத்தம் தொடங்கினால் தமிழீழத்தை அடித்து பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்,   யுத்தமுனைப்பை உருவாக்கி அதை தேர்வு செய்தோம். ஏற்கனவே எதிரிக்கு யுத்தகளத்தில் பல  அவமானகரமான தோல்விகளை கொடுத்து எதிரியை  ஆக்ரோஷமன நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறோம் என்ற நிலையில் இந்த நேரத்தில் புலிகளுக்கு ஏற்படும் பாரிய தோல்வி அல்லது புலிகளின் அழிவு என்பது தமிழரின் அரசியலை அவர்களது அபிலாசைகளை கேவலமான சூன்ய நிலைக்கு இட்டு செல்லும் என்ற பொறுப்புணர்வு கூட அன்று அரசியல் தீர்மானங்களை எடுத்தவர்களுக்கு இருக்கவில்லை.  

அது போகட்டும் என்றால் 2009 ம் ஆண்டின் பின்னர் உருவான புதிய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு  தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் இணைந்து சாத்தியமான ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கி ஒரே குரலில் அனைத்துலக மட்டத்தில் ஒரு அழுத்தத்தை அன்று யுத்த வெற்றி திமிரில் ஆடிய ராஜபக்ச அரசுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் தமிழ்தரப்பு  இனஅழிப்பு  யுத்தக்குற்றங்களை  வைத்து தமிழீழம் அடையலாம் என்ற  மாய பிம்பங்களை கட்டியெழுப்பி பேதை தனமாக அதை நம்பி நாடுகடந்த தமிழீழம் போன்ற உருப்படியற்ற உதவாக்கரை  தில்லுமுல்லு வேலைகளிலேயே கவனம் செலுத்தினர். அதன் விளைவு இன்று தாயகத்தில் தமிழரின் இருப்புக்கே ஆபத்து என்ற நிலையில் வந்து நிற்கிறது.   ஒரு காலத்தில் தேசியத்துக்காக தமது உயிர், உடமை எல்லவற்றையும் இழக்க தயாராக இருந்த மக்கள்,  இன்று இவர்களை நம்பினால் அடுத்த தலைமுறையையும் காவு கொண்டுவிடுவார்கள் என்ற பட்டறிவின்  காரணமாக வந்த பயத்தினால்  தமது அன்றாட பிரச்னைகளை  தீர்ப்பவர்களுக்கு வாக்களித்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும்.

இது எற்கனவே தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

ஆனால், மேலே தமிழ் வின்னின் படங்களைப் பார்க்கையில் "சுமந்திரனைத் தூக்க வேண்டும்" என்பதை மாறு வேடத்தில் வந்து கேட்கும் வழி தான் இந்த "இளைஞர்களை முன்னுக்கு விட வேண்டுமென்ற திடீர் அக்கறை".  மாறு வேடத்தைக் கூடச் சரியாகப் போடத் தெரியாமல் தள்ளாடுகிறது சுமந்திரன் எதிர்ப்பு ஊடகமான தமிழ்வின்😂

இந்த இளைஞர்களை முன்னுக்கு விடவேண்டும் என்னும் போது சிரிப்பு தான் வருகிறது. 1979 இன் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இப்படிதான் இளைஞர்கள் வந்து விட்டார்கள் இனி கிழடுகள் வேண்டாம் ஓய்வெடுக்கட்டும் என்ற கோசங்கள் மொத்த தமிழினத்தையும் அன்றைய காலத்தில் ஆட்டுவித்திருந்தது.  ஆனால் அந்த இளைஞர்கள்  முன்னையை விட மோசமான பேரழிவுகளையே  தமிழினத்துக்கு தந்துவிட்டு சென்றனர்.  உலக அரசியலை விளங்கி கொள்ளாத அதற்கான முனைப்பை கூட காட்டாத இளையவர்கள் இருப்பதையும்  அழிப்பார்கள் என்பதற்கு தமிழினமே உதாரணம். பழைய கறள் கட்டிய கிழடுகளின் வெற்றுக் கோஷங்களை அப்படியே வரிக்கு வரி  உள்வாங்கி வெற்று வீரம் பேசும் பல முகநூல் இளையர்கள் தற்போது வலம் வருகிறார்கள். 

இளைஞர்கள் வரவேண்டும். அவர்கள் படித்த உலக அரசியல், சமூக  ஞானம் மிகுந்த,  துறைசார் திறமைகள் நிறைந்தவர்களாக  இருத்தலே இன்றைய நிலையில் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான்.  

நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும்.

இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர்.

தக்கண பிழைக்கும். 

சஜித்திற்கு போட்ட நண்பர் இப்ப திசைகாட்டிக்கு போடப்போறாராம்!
நானும் நல்லது தமிழர் சார்பாக புதிய இளைஞர்களுக்கு கட்சிகள் வாய்ப்பளித்தால் இளையோருக்கு போடுங்க, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காது பழைய ஆக்கள் வந்தால் உங்கள் விருப்பப்படியே போடுங்க என சொன்னேன்.

2 hours ago, Justin said:

ஆனால், மேலே தமிழ் வின்னின் படங்களைப் பார்க்கையில் "சுமந்திரனைத் தூக்க வேண்டும்" என்பதை மாறு வேடத்தில் வந்து கேட்கும் வழி தான் இந்த "இளைஞர்களை முன்னுக்கு விட வேண்டுமென்ற திடீர் அக்கறை".  மாறு வேடத்தைக் கூடச் சரியாகப் போடத் தெரியாமல் தள்ளாடுகிறது சுமந்திரன் எதிர்ப்பு ஊடகமான தமிழ்வின்😂!

அண்ணை ஆரம்ப காலங்களில் அவருடைய செயற்பாடுகள் பிடிக்கவில்லை தான்! இப்ப தெளிஞ்சிட்டுது! அவரவர் அவரவர் பணியை செய்கிறார்கள், மக்கள் பிடித்தால் வாக்களிப்பார்கள் இல்லையெனில் புறக்கணிப்பார்கள்.

10 minutes ago, island said:

இளைஞர்கள் வரவேண்டும். அவர்கள் படித்த உலக அரசியல், சமூக  ஞானம் மிகுந்த,  துறைசார் திறமைகள் நிறைந்தவர்களாக  இருத்தலே இன்றைய நிலையில் தேவை. 

மிகச் சரியான கருத்து அண்ணை. 24,800+ Number 100 Stock Illustrations, Royalty-Free Vector ...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, island said:

இளைஞர்கள் வரவேண்டும். அவர்கள் படித்த உலக அரசியல், சமூக  ஞானம் மிகுந்த,  துறைசார் திறமைகள் நிறைந்தவர்களாக  இருத்தலே இன்றைய நிலையில் தேவை. 

இந்தக் கருத்தை எனது முகநூலில் பகிரலாமா அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

இந்தக் கருத்தை எனது முகநூலில் பகிரலாமா அண்ணை?

நிச்சயமாக பகிரலாம் ஏராளன்.  யாழ் இணையத்தில் நான் எழுதும் எந்த கருத்துக்கும் நான் காப்புரிமை பெறவில்லை. (பகிடி) 😂

கருத்துக்கள் சுதந்திரமானவை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, ஈழப்பிரியன் said:

இது எற்கனவே தொடங்கிவிட்டது.

அது தெரியும். இப்ப பல மடங்கு வீரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, சுவைப்பிரியன் said:

அது தெரியும். இப்ப பல மடங்கு வீரியமாக உள்ளது.

உங்கட வாக்கும் பதிஞ்சாச்சோ?

50 minutes ago, ஏராளன் said:

அண்ணை ஆரம்ப காலங்களில் அவருடைய செயற்பாடுகள் பிடிக்கவில்லை தான்! இப்ப தெளிஞ்சிட்டுது! அவரவர் அவரவர் பணியை செய்கிறார்கள், மக்கள் பிடித்தால் வாக்களிப்பார்கள் இல்லையெனில் புறக்கணிப்பார்கள்.

நடந்து முடிந்த தேர்தல் பலரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அடுத்த தேர்தலில் அது இன்னும் வீரியமடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

461250290-555749080296737-74128857406715

460990467-555749043630074-50562517390152

461251147-555748990296746-44551285799223

தங்களுக்கு குடை பிடிக்க  கூட  ஒராளை வைத்திருக்கும் திருட்டு கழுதைகள் இவர்களா தமிழருக்கு தீர்வை பெற்று தரபோகிரார்கள் ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

இந்த இளைஞர்களை முன்னுக்கு விடவேண்டும் என்னும் போது சிரிப்பு தான் வருகிறது. 1979 இன் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இப்படிதான் இளைஞர்கள் வந்து விட்டார்கள் இனி கிழடுகள் வேண்டாம் ஓய்வெடுக்கட்டும் என்ற கோசங்கள் மொத்த தமிழினத்தையும் அன்றைய காலத்தில் ஆட்டுவித்திருந்தது.  ஆனால் அந்த இளைஞர்கள்  முன்னையை விட மோசமான பேரழிவுகளையே  தமிழினத்துக்கு தந்துவிட்டு சென்றனர்.  

இளைஞர்கள் வரவேண்டும். அவர்கள் படித்த உலக அரசியல், சமூக  ஞானம் மிகுந்த,  துறைசார் திறமைகள் நிறைந்தவர்களாக  இருத்தலே இன்றைய நிலையில் தேவை. 

நீங்கள் கூறும் ஒரு சில விடயங்களில் 100 வீதம் உடன்பட்டாலும் ...சில விடயங்கள் ஏற்று கொள்ளமுடியவில்லை 
72 ஆம் ஆண்டு ஆயுதங்க்ளுடன் பொங்கி எழுந்து இரண்டு ஆயுதப்புரட்சிகளை செய்து  , பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் தியாகத்தில் வந்த கட்சியின் உறுப்பினர் தான் தற்பொழுதை ஜனாதிபதி...72 ஆண்டு புரட்சியின் பொழுது இவருக்கு 3 வயது...சிங்கள மக்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை ...மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர் வரவேற்கப்பட வேண்டியது ....

ரோகண விஜவீராவும்,அவரது இயக்கமும் பேர் அழிவுகளை விட்டு சென்ற ஒன்று தான்...ஜெ.வி.பி இந்த தடவை சிவப்பு தொப்பி,சிவப்பு சேர்ட் போடாமல் தங்களது அரிவாள் சின்னத்தையும் பாவிக்காமல் புரொக்சி கட்சியாக வெற்றி பெற்றுள்ளனர்....
ஒன்று மட்டும் நிச்சயம் ஜெ.வி.பி அரசாங்கத்துக்கு  எதிராக குழப்பம் விளைவிக்க எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிகளும் இல்லை மக்களை ஒன்று கூட்டி அரகலய நடத்தவும் முடியாது ... 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கவனியுங்கள்.  ஜேவிபி போர் அழிவுளை விட்டு சென்றதாலோ பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின்  தியாகத்தினாலோ மட்டும் அநுர ஜனாதிபதியாக தெரிவாகவில்லை.   சிங்கள மக்களும் அதற்காக வாக்களிக்கவில்லை. 

போர் அழிவுகளுக்கு  பின்னர் அவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சியாக ஜனநாயக பாதையில் மிக  நீண்ட காலம் வேலை செய்தார்கள். பல படித்த இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்கினார்கள்.  அவர்களுடன் பல கலந்துரையாடல்களை செய்து தமக்குள் உள்ள முரண்பாடுகளை கருத்தியல் ரீதியில் அணுகி  கட்சியை கிட்டத்தட்ட  மக்கள் பணிக்கு தயாராக உள்ள  கல்வியாளர்கள் குழுவாக மாற்றினார்கள்.  இறந்த தமது போராளிகளை மதித்தாலும் அவர்களின் தியாகத்தை வைத்து அவர்களின் பெருமைகளை மட்டும் பேசி கட்சி நடத்தவில்லை. ஜேவிபின்  தவறுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக தாம் ஆயுதப்போரட்ட காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டார்கள்.  

அத்துடன் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசினார்களேயொழிய இறந்த போரளிகளை பற்றி தினமும் பேசவில்லை. முக்கியமாக    ஆயுத போராட்ட காலத்தில் தாம் செய்த தவறுகளை நியாயப்படுத்தவில்லை

இவர்களை தமிழர் அரசியலுடன் பொருத்தி பாருங்கள்.  தம்மை காலத்துக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் வெறும் கோஷங்களையும் கருத்து முர்ணபாடு வரும்போது அவர்களை துரோகிகள் என்று திட்டுவது பொய்களை புனைந்து வசைமாரி பொழிவது ஆயுத போராட்டதில் போராளிகள் செய்த தவறுகளை இன்றும் நியாயப்படுத்துவது  முதலியவற்றுடன்  இறந்த போராளிகளை வைத்து அரசியல் செய்வதையுமே இன்றும்  தாயக/ புலம் பெயர் அரசியலளர்கள் செய்கின்றனர். இவர்களின் அரசியல்  சுயநல அரசியல் பிழைப்புக்காக    தமது  இறந்த தலைவரை கூட   இவர்கள் விட்டுவைக்கவில்லை. 

இந்நிலையில் இரண்டையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, island said:

நீங்கள் சொன்னபடியே உங்கள் கருத்துகள்படி  தமிழர்கள் நடந்து கொண்டால்   ஐனதிபதி பதவி கிடைக்குமா  ??  நாட்டை ஆள முடியுமா?? நாங்கள் சிறுபான்மையினர்  ஆட்சி செய்ய விரும்புவது  முழு நாட்டையும் இல்லை.   அது கிடையாது   அனுர மாதிரி நடந்து என்ன பெற முடியும் ??? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொன்னபடியே உங்கள் கருத்துகள்படி  தமிழர்கள் நடந்து கொண்டால்   ஐனதிபதி பதவி கிடைக்குமா  ??  நாட்டை ஆள முடியுமா?? நாங்கள் சிறுபான்மையினர்  ஆட்சி செய்ய விரும்புவது  முழு நாட்டையும் இல்லை.   அது கிடையாது   அனுர மாதிரி நடந்து என்ன பெற முடியும் ??? 🙏

ஒரு விடயம் எதற்காக எழுதப்பட்டது, எந்த கேள்விக்கு பதிலாக எழுதப்பட்டது போன்ற விடயங்களை வாசித்து விளங்க முயற்சிக்க வேண்டும்.  புரிதல் கடினமாக இருந்தால்  அதனை திரும்ப திரும்ப   வாசிக்க வேண்டும்.  அப்போதும் புரியவில்லை என்றால்…… no comment. That my attitude . 

  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, island said:

இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கவனியுங்கள்.  ஜேவிபி போர் அழிவுளை விட்டு சென்றதாலோ பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின்  தியாகத்தினாலோ மட்டும் அநுர ஜனாதிபதியாக தெரிவாகவில்லை.   சிங்கள மக்களும் அதற்காக வாக்களிக்கவில்லை. 

போர் அழிவுகளுக்கு  பின்னர் அவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சியாக ஜனநாயக பாதையில் மிக  நீண்ட காலம் வேலை செய்தார்கள். பல படித்த இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்கினார்கள்.  அவர்களுடன் பல கலந்துரையாடல்களை செய்து தமக்குள் உள்ள முரண்பாடுகளை கருத்தியல் ரீதியில் அணுகி  கட்சியை கிட்டத்தட்ட  மக்கள் பணிக்கு தயாராக உள்ள  கல்வியாளர்கள் குழுவாக மாற்றினார்கள்.  இறந்த தமது போராளிகளை மதித்தாலும் அவர்களின் தியாகத்தை வைத்து அவர்களின் பெருமைகளை மட்டும் பேசி கட்சி நடத்தவில்லை. ஜேவிபின்  தவறுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக தாம் ஆயுதப்போரட்ட காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டார்கள்.  

அத்துடன் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசினார்களேயொழிய இறந்த போரளிகளை பற்றி தினமும் பேசவில்லை. முக்கியமாக    ஆயுத போராட்ட காலத்தில் தாம் செய்த தவறுகளை நியாயப்படுத்தவில்லை

இவர்களை தமிழர் அரசியலுடன் பொருத்தி பாருங்கள்.  தம்மை காலத்துக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் வெறும் கோஷங்களையும் கருத்து முர்ணபாடு வரும்போது அவர்களை துரோகிகள் என்று திட்டுவது பொய்களை புனைந்து வசைமாரி பொழிவது ஆயுத போராட்டதில் போராளிகள் செய்த தவறுகளை இன்றும் நியாயப்படுத்துவது  முதலியவற்றுடன்  இறந்த போராளிகளை வைத்து அரசியல் செய்வதையுமே இன்றும்  தாயக/ புலம் பெயர் அரசியலளர்கள் செய்கின்றனர். இவர்களின் அரசியல்  சுயநல அரசியல் பிழைப்புக்காக    தமது  இறந்த தலைவரை கூட   இவர்கள் விட்டுவைக்கவில்லை. 

இந்நிலையில் இரண்டையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்? 

3 minutes ago, island said:

போர் அழிவுகளுக்கு  பின்னர் அவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சியாக ஜனநாயக பாதையில் மிக  நீண்ட காலம் வேலை செய்தார்கள்.

இரண்டும பேரழிவை ஏற்படுத்திய ஆயுத போராட்டம் ... 
மீண்டும் சொல்லுகிறேன் ஒரு விடயத்தை ...இவர்களது கட்சி ஆயுத புரட்சி செய்யும் பொழுது இவருக்கு 3 வயது ....அதாவது 52 வருடங்கள் சென்றிருக்கின்றது ....ஆகவே எமது ஆயுதப்போராட்டத்தின் பலன்கள் இன்னும் பல வருடங்கள் சென்ற பின்பு கிடைக்கலாம்....கால அவகாசம் முக்கியம்...

எமது போராட்டம் உரிமைபோர்...இவர்கள் போராட்டம் சித்தாந்த போராட்டம் ...இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு ஆனால் ஆயுத போராட்டம் என்பது ஒற்றுமை தான் .....அதே நேரம் அழிவு பாதைக்கும் இட்டு சென்றது...

படித்த இளைஞர்களை உள்வாங்கினார்கள் உண்மை ....அதற்காக பல்கலைகழகங்களில் 4 வருடங்களில் முடிவடைய வேண்டிய பல கற்கை நெறிகளை ஆறு,ஏழு வருடங்களுக்கு பின் போட்ட பெருமை இந்த கட்சியினருக்கு உண்டு...
பழமைவாத சோசலிச சித்தாந்தம் வெற்றியடைந்திருக்கு என சொல்லாம் ...நேற்று ஒர் புகைப்படம் பார்த்தேன் சீன தூதரகத்தில் மைத்திரி ,மகிந்தா போன்றவர்களுடன் விஜிதாஹேரத் கைலாகு கொடுக்கின்றார் ....அதை பார்த்தவுடன் எனக்கு ஒர் பழைய ஞாபகம் வந்தது பாடசாலையில் இரண்டு 
பேர் சண்டை பிடித்தால் ஆசிரியர் வந்து விசாரணை செய்து விட்டு இரண்டு பேரும் கை கொடுங்கோ ...ஒடுங்கோடா ஒடிப்போய் விளையாடுங்கோடா என விரட்டி விடுவார்...அதே போலத்தான் என இதுவும் ...
முதலாளித்துவ சோசலிசவாதிகள் ,பழமைவாத சோசலிசவாதிகள் ,சீனா சார்பு சோசலிசவாதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் ....மீண்டும் காலம் பதில் சொல்லட்டும்..

இந்தியாவுக்கு இந்த தேர்தலிலும்  பலத்த அடி ...1972 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா அடிமேல் அடிமேல் வாங்கி கொண்டேயிருக்கின்றது ...இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் பாடம் படிக்கவில்லை...

1972 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் இவர்களின் ஆயுத புரட்சியை தோல்வியடைய பண்ணினார்கள்...சிறிமா அடுத்து வந்த ஆண்டுகளில் சீனாவுக்கு சர்வதேச விமான நிலையத்தை கட்டியெழுப்பவும்,பண்டாரநாயக்கா ஞாபகாரத்த  மண்டபத்தை கட்டவும் அனுமதி கொடுத்தார்....
இவர்களும் கோசங்களை எழுப்பியவர்கள் தான் சோசலிச கோசம் இன்று அதை தான் செய்கிறார்கள் 

சிறிமா,மகிந்தா,மைத்திரி வரிசையில் அனுராவும் செல்வாரா?சீனாவின் கைபொம்மை மாதிரி என்ற கேள்வி எனக்கு இருக்கின்றது ....பணவசதிகள் இல்லாமல்  துணிந்து  பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ...சீனா கை கொடுக்குமா?

காட்சி ஒன்று தான் ...நடிகர்கள் மாறியிருக்கின்றனர்..பொதுத்தேர்தலை குறிவைத்து காய்களை நகர்த்துகின்றார் இந்த வருடத்தினுள் ஒர் நிலையான மகிழ்ச்சிகரமான ஆட்சி சிறிலங்காவில மலர்ந்தால் சிறப்பு ..அதே மண்ணில் தமிழ் தேசியமும் தொடர்ந்தால் இரட்டிப்பு ...சோசலிச கோசத்துடன் ...தமிழ் தேசிய கோசமும் ஒலிக்கட்டும்😅
 
48 minutes ago, island said:

 இறந்த தமது போராளிகளை மதித்தாலும் அவர்களின் தியாகத்தை வைத்து அவர்களின் பெருமைகளை மட்டும் பேசி கட்சி நடத்தவில்லை. ஜேவிபின்  தவறுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக தாம் ஆயுதப்போரட்ட காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டார்கள்.  

திருத்தி கொண்டார்கள் என்பதை விட சீனா பக்கம் நிற்க வேணும் என்ற பூலோக அரசியலை முன்கூட்டியே அறிந்து வைத்து உள்ளனர்...1972 இலிருந்து சிறிமா காலத்திலிருந்து ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, island said:

ஜேவிபின்  தவறுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக தாம் ஆயுதப்போரட்ட காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டார்கள்.  

இரண்டு தடவைகள் ஆயுத புரட்சி செய்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது...ஆயுதமேந்திய சோசலிச தலைவர் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த கூடாது என்பதை அறிந்து முதாலாளித்து சக்திகள் அவரை ஒழித்துகட்டினார்கள்....ஒரு காலத்தில் சோசலிச புரட்சியை ஏற்படுத்த ஆயுத குழுக்களை உருவாஅகி அதுனுடாக அந்த நாட்டில் கால்பதித்த உலக சோசலிச்வாதிகள் இப்பொழுது பணத்தை வாரி வழ்ங்கி ஆட்சியை கைப்பற்றி உள் நுழைகின்றனர் ...
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

ஒரு விடயம் எதற்காக எழுதப்பட்டது, எந்த கேள்விக்கு பதிலாக எழுதப்பட்டது போன்ற விடயங்களை வாசித்து விளங்க முயற்சிக்க வேண்டும்.  புரிதல் கடினமாக இருந்தால்  அதனை திரும்ப திரும்ப   வாசிக்க வேண்டும்.  அப்போதும் புரியவில்லை என்றால்…… no comment. That my attitude . 

எனது கேள்விகளுக்கு இது பதில்கள்   அளிக்கப்படவில்லை 

அன்று தொட்டு இன்றுவரை சிங்களவன். தான் இலங்கையை ஆள்கிறார்கள். என்றும் அவர்கள் தான் ஆள்வார்கள் 

இது ஒன்றும் புதுசு இல்லை   தமிழர்கள் 

எப்படி கட்சியை கட்டி எழுப்பினாலும்

படித்தவர்களை உள் வாங்கினாலும் 

குறைகளை நிவர்த்தி செய்தாலும்

இறந்துபோன போராளிகள் பற்றி பேசமால் விட்டாலும் 

எவரையும் துரோகிகள் என்று பட்டம் கட்டமால் விட்டாலும் 

இலங்கையை ஆண்டு விடமுடியாது  ஏனெனில் நாங்கள் சிறுபான்மையினர் 

தமிழ் ஈழத்தை நிறுவ /அமைக்க முடியாது  

அனுர இலங்கை என்ற நாட்டை உருவாக்க /அமைக்க இல்லை ஏற்கனவே இருந்த இலங்கையின் ஆட்சியை பிடித்து உள்ளார்  

ஐக்கிய தேசிய கட்சி ஆண்டது 

இலங்கை சுதந்திர கட்சி ஆண்டது 

ஜே வி பி இப்போது ஆள்கிறது   

போராடி நாட்டை உருவாக்கவில்லை 

ஒரு சிங்கள கட்சி நாட்டை ஆளும் வாய்ப்புகள் கொண்டு உள்ளது  

தமிழ் கட்சிகள் நாட்டை ஆளும் வாய்ப்புகள் 100 % அற்றவை 

தமிழ் ஈழம் என்ற நாடு இல்லை  அதை தமிழ் கட்சிகள் உருவாக்க முடியாது   

தமிழ் ஈழத்தை உருவாக்க தான் நாங்கள் போராடினோம் 

ஜேவிபி இலங்கையை உருவாக்க போராடவில்லை    ஆட்சி செய்யத் தான் போராடியது 

அவர்களிடம் கிட்டத்திட்ட 150 லட்சத்துக்கு மேலும் வாக்காளர்கள் இருந்தார்கள்  எனவேதான் ஆட்சி அமைத்தார்கள். 

தமிழர்கள் தமிழ் ஈழத்தை உருவாக்க போராடியதையும்.  இருந்த இலங்கை என்கிற நாட்டின் ஆட்சியை பிடிக்க ஜேவிபி போரடியதையும்   எப்படி ஒப்பிட முடியும்?????????

🙏

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.