Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் 

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில்,

VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும்.

மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/srilanka-new-passport-system-president-order-1727363241

  • கருத்துக்கள உறவுகள்

முந்தைய அரசின் வெறுப்புக்கு…. விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதமும். அதனை இந்திய நிறுவனத்துக்கு கொடுத்ததையும் சிங்கள மக்கள் ரசிக்கவில்லை. ஓரிரு முறை கட்டுநாயக்கா  விமான நிலையத்தில் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று குடிவரவு குடியகல்வு அதிகாரியை நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் சிறையில் போட்டது. உடனேயே வழிக்கு வந்துவிட்டார்கள்..............

விசா வழங்கும் புதிய முறையிலிருந்து பழைய முறைக்கு போக ஆறு மாதங்கள் எடுக்கும் என்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஒரே இரவில் பழைய முறைக்கு  போய் விட்டார்களே........... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

முந்தைய அரசின் வெறுப்புக்கு…. விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதமும். அதனை இந்திய நிறுவனத்துக்கு கொடுத்ததையும் சிங்கள மக்கள் ரசிக்கவில்லை. ஓரிரு முறை கட்டுநாயக்கா  விமான நிலையத்தில் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.

இதற்குள் எத்தனையோ கோடி கைமாறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

தலையை பிடித்துள்ளார்கள்.இனி யார் யார் உள்ளுக்கோ?

ஆனாலும் செய்த ஒப்பந்தத்தை எப்படி முறிப்பார்கள் என்று தெரியவில்லை.

1 minute ago, ரசோதரன் said:

நேற்று குடிவரவு குடியகல்வு அதிகாரியை நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் சிறையில் போட்டது. உடனேயே வழிக்கு வந்துவிட்டார்கள்..............

விசா வழங்கும் புதிய முறையிலிருந்து பழைய முறைக்கு போக ஆறு மாதங்கள் எடுக்கும் என்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஒரே இரவில் பழைய முறைக்கு  போய் விட்டார்களே........... 

நீங்கள் போகும்போது நிலமை எப்படி இருந்தது?

அண்மையில் எனது குடும்ப நண்பரொருவர் போனார்.

கேட்டதற்கு ஒரு மைல்வரை நிற்கவேண்டி வந்ததாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்குள் எத்தனையோ கோடி கைமாறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

தலையை பிடித்துள்ளார்கள்.இனி யார் யார் உள்ளுக்கோ?

ஆனாலும் செய்த ஒப்பந்தத்தை எப்படி முறிப்பார்கள் என்று தெரியவில்லை.

நீங்கள் போகும்போது நிலமை எப்படி இருந்தது?

அண்மையில் எனது குடும்ப நண்பரொருவர் போனார்.

கேட்டதற்கு ஒரு மைல்வரை நிற்கவேண்டி வந்ததாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.

நான் போன நேரத்தில் இந்த மாற்றம் வரவில்லை, அண்ணை. அதன் பின்னரே வந்தது.

ஒவ்வொரு விசாவிலும் 25 டாலர்கள் என்ற கணக்கில் விஎஃப்எஸ் நிறுவனைத்திற்கு போய்க் கொண்டிருந்தது. வருடத்திற்கு இரண்டு மில்லியன் பயணிகள் என்று எடுத்துக் கொண்டால், 50 மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு......🫢.

அந்த நிறுவனத்தை ஏற்கனவே வெளியேற்றிவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்குள் எத்தனையோ கோடி கைமாறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

தலையை பிடித்துள்ளார்கள்.இனி யார் யார் உள்ளுக்கோ?

ஆனாலும் செய்த ஒப்பந்தத்தை எப்படி முறிப்பார்கள் என்று தெரியவில்லை.

சுகாதார அமைச்சில் நடந்த ஊழலுக்கும்,  செய்த குற்றத்துக்கும்… உடனேயே தண்டனை அனுபவித்தது கெஹலிய ரம்புக்வெலதான். ஆனால் ஜனாதிபதி தேர்தல் தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு பிணையில் விட்டு விட்டார்கள்.

மற்றவர்களுக்கும்… தேடித்தேடி தண்டனை கொடுக்க வேண்டும்.
ஓருத்தனையும் தப்ப விடக் கூடாது. கடினமான பணி என்றாலும்.. இனி,  மற்றவர்கள்… ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காமல் இருக்க இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்.இந்த அனுரா நித்திரை கொள்ள மாட்டாரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

எனக்கொரு சந்தேகம்.இந்த அனுரா நித்திரை கொள்ள மாட்டாரா.

இவரும் ஒரு போராளி தானே.

எமது போராளிகள் எத்தனை எத்தனை இரவு பகலாக சண்டை பிடித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் செய்த ஒப்பந்தத்தை எப்படி முறிப்பார்கள் என்று தெரியவில்லை.

ஒப்பந்தம் செய்த நிறுவனம் எதிர்த்து இருக்கிறதா??   

விசா தாமதம் 

ஊழல்கள்     ஒப்பத்தை மீறிய செயல்கள் எனில். முறிக்கலாம் 

என்று நினைக்கிறேன்       இது பிழையான. பதிலாகவுமிருக்கலாம். 

எனவே   உங்கள் கேள்விகளை  எல்லோரிடமும்  கேளுங்கள்  🙏😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

ஒப்பந்தம் செய்த நிறுவனம் எதிர்த்து இருக்கிறதா??   

விசா தாமதம் 

ஊழல்கள்     ஒப்பத்தை மீறிய செயல்கள் எனில். முறிக்கலாம் 

என்று நினைக்கிறேன்       இது பிழையான. பதிலாகவுமிருக்கலாம். 

எனவே   உங்கள் கேள்விகளை  எல்லோரிடமும்  கேளுங்கள்  🙏😂🤣

இது அவர்களால் ஏற்பட்ட தாமதம் அல்ல.

ஒரு ஒப்பந்தம் செய்து ஒரு தரப்பால் முறிக்கப்பட்டால் அதற்கு நஸ்டஈடு வழங்க வேண்டும்.

அவர்களும் பல கோடிகளை முதலீடு செய்து தான் ஒப்பந்தத்தை எடுத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நேற்று குடிவரவு குடியகல்வு அதிகாரியை நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் சிறையில் போட்டது. உடனேயே வழிக்கு வந்துவிட்டார்கள்..............

விசா வழங்கும் புதிய முறையிலிருந்து பழைய முறைக்கு போக ஆறு மாதங்கள் எடுக்கும் என்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஒரே இரவில் பழைய முறைக்கு  போய் விட்டார்களே........... 

புதிய நிறுவனம் இவர்களையும் கவனித்திருக்கும். ஆண்டுக்கு 50மில்லியனென்றால் சும்மாவா? பீயோனில் இருந்து பிரதம செயலாளர்வரை எவளவு கைமாறியிருக்கும். அன்னியச் செலாவணியைக்கொண்டுவரும் ஒரு திணைக்களமே இப்படியென்றால், மற்றவை... நான் நினைக்கவில்லை. புதிய அரசுத்தலைவருக்கு இதற்கே ஒப்புதல் அளிப்பதிலே நேரம்போனால், எப்படி இனமுரண்பாடு, பொருண்மியம், அபிவிருத்தி என்று செல்லமுடியும்.   
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய முறை சிறப்பாகவே இருந்தது , கேள்விகளும் குறைவு, காசும் குறைவு, விசாவும் உடனே வந்து விடும். இந்த புதிய முறையில் நான் சில மாதங்களுக்கு முன் எடுக்கவேண்டி வந்தது. இந்த website சரியாகவே இயங்கவில்லை, நிறைய கேள்விகள், 50 டாலர்கள் கட்டவேண்டி வந்தது. நான் நினைக்கிறேன் , இந்தியாவிடம் வாங்கிய கடன் காசுக்கு, இந்த நிறுவனத்துக்கு கொடுக்க அங்கிருந்து உத்தரவு வந்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/1521571824/videos/1940394226458936

சுமந்திரனின் செவ்வி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

கேட்டதற்கு ஒரு மைல்வரை நிற்கவேண்டி வந்ததாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.

இந்திய நிறுவனங்களுக்கு மக்களை வரிசையில் விடுவது கை வந்த கலை ...இப்படி வரிசையில் நின்றால் தான் லஞ்சம் வாங்கலாம்..

கோவிலில்சாமி தரிசனத்திற்கே லஞ்சம் வாங்கி முன்னுக்கு அழைத்து சென்று பழக்கப்பட்ட வல்லாத்திக்க நாயகர்கள்...

1 hour ago, நீர்வேலியான் said:

பழைய முறை சிறப்பாகவே இருந்தது , கேள்விகளும் குறைவு, காசும் குறைவு, விசாவும் உடனே வந்து விடும். இந்த புதிய முறையில் நான் சில மாதங்களுக்கு முன் எடுக்கவேண்டி வந்தது. இந்த website சரியாகவே இயங்கவில்லை, நிறைய கேள்விகள், 50 டாலர்கள் கட்டவேண்டி வந்தது. நான் நினைக்கிறேன் , இந்தியாவிடம் வாங்கிய கடன் காசுக்கு, இந்த நிறுவனத்துக்கு கொடுக்க அங்கிருந்து உத்தரவு வந்திருக்கும்

இ..ருக்கும் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

 புதிய அரசுத்தலைவருக்கு இதற்கே ஒப்புதல் அளிப்பதிலே நேரம்போனால், எப்படி இனமுரண்பாடு, பொருண்மியம், அபிவிருத்தி என்று செல்லமுடியும்.   
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

நிச்சயமாகம் இவர் முதல்வன் படம் பார்த்திருக்க மாட்டார் என நம்புவோம்..
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு  தேவையானவற்றை செய்கின்றார் ..."இனமுரன்பாடு" அவரின்  அஜன்டாவில் இருக்கோ தெரியவில்லை..இலங்கையர் எண்ட கொள்கையை துக்கி பிடிச்சு கொண்டு அரசியல் செய்யலாம்

3 hours ago, ஈழப்பிரியன் said:

இவரும் ஒரு போராளி தானே.

எமது போராளிகள் எத்தனை எத்தனை இரவு பகலாக சண்டை பிடித்தார்கள்.

அவற்றை எல்லாம் இப்ப யார் கணக்கில் எடுக்கினம்...
இவர் போராட்ட கட்சியிலிருந்து வந்தவர் ஆனால் ஆயுத பயிற்சி பெற்றவரா என்பது கேள்விகுறி...ஜனநாயக
போராளி ..என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி வெளிநாட்டுகாரருக்கு விசா எடுக்க காசில்லை எண்டது என்ன மாதிரி? 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இனி வெளிநாட்டுகாரருக்கு விசா எடுக்க காசில்லை எண்டது என்ன மாதிரி? 

நீங்கள் இலங்கையார். தானே??     எனவே… காசு இல்லை   அடிக்கடி போய் வாருங்கள்…  இல்லை என்றால் உறவினர்கள் நண்பர்கள்  காணியை. சுருட்டப் பார்ப்பார்கள் 🙏😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நிச்சயமாகம் இவர் முதல்வன் படம் பார்த்திருக்க மாட்டார் என நம்புவோம்..

எனக்கும் முதல்வன் படம் என்று ஒரு படம் இருப்பது இப்போது தான் தெரியவந்தது. யாழ்பாணத்து தவகரன் என்பவரின் வீடியோ ஒன்றை  பார் என்று நண்பர்கள் அனுப்பி இருந்தனர். அதில்  இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி அவரும் இலங்கை புதிய ஜனாதிபதியை புகழ்ந்துதள்ளிவிட்டு பின்பு  தமிழ்நாட்டு தமிழர்கள் தங்களுக்கும் Anra Kumaradissanayake  மாதிரி தலைவர் வேண்டும் என்று தமது ஆசையை தனக்கு தெரிவிப்பதாகவும் முதல்வன் படம் மாதிரி எங்கள் ஜனாதிபதி அனுரா அதிரடியாக செய்கின்றார்  என்றும் சொல்லியிருந்தார்.தமிழ்நாட்டில்  ஹிந்தியுடன் இனி சிங்களமும் கற்பிக்க தொடங்கலாம்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

புதிய நிறுவனம் இவர்களையும் கவனித்திருக்கும். ஆண்டுக்கு 50மில்லியனென்றால் சும்மாவா? பீயோனில் இருந்து பிரதம செயலாளர்வரை எவளவு கைமாறியிருக்கும். அன்னியச் செலாவணியைக்கொண்டுவரும் ஒரு திணைக்களமே இப்படியென்றால், மற்றவை... நான் நினைக்கவில்லை. புதிய அரசுத்தலைவருக்கு இதற்கே ஒப்புதல் அளிப்பதிலே நேரம்போனால், எப்படி இனமுரண்பாடு, பொருண்மியம், அபிவிருத்தி என்று செல்லமுடியும்.   
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

Tiran Alles தான் இதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் மற்றும் இறுதிவரை அந்த குளோபல் நிறுவனத்திற்காகப் போராடியவர். 10 மில்லியன் டாலர்கள் லஞ்சம் என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, வாங்கியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகின்றேன் என்றார்.

எல்லா நாடுகளிலும் இப்படியான அரசியல்வாதிகள்  இந்த ஒரு வசனத்தை மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.........

பின்னர் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட பின்னும், பழைய நடமுறைக்கு போகாமல், ஆறு மாதங்கள் வேண்டும் என்று இவரே இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இவரின் கீழ் இருந்த ஆணையாளர் முந்தாநாள் சிறைக்கு போனார். பழைய நடைமுறையில் விசா வழங்கும் முறை உடனேயே மீண்டும் வந்துவிட்டது........

ரஜனியின் 'சிவாஜி' படத்தில் 'ஆபீஸுக்கு வாருங்கள்.........'  என்று ஒரு காமடி இருக்கிறது தானே........

Tiran Alles அவுஸ்திரேலியா குடியுரிமை உள்ளவர் என்று எங்கோ வாசித்த ஞாபகம். ஓடி விட்டாரா என்று தெரியவில்லை. இவர் முன்னொரு காலத்தில் ஜேவிபி ஆதரவாளராக இருந்தவர். விமல் வீரவன்ச போல அவர்களில் ஒருவராக இருக்கவில்லை, ஆனால் அவர் போன்றவரே இவரும் போல.........  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கும் முதல்வன் படம் என்று ஒரு படம் இருப்பது இப்போது தான் தெரியவந்தது. யாழ்பாணத்து தவகரன் என்பவரின் வீடியோ ஒன்றை  பார் என்று நண்பர்கள் அனுப்பி இருந்தனர். அதில்  இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி அவரும் இலங்கை புதிய ஜனாதிபதியை புகழ்ந்துதள்ளிவிட்டு பின்பு  தமிழ்நாட்டு தமிழர்கள் தங்களுக்கும் Anra Kumaradissanayake  மாதிரி தலைவர் வேண்டும் என்று தமது ஆசையை தனக்கு தெரிவிப்பதாகவும் முதல்வன் படம் மாதிரி எங்கள் ஜனாதிபதி அனுரா அதிரடியாக செய்கின்றார்  என்றும் சொல்லியிருந்தார்.தமிழ்நாட்டில்  ஹிந்தியுடன் இனி சிங்களமும் கற்பிக்க தொடங்கலாம்

பொதுத்தேர்தலை இந்த வருடத்தினுள் வைக்க துணிந்த படியால் இவருக்கு பணம் எங்கே இருந்து வருகின்றது என்ற கேள்வி எழுகின்றது ...சிங்கள் டயஸ்போராக்கள் கொடுப்பினமோ 😆

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

பொதுத்தேர்தலை இந்த வருடத்தினுள் வைக்க துணிந்த படியால் இவருக்கு பணம் எங்கே இருந்து வருகின்றது என்ற கேள்வி எழுகின்றது ...சிங்கள் டயஸ்போராக்கள் கொடுப்பினமோ 😆

🤣...........

அவ்வளவு பெரிய பொதுநலவாதிகள் வெளிநாடுகளில் இருப்பது போல தெரியவில்லை........

ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்த்லுக்கு 11 பில்லியன் ரூபாய்கள் தேவை என்று தேர்தல் ஆணையாளர் கேட்டிருக்கின்றார். இரண்டு தேர்த்லுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு. பெரிய செலவு தான்............

இது மக்களின் பணம் தான். ரணில் தான் இருப்பில் ஐந்து பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக விட்டுச் செல்கின்றேன் என்று அவரது கடைசிப் பேச்சில் சொல்லியிருந்தார்........... அங்கேயிருந்து தான் எடுப்பார்கள் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.