Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194947

  • Replies 67
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    சிறிமா ஆட்சியில் முன்னேறியவர்கள் என்றால் வட கிழக்கு விவசாயிகள்  மட்டுமே.

  • இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியத

  • பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.  வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁

இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?..

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயம் said:

தமிழரசு   என்று ஒரு கட்சி இப்போது இருக்கிறதா  ??? உண்மையில் இல்லை    அந்த கட்சிக்கு இந்த சுமத்திரன்  மரணச்சடங்கு நடத்திவிட்டார்.    

ஆசிரியர்கள் இடமாற்றம் 

அரசாங்க அதிபர் இடமாற்றம்   இவற்றை அமைச்சர்கள் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இப்போது   தன்னிச்சையாக அரசாங்கம்   தருமாயின்    இவர்கள் தேவையில்லை   முதலில் இவர் விலகட்டும் 

இப்போது உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது அல்லது வேறு தொழில் செய்வது நன்று    

புதிய அரசாங்கம் செய்வதை பொறுத்து இருந்து பார்ப்போம்   🙏🙏

12 minutes ago, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

நல்லது வரவேற்க வேண்டிய விடயம்.    சேவை செய்யும் ஆர்வம்  மனப்பான்மை உள்ளவர்கள் தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும்   வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம். வாழ்த்துக்கள். 

மாற்றம் ஒன்றே மாறாதது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
27 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2 late.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

அப்படியானால் இளைஞர்கள் படித்தவர்கள் வரணும் என்பது?????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அப்படியானால் இளைஞர்கள் படித்தவர்கள் வரணும் என்பது?????

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன்.

சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

🤪ஆடு தானாகத் தலையை நீட்டுது

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நியாயம் said:

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன்.

சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இம்முறை 6 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட இருப்பதால் 9 பேர் ஒரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட வேண்டும். எனவே ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் 9 பேருக்கும் 18000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍
ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது.

முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அதை செய்யாமல்...
"வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂

சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍

சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு...
அவர்,
கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.  animiertes-gefuehl-smilies-bild-0374.gif

அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... 
இவரின்
நேர்மையை, கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

அவர்களுடைய ஆர்வத்தைச் சொன்னேன் அண்ணை.
எனக்கு ஆர்வமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இம்முறை 6 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட இருப்பதால் 9 பேர் ஒரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட வேண்டும். எனவே ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் 9 பேருக்கும் 18000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.

தகவலுக்கு நன்றி வாலி. ஒரே கொள்கை உடையவர்கள் ஒரு குழுவை உருவாக்கி இறக்கலாமோ?

2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍
ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது.

முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அதை செய்யாமல்...
"வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂

சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍

சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு...
அவர்,
கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.  animiertes-gefuehl-smilies-bild-0374.gif

அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... 
இவரின்
நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறியர், குதிரைக்கு கடிவாளம் இல்லை என்றால் உதறிக்கொண்டு தறிகெட்டு ஓடிவிடும். உங்களுக்கு பிடிக்காதது வேறுவிடயம். சுமந்திரன் ஒரு கடிவாளம். அவர் அரசியலில் நிலைக்கவேண்டும் என்பது எனது அவா.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நியாயம் said:

அவர் அரசியலில் நிலைக்கவேண்டும் என்பது எனது அவா.

அதெப்படி ??

அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா???

மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 

விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.     

  • கருத்துக்கள உறவுகள்

TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி. 

உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍
ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது.

முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அதை செய்யாமல்...
"வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂

சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍

சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு...
அவர்,
கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.  animiertes-gefuehl-smilies-bild-0374.gif

அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... 
இவரின்
நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு.  அவர் நாடாளுமன்ற  பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால். 

நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

சிறியர், குதிரைக்கு கடிவாளம் இல்லை என்றால் உதறிக்கொண்டு தறிகெட்டு ஓடிவிடும். உங்களுக்கு பிடிக்காதது வேறுவிடயம். சுமந்திரன் ஒரு கடிவாளம். அவர் அரசியலில் நிலைக்கவேண்டும் என்பது எனது அவா.

நியாயம்... அவர்,  பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை.
ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே  அதை செய்யலாம்.

பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி,  உங்கள் கதை இருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

அதெப்படி ??

அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா???

மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 

சரியாக சொன்னீர்கள் விசுகு.
மாற்றத்தை... நாம் செய்யாமல், மற்றவனிடம் அதை எதிர்பார்ப்பது நிலைமையை இன்னும் சிக்கல் ஆக்கும்.  

இளையவர்கள் வழி விட வேண்டும் என்று  சுமந்திரன் வாயை குடுத்த மாதிரி... 
செயலில் காட்ட  வேண்டும். அப்படி இல்லை என்றால்... வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். 
அது தான்...மனிதனுக்கு அழகு. 

அதை விட்டுட்டு நெடுகவும் சுத்துமாத்து கதைகள் கதைத்துக் கொண்டு இருந்தால்... இவர்கள் கிழித்தது காணும் என்று, சனம்... சிங்கள கட்சிக்கு வாக்குப் போட்டு விட்டு, தங்களுடைய அலுவலை பார்க்கப் போய் விடுவார்கள். 

அந்த மாற்றம் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாகவே   நான் கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.     

இவர் விலக தேவையில்லை அப்படியே இருக்கட்டும்   தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்கு போடாமல்   அனுரவின். கட்சிக்கு போடாலாம்

மயிலிட்டி மிகப்பெரிய இராணுவ முகம்  தமிழ் மக்களின் வீடுகள் காணிகள்  இல்  அமைக்கப்பட்டிருந்தது   அங்குள்ள வீடுகளில் கதவுகள் யன்னல்கள்.  கூரைகள்.  எவையுமோ இல்லை   ஆனால்  அந்த முகமை   விட்டுட்டு இராணுவம் பூரணமாக வெளியேறி உள்ளது”   🙏👍 

2009 இலிருந்து ஒவ்வொரு ஆட்சியிலும்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  கோப்பி தேனீர் குடித்து சாப்பிட்டு   கதைத்தவர்கள்.  என்ன பலன்??  எதுவுமில்லை   இவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.  

ஒருபோதும் பிரச்சனைகளை தீர்க்க போவதில்லை   எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனுர இராணுவத்தை வெளியேற்றியுள்ளார்   🙏 வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, satan said:

சாத்தான்....  இந்த இக்கட்டான சூழ்நிலையில், விக்னேஸ்வரனின் முன் மாதிரியை பாராட்டியே ஆக வேண்டும்.

சுமந்திரனிடம்... அப்படியான முன்மாதிரி  இருக்குமா என்பது கேள்விக்குறியே. 
சுமந்திரன் கதையை கொடுத்து, ஆட்களை திசை திருப்பி  காரியம் சாதிப்பதில் கில்லாடி.
ஆன படியால்... இவரை  நம்ப முதல், நாற்பது தரம் யோசிக்க வேணும்.

😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு.  அவர் நாடாளுமன்ற  பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால். 

நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂
சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன்.animiertes-kerzen-bild-0046.gif 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, theeya said:

🤪ஆடு தானாகத் தலையை நீட்டுது

ஆகா ஆகா மேடையில் இருந்தவரை

மேசைக்கு அனுப்பப் போறாங்க.

ஊரில் சிலருடன் பேசியபோது என் பி பி யின் போக்கைப் பலரும் முக்கியமாக இளைஞர்கள் விரும்புவதாகவும் அடுத்த தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக இணையாவிட்டால் வடக்கிலேயே 2-3 ஆசனங்களை என்பிபி தூக்கும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

இவர் விலக தேவையில்லை அப்படியே இருக்கட்டும்   தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்கு போடாமல்   அனுரவின். கட்சிக்கு போடாலாம்

மயிலிட்டி மிகப்பெரிய இராணுவ முகம்  தமிழ் மக்களின் வீடுகள் காணிகள்  இல்  அமைக்கப்பட்டிருந்தது   அங்குள்ள வீடுகளில் கதவுகள் யன்னல்கள்.  கூரைகள்.  எவையுமோ இல்லை   ஆனால்  அந்த முகமை   விட்டுட்டு இராணுவம் பூரணமாக வெளியேறி உள்ளது”   🙏👍 

2009 இலிருந்து ஒவ்வொரு ஆட்சியிலும்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  கோப்பி தேனீர் குடித்து சாப்பிட்டு   கதைத்தவர்கள்.  என்ன பலன்??  எதுவுமில்லை   இவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.  

ஒருபோதும் பிரச்சனைகளை தீர்க்க போவதில்லை   எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனுர இராணுவத்தை வெளியேற்றியுள்ளார்   🙏 வாழ்த்துக்கள் 

யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும்,  யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா?  விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.