Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட  அனுரகுமார திசாநாயக்காவே இப்போது  அவர்கள் தலைவராக ஆகிவிட்டார்  அவர்களின் தலைவரே  அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதா?? இருந்தால்    சொல்லுங்கள் பார்ப்போம்    

நாங்கள் எங்களது வாக்கு உரிமையை   தமிழ் தலைவர்களுக்கு   அளிப்பாதால். ஏதாகினும் நன்மைகளை அடைந்து உள்ளோமா ?? 

இல்லை     தமிழ் தலைவர்களால்.  தமிழருக்கு எதுவும் தந்து விட முடியாது   அவர்கள் சிங்களத் தலைவர்களிடம். தான் போய் பேசுவார்கள்.     தமிழ் மக்களுக்கு சொல்லாமல்  முறைப்படி அறிவிக்காமல்   பார். அனுமதி பத்திரங்களை இரகசியமாக பெறும் அளவிற்கு நிலமை. வந்துவிட்டது    இந்த செயல் எமது வருங்காலச் சந்ததிகளை அழிக்கும்   இல்லையா?? 

இப்படியானவர்களை எப்படி தலைவர்கள் என்பது??  

ஆகவே   நேரடியாக அனுரவுக்கு   வாக்கு போட வேண்டியது தான்  🙏👍

  • Like 1
  • Replies 237
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

Kavi arunasalam

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

ஈழப்பிரியன்

ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நீர்வேலியான் said:

உங்களிடம் ஒரு கேள்வி, இப்போதிருக்கும் நிலையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம், அல்லது என்ன செய்ய வேண்டும் என  நினைக்கிறீர்கள்?  

பதில் ரொம்ப சுலபம் சகோ. பட்டறிந்த பாடங்களின் அடிப்படையில் அரசனை நம்பி புருஷனை கைவிடக் கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

இது தான் வரலாற்று திணிப்பு. திரிப்பு. அடிமையாக வாழ முடிவெடுத்து விட்டால் இப்படித் தான் முடிக்கணும். 1958, 1977, 1983 என்று அனைத்து சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அராஜகங்களுக்கும் தமிழரே காரணம்

விசுகு, வரலாறுகளை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க முடியாது.

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன். ‘எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது’ என்று சொல்லியிருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, Kavi arunasalam said:

விசுகு, வரலாறுகளை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க முடியாது.

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன். ‘எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது’ என்று சொல்லியிருந்தேன். 

இல்லை 

சிங்களவர்கள் சிந்திக்க தொடங்கினர் என்பதனூடாக நீங்கள் சொல்ல முயல்வது என்ன???

தவறுகளை உணர்ந்து கொள்ள முயலுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

இல்லை 

சிங்களவர்கள் சிந்திக்க தொடங்கினர் என்பதனூடாக நீங்கள் சொல்ல முயல்வது என்ன???

தவறுகளை உணர்ந்து கொள்ள முயலுங்கள். 

"சிங்களவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்" என்பதை நீங்களாகவே "சிங்களவர்கள் நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினர்" என்று எடுத்துக் கொண்டு கவியர் சொன்னதை திசை திருப்புகிறீர்கள்😂.

கொழும்பிலும், தென்பகுதியிலும் தமிழருக்கு 70, 80 களில் இல் நடந்ததும், 1930 களில் பேர்லினில் யூதர்களுக்கு நடந்ததும் ஒரே வகையான அநீதி என்று நான் நம்புகிறேன். இரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். இது தமிழர்களினதோ, பேர்லின் யூதர்களினதோ தவறல்ல. சிறு பான்மையினரின் முன்னேற்றம் தமக்கு ஆபத்து என்று நோக்கிய பெரும்பான்மையினரில் தான் தவறு.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, Justin said:

"சிங்களவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்" என்பதை நீங்களாகவே "சிங்களவர்கள் நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினர்" என்று எடுத்துக் கொண்டு கவியர் சொன்னதை திசை திருப்புகிறீர்கள்😂.

என் தாய் மொழியில் எனக்கு எந்த குழப்பமும் வராது. 

ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். 

இது சரியானது.

Edited by விசுகு
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன‌ -  மகாகல்கடவெல புண்ணியசார தேரர்
21 ஐப்பசி, 2001

nimalarajan_commem_211001.jpg

அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். 

 "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA  மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது"  என்று தமிழ்மாறன் கூறினார்.

மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்".

"ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். 

"சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்.. 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக  காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். 

இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும்.

இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை  வளர்ககும் அற்ப மனிதர்கள்  தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/10/2024 at 16:33, விசுகு said:

என் தாய் மொழியில் எனக்கு எந்த குழப்பமும் வராது. 

ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். 

இது சரியானது.

பந்தி பந்தியாய் விளக்கம் கொடுப்பதை வட நாலு வரியில் நச்சென்று நன்றி விசுகர் அண்ணா .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரவை எதிர்பதால் என்ன லாபம்? 

சில விடயங்களுக்கு நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும். சர்வதெசம் என்று ஒருநடவடிகையும் எடுக்கப் போவதில்லை. எமக்கு கடந்த காலத்தில் வாழ்வது பிடித்த விடயம்.   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த காலங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. அப்படி பார்த்தால் எந்த ஒரு இயக்கமும் தூய்மையானதல்ல.
புலிகள் கூட ஆரம்ப காலத்தில் வங்கியை கொள்ளயடித்தார்கள் தானே? அப்பாவிகளை மத்திய வங்கி குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார்கள்.

ஒரு சிறிய நிலபரப்பிற்குள் 20க்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி அடிபட்டு சின்னபின்னபட்டு எல்லாம் இழந்து போய் இருக்கும் எம்மை சிறிது எங்களை ஆசுவாசப்ப்டுத்தி கொள்ள விடுங்களேன். 
எத்தியோப்பியனது நிறத்தை மாற்ற முடியுமா? சிங்களவனது இன துவேசத்தை மாற்ற முடியுமா?
ஒரு 6 மாதம் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, colomban said:

எத்தியோப்பியனது நிறத்தை மாற்ற முடியுமா? சிங்களவனது இன துவேசத்தை மாற்ற முடியுமா

உங்களது இந்த கருத்து தவறானது. இதுவும் ஒரு வகையில் இனவெறியை தூண்டும் கருத்தே.  

எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள். சிங்கள இனவாதம்  என்பது அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்டது.  வரலாற்று தென்னிந்திய தமிழர்களின் படையெடுப்புகளையும் இந்தியாவில்  தம்மை விட பெரும் எண்ணிக்கையில் உள்ள தமிழர்களையும் காட்டி அச்சமூட்டி எப்படி ஶ்ரீலங்காவில் சிங்கள இனவாதம் உருவாக்கப்பட்டதோ அதே போல் சிங்கள இனவாதத்தை காட்டி அச்சமூட்டி சிங்களவருக்கு எதிரான  இனவாதமும் மனநிலையும்  தமிழர் மத்தியில் தமிழர் தரப்புக்களால் கட்டமைக்கப்பட்டு வளர்ததெடுக்கப்பட்டுள்ளது. 

அடிப்படையில் சிங்களவர்களோ, தமிழர்களோ இனவாதிகள் அல்ல என்பதை,  சிங்கள பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் செய்யும் ஒரு தமிழரோ, தமிழர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் ஒரு சிங்களவரோ இதயபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இந்தத் தொடரை எழுதுவதன் காரணத்தைத் தெளிவாகக் கூறிய பின்னரும் இதனை நிறுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டு சிலர் எனது பதிவுகளைச் சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இங்கே நான் பதியும் விடயங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக சரித்திரத்தில் பதியப்பட்டவை, எம் கண்முன்னாலேயே நடந்தவை. ஆகவே நீங்கள் தடுக்க நினைப்பது ரஞ்சித் எனும் தனி மனிதனின் சொந்தக் கருத்துக்களையல்ல, மாறாக எமது இனத்தின் மீது குறிப்பிட்ட ஒரு இனத்தால், அதனை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியால், அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக விளங்கும் ஒருவரால் கடந்த காலங்களில் புரியப்பட்ட விடயங்களைத்தான். 

நான் எழுதுபவை உண்மையானவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்த்தான் அப்பதிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் என்னைப்பற்றியும், எனது நோக்கங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கீழ்த்தரமாக உங்களால் எழுதவேண்டி ஏற்படுகிறது.

ஏதாவதொரு சிங்களத் தலைவர் அவ்வப்போது புதிதாக ஆட்சிக்கு வரும்போது அவர் பேசும் விடயங்களை அப்படியே வேத வாக்கென்று நம்பி, அவரது கட்சியும், அவரும் கடந்த காலங்களில் செய்த எம்மீதான செயற்பாடுகளை, எம்மினத்தின் இருப்பு மீதான திருப்பமுடியாத சேதங்களை இலகுவாக மறந்து அவர் பின்னால் ஓடுவதென்பது ஈழத்தமிழருக்குப் புதியது அல்ல. 1994 இல் சந்திரிக்கா, 2002 இல் ரணில், 2010 இல் சரத் பொன்சேக்கா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சஜித் பிரேமதாச என்று ஒவ்வொரு தலைவரும் வரும்போது நாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடினோம். ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறான முகங்களை எமக்குக் காட்டினார்கள் என்பது எம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வரிசையில்த்தான் அநுரவும் இப்போது வருகிறார். அவர் புதியவர் (எம்மில்ப் பலரைப் பொறுத்தவரை), அவர் பேசும் பேச்சு வசீகரமாக இருக்கிறது, மக்களுடன் மக்களாக மிகவும் எளிமையாக அவர் வலம் வருகிறார், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் அவர் பேசவும், செயற்படவும் போகிறார் என்று நாம் நம்புகிறோம். 

கடந்த 50 வருடகால தமிழ் அரசியலை அவதானிப்பவர்களுக்கு நடந்தவை பற்றிய பூரண அறிவு இருக்கிறது. பலருக்கு அவை இருந்தும் அதுபற்றிப் பேச விருப்பமிருப்பதில்லை. சிலருக்கு அவை குறித்துப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. அவ்வாறு பேசுவதால் தாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரத் துடிக்கும் அநுரவுக்கான தளம் பலவீனமாகிப் போய்விடும் என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. எந்தவினமும் தனது சரித்திரத்தை, குறிப்பாக தன்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்து வைக்கத் தவறுவதில்லை, ஈழத் தமிழினத்தைத் தவிர. எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமங்களை நாம் எங்கும் பதிந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள். 

2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் வேண்டுமென்றே தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள். ஆரம்பத்தில் புலிநீக்கம் என்று ஆரம்பித்து, இப்போது தமிழ்த் தேசிய நீக்கம் என்று உருமாறி, இனிவரும் காலத்தில் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்படும் விருப்பினை பலரின் நோக்கம் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் தாயகத்தில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியம் குறித்தோ, எம்மீது நடத்தப்பட்ட இனவழிப்புக் குறித்தோ, இந்த இனவழிப்பில் பங்குகொண்ட பல்வேறுபட்ட சிங்களத் தேசியவாதக் கட்சிகள் குறித்தோ எந்த அறிவும் ஊடப்படவில்லை. இது வேண்டுமென்றே தமிழரை 2009 இல் இருந்து பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டவை. அதனாலேயே அநுரவின் வசீகரமான பேச்சினைக் கேட்கும்போது தமிழ் இளைஞர்கள் அதன் பால் கவரப்பட்டு பின்னால் ஓடுகிறார்கள், இதற்கு தமிழ் யுடியூப் வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் இளைஞர்கள் அநுர எனும் சிங்கள அரசியல்வாதி மீது வைத்திருக்கும் கண்மூடித்தனாமான விசுவாசத்திற்கு இவர்களும் பெரும் காரணமாகி இருக்கிறார்கள். ஆகவேதான் அநுர எனும் மனிதர் தனிப்பட்ட ரீதியிலும், மக்கள் விடுதலை முன்னணி எனும் கட்சியின் உறுப்பினராக இதுவரை செய்துவந்த விடயங்களை இங்கே பதிகிறேன். தேவையானவர்கள் இவற்றைப் படித்துப் பார்ப்பதன் ஊடாக சரித்திரத்தை அறிந்து சரியானதைச் செய்யலாம், அல்லது கடந்து போகலாம். 

தமிழ்த் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்துவோம் என்று ஆரம்பித்த யாழ் இணையம் இன்று தேசிய நீக்கம் செய்யும் நபர்களுக்கு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இதில் புலிநீக்கம் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களும் தாராளமாகக் கடை விரித்து வருகிறார்கள். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் இந்த எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம் என்று காரணம் சொல்லப்படுகிறது. நல்லது. 

நான் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இதனைப் படிப்போரின் எண்ணங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக எழுதி வருவோருக்கு சிறிய வேண்டுகோள். நீங்கள் உண்மையாகவே எனது பதிவு அநுர எனும் மகத்தான மனிதரின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துவிடும் என்று நம்பினால், புதிதாக ஒரு திரியைத் திறந்து (யாழ்க்களத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசியத்திற்கெதிரான, தேசிய நீக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்கும் இடமளித்தல் எனும் கோட்பாட்டிற்கு அமைய), அத்திரியில் அநுர எனும் மனிதருள் மாணிக்கத்தின், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி எனும் மாபெரும் இயக்கத்தின் செயற்பாடுகளை, அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த தியாகங்களை பட்டியலிட்டு தனியே ஒரு நாட்குறிப்பாக எழுதினால் நான் எழுதுபவை குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அநுரவின் வெற்றிக்காக யாழ் களத்தின் அனுமதியுடன் இங்கேயே ஒரு பிரச்சாரத் திரியைத் திறக்கலாம். எனது எழுத்துக்களால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்று நீங்கள் கருதுபவற்றை உங்களின் பிரச்சாரத் திரியினால் நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் படித்த மக்களுக்கு அழகு. அதைவிடுத்து அற்பத்தனமாக என்னைத் தொடர்ந்துவந்து தனிமனித தாக்குதல் நடத்தத் தேவையில்லை.

உங்களின் அருவருக்கத்தக்க எழுத்துக்களால் நான் இத்தொடரை நிறுத்தப்போவதில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் பொன்னான நேரத்தை இங்கே வீணடிக்காமல், அநுரவுக்கென்று தனியே திரி திறந்து அங்கே உங்களின் பிரச்சாரங்களை முன்வைய்யுங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன்.
மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. 
பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள்.  ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். 

சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு.

"எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை. 

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, colomban said:

சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு.

ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, colomban said:

பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன்.
மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. 
பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள்.  ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். 

சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு.

"எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை. 

கருத்துக்கு நன்றி கொழும்பன். அதற்கு காரணம் பரஸ்பர அச்ச நிலையும் சந்தேக பார்வையும் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டதே.  அதை ஒழிப்பதற் மூலமும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற் மூலமுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாமேயொழிய பழைய சம்பவங்களை கிளறி இருபகுதியும் வெறுப்பை வளர்தது கொள்வதால் மேலும்  பாதக நிலையை நோக்கியே செல்வோம். 

முஸ்லீம. தரப்பு தனி அலகு கேட்டபோது நாம்  அதை  முற்றாக நிராகரித்ததும் இதே அச்சநிலையே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, island said:

கருத்துக்கு நன்றி கொழும்பன். அதற்கு காரணம் பரஸ்பர அச்ச நிலையும் சந்தேக பார்வையும் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டதே.  

முஸ்லீம. தரப்பு தனி அலகு கேட்டபோது நாம்  அதை  முற்றாக நிராகரித்ததும் இதே அச்சநிலையே. 

இது ஒரளவு உண்மை. 

சிங்களவர்களுக்கு racism vs patriotisms வித்தியாசம் தெரியாது. சிறுவயதில் இருந்தே இவர்களுக்கு பொளத்த சிங்கள மேலான்மைதனம் விதைக்கப்டுகின்றது. பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலேயே இது இவர்களுக்கு போதிக்கப்ப்டுகின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் குடிமக்க‌ள், இவர்களே பூமி புத்திரர். புத்தர் இந்த நாட்டை சிங்கள பொளத்தர்களுக்கே கையளித்துள்ளார். இவர்களே இந்த நாட்டை அரசாள வேண்டும் என்று பாடசாலை நாட்களெலேயே போதிக்கப்படும். 

என் பாடசாலை நண்பன் சிங்கள பெண்ணை திருமணம் செய்து கண்டியில் வாழ்கின்றான். இவன் இப்பொழுது சிங்களவன் போல பெயரை மாற்றியுள்ளான். ஒரு மகன் ஆமதுரு, எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். இப்பொழுது பன்சலையில் செயலாலராக இருக்கின்றான். 

ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, பெண்கள் படாசாலைகளான பொளத்த மகளிர் கல்லூரி, தேவி பாலிக, விசாக போன்ற எல்லாவற்றிலும் இப்படித்தான். படிக்கும் காலத்திலேயே இந்த இனவாதம் விதைக்கப்பாடும். அனனகரிக தர்மபால காலத்திலிருந்தே இது இப்படித்தான்.

மனிதனுக்கு இயல்பாக இருக்கும் "தான் எலலாவற்றிலும் சிறந்தவன்" என்ற‌ இயல்புதான் பின்பு இனவாதமாக தோற்றமெடுக்கின்றது. 

முஸ்லீமகளள் மதவாதிகள் இவர்கள் சாதரணா கிறிக்கட் விளையாட்டிலும் கூட பாக்கிஸ்தானையே ஆதரிப்பார்கள்

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, colomban said:

இதை தான் முதலே குறிப்பிட்டேன். இதற்கு என்ன தீர்வு இப்படியே தொடர்ந்து விரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைப்பது தீர்வாகுமா?  கடந்த காலத்தில்  இந்த அணுகுமுறை பலன் தந்ததா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
51 minutes ago, island said:

இதை தான் முதலே குறிப்பிட்டேன். இதற்கு என்ன தீர்வு இப்படியே தொடர்ந்து விரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைப்பது தீர்வாகுமா?  கடந்த காலத்தில்  இந்த அணுகுமுறை பலன் தந்ததா? 

உங்கள் பார்வை நூறு வருடங்களுக்கு முன்னரானது. அதை தமிழர்கள் செய்து ஏமாற்றப்பட்டு அடக்கப்பட்டு இனி இரு இனமும் ஒட்டாது என்ற வருத்தமான முடிவுக்கு வந்தாச்சு. இதற்கு தமிழர்கள் காரணம் இல்லை. மேலும் மேலும் தமிழர்களே காலில் விழுவதும் விழச்சொல்வதும் அநியாயம். அக்கிரமத்துக்கு துணை போகுதலே. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத்

********************************************************************************************************************

26, பபுரட்டாதி 2024

https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions

2024-09-26%20-%20vjitha%20herath%201.jpg

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக‌ வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார். 

மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற‌ சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். 

"ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.

தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன. 

2024-09-26%20-%20vijitha%20herath%203.jpg

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது.

ITJP releases dossier of evidence of Silva's crimes | Tamil Guardian
தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிட‌த்தக்கது. 

2024-09-26%20vijtiha%20herath%202.jpg

சிறு குறிப்பு :

நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
 
Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரஞ்சித் said:

நான் இந்தத் தொடரை எழுதுவதன் காரணத்தைத் தெளிவாகக் கூறிய பின்னரும் இதனை நிறுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டு சிலர் எனது பதிவுகளைச் சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இங்கே நான் பதியும் விடயங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக சரித்திரத்தில் பதியப்பட்டவை, எம் கண்முன்னாலேயே நடந்தவை. ஆகவே நீங்கள் தடுக்க நினைப்பது ரஞ்சித் எனும் தனி மனிதனின் சொந்தக் கருத்துக்களையல்ல, மாறாக எமது இனத்தின் மீது குறிப்பிட்ட ஒரு இனத்தால், அதனை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியால், அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக விளங்கும் ஒருவரால் கடந்த காலங்களில் புரியப்பட்ட விடயங்களைத்தான். 

நான் எழுதுபவை உண்மையானவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்த்தான் அப்பதிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் என்னைப்பற்றியும், எனது நோக்கங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கீழ்த்தரமாக உங்களால் எழுதவேண்டி ஏற்படுகிறது.

ஏதாவதொரு சிங்களத் தலைவர் அவ்வப்போது புதிதாக ஆட்சிக்கு வரும்போது அவர் பேசும் விடயங்களை அப்படியே வேத வாக்கென்று நம்பி, அவரது கட்சியும், அவரும் கடந்த காலங்களில் செய்த எம்மீதான செயற்பாடுகளை, எம்மினத்தின் இருப்பு மீதான திருப்பமுடியாத சேதங்களை இலகுவாக மறந்து அவர் பின்னால் ஓடுவதென்பது ஈழத்தமிழருக்குப் புதியது அல்ல. 1994 இல் சந்திரிக்கா, 2002 இல் ரணில், 2010 இல் சரத் பொன்சேக்கா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சஜித் பிரேமதாச என்று ஒவ்வொரு தலைவரும் வரும்போது நாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடினோம். ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறான முகங்களை எமக்குக் காட்டினார்கள் என்பது எம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வரிசையில்த்தான் அநுரவும் இப்போது வருகிறார். அவர் புதியவர் (எம்மில்ப் பலரைப் பொறுத்தவரை), அவர் பேசும் பேச்சு வசீகரமாக இருக்கிறது, மக்களுடன் மக்களாக மிகவும் எளிமையாக அவர் வலம் வருகிறார், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் அவர் பேசவும், செயற்படவும் போகிறார் என்று நாம் நம்புகிறோம். 

கடந்த 50 வருடகால தமிழ் அரசியலை அவதானிப்பவர்களுக்கு நடந்தவை பற்றிய பூரண அறிவு இருக்கிறது. பலருக்கு அவை இருந்தும் அதுபற்றிப் பேச விருப்பமிருப்பதில்லை. சிலருக்கு அவை குறித்துப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. அவ்வாறு பேசுவதால் தாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரத் துடிக்கும் அநுரவுக்கான தளம் பலவீனமாகிப் போய்விடும் என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. எந்தவினமும் தனது சரித்திரத்தை, குறிப்பாக தன்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்து வைக்கத் தவறுவதில்லை, ஈழத் தமிழினத்தைத் தவிர. எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமங்களை நாம் எங்கும் பதிந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள். 

2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் வேண்டுமென்றே தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள். ஆரம்பத்தில் புலிநீக்கம் என்று ஆரம்பித்து, இப்போது தமிழ்த் தேசிய நீக்கம் என்று உருமாறி, இனிவரும் காலத்தில் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்படும் விருப்பினை பலரின் நோக்கம் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் தாயகத்தில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியம் குறித்தோ, எம்மீது நடத்தப்பட்ட இனவழிப்புக் குறித்தோ, இந்த இனவழிப்பில் பங்குகொண்ட பல்வேறுபட்ட சிங்களத் தேசியவாதக் கட்சிகள் குறித்தோ எந்த அறிவும் ஊடப்படவில்லை. இது வேண்டுமென்றே தமிழரை 2009 இல் இருந்து பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டவை. அதனாலேயே அநுரவின் வசீகரமான பேச்சினைக் கேட்கும்போது தமிழ் இளைஞர்கள் அதன் பால் கவரப்பட்டு பின்னால் ஓடுகிறார்கள், இதற்கு தமிழ் யுடியூப் வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் இளைஞர்கள் அநுர எனும் சிங்கள அரசியல்வாதி மீது வைத்திருக்கும் கண்மூடித்தனாமான விசுவாசத்திற்கு இவர்களும் பெரும் காரணமாகி இருக்கிறார்கள். ஆகவேதான் அநுர எனும் மனிதர் தனிப்பட்ட ரீதியிலும், மக்கள் விடுதலை முன்னணி எனும் கட்சியின் உறுப்பினராக இதுவரை செய்துவந்த விடயங்களை இங்கே பதிகிறேன். தேவையானவர்கள் இவற்றைப் படித்துப் பார்ப்பதன் ஊடாக சரித்திரத்தை அறிந்து சரியானதைச் செய்யலாம், அல்லது கடந்து போகலாம். 

தமிழ்த் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்துவோம் என்று ஆரம்பித்த யாழ் இணையம் இன்று தேசிய நீக்கம் செய்யும் நபர்களுக்கு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இதில் புலிநீக்கம் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களும் தாராளமாகக் கடை விரித்து வருகிறார்கள். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் இந்த எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம் என்று காரணம் சொல்லப்படுகிறது. நல்லது. 

நான் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இதனைப் படிப்போரின் எண்ணங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக எழுதி வருவோருக்கு சிறிய வேண்டுகோள். நீங்கள் உண்மையாகவே எனது பதிவு அநுர எனும் மகத்தான மனிதரின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துவிடும் என்று நம்பினால், புதிதாக ஒரு திரியைத் திறந்து (யாழ்க்களத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசியத்திற்கெதிரான, தேசிய நீக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்கும் இடமளித்தல் எனும் கோட்பாட்டிற்கு அமைய), அத்திரியில் அநுர எனும் மனிதருள் மாணிக்கத்தின், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி எனும் மாபெரும் இயக்கத்தின் செயற்பாடுகளை, அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த தியாகங்களை பட்டியலிட்டு தனியே ஒரு நாட்குறிப்பாக எழுதினால் நான் எழுதுபவை குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அநுரவின் வெற்றிக்காக யாழ் களத்தின் அனுமதியுடன் இங்கேயே ஒரு பிரச்சாரத் திரியைத் திறக்கலாம். எனது எழுத்துக்களால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்று நீங்கள் கருதுபவற்றை உங்களின் பிரச்சாரத் திரியினால் நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் படித்த மக்களுக்கு அழகு. அதைவிடுத்து அற்பத்தனமாக என்னைத் தொடர்ந்துவந்து தனிமனித தாக்குதல் நடத்தத் தேவையில்லை.

உங்களின் அருவருக்கத்தக்க எழுத்துக்களால் நான் இத்தொடரை நிறுத்தப்போவதில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் பொன்னான நேரத்தை இங்கே வீணடிக்காமல், அநுரவுக்கென்று தனியே திரி திறந்து அங்கே உங்களின் பிரச்சாரங்களை முன்வைய்யுங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி.

இதைப் பார்க்கையில் உங்களுக்கு யாழ் விதிகள், நடைமுறைகள் தெரியவில்லையா அல்லது உலக நடைமுறையே தெரியவில்லையா என்ற யோசனை வருகிறது. கருத்துக் களத்தில் எழுதுகிறீர்கள், ஆனால் ஏனையோர் "சாமரம் வீசும்" கருத்துக்களை மட்டுமே வைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள். இதே முறைப்பாட்டை, உங்கள் ஏனைய தேசிய நாட்காட்டிகளிலும் கேட்ட நினைவு.

"அனுரவை  தமிழ் மக்கள் நல்ல ஒளியில் பார்த்து விடக் கூடாது" என்கிற நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் - எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் மூலங்கள் தமிழ்நெற்றும், சங்கம் தளமும் - இவை இரண்டினதும் வடிகட்டியெடுத்து செய்தி/ஆய்வுகள் போடும் "நடுநிலை" 😎எல்லோரும் அறிந்ததே!

நான் நினைக்கிறேன், தமிழ் வேட்பாளர் தோல்வியின் பலனாக ஒரு துன்ப grieving அனுபவத்தில் இருக்கிறீர்களென. முதலில் denial. பின்னர் கோபம். இப்போது "தோல்வியின் காரணம் வேறு யாரோ" எனும் blaming. "சும், சம், மாவை தான் இன்று ஒரு சிங்களவர் பக்கம் தமிழ் இளையோர் சாயக் காரணம்" என்ற உங்கள் கருத்தில் இந்த blaming தான் தெரிகிறது.

உங்கள் போன்றோரின் தீவிர தேசிய நிலைப்பாடுகளும், சகிப்புத் தன்மையின்மையும் இறுதி வரை உங்களுக்கு ஒரு மறைக்காரணியாகத் தெரியப் போவதேயில்லை! நான் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது போல தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடும், ஒரு அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், மேலுல் தமிழர்களை உங்களிடமிருந்து அன்னியப் படுத்தும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:
4 hours ago, colomban said:

சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு.

ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று

புலிகளை மட்டுமே சுயபரிசோதனை செய்ய விரும்புகிறார்கள்.

புகப்புத்தகத்திலும் அப்பப்ப புலிகளால் கொல்லப்பட்டவரின் நினைவுதினம் என்று சிலபடங்களுடன் போடுவார்கள்.

மற்றைய இயக்கங்களும் சரிக்குசரி செய்தது தானே அவர்களின் தலைவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் தானே போய் விசாரிக்கலாமே.

பழைய ஜேவிபியைப் பற்றி பலருக்கும் தெரியாது.ரஞ்சித் எழுதுவதால் அறிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ந்தும் எழுதுங்கள் ரஞ்சித்.

  • Thanks 2
Posted
5 hours ago, colomban said:

பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன்.
மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. 
பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள்.  ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். 

சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு.

"எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை. 

இப்பவும் நான் வீட்டில், மற்றவர்களுடன் கதைக்கும் போது, சில சிங்களச் சொற்கள் தானாகவே/ இயல்பாகவே என் வாயிலிருந்து வந்துவிடும். அந்தளவுக்கு நான் சிங்களவர்களுடன் பல வருடங்களாக பழகியிருக்கின்றேன். இன்றும் சிங்கள சினிமாவையும். பாடல்களையும் ரசிக்கின்றேன். பல சிங்கள நண்பர்கள் முக நூலிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி இன்றும் தொடர்பில் உள்ளனர். கனடாவுக்கு வந்து சில நாட்கள் எம்முடன் தங்கிச் செல்லும் ஒரு சிங்களவர் கூட இருக்கின்றார்.

நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு தான் அவர்கள் நடந்து கொள்வர். பழகும் போது, உயிரையே கொடுக்கின்றவர்கள் போல பழகுவார்கள். தமிழர் தாயகம், சக உரிமை என்று கதைக்க வெளிக்கிட்டால், உயிரையே எடுக்கும் அளவுக்கு கோபப்படுவார்கள்.

சிங்கள இனவாதம் ஒரு போதும் மாறாது, நிறங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுரவின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத்தின் பின்னணி

2024-09-27%20-%20vijitha%20herath.jpg

பல ஈழத்தமிழர்களின் இன்றைய கதாநாயகனாக பவணி வரும் இலங்கையின் ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்கவின் வலது கரமும் நெருங்கிய சகாவுமான விஜித்த ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழர் மீதான இனக்கொலை அரச மயப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றிய எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான், அதுதான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சர்வதேசத்தில் சித்தரித்து, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்துவது. ஹமீது, ரஞ்சன் விஜேரத்ன, ஹரல்ட் ஹேரத்,  டிரோன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் கதிர்காமர், அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ரோகித போகொல்லாகம, ஜி எல் பீரிஸ், ரவி கருணநாயக்க, திலக் மாறப்பன என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை இருந்த எல்லோருமே செய்த அதே பணியினை ஆற்ற தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தும் வந்திருக்கிறார். அவர் வெளிவிவகார அமைச்சராக ஆற்றிய முதலாவது பணி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் ஈடுபட்ட இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான சர்வதேச விசாரணைப்பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருவதற்காக சவுதி அரேபியாவிற்கு வாழ்த்துக் கூறியமை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போதைய ஜனாதிபதியை, அவரது அமைச்சரவையினை தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்று வழிபட ஆரம்பித்திருக்கும் தமிழ் அபிமானிகளுக்கு அநுரவின் சகாவான விஜித்த ஹேரத்தின் பின்னணி பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

விஜித்த ஹேரத், ஒரு தீவிர சிங்கள தேசியவாதியும் ஜனதா விமுக்தி பெரமுன எனும் தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியின் மிக மூத்த உறுப்பினருமாவார். இவர் அநுர குமாரவினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சமய விவகாரங்களுக்கான அமைச்சர், தொழிநுட்ப ஊடகத்துறை, சுற்றுப்புறச் சூழல், நீர் வழங்கல், தோட்டத்துறை, சமூகவியல், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

நாம் இவரது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கலாம்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு அவர் காட்டிவரும் அசைக்கமுடியாத விசுவாசமே அவரை அநுரகுமாரவின் நெருங்கிய சகாவெனும் நிலைமைக்கு உயர்த்தியது. விஜித்த ஹேரத் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினர். மாணவராக இருந்த காலத்தில் 1986 ஆம் ஆண்டு அவர் அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பில் இணைந்த சில மாதங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசிற்கெதிரான இரத்தக்களறி மிகுந்த ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது.

1999 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல்களிலேயே அவர் முதன்முதலாக தேர்தலில் இறங்கினார். அத்தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 605 வாக்குகளையே அவர் பெற்றார். 2000 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 8,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற அவர் அதன் பின்னர் அத்தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறார். 

பாராளுமன்ற கோப்புக்களைப் பார்க்கின்றபோது விஜித ஹேரத் எப்போதுமே பொது நிதித்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் விவசாயம் சார்ந்த பாராளுமன்றக் கமிஷன்களில் அங்கம் வகித்திருப்பது தெரிகிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களின்போது ஹேரத் சார்பாக வாக்களித்த போதிலும், அவரால் இதுவரை எச்சட்டமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஆட்சியமைத்தபொழுது விஜித்த ஹேரத் அந்த அரசாங்கத்தின் கலாசார அமைச்சராகவும், தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில் அதிகம் பிரபலமாகாத ஒரு உறுப்பினராக ஹேரத் இருந்த போதிலும் அநுரவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக அவர் வலம் வந்தார்.

விஜித்த ஹேரத்தின் போரிற்கான ஆதரவும், நீதிவழங்கலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும்

240930%20Herath%20feature1.jpeg

2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பு நா அலுவலகத்திற்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத்

அரச அடக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டக் காலம் முழுவதும் மக்கள் விடுதலை மார்க்ஸிஸச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையினை நியாயப்படுத்தியே வந்தது. ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைப் போலவே விஜித்த ஹேரத்தும் தமிழர்களுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மிகக் கடும் எதிர்ப்பினைத் தொடர்ச்சியாக காட்டி வந்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, புலிகளுடனான பேச்சுக்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டி வந்தது. மேலும், 2004 சுனாமிப் பேரிடரின் பின்னரான இணைந்த சுனாமி நிவாரணக் கட்டமைப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தோற்கடித்ததுடன், பேச்சுக்களை இரத்துச் செய்தால் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தது.

2006 ஆம் ஆண்டி ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே இராணுவத் தீர்விற்கான தனது ஆணையினை அப்போதிருந்த மகிந்த அரசிற்கு வழங்கியதுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கும் உறுதுணை வழங்கியது.

240930%20Herath%20feature2.jpeg

240930%20Herath%20feature3.jpeg

2007 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணியினர், கூடவே விஜித்த ஹேரத்

இறுதி யுத்த காலத்தின்போது இலங்கை இராணுவத்தினர் பரந்தளவில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் அறிவித்து வந்த நிலையில் விஜித்த ஹேரத் தனது அமைப்புடன் இணைந்து இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்பாகவும் நா அமைப்பின் அலுவலகம் முன்பாகவும் அன்றைய மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் லுயிஸ் ஆர்பருக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.

2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னர் சர்வதேசத்தில் உருவாகி வந்த சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரல்களை விஜித்த ஹேரத் தொடர்ந்தும் எதிர்த்து வந்தார்.

"போரில் நடந்ததாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்களை விசாரிப்பது அவசியம் என்றால், அது உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே விசாரிக்கப்பட முடியும். இலங்கையினை விமர்சிக்கின்ற மேற்குநாடுகள் இன் கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகளை நாம் நடத்தப் போவதில்லை" என்று 2015 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் கூறியிருந்தார். இதுபற்றி மேலும் வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

https://www.tamilguardian.com/content/sri-lankan-ministers-reject-un-investigation-mass-atrocities

புதிய வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்தின் முதலாவது பணி நா மனிதவுரிமை சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேசப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு நன்றி கூறியதே.

New Sri Lankan foreign minister's first remarks thank Saudi Arabia for  combatting UN resolutions on war crimes | Tamil Guardian

கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சில மணித்துளிகளுக்குப் பின்னர் சவுதி அரேபிய நாள் நிகழ்வில் உரையாற்றிய ஹேரத் நா மனிதவுரிமைச் சபையில் இலங்கை ராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினருடனான ஹேரத்தின் ஆரம்ப காலம்

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிங்களத் தேசியவாதியான விஜித்த ஹேரத் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வென்பதே கிடையாதென்று தொடர்ந்து வாதாடி வந்தார்.

விஜித்த ஹேரத் போன்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர்களிடம் மேலோங்கி நின்ற சிந்தனையான  தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடாதெனும் நிலைப்பாட்டினால் அவ்வமைப்பு தெற்கின் கிராமப்புறச் சிங்கள இளைஞர்களிடையே பிரபல்யம் அடையத் தொடங்கியது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்த்தாபகரான ரோகண விஜேவீர "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையென்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின்பேரில் உருவாக்கப்பட்டது" என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ரோகண விஜேவீரவின் இந்த பிரச்சாரமே தமிழ் மக்களுக்கெதிரான இவ்வமைப்பின் நீண்டநாள் காழ்ப்புணர்விற்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

இலங்கை அரசாங்கங்களுக்கெதிராக இரு முறை ஆயுதப் போராட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தபோதிலும் கூட, அதே காலப்பகுதியில் உரிமைக்காகப் போராடி வந்த ஈழத்தமிழர் சார்பாக கிஞ்சித்தும் அவ்வமைப்பு இரக்கமோ அக்கறையோ காட்டவில்லை. மாறாக இக்கட்சியிலிருந்தே இலங்கை சந்தித்த அதிதீவிர சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வெளிக்கொணரப்பட்டார்கள் . 

மக்கள் விடுதலை முன்னணியினுடனான தனது ஆரம்ப காலம் குறித்தும் 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி குறித்தும்விஜித்த ஹேரத் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்.

"அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சிவில் யுத்தம் ஒன்று நடந்து வந்தது. நாம் இந்திய இராணுவத்திற்கெதிராகப் போராடினோம். அக்காலத்தில்தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது" .

"அவ்வொப்பந்தம் இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒப்பந்தத்தின் ஊடாக எமது திருகோணமலையில் அமைந்திருந்த எண்ணெய்க் குதங்களை இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நிறுவனம் ஒன்றிற்கும் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறே எமது நாட்டின் உளவீட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை நுழைக்கத் தொடங்கியது. இந்தத் தலையீட்டினை எதிர்த்தே நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது".

"நான் அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினராக இருந்தேன். நாம் பல்வேறான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினோம். இந்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான ஜனநாயகவழி ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம்".

தமிழருடனான அதிகாரப் பகிர்விற்கெதிரான உறுதியான விஜித்த ஹேரத்தின் நிலைப்பாடு

பொலீஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ மாகாணசபைகளுக்குக் கொடுக்க அனுமதிக்கப்போவதில்லை தேர்தலுக்கு 72 மணிநேரமே இருக்க மீண்டும் உறுதிப்படுத்தியமக்கள் விடுதலை முன்னணி

2021 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் வழங்கிய செவ்வியொன்றில், "எமது நாட்டில் நாம் பிரிவினையினை முற்றாக எதிர்க்கிறோம். ஏனென்றால் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இனப்பிரச்சினைக்கு பிரிவினை ஒரு தீர்வாக அமையாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, "மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், "பிரிவினை எப்படி இலங்கையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய மாட்டாது, அவ்வாறே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

"இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமெனில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இன, மத, அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அல்லாமல் ஒரேவகையான உரிமைகளை வழங்குவதனூடாக மட்டும்தான்" என்று அவர் கூறினார்.

"நாம் புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போராடினோம். ஏனென்றால் அது எமது மக்களைப் பிரிக்க முயன்றது. அவ்வியக்கத்திற்கெதிராக இன்னும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். இறுதியில் எமக்குத் தேவையான வெற்றியை நாம் அடைந்துகொண்டோம். நாம் புலிகள் இயக்கத்தை தத்துவாந்த ரீதியில் மட்டுமல்லாமல் எல்லாவழிகளிலும் தோற்கடித்து அழித்தோம்".

13 ஆவது திருத்தத்தினூடாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனையும் கடுமையாக எதிர்த்து வந்தார் விஜித்த ஹேரத்.

2005 இல் அவர் பேசும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார்.

2015 இல் சிங்கள இனவாதிகளின் ஆங்கில நாளேடான தி ஐலணட்டில் பேட்டியளித்த ஜேரத் "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முற்றாக எதிர்க்கிறது" என்று கூறினார்." தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அக்கறை காட்டினாலும் கூட சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்" என்று கூறினார்.

மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பதை அவர் தீவிரமாக எதிர்த்தார்.

"இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத்தினூடாக பிரித்துப்போட்டது எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே. இந்த மாகாணங்கள் இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இயங்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 1987 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 இல் மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வடக்குக் கிழக்கு இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்படுவதாகவும், இம்மாகாணங்கள் இணைந்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியும், தீவிர இனவாத அமைப்பான ஜாதிக ஹெலஉறுமயவும் வடக்குக் கிழக்கு மாகாண்ங்களின் இணைப்பிற்கெதிராகத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் நீதிமன்றத்திற்கு அதனை இழுத்துச் சென்று, மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது வீதிகளில் கொண்டாடி ஆர்ப்பரித்தனர்.   

A change of tune for JVP, as Sinhala MP quotes LTTE's Thileepan | Tamil  Guardian

2019 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் பேசிய விஜித்த ஹேரத், "வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து வைத்திருப்பதனூடாக சர்வதேசத்திற்கு இந்த இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்று காண்பித்து, ஆகவே இம்மாகாணங்களுக்கு தனியான அதிகாரம் தேவையென்று கோருவதே தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும்" என்று விஜித்த ஹேரத் கூறினார்.

"இதே கோரிக்கையினைத்தான் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் இந்தக் கோரிக்கையினை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

இவ்வருடம் மாசி மாதத்தில் அநுர குமாரவுடன் தில்லிக்குப் பயணமாகிய விஜித்த ஹேரத், இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும், பூகோள ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசியலில் ஈடுபடும் என்று உறுதிப்படுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் தமது அமைப்பு நடத்திய ஆயுதக் கிளர்ச்சி குறித்துப் பேசும்போது, " நாம் மிகவும் தீவிரமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தோம்.  எமது செயற்பாடுகளை இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்கப் பாவிக்கிறோம். அதற்காகப் பல உயிர்த்தியாகங்களை நாம் புரிந்திருக்கிறோம்" என்று கூறினார். "இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றுமே மாறப்போவதில்லை" என்றும் அவர் மேலும் கூறினார்.

2024 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியில், தேர்தலுக்குச் சற்று முன்னரான நாட்களில் பேசிய விஜித்த ஹேரத், "மகாணசபை அமைப்பு முறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், ஒற்றையாட்சியையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க நாம் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். நேற்றும், இன்றும், நாளையும் இதுதொடர்பான எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டினை எவ்விலை கொடுத்தாவது பாதுகாப்பது எமது கட்சியின் தலையாய கடமையாகும்" என்று அவர் பிரகடணம் செய்தார்.

No police or land powers to provincial councils - NPP affirms 72 hours  before polls | Tamil Guardian

அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் மாநாடு ஒன்றில் பேசிய விஜித்த ஹேரத், "பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினைக் கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் உறுதியாக நிற்கும்" என்று கூறினார்.

"நாம் அன்றே இதுகுறித்து உறுதிப்படுத்திவிட்டோம். அதையே நாம் இப்போதும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அமைப்பு முறை தீர்வாகாது. எமது அரசியலமிப்பின் 9 ஆவது அத்தியாயம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று அவர் கூறினார்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அத்தியாயம் என்பது பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமையும், உயர்ந்த இடமும் வழங்குகிறது. ஆகவே பெளத்த மத்தத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும். ஏனைய மதங்களுக்கான இடம் அத்தியாயம் 10 மற்றும் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

"முன்னைய அரசாங்கங்கள் பெளத்த மதத்திற்கு வழங்கிய அதே முன்னுரிமையினையும், உயர்ஸ்த்தானத்தையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசும் வழங்கும்" என்று விஜித்த ஹேரத் அங்கு உறுதி வழங்கினார்.

https://www.tamilguardian.com/content/who-sri-lankas-foreign-minister-vijitha-herath

  • Like 3
  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.