Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

புலிகளை மட்டுமே சுயபரிசோதனை செய்ய விரும்புகிறார்கள்.

புகப்புத்தகத்திலும் அப்பப்ப புலிகளால் கொல்லப்பட்டவரின் நினைவுதினம் என்று சிலபடங்களுடன் போடுவார்கள்.

மற்றைய இயக்கங்களும் சரிக்குசரி செய்தது தானே அவர்களின் தலைவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் தானே போய் விசாரிக்கலாமே.

பழைய ஜேவிபியைப் பற்றி பலருக்கும் தெரியாது.ரஞ்சித் எழுதுவதால் அறிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ந்தும் எழுதுங்கள் ரஞ்சித்.

மற்ற இயக்கங்கள், ஜேவிபி, எல்லாரையும் பரிசோதனை செய்யலாம், ஆனால் புலிகளை மட்டுமல்ல, "புலிகளின் பின்னால் இருக்கும் வாலைக்" கூட விமரசனம் செய்யக் கூடாது என்பது தானே "தமிழ் தேசிய வியாதி?" இந்த தீர்க்க இயலாத வியாதியை வைத்துக் கொண்டு , "மக்கள் எங்களை வெல்ல வைக்கவில்லையே!" என்று புலம்புவதில் அர்த்தம் என்ன இருக்கிறது? 

  • Replies 237
  • Views 13.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

மற்ற இயக்கங்கள், ஜேவிபி, எல்லாரையும் பரிசோதனை செய்யலாம், ஆனால் புலிகளை மட்டுமல்ல, "புலிகளின் பின்னால் இருக்கும் வாலைக்" கூட விமரசனம் செய்யக் கூடாது என்பது தானே "தமிழ் தேசிய வியாதி?" இந்த தீர்க்க இயலாத வியாதியை வைத்துக் கொண்டு , "மக்கள் எங்களை வெல்ல வைக்கவில்லையே!" என்று புலம்புவதில் அர்த்தம் என்ன இருக்கிறது? 

புலிகளையும் வாலுகளையும் விமர்சனம் செய்யுங்கள்.

அதே மாதிரி மற்றவர்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இப்பவும் நான் வீட்டில், மற்றவர்களுடன் கதைக்கும் போது, சில சிங்களச் சொற்கள் தானாகவே/ இயல்பாகவே என் வாயிலிருந்து வந்துவிடும். அந்தளவுக்கு நான் சிங்களவர்களுடன் பல வருடங்களாக பழகியிருக்கின்றேன். இன்றும் சிங்கள சினிமாவையும். பாடல்களையும் ரசிக்கின்றேன். பல சிங்கள நண்பர்கள் முக நூலிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி இன்றும் தொடர்பில் உள்ளனர். கனடாவுக்கு வந்து சில நாட்கள் எம்முடன் தங்கிச் செல்லும் ஒரு சிங்களவர் கூட இருக்கின்றார்.

நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு தான் அவர்கள் நடந்து கொள்வர். பழகும் போது, உயிரையே கொடுக்கின்றவர்கள் போல பழகுவார்கள். தமிழர் தாயகம், சக உரிமை என்று கதைக்க வெளிக்கிட்டால், உயிரையே எடுக்கும் அளவுக்கு கோபப்படுவார்கள்.

சிங்கள இனவாதம் ஒரு போதும் மாறாது, நிறங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும்.

என‌க்கு சுத்த‌மாய் சிங்க‌ள‌ம் தெரியாது

என‌து அண்ணா சிங்க‌ள‌ம் ந‌ல்லா க‌தைப்பார்

உங்க‌ட‌ வ‌ய‌தில் ஒரு சிங்க‌ள‌ அண்ணா என்னோட‌ ந‌ல்ல‌ மாதிரி என்னை த‌மிழில் த‌ம்பி என்று தான் அழைப்பார்...................அவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் சுத்த‌மாய் பிடிக்காது.......................ப‌ழ‌க‌ ந‌ல்ல‌வ‌ர் போராட்ட‌ம் மொழி என்று வ‌ந்தால் அவ‌ர் த‌ன் இன‌ ப‌க்க‌ம் தான் நிப்பார்..................அவ‌ரின் தொட‌ர்வு இல்லாம‌ போய் ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு.......................த‌மிழ் காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ம‌னியின் ந‌கைச்சுவை விரும்பி பாப்பார்

கிரிக்கேட் விளையாட்டு என்றால் கானும்......... எங்க‌ளையும் விளையாட‌ வ‌ர‌ சொல்லி க‌ல‌ க‌ட்டும் விளையாட்டு...................

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் ந‌ல்ல‌வை ஆனால் மொழி போர் வ‌ந்தால் கெட்ட‌வை

அனுராவை ப‌ற்றி  ம‌ற்ற‌ உற‌வுக‌ள் சொல்லுவ‌து  போல் பொறுத்து இருந்து பாப்ப‌து ந‌ல்ல‌ம் அவ‌ரின் செய‌ல் பாடு எப்ப‌டி இருக்கு என்று அவ‌ர் ப‌த‌வி ஏற்று இர‌ண்டு கிழ‌மையும் ஆக‌ வில்லை அத‌ற்க்கிடையில் அவ‌ரை தூற்றுவ‌த‌ த‌விர்க்க‌லாம்.......................அனுராவும் இன‌வாத‌ம் பேசினால் இவ‌ரையும் க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு...........................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இப்பவும் நான் வீட்டில், மற்றவர்களுடன் கதைக்கும் போது, சில சிங்களச் சொற்கள் தானாகவே/ இயல்பாகவே என் வாயிலிருந்து வந்துவிடும். அந்தளவுக்கு நான் சிங்களவர்களுடன் பல வருடங்களாக பழகியிருக்கின்றேன். இன்றும் சிங்கள சினிமாவையும். பாடல்களையும் ரசிக்கின்றேன். பல சிங்கள நண்பர்கள் முக நூலிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி இன்றும் தொடர்பில் உள்ளனர். கனடாவுக்கு வந்து சில நாட்கள் எம்முடன் தங்கிச் செல்லும் ஒரு சிங்களவர் கூட இருக்கின்றார்.

நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு தான் அவர்கள் நடந்து கொள்வர். பழகும் போது, உயிரையே கொடுக்கின்றவர்கள் போல பழகுவார்கள். தமிழர் தாயகம், சக உரிமை என்று கதைக்க வெளிக்கிட்டால், உயிரையே எடுக்கும் அளவுக்கு கோபப்படுவார்கள்.

சிங்கள இனவாதம் ஒரு போதும் மாறாது, நிறங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும்.

பிரான்சில் சிங்களவர்கள் ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பழக்கம் உண்டு. தனிப்பட்ட முறையில் அவர்கள் எனக்கு தரும் மதிப்பு என்பது சொற்களால் சொல்லி விடமுடியாது. ஆனால் போர் காலத்தில் அவர்களது வணக்கம் தெரிவுக்கும் முகபாவனையிலேயே அங்கே என்ன செய்தி என்பதை காணலாம். அதிலும் ஜேவிபியினர் எம்மை போல அரச கொடுமைகளால் ஓடி வந்ததால் அரசை கண்டிப்பர் என்று பார்த்தால் அரசினதும் அத்தனை கொடூரமான தாக்குதல்களையும் வரவேற்பர். ஆரவாரம் செய்வர். தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு மட்டும் அவர்களுக்குள் எந்த பிரிவுகளும் அரசியலும் இருக்காது.  இவ்வளவும் எனக்கு பின்னால் மட்டும். அதிலும் தெளிவு. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் ந‌ல்ல‌வை ஆனால் மொழி போர் வ‌ந்தால் கெட்ட‌வை

நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள்.

சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா?

இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை    வந்திருக்கிறது.  யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி  வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக்  கோபம் வருகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த  தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் ப‌த‌வி ஏற்று இர‌ண்டு கிழ‌மையும் ஆக‌ வில்லை அத‌ற்க்கிடையில் அவ‌ரை தூற்றுவ‌த‌ த‌விர்க்க‌லாம்.

இர‌ண்டு கிழ‌மையும் ஆக‌வில்லை அநுர குமார திசாநாயக பதவி ஏற்ற  நாளில் இருந்து அவரை தமிழர் காவலனாக போற்றி புகழ்கின்றனரே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

புலிகளையும் வாலுகளையும் விமர்சனம் செய்யுங்கள்.

அதே மாதிரி மற்றவர்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

இரண்டையும் ஏன் ஒருவரே செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? புலிகளை விமர்சனம் செய்தால் "ஏன் பழசக் கிளறுகிறீர்கள்😂?" என்று கருத்து வைப்பதும், ஏனைய தரப்புகளின் வரலாற்றை "Just நினைவு படுத்துகிறோம்" என்று glorify செய்வதும் தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது. இதை விட விமர்சனம் யாருக்கும் முழு நேரத் தொழில் கிடையாது இங்கே!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kavi arunasalam said:

நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள்.

சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா?

இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை    வந்திருக்கிறது.  யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி  வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக்  கோபம் வருகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த  தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.

இப்ப‌த்த‌ இள‌ம்த‌லைமுறை சிங்க‌ள பிள்ளைக‌ளாய் இருந்தாலும் ச‌ரி த‌மிழ் இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ளாய் இருந்தாலும் ச‌ரி

இவ‌ர்க‌ளுக்குள்  ந‌ல்ல‌ ந‌ட்பு இருக்கு 

அது ப‌டிப்பில் தொட‌ங்கி ந‌ல்ல‌ தோழ‌ன் தோழி ஆகி விட்டின‌ம்

நான் சொன்ன‌ சிங்க‌ள‌ அண்ணா என‌க்கு ப‌ல‌ முறை ச‌மைத்து த‌ந்து இருக்கிறார்

ஒன்டாக‌ ப‌ல வாட்டி சாப்பிட்டு இருக்கிறோம்

என‌க்கும் அவ‌ருக்கும் ந‌ல்லா ஒத்து போகும் கிரிக்கேட் எங்க‌ளை ந‌ல்ல‌ அண்ண‌ன் த‌ம்பி ஆக்கிய‌து................எல்லாரும் ஒன்னா கிரிக்கேட் விளையாடின‌த‌ ம‌ற‌க்க‌ முடியாது இது ந‌ட‌ந்து இப்ப‌ 26 வ‌ருட‌ம் இருக்கும் 

அப்பேக்க‌ நான் சின்ன‌ன் 

அவ‌ர் என்னை விட‌ குறைந்த‌து 13வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்.....................பின்னைய‌ கால‌ங்க‌ளில் மீண்டும் இல‌ங்கை போய் விட்டார் அதோட‌ தொட‌ர்வு இல்லை...................எங்கு இருந்தாலும் அந்த‌ ச‌கோத‌ர‌ன் ந‌ல்லா இருக்க‌னும்🙏..............................

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2024 at 13:12, விசுகு said:

ஆரம்ப காலங்களில் இன முரண்பாடு என்பது ஒரு சந்தேகமாக மட்டுமே இருந்தது. பின்னர் அது ஆழமான வடுக்கள் காயங்கள் நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்களால் மாற்றுவழி அற்ற நிரந்தரமான பகையாக பல தலைமுறைகளாக தொடரும் ஓர் நாட்டில் ஒரே ஒருவர் ஒருயொரு தேர்தல் வெற்றியை அதுவும் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற ஒருவர் செய்வார் என்று சிந்திப்பதே அதி உயர் சுயநலம். 

தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போர், சிறிலங்கா தேசியர், சிறிலங்கா தேசிய விசுவாசிகள் மற்றும் புலியெதிர்ப்பாளர்கள் என்போருக்கு அனுரவின் தேசியம் பிடித்திருக்கிறது. 30 ஆண்டுகளில் சில காணாமற்போதல்கள், தமிழ்த் தேசியத்தை நேசித்தோரை கொலை செய்தல் என நகர்ந்த யாழ் குடாநாட்டு இளையோரது மனநிலை வேறாகவே இருக்கும். இவற்றுக்கூடாகச் சிங்களத் தேசியமானது அசுர பலம் பெறப்போகிறது. அதன்பின்னரே அநுர திஸ்ஸவின் நிஜ(உண்மை)முகம் தெரியவரும். அதுவரை சிறு தேன்நிலவோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்வரை அரசியல் ஓடப்போகிறது 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

பிரான்சில் சிங்களவர்கள் ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பழக்கம் உண்டு. தனிப்பட்ட முறையில் அவர்கள் எனக்கு தரும் மதிப்பு என்பது சொற்களால் சொல்லி விடமுடியாது. ஆனால் போர் காலத்தில் அவர்களது வணக்கம் தெரிவுக்கும் முகபாவனையிலேயே அங்கே என்ன செய்தி என்பதை காணலாம். அதிலும் ஜேவிபியினர் எம்மை போல அரச கொடுமைகளால் ஓடி வந்ததால் அரசை கண்டிப்பர் என்று பார்த்தால் அரசினதும் அத்தனை கொடூரமான தாக்குதல்களையும் வரவேற்பர். ஆரவாரம் செய்வர். தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு மட்டும் அவர்களுக்குள் எந்த பிரிவுகளும் அரசியலும் இருக்காது.  இவ்வளவும் எனக்கு பின்னால் மட்டும். அதிலும் தெளிவு. 

வணக்கம் விசுகர்!
சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீது  அப்படி ஒரு இன வன்மம் வர காரணம் என்ன? அது எங்கிருந்து உருவாகியது? அது உருவாக காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

நான் நினக்கின்றேன் விசுகு ஐயா புலிகளும் ஜேவிபியும் ஒர் புள்ளியில் இணைந்த ஒரு சந்தர்ப்பம் எப்போதென்றால் என்றால் இந்திய அமைதிகாக்கும் படையை வடக்கு கிழக்கில் இருந்து விரட்டுவ்தில்.

ஜேவிபி இந்திய படை வருகையை மூர்க்கமாக எதிர்த்தது என நினைக்கின்றேன். (நான் அப்பொழுது  சிறுவனாக ஓ.எல் செய்த காலம். சரியாக தெரியவில்லை. ப‌ரிட்சைகள் எல்லாம் தள்ளிப்போடப்பட்டது)

இது ஒரு நல்ல செயல் என்று நினைக்கின்றேன், இல்லாவிட்டால் இன்னும் நிறைய தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். 

விசுகு ஐயா, ஈழப்பிரியன் ஐயா நந்தன் போன்ற அந்த காலத்தில் இளஞ்ர்களாக இருந்தவர்களுக்கு இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்திருந்தால் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதரப்பின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான செய்திகள் முழுமையான வரலாறு ஆக முடியாது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

1. ஒரு நிலைசார்ந்த பார்வை: மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பெரும்பாலும் ஒரு தரப்பின் பார்வையை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இதனால், பல்வேறு சம்பவங்கள் ஒருவகையான சாயலோடு விவரிக்கப்படுகின்றன, மற்ற தரப்புகளின் அனுபவங்கள் மற்றும் கருத்துகள் முழுமையாகப் பிரதிபலிக்கப்படுவதில்லை.

2. உண்மையின் சிக்கலான பரிமாணங்கள் மறைக்கப்படுகின்றன: உணர்ச்சிகரமான செய்திகளில் உண்மைகளை மிகைப்படுத்தியவாறு அல்லது ஒரு மையத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவதால், வரலாற்றின் முழுமையான, சிக்கலான நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியாது.

3. மோசமான முன்னோக்குச் சித்திரம்: உணர்ச்சி சார்ந்த செய்திகளை முன்னிறுத்துவது நிகழ்வுகளை சரியான கோணத்தில் உணர வைக்காமல், பயம், கோபம் அல்லது துன்பம் போன்ற உணர்ச்சிகளை உண்டாக்கி, சமூகத்தில் தவறான புரிதல்களையும் பிரிவினையும் ஏற்படுத்தும்.

4. முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை: மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் சில நேரங்களில் உண்மைகளையும் தவறாக வடிவமைக்கின்றன. இதனால் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, புதிய தலைமுறைகள் அவை பற்றி தவறான எண்ணங்களுடன் வளர வாய்ப்பு அதிகரிக்கிறது.

5. நுணுக்கமான விவாதங்கள் இல்லாதது: உணர்ச்சிகரமான செய்திகளில் சரியான ஆராய்ச்சி, விவாதங்கள், மற்றும் பல்வேறு தரப்புகளின் குரல்கள் அரிதாக இடம் பெறுகின்றன. இது வரலாற்றின் முழுமையான புரிதலை இழக்கச் செய்யும்.

சமீப கால வரலாற்றை முழுமையாக உணர்வதற்கும் நியாயமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைவரின் குரல்களையும், உண்மையைச் சீரியமாயும் ஆழமாகவும் ஆய்வு செய்வது அவசியம்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போர், சிறிலங்கா தேசியர், சிறிலங்கா தேசிய விசுவாசிகள் மற்றும் புலியெதிர்ப்பாளர்கள் என்போருக்கு அனுரவின் தேசியம் பிடித்திருக்கிறது. 30 ஆண்டுகளில் சில காணாமற்போதல்கள், தமிழ்த் தேசியத்தை நேசித்தோரை கொலை செய்தல் என நகர்ந்த யாழ் குடாநாட்டு இளையோரது மனநிலை வேறாகவே இருக்கும். இவற்றுக்கூடாகச் சிங்களத் தேசியமானது அசுர பலம் பெறப்போகிறது. அதன்பின்னரே அநுர திஸ்ஸவின் நிஜ(உண்மை)முகம் தெரியவரும். அதுவரை சிறு தேன்நிலவோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்வரை அரசியல் ஓடப்போகிறது 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

வரலாற்றை அறிந்த பார்வை. நன்றி 

இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இராணுவ ரீதியாக புலிகளை, தமிழர்களை வெல்ல முடியாது என்று தெரிந்ததில் இருந்து ஆரம்பித்தது இது. இதன் ஆபத்தை 2002இல் தான் நான் முதல் முதலில் பார்த்தேன் அனுபவித்தேன். இதன் மூலம் (தாயகம்  மற்றும் புலம்பெயர்) தமிழர்களை பிரித்தல், சிதைத்த ல், பகைமையை மூட்டுதல், பல குழுக்களாக்குதல் இத்தனையும் அன்பால் ஒன்றுகூடி கோடரிக்காம்புகளை வைத்து செய்தல் . இந்த நிகழ்ச்சி நிரலின் கடைசியில் நிற்கிறோம். (தாயகம்  மற்றும் புலம்பெயர்) தமிழர்கள் கட்டமைப்புக்கள் சிதைக்க பட்டாச்சு.  பல குழுக்கள் பல கட்சிகள் என்று பலமிழந்தாச்சு. இனி அங்கங்கே உள்நுழைந்து கிடக்கும் ஒற்றர்கள் ஒவ்வொரு அமைப்பாக ஒவ்வொரு கட்சியாக அநுரா என்கிற மரத்தை சுற்றி படர்வர். சுபம். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கெதிரான தடையினை நீக்க விடமாட்டோம், நாடு பிளவுபடுவதையும் தடுப்போம் மக்கள் விடுதலை முன்னணி

25 தை 2002

 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான 46 சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்கள் இணைந்து நடத்திய சந்திப்பொன்றில் தமக்குள் ஒற்றுமையாகவும், தனித்தனியாகவும் இணைந்து புலிகள் மீது இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குவது குறித்து நடந்துவரும் முயற்சிகளுக்கு எதிராக இயங்கப்போவதாக முடிவெடுத்திருக்கின்றன. அத்துடன், நாடு பிளவுபடுவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவை சூளுரைத்திருக்கின்றன. 

சிங்கள இனவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, மகஜன எக்சத் பெரமுன, சிகல உறுமய ஆகியவை தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளுக்கெதிரான நிலைப்பாட்டினை எடுத்துவருவதும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இலங்கையில் புலிகள் மீது போடப்பட்டிருக்கும் தடையினை நீக்கும் ரணிலின் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும்விதமாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் , புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரிவருவதையும் தாம் ஏற்கப்போவதில்லை என்று இக்கட்சிகள் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றன. 

இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேசத்திலும் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் சிங்களத் தேசியக் கட்சிக்ள் இணைந்து அதனை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணிக்கும் மகஜன எக்சத் பெரமுனக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் பெளத்த இனவாத அமைப்பான ஜாதிக்க சங்க சபா அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இலங்கை மக்களின் நலன் கருதி புலிகள் மீதான தடையினை நீக்குவதை எதிர்க்க ஒன்றுசேர்ந்து செயற்படுவது என்று முடிவெடுத்திருக்கிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6652

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்" எனும் தனது போராட்டத்தைக் கூர்மையாக்கும் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி
29 தை 2002

jvp-demo_col_1_290102.jpg

பல நூற்றுக்கணக்கான மக்கள் விடுதலை முன்னணி இனவாதிகள் கொழும்பின் பல பகுதிகளிலும் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று கோஷமிட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 16 உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி எனும் நிலையினை இந்த இனவாதக் கட்சி அடைந்திருக்கிறது. சிங்கள பெளத்த இனவாதிகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடிவரும் இக்கட்சி தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி அடிப்படியில் அதிகாரங்கள் பகிரப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறுகிறது.

jvp-demo_col_2_290102.jpg

ரணில் தலைமையிலான அரசிடம் தாம் முன்வைத்திருக்கும் நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாதவிடத்து நாடுத‌ழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு இவ்வினவாதக் கட்சி தனது பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவித்தலும் விடுத்திருக்கிறது.

"அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஈழக்கனவிற்கு வலுச்சேர்க்க ரணில் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கெதிராக நாற்பது இலட்சம் சிங்கள மக்கள் சுதந்திரக் கட்சித் தலைமையிலான முன்னணிக்கும், இன்னும் ஒன்பது இலட்சம் சிங்கள மக்கள் எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே ரணிலின் அரசாங்கம் புலிகளுக்கு வடக்கையும் கிழக்கையும் தாரைவார்த்துக் கொடுப்பதற்குச் சிங்கள மக்கள் அவருக்கு ஆணை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது" என்று மூத்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவர் மகரகமவில் நடைபெற்ற பேரணியின்போது கூறினார். . 

சந்திரிக்காவின் ஆட்சியின்போது மாவனல்லவில் முஸ்லீம்கள் மீது சிங்கள இனவாதிகளின் தாக்குதலை சந்திரிக்கா தடுக்கவில்லை என்கிற காரணத்தை முன்வைத்து முஸ்லீம் காங்கிரஸ் அவருக்கு வழங்கிவந்த ஆதரவை இரத்துச் செய்தபோது, சந்திரிக்காவைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனை அடிப்படையில் முன்வந்தனர். அந்த நிபந்தனை யாதெனில் தமிழர்களுக்கு பிராந்திய அதிகாரத்தினை வழங்கும் எந்த பேச்சுக்களிலும் சந்திரிக்கா ஈடுபடலாகாது என்பதுதான். அதனைச் சந்திரிக்காவும் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

jvp-demo_col_3_290102.jpg

ரணில் அரசின் சமாதானப் பேச்சுக்களுக்கெதிராகக் கடும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் மக்கள் விடுதலை முன்னணி, "தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை, இருப்பதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் தூண்டப்பட்ட ஈழக்கனவு மட்டும்தான், ஆகவே தமிழர்களுக்கு சமஷ்ட்டி அடிப்படையிலோ அல்லது அதிகாரப் பகிர்வு அடிப்படையிலோ தீர்வு வழங்கினால் அது நாட்டைப் பிளவுபடுத்திவிடும், ஆகவே அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்" என்கிற கோஷத்தினை முன்வைத்து நாடெங்கிலும் சிங்கள மக்களிடையே கடுமையான பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாக்ஸிய அரசு ஒன்றை அமைத்து, அதன் மூலம் தமிழர்களுக்கு ஏனைய மக்களைப்போன்ற உரிமைகளை வழங்கினால் சரி என்றும் அது கூறி வருகிறது. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6663

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவருக்கு நிகரானவராம்...😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்கிப் பார்க்கட்டும் - ரணில் அரசிற்குச் சவால் விடும் சிங்கள இனவாதக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி

6 மாசி 2002

தீவிர இனவாத சிங்கள இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப் புலிகள் மீதான தடையினை முடிந்தால் நீக்கிப் பார்க்கட்டும் என்று ரணில் அரசிற்குச் சவால் விட்டிருக்கிறது.

நுகேகொடையில் சுமார் 2000 கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவே இதனைக் கூறியிருக்கிறார். மேலும் இக்கூட்டத்தில் பங்குபற்றிய பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச பேசும்போது புலிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை நாட்டிற்குச் செய்யும் துரோகம் என்று கூறினார். மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சித் திட்டத்தின்படியே ஈழவாதிகளுக்கு அரசு பணிந்துபோகிறது என்றும் அவர் கூறினார். 

jvp_protest_1_060202.jpg

நுகேகொடை மேடையில் அமர்ந்திருக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர் அஞ்சான் உம்மா

சந்திரிக்காவின் ஆட்சியைத் தக்கவைக்க இனவாதப் பேரம் பேசிய இக்கட்சி, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகச் சிங்கள மக்களை அணிதிரட்டி வருவதோடு, தமிழ் மக்களுக்கு பிராந்திய அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்படுவதையும் எப்படியாவது தடுத்தே தீருவோம் என்று சூளுரைத்து வருகிறது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சந்திரிக்காவின் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட இனவாதிகளான இக்கட்சியினர், சிங்களவர்களின் நாட்டைப் பிளவுபடுத்தி ஈழவாதிகளுக்குக் கொடுக்கவே ரணில் முயல்கிறார் என்று கடுமையான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டமை நினைவிலிருக்கலாம். 

புலிகளுடனான ரணில் அரசின் பேச்சுக்களுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி வரும் இக்கட்சியின் கூட்டங்களுக்கு பெருமளவில் சிங்களவர்கள் கூடிவருவது, இக்கட்சியின் இனவாதப் பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பதையே காட்டுகிறது. நுகேகொடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்களவர்களின் எண்ணிக்கையே இதற்குச் சாட்சி.

jvp_protest_2_060202.jpg

ரணில் அரசு புலிகளுடன் நடத்திவரும் பேச்சுக்கள் வெற்றியடையும் பட்சத்தில் இலங்கை தற்போது சிக்குண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து வெளிவருவது சாத்தியமாதலால், அதனைத் தடுத்து தனது செல்வாக்கினை ஏழைச் சிங்கள மக்களிடையே வலுவாக்கும் குறுகிய நோக்கத்திலேயே இனவாதிகளான ஜனதா விமுக்திப் பெரமுனக் கட்சியினர் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெற்கின இடதுசாரிப் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6685

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விடுதலை முன்னணி சோசலிசக் கோட்பாடுகளை மறந்து குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் கக்குகிறது - ‍ கொழும்பிலிருந்து வெளிவரும் ஹிரு பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம்

17 மாசி 2002

jvp-protest-anura

கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழான ஹிரு, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவரும் சிங்கள இனவாதிகளின் கூடாரமான ஜனதா விமுக்திப் பெரமுனவைச் சாடியிருக்கிறது. " வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைக் கொடுக்க மறுப்பதன் மூலம் சோசலிஸ் சித்தார்த்தங்களை மக்கள் விடுதலை முன்னணி தூக்கியெறிந்து செயற்பட்டு வருகிறது" என்று இப்பத்திரிக்கை விமர்சனம் செய்திருக்கிறது.

"தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மிகவும் கீழ்த்தரமான இனவாத அரசியலை அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது. இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் குறித்தோ மக்கள் விடுதலை முன்னணிக்கு அல்க்கறையோ அல்லது அறிவோ இருக்கவில்லை" என்றும் அது மேலும் கூறுகிறது.

"தமிழர்களுக்கு உரிமைகள வழங்கப்பட்டு அவர்கள் நாட்டின் ஏனைய மக்கள் போன்று சுயகெளரவத்துடன் வாழுவதை உறுதிசெய்யும் நோக்குடன் நடக்கும் பேச்சுக்களை எப்படியாவது குழப்பிவிட மக்கள் விடுதலை முன்னணி கங்கணம் கட்டியிருக்கிறது. இக்கட்சியைப் போன்று இன்னும் சில தெற்கின் இனவாதக் கட்சிகள் வடக்குக் கிழக்கில் பட்டினியை எதிர்நோக்கும் தமிழ் மக்களுக்கு உணவையும் மருந்துகளையும் அனுப்பக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் அதேவேளை, தெற்கில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதாகவும் பிரச்சாரம் செய்துவருகின்றன" என்றும் அது சாடியிருக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனும் கோஷத்தை முன்வைத்தே மக்கள் விடுதலை முன்னணி சிங்கள மக்களை அணிதிரட்டி பேச்சுக்கள் தடம்புரளச் செய்ய‌ முயன்று வருகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6709

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி இனவாதிகள்

23 மாசி 2002

JVP leaders Wimal Weerawansa & Somawansa Amerasinghe

சிங்கள இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தனது கட்சி உறுப்பினர்கள் உட்பட 40 பா.உறுப்பினர்களின் கையொப்பத்துடன், ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தினை நடத்தவேண்டும் என்று சபையில் மகஜர் ஒன்றைக் கையளித்திருக்கிறது. 
"புலிகளுடன் ரணில் அரசு செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதனுடன் இணைந்த யுத்த நிறுத்தமும் நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாரிய அச்சுருத்தலை விடுத்திருக்கிறது" என்று அக்கட்சி தனது மகஜரில் குறிப்பிட்டிருக்கிறது. 

மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் பெளத்த துறவிகள் அமைப்பு இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியதோடு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஒழுங்குசெய்தனர். 

"புலிகளும் ரணிலும் தனித்தனியாகக் கையொப்பம் இட்டுள்ள இந்த ஆவண்ங்கள் நாடு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் வெளிப்படையாக இதுவரை காட்டப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நாட்டின் தலைவரான சந்திரிக்காவிற்குக் கூட இந்த ஆவணம் இதுவரையில் காண்பிக்கப்படவில்லை" என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயளாளர் விமல் வீரவன்ச சபையில் கூறினார்.. 

இதேவேளை இலங்கையில் இருக்கும் பிரதான தொழில் அமைப்புக்கள், வர்த்த சம்மேளங்கள சந்திரிக்காவிற்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் சமாதானத்திற்காகக் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம் என்று இணைந்த கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருக்கின்றன. மேலும், ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டைப் பிளவுபடுத்தப்போகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துவரும் விசமப் பிரச்சாரத்தையும் வர்த்தக சம்மேளங்கள் கண்டித்திருக்கின்றன. 

நெருங்கிவரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடக் காத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாதிகளின் கட்சி, தனது தேர்தல்ப் பிரச்சாரங்களில் பேச்சுவார்த்தையினால் நாடு பிளவுடபப்போகிறது, தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது என்கிற கோசங்களை முன்னிறுத்தி வருகின்றனர்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6732

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!
சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீது  அப்படி ஒரு இன வன்மம் வர காரணம் என்ன? அது எங்கிருந்து உருவாகியது? அது உருவாக காரணம் என்ன?

நான் நினைக்கிறேன் இது ஒரு வகை பொறாமை சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடியது. தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழர்களின் அறிவு வீரம் உழைப்பு சார்ந்த தாழ்வு மனப்பான்மையால் சிங்கள தலைமைகளால் பௌத்த மதம், மதம் மற்றும் பாடப் புத்தகங்களில் இருந்து இவை விதைக்கப்படுகின்றன. அதனால் தான் என்னதான் இருந்தாலும் கடைசியில் அவர் அங்கே தான் வந்து நிற்கிறார்கள் நிற்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nochchi said:

தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போர், சிறிலங்கா தேசியர், சிறிலங்கா தேசிய விசுவாசிகள் மற்றும் புலியெதிர்ப்பாளர்கள் என்போருக்கு அனுரவின் தேசியம் பிடித்திருக்கிறது

நட்பார்ந்த நொச்சி,

இங்கு யாரும் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை. சிங்கள தேசிய விசுவாசிகளும் இல்லை.  நீங்கள் நினைக்கும், விரும்பும் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்களை யாராவது வைத்தால் அவர்களை, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது தேச விரோதிகள் எனச் சாயம் பூசப் பார்க்கிறீர்கள்.

ஒரே இடத்தையே நீங்கள்  சுற்றிச் சுற்றி வருவதால் தேசியத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் வரையறை செய்து வைத்திருக்கும் அந்தத் தேசியத்தை விட்டு வெளியே வந்து பேசுங்கள்.

புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான ஒரு போராட்ட வடிவம். அதில் தோற்று விட்டோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்களையும் சந்தித்து விட்டோம். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லைஎன்று பிரபாகரன் சொன்னதை இங்கு நினைவு கூர்கிறேன்.

இலங்கை அரசியலில் வரலாற்றில் இல்லாத ஒரு மாற்றம் இன்று நிகழ்ந்திருக்கிறது. ‘இலங்கையில் இடதுசாரி ஆட்சியா?’ என அயல்நாடு உட்பட  மேற்கத்திய நாடுகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனஇப்பொழுது எங்களுக்கு ஒரு புதிய தளம் கிடைத்திருக்கிறது. அங்கேயும் ஒரு தடவை நாங்கள் முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கும் கால அவகாசம் தர வேண்டித்தான் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் முடிய வேண்டும்.

சர்வதேசமோ, இந்தியாவோ தங்கள் நலன்களைக் கருதாமல் தமிழர்களின் உரிமைகளுக்கான ஒரு தீர்வைத் தரப் போவதில்லை என்பதும் நாங்கள் அறிந்த பாடம்தான். சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்க நாங்கள் செய்யாத ஆர்ப்பாட்டங்களா? சனல் 4 வெளியிடாத ஆவணங்களா? சங்கு ஊதித்தான் தெரியப்படுத்த வேண்டுமா?

இன்று நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனக் கொலைகள், யார் சொல்லியும் கேளாமல் அடுத்த நாட்டுக்குள் புகுந்து அழிக்கும் இஸ்ரேலின் ஆணவம்என்று பலதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கு புதிதாக நாங்கள் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது?

விட்டால் தமிழ் மக்கள்  சிங்களத்துடன் ஒத்துப் போய் விடுவார்களோ என்ற ஒரு அச்சம் தான் இன்று பலரைக் கிலி கொள்ள வைத்திருக்கிறது. தேசியத்தை வைத்து எழுதுபவர்கள், மக்கள் மத்தியில் தங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் இப்பொழுது பலமாக குரல் தருவதும் அதற்காகத்தான். ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பில் மூன்று பேர்கள் இருந்தார்கள். அதில் அனுராவும் இருந்தார். அப்பொழுது அவரைப் பற்றிய விபரங்களை மக்களுக்கு நினைவூட்டி இருக்கலாம். அவர் வென்றதன் பின்னர், இப்பொழுது எதற்கு இவ்வளவு அவசரம்?

வெற்றுப் பேச்சு மறவர்களுக்கு புது வேலை ஒன்று வந்திருக்கிறது, அது அனுராவை விரைவில் வெளியே அனுப்புவது. இப்படியான செயல்களைச் செய்விக்க அயல்நாடு கூடத் தயங்காது.  ஆனால் செய்பவர்களுக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது.  ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது இப்படியானவர்கள்தான் தேசியத்தை அழிப்பவர்கள் என்று.

இன்னும் ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்களுக்காக நிழலி ஒரு திரியைத் திறந்திருந்தார்.

உங்களுக்கான அழைப்பையும் நான் அங்கே ஏற்கெனவே விடுத்திருந்தேன். வாருங்கள்  அடுத்தது என்ன?’  என்பதை அங்கே பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

மக்கள் விடுதலை முன்னணி சோசலிசக் கோட்பாடுகளை மறந்து குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் கக்குகிறது - ‍ கொழும்பிலிருந்து வெளிவரும் ஹிரு பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம்

17 மாசி 2002

jvp-protest-anura

கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழான ஹிரு, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவரும் சிங்கள இனவாதிகளின் கூடாரமான ஜனதா விமுக்திப் பெரமுனவைச் சாடியிருக்கிறது

தமிழருக்கு எதிராகத் தமிழரே செயற்படும் வேளையில் பரவாயில்லையே தமிழரது உரிமை தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியிருப்பதைப் பதிவிட்டமைக்கும், தங்கள் தேடலுக்கும் நன்றி. இந்தப் படத்தில் இருப்பவர்தானே தற்போதைய சானாதிபதி.
 நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

தமிழருக்கு எதிராகத் தமிழரே செயற்படும் வேளையில் பரவாயில்லையே தமிழரது உரிமை தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியிருப்பதைப் பதிவிட்டமைக்கும், தங்கள் தேடலுக்கும் நன்றி. இந்தப் படத்தில் இருப்பவர்தானே தற்போதைய சானாதிபதி.
 நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இப்படி எழுதிய ஆய்வாளர்கள் இன்று எத்தனை பேர் உயிரோடு உள்ளார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

2002 ல் ரணிலைடனான பேச்சுவார்த்தைகளை அன்றைய ஜேவிபி எதிர்ததத்தை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ் தெற் செய்திகள் மட்டுமல்ல அந்த பேச்சுவார்ததைகள் குழம்பியதற்கும் அதிலிருந்து வெளியேறி யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு  புலிகள் தரப்பும் மகிந்த தரப்பும் எப்படியெல்லாம் அன்று  முனைப்பு கட்டியது என்பதையும் அன்று ஐரோப்பிய யூனியன் தொடக்கம் நோர்வே, இணைத்தலைமை நாடுகள் பேச்சுவார்ததையில் ஈடுபட்ட இருதரப்பினரையும் பற்றிய அறிக்கையிடலையும் அனைத்துலக மனித உரிமைகள் சபை இருபகுதி மனித உரிமை மீறல்களைப்பற்றி வெளியிட்ட அறிக்கைகளையும் இங்கு சேர்தது பதிந்தால் அதுவே உண்மையான வரலாறு.   ஒரு பக்க தாம் சார்ந்த அமைப்பு செய்திகளை வெளியிடும்  தமிழ் நெற்றிறின் செய்திகளையும் வியாக்கியானங்களையும் பரப்புரைகளையும் தருவது வரலாறு அல்ல என்பதை மக்கள் அறிவார்ரகள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, island said:

தலைப்பை மீண்டும் படிக்கவும். புலிகள் காய்ச்சல் அதிகமானால் அதற்கான திரிகளில் பேசவும். 

கொண்டையை அதிக காலத்திற்கு மறைப்பது கடினமானது தான். 

Edited by விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.