Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

ஊடகவியலாளர் சிவராம் படுகொலை லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட் முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/196135

  • கருத்துக்கள உறவுகள்

பல படுகொலைகள் தூசு தட்டப்படும்போலத்தான் இருக்கு! சிலரின் இரட்டைவேடம் அம்பலப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காகம் இருக்க பனம்பழங்கள் விழுந்த பல கதைகள் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை - புதிய அரசு நடவடிக்கை

Vhg அக்டோபர் 13, 2024
1000353915.jpg

ஊடகவியலாளர் தராகி சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய காவல்துறை பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதில் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

சிவராமின் மரணம்

வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்  செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி காவல்துறைக்கு அருகில் கடத்தப்பட்டு, மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் 2006 இல் கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மாத்தறை  வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டல் ஒன்றுக்கு அருகில், கடந்த டிசம்பரில் இடம்பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தல்துவ கூறியுள்ளார்.

https://www.battinatham.com/2024/10/blog-post_89.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். 👍
இந்த முறை.... கருணா என்னும் முரளிதரன் தப்ப வழி இல்லை என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல விடயம். 👍
இந்த முறை.... கருணா என்னும் முரளிதரன் தப்ப வழி இல்லை என்றே நினைக்கின்றேன்.

விசாரணை என்பது நல்ல விடயம். ஆனால், இது ஒரே கல்லிற் பல மாங்காய்களை வீழ்த்தும் விசாரணை நகர்வு. கிழக்கிலே மக்கள் விடுதலை முன்னணி(ஜனதா விமுக்தி பெரமுன) என்ற தேசிய மக்கள் சக்தி(ஜாதிக பலவேகய)க்கான பலமேற்றலுக்கு முரளீதரன் மற்றும் சந்திரகாந்தன் போன்றோரது கட்சிகள் இடையூறாக அமையும் என்ற நோக்கிலே நகர்த்தப்படும் விசாரணையாகவும் நோக்கலாம். உண்மையில் ஊடகவியலாளர்களின் கொலை குறித்த விசாரணை நிமலராஜன் போன்றவர்களில் இருந்து தொடங்கப்படுவதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருந்த மாமனிதர்களான திரு. ரவிராஜ் மற்றும் திரு.பரராசசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். குறிவைத்து நகரும் விசாரணைகளா அல்லது பொதுமையான நியாயம் தேடும் விசாரணையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.     

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

சரியாக சொன்னீர்கள் நொச்சி.  
ஒட்டுக் குழுக்கள்... கொலைகளை செய்து விட்டு அரச செல்வாக்குடன் பாராளுமன்றம் கலைக்கப் படும் வரை சுதந்திரமாக நடமாடி திரிந்தார்கள்.  இது பாவப் பட்டவர்களுக்கு மறுக்கப் பட்ட  நீதி ஆகும்.
அவை எல்லாவற்றையும் தோண்டி எடுத்து நீதி வழங்குவதே சரியான முறை ஆகும்.

அத்துடன்... சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர  என்ற நேர்மையான அதிகாரி மீண்டு சேவையில் இணைக்கப் பட்டுள்ளார். முன்னேற்றகரமான நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.
அவர்  சம்பந்தமான தகவல்களை கீழுள்ள இணைப்பில் நேரம் இருந்தால் பாருங்கள். பல தமிழர்களின் கொலைகளையும்  வெளியே கொண்டு வந்த திறமைசாலி. 👇 👇

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல விடயம். 👍
இந்த முறை.... கருணா என்னும் முரளிதரன் தப்ப வழி இல்லை என்றே நினைக்கின்றேன்.

சிவராமை போட்டது கருணா இல்லை புளொட் என்றே பேச்சு உண்டு தமிழ்சிறி.,

அதேபோல பத்திரிகையாளர் நிர்மலராஜனை சுட்டுக்கொன்ற வழக்கை எடுத்தால் டக்ளஸ் மாட்டிக்கொள்வார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை துரிதபடுத்தினால் பிள்ளையான் & கருணா இனியபாரதி என்று  அப்படி நீண்டுகொண்டே போகும்.

பொது தேர்தலின் பின்னர் எப்படி போகுமோ தெரியாது, ஆனால் கருணாவில் மிக கடுமையாக சிங்களவன் கை வைக்கமாட்டான் என்று நினைக்கிறேன் ஏனென்றால் சிங்களத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.

இல்லாவிட்டால் அரந்தலாவ பிக்குகள் படுகொலை மற்றும் சரணடைந்த 600 பொலிசார் கொலைக்கு கருணாவுக்கு எப்போதோ ஆப்படிச்சிருப்பார்கள்.

அநுர தண்டனை வழங்குறானோ இல்லையோ, பொது தேர்தலில் தமிழர் பகுதியில் இவர்கள் ஆதரவில்லாமல் அநுர கட்சி பெரும்பான்மை பெற்றால், இவர்களினதும் பாரம்பரிய தமிழர் அரசியல்கட்சிகளினதும்  அரசியல் அஸ்தமனம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

வளவன்... நானும் ஊகத்தின் அடிப்படையிலேயே  கருணா கொலையாளியாக இருக்கலாம் என நம்பி இருந்தேன். 
ஏனென்றால் தராகி சிவராம் கொலை செய்யப் படுவதற்கு முன் இரவும் அன்றைய காலையும் கருணாவின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்டதால் கருணா கொலை செய்திருப்பான் என நம்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நல்ல விடயம். 👍
இந்த முறை.... கருணா என்னும் முரளிதரன் தப்ப வழி இல்லை என்றே நினைக்கின்றேன்.

அவர்கள் மட்டுமல்ல. 

நாம் அடக்கி வாசிப்பது நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

வளவன்... நானும் ஊகத்தின் அடிப்படையிலேயே  கருணா கொலையாளியாக இருக்கலாம் என நம்பி இருந்தேன். 
ஏனென்றால் தராகி சிவராம் கொலை செய்யப் படுவதற்கு முன் இரவும் அன்றைய காலையும் கருணாவின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்டதால் கருணா கொலை செய்திருப்பான் என நம்பினேன்.

உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை அவர்கள் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் இல்லை அவர்  செய்திருக்கமாட்டார் இவர் செய்திருக்கமாட்டார் இவரை தவறாக நினைத்துவிட்டோம் என்று பிரித்து பார்க்க, நீங்களும் நானும் அறிந்ததை சொல்கிறோம்  அவ்வளவுதான்.

அற்புதன் கொலையும் விசாரிக்கப்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் படுகொலை உட்பட 7 சம்பவங்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை, காணாமல் போன லலித் குகன் உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சிஐடியினருடனும் உரிய பொலிஸாருடனும் இணைந்து செயற்படுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டரின் மரணம்,வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டலிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/310603

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒட்டுக் குழுக்கள்... கொலைகளை செய்து விட்டு அரச செல்வாக்குடன் பாராளுமன்றம் கலைக்கப் படும் வரை சுதந்திரமாக நடமாடி திரிந்தார்கள்.  இது பாவப் பட்டவர்களுக்கு மறுக்கப் பட்ட  நீதி ஆகும்.
அவை எல்லாவற்றையும் தோண்டி எடுத்து நீதி வழங்குவதே சரியான முறை ஆகும்.

அத்துடன்... சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர  என்ற நேர்மையான அதிகாரி மீண்டு சேவையில் இணைக்கப் பட்டுள்ளார். முன்னேற்றகரமான நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.
அவர்  சம்பந்தமான தகவல்களை கீழுள்ள இணைப்பில் நேரம் இருந்தால் பாருங்கள். பல தமிழர்களின் கொலைகளையும்  வெளியே கொண்டு வந்த திறமைசாலி. 👇 👇

தமிழ்சிறியவர்களே நன்றி. நிச்சயமாக வாசித்தறிகின்றேன்.
அரசியல் தளத்தில் மட்டுமல்ல ஊடகத் தளத்திலும் தமிழ்தேசியம் மீதான தெளிவான நோக்குநிலை மற்றும் செய்திகளைத் துணிவோடு வெளிக்கொண்டுவந்தோர் எனத் திட்டமிட்ட அழிப்புகள் சிங்களப் புலனாய்வால் செய்யப்பட்டவையே. ஆனால், அவற்றைத் தற்போதைய சிங்கள அரசு தோண்டி எடுத்து விசாரணை செய்து நீதிவழங்குமாயின் வரவேற்கத்தக்கது.  ஆனால், இந்த விசாரணைகள் ஊடாக மேற்குலக்கும், நாம் முன்னைய அரசுகள் போன்ற கடும்போக்காளரல்ல என்ற செய்தியைச் சொல்வதற்கான களம் திறக்கப்பட்டு உள்ளக விசாரணையை நோக்கித் தமிழரது அழிப்புக்கான நீதிகோரலையும் திருப்பி உள்நோக்கி இழுத்துவரும் நுண்நகர்வாகவும் கொள்ளலாம். எனவே சிங்கள அரசியற் சடுகுடு ஆட்டத்தையும், அதனது இனவாத முகத்தையும் எமது முன்னோரும், நாமும்  கண்டுவருகின்றோம். தமிழினத்திற்கான அரசியல் உரிமையும் அமைதியான வாழ்வும் ஏக்கங்களாகவும், ஏமாற்றங்களாகவும் கடந்த 110 ஆண்டுகளாக கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இலங்கை விடுதலைக்கான முயற்சிக்காலத்தில் கண்டியச் சிங்களவர் சமஷ;டியைக் கேட்டபோது, ஒரேநாடாகச் சிந்தித்தவர்கள்(சேர்.பொன். அருணாசலம்) தமிழ்த் தலைவர்கள். ஆனால், எம்மை தமிழீழம் நோக்கித் தள்ளியது சிங்களம். உலகம் வேகமாக மாறிவருகிறது. அந்த வெளியக மாற்றத்தை உள்வாங்கிக் குறைந்தபட்சம் ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்துச் சிங்களம் சிந்திக்குமாயின் அப்போதுதான் இலங்கைத்தீவிற்கான உண்மையான வாழ்வாக அமையும். அதனை சோல்பரியின் காலம்தவறிய வருத்தமும் சுட்டுகிறது.
கீழுள்ள தகவலைத் தமிழீழக் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வரலாறு சொல்லும் பாடம்,, என்ற நூலில் இருந்து இணைத்துள்ளேன். 
சோல்பரியின் காலந்தவறிய வருத்தம்
பீ.எச்.பாமர் எழுதிய "சிலோன் ஏ டிவைடட் நேசன்,, என்ற நூலுக்கு முகவுரை எழுதியபோது அதில், சோல்பரி இப்படிக் குறிப்பிடுகிறார்.
இந்தியா,பாகிஸ்தான்,மலாயா,நைஜீரியா போன்ற நாடுகளுக்கான அரசியற்றிட்டங்களில் செய்ததுபோல, சிறுபான்மையினரின் உரிமையை உறுதிசெய்யும் வலிய காப்பீடுகளை இந்த(இலங்கை) அரசியற்றிட்டத்திற்குப் பரிந்துரை செய்யாமல் விட்டது பெரும் பிழையென்று இப்போது நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு(சிங்களவர்,தமிழர்)சமுதாயங்களுக்கிடையிற் காலங்காலமாக நிலவும் முரண்பாடுகள் பற்றிய மேலெழுந்தவாரியான புரிதலே எமது ஆணைக்குழுவுக்கு அப்போது இருந்தது. சிறுபான்மையினரின் மனநிறைவும், நலனும் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த நலனுக்குத் தேவையானது என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியுமென்றே ஆணைக்குழு அன்று திருப்திப்பட்டுக் கொண்டது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  

1 hour ago, valavan said:

அநுர தண்டனை வழங்குறானோ இல்லையோ, பொது தேர்தலில் தமிழர் பகுதியில் இவர்கள் ஆதரவில்லாமல் அநுர கட்சி பெரும்பான்மை பெற்றால், இவர்களினதும் பாரம்பரிய தமிழர் அரசியல்கட்சிகளினதும்  அரசியல் அஸ்தமனம்தான்.

அதற்கான களமுனைகளைத் துரிதப்படுத்துவதிவருவதைக் காணக்கூடியதாகவே உள்ளது. நாசபக்சர்கள், ரணில் மற்றும் விமல் வீரவன்ச எனத்தொடர்கிறது. இன்னும் யார்யாரெல்லாம் பின்வாங்குகிறார்களோ தெரியாது.  
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  
 
  • கருத்துக்கள உறவுகள்

அந்த தீவுக்கு என்ன உடனடி தேவை என்பதை மறைத்து கதாநாயகன் விளையாட்டை நடாத்துகிறார் புதுசா வந்த அனுரா .முதலில் தமிழ் சிங்கள இனம்களிடையே உள்ள இனத்துவேசம் போக்க என்ன முயற்சி செய்தார் ?

அடிவாங்கிய பொருளாதரத்தை சரிபடுத்த என்ன செய்தார் ?

முக்கியமான வேலைகளை விட்டு பிலிம் காட்டி தேர்தலில் வெல்ல முயல்கிறார் அவ்வளவே .அவர் ஒரு உண்மையான சிங்களவனா என்றால் அதுவும் கிடையாது உண்மையான சிங்களவன் என்றால் இந்நேரம் அரந்தலாவை பிக்குகள் படுகொலையை செய்த கருணா தூக்கில் தொங்கி இருக்கணும் ..இல்லை உண்மையிலே இனப்பிரச்சனை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஆள் என்றால் ஐநாவின் குற்றசாட்டுக்கு விசாரணை செய்கிறோம் என்றாவது சொல்லி இருக்கலாம் வழக்கமான அரசியல் வாதி போல் உடனே மறுப்பு தெரிவித்து உள்ளார் .

எனவே கனவு காண்பதை விட்டு நிகழ்காலத்தில் பயணிப்பது நல்லது . இனப்பிரச்சனை எனும் பேய் அந்த தீவில் இருக்குமட்டும் அந்த தீவு ஒருகாலமும் சுபீட்சம் அடைய போவது கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை அவர்கள் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் இல்லை அவர்  செய்திருக்கமாட்டார் இவர் செய்திருக்கமாட்டார் இவரை தவறாக நினைத்துவிட்டோம் என்று பிரித்து பார்க்க, நீங்களும் நானும் அறிந்ததை சொல்கிறோம்  அவ்வளவுதான்.

அற்புதன் கொலையும் விசாரிக்கப்படவேண்டும்.

அற்புதன் கொலையை விசாரித்தால், கொலையும் செய்துவிட்டு  கட்சிக் கொடியையும் போர்த்திய அற்புதனின் டலைவர் எல்லோ உள்ளுக்குள் போக வேண்டி வரும். 

இந்தியா  அனுமதிக்குமா? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உண்மையான சிங்களவன் என்றால் இந்நேரம் அரந்தலாவை பிக்குகள் படுகொலையை செய்த கருணா தூக்கில் தொங்கி இருக்கணும்

அப்பபடியா?  அரந்தலவவில்   37 பேர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது  1987 ம் ஆண்டில்.  இப்போது அதைச் செய்த  அநுர கருணாவை  இதற்காக தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீங்கள் 2004 ம் ஆண்டுவரை அவர் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் கேட்கவில்லை?  அது நடந்த பிறகு தானே அவர் கேர்ணலாக பதவி உயர்த்தப்பட்டார்.  கருணா அம்மான் என்ற செல்லப் பெயரும் வழங்கிக்  கெளரவிக்கப்பட்டார். பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கு பற்றி இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அற்புதன் கொலையை விசாரித்தால், கொலையும் செய்துவிட்டு  கட்சிக் கொடியையும் போர்த்திய அற்புதனின் டலைவர் எல்லோ உள்ளுக்குள் போக வேண்டி வரும். 

இந்தியா  அனுமதிக்குமா? 

🤨

ஒருவேளை அநுர மூன்றில் இரண்டுக்குமேல் பெரும்பான்மை பெற்று எவர் கூட்டணியுமின்றி இலங்கை ஆட்சியை கைப்பற்றினால், அநுரவா டக்ளசா என்று வந்தால் இந்தியா அநுர பக்கமே நிக்கும்.

காலம் காலமாக இந்தியா தமிழர் நலனுக்காக  இலங்கையுடன் முட்டிமோதி நின்றதேயில்லை, தனது நலனுக்காகவே அது நின்றிருக்கிறது.

இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழம் வாங்கி தந்திருப்பார் என்று இன்றும் நம்பும் தமிழர்கள் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்,

பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவுக்கு திமிர்காட்டிக்கொண்டு ,சோவியத் நட்புறவு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவையே அழிக்கப்பார்த்த அமெரிக்கா பக்கம் அதி நெருக்கம் காட்டிய  ஜேஆரை தனது பிடிக்குள் கொண்டுவரவே இந்திராகாந்தி இலங்கை தமிழர் பிரச்சனையை அக்கறையாக கையிலெடுத்தார், மற்றும்படி தமிழருக்கு தமிழீழம் வாங்கிதர என்பதெல்லாம் கிடையாது.

இந்தியா தனது பிராந்திய நலனுக்காக இலங்கையில் எப்போதுமே சிங்களவன் பக்கமே நிக்கும், சிங்களவன் இந்தியாவை மதிக்கவில்லையென்று தெரியவந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையில் திடீர் பாசம் காட்டும்.

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அப்பபடியா?  அரந்தலவவில்   37 பேர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது  1987 ம் ஆண்டில்.  இப்போது அதைச் செய்த  அநுர கருணாவை  இதற்காக தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீங்கள் 2004 ம் ஆண்டுவரை அவர் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் கேட்கவில்லை?  அது நடந்த பிறகு தானே அவர் கேர்ணலாக பதவி உயர்த்தப்பட்டார்.  கருணா அம்மான் என்ற செல்லப் பெயரும் வழங்கிக்  கெளரவிக்கப்பட்டார். பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கு பற்றி இருந்தார். 

அனுராவும் சாதாரண அரசியல்வாதியே என்பதை சொல்லவே  அரந்தலாவா சம்பவத்தை நினைவு படுத்த வேண்டி வந்தது .அதுக்குள்ளே உங்கடை வழக்கமான புலிக்காய்ச்சல் பிடித்து வாய் உளற தொடங்கி விட்டுது உங்களை அறியாமலே .😁

இந்த திரிக்கு சம்மந்தமான விடயத்தை கதைப்பது நல்லதொரு கருத்தாடல் .

சிவராமை கொன்றது, இலங்கை புலனாய்வு அமைப்பு. இதிலும் இனியபாரதி நேரடியாக பங்கு கொண்டார்.

புலிகளின் தலைமையால் கிழக்கு மாகாண போராளிகள் மீது  பாரபட்சம் காட்டப்படுகிறது என தூண்டி விட்டவர்களில் ஒருவர் சிவராம். பின்னர் வன்னிக்கு தலைமையால் அழைக்கப்பட்டு அவர்களால்  " கருணாவுக்கு ஒரு கடிதம்" என ஒரு கடிதம் கருணாவை விமர்சித்து வீரகேசரியில் ஒரு கடிதத்தை பிரசுரிக்க வைத்தனர்.

சிவராம் வெள்ளவத்தையில் ஒமேகா ஹோட்டலில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது கைத்தொலைபேசிக்கு கருணா அழைத்து நீ இப்ப எங்கிருக்கின்றாய் என்ன குடித்துக் கொண்டு இருக்கின்றாய் என எனக்கு தெரியும், உன்னை தூக்குவது எனக்கு இலகு, நீ இப்ப நல்ல பிள்ளை வேசம் போடுகிறாய்..ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறியிருந்தார்.

கருணா தன்னை ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் சிவராம் பலர் எச்சரித்தும் உயிர் பயம் இன்றி கொழும்பில் நடமாடினார்.

ஆனால் சிங்கள புலனாய்வு அமைப்பு அவரை பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி ஜயவர்த்தனபுரவில் வைத்து கொன்றது. இதற்கு அவர்கள் சித்தார்த்தனின் வாகனத்தை தான் பயன்படுத்தி இருந்தனர்.

கடத்தும் போது சிவராமுடன் இருந்தவர்களில் ஒருவர் லங்கா தீப எனும் சிங்கள நாளிதழின் பத்திரிகையாளர் ( ஆசிரியர் என நினைக்கிறேன்). அவர் உடனடியாக அன்றைய இராணுவ தளபதி வரைக்கும் தொடர்பு கொண்டு சிவராமை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை எடுத்திருந்தார். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் கூட சிவராமிற்கு இருக்கும் தொடர்புகள் மூலம் விடுவிக்க வேண்டி வந்து விடும் என்பதால் கடத்தி சில மணி நேரங்களில் கடத்தியவர்களால் கொல்லப்பட்டார்.

அவர் கடத்தப்பட்டவுடன் என் நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொண்டேன். அவரது தொலைபேசியிற்கு தவிப்புடன் அழைப்பு எடுக்கும் போது, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனும் சந்திரமுகி படப் பாடல் ஒலித்தது. தன் caller tune ஆக அதை சிவராம் வைத்து இருந்தார். இப் பாடலை நான் எப்ப கேட்பினும் உடம்பு ஒரு முறை அதிரும். இதை எழுதும் போது கூட அதிர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

அனுராவும் சாதாரண அரசியல்வாதியே என்பதை சொல்லவே  அரந்தலாவா சம்பவத்தை நினைவு படுத்த வேண்டி வந்தது .அதுக்குள்ளே உங்கடை வழக்கமான புலிக்காய்ச்சல் பிடித்து வாய் உளற தொடங்கி விட்டுது உங்களை அறியாமலே .😁

இந்த திரிக்கு சம்மந்தமான விடயத்தை கதைப்பது நல்லதொரு கருத்தாடல் .

நீங்களே 1987 ல் நடந்த  ஒரு குற்ற சம்பவத்தை கூறி அதை செய்த  கருணாவை தூக்கில் போடவில்லையே என்று ஆவேசப்பட்டீர்கள்.   உங்களுக்கு ஆதரவாக  அதை ஏன் முன்பே  செய்யவில்லை என்று தானே கேட்டேன்.அதற்கும் ஏன்  ஆத்திரப்படுகின்றீர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

நீங்களே 1987 ல் நடந்த  ஒரு குற்ற சம்பவத்தை கூறி அதை செய்த  கருணாவை தூக்கில் போடவில்லையே என்று ஆவேசப்பட்டீர்கள்.   உங்களுக்கு ஆதரவாக  அதை ஏன் முன்பே  செய்யவில்லை என்று தானே கேட்டேன்.அதற்கும் ஏன்  ஆத்திரப்படுகின்றீர்கள்?  

நான் ஆத்திரபடவில்லை இந்த திரிக்கு சம்பந்தமானதை மட்டும் கதையுங்க என்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

நான் ஆத்திரபடவில்லை இந்த திரிக்கு சம்பந்தமானதை மட்டும் கதையுங்க என்கிறேன் .

  அரலந்தலாவை போன்ற பல படுகொலைகளை நாம் கடந்து செல்ல விரும்புவதைப் போல  அநுராவும்  இலங்கை இராணுவம் செயத படுகொலைகளை கடந்து செல்ல விரும்புவார் என்பதையே கூறினேன்.  

புரிகிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் படுகொலை விசாரணைகள் சீக்கிரம் முடிந்தால் மகிழ்ச்சியடைவேன். சில புதிய தகவல் கிடைக்கலாம். எல்லாம் அந்த ‘திலக்’கிற்கே வெளிச்சம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இருந்த ரபிந்தரநாத் கொழும்பில் BMICH இல் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டவர். இதில் கருணாவுக்கு நேரடி பங்களிப்பு இருக்கு (வாகனத்தில் வைத்தே கருணா குரூரமாக சித்திரவதை செய்து அவரை கொன்றதாக சொல்கின்றனர்).

இன்று வரை க்கும் அவருக்கு என்ன நடந்தது என  அரசு கூறவில்லை.

ஏன் இதனை விசாரிக்க சொல்லவில்லை என தெரியவில்லை.

கண்டிப்பாக விசாரிக்க வேண்டிய வழக்கு இது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எல்லாவற்றையும் ஒரு சேரத் தோண்டினால் அனுரவிற்கு கிளைமோர் ஒன்று பார்சல் செய்யப்படும். பழி விபு க்கள் மீது. 

எனவே அவர் அவசரம் காட்ட முடியாது.  

கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டினால் இறுதியில் கதிர்காமர் ,  பிறேமதாசா வரைப் போக வேண்டி வரும். அப்போது அகப்படுவது இந்தியாவாக இருக்கும். 

😁

  • கருத்துக்கள உறவுகள்

image-4a798c3c5b.jpg

அதில் ஒரு கல்லை சிவராம் கொலை வழக்கை வைத்து விடுங்க 😁

image-f4c1be8070.jpg

கடைசியில் நடக்கபோவதை dailymirror.lk காரன் இன்றே சொல்லி விட்டான் நாங்கதான் ..........................

2 hours ago, island said:

  அரலந்தலாவை போன்ற பல படுகொலைகளை நாம் கடந்து செல்ல விரும்புவதைப் போல  அநுராவும்  இலங்கை இராணுவம் செயத படுகொலைகளை கடந்து செல்ல விரும்புவார் என்பதையே கூறினேன்.  

புரிகிறதா? 

இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.