Jump to content

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜய வீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால்  உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ரோஹன விஜயவீரவின் மகன், அவ்வாறானதொரு நிலைமையை நாடு தாங்காது என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை, ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்கு வாக்காளர்கள் பலியாகவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198053

Link to comment
Share on other sites

இப்படியும் ஒரு எதிர்ப்பு உள்ளது.
இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

இப்படியும் ஒரு எதிர்ப்பு உள்ளது.
இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் மாதிரி...
எதிரிக்கு, பொல்லு எடுத்துக் குடுக்கிற ஆளோ.  😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் குதிப்பதற்கான முன்னறிவிப்பு,.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

 

2 hours ago, nunavilan said:

இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

 

3 hours ago, ஏராளன் said:

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை, ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் முடிவு பண்ணுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து

சரியான நிலைப்பாடு.  

ஆனால் சிலர் நினைப்பதுபோல தேசிய மக்கள் சக்திக்கு  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஒரு 127 இடங்கள் கிடைக்கலாம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இப்படியும் ஒரு எதிர்ப்பு உள்ளது.
இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

 

3 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

அண்ணை இந்தக் கட்சிப் பெயர் கேள்விப்பட்டனிங்களோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

 சரியான கருத்து.  எதிர் கருத்து தெரிவிப்பவரை போட்டு தள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ள தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவர்கள் ஜனநாயக நாடுகளுக்கு குடிபெயர்ந்த பின்பும்அதே மனேநிலையில் அனேகர்  உள்ள நிலையில் இலங்கையில்  ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது ஆபத்தானது.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

 

அண்ணை இந்தக் கட்சிப் பெயர் கேள்விப்பட்டனிங்களோ?!

ரில்வின் சில்வாவுக்கு ஒரு செக் 😅

ஜெ.வி.பி யின் இரண்டாவது தலைமுறை பொதுசெயலாளராக இருக்குமோ? 
கட்சி ஜனநாயகம் இருக்குதாம என காட்டும் வ‌ழமையான இடதுசாரிகளின் புருடாவோ தெரியவில்லை...

வலதுசாரிகள் இப்ப யோசிப்பினம் இவனையும் அப்பனோட போட்டிருக்க வேணும் எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டாம் தலைமுறை கட்சி second generation party என்பது தனிக்கட்சி.

உவிந்து இதில் கேட்கிறார்.

https://mawratanews.lk/news/uvindu-wijeweera-announces-candidacy-for-upcoming-parliamentary-election-with-second-generation-party/

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 சரியான கருத்து.  எதிர் கருத்து தெரிவிப்பவரை போட்டு தள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ள தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவர்கள் ஜனநாயக நாடுகளுக்கு குடிபெயர்ந்த பின்பும்அதே மனேநிலையில் அனேகர்  உள்ள நிலையில் இலங்கையில்  ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது ஆபத்தானது.

மிகச்சரியான கருத்து. 2/3 வைத்து என்ன செவ்வாய் கிரகத்துக்கா போக போறார்கள். 118 உடன் நாட்டை ஆளமுடியும்.

2/3 கிடைத்த ஜே ஆரும், மகிந்தவும் ஆடியதை பார்த்தபின்னும் இந்த கருத்தை ஏற்காமல் இருப்பவர்களை என்னத்த சொல்ல.

  • Thanks 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அழைப்பிற்கு நன்றி சிறி, ஆனால் எதுவும் இங்கு எழுதத் தோன்றவில்லை, பார்க்கவும் பிடிக்கவில்லை. சிங்கள இனவாதிகளைத் தமிழர்களே  தூக்கிக்கொண்டாடும் காலத்தில் இருக்கிறோம். இதில் பேசுவதற்கென்று எதுவுமில்லை. நடப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். 
    • இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார் இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.   https://thinakkural.lk/article/311831
    • உடன்படுகின்றேன். டிரம்ப் உடைய நான் அவதானித்த சில விடயங்கள் இவை     இந்த முறை டிரம்ப்க்கு வாக்களித்த பலரில் லத்தீன் அமெரிக்கர்களும் கருப்பின மக்களும் அடங்கும். அதுவும் இதுவரைக்கும் ஜனநாயக கட்சியின் வாக்காளறாக இருந்தவர்கள் கூட டிரம்ப் க்கு வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆண்கள் என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெண்களும் உள்ளார்கள்  Black life matter என்ற ஒரு சுலோகத்தோடு போன முறை நடைபெற்ற புரட்சி(?) உண்மையில் கருப்பின மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர்ததை விட பாதிக்கப்படும் கறுப்பின மக்களின் பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவே பயன் பட்டது. பல கறுப்பின கனவான்கள் அதை அப்பொழுதே உணரத் தலைப்பட்டனர்.  இங்கே வந்து minimum salary க்கு வேலை செய்து கடினமாக உழைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும்  புலம் பெயர் மக்களில் பெரும்பான்மையானோர்  குடியரசுக் கட்சி பக்கம் சாய்கின்றனர்.  வேலைக்குப் போகாமல் அரசு கொடுக்கும் வீட்டில் இருந்துகொண்டு வேலை இல்லை என்பதற்கு காரண காரியங்களை சொல்லிக்கொண்டு சோம்பேறி ஆகி போதைக்கு அடிமைப்பட்டு பின்னர் homeless நிலைக்கு ஆளாகும் மக்களின் அவல நிலைக்கு புறக்காரணிகள் மட்டுமே காரணம் என்றும் பாதிக்கபடுபவர்கள் வெறும் victims என்றும் அவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றளவுக்கு liberalism செயல்படுகின்றது.எந்த பெரிய நகரத்தின் Downtown பக்கமும் இப்பொழுது நிம்மதியாக போக முடிவதில்லை.இதனை உழைக்கும் மக்கள் ரசிப்பதில்லை. இதுவரைக்கும் சரி என்று நம்பிக்கொண்டு இருந்த விழுமியங்கள் left wing ideology பேசுவோரால் அசுர பலம் கொண்டு தாக்கப்படும் பொழுது  கேள்விக்கு உடப்படுத்தப் படும் பொழுது  எதிர்ப்பு வருவதை நிறுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் நேரம் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக நாம் சரி என்று நம்பும் விஷயங்கள் பிழையோ அல்லது இதை வேறு பரிமாணத்தில் பார்க்கலாமோ என்று எண்ண பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. இதற்க்கு திணிக்கப்படும் இடது சாரி அரசியல் உதவப் போவதில்லை. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற illegal immigrants, மத்திய கிழக்கு மற்றும் ukraine போருக்கு அளிக்கப்படும் அபரிமிதமான நிதிஉதவி ஆகியவை நிஜமாகவே மத்திய தர குடும்பங்களை பாதித்து உள்ளது.      
    • அன்று பல மேள வாசிப்புக் காரர்கள் வாய்ப்புத் தேடி இலங்கை வந்து இங்குள்ள நட்டுவருடன் கலந்து விட்டதாக ஒரு கதை கேள்விப்பட்டுளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம் 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.