Jump to content

அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/198370

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

இந்தக் கூட்டத்தின் பின் கந்தப்புவின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக பதிலளித்து புள்ளிகளும் பெற்றிருக்கலாம்.

3 minutes ago, goshan_che said:

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

தேர்தலோடு வேட்டிகள் தட்டுப்பாடாம்.

அதோடு அச்சுக் காகிதங்களும் தட்டுப்பாடாம்.

ஒருவருடத்தில் உழைக்க வேண்டியதை 

ஒரு தேர்தலில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் . ......!

இப்பதானே வந்திருக்கிறார்கள் . ..... எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்க முடியாதுதானே ........நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும் . .......!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:
பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

sumanthiran.jpg

465158739-10229835211836814-5538514553356697910-n.jpg

IMG-2822.jpg

அனுர சார்.... அந்த வீதியை, சுமந்திரன் கேட்டுத்தான், நீங்கள் திறந்தீர்களாமே... உண்மையா. 😂  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும்,  அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து  புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி  அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி,  அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண  தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும்,  சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான  இணக்கப்பாட்டை  மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள்  தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது   எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். 

 உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும  பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂

 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி   அதனை வைத்து அரசியல் பிழைப்பு  நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி  முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும்.  ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய  Eligibility யில் ஒன்று கூட  இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள். 

Edited by island
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார  கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. 
வழமையாக புலம் பெயர் தேசங்களில் இருந்து பெருந்தொகைப் பணம் தேர்தல் நேரம் அங்கு ஆறாக பாயும். இம்முறை... அதிலும் துண்டு விழுந்து விட்டது என நினைக்கின்றேன்.
அல்லது... தோற்கிறதுக்கு, எதுக்கு வீணாக செலவழிப்பான் என நினைத்து விட்டார்களோ. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் .

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

அனுரா கூறியதுபோல் அப்பழுக்கில்லாத  இளந்தலைமுறை செல்ல வேண்டும் . .......செல்லரித்துப் போனதுகளைத் தவிர்த்து விடவேண்டும் . ......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து   தெரு தெருவா அலையலாம்.  மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

தப்பு ...என்.பி.பி யில் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் வேட்பாளர்கள் தான் நிற்க வேணும் அவர்கள் மண்ணின் மைந்தர்கள் ...அவர்களுக்கும் சிங்கள இனவாத செயல்களினால்  ஏதோ ஒரு வகையில் பாதிக்க பட்டவர்கள் தான் ...
வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்...சிறிலங்கா தேசிய கட்சியில் இணைந்து தமிழருக்கு  நிவாரண அரசியல் செய்யாமல் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை கொடுக்க  வேண்டும் ஐலன்ட் கூறியது போல...
அனுரா நிரந்தர தீர்வை கொடுத்தால் இந்தியா மீண்டும் தமிழர் பிரச்சனையை வைத்து சிறிலங்காவை ஆட்டிப்படைக்கும் நிலைக்கு செல்ல முடியாது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கூட்டத்தின் பின் கந்தப்புவின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக பதிலளித்து புள்ளிகளும் பெற்றிருக்கலாம்.

 

உண்மைதான்.

நீங்களா அல்லது @தமிழ் சிறி அண்ணாவா தெரியவில்லை என் வாக்கு யாருக்கு என கேட்டார்.

அப்போ அருச்சுனா குழுவில் அவர் தவிர வேறு மூவருக்கு என சொன்னே.

இன்று அருச்சுனா, திசைகாட்டி என்மனதில் 50:50.

ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன்.

1 hour ago, island said:

என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும்,  அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து  புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி  அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி,  அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண  தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும்,  சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான  இணக்கப்பாட்டை  மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள்  தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது   எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். 

 உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும  பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂

 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி   அதனை வைத்து அரசியல் பிழைப்பு  நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி  முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும்.  ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய  Eligibility யில் ஒன்று கூட  இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள். 

ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்..

இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள்.

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள்.

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

எவ்வளவோ கண்டிட்டோம் இதையும் பார்ப்பமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

எவ்வளவோ கண்டிட்டோம் இதையும் பார்ப்பமே..

இதுதான் கதைக்கும் போது என் மனதில் ஓடியது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன்.

எழுதுங்கள் 

நான் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் தேசிக்காய்களின் வரைபாக பார்க்கப்படும் என்பதால் விட்டு விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

எழுதுங்கள் 

நான் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் தேசிக்காய்களின் வரைபாக பார்க்கப்படும் என்பதால் விட்டு விட்டேன். 

நான் தொடங்குகிறேன்…. நீங்கள் தொடரவும் 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்...

அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

அவையள் எப்பதான் வேலை செய்திருக்கினம்? இதுவரைக்கும் சிங்களம் தானாய் பார்த்து செய்ததை தவிர வேறேதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்

தமிழன் அநியாயத்துக்கு நல்லவன்....சில சமயம் அணுராவுக்கு செம்பு தூக்க வேணும் என்று அடிபட்டு போய் சிங்கள வேட்பாளர்களை வடபகுதியில் நிறுத்துங்கோ ..தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது என சொன்னாலும் சொல்லுவினம் அடுத்த தேர்தலில் நடந்தாலும் நடக்கலாம் ...

நம்ம டக்கிளஸ் ஐயா பிக்குமார் இருவரை தன‌துகட்சி வேட்பாளராக கொழும்பில் நிறுத்தி உள்ளார் என நினைக்கிறேன் ....அதுபோல நல்லிணக்கம் என்று வரும்பொழுது ...

சிங்கள வேட்பாளர் தமிழர் பகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றியடைந்தால் அது நல்லிணக்கத்தின் உச்சம்,,கண்டியளோ 

5 minutes ago, குமாரசாமி said:

அவையள் எப்பதான் வேலை செய்திருக்கினம்? இதுவரைக்கும் சிங்களம் தானாய் பார்த்து செய்ததை தவிர வேறேதும் இல்லை.

அப்படி சொல்லப்படாது....தமிழ் தேசிய்த்தை கூறு போட்டு வித்து ....தமிழர் /சிங்கள பிரச்சனைக்கு டீர்வு கிடைக்க வழி விட்டவையள் அல்லோ

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்

கோஷன், நான் எழுதியது தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தை மட்டுமே.  அவ்வாறு நடந்து கொள்ளும் போது நாம் விரும்பும் முழுமையான அரசியல் தீர்வு கிடைக்காமல் விட்டாலும் எதிர் காலத்தில் சேதாரமாவது இல்லாமல் இருக்கும்.

கடந்த 75 ஆண்டுகளாக தமிழருக்கு அதிகளவில் சேதாரத்தைக்  கோடுத்து எதையும் பெற்றுக்கொள்ளாத, போராட்டத் தொடக்கப்புள்ளியில் இருந்த வாழ்வியலையும்  கெடுத்து  குட்டிச்சுவராக்கிய இறுதி புள்ளியை அடைந்ததுடன்  தீர்வை மேலும் சிக்கலாக்கிய  அரசியல் தொடர்சசியை விடுத்து  அறிவு பூர்வமான அரசியலை எதிர்காலத்தில்   செய்ய வேண்டும் என்பதே  எனது விருப்பம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார  கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. 

இன்று ஆட்சியில் இருப்பவரே நேரடியாக வந்து நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என சொல்ல்லும் போது தமிழ் தலைவர்களுக்கு தற்போது வேலையில்லாமல் போகின்றது. அவர்களும் எதை சொல்லி பிரச்சார மேடை அமைத்து வாக்கு கேட்பது?

அதை விட பல இடங்களில்  நாமல் ராஜபக்ச தமிழ் தலைவர்கள் கள்ளர்கள் என தொனிபட பேட்டியளித்துள்ளார்.கரடியே காறித்துப்பிய தருணம் அது.

இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி?

அவர் சொல்வது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும். வீதிகளை திறப்பேன். வீதிகளை திருத்துவேன்.கைதிகள் விடுதலை. என வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.2009க்கு பின்னர் வந்த பிரச்சனைகளை தமிழர்களின் பிரச்சனைகளாக்கி விட்டு அதை தீர்த்த விண்ணராகவும் அனுர சித்தரிக்கப்படக்கூடும்.

இனி வரும் மாதங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்களாக  இருக்கும்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

அதனாலேயே இடமாற்றப்பட்டார் என அறிந்தேன்.

ஆனால் எங்கும் பிரசாரம் செய்ததாக தெரியவில்லை.

மக்களுக்கு தெரியாமலே இருக்கிறார்.

பழையபடி யாழுக்கு மாற்றி பதவி உயர்வு கொடுக்கலாம்.

இவரை 2-3 டாக்ரர்கள் மீது வீண்பழி போட்டு விரட்டப்பட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு sudumanalNovember 13, 2023 கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் என நான்கு தேசிய இனங்கள் இருப்பதாக தற்போது பல அரசியலாளரும் வரைபு செய்கிறார்கள். இந்த தேசிய இனங்கள் தங்கள் மொழி, பண்பாடு, நிலப்பரப்பு சார்ந்த தனித்துவங்களை பேணும் ஓர் அரசியல் கட்டமைப்பு அரசு (state) வடிவத்துள் பேணப்படுகிறபோது, அமைதியான வாழ்வை தரிசிக்க முடியும். அப்போதான் சகலரும் இத் தனித்துவங்களோடான பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கையராக தம்மை முழுமையாக உணர முடியும். ஜனநாயக சோசலிச குடியரசு என பெயர்ப்பலகை தொங்கவிட்ட நாடான இலங்கை இந்த திசையில் கடந்த 70 வருடமும் பயணிக்கவில்லை. வெள்ளையர்கள் வெளியேறியபின் அது பெருந்தேசிய, பௌத்த மேலாதிக்க அரசுக் கட்டமைப்புடன் உருப்பெற்று, அதன்வழி பயணித்ததால் இன்று நாம் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறோம். போரும், போராட்டத்தின் தோல்வியும், தமிழ் விடுதலை இயக்கங்களினது பிழையான அரசியல் போக்குகளும் தீர்மானங்களும் கூடவே கொலைக் கலாச்சாரமும் எல்லாம் சேர்ந்து தமிழ் மக்களை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்குள் தள்ளி 15 வருடங்களுக்கு மேலாகிறது. அரசுக் கட்டமைப்பானது இன்னும் இறுக்கமடைந்து விட்டது. அதை நிகழ்த்திய அரசாங்கங்களின் யுத்தச் செயற்பாடுகள் அவர்களது ஊழல் மோசடிகளுக்கான கதவுகளை மேலும் அகலத் திறந்து, எல்லா இன மக்களையும் பின்கதவால் பிச்சைப் பாத்திரத்துடன் துரத்தியது. இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்து, அதன் எதிர்ப்புப் போராட்ட வடிவமாக 2022 இல் அரகலய எழுச்சி தோன்றியது. அது ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகித்தது எமக்கு கிடைத்த ஓர் அரசியல் படிநிலை வெற்றியாகும். அது அரசாங்கத்துக்கு எதிராக “மாற்றம்” (அதை அரசியல் பண்பாட்டு மாற்றம் எனலாம்) என்ற கோசத்தை மட்டுமல்ல, நிலவுகிற அரசுக் கட்டமைப்புக்கும் (state structure) எதிராக “முறைமை மாற்றம்” என்ற மிக காத்திரமான முழக்கத்தையும் முன்வைத்துப் போராடியது. இதற்குக் காரணம் அரகலயவை நடத்திய இளஞ் சத்ததி பேரினவாத கட்சிகளுக்கு வெளியில் இருந்தவர்களாக மட்டுமல்ல, சோசலிசம் சமத்துவம் போன்ற சிந்தனைப் போக்கை கொண்டவர்களாகவும், இனவாதத்துக்கும் போருக்கும் எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாகவும் இருந்தது முக்கிய காரணம். அத்தோடு 30 வருட போரின் தாக்கத்தை -வெவ்வேறு அளவுகளில்- எல்லா இன மக்களும் அனுபவித்ததும் களைப்படைந்ததும் இன்னொரு காரணம். அரகலயவை முன்னின்று நடத்திய “முன்னிலை சோசலிசக் கட்சி” ஆனது ஜேவிபியின் இனவாதப் போக்கு, போர் ஆதரவு நிலைப்பாடு, அதிகாரப் பகிர்வின் மீதான ஒவ்வாமை என்பவற்றுக்கு எதிராகவும், அதன் சோசலிச நழுவல் போக்குக்கு எதிராகவும் அதிலிருந்து வெளியேறியவர்களால் 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னணியாகும். இவர்களோடு சேர்ந்து பல முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்களும், உதிரிப் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரகலவை முன்னெடுத்தார்கள். இந்தப் போராட்டத்தில் இடையில் வந்து சேர்ந்த ஜேவிபியானது அரகலய இடைக்காலத்தில் பலவீனப்பட்டிருந்தபோது அதிலிருந்து விலகிக் கொண்டது. பின் மீண்டுமான அரகலய புத்தெழுச்சியின் பின் திரும்பவும் அதற்குள் வந்து இணைந்து கொண்டது. நாடு முழுவதும் அரகலய ஏற்படுத்திய சிந்தனைத் தூண்டலானது அரசியல் பண்பாட்டில் ஒரு பண்பு மாற்றத்தைக் கோரியது. அந்தக் கோரலை அல்லது முழக்கத்தை ஏற்கனவே பெரும் அமைப்புக் கட்டுமானமாக இருந்த ஜேவிபி தன்வசமாக்கியது. 2019 இல் 3 வீத வாக்குகளைப பெற்ற ஜேவிபி 2024 இல் 42 வீத வாக்குகளைப் பெறுமளவுக்கு வளர்ச்சியுற -கட்சி என்ற அடிப்படையில்- எந்த புரட்டிப் போடலையும் செய்ததில்லை. எதுவும் வெளித் தெரியவுமில்லை. அநுரகூட தனது வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வளர்ச்சியின் இயங்கியலை எப்படி விளக்க முடியும். ஆக, அரகலய மக்கள் போராட்டத்தின் விளைவு இது. எனவே இன்று அரகலய அவர்களை நிறுத்தியிருக்கிற இடத்திலிருந்து அவர்கள் முன் செல்ல விழைவதே அவர்களது இருத்தலுக்கான ஒரே வழி. அதுவே அவர்கள் அரகலயவிடமிருந்து தமதாக்கிய முழக்கமான “மாற்றம்” என்பதும் “முறைமை மாற்றம்” என்பதுமாகும். எது எப்படியோ இது ஒரு நல்ல மாற்றம். மிக ஆரோக்கியமான மாற்றம். அது வரவேற்கப்பட வேண்டியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. (சந்ததி அரசியலின் வேரை புரட்டிய ஒரு மூன்றாவது சக்தி என்றளவிலும், ஒரு கிராமியப் பின்னணியிலிருந்து, ஓர் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வெளித்தோன்றிய தலைமை என்றளவிலும் இந்த மாற்றம் மிகக் காத்திரமானது). அரகலய போராட்டம் சம்பந்தப்பட்ட மேற்கூறிய உண்மையை என்பிபி யோ அனுரவோ எங்கும் வெளிப்படையாகப் பேசியதில்லை. பழைய அரசியல் பண்பாட்டிலிருந்து புதிய அரசியற் பண்பாட்டுக்குள் மாற்றத்தை நிகழ்த்துவோம் என சொல்லும் அவர்கள் பழைய அரசியற் பண்பாட்டில் தாம் -புரிந்தோ புரியாமலோ- அரசாங்க பங்காளிகளாக இருந்ததை சுயவிமர்சனம் செய்து, இந்த புதிய காலடியை வைக்கவுமில்லை. போரின் விளையை பரிவுபட பேசும் அநுர அந்தப் போருக்கு தமது கட்சி ஆதவளித்ததை சொல்ல முன்வருவதாயில்லை. 2004 இல் மகிந்த ஆட்சியில் அங்கம் வகித்து போரை நடத்த பங்களித்தவர்கள். ஓர் இனப்படுகொலையை நாட்டின் இராணுவ வெற்றியாகக் கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். 2015 இல் மைத்திரி ஆட்சியின் புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளை எதிர்த்தவர்கள் அவர்கள். அதற்கான சுயவிமர்சனமும் இல்லை. வடக்கு கிழக்கு பிரிப்பை அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேர்வு மூலம் தீர்மானிப்பதைக் கோருவதற்குப் பதிலாக நீதிமன்றத்தை நாடியவர்கள். மாகாண சபை (காணி,பொலிஸ்) அதிகாரங்களை எதிர்த்து அதிகாரப் பரவலாக்கலை உப்புச்சப்பற்றதாக ஆக்கியதில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது. மாகாணசபை தேர்தலை நடத்தி அதிகாரப் பரவலாக்கலை அடுத்து நிகழ்த்தப் போகிறோம் என இப்போது சொல்லும்போது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. (மிகச் சிறந்த அதிகாரப் பரவலாக்கல் முறைமையைக் கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் கன்ரோன் முறைமையில் இந்தவகை -காணி, பொலிஸ்- அதிகாரங்கள் பகிரப்பட்டு செழுமையாகச் செயற்படுகின்றன. மத்தியில் நாட்டின் அரசியல் அதிகாரம் 7 பேர் கொண்ட சபையாக பகிரப்பட்டு உள்ளது). இவையெல்லாம் குற்றப் பத்திரிகை அல்ல. விமர்சனங்கள். நிகழக்கூடிய அரசியல் தவறுகள் என்றளவில் அதை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனத்துடன் அதை தாண்டிவந்து தெளிவாகப் பேச வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தவறிழைப்பதல்ல பிரச்சினை. அது தவறு என்று காலம் உணர்த்துகிறபோதாவது அதை ஏற்றுக்கொண்டு தம்மை புதுப்பித்து வெளிவருவது நல்ல தொடக்கமாக இருக்கும். இது அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைக்குமேயொழிய எதிராக அமையாது. பேசாமைதான் சந்தேகத்தை தேக்கி வைத்திருக்கும். அதுவே சிறுபான்மை இன மக்களிடம் புகாராக படிந்திருக்கிறது. அதனாலேயே சிறுபான்மை தேசிய இனங்கள் தமது பிரதிநித்துவத்தை தனித்துவமாக பேணும் நியாயமான முயற்சியை தவிர்க்க முடியாமல் பழைய அரசியற் பண்பாட்டில் பழசாகிப்போன கட்சிகளினூடாகவோ சுயேச்சைக் குழுக்களினூடாகவோ பேண வழிவகை தேடுகிறார்கள். தமது உரிமைகளை நிலைநாட்டுதல் என்பதற்குப் பதிலாக, அது கேட்டுப் பெறப்பட வேண்டிய ஒரு பேரம் பேசும் (deal) அரசியலாக கொண்டுள்ள அவலம் சிறுபான்மையினர் தரப்பில் தொடர்கிறது. யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ் மக்களின் இந்த கையறுநிலையை தீர்க்கும் வகையிலான எந்த முன்மொழிவும் வைக்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியே அநுரவின் பேச்சு இருந்தது. இன மத மொழி கடந்த இலங்கையர் என மொத்தத்துவப் படுத்துவதையும் அப் பேச்சு குறிவைத்திருந்தது. “நாங்கள் இலங்கையர்… ஒற்றுமையாக வாழவேண்டாம்.. இல்லை வாழவேண்ண்டும்..டும்” என மகிந்தவும்தான் அழுத்தி திருத்தி செல்லத் தமிழில் பேசியது பலருக்கும் ஞாபகமிருக்கலாம். முன்னிலை சோசலிசக் கட்சி சிறுபான்மையின பிரச்சினைக்கு தீர்வாக சுயாட்சியை வெளிப்படையாக முன்வைப்பதைப் போலவோ, அன்றி வேறேதும் வழிமுறையையோ அநுர முன்வைக்கவில்லை. அதை புகார் படிந்த நிலையில் விட்டுச் சென்றுள்ளார். அவரது பேச்சு இதில் வெளிச்சம் எதையும் பாய்ச்சவில்லை. எதிர்காலத்தில் என்பிபி அரசாங்கத்தினதும் அரசினதும் புத்துணர்ச்சியான மாற்றம் கொண்ட செயற்பாட்டினூடு இதை சாதிக்க கால அவகாசம் தேவை என்பது உண்மை. ஆனால் அதுவே அதை இப்போ ஒரு வகைமாதிரியாகக் கூட முன்மொழியாமல் தவிர்ப்பதற்கான நியாயமாகக் கொள்ள முடியாது.  பாரம்பரிய தேசியக் கட்சிகளின் வாக்குறுதிகளை 70 வருடமாக நம்பி ஏமாந்த சிறுபான்மை இனங்களை முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வரும் அரசாங்கத்தின் -முதன்முதலான- வாக்குறுதிகளை நம்புங்கோ..வாங்கோ என அழைப்பது “இயேசு வருகிறார்… எமது மீட்பர் வருகிறார்” என ஜெபிப்பதற்குச் சமம். அதற்குள்ளால் ஓடும் மான் மாய மானா அல்லது நிஜ மானா என்பதை புதிய அரசாங்கம் செயலின் மூலம்தான் காட்ட வேண்டும். (குறிப்பு: இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது சிறுபான்மை இனங்களை உட்படுத்திய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க என்பிபி தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்ததாக செய்தி வந்திருக்கிறது. உண்மையெனில் நல்ல ஆரம்பம் இது) இதே ஜேவிபி யினூடாகத்தான் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் ஆளுமைகளாக உருவெடுத்தார்கள். இப்போ அதன் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வா தடாலடியாக தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என அண்மையில் ஒரு போடு போட்டார். இவர்களைப் போன்றவர்கள் உருவாவதற்கான சூழலைக் கொண்ட கட்சியாக ஜேவிபி இருக்கிறதா என்று ஒருவர் எண்ணத் தலைப்படுவதில் தவறு இல்லை. ஆட்சியதிகாரத்துக்கு வரமுன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக பேசிய என்பிபி இப்போ பயங்கரவாதத் தடைச்சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதுதான் தவறு என்கிறார்கள். வேட்டையனில் ரஜனி என்கவுண்டருக்கு கொடுத்தது போன்ற விளக்கம் இது. எனவே பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளான பாரம்பரிய கட்சிகளை அகற்றி புதிய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளை அரசாங்கத் தரப்பு மட்டுமல்ல, வலுவான எதிர்க் கட்சியும் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. இது சிறுபான்மை இனங்கள் சம்பந்தப்பட்ட நோக்குநிலை மட்டுமல்ல, மாற்றத்துக்கு வித்திட்ட -மக்கள்நலன்சார் அரசியலை உயர்த்திப் பிடித்து போராடிய- அரகலய சக்திகளும் சமூகப் புத்திஜீவிகளும் சம்பந்தப்பட்ட நோக்குநிலையும் கூட. இவற்றினூடுதான் பழைய அரசியற் பண்பாட்டு நீக்கத்தை பாராளுமன்றத்துள் முயற்சிக்க முடியும். எனவே தேர்தலில் வாக்களிப்பதன் மூலமான மக்களின் பங்கு புதிய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல புதிய பலமான எதிர்க்கட்சி அதிகாரத்துக்குமானதாக இருக்க வேண்டும். இதில் ஏற்படக்கூடிய தோல்வியானது சஜித் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு கதிரையை இழுத்துப் போடுவதாக அமையும். அதாவது பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநித்துவத்துக்கான இடத்தை முன்னரைப்போலவே அங்கீகரித்ததாகப் போய்விடும். (எனது கணிப்பில் அதுவே நடக்கும் வாய்ப்பு உள்ளது). இது பற்றி சிந்திக்காமல் என்பிபியை மட்டுமே தேருங்கள் என கோருவதைத்தான் அலையில் மூழ்குதல் என்பது. அதிகமான சுயேச்சைக் குழுக்கள் வடகிழக்கு மலையகப் பகுதிகளில் இத் தேர்தலில் நிற்பது என்பது வாக்குகளை பிரிக்கும் என்ற கணிப்பில் ஓரளவு உண்மை இருக்கிறபோதும் அதன் பாதிப்பு சிறுபான்மையின பாரம்பரிய கட்சிகளுக்குத்தான் இருக்குமேயொழிய என்பிபி க்கு அல்ல. என்றபோதும் அத்தோடு இவளவு சுயேச்சைக் குழுக்கள் தோன்றியிருக்கிறது என்பது ஒருவகையில் அரசியலானது மக்கள்மயமாவதின் அறிகுறி எனவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாற்றம் ஏற்கனவே இருந்த பழைய அரசியல் பண்பாட்டின் சிதைவை கோரிய அரகலயவுக்கும், அதைத் தோற்றுவித்த அனுரவுக்குமான வெற்றி என எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறான சிதைவுகளின் போது அரசியல் தளத்தில் இவ்வாறான குழுக்கள் தோன்றுவதும் மறைவதும் தவிர்க்க முடியாதது. அதுவும்கூட புதிய அரசியல் பண்பாட்டிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு, இலங்கை பூராகவும் ஆணாதிக்க நிலையில் அரசியல் சீவியம் நடத்திக் கொண்டிருந்த கட்சிகளிலும், அதைத் தாண்டி சுயேட்சை குழுக்களிலும் பெண்கள் அரசியல் களத்துள் பிரவேசிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. இது இன்னொரு சாதகமான மாற்றம் ஆகும். எனவே சிறுபான்மையினங்களின் பழைய அரசியற் பண்பாட்டுக் கட்சிகளினுள் புதிய அரசியற் பண்பாட்டு மாற்றம் நிகழாவிடின், அவர்களது பிரதிநித்துவம் குறைய நேரும். சுயேச்சைக் குழுக்கள் புதிய வீரியமான அரசியலாளர்களை அடையாளம் காட்டி அரசியல் அரங்குக்குக் கொண்டு வரும் சாத்தியம் உள்ளது. அநுர நல்லவராக இருக்கலாம். அடுத்து வரப்போகிறவரும்கூட நல்லவராக இருக்கலாம். அதிகாரமற்றவர்களாக இருக்கும்போது நல்லவர்களாக இருப்பவர்கள் அதிகாரம் கிடைக்கிறபோது ‘நல்லவர்களாக’ தொடர்வார்கள் என்பது அரசியல் தர்க்கமற்றது. சிக்கலான அகமுரண்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிற மனிதஜீவியை நல்வர் கெட்டவர் என இருமையாக மட்டும் புரிந்துகொள்வது முழுமையற்றது. மனிதஜீவி ஓர் அரசியல் மிருகம் என்பது முக்கியமானது. இதனடிப்படையில் அதிகாரம் அவர்களை மாற்றியமைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மிகக் குறைந்த முன்னுதாரணங்களே உலக வரலாற்றில் காட்டப்படக் கூடியதாக உள்ளன. அரசு (state) கட்டுமானத்தின் இனவாத, பெரும்பான்மைவாத, பௌத்த மேலாதிக்க கருத்தியலை மாற்றியமைப்பதில் எதிர்நோக்க முடியாத இறுக்கமான நிலை ஏற்படும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் பண்பு மாற்றங்கள் நிகழும். அத்தோடு பூகோள அரசியல் சதிகளும் நலன்களும், (கடன் மூலமான) பொருளாதார தங்குநிலைகளும் அவர்களின் நிபந்தனைகளும் நெருக்கடிகளும், இடதுசாரியத்துக்கு எதிரான மேற்குலகின் வன்மங்களும் நெருக்குதல்களும் என பல சவால்களை ஒரு சிறிய நாடு எதிர்நோக்க வேண்டி வரும். இவற்றை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பணி கட்டாயமானது. இப் புறக் காரணிகள் தவிர்க்க முடியாதபடி அரசாங்கத்தை பண்புரீதியில் மாற்றியமைக்கலாம். (சோவியத் இல் மட்டுமல்ல, எமது விடுதலை இயக்கங்களிலும் இவ்வாறான அதிகாரத்துவ பண்பு மாற்றம் நடந்து நாசமாய்ப் போனது ஞாபகமிருக்கும்). இவை நிகழாதபடி அரசாங்கத்துக்கு பக்கத் துணையாக நின்று பாராளுமன்றத்தினுள் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த பலமான மாற்று எதிர்க்கட்சி தேவை. அப்போதான் புதிய அரசியல் பண்பாடு அரசியல் தளத்தில் உதயமாகும். இதை சமூகத் தளத்தில் நிறுவி முன்னேறிச் செல்ல பலமான அறிவுசார் சிவில் சமூக நிறுவனங்கள் தேவை. இது மக்கள் சார்பான பொறுப்பு. மாற்றத்துக்கான முயற்சியின் நிலையை தக்கவைக்க என்பிபி க்கு பெரும்பான்மைப் பலம் (113 ஆசனங்களுக்கு மேல்) தனிப்பட கிடைக்க வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சிறுபான்மையின பிரதிநித்துவங்களின் தேவையும், -அரகலய போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்களின் கூட்டணியாக தேர்தலில் நிற்கும்- “மக்கள் போராட்ட முன்னணி” இன் பிரதிநித்துவத் தேவையும் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிய வேண்டியிருக்கிறது. இது அநுர அரசாங்கத்தை எதிர்ப்பது அல்லது அவர்களின் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிர்ப்பது என்ற பொருளில் அல்ல!   https://sudumanal.com/2024/11/12/எதிர்க்கட்சி-அரசியல்-பண்/
    • எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி! christopherNov 13, 2024 09:29AM அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரையும் நியமித்து டொனால்ட் டிரம்ப் இன்று (நவம்பர் 13) உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்தஅமெரிக்க தேர்தலில் 312 தேர்தல் வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியுடன் 2வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்க அவர் உள்ளார். அவரது தேர்தல் வெற்றிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமி கடுமையாக உழைத்தனர். அவரது வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு இருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் ஏற்கெனவே கூறியபடி, எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவருக்கும் தனது ஆட்சியில் அரசின் செயல்திறன் துறையை (“DOGE”) வழிநடத்துவார்கள் என அவர் இன்று அறிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் அங்கீகரிக்கப்படாத நிறுவனமாக உள்ளது. ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமியுடன் இணைந்து எலோன் மஸ்க் இருவரும் அரசாங்கத் திறன் துறைக்கு தலைமை தாங்குவர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்றவும் வழிவகுப்பார்கள். குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் “DOGE” இன் நோக்கங்களைப் பற்றி மிக நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர். இந்த வகையான கடுமையான மாற்றத்தை ஏற்படுத்த, அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும், வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டாளியாக இருக்கும். எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் செயல்படும் சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகச் செய்வார்கள். முக்கியமாக, எங்களின் வருடாந்த $6.5 டிரில்லியன் டாலர்கள் அரசாங்க செலவினங்கள் முழுவதும் இருக்கும் பெரும் கழிவுகள் மற்றும் மோசடிகளை நாங்கள் வெளியேற்றுவோம். நமது பொருளாதாரத்தை விடுவிக்கவும், “நாம் மக்களுக்கு” அமெரிக்க அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அவர்களின் பணி 2026, ஜூலை 4ஆம் தேதி முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.     https://minnambalam.com/political-news/trump-order-that-elon-musk-vivek-ramasamy-get-key-responsibility/
    • சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்இ என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நவ.9ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (நவ.12) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும்இ அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின்  மத்தியய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (நவ.12) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது. நவ.9ம் தேதி அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நவ.12ம் தேதி அன்று நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும்இ கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/198557
    • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம்  30  ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198551
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.