Jump to content

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 11/14/24 at 11:59

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செலுத்திட்டேன்...யாருக்கென்று ..சொல்லுங்க பார்ப்பம்

  • Replies 223
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

goshan_che

ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

ரசோதரன்

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஏராளன் said:

அண்ணை, நீங்கள் உங்கள் பல்கலைத் தோழருக்கு வாக்களித்துள்ளீர்கள்!!

🤣............

போன தேர்தலில் இவர்களின் கட்சியில் கிழக்கு மாகாணத்தில் வகுப்புத் தோழன் ஒருவன், தமிழ் தான், நின்று தோற்றான் என்று முன்னர் சொல்லியிருந்தேன் அல்லவா........... இந்த தடவை அந்த நண்பனுக்கு சந்தர்ப்பமே வழங்கப்படவில்லை........ இப்படியே பல விடயங்களிலும் உள்ளவற்றில் சரியான முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது..............😜.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, alvayan said:

செலுத்திட்டேன்...யாருக்கென்று ..சொல்லுங்க பார்ப்பம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. சரியா… 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. சரியா… 😂

அட..கண்டுபிடிச்சிடியள்...இரகசியம்...ஒருதருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ..😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, alvayan said:

செலுத்திட்டேன்...யாருக்கென்று ..சொல்லுங்க பார்ப்பம்

நீங்கள் போடுவதற்கு முன்னும், போட்ட பின்னும், நான் போட்டதற்கு பின்னிருந்த எண்ணிக்கையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கின்றது..............🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, alvayan said:

செலுத்திட்டேன்...யாருக்கென்று ..சொல்லுங்க பார்ப்பம்

அனுரவுக்கு    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரசோதரன் said:

நீங்கள் போடுவதற்கு முன்னும், போட்ட பின்னும், நான் போட்டதற்கு பின்னிருந்த எண்ணிக்கையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கின்றது..............🤣

இது எனக்குத் தலை சுத்துதே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, alvayan said:

இது எனக்குத் தலை சுத்துதே...

7, 12, 5, 6 இலிருந்து 7, 12, 6, 6 ஆகியிருக்கின்றது.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

அனுரவுக்கு    

அய்யா ..ஆடின ஆட்டமென்ன... பாடிய பாட்டுமென்ன... அ..வுக்கு என் கை டட்டா காட்டுமே தவிர..வேறொன்றும் தராது..

3 minutes ago, ரசோதரன் said:

7, 12, 5, 6 இலிருந்து 7, 12, 6, 6 ஆகியிருக்கின்றது.....................

நம்மளுக்கு  உந்த அவதானம் பார்ப்பு கஸ்டமுங்க...புதினம் மட்டும் பார்ப்பேங்க...மிக அண்மையில் உங்க ஊருக்குப்போய் .எம் ஜி.ஆர் சிலைக்கு முன் நின்று படம்  சுட்டு வந்தவன் நானென்றால்...உங்கடை அவதானம் எங்கையோ ..இடிக்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் எண்டு தமிழ் நாட்டில் சொல்லுறமாதிரி சொல்லிட்டு 1000 ரூபாயை வாங்கிட்டு அதே பழைய மொந்தைக்கு குத்துவதைப்போல இல்லாமல் சொல்லும் செயலுக்கும் வேறுபாடு இருக்ககூடாது என்பதால் புதியவர்கள் என்று இரண்டு தெரிவு எனக்கு இருந்தது ஒன்று அனுர தலைமையிலான அணி இன்னொன்று அர்ச்சனா அணி.. நான் அர்ச்சனா அணிக்கு போட்டிருக்கன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:
1 hour ago, விசுகு said:

என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?

விசுகு ஐயா, நீங்கள் வாக்களிக்காமல் முடிவுகளை ஒரு தடவை, கவனிக்காமல், பார்த்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஒரு மெசேஜ் வந்திருக்கும், அதை நீங்கள் கவனிக்கவில்லை போல

முதலாவதாக (Bar)பாரைப் பார்த்ததும் பலர் அதற்குள் புகுந்துவிட்டனர்.

(Bar)பாரைக் கடேசியாக போட்டிருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, alvayan said:

நம்மளுக்கு  உந்த அவதானம் பார்ப்பு கஸ்டமுங்க...புதினம் மட்டும் பார்ப்பேங்க...மிக அண்மையில் உங்க ஊருக்குப்போய் .எம் ஜி.ஆர் சிலைக்கு முன் நின்று படம்  சுட்டு வந்தவன் நானென்றால்...உங்கடை அவதானம் எங்கையோ ..இடிக்குது

🤣...........

பார்ப்பவை பலதும் அப்படியே படங்களாக மனதில் ஓரளவிற்கு நிற்கும், அல்வாயன்........... அதை வைத்து தான் என் காலமே ஓடிக் கொண்டிருக்கின்றது.

எம்ஜிஆர் சிலை இருக்கும் இடத்தில் அவரைத் தவிர வேறு எவருக்கும் இடம் இல்லை........ அந்தப் பகுதியை உங்களுக்கு தெரியும் தானே...... ஆதிசக்தி விளையாட்டுக் கழகம்........ நல்லவர்களுக்கு மட்டுமே அவர்கள் நல்லவர்கள்..............

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தற்போதைய நிலவரப்படி... 75 ஆண்டுகள் பாரம்பரியமான தமிழரசு கட்சி,    
இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள...  
நேற்று முளைத்த டாக்டர் அர்ச்சுனாவின்  கட்சியிடமும்,
சிங்கள இனவாத கட்சி  என பெயர்  எடுத்த அனுரவின் கட்சியிடமும் 
முக்கி, முனகிக் கொண்டுள்ளது. 😂

தமிழரசு கட்சியை, இந்த நிலைமைக்கு... கொண்டு வந்து விட்ட  
சம்பந்தன், சுமந்திரன் கொம்பனிக்கு  கோடானு கோடி நன்றிகள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

ஒரு வாக்கு.. பிள்ளையானுக்கு, விழுந்திருக்கின்றது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

யாழுக்கு வருவோர் பெரும்பாலும் தேசிய உணர்வுள்ளோர்தானே?

ஓம் ஸ்ரீலங்கா நாட்டுக்குரிய தலைவரை ஹீரோவாக காண்கின்ற தேசிய உணர்வு

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

உங்கள் கருத்துத் தான் எனதும். ஆனாலும் என்னால் ஜேவிபி போன்ற ஒரு இனவாதக் கட்சிக்கு என் வாக்கை போட விருப்பம் இல்லை என்பதால் நான் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

புரிகின்றது நிழலி.

1 hour ago, goshan_che said:

அண்ணா வாக்களிதாரா இல்லையா என்பதே டவுட்டாக இருக்கும் போது, டபிள் அக்கவுண்டிங் ஆகிவிடுமோ என யோசிக்கிறேன்.

அதுவும் சரிதான், கோஷான்.

54 minutes ago, goshan_che said:

தலைக்கு தில்லுத்தான். திசை காட்டிக்கு போட்டதும் இல்லாமல் விளக்கம் வேற குடுக்கிறியள்😀.

இதை இன்னும் எத்தனை ஆண்டுகள் கருத்துகளத்தில் உங்களை எதிர்க்க பாவிப்பார்களோ🤣.

🤣................

எப்போதாவது அப்படியே எதிர்ப்புகள் அதிகமாகி சமாளிக்கவே முடியாமல் போனால்........... இங்கு கவிதை கவிதைகளாக, கதை கதைகளாக எழுதித் தள்ளி விடுவேன், நீங்கள் வாசித்தே ஆக வேண்டும் என்று பயம் காட்டுவதாக உள்ளேன்......😜.   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நன்னிச் சோழன் said:
9 hours ago, தமிழ் சிறி said:

மேலே ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம்  
இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.

இதை ஆமோதிக்கிறேன்...

யாழ்கள வாசகர்கள் வெற்றி பெறுகின்றவர்கள் பக்கம் சாயந்து வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படியும் இருக்கின்றார்கள் என்று சிங்கள மக்கள் அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களித்த பின்பு அவரை கொண்டாடுவதை பார்த்தால்  தெரிகின்றது

Posted
2 hours ago, goshan_che said:

 

 நிழலியால் @நிழலி தமிரசுக்கு, குசா அண்ணையால் @குமாரசாமிபொன்னம்பலம் கட்சிக்கு போடாமல் வெளியே போக முடியவில்லை.

 

எனக்கு வாக்களிக்கும் வயது வந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியை புலிகள் ஆசீர்வதிக்காமையால் அவர்களுக்கு அன்று ஒருபோதும் வாக்களிக்கவில்லை.

தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூத்தமைப்பில் இணைந்த பின், எனக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆக மொத்தத்தில் நான் இவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை. 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனாவின்
சுயேட்சை   குழுவிற்கு  நான் நேற்று இரவே எனது வாக்கை அளித்துவிட்டேன்.

காரணம் பதவியில் இல்லாத போதே தனது துறையில் இருந்த ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர்.
அர்ச்சுனா அணி ஓரு இடத்தை வென்றாலும் அது அவர்களுக்கான ஒரு ஆரம்பமானதாகவும் தேசிய விற்பனையாளர்களுக்கு பலத்த அடியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக.  
அனுரவின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் நம்பிக்கை இன்னும் வரவில்லை
கோசான் சொன்னதை போன்று அவர் கூறியதில் அதிகளவானவரை

வரும் காலத்தில் செய்து காட்டினால் அவருக்கான ஆதரவு கிடைக்கும்.

Posted
2 hours ago, goshan_che said:

 

நானும் எதுவுமே தெரியாத பொடியள் மீது ரிஸ்க் எடுக்கிறேன் - அவர்கள் தமிழ் தேசிய அரசியல் செய்வார்கள் என நம்பி.அ

 

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன்.  இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை.

அதுவும் அருச்சுனா...!  

கியல வடக் நாஹி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:

நீங்கள் போடுவதற்கு முன்னும், போட்ட பின்னும், நான் போட்டதற்கு பின்னிருந்த எண்ணிக்கையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கின்றது..............🤣

இங்கயே பாயப்போட்டு படுத்து புலனாய்வு வேலையள் நடக்குது🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் மனமார வாக்களிக்க விரும்பிய கட்சி லிஸ்ட்இல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் எண்டு தமிழ் நாட்டில் சொல்லுறமாதிரி சொல்லிட்டு 1000 ரூபாயை வாங்கிட்டு அதே பழைய மொந்தைக்கு குத்துவதைப்போல இல்லாமல் சொல்லும் செயலுக்கும் வேறுபாடு இருக்ககூடாது என்பதால் புதியவர்கள் என்று இரண்டு தெரிவு எனக்கு இருந்தது ஒன்று அனுர தலைமையிலான அணி இன்னொன்று அர்ச்சனா அணி.. நான் அர்ச்சனா அணிக்கு போட்டிருக்கன்..

கோஷான் எவ்வழியோ, அவரின் ஒரே ஒரு ரசிகரும் அவ்வழியே🤣.

ஆனா சிங்கம் சொன்ன மாதிரியே - conditioning ஐ உடைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஒரு கெத்துத்தான்.

நீ நடத்து தல👌.

நிஜ வாக்கும் இப்படியே அமையட்டும்.

2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

ஒரு வாக்கு.. பிள்ளையானுக்கு, விழுந்திருக்கின்றது.

இன்னும் ஒண்டு வரோணும்…ஆனால் அண்ணனின் பெயரும் லிஸ்டில் இருப்பதால் அங்காலும் போகலாம்😄.

20 minutes ago, நிழலி said:

எனக்கு வாக்களிக்கும் வயது வந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியை புலிகள் ஆசீர்வதிக்காமையால் அவர்களுக்கு அன்று ஒருபோதும் வாக்களிக்கவில்லை.

தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூத்தமைப்பில் இணைந்த பின், எனக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆக மொத்தத்தில் நான் இவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை. 
 

இல்லை நான் தமிழரசு என குறிப்பிட்டது - 2001 க்கு பின் ஆதரித்த கட்சியை விட்டு வெளிவர முடியாமல் இருக்கிறதா? என்பதையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, goshan_che said:

கோஷான் எவ்வழியோ, அவரின் ஒரே ஒரு ரசிகரும் அவ்வழியே🤣.

ஆனா சிங்கம் சொன்ன மாதிரியே - conditioning ஐ உடைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஒரு கெத்துத்தான்.

நீ நடத்து தல👌.

நிஜ வாக்கும் இப்படியே அமையட்டும்.

சத்தியமா நான் நீங்கள் இதை எழுதும் வரை நீங்கள் ரெண்டாவது பக்கத்தில் உங்கள் தெரிவை எழுதியதை வாசிக்கவில்லை.. முந்த நாத்து இல்லா நேத்து எண்டு நினைக்கிறன் நான் இந்த திரியின் முதல் பக்கத்தை வாசித்ததாக ஞாபகம் ஆனால் அதில் நீங்கள் உங்கள் தெரிவை எழுதவில்லை.. அதற்குள் திரி மூன்று பக்கம் ஓடிவிட்டதால் கடைசிப்பக்கத்தை மட்டும் வாசித்தேன் ரெண்டாவது பக்கம் வாசிக்கவில்லை.. நீங்கள் இப்ப எழுதினாப்பிறகுதான் போய் பாத்தன்.. சாய்.. சான்சே இல்ல..அப்பிடியே ஒரு வரி விடாம நான் நினச்சமாரியே எழுதி இருக்கிறியள்.. எப்படி சிங் ஆகி இருக்கு நம்ப திங்கிங் எண்டு பாத்தியளே.. சேம் வேவ்…😁

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

இங்கயே பாயப்போட்டு படுத்து புலனாய்வு வேலையள் நடக்குது🤣

🤣..............

வீட்டுக் கோழி வளவுக்குள்ளேயே சுத்திச் சுத்தி வருகிறது போல சில நாட்களில் என்னுடைய பகல் நேரங்களில் யாழ் களத்துக்குள் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.................

வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் போக வேண்டிய கட்டாயம் இப்ப...........😌. அங்கே பாயுடன் போக முடியாது...........🤣.

இலங்கையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் இருக்கப் போகின்றனே என்ற கவலை........... பார்ப்பம், படைத்தவன் கைவிட மாட்டான்............




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.