Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக  8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு  17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
 
நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.  
 

https://www.tamilmirror.lk/liveblog/347084/பாராளுமன்றத்-தேர்தல்-2024-வாக்குப்பதிவு-தொடங்கியது

தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் 

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய்  வாக்குப் போடுங்கோ.
அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

voter-turnout-660-X-330-002.png?resize=6

காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக இன்று காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

நுவரெலியா மாவட்டம் : 40%
மொனராகலை மாவட்டம் : 37%
நுவரெலியா மாவட்டம் : 30%
இரத்தினபுரி மாவட்டம் : 30%
கேகாலை மாவட்டம் : 26%
கண்டி மாவட்டம் : 26%
பதுளை மாவட்டம் : 25%
கொழும்பு மாவட்டம் : 25%
மாத்தளை மாவட்டம் 24%
மட்டக்களப்பு மாவட்டம் : 22%
கம்பஹா மாவட்டம் : 21%
களுத்துறை மாவட்டம் : 20 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

https://athavannews.com/2024/1408467

##############    ###############  ###########

 

12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கம்பஹா – 40%
கேகாலை – 32%
புத்தளம் – 30%
கண்டி – 30%
நுவரெலியா – 40%
மாத்தறை – 34%
மட்டக்களப்பு – 32%

https://athavannews.com/2024/1408483

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

 

May be an illustration of text

 

466142689_971077361723903_64328492811069

 

May be an image of crocodile and text

 

467150709_970836835081289_51640265668595

 

466124303_971076545057318_36151126945321

 

465726811_970678775097095_21685464579267

 

May be an image of shoes and text

 

466142707_971127775052195_97986126441939

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் 10 மணி வரை பதிவான வாக்கு வீதம்

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

நுவரெலியா -20%
கண்டி -22%
இரத்தினபுரி – 25%
பதுளை -23%
கேகாலை-20%
மட்டக்களப்பு -09%
திகாமடுல்லை -18%
பொலன்னறுவை -23%
மொனராகலை -14%
மாத்தறை -10%
புத்தளம் -22%
மன்னார் -28%

கம்பஹா-20%
களுத்துறை-20%
யாழ்ப்பாணம் -16%
முல்லைத்தீவு-23%
கிளிநொச்சி-25%
குருநாகல்-22%
அநுராதபுரம்-25%
மாத்தளை-24%
வவுனியா-25%
திருகோணமலை-23%

https://thinakkural.lk/article/311976

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய்  வாக்குப் போடுங்கோ.
அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.

அண்ணை மை காயமுதல் எழுதிறன்!
அமைதியாக நடைபெறுகிறது, வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளது.
வாக்களித்த பலரும் சீட்டில முதலாவதாக இருந்த சின்னத்திற்கு(தேடிப்பார்க்க கடினமாக இருப்பதால்) போட்டதாக சொல்லுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

அண்ணை மை காயமுதல் எழுதிறன்!
அமைதியாக நடைபெறுகிறது, வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளது.
வாக்களித்த பலரும் சீட்டில முதலாவதாக இருந்த சின்னத்திற்கு(தேடிப்பார்க்க கடினமாக இருப்பதால்) போட்டதாக சொல்லுகிறார்கள். 

சீட்டில் முதலாவது யார்??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

அண்ணை மை காயமுதல் எழுதிறன்!
அமைதியாக நடைபெறுகிறது, வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளது.
வாக்களித்த பலரும் சீட்டில முதலாவதாக இருந்த சின்னத்திற்கு(தேடிப்பார்க்க கடினமாக இருப்பதால்) போட்டதாக சொல்லுகிறார்கள். 

யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சீட்டில் முதலாவது யார்??

குமாரசாமி அண்ணையின் பலம் பலம் பொ....பலம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய்  வாக்குப் போடுங்கோ.
அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.

கொழும்பான்.  இலங்கையிலா     இல்லை வேறு நாட்டில்?? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

குமாரசாமி அண்ணையின் பலம் பலம் பொ....பலம்!

அப்படியானால் பலம் வாக்கை பெறும் நிலையில் மக்கள் மனதில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கந்தப்பு said:

யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன். 

வீடு 6 

வீணை 8 

யானை 10 

சங்கு 12 

மான் 15 என நினைக்கிறேன்  ( உறுதிப்படுத்த முடியவில்லை)

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அப்படியானால் பலம் வாக்கை பெறும் நிலையில் மக்கள் மனதில் இருக்கிறது.

அண்ணை இருப்பவர்களில் ஒப்பீட்டளவில் கழிசடை வேலைகளில் ஈடுபடாதவர்கள் அவர்கள் என்பதும் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவர்களும் அவர்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கந்தப்பு said:

வீடு 6 

வீணை 8 

யானை 10 

சங்கு 12 

மான் 15 என நினைக்கிறேன்  ( உறுதிப்படுத்த முடியவில்லை)

 

மற்றவை எங்க இருக்கென்று பாக்கவே இல்லை அண்ணை!
வாக்குச் சீட்டு பெரிதாக இருந்தது. என்னுடைய முச்சக்கர வாகனம் உட்செல்லக் கூடியவாறு வாக்குச் சாவடி அமைந்துள்ளது, அத்தோடு சிரேஸ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர் சகல வசதிகளையும் ஏற்புடுத்தித் தந்தார். புள்ளடி இட்டவுடன் சீட்டை மடித்து அவரிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பெட்டியில் போட வைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

அண்ணை இருப்பவர்களில் ஒப்பீட்டளவில் கழிசடை வேலைகளில் ஈடுபடாதவர்கள் அவர்கள் என்பதும் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவர்களும் அவர்கள் தானே.

இந்த இரண்டு காரணங்களுக்காகவே நான் இங்கே நடந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தேன். நன்றி தாயகத்தில் இருந்து உறுதிப்படுத்தியதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கந்தப்பு said:

வீடு 6 

வீணை 8 

யானை 10 

சங்கு 12 

மான் 15 என நினைக்கிறேன்  ( உறுதிப்படுத்த முடியவில்லை)

 

9d811de1-5dfb-44ed-b5da-1633b6bed214.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

காலை பத்து மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 16%, நுவரெலியாவில் 20%, கண்டியில் 22%, இரத்தினபுரியில் 25%, பதுளையில் 23%, கேகாலையில் 20%, மட்டக்களப்பில் 09%, திகாமடுல்லையில் 18%, பொலன்னறுவையில் 23%, மொனராகலையில் 14%, மாத்தறையில் 10%, புத்தளத்தில் 22%, மன்னாரில் 28%, கம்பஹாவில் 20%, களுத்துறையில் 20%, முல்லைத்தீவில் 23%, கிளிநொச்சியில் 25%, குருநாகலில் 22%, அநுராதபுரத்தில் 25%, மாத்தளையில் 24% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

 

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டன.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, மிகவும் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வந்த பல மூத்த அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான சுயேச்சைக் குழுக்கள் இந்த முறை களத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

இந்தத் தேர்தலில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கென 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354. இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.

தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்ட பிறகு, பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு, மூன்றே அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு தினசரி பணிகள் நடைபெற்று வருகின்றன.

அநுர குமார திஸாநாயக்கவை பொறுத்தவரை, அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத் தான் விரும்பிய அமைச்சரவையை அமைக்க விரும்புவார். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுப்பது, தங்கள் கட்சி ஆட்சியமைக்க முயல்வது ஆகியவையே நோக்கமாக இருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரம் ஆகியவையே முக்கியமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து, சற்றே மீண்டு வந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரம் மேம்பட்டு, விலைகள் குறைய வேண்டும் என்பதுதான் முக்கியமான எதிர்பார்ப்பு.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

"இலங்கையின் வாக்காளர்களிடம் பொதுவாக, பொருளாதார நிலை மேம்பட வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, வேலை வாய்ப்பும் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் இந்த விவகாரம் தீவிரமாக எதிரொலிக்கிறது. சிறுபான்மை மக்களிடம் 13வது சட்டத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது" என்கிறார் கொழும்பு நகரில் இருந்து செயல்படும் சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேடிவ்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து.

அவரைப் பொறுத்தவரை, புதிய ஜனாதிபதியான அநுர குமார திஸாநாயக்க சரியான திசையில் செல்வதாகத் தோன்றினாலும், புதிய நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட பிறகே அவர் எந்த அளவுக்குத் திறம்படச் செயல்படுகிறார் என்பது குறித்த முடிவுக்கு மக்களால் வர முடியும் என்கிறார்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்னமும் கடன் நெருக்கடியில்தான் இருந்து வருகிறது. சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்துவதோடு, அந்நிய செலாவணிக் கையிருப்பையும் அதிகரித்தாக வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக அதிகரித்திருப்பதால், அரசு ஊழியர்களிடம் ஊதிய உயர்வு கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மீனவர்கள், விவசாயிகள் போன்ற பிரிவினரிடம் மானிய உதவி எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இப்படியாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்கிறார் அரசியல் விமர்சகர் நிலாந்தன்.

"ஜனாதிபதித் தேர்தலின்போது தென்னிலங்கையில் மாற்றத்துக்கான ஒரு அலை வீசியது. அந்த அலையின் தாக்கம் இன்னமும் அப்பகுதியில் இருக்கிறது. ஆனால் தமிழ், இஸ்லாமிய மக்களின் கவலைகளும் கரிசனங்களும் வேறு" என்கிறார் அவர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, சிங்கள மக்களின் எதிர்பார்ப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றானதல்ல என்கிறார் நிலாந்தன்.

"தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, இனப் பிரச்னைகள் தொடர்பான கவலைகள் இருக்கின்றன. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் முக்கியக் கட்சியான ஜே.வி.பி. இன்னமும் அதை ஒரு மனிதாபிமானப் பிரச்னையாகவே பார்க்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் இன்னும் 13வது சட்டத் திருத்தம் தேவையில்லை எனப் பேசுகிறார்கள். மேலும் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் ராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இதையொட்டி அமைந்த ராணுவ வளையங்கள் பல கிராமங்களை ஊடறுத்துச் செல்கின்றன. இலங்கை ராணுவத்தின் பெரும் பகுதி வடக்கு - கிழக்கு பகுதியில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பகுதியில் ராணுவ மய நீக்கம் முக்கியமான பிரச்னை" என்கிறார் அவர்.

வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரை, பல சுயேச்சைக் குழுக்கள் களத்தில் நிற்பதால் ஒரே கட்சியே பெருமளவு இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்த முறை குறைந்திருப்பதாகவும் சொல்கிறார் நிலாந்தன்.

வாக்குப் பதிவு மாலை நான்கு மணியளவில் முடிந்துவுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாகத் துவங்கும். அடுத்த நாள் பிற்பகலுக்குள் பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

2 minutes ago, புலவர் said:

May be an image of text

 

1 minute ago, கந்தப்பு said:

9d811de1-5dfb-44ed-b5da-1633b6bed214.jpg

இந்த மாதிரி வாக்குச்சீட்டுகளை எந்த ஒரு கட்சியும் வீடுவீடாக மக்களிடம் சென்று தெளிவுபடுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. வாசிக்கத் தெரிந்தவர்களே குழம்பும் அளவுக்கு கட்சிகளும் சுயேட்சைகளும் கூடிப்போயிற்று!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கொழும்பான்.  இலங்கையிலா     இல்லை வேறு நாட்டில்?? 

கொழும்பான்... மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாட்டில் வேலை செய்வதாக முன்பு சொன்னவர். 
நீங்கள் நுணாவிலானையும், வாதவூரானையும் இலங்கையில் வசிக்கின்றார்கள் என்று சொல்வீர்கள்   போலுள்ளது. சரியான வில்லங்கம் பிடித்த ஆளப்பா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

May be an image of text

 

2 hours ago, ஏராளன் said:

இந்த மாதிரி வாக்குச்சீட்டுகளை எந்த ஒரு கட்சியும் வீடுவீடாக மக்களிடம் சென்று தெளிவுபடுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. வாசிக்கத் தெரிந்தவர்களே குழம்பும் அளவுக்கு கட்சிகளும் சுயேட்சைகளும் கூடிப்போயிற்று!

மாதிரி வாக்குச் சீட்டு அடிப்பது குற்றம் என நினைக்கின்றேன்.
👇 கீழே உள்ள செய்தியில் "32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின" என்று உள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

கொழும்பான்... மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாட்டில் வேலை செய்வதாக முன்பு சொன்னவர். 
நீங்கள் நுணாவிலானையும், வாதவூரானையும் இலங்கையில் வசிக்கின்றார்கள் என்று சொல்வீர்கள்   போலுள்ளது. சரியான வில்லங்கம் பிடித்த ஆளப்பா. 🤣

சரி இனி எழுதவில்லை    நன்றி வணக்கம் 🙏🙏🙏

போன கிழமை  கொழும்பான். கொழும்பில்   கத்தோலிக்க தேவலாம் போனாதாக.  எழுதிய ஞாபகம் அது தான் கேட்டேன்  பாஸ்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல் 2024 : வாக்குப் பதிவு வீதம்!

image

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல்  பி.ப  4 மணிவரை நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் இடபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

அந்தவகையில், கொழும்பில் 65 சத வீத வாக்குப் பதிவும், நுவரெலியாவில் 68  சத வீத வாக்குப் பதிவும் புத்தளத்தில் 56 சத வீத வாக்குப் பதிவும் மாத்தறையில் 64 சத வீத வாக்குப் பதிவும் பதுளையில் 67 சதவீத வாக்குப் பதிவும் மட்டக்களப்பில் 61 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, அநுராதபுரத்தில் 65 சத வீத வாக்குப் பதிவும் குருணாகலில் 64 சதவீத வாக்குப் பதிவும் இரத்தினபுரியில் 65 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளன.

கேகாலையில் 64 சத வாக்குப் பதிவும் பொலன்னறுவையில் 65 சத வீத வாக்குப் பதிவும் வன்னியில் 65 சத வீத வாக்குப் பதிவும் ஹம்பாந்தோட்டையில் 60 சத வீத வாக்குப் பதிவும் காலியில் 64 சத வீத வாக்குப் பதிவும் திருகோணலையில் 67 வீத வாக்குப் பதிவும் மொனராகலையில் 61 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/198710

நம்மூர்ல 1400இல் 400 தான் வாக்களித்ததாக சொல்கிறார்கள்! யாழ்ப்பாண வாக்களிப்பு வீதம் குறைவு தான் போல?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

சரி இனி எழுதவில்லை    நன்றி வணக்கம் 🙏🙏🙏

போன கிழமை  கொழும்பான். கொழும்பில்   கத்தோலிக்க தேவலாம் போனாதாக.  எழுதிய ஞாபகம் அது தான் கேட்டேன்  பாஸ்.   🤣

நீங்கள் எழுதுங்கள் பாஸ்.
அப்ப தானே... எங்களுக்கும் பொழுது போகும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் தேர்தல் நிலவரம்!

யாழ் மாவட்டத்தில்  பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1408514

  • கருத்துக்கள உறவுகள்
🔥💉❌
May be an image of text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.