Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

கோவிகாதையுங்கோ...அங்கை என்ன டிஸ்பென்சரி போடவோ..

நான் ஏன்னண்ணை கோவிக்கப் போறன்! தற்போது அருச்சுனா ஒரு கோமாளிபோல தெரியலாம். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்க்கலாம். அதோட அந்தப் பிள்ளை கவுசல்யாவும் ஆள் ஓக்கே.

4 minutes ago, alvayan said:

அப்ப உங்கடை முதல் குண்டு வெடிச்சிட்டுதா வாலி சார்..

இன்னும் வெடிக்கேல்லை. சுமந்திரன் எம்பியா பதவியேற்கும்போது பிறகு கள்ளா கள்ளா எண்டு கத்தக்கூடாது!😂

  • Replies 909
  • Views 78.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கந்தப்பு said:

வன்னி மாவட்டத்தில் அனுரா கட்சி2 இடம் , சஜித் 1, வீடு 1, சங்கு 1, கங்காரு 1 இடங்கள் கிடைத்திருக்கிறது

சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

இன்னும் வெடிக்கேல்லை. சுமந்திரன் எம்பியா பதவியேற்கும்போது பிறகு கள்ளா கள்ளா எண்டு கத்தக்கூடாது!😂

அங்கை எல்லா யூடியூப்பரும் சுமந்திரன் வெளியில் என்று கத்துகினம் நீங்க என்னடாவென்றால் ..வேறுமாதிரி ..

5 minutes ago, கந்தப்பு said:

சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது

அய்யா...சனம் நம்ம அரசியல்வாதிகளில் வெறுப்பில் இருக்கினம் ...இந்த கட்சிகளின் பெயரில் எந்த மாடு வந்தாலும் அடிதான் விழும்...நம்மை நம்பி உயிரிழந்தோரினை மனதிடையிருத்தி மீதி காலத்தைக் கழிப்போம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய...ஜெயசங்கர் பெட்டி கட்டுறாராம்...அனுரவிடம் வாறதுக்கு

அனுராவை கெதியிலை தீர்வை தரச் சொல்லுங்கோ...இங்கை கனடாவிலயும் நமக்கு பிரச்சினை வரும்போலை கிடக்கு..

கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

இந்திய...ஜெயசங்கர் பெட்டி கட்டுறாராம்...அனுரவிடம் வாறதுக்கு

விமானத்தை இறங்க விடாமல் செய்தாலும் செய்வார் தோழர் அனுரா...
இந்திவின் துணை தூதரகத்தை வெளியேற்றினாலும்  ஆச்சரியப்பட தேவையில்லை,,,,அனுராவின் யாழ் மாவட்ட தோழர்கள் இதற்காக உழைப்பார்கள்😅

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

விமானத்தை இறங்க விடாமல் செய்தாலும் செய்வார் தோழர் அனுரா...
இந்திவின் துணை தூதரகத்தை வெளியேற்றினாலும்  ஆச்சரியப்பட தேவையில்லை,,,,அனுராவின் யாழ் மாவட்ட தோழர்கள் இதற்காக உழைப்பார்கள்😅

என்ன புத்தரே நீங்களே தோழர் போட்டால்...நாம் எங்கைபோய் தலையை இடிப்பது..கனடாவிலும் வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்று மற்ற இந்தியன் சத்தம் போடுறான்..😁

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை
  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,842,223 (106 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,966,875 (28 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 493,359 (2 ஆசனம்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,287 (2 ஆசனம்)
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) – 252,548 (3 ஆசனம்)
  • சர்வஜன அதிகாரம் (SB) - 177,954 - (0 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் - 917,989 (5 ஆசனம்)
 
தொகுதி ரீதியாக முதலில் அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள், பின்னர் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 15), மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது.

எனினும், மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார்.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு, வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம் என்கிறார் சிவராஜா.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,R.SIVARAJA

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய, “இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது, தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக, அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.

குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா.

சஜித், ரணில் கட்சிகள் பாரிய பின்னடைவு

நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தேசிய கட்சி ஒன்று முன்னிலை வகிக்கிறது.

அத்துடன், தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.

தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள்தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன.

குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.

இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கந்தப்பு said:

சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது

large.IMG_7517.jpeg.bb76cd4b17fc2affcf54

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை!

நண்பனின் பதிவு ..

அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன். 😂

இதுதான் தற்போதய ட்ரென்ட் ஆக இருக்குமோ? கமலா காரிஸின் cloud storage விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

என்ன புத்தரே நீங்களே தோழர் போட்டால்...நாம் எங்கைபோய் தலையை இடிப்பது..கனடாவிலும் வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்று மற்ற இந்தியன் சத்தம் போடுறான்..😁

அடுத்த வருடம் நாட்டுக்கு போக வேண்டி வரும் அதுதான்  இப்ப்வே தோழர் என ஐஸ் வைக்கிறேன்.😅... தமிழ் தேசிய கட்சிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழ் தேசியம் பேசாது ...ஒற்றுமையாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் ...என்.பி.பி யின் தமிழ் பா.உ க்கள் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது மக்களுக்கு ...காரணம் சிங்கள பா,உ க்களுக்கே பணம் இருக்குமோ தெரியவில்லை கிராமங்களை அபிவிருத்தி செய்ய ...கடந்த தேர்தலில் வன்னியிலிருந்து ஈ.பி.டி.பி பா,உ சென்றிருந்தார் அல்லவோ அதே போல இவர்களும் போய் அரசஇன் வரவுசெலவு திட்டத்துக்கு கை உயர்த்திவிட்டு ஆமா போட வேண்டியது தான் ...

டக்கிளஸ் 30 வ்ருடம் தாக்கு பிடித்தார் இந்த என்.பி.பி  பா.உ. கள் எவ்வளவு காலத்துக்கு என பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, alvayan said:

அங்கை எல்லா யூடியூப்பரும் சுமந்திரன் வெளியில் என்று கத்துகினம் நீங்க என்னடாவென்றால் ..வேறுமாதிரி ..

அய்யா...சனம் நம்ம அரசியல்வாதிகளில் வெறுப்பில் இருக்கினம் ...இந்த கட்சிகளின் பெயரில் எந்த மாடு வந்தாலும் அடிதான் விழும்...நம்மை நம்பி உயிரிழந்தோரினை மனதிடையிருத்தி மீதி காலத்தைக் கழிப்போம்

நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.  அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் .  அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை  

இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை .  வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம்.  

இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள்; தமிழரசு கட்சிக்கு 1 ஆசனம்

யாழ்.மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,

தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 63,327 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 27,986 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

சுயேட்சைக் குழு 17 -27,855 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

https://thinakkural.lk/article/312151

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.  அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் .  அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை  

இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை .  வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம்.  

இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?

நன்றி தெளிவான விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

அடுத்த வருடம் நாட்டுக்கு போக வேண்டி வரும் அதுதான்  இப்ப்வே தோழர் என ஐஸ் வைக்கிறேன்.😅... தமிழ் தேசிய கட்சிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழ் தேசியம் பேசாது ...ஒற்றுமையாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் ...என்.பி.பி யின் தமிழ் பா.உ க்கள் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது மக்களுக்கு ...காரணம் சிங்கள பா,உ க்களுக்கே பணம் இருக்குமோ தெரியவில்லை கிராமங்களை அபிவிருத்தி செய்ய ...கடந்த தேர்தலில் வன்னியிலிருந்து ஈ.பி.டி.பி பா,உ சென்றிருந்தார் அல்லவோ அதே போல இவர்களும் போய் அரசஇன் வரவுசெலவு திட்டத்துக்கு கை உயர்த்திவிட்டு ஆமா போட வேண்டியது தான் ...

டக்கிளஸ் 30 வ்ருடம் தாக்கு பிடித்தார் இந்த என்.பி.பி  பா.உ. கள் எவ்வளவு காலத்துக்கு என பார்ப்போம் 

சொல்வது சரி...நான் தோழர் போட மாட்டேன்..எனென்றால் ஒருமாதம்தான் போய் வந்து ...மிக அவசர குடும்ப விசிட்டாக போய் வந்தேன்...இங்கு வந்தவுடன் கிடைத்தது இரண்டு  சோக முடிவுகள்...தேற்றிக்கொண்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்கள்; தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய,

இலங்கை தமிழரசு கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

https://thinakkural.lk/article/312153

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.  அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் .  அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை  

இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை .  வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம்.  

இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?

இங்கு யாழிலும் அனுர அலை சுனாமியாக அடிக்குது....உங்கள் விளக்கம்  தெளிவை ஏற்படுத்தியது...நன்றி...யாழில் சீசன் சுனாமி..அமைதியாய் நகர்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

latest-result.jpg

தற்போதைய தேர்தல் நிலை

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் சார்..முக்கியம் வென்றவர்களின் பெயர்தான்...யாழ் /கிழக்கில்...

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

நன்றி தெளிவான விளக்கம்.

சுமந்திரன் மேல் கோபத்தில் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

ஏராளன் சார்..முக்கியம் வென்றவர்களின் பெயர்தான்...யாழ் /கிழக்கில்...

உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்

15 NOV, 2024 | 09:55 AM
image
 
மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் 

இலங்கை தமிழரசுக் கட்சி 96,975  (3 ஆசனங்கள்)

தேசிய மக்கள் சக்தி 55,498 (1 ஆசனங்கள்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139  (1 ஆசனம்)

30.JPG

https://www.virakesari.lk/article/198850

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச  இறுதி எண்ணிக்கை 

தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 158
ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 41
தமிழரசு கட்சி 8
புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 6
இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 3
மற்றவை 9

https://manthri.lk/en/BattleforBallotsGE2024

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.

டாக்டரும் அவுட்டாகீ ..யாரோ மயூரன் உள்ளாமே அப்படியா

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.

இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை   ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால்.  உடனாடியாக.  அக்கட்சியின். தலைவர்  தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு  பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல்    இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை   ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால்.  உடனாடியாக.  அக்கட்சியின். தலைவர்  தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு  பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல்    இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை 

தலைவரே இல்லாத கட்சியிலையிருந்து யார் பதவி விலகிறது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.