-
Tell a friend
-
Topics
-
32
vasee · தொடங்கப்பட்டது
-
Posts
-
தேர்தலுக்கு முன் பூச்சாண்டி காட்டி தட்டிப்பறிக்க நினைத்தார்கள், அதையும் தாண்டி மக்கள் அவர்மேல் தமக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார். இப்போ தமிழருக்கு ஏதாவது கிடைத்து விடுமோ என்கிற அச்சத்தில் வந்து புத்திமதி கூறுகிறாராம். ஏதோ அனுரா இவரைக்கேட்டுத்தான் முடிவெடுப்பார் போல. கண்கெட்டபின் புலம்பத்தான் முடியும், தேடியடைய முடியாது இழந்ததை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், மக்கள், அகன்ற கதவை திறந்து அரிய கொடுத்துள்ளது. அவர் மனதை திறந்து நம்மையும் பங்காளிகளாக அழைத்தால் நன்மைகள் நிறைவேறும். இல்லையேல் சந்திரிகா புலம்புவதுபோல், கோத்தா ஓடியதுபோல் எதுவும் நடக்கலாம். இனிமேல் இவர்கள் வாயை சாப்பிடுவதற்கு அப்பால் திறந்தால் ரொம்ப அவமானப்படுவார்கள்.
-
உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.
-
தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் அணி விசேட அறிவிப்பு
-
By ஈழப்பிரியன் · Posted
சுமந்திரனை சிறந்த ஒரு சட்டத்தரணியாகவே முன்னர் இருந்து எழுதி வருகிறேன். முன்னர் டாக்ரர் வைத்தியசாலைக்குள் போகமுடியாது. இப்போது எம்பியாக பொலிஸ் பாதுகாப்புடன் போகலாம்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts