Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!

எங்களுக்கு வெற்றி வாகை வந்து இருக்கலாம் ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது. இங்கே காலம் காலமாக இருந்தவர்கள் அந்த அலையில் வீசப்பட்டு விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

இன்று (16) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். நான் வந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவதற்காக இதை செய்யவில்லை தமிழ் தேசியத்திற்காக தான் சுயேட்சையாக கேட்கப்பட்டது.

தேசியப்பட்டியல் ஆசனம் ஒரு போதும் எனக்கு வேண்டாம் என கூறிய சுமந்திரன், ஆனால் மத்திய குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார், மத்திய குழுவை நடத்தி செல்வதே சுமந்திரன் தான் என தெரிவித்தார். 

https://tamil.adaderana.lk/news.php?nid=195987

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஏராளன் said:

தேசியப்பட்டியல் ஆசனம் ஒரு போதும் எனக்கு வேண்டாம் என கூறிய சுமந்திரன், ஆனால் மத்திய குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார், மத்திய குழுவை நடத்தி செல்வதே சுமந்திரன் தான் என தெரிவித்தார். 

அது அவர்கள் பிரச்சினை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது சரி ஆறு. திருமுருகன் தரப்பு உங்கள் உதயன் பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு என்னானது என்று சொல்லுங்களேன்.

(குறிப்பு: தெல்லிப்பழை சிறுவர் இல்லம் தொடர்பான உதயன் செய்தி சரியானது என்பதே இக்கருத்தாளர் எண்ணம்.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிப்படியாக எல்லோரும் ஆளாளுக்கு சிறிது சிறிதாக பெரும் குழியை வெட்டிவிட்டு வெள்ளம் வந்தது அலை வந்தது என்று புலம்பி என்ன பயன்???

இப்பவும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள்.

சிங்கள யூடியூப் காணொலிகளில்  சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம்

,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை

எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு  பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம்  பின்னூட்டம் இடுகிறார்கள். 

இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்?

இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி  பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, valavan said:

நானும் யூடுப்பில் சில‌ காணொளிக‌ள் பார்த்தேன் அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌த்தில் எழுதின‌தை த‌மிழில் மொழி பெய‌ர்த்து வாசித்தேன் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ப‌ற்றி ந‌ல்லாக‌ தான் எழுதி இருந்தின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, valavan said:

இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி  பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.

இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன்

எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று

இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா..................

அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம்  வ‌ராம‌லே வெல்வார் அண்ணா...................

2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று

அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான்

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று

க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள்

இதோ துவார‌கா வ‌ருகிறா
அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ம் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள்

2009க‌ளில்  எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, valavan said:

அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள்.

சிங்கள யூடியூப் காணொலிகளில்  சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம்

,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை

எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு  பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம்  பின்னூட்டம் இடுகிறார்கள். 

இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்?

இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி  பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.

 நல்ல விடயம் ...இனிமேல் சிங்கள மக்களும் ஆதர்வு ,சிங்கள பா.உக்களும் ஆதர்வு என்றால் ...தமிழரின் உரிமை பிரச்சனை தீர்ப்பது இலகுவான விடயம் ..பல ஒப்பந்தங்கள் கிழித்தெரிந்தமைக்கு காரணம் சிங்கள அரசியல்வாதிகள் என்பதை நாம் அறிவோம் ...
அனுரா அரசு புது வியாக்கியானக்களை சொல்லாமல் தமிழர் தேசியத்தை நிலைநாட்டி ...சிறிலங்காவை கட்டியெழுப்ப முன் வர வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, வீரப் பையன்26 said:

இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன்

எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று

இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா..................

அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம்  வ‌ராம‌லே வெல்வார் அண்ணா...................

2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று

அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான்

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று

க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள்

இதோ துவார‌கா வ‌ருகிறா
அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ம் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள்

2009க‌ளில்  எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................

உண்மை....அதே சமயம்  Anuraa  கட்சியில் தெரிவான தமிழ் எம் பி க்கள் டக்கிளஸ்,அங்கயன்,பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் போல தேசியகட்சிகளின் காலில் விழுந்து அரசியல் செய்யாமல் தமிழருக்கு விரோதமான கருத்துக்களை பரப்பாமல் தமிழர்களின் த்னித்துவத்தை பாதுகாத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் ...அனுரா அரசு அதற்கு தடை போடாது என நினக்கிறேன்...எனவே அனுராவின் தமிழ் எம் பி க்கள் (வடக்கு கிழக்கு)சிந்தித்து செயல்பட வேண்டும் ..மாகாணசபை சகல அதிகாரங்களுடனும் இயங்க ஆக்க பூர்வமான் செயல்களை செய்ய வேண்டும்..

Edited by putthan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

படிப்படியாக எல்லோரும் ஆளாளுக்கு சிறிது சிறிதாக பெரும் குழியை வெட்டிவிட்டு வெள்ளம் வந்தது அலை வந்தது என்று புலம்பி என்ன பயன்???

இப்பவும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. 

இரண்டு தடவை இருந்து என்ன செய்தவர் ...அந்த இரண்டு தடவை காணும் என சந்தோசமாக இளைப்பாறி புதுமுகத்துக்கு வழிவிட்டிருக்க வேணும்... நீங்கள் எல்லாம் ஒருமாதத்தில் புது கட்சி உருவாக்கி அதில் வெற்றி பெறலாம் என நினைத்ததே தப்பு ....சுமத்திரனுடன் பகை என்றால் விலகியிருக்க வேண்டும் ....அதைவிடுத்து புது கட்சி உருவாக்கி அதில 6 பேரை உள்வாங்கி .....இப்ப சுமாமி,அலை ....

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.