Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி

SelvamNov 17, 2024 12:41PM
WhatsApp-Image-2024-11-17-at-12.16.24-PM

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கைதான நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி  பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக குழந்தையுடன் இருந்த நடிகை கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், கஸ்தூரி இன்று சென்னை அழைத்துவரப்பட்டார். அவரிடம் சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த உள்ளனர்.

https://minnambalam.com/tamil-nadu/police-investigate-with-kasturi-in-chennai/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣.

அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம்.

இனி?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣.

அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம்.

இனி?

“அச்சம் என்பது மடமையடா” என்ற பாடலைப் பாடிய பாரதியாரே பாண்டிச்சேரியில் இருந்து  மட்றாஸ் பிரெசிடென்ஸிக்குள் பிரவேசிக்கும் போது, மாட்சிமை  தங்கிய ராணிக்கும்  பிரிட்டிஷ் ஆட்சிக்கும் இனிமேல் விசுவாசமாக அடிபணிந்து  இருப்பேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கும் போது அம்மணி எம்மாத்திரம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, island said:

“அச்சம் என்பது மடமையடா” என்ற பாடலைப் பாடிய பாரதியாரே

இது கண்ணதாசன் அல்லவா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

இது கண்ணதாசன் அல்லவா?

பாரதியார். 

https://www.bbc.com/tamil/articles/c0dr20r0rd2o.amp

மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்.

மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன். 

-சி.சுப்ரமணிய பாரதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்னுடன் இருந்த குழந்தை யார்

Nov 17, 2024 14:32PM IST ஷேர் செய்ய : 
WhatsApp-Image-2024-11-17-at-2.21.19-PM.

ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கஸ்தூரியை போலீசார் கைது செய்தபோது, தனது 12 வயது மகனை விட்டு பிரிந்து வர முடியாமல், சிலமணி நேரம் பாசப்போராட்டம் நடத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள்” என்று கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தது. கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

WhatsApp-Image-2024-11-17-at-12.57.29-PM

இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து கஸ்தூரியை தேடி வந்தனர்.

அதில் எழும்பூர் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் தலைமையிலான தனிப்படை டீம் கஸ்தூரி தங்கியிருந்த ஹைதராபாத் வீட்டுக்கு சென்றனர்.

தங்களை சென்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டதும், “எனக்கு உடல்நிலை சரியில்லை. நிறைய மாத்திரைகள் எடுத்து வருகிறேன். என்னுடைய குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். நானே நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று போலீசாரிடம் கெஞ்சி அழுதிருக்கிறார் கஸ்தூரி. இதுகுறித்து, குழந்தையுடன் கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (நவம்பர் 16) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

அப்போது இன்ஸ்பெக்டர் மோகன், “யார் இந்த குழந்தை?” என்று கஸ்தூரியிடம் கேட்டிருக்கிறார்.

“இது என்னுடைய 12 வயது ஆண் மகன். கருத்து வேறுபாட்டால் எனது கணவரும் நானும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம். அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். என் குழந்தையை வெளியில் காட்டாமல் வளர்த்து வந்தேன். குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லை. நான் அவனை எப்படி பிரிந்து வருவது?” என்று மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் கஸ்தூரி.

இதனையடுத்து கூடுதல் ஆணையர் கண்ணனைத் தொடர்புகொண்ட மோகன் ராஜ், “குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலதாமதம் பண்றாங்க சார். என்ன பண்ணலாம்” என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்.

“அவரது உறவினர் அல்லது தெரிந்தவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அழைத்து வாருங்கள் அல்லது குழந்தையோடு அழைத்து வாருங்கள். சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்ள வழி இருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நாம செயல்படலாம்” என்று இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.

இதை கஸ்தூரியிடம் சொன்னபோது, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார். பின்னர், “சார் கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கேட்டிருக்கிறார். போலீசாரும் சிறிது நேரம் டைம் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது கஸ்தூரி தனது நண்பரான பாமக மாநில துணை செயலாளரும் toni & guy ஹேர்டிரெஸ்ஸிங் மற்றும் புதுச்சேரியில் கல்லூரி நடத்தி வரும் சாம்பால் மனைவியை தொடர்புகொண்டு நேரில் அழைத்தார்.

அவரிடம் தனது 12 வயது மகனை ஒப்படைத்துவிட்டு சிறையில் இருந்து வரும்வரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று, தனது இரண்டு கையால் மகனின் கன்னத்தை வருடி உச்சியில் முத்தமிட்டு கண்ணீரோடு போலீஸ் வாகனமான பொலிரோ காரில் ஏறினார் கஸ்தூரி.

WhatsApp-Image-2024-11-17-at-12.57.50-PM

ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது பொலிரோ கார். அலுங்காமல் குலுங்காமல் சொகுசு காரில் பயணித்து வந்த கஸ்தூரி, போலீஸ் வாகனமான பொலிரோ காரில் வசதியாக காலை நீட்டி மடக்க முடியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இரவு நேரத்தில் பயணித்தபோது உறக்கமில்லாமல் உடல் சோர்ந்து தளர்ந்து காணப்பட்டார்.

இரவு முழுவதும் களைப்புடன் காரில் பயணித்த கஸ்தூரி இன்று காலையில் தமிழக எல்லைக்கு வந்தபோது, “சார் மாத்திரை போடணும். ஏதாவது ஒரு ஹோட்டல்ல கொஞ்சம் நிறுத்துங்க” என்று போலீசாரிடம் கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பாதுகாப்பு நலன் கருதி ஒரு ஹோட்டலில் ஜீப்பை நிறுத்தினார். அப்போது கஸ்தூரி அந்த ஹோட்டலில் ஃபிரெஷ் அப் செய்துகொண்டார். பின்னர் டிபன் மற்றும் காபி சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டு மீண்டும் அதே பொலிரோ காரில் ஏறி அமர்ந்தார்.

12 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி. காவல்நிலையத்தில் ரிமாண்ட்டுக்கு அனுப்புவதற்கான ஃபார்மாலிட்டிக்களை முடித்துவிட்டு சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கஸ்தூரிக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
 
https://minnambalam.com/political-news/kasthuri-arrested-who-was-the-child-with-her-opened-up/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, island said:

பாரதியார். 

https://www.bbc.com/tamil/articles/c0dr20r0rd2o.amp

மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்.

மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன். 

-சி.சுப்ரமணிய பாரதி

பாரதியா கடிதம் எழுதியது தெரியும் ஐலண்ட்.

அச்சம் என்பது மடமையடா பாடல் கண்ணதாசன் எழுதியது என நினைக்கிறேன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

இது கண்ணதாசன் அல்லவா?

மன்னிக்கவும் கோஷான்.  அச்சமில்லை அச்சமில்லை  உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்  என்ற பாடலைப்பாடிய பாரதியார் என்று வந்திருக்க வேண்டும். 

4 minutes ago, goshan_che said:

பாரதியா கடிதம் எழுதியது தெரியும் ஐலண்ட்.

அச்சம் என்பது மடமையடா பாடல் கண்ணதாசன் எழுதியது என நினைக்கிறேன்?

அது பாரதிதாசன் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, கிருபன் said:

என் குழந்தையை வெளியில் காட்டாமல் வளர்த்து வந்தேன்.

கஸ்தூரியும் கணவரும் பிரிந்து 20 வருடம் இருக்கும் என நினைக்கிறேன்.

இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை மட்டும் என நினைவு.

பிற்சேர்க்கை - ஒரு ஆண் குழந்தையுமாம்.

அதை ஏன் மறைத்து வளர்க்க வேண்டும்.

நுணலும் தன்வாயால் கெடும்.

11 minutes ago, கிருபன் said:

“இது என்னுடைய 12 வயது ஆண் மகன். கருத்து வேறுபாட்டால் எனது கணவரும் நானும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம்.

7 minutes ago, island said:

அது பாரதிதாசன் இல்லையா? 

இருக்கலாம். 

எழுத்து நடை பாரதிதாசன் போலவே உள்ளது.

@Kavi arunasalam உங்களுக்கு தெரியுமா?

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இருக்கலாம். 

எழுத்து நடை பாரதிதாசன் போலவே உள்ளது.

அச்சம் என்பது மடமையடா...

படம் : மன்னாதி மன்னன்
இசை : M.s.v, ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
 
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்)
 
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)
 
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, கிருபன் said:

அச்சம் என்பது மடமையடா...

படம் : மன்னாதி மன்னன்
இசை : M.s.v, ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
 
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்)
 
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)
 
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) 

நன்றி ஜி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, கிருபன் said:

அச்சம் என்பது மடமையடா...

படம் : மன்னாதி மன்னன்
இசை : M.s.v, ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
 
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்)
 
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)
 
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) 

இந்தப்பாடல் எழுதப்பட்ட போது கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்தார். பிறகு பிரிந்தார். அதானால்தான் திராவிடர் உரிமையடா உடமையடா என்று எழுதினார். ஆனால்பாடலில் வசார்லப்பட்ட அனைவரும் தமிழ்மன்னர்கள்.சேரனையும் பாண்டியனையும் பற்றி எழுதியிருக்கிறார்.ஒ ரு திராவிட மன்னன் கூட இல்லையா? என்னடா இது திராவிடத்திற்கு வந்த சோதனை?
கண்ணதாசன் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்த பொழுது கடவுள் மறுப்புக் கொள்கையையும் திராவிடக் கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பெரியாரின் மகன் ஈவிகே சம்பத்(ஈவிகே இளங்கோவனின் தந்தை) ஒன்றாகப் பிரிந்தார்கள். திராவிட இயக்கத்தில் இருந்தது மிகச் சொற்ப காலமே. இறக்கும் போது ஒரு கையில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறு கையில் இயேசு காவியமும் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, கிருபன் said:

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

உண்மையாக இருக்குமோ?

கஸ்தூரி சொல்ல  வந்ததது, (தமிழ்) மன்னர்களுக்கு (தமிழ்) அரசிமாரை (அந்தப்புர) கட்டிலில் கட்டி ஆழ முடியவில்லை.

 மகளிரிடம்,   (தமிழ்) அரசிகள், எங்கடை (தமிழ்) ஆம்பிளையளை விட்டு,  ஏன்  தெலுங்கரோடு கூத்தடிக்கிறீர்கள் என்று கேட்காமல் இருந்து இருப்பார்களா?   

உண்மையான விடயம் தெரியவரமுதல் வழக்கு என்று போய், உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு விட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, கிருபன் said:
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

58 minutes ago, கிருபன் said:
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள்” என்று கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

மகளிருக்கு என்னென்ன சேவைகள் செய்தார்கள் என்பதைக் கஸ்தூரி சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இவ்வாறான சேவைகள் கஸ்தூரிக்கு பலவருடங்களாகக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அந்தக் கடுப்பில் அவர் இக்கருத்தினைச் சொல்லியிருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்தச் சேவை கஸ்தூரிக்குக் கிடைத்ததா என விசாரித்து அறிந்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம். எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லையாதலால் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

தந்தை வழியில் சக இனத்தவரான கஸ்தூரியின் விடுதலைக்காக செந்தமிழன் சீமான் அண்ணா குரல்கொடுக்கவேண்டும். !👀

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெலுங்கர்களை பற்றி குறையாக சொன்னால் தமிழ்நாட்டு முதல்வருக்கு கெட்ட கோபம் வரும் தானே....😉

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

தெலுங்கர்களை பற்றி குறையாக சொன்னால் தமிழ்நாட்டு முதல்வருக்கு கெட்ட கோபம் வரும் தானே....😉

எம்ஜீ ஆர் சொல்ல‌ வில்லையா க‌ருணாநிதிய‌ பார்த்து நீ தெலுங்க‌ன் என்று ஹா ஹா..............ஸ்டாலின் சொந்த‌ இன‌த்துக்கு ந‌ல்ல‌ விஸ்வாச‌மாய் இருக்கிறார்................

என்ன‌ க‌ஸ்தூரிக்கு அர‌சிய‌ல் செல்வாக்கு இல்லை அதால‌ சிம்பிலா கைது..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்,

கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள் 

தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து  குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை  பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும்.

கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு.

கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:
2 hours ago, கிருபன் said:
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

2 hours ago, கிருபன் said:
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப்  போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, valavan said:

கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்,

கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள் 

தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து  குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை  பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும்.

கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு.

கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.

சீமான் எடுத்த‌ வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் க‌ஸ்தூரிய‌ தான் முத‌ல் சீமான் ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ கேட்டார் அப்போது க‌ஸ்தூரி விசியாஇருந்த‌ ப‌டியால் மாட்டேன் என்று சொல்லி விட்டா

அதுக்கு பிற‌க்கு தான் முன்னுக்கு பின் முர‌னாய் க‌தைக்கும் விஜ‌ய‌ல‌ச்சுமிய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ அழைத்தார் அது பின்னைய‌ கால‌ங்க‌ளில் சீமானின் பெய‌ருக்கு க‌ல‌ங்க‌ம் ஏற்ப‌டுத்தி விட்ட‌து..............அதை க‌ஸ்தூரியே அன்மையில் சொல்லி இருந்தா வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் அண்ண‌ன் சீமானுக்கு இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்து இருக்காது என்று

ம‌ன‌ க‌ஸ்ர‌மாய் இருக்கு க‌ஸ்தூரியின் பிள்ளை ஒன்றுக்கு புற்றுநோய்யென‌....................

க‌ஸ்தூரிய‌ விட‌ எத்த‌னையோ பேர் ப‌ல‌வித‌மாய் பேசி இருக்கின‌ம் ஆனால் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு அவ‌ர்க‌ள் மீது கைது ந‌ட‌வ‌டிக்கை செய்யாது

கார‌ன‌ம் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சுக்கு அவ‌ர்க‌ள் ஜிங் சாங் போடுவ‌தால் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு அவ‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுத்தும்

ப‌ண‌த்தையும் கொடுத்து பேச‌ வைப்பின‌ம் ஹா ஹா

இவ‌ங்க‌ளை ப‌ல‌ வ‌ருட‌ம் கூப்பில‌ வைச்ச‌தில் த‌ப்பே இல்லை 2026 மீண்டும் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சை ம‌க்க‌ள் கூப்பில் வைச்சா ம‌கிழ்ச்சி.............................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, புலவர் said:

சேரனையும்

அன்றைய சேரர்தான் இன்றை மலையாளிகள் (திராவிடரின் 1/4 பங்கு) மற்றும் ஈழத்தமிழர் (சேர, சோழ கலப்பு).

3 hours ago, Kadancha said:

உண்மையாக இருக்குமோ?

கஸ்தூரி சொல்ல  வந்ததது, (தமிழ்) மன்னர்களுக்கு (தமிழ்) அரசிமாரை (அந்தப்புர) கட்டிலில் கட்டி ஆழ முடியவில்லை.

 மகளிரிடம்,   (தமிழ்) அரசிகள், எங்கடை (தமிழ்) ஆம்பிளையளை விட்டு,  ஏன்  தெலுங்கரோடு கூத்தடிக்கிறீர்கள் என்று கேட்காமல் இருந்து இருப்பார்களா?   

உண்மையான விடயம் தெரியவரமுதல் வழக்கு என்று போய், உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு விட்டது?

நீங்கள் முந்தி, சரோஜாதேவி, இன்பநிலா, திரைச்சித்திரா போன்ற சஞ்சிகைகளின் சந்தாதாரராக இருந்தீர்களா?

2 hours ago, வீரப் பையன்26 said:

என்ன‌ க‌ஸ்தூரிக்கு அர‌சிய‌ல் செல்வாக்கு இல்லை அதால‌ சிம்பிலா கைது..........................

சீமான் என்ன சொன்னாலும் கைது செய்யமாட்டார் ஸ்டாலின்.

காராணம் சீமானின் அரசியல் செல்வாக்கு….

யாரிடம் இருந்து ? மோ……? அமி…..?

Posted

கஸ்தூரியை  புழல் சிறையில்(பெண்கள்) அடைத்துள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப்  போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.

கண்ணதாசன் அடி முடி தேடினீர்களா? அப்பறம் வருத்தபட வேண்டி வரப்போகிறது.

ஒரே மூச்சில் திராவிடர் என்றும் தமிழன்னை என்றும் ஒரே கூட்டத்தின் வீரத்தை பற்றி எழுதுகிறார்.

ஆகவே அவரை பொறுத்ததமட்டில்

திராவிடர் = தமிழர்.

55 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் எடுத்த‌ வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் க‌ஸ்தூரிய‌ தான் முத‌ல் சீமான் ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ கேட்டார் அப்போது க‌ஸ்தூரி விசியாஇருந்த‌ ப‌டியால் மாட்டேன் என்று சொல்லி விட்டா

அதுக்கு பிற‌க்கு தான் முன்னுக்கு பின் முர‌னாய் க‌தைக்கும் விஜ‌ய‌ல‌ச்சுமிய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ அழைத்தார்

அன்ரி எஸ்கேப்.

விஜி ரேப் கேஸ்.

56 minutes ago, வீரப் பையன்26 said:

மாட‌ல் அர‌சை ம‌க்க‌ள் கூப்பில் வைச்சா ம‌கிழ்ச்சி...........................

இல்லைன்னா பயிற்சி🤣

4 minutes ago, goshan_che said:

கண்ணதாசன் அடி முடி தேடினீர்களா? அப்பறம் வருத்தபட வேண்டி வரப்போகிறது.

கண்ணதாசன் செட்டியார். 

செட்டியும் ரெட்டியும் ஒண்ணு இதை அறியாதார் வாயில் மண்ணு எண்டு முந்தி நாதக தம்பிகள் உருட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

கண்ணதாசன் அடி முடி தேடினீர்களா? அப்பறம் வருத்தபட வேண்டி வரப்போகிறது.

ஒரே மூச்சில் திராவிடர் என்றும் தமிழன்னை என்றும் ஒரே கூட்டத்தின் வீரத்தை பற்றி எழுதுகிறார்.

ஆகவே அவரை பொறுத்ததமட்டில்

திராவிடர் = தமிழர்.

அன்ரி எஸ்கேப்.

விஜி ரேப் கேஸ்.

இல்லைன்னா பயிற்சி🤣

கண்ணதாசன் செட்டியார். 

செட்டியும் ரெட்டியும் ஒண்ணு இதை அறியாதார் வாயில் மண்ணு எண்டு முந்தி நாதக தம்பிகள் உருட்டியுள்ளார்கள்.

விஜேய் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா அதிமுக்கா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு......................திருமாள‌வ‌னை ந‌ம்ப‌ முடியாது

திருமாவும் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போனால் திமுக்கா காலி பிரோ..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

விஜேய் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா அதிமுக்கா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு......................திருமாள‌வ‌னை ந‌ம்ப‌ முடியாது

திருமாவும் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போனால் திமுக்கா காலி பிரோ..............................

நல்லதே நடக்கும் நம்புவோம்.

விஜை 60 சீட் கேட்டுள்ளாராம்… ஆனால் இது மிக குறைவு. அதிமுக+விஜை+திருமா கூட்டணியில் திருமா முதலமைச்சர் வேட்பாளர் என போட்டால் தூள் கிளப்பலாம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.