Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்பது மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை மக்கள் அனுமதியுடன் நிறைவேற்றுவோம். ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும். எனினும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம். அதே போன்று தேசிய மக்கள் சக்தியிக் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இரண்டு  முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும்.

எவ்வாறாயினும், இலங்கையில்  நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரச இயந்திரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான விடயங்களே இடம்பெற்றுள்ளன. 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளில் அமைச்சர்களின் தன்னிச்சையான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

https://www.virakesari.lk/article/198978

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன்

யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு யாரும் செல்ல தேவையில்லை. ரில்வினே சீனாவை சிறிலங்கா மக்களுக்கு இலவசமாக காட்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.

ஒக்கே ஓக்கே சிங்கள மக்கள் திருந்திவிட்டார்கள்!😂

கேட்டது மட்டுமல்ல கேட்காதனவற்றைக்கூட தங்கத் தாம்பாளத்தில் வைத்து வேண்டாம் வேண்டாம் என்றாற்கூடத் தரப்போகின்றார்கள்!

நாங்க ரெடி நீங்க ரெடியா?! 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும்

சுமத்திரன் சொன்னார்  எல்லாம் தயாரித்து கொடுத்து விட்டார் என்று.......சுமத்திரன் தோல்வியடைந்த காரணத்தால் புதிய அரசியலமைப்பு தயாரிப்பது சவாலாக உள்ளதோ ஜெ.வி.பி க்கு

8 hours ago, ஏராளன் said:

இரண்டு  முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும்

so no more  Western style🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.

அவர்களின் அரசியலமைப்பு மாற்றம் என்hது ஜனாதிபதி  ஆட்சி முறை ஒழிப்பது பற்றியாதாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் கம்மினியூ போக்குடன் கூடிய முதலாளித்துவ எதிர்ப்புடைய சில விடயங்களும் இருக்கலாம். சிறிலங்கா இருக்கும் இன்றைய நிலையில் அவர்களிகன் முதலாளித்துவ எதிர்பு;பு பொருளாதார ரீதியில் சிறிலங்காவைப் படுகுழிக்குள் தள்ளும். இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயனடைய வாய்ப்புகளுண்டு. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் இலறஙகை முதலீடுகள் மட்டுப்படுத்தப்படுவது அந்த நாடுகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தலாம். சீனாவுக்கு வரவேற்பு உண்டு.மற்றும்படி தமிழர்களுக்கு என்று தனியான பிரச்சினைகள் இருப்பதாக அதற்கான தீர்வாகவோ எதனையும் முன்வைக்க மாட்டார்கள். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று சொற்சிலம்பம் ஆடுவார்கள் அவ்வளவுதான். தமிழர்களும் அனுரா தங்கயுக்குத் தீர்வுதருவார் என்று வாக்களிக்க வில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேடுகளுக்கு மகிந்த ரணில் அரசாங்களே காரணம் என்ற கோபத்தில் வவாக்களித்திருக்கிறார்கள். அடுத்த போதுத் தேர்தலில் இந்த அலை தமிழ்ப்பகுதிகளில் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

சீனாவுக்கு யாரும் செல்ல தேவையில்லை. ரில்வினே சீனாவை சிறிலங்கா மக்களுக்கு இலவசமாக காட்டுவார்.

"புலம்பெயர்ஸ் AKD சோசலிஸ்ட் கட்சியினர்"  எல்லாம் இனி சீனாவுக்கு போய் உழைத்து சிறிலங்காவை சிங்கப்பூராக மாற்றபோகிறார்கள் என்று சொல்லுங்கோ...சிங்கப்பூருக்கு இனி சோதனை காலம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

மற்றும்படி தமிழர்களுக்கு என்று தனியான பிரச்சினைகள் இருப்பதாக அதற்கான தீர்வாகவோ எதனையும் முன்வைக்க மாட்டார்கள். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று சொற்சிலம்பம் ஆடுவார்கள் அவ்வளவுதான்

இந்த சொற்சிலம்பத்தில்....தங்களுக்கு பிரச்சனை இருக்கு என இதுவரை கோரிக்கை விடாத ,போராடா இனங்களுக்கு பிரச்சனை இருக்குதாம் என இவர்கள்  சொற் சிலம்பாடுகிறார்கள் ...முஸ்லீம்,பறங்கியர்,மலே,.....இப்படி பல இவர்கள் தங்களுக்கு பிரச்சனை இருக்கு என்று எப்ப சொன்னவையள் ...தமிழர் போராட்டம் தேவையற்றது என நிறுவ சொற் சிலம்பாடுகிறார்கள்..

மாத்தறையில் ஒர் தமிழ் பெண் வேட்பாளருக்கு சிங்களவர்கள் வாக்கு போட்டு வெற்றியடை வைத்துள்ளார்கள் ...அடுத்ததடவை நிச்சயமாக வடக்கு கிழக்கில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்துவார்கள் தேசிய நல்லிணக்கம் என் சொல்வார்கள் ... 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாலி said:

ஒக்கே ஓக்கே சிங்கள மக்கள் திருந்திவிட்டார்கள்!😂

கேட்டது மட்டுமல்ல கேட்காதனவற்றைக்கூட தங்கத் தாம்பாளத்தில் வைத்து வேண்டாம் வேண்டாம் என்றாற்கூடத் தரப்போகின்றார்கள்!

நாங்க ரெடி நீங்க ரெடியா?! 😂

கரும்பு தின்ன கூலியா😅

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.

என்னையும் அநுரா பிரிகேட் உள்ளே அடைச்சிடீங்க போல. 😂  

நான் ஒன்றுமே அதிகமாக எதிர்பார்கக வில்லை.  அநுரா சொன்னதை எல்லாமே நிறைவேற்ற அவரால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.  (அப்படியான  கற்பனையில் நடக்காத விடயங்களுக்கு முட்டாள்தனமாக  ஆசைப்பட நான் ஒன்றும்  தமிழ் தேசியவாதி அல்ல)

இதுவரை மற்றய கட்சிகளின் ஆட்சியிலும் வரட்டு தமிழ் தேசியர்களின் செயல்களாலும்  தொடர்சசியாக பாழாய்ப்போய்கொண்டிருக்கும்  தமிழ் மக்களின்   வாழ்க்கை சற்றே மேம்பட்டாலே இப்போதைக்கு  போதும் என்றே நினைக்கிறேன்.  

ஆனால், அநுரா சொன்னதை எல்லாம் முழுமையாக நிறைவேற்றிவிடுவாரோ  பலரும் இங்கு ஓவராகவே  பதட்டப்படுவது தெரிகிறது.  அவர்களுக்கு  பயப்படீதீர்கள்,  அப்படி அநுரவால் செய்ய முடியாது என்று ஆறுதல் கூறிவிடுங்கள். 😂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.

large.IMG_7786.jpeg.cefbc3c7a420986ad8a6

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.

அட பாவிகளா

சாமி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க விடமாட்டானுங்க போல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று சொற்சிலம்பம் ஆடுவார்கள் அவ்வளவுதான்

ஓம்…ஆனால் அதுக்கே நமக்கு முள்ளத்தண்டு சிலிர்த்து விடும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓம்…ஆனால் அதுக்கே நமக்கு முள்ளத்தண்டு சிலிர்த்து விடும்🤣.

 தமிழ் ஸ்பீக்கர்கள் கூடிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

என்னையும் அநுரா பிரிகேட் உள்ளே அடைச்சிடீங்க போல. 😂  

நான் ஒன்றுமே அதிகமாக எதிர்பார்கக வில்லை.  அநுரா சொன்னதை எல்லாமே நிறைவேற்ற அவரால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.  (அப்படியான  கற்பனையில் நடக்காத விடயங்களுக்கு முட்டாள்தனமாக  ஆசைப்பட நான் ஒன்றும்  தமிழ் தேசியவாதி அல்ல)

இதுவரை மற்றய கட்சிகளின் ஆட்சியிலும் வரட்டு தமிழ் தேசியர்களின் செயல்களாலும்  தொடர்சசியாக பாழாய்ப்போய்கொண்டிருக்கும்  தமிழ் மக்களின்   வாழ்க்கை சற்றே மேம்பட்டாலே இப்போதைக்கு  போதும் என்றே நினைக்கிறேன்.  

ஆனால், அநுரா சொன்னதை எல்லாம் முழுமையாக நிறைவேற்றிவிடுவாரோ  பலரும் இங்கு ஓவராகவே  பதட்டப்படுவது தெரிகிறது.  அவர்களுக்கு  பயப்படீதீர்கள்,  அப்படி அநுரவால் செய்ய முடியாது என்று ஆறுதல் கூறிவிடுங்கள். 😂 

இல்லை உங்களை அடக்கவில்லை.

நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை எனும் போது உங்கள் எதிர்பார்ப்பு சகல இலங்கையரினதும் வழக்கை மேம்பட்டால் போதும் என்பதே.

நீங்கள் தமிழ் தேசியர் இல்லாதபடியால், திட்டமிட்டு குடியேற்றங்கள் மூலம் எம் நிலத்தில் எம் இனப்பரம்பல் சிதைக்கப்படுவதும், விகாரைகள் முளைப்பதும் உங்களுக்கு பொருட்டாயிராது.

எமது பகுதியில் நீங்கள் வசிக்கும் நாடு போல ஒரு உள்ளூர் பொலிஸ் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் அவா இல்லை.

எமது பகுதிக்கு என நாம் அனுப்பும் பணத்தை எங்கே எப்படி செலவழிப்பது என்று, கொழும்பு அதிகாரிகள் அன்றி அந்த பகுதி மக்களே செலவழிக்கும் முடிவை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என நீங்கள் நினைக்க போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழ் தேசியர் அல்ல. 

நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ளூர் அதிகார பரவலின், மொழி வழி கண்டோன் பிரிப்பின் அத்தனை வரபிரசாதங்களை நீங்கள் அனுபவித்தாலும், இதை எம்ம்மக்களும் பெற வேண்டும் என்ற வீண் அவா உங்களுக்கு இல்லை. அவர்கள் கொழும்பில் இருந்து தொந்தரவு இல்லாமல் ஆளப்பட்டால், போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

எனவே நீங்கள் தமிழ் தேசியர் இல்லை. அதனால் அனுரவிற்கு ஆதரவு நல்லினாலும் நீங்கள் அனுர பிரிகேட்டில் இல்லை.

அனுர பிரிகேட், தமிழ் தேசியமும் பேசி கொண்டு, அனுரவையும் ஆதரிக்கும் கொன்பியூஸ்ட் கூட்டம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

என்னையும் அநுரா பிரிகேட் உள்ளே அடைச்சிடீங்க போல. 😂  

சான்ஸ் இல்லை
தனி தமிழ் நாடு நாடு சுயநிர்ணயம் அதற்கு குறைந்தது ஏற்கவே முடியாது என்று சொல்லி விட்டு அனுரகுமார திசநாயக்க வெற்றி அடைந்ததும் ஸ்ரீலங்காவை ஏற்றுகொண்ட தமிழ்  தேசிய கொள்கை வீரர்களை மட்டுமே அநுரா பிரிகேட்டில் சேர்க்கபடுவார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்

சிஙகளத்தின்  குறி 13ஐ நீக்குவது.

தனியாக நீக்கினால். நீக்குவது பல்வேறு பிரச்சனனைகள். முக்கியமாக தமிழரை குறிவைத்து, கிந்தியவை குறிவைத்து என்று வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா டிஸ்வின் ..அவர்களே....ஒரே ஒரு உதவி...உங்கள் அரசின் நல்லிணக்கமாக.. முதலில் ஒரு சமிக்கை ..இந்த மாவீரர்துயிலுமில்ல காணிகளை விடுவித்து...அங்கு அவர்களீன் ..துயிலுமிடங்களை நிமாணிக்க அனுமதி கொடுக்கலாமே...இறந்தவர்களைக்கூட ..நின்மதியின்றீ அலையவிடுவ்து  எந்த வழியில் நியாயம்..

( அண்மையில் ஊர் சென்றபொழுது .இந்த துயிலுமில்லங்களை நான் பார்த்தபோது ஏற்பட்ட ஆதங்கம்...இவ்வாறே  தலைவரின் வீட்டிற்கு பார்வையிடச் சென்றபோதும் ..இதே நிலைதான்....என்னைப் பொறுத்தவரை .ப்திய அரசு இதனை கண்டு கொள்ளுமா)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.