Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்

srithan.jpg

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி விட்டார் என மூன்று மாவீரர்களின் தாயொருவர் கண்ணீருடன் கவலைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை 6.55 மணியளவில் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவினார் எனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், புதன்கிழமை (27) அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன்

மாவீரர் நாளன்று 6.05 மணிக்கு விளக்கேற்றும் நேரம் நான் சரியாக 5 மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றேன். அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம் எனத் தெரிவித்து என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது மூன்று மாவீரர்களின் தாயான என்னை அவர்கள் அவமதித்துவிட்டனர்.

சிறிதரன் எம்.பி யின் அழைப்பிற்கு அமைய, முழங்கால் வரை தண்ணீரால் நிரம்பியுள்ள எனது வீட்டுக்குச் செல்லும் பாதையால் சிரமத்திற்கு மத்தியில் பிரதான வீதிக்கு வந்து வாகனம் ஒன்றில் மாவீரர் நாளன்று சரியாக 5 மணிக்கு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றேன். ஆனால் அங்கு நான் அவமதிக்கப்பட்டேன். இயக்கம் ஒரு மாவீரரின் தாயை இவ்வாறு நடத்தியது கிடையாது.

இந்த மண்ணுக்காக நான் எனது மூன்று பிள்ளைகளை கொடுத்திருக்கிறேன்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=300981

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒழுங்குபடுத்துதலில் ஏதேனும் குழறுபடி ஏற்பட்டிருக்கலாம். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.

வணக்கம் சகோ

சிறியரில் எனக்கு பொதுவேலைகள் மற்றும் தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்பிராயம் இல்லை.

ஆனால் இந்த சாராயக்கடை விடயத்தை தொடர்ந்து நீங்கள் இங்கே சிறியருக்கு எதிராக பலமாக தொடர்ந்து பாவிக்கிறீர்கள். உங்களிடம் அந்த அளவுக்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை என்ன என்று எங்களுக்கும் தெரியத் தரலாமே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

ஒழுங்குபடுத்துதலில் ஏதேனும் குழறுபடி ஏற்பட்டிருக்கலாம். 

ஒரு மாவீரரின் வயோதிபத் தாயாரை, எவரும் வேண்டுமென்று அவமானப் படுத்தி இருக்கமாட்டார்கள்.  அப்படி செய்திருந்தாலும்.... அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று... சாதாரண மனிதராலேயே ஊகிக்க முடியும் போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அப்படி செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

கபிதன் கூறியமாதிரி... இது ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறாக  இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 மாவீரர் நினைவேந்தலில் குத்துவிளக்கு ஏற்றுதல், தேசியக்கொடி ஏற்றுதல் என்று வேறுபட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவற்றில் ஒன்றில் அந்தத் தாயாரின் மனம் புண்படாமல் ஈடுபடுத்தியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

வணக்கம் சகோ

சிறியரில் எனக்கு பொதுவேலைகள் மற்றும் தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்பிராயம் இல்லை.

ஆனால் இந்த சாராயக்கடை விடயத்தை தொடர்ந்து நீங்கள் இங்கே சிறியருக்கு எதிராக பலமாக தொடர்ந்து பாவிக்கிறீர்கள். உங்களிடம் அந்த அளவுக்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை என்ன என்று எங்களுக்கும் தெரியத் தரலாமே. 

அனுரவோடு சேர்ந்து அமுக்காவிட்டால்…வெகுவிரைவில் வெளியே வரும்.

அவர் இந்த விடயத்தில் கொடுத்த விளக்கத்தை நீங்கள் நம்புகிறீர்களா?

தலைவர் வந்ததும் சேர்த காசை தருவோம் என புலம்பெயர் கள்ளர் சொன்னது போன்றதே அவரின் விளக்கம்.

கிளிநொச்சியில் குறித்த நபருக்கு பார் லைசன்ஸ் கொடுக்கும் படி சிறி அரசுக்கு அளுத்தம் கொடுத்தார்.  இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்.

———-

ஒரு மாவீரரின் தாயை அவமதிக்கவில்லை…

ஒழுங்குபடுத்தியதில் தவறு…

சரி விசயம் வெளி வந்ததும் அவர் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்க வேண்டாமா?

ஒரு விளக்கேத்துவதில் செயல்திறனை காட்ட முடியவில்லை….

இவர் எல்லாம் சமஸ்டி வாங்கி….🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

எனக்கு அவருடன் நேரடி அனுபவம் உண்டு. எனவே அவர் இதை செய்திருக்க மாட்டார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவரிடம் படித்த பல மாணவர்கள் எனது உறவுக்குள் இருக்கிறார்கள். அதில் முந்நாள் போராளிகளும் அடங்குவர். ஆனால் நான் இவற்றை சொல்லும்போது அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஊரிலும் இவ்வாறு என்றபடியால் தான் அவரால் தொடர்ந்து அதிலும் அதிக வாக்குகளால் வெல்ல முடிகிறது???

அதனால் தான் உங்களிடம் முக்கிய ஆதாரங்கள் உள்ளனவா என்று கேட்டேன். நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால், 
நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். 

போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கீழுள்ள செய்தியை.... @goshan_che  ஆற, அமர்ந்து.. இருந்து வாசிக்கவும். 😂 🤣

கோசான் சே...  சிறீதரன்  மதுபான அனுமதி பெற்ற விடயத்தை  உறுதிப் படுத்தி, 
சிறீதரனை பாராளுமனத்திலிருந்து விலக வைக்க அரிய சந்தர்ப்பம்.
செய்வாரா.... 🤣
 அல்லது   வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம் எனத் தெரிவித்து என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 

அந்த மூதாட்டியை   புறக்கணித்தது குழுவுக்கு கிடையே ஏற்பட்ட   கருத்துவேறுபாடாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்

பார் சிறீதரன் தனது அரசியல் தில்லாலங்கடிகளுக்காக மூன்று மாவீரர்களைத் தந்த தாயாரை அவமானப்படுத்தி அனுப்பியது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

எனக்கு அவருடன் நேரடி அனுபவம் உண்டு. எனவே அவர் இதை செய்திருக்க மாட்டார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவரிடம் படித்த பல மாணவர்கள் எனது உறவுக்குள் இருக்கிறார்கள். அதில் முந்நாள் போராளிகளும் அடங்குவர். ஆனால் நான் இவற்றை சொல்லும்போது அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஊரிலும் இவ்வாறு என்றபடியால் தான் அவரால் தொடர்ந்து அதிலும் அதிக வாக்குகளால் வெல்ல முடிகிறது???

அதனால் தான் உங்களிடம் முக்கிய ஆதாரங்கள் உள்ளனவா என்று கேட்டேன். நன்றி..

நீங்கள் இருவரும் சுத்துமாத்து சுமன் பெட்டி வாக்கியதை ஆதாரபூர்வமாக நிறுவும் வரை நானும் சாராயக்கடை சிறி யின் ஊழலை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் 🤣.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல் - அநேகம் பேர் சிறி அண்ணா போல் அப்பாவித்தனமாக கள்ளன் ஆதாரம் வைத்து களவு எடுப்பான் என நினைப்பதில்லை. அனைவருக்கும் இவர் எப்படி விஞ்ஞான ரீதியில் சாராயக்கடை ஊழல் செய்தார் என்பது தெரியும். 

ஆனால் டக்ளசின் மணல் கொள்ளையை நிறுவ முடியாது….

ஆனால் டக்லஸ் இன்னும் ஒரு தொகுதியில் வெல்கிறார்.

அப்படித்தான் இதுவும்.

மாவீரர் வாரம் தொடங்க முதலே சாரா சிறி அனுரவுக்கு ஆதரவு நல்கி, நன்றி நக்கியதில், மன்னிகவும் நல்கியதில் இருக்கு தேவையான ஆதாரம்.

நான் சிறியை சாராயக்கடை சிறி என அழைப்பது தவறு என யாரும் கண்டால், குறிப்பாக அது வதந்தி என நம்புவோர் நிர்வாகதிடம் முறையிடலாம்.

நிர்வாக முடிவுக்கு கட்டுப்படுவேன்.

1 hour ago, goshan_che said:

ஒரு விளக்கேத்துவதில் செயல்திறனை காட்ட முடியவில்லை….

இவர் எல்லாம் சமஸ்டி வாங்கி….🤣

சா.சிறிக்கு வக்காலத்து வாங்குவோர் இதுக்கும் முடிந்தால் பதில் சொல்லவும்.

இந்தாள எல்லாம் ஒரு தலைவர் எண்டுகொண்டு🤣.

எனக்கு ஒரு நிறுவனம் இருந்தால் பைல் தூக்கும் வேலைக்கும் எடுக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, தமிழ் சிறி said:

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால், 
நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். 

போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கீழுள்ள செய்தியை.... @goshan_che  ஆற, அமர்ந்து.. இருந்து வாசிக்கவும். 😂 🤣

கோசான் சே...  சிறீதரன்  மதுபான அனுமதி பெற்ற விடயத்தை  உறுதிப் படுத்தி, 
சிறீதரனை பாராளுமனத்திலிருந்து விலக வைக்க அரிய சந்தர்ப்பம்.
செய்வாரா.... 🤣
 அல்லது   வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும். 🙂

இந்த சுப்ரமணிய சிவாவை போலி லெட்டர்ஹெட்டை மொக்குத்தனமாக அடிக்க வைத்து - அதன் மூலம் தன் மீதான உண்மையான பார்பெமிட் வாங்க சிபாரிசு செய்த குற்றச்சாட்டை திசை திருப்பியதே பார் சிறிதான் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, goshan_che said:

நீங்கள் இருவரும் சுத்துமாத்து சுமன் பெட்டி வாக்கியதை ஆதாரபூர்வமாக நிறுவும் வரை நானும் சாராயக்கடை சிறி யின் ஊழலை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் 🤣.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல் - அநேகம் பேர் சிறி அண்ணா போல் அப்பாவித்தனமாக கள்ளன் ஆதாரம் வைத்து களவு எடுப்பான் என நினைப்பதில்லை. அனைவருக்கும் இவர் எப்படி விஞ்ஞான ரீதியில் சாராயக்கடை ஊழல் செய்தார் என்பது தெரியும். 

ஆனால் டக்ளசின் மணல் கொள்ளையை நிறுவ முடியாது….

ஆனால் டக்லஸ் இன்னும் ஒரு தொகுதியில் வெல்கிறார்.

அப்படித்தான் இதுவும்.

மாவீரர் வாரம் தொடங்க முதலே சாரா சிறி அனுரவுக்கு ஆதரவு நல்கி, நன்றி நக்கியதில், மன்னிகவும் நல்கியதில் இருக்கு தேவையான ஆதாரம்.

நான் சிறியை சாராயக்கடை சிறி என அழைப்பது தவறு என யாரும் கண்டால், குறிப்பாக அது வதந்தி என நம்புவோர் நிர்வாகதிடம் முறையிடலாம்.

நிர்வாக முடிவுக்கு கட்டுப்படுவேன்.

சா.சிறிக்கு வக்காலத்து வாங்குவோர் இதுக்கும் முடிந்தால் பதில் சொல்லவும்.

இந்தாள எல்லாம் ஒரு தலைவர் எண்டுகொண்டு🤣.

எனக்கு ஒரு நிறுவனம் இருந்தால் பைல் தூக்கும் வேலைக்கும் எடுக்க மாட்டேன்.

அப்பிடி என்றால்... animiertes-gefuehl-smilies-bild-0438 சுத்துமாத்து  சுமந்திரனை, எட்டு நாளைக்கு...  
மூத்திர சந்துக்குள் கொண்டு போய்  வைத்து அடிப்போம்.  
animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, goshan_che said:

இந்த சுப்ரமணிய சிவாவை போலி லெட்டர்ஹெட்டை மொக்குத்தனமாக அடிக்க வைத்து - அதன் மூலம் தன் மீதான உண்மையான பார்பெமிட் வாங்க சிபாரிசு செய்த குற்றச்சாட்டை திசை திருப்பியதே பார் சிறிதான் அண்ணை.

சுப்பிரமணிய சிவாவுடன்... ஸ்ரீதரனுக்கு என்றுமே நேரடி நட்பு இருந்தது கிடையாது. அவருடைய தகப்பன் தமிழரசு கட்சியில் உள்ளுராட்சி சபை இயங்கிய காலத்தில் ஒரு பதவியில் இருந்தவர். அந்த தொடர்பை வைத்து சுப்பிரமணிய சிவா ஸ்ரீதரனுடன் சில படங்களை எடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணிய பிரபா... யாரை கண்டாலும் அவர்களுடன் சேர்ந்து நின்று படம் எடுத்து பிற்காலத்தில் அதனை தனது தேவைக்கு பயன்படுத்தும் சுபாவம் உடையவர் என தெரிகின்றது.

சுப்பிரமணிய சிவாவிடம்... //சிறீதரன் போலி லெட்டர்ஹெட்டை மொக்குத்தனமாக அடிக்க வைத்தது...// என்று சொல்வதெல்லாம் உங்களின் கற்பனை கதைகள். 
ஆனபடியால்... இதில் நான், தொடர்ந்து எழுதுவதில் அர்த்தம் இல்லை.
நன்றி, வணக்கம் கோசான். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

எழுதுவதும் எழுதாததும் உங்கள் விருப்பம் அண்ணை. நான் என் காதுக்கு எட்டிய தகவல்களை எடை போட்டு, அவை எனது மனதுக்கு சரி எனப்பட்டால் அதை எழுதுவேன்.

ஆதாரம் கேட்டால் - நீங்கள் இதே போல் மனதுக்கு பட்டதை எழுதும் போது ஆதாரம் காட்டவில்லை, முடியாது என்பதை நினைவுபடுத்துவேன்.

நன்றி வணக்கம்.

27 minutes ago, தமிழ் சிறி said:

அப்பிடி என்றால்... animiertes-gefuehl-smilies-bild-0438 சுத்துமாத்து  சுமந்திரனை, எட்டு நாளைக்கு...  
மூத்திர சந்துக்குள் கொண்டு போய்  வைத்து அடிப்போம்.  
animiertes-gefuehl-smilies-bild-0090

இடம் தேதி அறியத்தரவும். 

சா.க சிறியையை அடிப்பதால் சுமனை அடிக்க கூடாது என்று ஒரு விரதமும் இல்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனகபுரம் துயிலும் இல்லத்தில் சிறிதரனையே ஓரம் கட்டிவிட்டார்கள். இதில் எப்படி அந்த தாயாரை விளக்கேற்ற கோரமுடியும்  இவரால்?

  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, தமிழ் சிறி said:

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால், 
நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். 

போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கீழுள்ள செய்தியை.... @goshan_che  ஆற, அமர்ந்து.. இருந்து வாசிக்கவும். 😂 🤣

கோசான் சே...  சிறீதரன்  மதுபான அனுமதி பெற்ற விடயத்தை  உறுதிப் படுத்தி, 
சிறீதரனை பாராளுமனத்திலிருந்து விலக வைக்க அரிய சந்தர்ப்பம்.
செய்வாரா.... 🤣
 அல்லது   வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும். 🙂

வசந்திகளை மட்டுமே நம்பும், அதையே இங்கு முழு நேரத் தொழிலாகச்(வெட்டி ஒட்டுதல் ) செய்துகொண்டிருக்கும் தாங்களா இதைச் சொல்வது? 

🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் ஒருவர் ஏற்ற வேண்டும்?

இது சும்மா தூக்கிப்பிடிக்கும் வேலை.

ஏதோ ஓர் சமிக்ஞையை கொண்டு (அந்த நேரத்தில் மணி ஒலி, அல்லது மாவீரர் நாள் பாடல்) ஒலிக்க தொடங்கும் போது எல்லோரும்  விளக்கேற்றலாம் என்று செய்யப்படுவதே நல்லது 

ஒருவர் தியாகத்தை இன்னொருவரறால் மேவுவது போன்ற உணர்வுகளை தவிர்க்க.

இதில் ஒரு படிநிலையும் இருக்க கூடாது.

மாவீரர்களுக்கு இடையே elitism இருப்பதே கூடாது.

இதை ஒருவர் கூட சிந்திக்கவில்லை என்பது கவலைக்கிடம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, MEERA said:

கனகபுரம் துயிலும் இல்லத்தில் சிறிதரனையே ஓரம் கட்டிவிட்டார்கள்.

நல்ல வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

சுப்பிரமணிய சிவாவுடன்... ஸ்ரீதரனுக்கு என்றுமே நேரடி நட்பு இருந்தது கிடையாது. அவருடைய தகப்பன் தமிழரசு கட்சியில் உள்ளுராட்சி சபை இயங்கிய காலத்தில் ஒரு பதவியில் இருந்தவர். அந்த தொடர்பை வைத்து சுப்பிரமணிய சிவா ஸ்ரீதரனுடன் சில படங்களை எடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணிய பிரபா... யாரை கண்டாலும் அவர்களுடன் சேர்ந்து நின்று படம் எடுத்து பிற்காலத்தில் அதனை தனது தேவைக்கு பயன்படுத்தும் சுபாவம் உடையவர் என தெரிகின்றது.

சுப்பிரமணிய சிவாவிடம்... //சிறீதரன் போலி லெட்டர்ஹெட்டை மொக்குத்தனமாக அடிக்க வைத்தது...// என்று சொல்வதெல்லாம் உங்களின் கற்பனை கதைகள். 
ஆனபடியால்... இதில் நான், தொடர்ந்து எழுதுவதில் அர்த்தம் இல்லை.
நன்றி, வணக்கம் கோசான். 🙏

இப்போது புரிகிறது தமிழ் சிறியர் கடந்த  இலங்கைத் தேர்தலில் சும்மிற்கு எதிராகவும் சிறியருக்கு ஆதரவாகவும் மூர்க்கமாய் இயங்கினார் என்று. 

  திடீரென்று வழமைக்கு மாறாக ஒவ்வொரு நாளும்  அதி தீவிரமாக சும்முக்கெதிரான பக்கங்களால் யாழ் களத்தை நிரப்பி+சிறியருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஏன் இந்த மனிதன் வழமைக்கு மாறாக திடீரென்று  அதி தீவிரமாக செயற்படுகிறார் என்று எனக்குச் சந்தேகம் வந்தது. அதைக் கேட்டால் சிறியர் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்பதால் கேட்கவில்லை. 

தற்போது தமிழ் சிறியர் தாமாகவே தன்னைக் காட்டிக்கொடுத்திவிட்டார். 

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும் என்று காரணம் இன்றிக் கூறவில்லையே,... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kapithan said:

சிறிதரனுக்கு ஆதரவாக நான் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. 
தயவு செய்து வீண்  வசந்திகளை பரப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

சிறிதரனுக்கு ஆதரவாக நான் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. 
தயவு செய்து வீண்  வசந்திகளை பரப்பாதீர்கள்.

சும்மிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் அது சிறியருக்கு ஆதரவாகச் செய்வதுதானே தமிழ்சிறி? 

"எலி கொளுத்தால் வளையில் தங்காது" என்பது முதுமொழி ....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

திடீரென்று வழமைக்கு மாறாக ஒவ்வொரு நாளும்  அதி தீவிரமாக சும்முக்கெதிரான பக்கங்களால் யாழ் களத்தை நிரப்பி+சிறியருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

அது என்ன மாதிரியான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டது என்று எங்களுக்கும் சொல்கிறது. இல்லையென்றால், எங்களுக்கு வேறொரு சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சாராய அனுமதி பெற்றிருப்பாரோ என. சிறியர் மன்னிக்கவும், இது வெறும் சந்தேகமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

நல்ல வேலை.

கோசான் உங்களுக்கு நடந்த விடயங்கள் தெரியாமலேயே இப்படி எழுதி இருக்கிறீர்களே?

14 hours ago, goshan_che said:

சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.

10 hours ago, goshan_che said:

அனுரவோடு சேர்ந்து அமுக்காவிட்டால்…வெகுவிரைவில் வெளியே வரும்.

அவர் இந்த விடயத்தில் கொடுத்த விளக்கத்தை நீங்கள் நம்புகிறீர்களா?

தலைவர் வந்ததும் சேர்த காசை தருவோம் என புலம்பெயர் கள்ளர் சொன்னது போன்றதே அவரின் விளக்கம்.

கிளிநொச்சியில் குறித்த நபருக்கு பார் லைசன்ஸ் கொடுக்கும் படி சிறி அரசுக்கு அளுத்தம் கொடுத்தார்.  இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்.

———-

ஒரு மாவீரரின் தாயை அவமதிக்கவில்லை…

ஒழுங்குபடுத்தியதில் தவறு…

சரி விசயம் வெளி வந்ததும் அவர் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்க வேண்டாமா?

8 hours ago, goshan_che said:

நீங்கள் இருவரும் சுத்துமாத்து சுமன் பெட்டி வாக்கியதை ஆதாரபூர்வமாக நிறுவும் வரை நானும் சாராயக்கடை சிறி யின் ஊழலை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் 🤣.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல் - அநேகம் பேர் சிறி அண்ணா போல் அப்பாவித்தனமாக கள்ளன் ஆதாரம் வைத்து களவு எடுப்பான் என நினைப்பதில்லை. அனைவருக்கும் இவர் எப்படி விஞ்ஞான ரீதியில் சாராயக்கடை ஊழல் செய்தார் என்பது தெரியும். 

ஆனால் டக்ளசின் மணல் கொள்ளையை நிறுவ முடியாது….

ஆனால் டக்லஸ் இன்னும் ஒரு தொகுதியில் வெல்கிறார்.

அப்படித்தான் இதுவும்.

மாவீரர் வாரம் தொடங்க முதலே சாரா சிறி அனுரவுக்கு ஆதரவு நல்கி, நன்றி நக்கியதில், மன்னிகவும் நல்கியதில் இருக்கு தேவையான ஆதாரம்.

நான் சிறியை சாராயக்கடை சிறி என அழைப்பது தவறு என யாரும் கண்டால், குறிப்பாக அது வதந்தி என நம்புவோர் நிர்வாகதிடம் முறையிடலாம்.

நிர்வாக முடிவுக்கு கட்டுப்படுவேன்.

சா.சிறிக்கு வக்காலத்து வாங்குவோர் இதுக்கும் முடிந்தால் பதில் சொல்லவும்.

இந்தாள எல்லாம் ஒரு தலைவர் எண்டுகொண்டு🤣.

எனக்கு ஒரு நிறுவனம் இருந்தால் பைல் தூக்கும் வேலைக்கும் எடுக்க மாட்டேன்.

இவர் எல்லாம் சமஸ்டி வாங்கி….🤣

உங்களிடம் வந்து ஏன் சிறியர் வேலை செய்ய வேண்டும்?

ஓய்வு பெற்ற (ஆசிரியர்) அதிபர்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.