Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சகோ @goshan_che 

இன்று உங்கள் பல மணித்துளிகள் எனக்காக. நன்றிகள் மீண்டும்.

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

ரஞ்சித்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

goshan_che

@Kandiah57 @ரசோதரன் புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது…. புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ… புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது  புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி,  எதிர்வரும் 4ஆம் திகதி  வரை  அந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்( Jaffna) நீதவான் நீதிமன்றம் இன்று(1) உத்தரவிட்டுள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு 

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றையதினம் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல் | Prabakaran Photo Post Youth Remanded Till Dec 4

https://tamilwin.com/article/prabakaran-photo-post-youth-remanded-till-dec-4-1733058231

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் கைது; அரசின் இனவாத முகம் தெரிகிறது

gajendrakumar-ponnambalam.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் – சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்கவேண்டும் என ஒப் புக்கொண்டிருந்த தரப்பு அதே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரல் குற்றமாக கருதி கைது செய்வதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். தமிழீழ விடுத லை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடியமைக்காகவும், மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தியமைக்காகவும்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பாக கேட்டபோதே அ வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையின் மனித உரிi மகள் ஆணைக்குழுவே 2015ம் ஆண்டில் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யபட்டிருந்தாலும் அவர்களுடைய உறுப்பினர்கi ள நினைவுகூருவதற்கு உறவினர்களுக்கும், மக்களுக்கும் உரித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே நினைவுகூருவதற்கு உரித்துள்ளது.

அதற்கான அனுமதியை வழங்கவேண்டும். அதுவே சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது எ ன அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார்கள். இன்றைக்கு அரசாங்கத்தில் உள்ள இதே தரப்புக்க ள் பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமான சட்டம் அதை நீக்கவேண்டும்.

அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைய மாற்றவேண்டும் என ஒப்புக் கொண்டிருந்தார்கள். இன்று அ தே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரலை குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பதை நாம் வன்மையா க கண்டிக்கிறோம்.

இன்றைக்கு ஜே.வி.வி தலைவரை கொண்டாடும் நிலை இருக்கும் என்றால் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரையும், அவர்களின் உறுப்பினர்களையும் நினைவுகூருவது குற்றம் என்றால் அதற்கு இனவாதம் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். அதைவிட வேறு காரணங்கள் இல்லை.

தமிழ் மக்கள் இதுவரையில் மாற்றம் என்ற ஒன்றை நம்பிக் கொண்டிருந்தால் அது பொய் என்பதற்கா ன சிறந்த சாட்சி இது ஒன்றுதான். மாவீரர்களை நினைவுகூருவது எங்கள் ஆத்மாவுடன் இணைந்த விட யம் என்றார்.
 
https://akkinikkunchu.com/?p=301340

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

மிக மோசமாக இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனவாதத்துக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்கள் அண்ணை.

நீங்கள் யாரிடம் பேசி கொண்டு நிற்கின்றீர்கள்  தமிழீழம் கிடைப்பதற்காக  இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களை நாம் எதிர்க்க கூடாது அப்படி எதிர்த்தால் இந்தியா நினைக்கும் தமிழ் ஈழம் கிடைக்க முதலே இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள்  இவர்களுக்கு தமிழீழம் கிடைத்துவிட்டால் என்ன ஆட்டம் போடுவார்கள் ஆகவே நாம் இந்தியாவை அப்படி  கவலைபடுத்த  கூடாது.
தமிழ்ஈழம் பலமடைய தமிழர்கள் பிள்ளைகள் பெத்து தள்ள வேண்டும் என்றவர். அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் ஞானம் பிறந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எல்லாரும் “வடமராட்சி அங்கிள்” கொடுத்த மயக்க மருத்து தடவிய இனிப்பில் மதிமயங்கி விட்டார்கள்🤣.

4 hours ago, Kavi arunasalam said:

large.IMG_7829.jpeg.28fe093be252f71374a4

அருமை.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

தமிழர்கள் எண்டாலே பயங்கரவாதிகள் என்ற போக்கை அவர்கள்தான் கைவிடவேண்டும்.

இதற்காக நீங்கள் என்ன குமாரதெவியோ என பெயரையா மாற்ற முடியும்.

அடையாளத்தை துறக்கும் படி வற்புறுத்துவதை விட மிக கொடிய அடக்குமுறை எதுவுமில்லை.

சிங்களம் தமிழர்கள் மீதான எத்தனையோ இனக்கலவரங்கள்,மனித அழிவுகளை செய்தது. அத்து மீறல் குடியேற்றங்களை செய்தது/செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே வைத்து ஆட்சி செய்கின்றது.இது போல் சிங்களத்தின்  தமிழர் மீதான அஜாரகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது சர்வதேசத்திற்கு தெரியாமல் இல்லை. இருந்தும் சர்வதேசம் இன்று வரை  இனவாத சிங்களம் சார்பாகவே நிற்கின்றது. இதற்கான காரணம் என்ன?

ஒரு காலத்தில் அரசியல் பிரச்சனையாகினும் சமாதான பிரச்சனையாகினும் தமிழீழ புலிகளை மேசைக்கு அழைத்து பேசியவர்கள் தான் அவர்களை அழிக்கவும் உதவினார்கள். அழிப்பின் முன் சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் எதையும் நிறைவேற்றவில்லை.சர்வதேசமும் அதைப்பற்றி திருப்பி கேட்கவில்லை. இல்லாத புலிகள் மீதான தடைகளும் நீக்கப்படவில்லை.தமிழர் பிரச்சனைகளும் நீக்கப்படவில்லை.ஈழத்தமிழர் என்றால் பயங்கரவாதிகள் என்ற பட்டங்களும் நீங்கவில்லை.சர்வதேசமும் இதை கண்டுகொள்ளவில்லை.

உண்மையான பயங்கரவாதிகள் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். ஆனால் உண்மையாக  விடுதலைக்காக போராடியவர்கள்பயங்கரவாதிகளாக்கப்பட்டு  நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். 

ஈழத்தமிழினம் பல வகைகளிலும் போராடி பார்த்தாகி விட்டது. இனி ஈழத்தமிழர்களுக்கு மடிப்பிச்சை எடுப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, goshan_che said:

மேலே நீங்கள் இல்லை, ஒரு போதும் இல்லை என கூறியவற்றை விட அறவே வாய்ப்பில்லை சிங்களவர் எமக்கு சுயாட்சி தர.

உண்மை   ஆனால்   அவர்களால் தான் முடியும்    அவர்கள் தரவில்லை என்றால் சுயாட்சி இல்லை   

அமெரிக்காவில் 1964 ஆண்டு  ஆபிரகம்லிங்கன். சொன்னான். அடிமை தனத்தை ஒழிப்பேன். என்று அதை செய்தும் காட்டினான். அனுர சிங்களவன். எனவே  அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களும்  எதிர்க்கப்படவேண்டும். என்ற வாதம் எற்க முடியாது    

அடக்குமுறையாளர்கள  சுதந்திரம் சுயாட்சி  கொடுத்தது உலக வரலாற்றில் இல்லையா??  பலரும் தலைவர் பிரபாகரன் காலத்தில் இருக்கிறார்கள்   இன்றைய உண்மை நிலை  1975 விட  படுமோசமாக உள்ளது   தமிழர்கள் தமிழ் பகுதியில் எதுவும் செய்து முடியாத நிலை தான் இன்றைய நிலை   சிங்களவர்கள். ஆர்ப்பாட்டம் மூலம்  கோத்தாவை வெளியேற்றினார்கள் அரசாங்கத்தை. மாறறினார்கள். இது எனது கருத்துகள் மட்டுமே  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

சிங்களம் தமிழர்கள் மீதான எத்தனையோ இனக்கலவரங்கள்,மனித அழிவுகளை செய்தது. அத்து மீறல் குடியேற்றங்களை செய்தது/செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே வைத்து ஆட்சி செய்கின்றது.இது போல் சிங்களத்தின்  தமிழர் மீதான அஜாரகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது சர்வதேசத்திற்கு தெரியாமல் இல்லை. இருந்தும் சர்வதேசம் இன்று வரை  இனவாத சிங்களம் சார்பாகவே நிற்கின்றது. இதற்கான காரணம் என்ன?

ஒரு காலத்தில் அரசியல் பிரச்சனையாகினும் சமாதான பிரச்சனையாகினும் தமிழீழ புலிகளை மேசைக்கு அழைத்து பேசியவர்கள் தான் அவர்களை அழிக்கவும் உதவினார்கள். அழிப்பின் முன் சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் எதையும் நிறைவேற்றவில்லை.சர்வதேசமும் அதைப்பற்றி திருப்பி கேட்கவில்லை. இல்லாத புலிகள் மீதான தடைகளும் நீக்கப்படவில்லை.தமிழர் பிரச்சனைகளும் நீக்கப்படவில்லை.ஈழத்தமிழர் என்றால் பயங்கரவாதிகள் என்ற பட்டங்களும் நீங்கவில்லை.சர்வதேசமும் இதை கண்டுகொள்ளவில்லை.

உண்மையான பயங்கரவாதிகள் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். ஆனால் உண்மையாக  விடுதலைக்காக போராடியவர்கள்பயங்கரவாதிகளாக்கப்பட்டு  நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். 

ஈழத்தமிழினம் பல வகைகளிலும் போராடி பார்த்தாகி விட்டது. இனி ஈழத்தமிழர்களுக்கு மடிப்பிச்சை எடுப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.

இது @island ஐலண்ட் எடுக்கும் நிலைக்கு நேர் எதிரான நிலை.
 
ஆனால் நீங்கள் இருவரும் வந்து சேர்ந்துள்ள final destination ஒன்றேதான்.

அவர் எமது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோற்றதன் முழு அல்லது பாரிய பழியை புலிகள்+ஏனைய 75 வருட தலைவர்கள் மீது போட்டு, இனி மடிப்பிச்சைதான் (இலங்கை தேசியம்) ஒரே வழி என்கிறார்.

நீங்கள் அதே பழியை சர்வதேசம் (மேற்கு ரஸ்யாவை சொன்னால் உங்களுக்கு கோவம் வரும்) + புலிகள் தவிர் தலைமைகள் மேல் போட்டு, இப்போ மடிப்பிச்சைதான் ஒரே வழி என்கிறீர்கள். 

நீங்களும் ஐலன்டும் ஒரே இடத்தில் இருப்பது அபூர்வம், gentleman please enjoy each other’s company 🤣.

ஆனால் இன்னும் முன்நோக்கி பார்க்க அவகாசம் இருக்கிறது. மடிப்பிச்சைக்கு மேலேயும் பெற வாய்புண்டு.

இப்போதும் ஜனநாயக வழியில், முஸ்லிம்களுக்கு அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ கொடுத்து, புலம்பெயர் சமூகம், சகல புலத்து சக்திகளும் ஒன்றுபட்டால் - ஒரு காத்திரமான அதிகார பகிர்வு நோக்கி பேரினவாதத்தை தள்ள முடியும்.

ஆனால் அதற்கு பழசை மறந்து எல்லோரும் ஒரு அணியில் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்ஈழம் பலமடைய தமிழர்கள் பிள்ளைகள் பெத்து தள்ள வேண்டும் என்றவர். அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் ஞானம் பிறந்துவிட்டது

உங்களுக்கு விளங்கி விட்டது   எனக்கு விளங்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, goshan_che said:

பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து போகலாம் மக்கள் ஆதரவு இருப்பின்.

கியூபெக்கிலும் இதுவே நிலமை.

கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்
தமிழ் மக்களின் போராட்டம் என்பது  தொடர வேண்டும்
காலத்தின் தேவைக்கேற்ப அதன் வடிவங்கள் மாறும்

முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது

பட்டியலில் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்வதை போலவே தான் இதுவும்
இல்லாதவர்களும் உள்ளே செல்கின்றார்கள் அல்லவா....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, goshan_che said:

அதே போல் அரசியல் தலைவரின் படத்தை தரவேற்றுவது உணர்சி அரசியல் என்றால் - ரோகண விஜேவீரா படத்தை ஏற்றுவோரும் கைதால வேண்டும்.

இரண்டும் ஒன்றல்ல   தமிழ் ஈழ விடுதலை புலிகள்  இலங்கை உள்பட உலகின் பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது   ஜேவிபி அபபடியில்லை  இப்படி எழுதிய உடன்  நான் ஜேவிபி க்காரன். அல்ல.   இல்லை  எனவே… பிரபாகரன் படம்  பதிவு செய்தால் சட்டப்படி கைது செய்யலாம்   முதலில் தடையை எடுக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kandiah57 said:

உண்மை   ஆனால்   அவர்களால் தான் முடியும்    அவர்கள் தரவில்லை என்றால் சுயாட்சி இல்லை   

அமெரிக்காவில் 1964 ஆண்டு  ஆபிரகம்லிங்கன். சொன்னான். அடிமை தனத்தை ஒழிப்பேன். என்று அதை செய்தும் காட்டினான். அனுர சிங்களவன். எனவே  அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களும்  எதிர்க்கப்படவேண்டும். என்ற வாதம் எற்க முடியாது    

அடக்குமுறையாளர்கள  சுதந்திரம் சுயாட்சி  கொடுத்தது உலக வரலாற்றில் இல்லையா??  பலரும் தலைவர் பிரபாகரன் காலத்தில் இருக்கிறார்கள்   இன்றைய உண்மை நிலை  1975 விட  படுமோசமாக உள்ளது   தமிழர்கள் தமிழ் பகுதியில் எதுவும் செய்து முடியாத நிலை தான் இன்றைய நிலை   சிங்களவர்கள். ஆர்ப்பாட்டம் மூலம்  கோத்தாவை வெளியேற்றினார்கள் அரசாங்கத்தை. மாறறினார்கள். இது எனது கருத்துகள் மட்டுமே  

சிங்களவர் அனுர செய்வதை எல்லாம் எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அவர் முன்னர் என்ன செய்தார், இப்போ என்ன செய்கிறார் என பார்த்தால் - இது பழைய அதே இனவாதக்கள்ளு, புதிய மொந்தையில் என்பது விளங்கும்.

அதுவே எதிர்ப்பதன் அடிப்படை.

லிங்கன் பற்றி சொல்லி இருந்தீர்கள் (ஆண்டு பிழையான தரவு) - தனிப்பட்ட ரீதியாக அவர் அடிமைதனத்தை வெறுத்தாலும், அரசியலில் அவர் கூட ஆரம்பத்தில் அடிமை ஒழிப்பை (emancipation ) தன் கொள்கையாக கொள்ளவில்லை, அடிமைத்தனத்தை தொடராது அழிப்பதே அவர் விரும்பிய நகர்வாக இருந்தது, ஆனால் சிவில் யுத்த கால புறச்சூழல் இதை சாத்தியமாக்கியது. அதன் பின் அடிமை ஒழிப்பு 13 வது சரத்தும் யுத்தத்தின் பின் நிறைவேறியது.

அடக்குமுறையாளன் ஒரு போதும் தானாக அடக்கபடுவனுக்கு உரிமையை தரமாட்டான். அழுதால்தால் தாயே பிள்ளைக்கு பால் கொடுப்பாள்.

அடக்கபடுபவன் போராட வேண்டும், புறச்சூழலை தனக்கு ஏற்ப வளைக்க வேண்டும், அப்போ வேறு வழியின்றி அடக்குமுறையாளன் இறங்கி வருவான்.

உலக வரலாறு எங்கும் இதுவே நடந்தது, நடக்கும்.

ஆனால் அப்படி ஒரு புறச்சூழல் இப்போ இலங்கையில் இல்லை.

இலங்கையில் நடப்பது அடக்குமுறையாளன் தன் அடக்குமுறையை நிறுவனமயப்படுத்தும் வேலை.

அதாவது ஈரச்சாக்கு இலங்கை தேசியம் என்ற பெயரில் எம் உரிமைகளை அடித்து நூப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kandiah57 said:

இரண்டும் ஒன்றல்ல   தமிழ் ஈழ விடுதலை புலிகள்  இலங்கை உள்பட உலகின் பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது   ஜேவிபி அபபடியில்லை  இப்படி எழுதிய உடன்  நான் ஜேவிபி க்காரன். அல்ல.   இல்லை  எனவே… பிரபாகரன் படம்  பதிவு செய்தால் சட்டப்படி கைது செய்யலாம்   முதலில் தடையை எடுக்கவும். 

இதுதான் பொயிட்ன்.

ரோகண விஜவீரவை சுட்டு கொன்றாலும் குடும்பத்தை திரிகோண மலை நேவி காம்பில் பல பத்து வருடங்களாக பேணினார்கள்.

ஆனால் பாலச்சந்திரனை?

ஏன்?

இனவாதம். இந்த இனத்துக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது.

ஜேவிபியை 1987 இல் மீள தடை செய்தார்கள்.

ஆனால் 1990 இல் இருந்து தடை நீக்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய விட்டார்கள்.

இதையேதான், நடேசன், புலித்தேவன் மூலம் புலிகள் செய்ய முயன்றார்கள்.

அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது.

ஆனால் சோமவன்ச போல, நடேசன் உயிருடன் வாழ அனுமதிக்க படவில்லை.

ஏன்? இனவாதம். மறுபடியும் சுயநிர்ணய கோரிக்கை எழும்ப விட கூடாது.

89 க்கு பின் ஜேவிபியை கையாண்டது போல் 2009 க்கு பின்னாக புலிகளை கையாளவில்லை இலங்கை அரசு. 

ஒரே காரணம் இனவாதம்.

அப்படி கையாண்டிருந்தால் - புலிகள் இப்போ ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பார்கள், இலங்கையே தடை செய்யவில்லை எனும் போது உலக நாடுகளும் தடையை விலக்கி இருக்கும்.

விஜேவீர போல, தலைவர் படத்தை தரவேற்றுவதும் ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்காது.

முழு நாட்டையுமே ஆயுத புரட்சிமூலம் கைபற்ற முயன்று பல அப்பாவி சிங்களாவரை கொலை செய்த ஜேவிபிக்கு 3 வருடத்தில் புனர்வாழ்வு, ஆனால் 15 வருடம் கழிந்தும், நாட்டின் 1/3 பகுதிகை மட்டுமெ கைப்பற்ற முனைந்த புலிகளுக்கு இன்றும் தடை.

ஒரு குழு சிங்களவர், மற்றையது தமிழர்.

இதுதான் இனவாதம்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வதெல்லாம் சரியே.

இது தெரியாமல் மாற்று கருத்துக்களை எவரும் வைக்கவில்லை என நினைக்கிறேன்.

அனுர ஆட்சிக்கு நான்கு வருட அவகாசம் இருக்கின்றது. அது வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது என் கருத்து. ஆகக்கூடியது ஒரு வருடம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆனால் அப்படி ஒரு புறச்சூழல் இப்போ இலங்கையில் இல்லை.

இது உண்மை  தமிழர்கள் எந்தவொரு வகையிலும் அழுத்தம் கொடுக்க தகுதி அற்றவர்கள். எனவே… உரிமை பெற முடியாது   13ஆவது கூட கிடையாது   அமுத்தம். கொடுக்கக் கூடியவர்களின். போராட்டம் தான் வெற்றி பெறும் 

வடக்கு கிழக்கு பிரித்தார்கள் 

இனவாதம் பேசினார்கள்  

இவை உண்மை தான்  

ஆகவே   தமிழருக்கு அனுர. நன்மைகள் எதுவும் செய்யமாட்டார். என்ற வாதத்தை நான் நம்பவில்லை 

பொறுத்து இருந்து பாரப்போம் 

1 hour ago, goshan_che said:

அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது.

நானே நம்பவில்லை   சிங்களவன். எப்படி நம்புவன்.  

முகாவிலிருந்து  வெளியே வந்து   அடிப்பார்கள் என்று மாத்தி எழுதினால் நம்பலாம்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Kandiah57 said:

இது உண்மை  தமிழர்கள் எந்தவொரு வகையிலும் அழுத்தம் கொடுக்க தகுதி அற்றவர்கள். எனவே… உரிமை பெற முடியாது   13ஆவது கூட கிடையாது   அமுத்தம். கொடுக்கக் கூடியவர்களின். போராட்டம் தான் வெற்றி பெறும் 

ஆகவே சிந்திக்க வேண்டியது எப்படி அளுத்தம் கொடுக்கும் அரசியலாக எமது அரசியலை மாற்றுவது என்பதே.

நல்லா படிச்சாத்தான் சோதனை பாஸ்பண்ணலாம் எண்டு சொன்னால், அது நம்மாள முடியாதே எண்டு விட்டு மாடு மேய்க்க போகலாம்…

அல்லது முயன்று படித்து பாஸ் பண்ணலாம்.

நீங்கள் நாம் இனி மாடு மேய்க்கத்தான் இலாயக்கு என்கிறீர்கள்.

நான் இல்லை படிக்க இன்னும் அவகாசம் இருக்கிறது என்கிறேன்.

31 minutes ago, Kandiah57 said:

வடக்கு கிழக்கு பிரித்தார்கள் 

இனவாதம் பேசினார்கள்  

இவை உண்மை தான்  

ஆகவே   தமிழருக்கு அனுர. நன்மைகள் எதுவும் செய்யமாட்டார். என்ற வாதத்தை நான் நம்பவில்லை

நன்மை செய்யமாட்டர் என சொல்லவில்லை.

நமக்கு அதிகாரத்தை பரவலாக்க மாட்டார் என்றே சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, Kandiah57 said:

நானே நம்பவில்லை   சிங்களவன். எப்படி நம்புவன்.  

முகாவிலிருந்து  வெளியே வந்து   அடிப்பார்கள் என்று மாத்தி எழுதினால் நம்பலாம்

புலிகளை போலவே அதே வன்முறையை அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே செய்த அமைப்பு ஜேவிபி.

ஆனால் விஜேவீர இறந்த பின் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படலாம் என அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை, புலிகளின் உறுப்பினர் மீது இன்னும் வைக்க முடியவில்லை.

ஏன்? இனவாதம் பார்வை.

ஜேவிபி ஜனநாயகம் மூலமும் வென்றாலும் பெளத்த-சிங்கள வாதத்தைதான் தூக்கி பிடிக்கும். ஆகவே அவர்களை ஏற்கலாம்.

ஆனால் புலிகள் ஜனநாயகத்தில் வென்றால் அது மாநில சுயாட்சி உடைய ஒரு தமிழ் அரசில் போய் முடியும் - அது ஒட்டு மொத்த இலங்கையும் பெளத்த சிங்களத்துக்கு உரிய தீவு என்ற பேரினவாதத்துக்கு உகந்ததத்தல்ல.

ஆகவே ஜேவிபிக்கு ரிப்பீட்டு, புலிகளுக்கு அப்பீட்டு.

இலங்கையில் ஒவ்வொரு துகளும் நகர்வது பெளத்த-சிங்கள மேலாண்மைவாத அடிப்படையில்தான்.

75 வருடம் கழித்து இலங்கை தமிழருக்கு இதை எழுதி விளங்கவைக்க வேண்டி இருப்பதே காலக்கொடுமை.

59 minutes ago, குமாரசாமி said:

அனுர ஆட்சிக்கு நான்கு வருட அவகாசம் இருக்கின்றது. அது வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது என் கருத்து. ஆகக்கூடியது ஒரு வருடம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம்.

ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து  பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை.

இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வதெல்லாம் சரியே.

இது தெரியாமல் மாற்று கருத்துக்களை எவரும் வைக்கவில்லை என நினைக்கிறேன்.

அனுர ஆட்சிக்கு நான்கு வருட அவகாசம் இருக்கின்றது. அது வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது என் கருத்து. ஆகக்கூடியது ஒரு வருடம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இங்கே யாரும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று எழுதவில்லை அண்ணா.

உங்கட கோவணத்தையும் கழட்டி குடுத்துவிடாமலாவது இருங்கோ என்று தான் சொல்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
49 minutes ago, விசுகு said:

இங்கே யாரும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று எழுதவில்லை அண்ணா.

உங்கட கோவணத்தையும் கழட்டி குடுத்துவிடாமலாவது இருங்கோ என்று தான் சொல்கிறார்கள்..

ஒரு வருசமும் தேவையில்லை..ஆறுமாதமும் தேவையில்லை..அனுர இந்தியா

போய்வர...காட்சிகளும் மாறும்..கானங்களூம் மாறும். உதாரணம் ரிஸ்வினின் பேச்சு..

அத்திவாரம் போடத்தானே அணிலார் போனவர்..பொறுமை

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

ஆகவே சிந்திக்க வேண்டியது எப்படி அளுத்தம் கொடுக்கும் அரசியலாக எமது அரசியலை மாற்றுவது என்பதே.

இலங்கையில் தமிழர்கள் அளுத்தம். கொடுத்து இலங்கை அரசாங்கம் எதையும் செய்யாது    என்று சொல்லி தான் தமிழ் தலைவர்கள்   இனி ஆயுதம் ஏந்தி போராடுவது தான் ஒரே வழி   என்று உறுதியாக 1977 இல்  அறிவித்தார்கள் 

காணமால். போனேர்.  போராட்டம்  எந்தவொரு தீர்வுமின்றி பல ஆண்டுகளாக நடைபெறுகிறது  அந்த போராட்டத்தில் இடுபட்டவரகள். படிப்படியாக  இறந்துபோகிறார்கள். 

தமிழருக்கு சுயாட்சி தமிழ் ஈழம்  கூடுதல் அதிகாரங்கள்   தருமாறு அளுத்தம். கொடுத்தால்  அரசாங்கத்திற்கு எதிர்கட்சியும். ஆதரவு அளித்து தோற்கடித்துவிடும் 

தமிழர்கள் அரசாங்கத்தின் பங்களியாக இருந்தாலும்   எதுவும் பெற முடியாது   ஏனெனில் எதிர்கட்சியும் அரசாங்கமும் ஒன்றாக ஒற்றுமையாகி விடும்    

படிப்படியாக சனத்தொகையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையும்  குறைத்து வரும் நிலையில்   அளுத்தம் கொடுப்பதை  வளர்த்து எடுக்க முடியாது  அப்படி கொடுக்கும் அளுத்தம். இலங்கை அரசாங்கத்தை. எந்தவகையிலும். பாதிக்காது 

9 hours ago, goshan_che said:

நீங்கள் நாம் இனி மாடு மேய்க்கத்தான் இலாயக்கு என்கிறீர்கள்.

மாடு மேய்ப்பது  கூடாதா வேலையா    ??      

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kandiah57 said:

இலங்கையில் தமிழர்கள் அளுத்தம். கொடுத்து இலங்கை அரசாங்கம் எதையும் செய்யாது    என்று சொல்லி தான் தமிழ் தலைவர்கள்   இனி ஆயுதம் ஏந்தி போராடுவது தான் ஒரே வழி   என்று உறுதியாக 1977 இல்  அறிவித்தார்கள் 

காணமால். போனேர்.  போராட்டம்  எந்தவொரு தீர்வுமின்றி பல ஆண்டுகளாக நடைபெறுகிறது  அந்த போராட்டத்தில் இடுபட்டவரகள். படிப்படியாக  இறந்துபோகிறார்கள். 

தமிழருக்கு சுயாட்சி தமிழ் ஈழம்  கூடுதல் அதிகாரங்கள்   தருமாறு அளுத்தம். கொடுத்தால்  அரசாங்கத்திற்கு எதிர்கட்சியும். ஆதரவு அளித்து தோற்கடித்துவிடும் 

தமிழர்கள் அரசாங்கத்தின் பங்களியாக இருந்தாலும்   எதுவும் பெற முடியாது   ஏனெனில் எதிர்கட்சியும் அரசாங்கமும் ஒன்றாக ஒற்றுமையாகி விடும்    

படிப்படியாக சனத்தொகையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையும்  குறைத்து வரும் நிலையில்   அளுத்தம் கொடுப்பதை  வளர்த்து எடுக்க முடியாது  அப்படி கொடுக்கும் அளுத்தம். இலங்கை அரசாங்கத்தை. எந்தவகையிலும். பாதிக்காது 

புலம்பெயர் தேசத்தில் என்ன ஹைகோர்டையா அகற்றுகிறீர்கள்?

இதற்கான விடை 2008 மாவீரர் நாள் உரையில் உள்ளது.

புலம்பெயர் தேசத்தில் எஞ்சியோர் அந்த உரையில் சொன்னதுக்கு விசுவாசமாக இருந்தாலே, நடந்தாலே - பாதி கிணறு தாண்டிய மாதிரித்தான்.

5 hours ago, Kandiah57 said:

மாடு மேய்ப்பது  கூடாதா வேலையா    ??

எந்த வேலையும் கூடாத வேலை இல்லை? 

ஆனால் உங்கள் பிள்ளைகள் எவரையும் படிக்காதே, மாடு மேய் என நீங்கள் வழிநடத்தவில்லைத்தானே அண்ணை?

அப்படித்தான் இதுவும்…

மாடு மேய்தால் (இலங்கை தேசியம்), தினமும் சாணியோடு வாழ்க்கை போகும்🤣. படித்து ஒரு வேலை எடுத்தால் (தமிழ் தேசிய சுயநிர்ணயம்) கொஞ்சம் ரிலாக்ஸ்டா வாழலாம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் எஞ்சியோர் அந்த உரையில் சொன்னதுக்கு விசுவாசமாக இருந்தாலே, நடந்தாலே - பாதி கிணறு தாண்டிய மாதிரித்தான்.

நீங்கள் சொல்வது இதுவரை நடக்கவில்லை  

இனிமேலும் நடக்காது   நடக்குமா??? பணம் சேர்த்தவர்கள்.  இதை எல்லாம் மறந்து   வேறு உலகில்…………… வாழ்கிறார்கள்    

நடைபெறுகிறது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இவை தான்    

2024 -2008= 16.     ஆண்டுகள்  மாவீரர். உரையில் 1 %  ஆவது    உலகில் உள்ள தமிழர்களால்.  நிறைவேற்றப்பட்டுள்ளதா ?? அல்லது புலம்பெயர் தமிழர்கள் நிறைவேற்றி உள்ளார்களா ??  

1 hour ago, goshan_che said:

சாணியோடு வாழ்க்கை போகும்🤣.

அது நல்லது உடலுக்கு ஆரோக்கியமானது   இதை சுட்டு. நெற்றியில் பூசுகிறார்கள்.  

வீடு மெழுகிறார்கள்.    அந்த வாசத்துக்கு எந்த வாசனை திரவியங்களும் ஈடு ஆகாது   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

புலிகளை போலவே அதே வன்முறையை அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே செய்த அமைப்பு ஜேவிபி.

ஆனால் விஜேவீர இறந்த பின் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படலாம் என அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை, புலிகளின் உறுப்பினர் மீது இன்னும் வைக்க முடியவில்லை.

ஏன்? இனவாதம் பார்வை.

ஜேவிபி ஜனநாயகம் மூலமும் வென்றாலும் பெளத்த-சிங்கள வாதத்தைதான் தூக்கி பிடிக்கும். ஆகவே அவர்களை ஏற்கலாம்.

ஆனால் புலிகள் ஜனநாயகத்தில் வென்றால் அது மாநில சுயாட்சி உடைய ஒரு தமிழ் அரசில் போய் முடியும் - அது ஒட்டு மொத்த இலங்கையும் பெளத்த சிங்களத்துக்கு உரிய தீவு என்ற பேரினவாதத்துக்கு உகந்ததத்தல்ல.

ஆகவே ஜேவிபிக்கு ரிப்பீட்டு, புலிகளுக்கு அப்பீட்டு.

இலங்கையில் ஒவ்வொரு துகளும் நகர்வது பெளத்த-சிங்கள மேலாண்மைவாத அடிப்படையில்தான்.

75 வருடம் கழித்து இலங்கை தமிழருக்கு இதை எழுதி விளங்கவைக்க வேண்டி இருப்பதே காலக்கொடுமை.

நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம்.

ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து  பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை.

இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல.

உண்மையிலேயே தெரியாமல்  கேட்க்கிறேன் ஜே வி  பி நாட்டை பிரித்து தர  சொல்லி போராடினார்களா?...அவர்களது போராட்டமும்,எமது போராட்டமும் எப்படி ஒன்றாகும்
 
On 30/11/2024 at 03:14, ரஞ்சித் said:

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்பாகப் பேசுவோரும் புலநாய்வுத்துறையினரால் இன்றுவரை அச்சுருத்தப்பட்டே வருகின்றனர்.
 
அப்படியான ஒருவர்தான் பவநேசன். தமிழர் தாயகத்தின் அனைத்து மூலைகளுக்கும் (எல்லையோரக் கிராமங்கள் உட்பட) சென்று காணொளிகளைப் பதிவிடுவது, ஊரவர்களுடன் பேசுவது, முன்னைய காலங்களுக்கும் இன்றிருக்கும் நிலைமைகளுக்குமான வித்தியாசத்தினை மக்களிடமிருந்தே கேட்டு அறிவது, சிறுவர்களுடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வது என்பது இவரது வழமை. இவரை அண்மைக்காலமாக எல்லையோரக் கிராமங்களுக்குச் செல்வதையோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதையோ செய்யவேண்டாம் என்று வீட்டிற்கு வந்த புலநாய்வுத்துறையினர் அச்சுருத்தியிருந்தனர். இதன் பின்னர் அவர் அவ்வாறான காணொளிகளை வெளியிடுவதை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் சில ஊர்களுக்குச்  சென்று வரத் தொடங்கினார். இதனையும் செய்யவேண்டாம் என்று மீண்டும் புலநாய்வுத்துறையினர் இவரது வீட்டிற்குச் சென்று அச்சுருத்தியிருந்தனர். அநுர ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது ஆட்சியில் நடக்கும் நல்ல விடயங்கள் குறித்தும், தமிழர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்றும் அடிக்கடி இப்போது பேசிவரும் நிலையில் நேற்றைய முந்தினம் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் புலநாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்து தமக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இவர் மாவீரர் தினம் குறித்தோ, தலைவரின் பிறந்த தினம் குறித்தோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதுதான் உண்மை.  

ஆக மகிந்த - கோத்தா ஆட்சிக்கும் சந்தர்ப்பவாதத் தமிழர்கள் கடவுளாகப் போசிக்கும் அநுரவிற்கும் இடையே தமிழர் நலன் என்று வரும்போது வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

பவனிசன், பயங்கரவாத சட்டம் பற்றி கடைசியாய் ஒரு காணொளி போட்டு இருந்தார் ...பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..தலைவரது படத்தை பொது வெளியில் பகிர கூடாது என்று அரசு பகிரங்கமாய் சொல்லிய பின்னரும் லைக்ஸ்க்காக  பகிந்தால் உள்ளே தான்  இருக்க வேண்டும் .தலைவா மேல் மரியாதை இருந்தால் வீட்டிலே வைத்து கும்பிடலாம் ....பவனிசனை காட்டி கொடுத்து கொண்டு இருப்பவர்கள் சிங்களவர்கள் இல்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரதி said:

வணக்கம் தங்கச்சி மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டது மிகவும் சந்தோசம்.

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் பாரின் சரக்கின் மாயாஜாலம்!😂
    • இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார். பிரதமர் பெண்ணாக இருக்கிறார். படித்தவகளாய் இருக்கிறார்கள்.அதுக்காக [படித்தவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை.] எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.  
    • நீலன், சுமந்திரன் ஒப்பீடு ஒரு அளவுக்கு மேல் சரிவராது. நீலன் தன்னை தமிழர் பிரதிநிதி என அடையாளம் காட்டவில்லை. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆசியோடு, சந்திரிக்கா கேட்டு, அரச எம்பியாகி ஒரு தீர்வை வரைய முயன்றார். நீலன் விடயத்தில் கூட, நீலனைத்தான் புலிகள் விவேகமின்றி சாவடித்தானர், ஆனால் அவரின் தீர்வு திட்டத்தை சாவடித்தது பிக்குகள். ஆனால் சுமந்திரன் அப்படி அல்ல. அவர் தமிழர் பிரதிநிதி என தன்னை முந்தள்ளியவர். இவருக்கான கடமை, பொறுப்பு வேறு. மக்கள் பிரதிநிதிக்கும், தொழில்நுட்ப வல்லுனருக்கும் உள்ள இடைவெளி இது. சிலவேளை இப்படி ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருப்பதுதான் சுமந்திரனின் calling ஆக இருக்க கூடும், பிழையாக தேர்தல் அரசியலுக்குள், கட்சி தலைமைதுவத்துக்குள் வந்துவிட்டார். 
    • பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.
    • நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை.  நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம்  புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர்.  ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.  அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார்.  கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான  அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும்.  அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த  போராளிகளுக்கு ஜேவிபி போல  தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும்.  செய்வாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.