Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

December 1, 2024  12:05 pm

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த  நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு  பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196695

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனவாத சிங்களம் என்றுமே தூங்காது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்ற தமிழர் கைது - பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேர்த்ததாக குற்றச்சாட்டு

01 DEC, 2024 | 10:43 AM
image
 
பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி  பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/200124

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனவாத சிங்களம் என்றுமே தூங்காது.

என்னண்ணா ?

எல்லாம் மாறும் மாற்றவேண்டும் என்று வேறு எங்கோ எழுதியதாக ஞாபகம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தம்பி வந்திறங்கும் போது கணனி சிகப்பாக காட்டியிருக்கும் அமுக்கியுள்ளனர்.

3 hours ago, குமாரசாமி said:

இனவாத சிங்களம் என்றுமே தூங்காது.

1 hour ago, விசுகு said:

என்னண்ணா ?

எல்லாம் மாறும் மாற்றவேண்டும் என்று வேறு எங்கோ எழுதியதாக ஞாபகம்?

தன் மீது பயணத்தடை உள்ளது என தெரியாமலா இவர் இலங்கை சென்றார்?

பயணத்தடை இருக்கும் ஒரு நாட்டுக்கு செல்லும் போது அந் நாட்டின் குடிவரவுப் பிரிவால் கைதாகுவார் என்பது தெரியாமல் சென்று இருக்கின்றார் போலும். System மே உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

2009 இல் மகிந்த அரசு நூற்றுக்கணக்கானவர்களை இவ்வாறு பட்டியலிட்டது. பின் மைத்திரி அரசு அதில் பலரது பெயர்களை நீக்கியது. ஆனாலும் சிலரது பெயர்கள் தொடர்ந்து அந்தப் பட்டியலில் உள்ளது.

என் இரு நெருங்கிய உறவுகளின் பெயர்கள் அப் பட்டியலில் இன்னும் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நிழலி said:

இது தான் உண்மை.

இதை இனவாதம் என்கிறார்களே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

என்னண்ணா ?

எல்லாம் மாறும் மாற்றவேண்டும் என்று வேறு எங்கோ எழுதியதாக ஞாபகம்?

மாறலாம் எனும் தொனியில் எழுதியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி வந்திறங்கும் போது கணனி சிகப்பாக காட்டியிருக்கும் அமுக்கியுள்ளனர்.

தம்பியின் பங்காளியே கோழியை அமுக்குமாறு தகவல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவரை பழி போடமுதல் நம்மைநாமே சரி பார்க்ணும்.

56 minutes ago, நியாயம் said:

தம்பியின் பங்காளியே கோழியை அமுக்குமாறு தகவல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

தன் மீது பயணத்தடை உள்ளது என தெரியாமலா இவர் இலங்கை சென்றார்?

பயணத்தடை இருக்கும் ஒரு நாட்டுக்கு செல்லும் போது அந் நாட்டின் குடிவரவுப் பிரிவால் கைதாகுவார் என்பது தெரியாமல் சென்று இருக்கின்றார் போலும். System மே உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

2009 இல் மகிந்த அரசு நூற்றுக்கணக்கானவர்களை இவ்வாறு பட்டியலிட்டது. பின் மைத்திரி அரசு அதில் பலரது பெயர்களை நீக்கியது. ஆனாலும் சிலரது பெயர்கள் தொடர்ந்து அந்தப் பட்டியலில் உள்ளது.

என் இரு நெருங்கிய உறவுகளின் பெயர்கள் அப் பட்டியலில் இன்னும் உள்ளன. 

அனுர மீட்பர் வந்துள்ளார் எனவே இனி இலங்கையிம் யூகே போல் ஒரு சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தேசம் என நம்பி போனார் போலுள்ளது.

9 hours ago, விசுகு said:

என்னண்ணா ?

எல்லாம் மாறும் மாற்றவேண்டும் என்று வேறு எங்கோ எழுதியதாக ஞாபகம்?

எனக்கு ஒரே ஒரு பயம்தான்.

இப்ப @kandiah அண்ணை வந்து, இவர் பயங்கரவாதிதானே - இவரை உள்ளே போட்டது சரிதானே என எழுதப்போகிறார் என்பதே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அனுர மீட்பர் வந்துள்ளார் எனவே இனி இலங்கையிம் யூகே போல் ஒரு சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தேசம் என நம்பி போனார் போலுள்ளது.

எனக்கு ஒரே ஒரு பயம்தான்.

இப்ப @kandiah அண்ணை வந்து, இவர் பயங்கரவாதிதானே - இவரை உள்ளே போட்டது சரிதானே என எழுதப்போகிறார் என்பதே🤣.

நான் போவதில்லை. பெரிய பெரிய மலைகளே போய் திரும்பி வருகிறார்கள். ஏன் நீங்கள் யோசிக்கிறீர்கள் என்பதும் இவர்கள் தான். போய் மாட்டிக் கொண்டால் என்ன பைத்தியக்காரத்தனம் இது என்பதும் இவர்கள் தான். 

என்னை சிங்களவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பில்லை. எங்கடையள் நிச்சயமாக செய்து முடிப்பர். அவ்வளவு நம்பிக்கை எனக்கு அவர்கள் மேல்.😭

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

எனக்கு ஒரே ஒரு பயம்தான்.

இப்ப @kandiah அண்ணை வந்து, இவர் பயங்கரவாதிதானே - இவரை உள்ளே போட்டது சரிதானே என எழுதப்போகிறார் என்பதே🤣.

🤣

நன்றாகவே  விளங்கி  கொண்டிருக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

எனக்கு ஒரே ஒரு பயம்தான்.

சட்டத்தின் முன்னர் யாராகினும் எவராகினும் தங்கள் விளக்கத்தை கொடுத்து தங்கள் பக்க நியாயத்தை நிறுவினால்  இந்த அரசு அதற்கு
ஆதரவு கொடுக்குமா ?
அல்லது முந்திய அரசுகளை போலவே இவர்களும் இனவாத முகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு பசுத் தோல் போர்த்திய சிங்கங்களாக வலம் வருவார்களா ?

என்பது மக்களுக்குத் தெரிய இன்னும் சில கால அவகாசம் தேவை

தமிழ் தேசிய கட்சிகளே தங்கள் இருப்பைத் தக்க வைக்க தங்கள் வாக்காளர்களுக்கே அல்வா கொடுக்கும் பொது

சிங்கள தேசிய கட்சியான NPP   தமிழர்களுக்கு அல்வா கொடுக்காதா ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாத்தியார் said:

அல்வா அல்ல, நல்ல மாத்தறை தொதோல் கிண்டி கொண்டு இருக்கிறார் அனுர… கொஞ்சம் காலம் எடுத்தாலும் சுடச் சுட கிடைக்கும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருத்தன் நைசா தட்டி இருக்கான் ஆளை போகவிட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாரோ ஒருத்தன் நைசா தட்டி இருக்கான் ஆளை போகவிட்டு 

அவர் தனது தாயாரை இறுதிக் கணத்தில் பார்க்கவே உயிரை பணயம் வைத்து அங்கே வந்துள்ளார். நமக்காக உழைத்தவர்கள் படும் பாட்டை நாம் பார்க்கும் விதம் இருக்கே???? சொல்லி அழுதாலும் தீராது ஆறாது..😭

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2024 at 09:16, நிழலி said:

தன் மீது பயணத்தடை உள்ளது என தெரியாமலா இவர் இலங்கை சென்றார்?

பயணத்தடை இருக்கும் ஒரு நாட்டுக்கு செல்லும் போது அந் நாட்டின் குடிவரவுப் பிரிவால் கைதாகுவார் என்பது தெரியாமல் சென்று இருக்கின்றார் போலும். System மே உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

2009 இல் மகிந்த அரசு நூற்றுக்கணக்கானவர்களை இவ்வாறு பட்டியலிட்டது. பின் மைத்திரி அரசு அதில் பலரது பெயர்களை நீக்கியது. ஆனாலும் சிலரது பெயர்கள் தொடர்ந்து அந்தப் பட்டியலில் உள்ளது.

என் இரு நெருங்கிய உறவுகளின் பெயர்கள் அப் பட்டியலில் இன்னும் உள்ளன. 

தாயாரின் இறப்பு வீட்டிக்கு சென்றிருக்கிறார்.இன்று யூருப் செய்தி ஒன்றில் பகிரப்பட்டு இருக்கிறது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நபர் சட்டத்தரணி தவராஜா அவர்களின் முயற்சியால் விடுதலை செய்யபட்டுள்ளார் என்று யூருப் செய்தி ஒன்றி பார்த்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.