Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!

இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன்,

இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், மேலும் ஜூன் மாதம் துப்பாக்கியை வைத்திருந்த சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

ஒரு குற்றத்திற்காக குற்றவாளியாக  ஒரு பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் இவர் ஆவார்.

https://athavannews.com/2024/1410655

  • கருத்துக்கள உறவுகள்

எரிகின்ற வீட்டில் பிடுங்குவதுவரை லாபம் என்று பைடன் தனது மகனை ஜெயிலில் இருந்து காப்பாற்றியுள்ளார். இன்னும் நாலு வருஷத்தில் ட்ரம்ப் ஆட்சி முடிந்தாலும் ஜனநாயகக் கட்சி மீண்டுவரச் சந்தர்ப்பம் இல்லை என்று பைடனுக்குப் புரிந்துவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

எரிகின்ற வீட்டில் பிடுங்குவதுவரை லாபம் என்று பைடன் தனது மகனை ஜெயிலில் இருந்து காப்பாற்றியுள்ளார். இன்னும் நாலு வருஷத்தில் ட்ரம்ப் ஆட்சி முடிந்தாலும் ஜனநாயகக் கட்சி மீண்டுவரச் சந்தர்ப்பம் இல்லை என்று பைடனுக்குப் புரிந்துவிட்டது!

ட்ரம்ப் உலக அரங்கிலும், உள்நாட்டிலும் விசர்க் கூத்தாடிய போது ஆபத்பாந்தவனாக வந்து நம்பிக்கை தந்த பைடன் இப்படி சராசரி அரசியல் வாதியாக அரங்கிலிருந்து நீங்குகிறார்.

4 வருடத்தில் அல்ல, இரண்டு வருடங்களில் வரும் இடைத்தேர்தலில் கூட நீலக் கட்சி சோபிக்காத வகையில் இந்தச் செயல்கள் விளைவைக் காட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள்.

ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!

உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள  தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க  போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு.
எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம்.

இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋

  • கருத்துக்கள உறவுகள்

பதவியில் இருந்து இதை கூட செய்யா விட்டால் உலகம் என்ன சொல்லும்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

பதவியில் இருந்து இதை கூட செய்யா விட்டால் உலகம் என்ன சொல்லும்??

அதுதானே... புத்திசாலி மனுசன். 😂
நம்ம, திராவிட உடன்பிறப்புகளை பார்த்து பழகியிருப்பாரோ.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள  தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க  போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு.
எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம்.

இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋

ஊருக்குதான் உபதோசம்😜

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அப்ப‌டியும் இருக்க‌லாம் தாத்தா

இவ‌ரின் ப‌த‌விக் கால‌ம் முடியும் போது உக்கிரேனுக்கு பெருத்த‌ உத‌வியுட‌ன் ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ளை ப‌ய‌ன் ப‌டுத்த‌வும் அனும‌தி கொடுத்தார்..................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

அதுதானே... புத்திசாலி மனுசன். 😂
நம்ம, திராவிட உடன்பிறப்புகளை பார்த்து பழகியிருப்பாரோ.... 🤣

11 hours ago, உடையார் said:

ஊருக்குதான் உபதோசம்😜

என்னது இந்தப்பக்கம் நீதிமான்கள் ஒருத்தரையும் காணேல்ல..... 😂 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

என்னது இந்தப்பக்கம் நீதிமான்கள் ஒருத்தரையும் காணேல்ல..... 😂 

பனையூரில் பத்து கிலோ அரிசி கொடுக்கின்றார்கள். அங்கே போய் வரிசையில் நிற்கின்றோம்................🫣.

சர்வதேசங்களும் கோமாளிகளால் நிறைந்து இருக்குதே, ஏசப்பா...............😌.

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் ஐயாவை தேர்தலில் போட்டியிடவிடாமல் கபடமாக கமலா அக்காவை நுழைத்தார்கள். பைடன் பழி தீர்த்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2024 at 00:49, தமிழ் சிறி said:

மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!

மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!

இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன்,

இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், மேலும் ஜூன் மாதம் துப்பாக்கியை வைத்திருந்த சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

ஒரு குற்றத்திற்காக குற்றவாளியாக  ஒரு பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் இவர் ஆவார்.

https://athavannews.com/2024/1410655

கொள்ளி  வைக்க ஆள் வேணுமெல்லோ..🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

என்னது இந்தப்பக்கம் நீதிமான்கள் ஒருத்தரையும் காணேல்ல..... 😂 

12 hours ago, ரசோதரன் said:

பனையூரில் பத்து கிலோ அரிசி கொடுக்கின்றார்கள். அங்கே போய் வரிசையில் நிற்கின்றோம்................🫣.

சர்வதேசங்களும் கோமாளிகளால் நிறைந்து இருக்குதே, ஏசப்பா...............😌.

 இந்த சர்வதேச கோமாளிகளின் பக்கச்சார்பை நினைக்க..............🤣😂

இவர்கள் நல்ல நடிகர்கள், பாராட்ட வேண்டும் நடிப்பிற்கு👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

🤣............

அந்த நாட்களில் கோவில் திருவிழாக்களில் கலர் கலரான மட்டைக் கண்ணாடிகள் விற்பார்கள். விலை சில சதங்கள் மட்டுமே. ஒரு தடவை சிவப்புக் கண்ணாடி ஒன்றை வாங்கி போட்டுப் பார்த்தால், பப்பாசி மரம் கூட சிவப்பாகத் தெரிந்தது. 

அப்படி ஒரு கண்ணாடியுடனேயே இப்பொழுது வாழ்கின்றோம் போல...................  

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2024 at 20:20, ரசோதரன் said:

மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள்.

தமிழ்நாட்டுத் திரைப்படக் கதாநாயகர்களையும் சேர்ததுக் கொள்ளுங்கள். குறிப்பாக எம்ஜிஆரை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

 இந்த சர்வதேச கோமாளிகளின் பக்கச்சார்பை நினைக்க..............🤣😂

இவர்கள் நல்ல நடிகர்கள், பாராட்ட வேண்டும் நடிப்பிற்கு👍

இவ‌ர்க‌ளே ஒரு புதிய‌ ஆயுத‌க் குழுவை உருவாக்குவின‌ம் 

பிற‌க்கு இவ‌ர்க‌ளே அவைக்கு வைக்கும் பெய‌ர் தீவிர‌வாதி....................இது தான் அமெரிக்க‌ன் அர‌சிய‌ல்😁................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ளே ஒரு புதிய‌ ஆயுத‌க் குழுவை உருவாக்குவின‌ம் 

பிற‌க்கு இவ‌ர்க‌ளே அவைக்கு வைக்கும் பெய‌ர் தீவிர‌வாதி....................இது தான் அமெரிக்க‌ன் அர‌சிய‌ல்😁................................

அமெரிக்க அரசியல் மட்டும் இல்லை, உலக அரசியலே இப்படித்தான், பையன் சார்................. இலங்கையில் கூட இப்படித்தான் செய்கின்றார்கள். சஹ்ரானின் கதையைப் பாருங்கள், அச்சு அசலாக நீங்கள் சொல்லியிருப்பது தான் அது.

எந்த நாடும், எந்த தலைவர்களும் தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் தவிர்த்து பரோபகாரிகளாகவோ அல்லது உலகப் பொதுநலம் நாடுபவர்களாகவோ இங்கு இல்லை.

அமெரிக்காவின் பக்கம் நிற்பவர்கள் அமெரிக்கா செய்வதைக் கண்டும் காணாமல் இருப்பார்கள்.

ரஷ்யாவின் பக்கம் நிற்பவர்கள் ரஷ்யா செய்வது எல்லாம் சரி என்பார்கள்.

ஈரான் அந்தப் பெண்ணுக்கு செய்ததைக் கூட நாங்கள் சரி என்போம், ஏதோ ஒரு காரணத்திற்காக நாங்கள் ஈரானின் பக்கம் நின்றால்.....................😌.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்கா ப‌ல‌ பொய்க‌ளை சொல்லி அடுத்த‌வ‌ர்க‌ளின் நாட்டுக்குள் மூக்கை நுழைப்ப‌து அதிக‌ம்...................எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் த‌ங்க‌மும் எண்ணை வள‌மும் இருந்து இருக்க‌னும் அமெரிக்கா எப்ப‌வோ எங்க‌ளை ஆத‌ரிச்சு இருப்பின‌ம்....................அமெரிக்கா எப்ப‌வும் சுய‌ ந‌ல‌த்தோடு செய‌ல் ப‌டும் நாடு குருநாதா..............................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா ப‌ல‌ பொய்க‌ளை சொல்லி அடுத்த‌வ‌ர்க‌ளின் நாட்டுக்குள் மூக்கை நுழைப்ப‌து அதிக‌ம்...................எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் த‌ங்க‌மும் எண்ணை வள‌மும் இருந்து இருக்க‌னும் அமெரிக்கா எப்ப‌வோ எங்க‌ளை ஆத‌ரிச்சு இருப்பின‌ம்....................அமெரிக்கா எப்ப‌வும் சுய‌ ந‌ல‌த்தோடு செய‌ல் ப‌டும் நாடு குருநாதா..............................

உண்மை தான், பையன் சார், இன்றைய உலகில் அமெரிக்க மட்டுமே ஒரேயொரு ஆதிக்க வல்லரசாக இருப்பதே அதற்கான காரணம். சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலகின் சமநிலையை ஒரு பக்கம் சரித்துவிட்டது. 

இன்றைய நிலையில் இன்னொரு ஆதிக்க வல்லரசு உருவாகவும் போவதில்லை. சீனாவும், ரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கங்கேயே நின்று கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஒரு பிரதேச நாடுகள் ஒன்றாகக் கூடி, தங்களைத் தாங்களே பலமானவர்களாக ஆக்கிக் கொள்வது மட்டுமே சாத்தியமான ஒன்றாகத் தெரிகின்றது.

எங்களிடம் என்ன வளம் இருந்திருந்தாலும், அது முடிய எங்களை நடுத்தெருவில் விட்டிருப்பார்கள், அது எந்த வல்லரசு என்றாலும். சியாரோ லியோன் போல ஆக்கிவிடுவார்கள்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kavi arunasalam said:

தமிழ்நாட்டுத் திரைப்படக் கதாநாயகர்களையும் சேர்ததுக் கொள்ளுங்கள். குறிப்பாக எம்ஜிஆரை.

இன்று வெள்ள நிவாரணப் பொருட்கள் வாங்க விழுப்புரத்திலிருந்து சென்னையிலிருக்கும் பனையூர் போய் வரிசையில் நிற்க வேண்டி வந்ததிற்கு அவர் தான் மூலகாரணம்...................🫣.

எங்களுக்கு கருணாநிதியின் மேல் இருக்கும் வெறுப்பில், எம்ஜிஆர் தெய்வம் ஆகிவிட்டார்.

இப்படி பெரும் உலகத் தலைவர்களே பிள்ளை என்று வரும் போது, அநியாயமாக குத்துக்கரணம் அடிக்கும் போது, எங்களுக்கு இருந்த தலைவனோ, தன்ர பிள்ளைகளையும் சண்டை செய்து சாகவிட்டு, தானும் செத்துப் போனார். 

பிழைக்கவே தெரியாத மனுசனகாகவே இறந்து போனார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.