Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா...................😜.  

இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன்  என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி!

adminDecember 17, 2024
ANURA-at-india-1170x671.jpg

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16.12.24) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2024/209367/



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்! மொஸ்கோவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மொஸ்கோவில் நடந்த வெடிப்பின் விளைவாக, ரஷ்ய ஆயுதப்படைகளின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையின்படி, செவ்வாயன்று (டிசம்பர் 17) காலை, ஒரு மெஸ்கோவின் ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் புலனாய்வு பணிகளை மேற்கொண்டனர், மருத்துவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடவடிக்கைக்கு உதவ அழைக்கப்பட்டனர். குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது என்று ரஷ்ய புலனாய்வு குழுவின் செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தென்கிழக்கு மொஸ்கோவில் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்ட கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் இருந்து வீடியோவை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்று தலைநகரின் அவசர சேவைகளின் பிரதிநிதி கூறியுள்ளார். https://athavannews.com/2024/1412628
    • பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் December 17, 2024 11:35 am பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் மற்ற மற்ற விடயங்களுக்காக விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்தான். பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் ஐயா தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் போமிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபார்சு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்.” – என்றார்.   https://oruvan.com/those-who-recommended-granting-of-parole-should-also-resign-like-the-speaker-sumanthiran/
    • அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்ப முன்னர் நடந்ததை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள்!  
    • முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்...  வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie)  எதுவும் இல்லாமல்...  வெறும் சேர்ட்டுடன்   போன படியால்.... சாணக்கியனின் வாகன சாரதியாக,  "பைல்" தூக்கிக் கொண்டு, பின்னால் போயிருப்பார்.  படத்தைப் பார்க்க... "மிக்சர்" சாப்பிடப் போன ஆள் மாதிரித்தான் தெரியுது. 😂 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.