Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா...................😜.  

இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன்  என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா

  • Replies 55
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்திற நீ? இந்த வரவேற்பு, நாடகமெல்லாம் தங்கள் பாதுகாப்புக்கும் தங்கள் அபிவிருத்திக்குமே. இந்தியாவுக்கு உண்மையில் இலங்கை நலனில் அக்கறை இருந்திருந்தால்; போரைய

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • குமாரசாமி
    குமாரசாமி

    இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.😂 இனியென்ன ஹபரணை சந்தியில காந்தி சிலை வைக்கலாம்.🤣 அமெரிக்க ஜனாதிபதிக்கு குடுக்கும் அ

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி!

adminDecember 17, 2024
ANURA-at-india-1170x671.jpg

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16.12.24) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
 
https://globaltamilnews.net/2024/209367/

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார்.

பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை அநுரவை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர்.

Image

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் மகாபோதி கோயில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் குறிக்கும் வகையில், புத்த கயாவில் உள்ள ஒரு பழங்கால புத்த கோவில் இதுவாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே வலுவான பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது என்று திங்கட்கிழமை விசேட மாநாட்டில் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

அநுரகுமார பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார்.

இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையிலான வலுவான பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதையும் அதன் எல்லைகளை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக திங்கட்கிழமை, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Image

இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி அநுரகுமார,

ஜனாதிபதியாக எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தது ஒரு பாக்கியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததற்காகவும் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்காகவும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, BRICS, UNCLCS மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலை நிறுத்துவது குறித்து இன்றைய சந்திப்பின் போது விவாதித்தோம்.

நான் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன், மேலும் இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.

https://athavannews.com/2024/1412636

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

May be an illustration of fishing and text

May be a doodle of tree

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an illustration of text

May be an illustration of fishing and text

May be a doodle of tree

இந்த ஓவியம் வரைத்தவர்களை   ஐனதிபதியாக   பிரதமராக   பதவியில் அமர்த்தப்பட வேண்டும்   என்ன பிடுங்கி தாருவார்கள். ??பார்ப்போம்    வைக்கோல் பட்டடை   ..........இல்   இருத்து சத்தம் போட்டித் தான்   முடியும்      வைக்கோல் சாப்பிடவும் விடாமல் தங்களும். சாப்பிட மாடடாதுகள்.    🙏

Just now, Kandiah57 said:

இந்த ஓவியம் வரைத்தவர்களை   ஐனதிபதியாக   பிரதமராக   பதவியில் அமர்த்தப்பட வேண்டும்   என்ன பிடுங்கி தாருவார்கள். ??பார்ப்போம்    வைக்கோல் பட்டடை   ..........இல்   இருத்து சத்தம் போட்டித் தான்   முடியும்      வைக்கோல் சாப்பிடவும் விடாமல் தங்களும். சாப்பிட மாடடாதுகள்.    🙏

போடத் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததற்காகவும் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்காகவும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, BRICS, UNCLCS மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலை நிறுத்துவது குறித்து இன்றைய சந்திப்பின் போது விவாதித்தோம்.

இந்தப் பயணத்தில் கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரனும்  போவதாக இருந்ததே போகலையா?

6 hours ago, தமிழ் சிறி said:

நான் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன், மேலும் இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா ஏற்கனவே தளம் அமைக்கும் விடயத்தில் அரைவாசி முன்னேறியுள்ளதாக சொல்கிறார்களே பொய்யா கோப்பாலு?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பயணத்தில் கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரனும்  போவதாக இருந்ததே போகலையா?

அவரு தமிழ் அமைச்சராமே..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பயணத்தில் கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரனும்  போவதாக இருந்ததே போகலையா?

8 minutes ago, alvayan said:

அவரு தமிழ் அமைசராமே..

அமைச்சர் சந்திரசேகரனையும் அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்.
மோடி அரசில் உள்ள அத்தனை தமிழ் அமைச்சர்களையும்  (ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், வேல் முருகன்) அனுரவை சந்திக்க வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அமைச்சர் சந்திரசேகரனையும் அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்.
மோடி அரசில் உள்ள அத்தனை தமிழ் அமைச்சர்களையும்  (ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், வேல் முருகன்) அனுரவை சந்திக்க வைத்துள்ளார்கள்.

அப்ப 13 சரியாயிடுச்சா..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

அப்ப 13 சரியாயிடுச்சா..

13 பிளஸ், மைனஸ்... விளையாட்டு... சம்பந்தன், மகிந்த, ரணிலுடன் போயிட்டுது.
இடைக்கிடை செல்வமும், விக்கியரும்தான் அதை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

13 பிளஸ், மைனஸ்... விளையாட்டு... சம்பந்தன், மகிந்த, ரணிலுடன் போயிட்டுது.
இடைக்கிடை செல்வமும், விக்கியரும்தான் அதை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 😂

இனி ..13 +   என்பது வயதை மட்டும் குறிக்கும்... இலங்கையில்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

அமைச்சர் சந்திரசேகரனையும் அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்.
மோடி அரசில் உள்ள அத்தனை தமிழ் அமைச்சர்களையும்  (ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், வேல் முருகன்) அனுரவை சந்திக்க வைத்துள்ளார்கள்.

அவரும் போயிருந்தால் மீன்பிடி பிரச்சனை பற்றி விரிவாக பேசியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

இதை இலங்கை செய்யாது எனவே கருதுகிறேன், யாரும் சொந்த செலவில் சூனியம் செய்ய மாட்டார்கள், சில வேளை மற்ற அரச தலைவர்களை விட இவர் தலையில் இலகுவாக மிளகாய் அரைக்கலாம் என நினைக்கிறார்களோ🤔

இவரும் செய்யமாட்டார்….

ஆள் பார்க்கத்தான் உடுப்பும் நடையும்…

பெட்டா மார்கெட்டில் பெல்ட் விக்க போனவர் போல இருப்பார்…

ஆனால்….வேட்டிய கட்டிய அத்தனை இனவாதிகளிலும் ஒரு படி கூடிய இனவாதி இவர்.

12 hours ago, vasee said:

இந்தியா வடக்கே இருப்பதால் துட்ட கைமுனு கால் நீட்டி படுக்க முடியாமல் அவதிப்பட்டதாக சிங்களவர்களின் புனைகதைகளில் உள்ளதாக கூறுகிறார்கள், தற்போது நீங்கள் கூறுவது போல் நிகழ்ந்தால் அதனை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இது நிகழ்ந்தால் இலங்கை அரசியலில் ஒரு புயல் உருவாகலாம்(நீங்கள் கூறுவது போல நிகழ்ந்தால் ஏற்கனவே கால் நீட்டி படுக்க முடியாமல் அவதிப்படும் துட்ட கைமுனுவிற்கு அதனோடு சேர்ந்து மூல நோயும் வந்த நிலைதான்).

வடக்கே தமிழர், தெற்கே சமுத்திரம் நான் எப்படி கால் நீட்டி படிக்க முடியும் என துட்ட கைமுனு தன் தாய் விகாரமாஹாதேவியிடம் சொன்னாராம்.

இந்தியா கேட்ட லிஸ்டை சிங்களம் கொடுக்காவிட்டால் நல்லது, இடையில் நாம் சைக்கிள் ஓடி 13 ஐயாவது தக்க வைக்ககலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆனால்….வேட்டிய கட்டிய அத்தனை இனவாதிகளிலும் ஒரு படி கூடிய இனவாதி இவர்.

இந்த உண்மை உணர யாழ் களத்தில் நாளெடுக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2024 at 23:11, தமிழ் சிறி said:

அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார். 
அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு, 
ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂

ஹபரணயில் காந்தி சிலையும் வ‌ரும்,மாவோ சிலையும் வரும் ...காந்தி வடக்கே பார்த்து கொண்டிருப்பார் ,மவோ தெற்கே பார்த்து கொண்டிருப்பார் ....கலவரம் வந்தால் காந்தியின் தலைதான் முதலில் விழும் ....அசாத்தின் சிலை சிரியாவில் உடைவது போல ..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

ஆயுத போராட்டம் தொடங்க முதலே இந்திய எதிர்ப்பு சிறிலங்காவில் இருந்தது ...கலவரங்கள் வரும் பொழுது சகல இந்திய வியாபாரங்களும் பாதிக்கப்படும் ஆகவே இந்திய விபாபாரிகளே நல்ல காப்புறுதி எடுத்து வைத்து கொள்ளுங்கள் ....கடைசியில் அதாவது மிஞ்சும் ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இவரும் செய்யமாட்டார்….

ஆள் பார்க்கத்தான் உடுப்பும் நடையும்…

பெட்டா மார்கெட்டில் பெல்ட் விக்க போனவர் போல இருப்பார்…

ஆனால்….வேட்டிய கட்டிய அத்தனை இனவாதிகளிலும் ஒரு படி கூடிய இனவாதி இவர்.

வடக்கே தமிழர், தெற்கே சமுத்திரம் நான் எப்படி கால் நீட்டி படிக்க முடியும் என துட்ட கைமுனு தன் தாய் விகாரமாஹாதேவியிடம் சொன்னாராம்.

இந்தியா கேட்ட லிஸ்டை சிங்களம் கொடுக்காவிட்டால் நல்லது, இடையில் நாம் சைக்கிள் ஓடி 13 ஐயாவது தக்க வைக்ககலாம்.

இந்தியாவின் உதவி 25 மாவட்டங்களுக்கும் கிடைக்கும் என உறுதி வழங்கினார் என ஒர் செய்தி பார்த்தேன் ..

5 hours ago, ஈழப்பிரியன் said:

அவரும் போயிருந்தால் மீன்பிடி பிரச்சனை பற்றி விரிவாக பேசியிருக்கலாம்.

சிறிலங்கா இருக்கும் வரை,இந்தியா இருக்கும் ஏன் இந்த கடல் இருக்கும் வரை கடற்றோழிலார் பிரச்சனை இருக்கும்...அரசியல் அரசியல் ...ஒரு காலத்தில் மீனவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை ஆனால் இன்று அப்படி அல்ல சுடமாட்டார்கள் ...ஆனால் கைதுகள் நடை பெறுகின்றது இது தொடர் கதை

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2024 at 00:15, தமிழ் சிறி said:

எல்லா இடமும் கை ஏந்தி, கடைசியில் சுயத்தை இழக்க வேண்டி வந்துவிட்டது.
1948´ல் சுதந்திரம் கிடைத்த கையுடன்... தமிழருடன் ஒற்றுமையாக இருந்திருந்தால்,
ஸ்ரீலங்கா... இன்று சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்கும். 
இனவாதம் விடவில்லையே... போர் என்று தொடங்கியதால், முழு நாட்டையும் 
சீனன், இந்தியன், அமெரிக்கன் என்று பங்கு போட காத்து  இருக்கின்றார்கள்.
பிக்குகளுக்கும், இனவாதிகளுக்கும்  சமர்ப்பணம்.

இனிமேலாவது திருந்துவார்களா ...இல்லை ....வாய் சொல்லில் வீரர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இவரும் செய்யமாட்டார்….

ஆள் பார்க்கத்தான் உடுப்பும் நடையும்…

பெட்டா மார்கெட்டில் பெல்ட் விக்க போனவர் போல இருப்பார்…

ஆனால்….வேட்டிய கட்டிய அத்தனை இனவாதிகளிலும் ஒரு படி கூடிய இனவாதி இவர்.

வடக்கே தமிழர், தெற்கே சமுத்திரம் நான் எப்படி கால் நீட்டி படிக்க முடியும் என துட்ட கைமுனு தன் தாய் விகாரமாஹாதேவியிடம் சொன்னாராம்.

இந்தியா கேட்ட லிஸ்டை சிங்களம் கொடுக்காவிட்டால் நல்லது, இடையில் நாம் சைக்கிள் ஓடி 13 ஐயாவது தக்க வைக்ககலாம்.

நன்றி தவறினை சுட்டிக்காட்டியமைக்கு தமிழர் என்பதாக நினைவில் இருந்தது ஆனாலும் எனோ தவறாக இந்தியா என குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியா கேட்ட லிஸ்டை பார்க்க நம்பமுடியாமல் இருக்கிறது, இலங்கை இதனை எவ்வாறு ஜீரணிக்கிறது என விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஆயுத போராட்டம் தொடங்க முதலே இந்திய எதிர்ப்பு சிறிலங்காவில் இருந்தது ...கலவரங்கள் வரும் பொழுது சகல இந்திய வியாபாரங்களும் பாதிக்கப்படும் ஆகவே இந்திய விபாபாரிகளே நல்ல காப்புறுதி எடுத்து வைத்து கொள்ளுங்கள் ....கடைசியில் அதாவது மிஞ்சும் ...

காப்புறுதி எடுக்கிறதுக்காக அவர்களே கலவரத்தை தொடக்கிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

அப்ப 13 சரியாயிடுச்சா..

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்திற நீ?

இந்த வரவேற்பு, நாடகமெல்லாம் தங்கள் பாதுகாப்புக்கும் தங்கள் அபிவிருத்திக்குமே. இந்தியாவுக்கு உண்மையில் இலங்கை நலனில் அக்கறை இருந்திருந்தால்; போரையே உருவாக்கி நாட்டை அழிக்காமல் இருந்திருக்கும். அது அனுராவுக்கு நன்கு தெரியும், சிங்கள இனவாதிகளுக்கும் தெரியும். சுடுகாடாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறாராம். முட்டாள் சுயநலவாதிகள் இருக்கிறவரைக்கும் அவர்களுக்கு வெற்றியே.      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்தியா கேட்ட லிஸ்டை பார்க்க நம்பமுடியாமல் இருக்கிறது, இலங்கை இதனை எவ்வாறு ஜீரணிக்கிறது என விளங்கவில்லை.

உண்மைதான்…2/3, மீதி எல்லோர் மீதும் வெறுப்பு ….இதை வைத்து, இவர்களை கொண்டே வேலையை முடிப்போம் என இந்தியா நினைப்பது போல் உள்ளது.

மேற்கின் அரசியலில் only Nixon can go to China. என ஒரு விடயம் சிலாகிக்கப்படும்.  

சீனப்புரட்சிக்கு பின் மேற்கின் குறிப்பாக அமெரிக்க ஒழுங்கில் இருந்து சீனா வெகு அந்நியப்பட்டு நின்றது.

1965 களில் பலரும் அமெரிக்கா சீனாவுடன் நேரடி உறவை ஆரம்பிக்க வேண்டும் என கருதினர். ஆனால் கம்யூனிச சீனாவை ஏற்பது முதலாளிதுவ, பனிப்போர் கால அமெரிக்காவில் உள்ளூர் அரசியலில் ரிஸ்க்கான விடயம்.

இடது சார்பு ஜனநாயக கட்சி இதை செய்தால் எதிரிக்கு விட்டு கொடுப்பதாக பிரச்சாரம் செய்யப்படும்.

ஆகவே கடும் கம்யூனிச எதிர்பாளரான நிக்சந்தான் இதை செய்யமுடியும் என்பதே இதன் பொருள்.

அப்படித்தான் நிக்சன் அமெரிக்க-சீன உறவை மீள ஸ்தாபித்தார்.

அதே போல் ஜேவிபி அளவுக்கு புலிகளை தவிர இலங்கையில் இந்தியாவை எதிர்தவர்கள் எவரும் இல்லை.

ஆகவே தாம் கேட்பதை அதிக எதிர்பின்றி தர ஜேவிபியால் முடியும் என இந்தியா நினைக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

திங்கட்கிழமை, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Image

இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி அநுரகுமார,

ஜனாதிபதியாக எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தது ஒரு பாக்கியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

தமிழர்கள் வழமைபோல் தவளைக்கத்து கத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, satan said:

கவிழ்க்கப்போகிறார்கள் என்று அர்த்தம் சாமியார்! அனுராவின் வீரியம் தெரியும் அவர்களுக்கு போனவுடன் கோயிலில் விழுந்து கும்பிடும்  கூட்டமல்ல இவர்.

புத்த சாம்ராஜ்ஜியங்களுக்கு சென்று மாலை அணிவுப்புகள் பெற்றிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

காப்புறுதி எடுக்கிறதுக்காக அவர்களே கலவரத்தை தொடக்கிவிடுவார்கள்.

அது மட்டுமல்ல  பாகிஸ்தானுக்கு வியாபரம் காட்ட ,பாகிஸ்தானை பிராந்திய வல்லரசாக்க சிறிலங்காவில் ஒரு குழு தீயா வேலை செய்கின்றது அந்த குழுவுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் ஆசிர்வாதம் உண்டு ...ஆகவே அவர்களும் இந்தியாவுக்கு எதிராக செயல் படுவார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.