Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது

image_b2f0d48204.jpg

அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது.

அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 
 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கஜகஸதனல-பயணகள-வமனம-வடதத-சதறயத/50-349267

  • கருத்துக்கள உறவுகள்

கஜகஸ்தானில் விமான விபத்து - பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது

25 DEC, 2024 | 01:10 PM
image
 

கஜகஸ்தானில் 75 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது.

அக்டாவு நகரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் பயணித்த எவரும் உயிர்தப்பவில்லை என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/202114

  • கருத்துக்கள உறவுகள்

கஜகஸ்தானில் 67 பேருடன் விபத்துக்குள்ளான விமானம் - பயணிகள் என்ன ஆனார்கள்?

கஜகஸ்தான்: விபத்துக்குள்ளான  67 பேர் பயணம் செய்த விமானம், பயணிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கஜகஸ்தானில் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்துக்கு உள்ளானது.

கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் சென்ற விமானம் ஒன்று புதன்கிழமையன்று (25-12-2024) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்தாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம் அக்டாவ் நகருக்கு அருகே சென்ற போது தீப்பிடித்தது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் இந்த விமானம், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு சென்று கொண்டிருந்தது. பனிமூட்டம் காரணமாக அது பாதை மாறியிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் லாண்டிங் கியர் கீழே உள்ளபடி அதிவேகமாக தரை இறங்க முயன்றமைத காண முடிகிறது. ரஷ்ய செய்தி ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை சரிபார்த்து உறுதி செய்துள்ளது.

தரையிறங்க முயற்சிப்பது போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது.

கஜகஸ்தான்: விபத்துக்குள்ளான  67 பேர் பயணம் செய்த விமானம், பயணிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த எம்ப்ரேயர்-190 ரக விமானத்தில் 62 பயணிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக அஜர்பைஜான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள். ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில பயணிகளும் அதில் இருந்தனர்.

விபத்து நேரிட்டிருந்தாலும், அக்டாவ் விமான நிலையம் வழக்கம் போல இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான சேவை வழங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் மற்றும் அந்த விமானத்தை தயாரித்த எம்ப்ரேயர் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொள்ள முயன்று வருகிறது.

இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஏராளன் said:

கஜகஸ்தானில் 67 பேருடன் விபத்துக்குள்ளான விமானம் - பயணிகள் என்ன ஆனார்கள்?

பிபிசீயின் தலைப்பு. * இவர்களெல்லாம்...

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

அசர்பைஜானில் இருந்து தெற்கு ரஷ்யாவிற்கு 67 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புதன்கிழமை (25) கசாக் நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், விபத்தில், இரு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிர் பிழைத்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அசர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜே2-8243 என்ற விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது.

இதன்போது, அக்டோவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டனர்.

தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட தகவல்களின்படி, உயிர் பிழைத்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக கஜகஸ்தானின் போக்குவரத்து அமைச்சின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயணிகளில் 37 பேர் அசர்பைஜானைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் கசகஸ்தானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் 16 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2024/1414018

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

பிபிசீயின் தலைப்பு. * இவர்களெல்லாம்...

bbc தமிழ் தான் அனைத்து செய்திகளின் முடிவிலும் கேள்வி குறி .

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் பறவைகள் கூட்டத்துடன் மோதுண்டதாகவும், இதனாலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் ஒரு செய்தியில் பார்த்தேன்.

பறவைகள் கூட்டத்துடன் மோதுண்டு பின்னர் நியூயோர்கில் ஆற்றில் இறக்கப்பட்டு ஒரு விமானம் முன்பு தப்பியது.

  • கருத்துக்கள உறவுகள்

கஜகஸ்தான் விமான விபத்து; 38 பேர் மரணம், 29 பேர் உயிர் பிழைப்பு!

கஜகஸ்தான் விமான விபத்து; 38 பேர் மரணம், 29 பேர் உயிர் பிழைப்பு!

67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் ஒன்று புதன்கிழமை (25) கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாக கசாக் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ஒரு விரிவான மீட்பு நடவடிக்கையில், இரண்டு குழந்தைகள் உட்பட 29 உயிர் பிழைத்த நிலையில் மீட்க்கப்பட்டதாகவும் கஜகஸ்தானின் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ் (Kanat Bozumbayev) தெரிவித்துள்ளார்.

அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 என் விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பயணம் செய்து கொண்டிருந்தது.

எனினும், அது அக்டாவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

New-Project-2-26.jpg?resize=600%2C338&ssl=1

விபத்தில் உயிர் பிழைத்த அனைவரும் அவசர மீட்பு பணிகள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கசாக் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.

உயிர் பிழைத்தவர்களில் எவரும் கசாக் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஒரு தேடல் குழு விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக அசர்பைஜான் அரச செய்தி நிறுவனம் AZERTAC தெரிவித்துள்ளது.

மேலும் விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் பயணிகளின் குடும்பங்களுக்கு உதவவும் கஜகஸ்தான் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை அமைத்துள்ளது.

விசாரணையில் அசர்பைஜானுடன் அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும் அது கூறியது.

விபத்து குறித்து வெளியோன வீடியோவில், விமானம் விபத்துக்கு முன் விமானநிலையத்தை தவறாக சுற்றி வந்தது. தரையில் மோதியவுடன், விமானம் தீப்பிடித்து எரிந்தது, சிறிது நேரத்தில் இடிபாடுகளில் இருந்து இரத்தம் தோய்ந்த பயணிகள் வெளியே வந்ததை காட்டுகின்றது.

https://athavannews.com/2024/1414075

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

bbc தமிழ் தான் அனைத்து செய்திகளின் முடிவிலும் கேள்வி குறி .

பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது என்னவிதமான ஒரு மனநிலை. பைத்தியக்காரத்தனமான தலைப்புகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் மலிந்துவிட்டன. இதனை வெறுமனே அனைத்து அறிவார்ந்தோரும் கடந்து செல்வதும் கவலைக்குரியது. பிழைப்புக்காக எதையும் எழுதவும் செய்யவும் துணிந்த உலகிலே சாமானியர்களது குரல்கள் எடுபடுமா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதலா? அஜர்பைஜான் விமான விழுந்து நொருங்கியமை குறித்து ஊகங்கள்

26 DEC, 2024 | 04:45 PM
image

ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என  உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான  உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும்  பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார்.

அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்- விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.

கஜகஸ்தான் விமானவிபத்தில் 31 பேர் உயிர்பிழைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம்  அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டவேளை தீப்பிடித்தது.

https://www.virakesari.lk/article/202220

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

 

ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என  உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

 

இப்படியான செய்திகளுக்கு கடும் எச்சரிக்கை விட்டிருக்கின்றார் புடின்.............. வீரகேசரி அலுவலகத்திற்குள் ஒரு ட்ரோன் பறக்கப் போகின்றது.............

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதலா? அஜர்பைஜான் விமான விழுந்து நொருங்கியமை குறித்து ஊகங்கள்

26 DEC, 2024 | 04:45 PM
image

ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என  உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான  உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும்  பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார்.

அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்- விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.

கஜகஸ்தான் விமானவிபத்தில் 31 பேர் உயிர்பிழைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம்  அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டவேளை தீப்பிடித்தது.

https://www.virakesari.lk/article/202220

ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை  என்றுதான் செய்திகள் வெளிவந்துள்ளன. ரஸ்யா தாக்கியதாக அல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை  என்றுதான் செய்திகள் வெளிவந்துள்ளன. ரஸ்யா தாக்கியதாக அல்ல. 

நான் சொல்லுறன் அடிச்சு விழுத்துனது புட்டின் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லுறன் அடிச்சு விழுத்துனது புட்டின் தான்.

இஸ்ரேல் ரஸ்யாவிற்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kapithan said:

இஸ்ரேல் ரஸ்யாவிற்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

அப்ப....???
ரஷ்யாவுக்கும் அடி விழப்போகுது எண்டுறியள்....!  🤣

அது சரி எல்லாத்துக்கும் குளிசை இஸ்ரேலிட்ட தானே இருக்கு.. 😎

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்தது. 

இரண்டு கப்பல்கள் தாண்டன.

அதில் ஒன்று இரண்டாகப் பிளந்து தாண்ட எண்ணெய் தாங்கிக்கப்பல்.

அடுத்த கப்பல் சரக்குக்கப்பல். அது இயந்திர அறையில் குண்டு வெடித்து தாண்டது. அங்கிருந்த 14 ரஷ்ய மாலுமிகளை காப்பாற்றி ஸ்பெயினுக்கு கொண்டு போனார்கள். அதில் இருவரை இப்பொழுது காணவில்லை. 

தாண்ட எண்ணெய்க்கப்பலில் இருக்கும் எண்ணெய் கருங்கடலின் அடியில் போய் தங்கிவிடும், ஆதலால் ஆபத்தில்லை என்றார்கள். அந்த எண்ணெய் இந்த எண்ணெய் விஞ்ஞானிகளின் சொல்பேச்சு கேட்கவில்லை. அது இப்பொழுது கரையொதுங்கி, அந்தப் பக்கம் முழுக்க அவரசரகால நிலமை அறிவித்து இருக்கின்றார்கள்.

எண்ணெய் அடியில் போய் தங்கிவிடும் என்று சொன்னதை விஞ்ஞானம் என்று எப்படிச் சொல்லுகின்றார்கள் என்று தெரியவில்லை........... இவர்கள் சொன்னபடியே நடந்திருந்தால், அது ஒரு மாயாஜால வித்தையே...................

சரக்குக்கப்பல் முதலாளி தன்னுடைய கப்பல் தாண்டதற்கு பயங்கரவாதமே காரணம் என்கின்றார். இவர் ஏற்கனவே அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டவர். இவரின் கப்பல் சிரியாவிற்கு போய் வந்து கொண்டிருந்தது.

விமானம் விழுந்ததிற்கு ரஷ்யாவின் ஏவுகணை எதிர்க்கும் தொழில்நுட்பமே காரணம் என்கின்றார்கள். ஆனால், நாங்களே எங்களின் சுயாதீன விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டு பிடிக்கின்றோம் என்கின்றார் புடின். அதற்கு முன் யாராவது அவசரப்பட்டு செய்திகள் போட்டால், அடிப்போம் என்கின்றார் அதிபர்....... 

கப்பலோ, விமானமோ இப்படி எல்லாவற்றையும் கருங்கடல், கஸ்பியன் என்று உங்களின் பகுதிகளிலேயே விழுத்தி, தாட்டுக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உலகம் என்றும் உங்களுக்கு நன்றியுடையதாக இருக்கும்.

அத்துடன் ஒரு நல்ல விறுவிறுப்பான படத்திற்கு கதையும் தயார்.......... யார் தயாரிப்பாளர், யார் இயக்குநர், யார் யார் நடிக்கின்றார்கள் என்று முடிவெடுத்தால், 2028 கோடைக்கு இந்தப்படம் ஹாலிவூட்டில் வெளியிடப்படும்...........

 

 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஜர்பைஜான் விமானம் விழுந்து நொருங்கியமைக்கு ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதமேகாரணம் என்பதற்கான அறிகுறிகள் -அமெரிக்க அதிகாரி

27 Dec, 2024 | 12:03 PM

image

ரஸ்யாவின் விமானஎதிர்ப்பு ஆயுதம் தாக்கியதன் காரணமாகவே அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது என்பது ஆரம்பகட்ட அறிகுறிகள் மூலம் தெரியவருவதாக அமெரிக்க அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

விமானத்தின் கறுப்புபெட்டியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகஅஜள் இதன் மூலம் விமானவிபத்திற்கான காரணம் தெரியவரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையிலேயே அமெரிக்க அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜான எயர்லைன்ஸ் விமானத்தின்  ஜே2 8243 விமானத்தை ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதம் தாக்கியமைக்கான அறிகுறிகள் உள்ளன என  அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

38 பேரை பலிகொண்ட இந்த விமானவிபத்து குறித்து அமெரிக்கா முதல்தடவையாக தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது மதிப்பீடு உறுதியானால் இது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் அல்லது தாக்குதலாக அமையலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்,

ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என  உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம்ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான  உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும்  பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார்.

அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்- விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன
 

https://www.virakesari.lk/article/202278

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 விமானம், புதன்கிழமை தெற்கு ரஷ்யாவில் உள்ள செச்சினியா பிராந்தியத்தின் தலைநகரான க்ரோஸ்னிக்கு செல்லும் போது கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.

இந்த பேரழிவு குறித்த தனது ஆய்வின் கண்டுபிடிப்புகளை அசர்பைஜான் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

எனினும், விசாரணையை நன்கு அறிந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தான் விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வியாழனன்று தெரிவித்துள்ளன.

விமானம் ரஷ்ய நகரான க்ரோஸ்னியை (Grozny) அணுகும் போது மின்னணு போர்முறை அமைப்புகளால் விமானத்தின் தகவல் தொடர்புகள் முடங்கிய பின்னர், ரஷ்ய ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் ஒரு ஆதாரத்தை மேற்கொள்ளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், விமானம் மீதான தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கவில்லை.

அதேநேரம், விமானிகள் அவசரமாக தரையிறங்குமாறு கோரியதையடுத்து, விமானம் ரஷ்யாவில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக காஸ்பியன் கடலின் குறுக்கே அக்டாவ் நோக்கி பறக்குமாறும் இயக்கப்பட்டதாக அரசாங்க ஆதாரங்களை யூரோநியூஸ் மேற்கோளிட்டுள்ளது.

இதனிடையே, பறவைகள் கூட்டத்தைத் தாக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பகம் முதலில் கூறியது.

அண்மைய வாரங்களில் உக்ரேனிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் வடக்கு காகசஸின் ஒரு பகுதியின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தது.

மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை காலை பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.

சமூக ஊடகங்களில் தாக்கப்பட்ட விமானத்தின் காட்சிகள் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பு செங்குத்தான இறங்குவதைக் காட்டியது மற்றும் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.

Image

விபத்திற்கான காரணம் தொடர்பான ஊகங்களுக்கு எதிராக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், விசாரணையின் முடிவுகளுக்கு முன் இவ்வாறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வெளியிடுவது தவறானது என்று சுட்டிக்காட்டியது.

எவ்வாறெனினும், அசர்பைஜான் வியாழன் அன்று விபத்தில் பலியானவர்களுக்கு துக்க தினத்தை அனுசரித்தது.

முன்னாள் சோவியத் நாட்டில் வசிப்பவர்கள் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு, நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

https://athavannews.com/2024/1414297

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்து நொருங்குவதற்கு முன்னர் ஏதோ மோதியது போன்ற பாரிய சத்தங்கள் கேட்டன- அஜர்பைஜான் விமானத்தில் பயணித்தவர்கள்

28 DEC, 2024 | 09:33 AM
image
 

அஜர்பைஜான் எயர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் குரொஸ்னியை நெருங்கிக்கொண்டிருந்தவேளை ஏதோ மோதியது போன்ற ஒரு பாரிய சத்தத்தை கேட்டதாக விமானவிபத்தில் உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டுபயணிகளும் ஒரு விமானப்பணியாளரும் ரொய்ட்டருக்கு இதனை தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டாவு நகரில் தீப்பிடித்து எரிந்து விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் ரஸ்யாவின் தென்பகுதிக்கு அருகில் சென்ற பின்னர் தனது பயணப்பாதையை மாற்றியது.

தென்ரஸ்யாவிலேயே உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யா அதிகளவில் விமான எதிர்ப்பு தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது.

பாரிய சத்தத்தின் பின்னர் விமானம் விழப்போகின்றது என நான் நினைக்கின்றேன் என மருத்துவமனையிலிருந்த படி பயணிகளில் ஒருவரான சுபோன்குல் ரகிமோவ் தெரிவித்துள்ளார்.

பாரிய சத்தத்தை கேட்டவுடன் பிரார்த்தனையில் ஈடுபடதொடங்கினேன் என தெரிவித்துள்ள அவர் விமானம் ஏதோஒருவகையில் சேதமாக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை அது முன்னைய விமானமாகயிருந்தது மது அருந்திய விமானம்போலயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

நானும் பாரிய சத்தத்தை கேட்டேன் என மற்றுமொரு பயணியும் தெரிவித்துள்ளார்.

நான் மிகவும் அச்சமடைந்தேன்,என வபா ஷபனோவா ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.இரண்டாவது சத்தமும் கேட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/202344

  • கருத்துக்கள உறவுகள்

"புரின் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அசர்பைஜான் அதிபரிடம்" என்று கிரெம்ளின் அறிக்கை விட்டிருக்கிறது. ஆனால், "சுட்டு வீழ்த்தினோம்" என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லையாம்.

மறக்காமல் "உக்ரைனிய பயங்கரவாதிகளின் ட்ரோன்களுக்கெதிராக குறொஸ்னியில் வான்பாதுகாப்பு செயல்பட்டதால் இந்த நிலை!" என்று சுட்டியிருக்கிறாராம்!

இனி உலகெங்கும் பரந்து வாழும் "புரின் புரியன்மார்" மிகுதியைப் பார்த்துக் கொள்வர்😂!   

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் கழுத்துக்கான கயிறு இறுக்கமாகிறதா??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

புரின் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அசர்பைஜான் அதிபரிடம்" என்று கிரெம்ளின் அறிக்கை விட்டிருக்கிறது. ஆனால், "சுட்டு வீழ்த்தினோம்" என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லையாம்.

large.IMG_7949.jpeg.6d7c9acb0f5548c7de6d

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

புட்டினின் கழுத்துக்கான கயிறு இறுக்கமாகிறதா??

மேற்குலகு  புட்டின் பரவாயில்லை என நினைத்து கவலைப்படும் காலம் ஒரு நாள் வரும்.
சீனா எனும் இராட்சதனின் முகம் மேற்குலகிற்கு  போகப்போக தெரியவரும்.
சீனா கால் பதிக்காத நாடுகள் உலகில் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

ரஷ்யா அப்படியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளி பெரிய வீரன் தான். பயணிகள் விமானத்தை சுட்டுவிழுத்தி பயணிகளைக் காடாத்திய செத்தகிளி பெரிய வீரன் தான். வெய்ட் பண்ணுங்க ஜனவரி 20 மட்டும். நம்மாள் வந்தாப்பிறகு செத்தகிளிக்கு இருக்கு சீவிச் சிங்காரம்!😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டிஸ்காரனும் அமெரிக்கனும் இந்த உலகிற்கு செய்த நாச வேலைகளைப்போல் ரஷ்யன் செய்யவில்லை.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.