Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

திபெத்திய பீடபூமியின் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணைத் திட்டமானது இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

திபெத்தில் உருவாகும் நதி யார்லுங் சாங்போ. இந்த நதி திபெத்தை விட்டு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்காளதேசத்திலும் பாயும் போது பிரம்மபுத்திரா நதியாக மாறுகிறது. இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட சீனா முயற்சித்து வருகிறது.

முன்னதாக, 2020ம் ஆண்டில், சீனாவில் உள்ள பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் என்ற நிறுவனம், தன்னாட்சி பெற்ற திபெத்தில் உற்பத்தியாகும் யார்லுங் சாங்போ ஆற்றில் அணை கட்டினால் ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் யார்லுங் சாங்போ ஆற்றில் அணைகட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணையானது மத்திய சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய த்ரீ கோர்ஜஸ் அணையின் 88.2 பில்லியன் kWh வடிவமைக்கப்பட்ட கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இத்திட்டத்தின் மூலம் சீனாவின் கார்பன் உச்சம் மற்றும் கார்பன் நடுநிலைமை இலக்குகளை அடைவதிலும், பொறியியல் போன்ற தொடர்புடைய தொழில்களை அதிகப்படுத்துவதிலும், திபெத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அணை கட்டுவதற்காக 254.2 பில்லியன் யுவான் ($34.83 பில்லியன்) செலவாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அணை கட்டும் திட்டத்தை திபெத்தில் அமல்படுத்தினால் எத்தனை பேரை இடமாற்றம் செய்யும் என்பதையும், பீடபூமியில் உள்ள பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

ஆனால், திபெத்தில் கட்டப்பட உள்ள அணையினால் சுற்றுச்சூழலோ அல்லது கீழ்நிலை நீர் விநியோகத்திலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இது பெரும் தலைவலியை உண்டு பண்ணும். இந்த அணைக்கட்டுவதால் ஆற்றின் ஓட்டம் மற்றும் அதன் போக்கும் மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

https://thinakkural.lk/article/314181

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம் இண்டியன்ஸ். சீனா அணைகட்டுவதைப் பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு நிக்கவேண்டியதுதான்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனா இந்தியாவிற்கு ஒரு இராட்சத 'நீர்க்குண்டு' தயார் செய்கின்றது என்று ஒரு செய்தியில் இருந்தது.......... இந்தப் பெரிய அணை உடைவதை நினைத்துப் பார்த்தாலே திகிலாகத்தான் இருக்கின்றது..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீன செய்கிறது தான், அனால், அது இணங்கிய UN இன் தீர்மானமான, ஆறு மற்ற நாடுகளுக்கும் பங்கு இருந்தால் அதை மதித்து செயற்றப்பட வேண்டும் என்றதை.   

மற்றது நீர் மின் ஆணை என்றால், ஆம் ஓடுவது ஒரு இடத்தில சேமிக்கப்பட்டு பின் அது திறந்து விடப்படும், மின்பிறப்பாக்கியை இயக்க  .


அணைக்கட்டு நிரம்பும் வரையிலும் தண்ணீர்  ஓட்டம் குறையும் பின்பு, வழமைக்கு திரும்பும் 

 பிரமபுத்திராவில், அதற்கு ஒப்பனை பரிமாணத்தில் கிளைகளும் இருக்கிறது.

சீன எங்கு காட்டுகிறது என்பதைப்பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kadancha said:

 

சீன எங்கு காட்டுகிறது என்பதைப்பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

https://minnambalam.com/india-news/how-can-chinas-new-super-dam-to-be-built-in-tibet/

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிந்தியா இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் தான் வல்லரசு.😋

சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அல்ல... :cool:

மாலை தீவுகூட கிந்தியாவை மதிப்பதில்லை. 😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஆறுகள் மற்றும் நீர்வளங்களைப் பயன்படுத்துவதில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்கள் சில முக்கியக் கோட்பாடுகளை வலியுறுத்துகின்றன:

 

1. சம மற்றும் நியாயமான பயன்பாடு:

பகிரப்பட்ட நீர்வளங்களை நாடுகள் சமமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும். இதில் சமூக மற்றும் பொருளாதார தேவைகள், மக்கள் தொகை, மாற்று வளங்களின் கிடைப்புகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.

 

2. முக்கியமான சேதத்தைத் தவிர்த்தல்:

ஒரு நாடு தனது நடவடிக்கைகள் மூலம் மற்ற நாடுகளுக்கு முக்கியமான சேதத்தை ஏற்படுத்தக்கூடாது. எந்த சேதமும் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஆலோசித்து தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.

 

3. ஒத்துழைப்பு கடமை:

பகிரப்பட்ட ஆறுகளின் மேலாண்மையில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பகிர்ந்து, ஆலோசித்து, திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

 

4. திட்ட அறிவிப்பு மற்றும் ஆலோசனை:

புதிய அணைகள் போன்ற திட்டங்களை முன்னெடுக்க முனைந்தால், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

 

இந்த கோட்பாடுகள், 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “சர்வதேச நீர்வழிகளின் நவீன நவீனமற்ற பயன்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தம்” (UN Watercourses Convention) மற்றும் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “நாடுகள் கடந்து செல்லும் நீர்வழிகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த ஐரோப்பிய பொருளாதார ஆணைய ஒப்பந்தம்” (UNECE Water Convention) ஆகியவற்றில் உள்ளன.

 

இந்த ஒப்பந்தங்கள், நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நீர்வளங்களை சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

(ChatGPT யைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. குறைபாடுகளைப் பொறுத்தருள்வீர்  😁)

நீர்ப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பாக UN ல் தெளிவான வரையறை இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது என்பதைக் கவனிக்க. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு வகையில் தமிழருக்கு மகாவலி திட்டம் போல் திபெத்திய மக்களுக்கு??

சீனா வைக்கும் ஆப்பு???



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த சிறிதரன் தலைவராக தேர்வான தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக அல்லவா யாழில் செய்திகள் பகிரப் பட்டன? இந்த முறைகேடான தேர்வைப் பற்றி சிறியர் சொல்ல எதுவும் இல்லையாமா? சுமந்திரனும் இந்த தேர்தலில் நேர்மையில்லாமல் நடந்து கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முறைகேடான வாக்குகளால் கிடைத்த பதவியை சிறிதரன் இன்னும் முறையானதாகக் கருதுகிறாரா😂?  
    • "புரின் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அசர்பைஜான் அதிபரிடம்" என்று கிரெம்ளின் அறிக்கை விட்டிருக்கிறது. ஆனால், "சுட்டு வீழ்த்தினோம்" என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லையாம். மறக்காமல் "உக்ரைனிய பயங்கரவாதிகளின் ட்ரோன்களுக்கெதிராக குறொஸ்னியில் வான்பாதுகாப்பு செயல்பட்டதால் இந்த நிலை!" என்று சுட்டியிருக்கிறாராம்! இனி உலகெங்கும் பரந்து வாழும் "புரின் புரியன்மார்" மிகுதியைப் பார்த்துக் கொள்வர்😂!   
    • கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து? கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 28 டிசம்பர் 2024, 05:23 GMT   பருவமழைக் காலத்தின் ஓர் அதிகாலை வேளை அது. வேளச்சேரி ரயில் நிலையத்திற்குப் பின்புறத்திலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அமைதியும் பசுமையும் நிறைந்த சாலை. நான்கு அடி எடுத்து வைப்பதற்குள் நான்கைந்து நத்தைகளைப் பார்த்துவிடலாம். சாலையோரத்தில் முளைத்திருந்த காக்காமூக்கு, வெள்ளெருக்கு, எருக்கு ஆகிய செடிகளில் கிளைக்கு ஏழெட்டு நத்தைகளைப் பார்க்கலாம். அவற்றின் பெயர் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை (Giant East African Snail). இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிரியாகக் கருதப்படுகின்ற இந்த நத்தை இனம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 500 முட்டைகளுக்கு மேல் இடக்கூடிய இந்த நத்தையினம் இந்தியாவுக்குள் வந்தது எப்படி? இதனால் ஏற்படும் அபாயங்கள் என்ன? இவற்றைக் கட்டுப்படுத்துவது இன்னும் சவாலாகவே இருப்பது ஏன்? பெண் சிங்கம்தான் வேட்டையாடும் என்றால் ஆண் சிங்கம் என்ன செய்யும்? சிவிங்கிப்புலிகள் வந்தால் சிங்கங்களுக்காக காலி செய்த 1600 குடும்பங்களுக்கு என்ன பதில்? காட்டுயிர் விஞ்ஞானி ரவி செல்லம் இலைகளை தைத்து கூடு கட்டி விவசாயம் காக்கும் தையல்கார எறும்புகள் - எப்படி? இலைகளை தைத்து கூடு கட்டி விவசாயம் காக்கும் தையல்கார எறும்புகள் - எப்படி?   கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் இந்தியாவுக்கு வந்தது எப்படி? தென்னிந்தியாவில் காணப்படும் பிற நத்தைகளைவிட அளவில் பெரிதாக வளரக்கூடிய இவை கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. பிரிட்டிஷ் மெல்லுடலி ஆய்வாளரான வில்லியம் ஹென்றி பென்சன், 19ஆம் நூற்றாண்டில் இரண்டு கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்கிறது ஓர் ஆய்வு. மொரிஷியஸில் இருந்து அவர் கொண்டு வந்த அந்த ஒரு ஜோடி நத்தைகளை, திரும்பிச் செல்லும்போது, தனது நண்பரும் அண்டை வீட்டில் வாழ்ந்தவருமான ஒருவரிடம் கொடுத்துச் சென்றார். அந்த நபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட நத்தைகளை கொல்கத்தாவில் இருந்த தனது வீட்டுத் தோட்டத்தில் திறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் இந்த நத்தை இனம் பல்கிப் பெருகிவிட்டதாக 1858இல் பென்சன் பதிவு செய்துள்ளார். இப்படித்தான் இந்தியாவுக்குள் இந்த நத்தைகளின் பெருக்கம் தொடங்கியது. அதற்குப் பிறகு, வரலாற்றில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நத்தை இனங்களில் இதுவும் ஒன்று. இவை இந்தியா முழுக்கப் பரவியதில் மனிதர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, பென்சன் விட்டுச் சென்ற நத்தைகள் கொல்கத்தாவில் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின. கொல்கத்தாவில் இருந்து, 1960களில் செல்லப் பிராணியாக வளர்க்கும் ஆசையில் கொல்லர் ஒருவர் அதை பிகாரில் உள்ள தனது ஊருக்குக் கொண்டு சென்றார். பிறகு அவை பிகாரின் அண்டை மாநிலங்களுக்கும் பரவின. அதேபோல், விவசாயி ஒருவர் அவற்றைப் பிடித்து ஆந்திர பிரதேசத்தின் அரக்குப் பள்ளத்தாக்கில் அவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு தோட்டத்தில் 1996ஆம் ஆண்டு கொண்டு வந்து விட்டார். இப்படியாக நாடு முழுவதும் பரவிய கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள், 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின், உலகளவில் ஆபத்தான 100 ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலிலும் உள்ளது. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 டைட்டானிக் கப்பலை சுற்றி ஆழ்கடலில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளர்களின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 அளவுகடந்த இனப்பெருக்கம் பிற நத்தை இனங்களைப் போலவே, இவையும் இருபாலுயிரி பிரிவைச் சேர்ந்தவைதான். அதாவது, ஒரே நத்தையில் ஆண், பெண் இரு பாலுக்குமான இனப்பெருக்க உறுப்புகளும் இருக்கும். இதன்மூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இரண்டு நத்தைகளுமே கரு உருவாக விந்தணுக்களைக் கொடுப்பதோடு, விந்தணுக்களைப் பெற்றுத் தங்களது முட்டையில் கருவை உருவாக்கவும் செய்கின்றன. இத்தகைய உயிரினங்களை இருபாலுயிரி என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். ஆனால், இது ஏன் ஆக்கிரமிப்பு உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? அதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் ஆக்கிரமிப்பு உயிரினம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலியல் அமைப்புக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினம், அங்கு ஊடுருவி வேகமாகப் பரவி, அந்தப் பகுதியுடன் இயற்கைத் தொடர்பைக் கொண்டிருக்கும் பிற உயிரினங்களின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறும்போது, அந்த உயிரினம் ஆக்கிரமிப்பு உயிரினமாகக் கருதப்படுகிறது. கப்பல் போக்குவரத்து, வணிகம், அலங்காரம், வளர்ப்பு போன்ற காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் ஒரு புதிய வாழ்விடத்திற்குள் நுழையும் உயிரினங்கள் அல்லது தாவரங்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறலாம். கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளைப் பொறுத்தவரை, பென்சன் இந்தியாவுக்கு கொண்டு வந்த ஒரு ஜோடி நத்தைகள், இந்திய நிலப்பரப்பை அவை ஆக்கிரமிக்கத் தொடக்கப் புள்ளியாக அமைந்தன. இந்த நத்தைகள், உள்ளூர் நத்தை இனங்களைவிட மிக வேகமாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றைவிட அதிவிரைவாகப் பரவி வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நத்தை, ஓர் ஆண்டில் 5 முதல் 6 முட்டைத் தொகுப்புகளை இடுகின்றன. ஒரு தொகுப்பில் 150 முட்டைகள் வரை இருக்கும். இதன்படி, ஓர் ஆண்டில் அவை சுமார் 500 முட்டைகள் வரை இடுவதாகக் கூறுகிறார் பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளரும் மெல்லுடலிகள் வல்லுநருமான என்.ஏ.அரவிந்த். அதோடு உணவுச் சங்கிலியில், ஒவ்வோர் உயிரினத்திற்கும் அவற்றை உண்ணக்கூடிய வேட்டையாடி உயிரினம் இருக்கும். ஆனால், "இந்த நத்தைகளுக்கு இந்திய நிலப்பரப்பில் வேட்டையாடி எதுவும் இல்லாததும் இவை பெருகி சூழலியல் சமநிலையைக் குலைக்கக் காரணமாக அமைகின்றன" என்கிறார் அவர். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கிறதா? இந்த நத்தைகள் விவசாயத்திற்குப் பெரும் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த். "கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் எதை வேண்டுமானாலும் சாப்பிடும். புதர்கள், செடிகள் என இயற்கையில் வளர்ந்திருக்கும் தாவரங்களில் தொடங்கி, வாழை, பாகற்காய், வெண்டைக்காய், தக்காளி, உருளைக் கிழங்கு, பசலைக் கீரை, கொத்தமல்லி எனப் பல்வகை பயிர்ச் செடிகள் உள்பட அனைத்தையுமே சாப்பிடும்." தாவரங்கள் மட்டுமின்றி இறந்த உயிரினங்களையும் அவை சாப்பிடுவதாகக் கூறினார் அரவிந்த். இந்த நத்தை இனம், "அளவில் சுமார் 15 செ.மீ வரைக்கும் வளரக்கூடியவை." கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில், மதுரை மாவட்டத்திலுள்ள பரவை என்ற பகுதியில் வாழைத் தோட்டங்களில் பெருந்திரளாகப் பரவிய இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளால் பெருமளவிலான வாழை உற்பத்தி அழிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இவை கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் மத்தியில் முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் போன்ற செடிகளின் மீது பரவி முற்றிலுமாக அழித்துவிடுவதால், பெருமளவிலான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த நத்தைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவது சிறு, குறு விவசாயிகளே என்கிறார் முனைவர் அரவிந்த். "ஐம்பது ஏக்கர், நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளைவிட, ஒன்றிரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளே இதனால் அதிக இழப்புகளைச் சந்திக்கிறார்கள். ஏனெனில், பெருவிவசாயிகளால் ஒரு ஏக்கர் வாழை உற்பத்தியில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால், அந்த ஒரு ஏக்கர் மட்டுமே இருக்கும் விவசாயிக்கு, தனது மொத்த உற்பத்தியுமே வீணாகும்போது இழப்பின் வீரியம் பெரிதாக இருக்கும்," என்கிறார் அவர். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?14 டிசம்பர் 2024 சூழலியல் சமநிலையை எவ்வாறு குலைக்கிறது? இவற்றின் வாழ்வியல் குறித்து விளக்கிய முனைவர் அரவிந்த், குளிர்ச்சியான பருவநிலையும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்போது மட்டுமே இவை நிலத்தின் மேல்புறத்தில் நடமாடுவதாகக் கூறினார். அதுதவிர அனைத்து நேரங்களிலும் நிலத்திற்கு அடியிலேயே அவை வாழ்கின்றன. இவை அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதீதமாகப் பெருகியும் வருவதால், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பூர்வீகமாக வாழும் மற்ற நத்தை இனங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த். அதோடு இந்த நத்தைகள் மிகத் தீவிரமாகச் சாப்பிடுகின்றன. பொதுவாக, ஒரு நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும் அங்குள்ள தாவரங்களுக்கும் இடையே ஓர் இயற்கை உறவு காணப்படும். அவை ஒன்றிணைந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், ஓர் ஒத்திசைவு காணப்படும். ஆனால், புதிதாக ஊடுருவும் கிழக்கு ஆப்பிரிக்க நத்தையைப் போன்ற உயிரினங்களுக்கும் அவற்றுக்கும் இடையே எந்தவித ஒத்திசைவும் இருக்காது. அதனால், இவற்றின் வேகத்திற்கும் பசிக்கும் உள்ளூர்த் தாவரங்கள் மற்றும் உயிரினங்களால் ஈடுகொடுக்க இயலாது. இதன் விளைவாக, மற்ற நத்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும், அது சில நேரங்களில் இன அழிப்புக்குக்கூட வித்திடும் என்கிறார் அரவிந்த். இந்த நத்தைகளின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றின் நடத்தைகளைக் கண்காணித்துள்ளேன். பெரும்பாலும், மாலை அந்தி சாயும் நேரத்தில் இருந்து காலையில் அதிகபட்சமாக 7 மணி வரை அவற்றின் நடமாட்டத்தைக் காண முடியும். இலைகள், பழங்கள், விதைகள் என அவை பாரபட்சமின்றிச் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். ஒருமுறை எருக்கஞ்செடியின் அடித்தண்டு முதல் நுனிப்பகுதி வரை நிறைந்திருந்த நத்தைகளை எண்ணிப் பார்த்தபோது கிட்டத்தட்ட 30 நத்தைகள் இருந்தன. இவை மழைக்காலங்களில் ஈரப்பதம் நிறைந்து காணப்படும்போது அதிகம் தென்படும். பிற காலங்களில் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக நிலத்தடியில் சென்றுவிடுகின்றன. மழைக்காலங்களில்கூட இரவு நேரங்களில் வெளியே நடமாடும் இவை, பகலில் நிலத்தடியில் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் தேடிச் சென்றுவிடுவதாகக் கூறுகிறார் அரவிந்த். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதில் உள்ள சவால் என்ன? இந்த நத்தைகளின் தாயகமாகக் கருதப்படும் புருண்டி, எத்தியோப்பியா, மொரிஷியஸ், கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றை வேட்டையாடிச் சாப்பிடக்கூடிய நத்தைகள், பறவைகள், தட்டைப்புழுக்கள் (Flatworms) இருக்கின்றன. ''ஆனால், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவற்றைச் சாப்பிடக்கூடிய வேட்டையாடிகளே இல்லை. இதனால் அவை பல்கிப் பெருகுகின்றன. உதாரணமாக இந்திய நிலப்பரப்பை எடுத்துக்கொண்டால், இங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துக்கும் இடையே இயற்கையாகவே ஓர் உறவு உருவாகியிருக்கும். இதற்கிடையே ஊடுருவும் உயிரினத்திற்கும் அதற்கும் தொடர்பிருக்காது. இந்திய நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள் எதுவும் அவற்றைச் சாப்பிட விரும்பவில்லை. சொல்லப்போனால், இந்த நத்தைகளை அவை ஓர் உணவாகவே கருதவில்லை. இது இவற்றுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டது." என்கிறார் அரவிந்த் "ஆக உணவுக்குப் பஞ்சமில்லை, வாழ்விடத்திற்குக் குறைவில்லை, அபாயங்கள் ஏதுமில்லை. இத்தகைய சொர்க்கபுரியைப் போன்றதொரு சூழலில் எந்தவோர் உயிரினமும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குப் பெருகவே செய்யும். அதுதான் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் விஷயத்திலும் நடந்துள்ளது.'' என்கிறார் அவர். ஹவாய் தீவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றை அழிப்பதற்காக, ரோஸி வுல்ஃப் நத்தை என்ற வேட்டையாடி நத்தையை அறிமுகம் செய்தனர். ஆனால், "அவை கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை மட்டுமின்றி உள்ளூர் நத்தைகளையும் சாப்பிடத் தொடங்கியதால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டன," என்கிறார் அரவிந்த். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 இதன் பரவலைத் தடுக்க வழியே இல்லையா? கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளின் பரவலைத் தடுக்க முனைவர் அரவிந்த் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். "பீருடன் வெந்நிலா எசென்ஸ் கலந்து அல்லது அழுகிய வாழைப்பழங்களை ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட வேண்டும். மாலை வேளையில் சீரான இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், நத்தைகள் அதை நோக்கிப் படையெடுத்து இருப்பதைக் காண முடியும்," என்கிறார் அவர். அப்படிக் கூடும் நத்தைகளில் உள்ளூர் நத்தைகளும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றைக் கவனமாகப் பிரித்து எடுத்துவிட்டு, ஆப்பிரிக்க நத்தைகளை உப்புநீரில் போட்டால் அவை இறந்துவிடும். ஆனால், இந்தச் செயல்முறையை அனுதினமும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அரவிந்த். "மொத்தமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளே இல்லை என உறுதியாகத் தெரியும் வரை இதைச் செய்ய வேண்டும்." அவரது கூற்றுப்படி, ஒருவேளை இரண்டு நத்தைகள் இதிலிருந்து தப்பித்தாலும், அவை மீண்டும் பல்கிப் பெருகிவிடும். ஏனெனில், "இப்போது நாடு முழுக்க சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்த உயிரினம், ஆரம்பத்தில் இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தபோது அவற்றின் எண்ணிக்கை வெறும் இரண்டுதானே." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr56zdq83m1o
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.