Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீமான் - வருண்குமார்

பட மூலாதாரம்,SEEMAN/VARUNKUMARIPS/X

படக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை' என சீமான் கூறுகிறார்.

தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் எனக் கோரி அவதூறு வழக்கு ஒன்றையும் வருண்குமார் தொடர்ந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி சரக டிஐஜி-க்கும் இடையில் என்ன மோதல்? பிரச்னை தொடர்வது ஏன்?

 

வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார், சீமானின் அறிக்கை மற்றும் காணொளிகள் என ஒன்பது ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சீமான் மீது சில விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் சாதிரீதியாக செயல்படுவதாகக் கூறியும் என் குடும்பப் பெண்களை மார்பிங் செய்தும் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டுள்ளனர். ஆனால், அதை அவரது கட்சியினர் செய்யவில்லை என சீமான் கூறுகிறார். எனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைதான நபர்கள், அவரது கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்" என அவர் கூறினார்.

"நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது நான் எடுத்த நடவடிக்கைக்கு என் பெற்றோரும் மனைவியும் என்ன செய்தார்கள்? ஓய்வு பெற்ற பிறகு பார்த்துக் கொள்கிறேன் என சீமான் கூறுகிறார். இது மிரட்டல் தானே?" எனவும் வருண்குமார் கேள்வி எழுப்பினார்.

மேலும், பிரச்னைக்கு நடுவில் தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது அனுப்பிய சீமான், தனி காரில் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியதாகவும் வருண்குமார் குறிப்பிட்டார்.

வருண்குமார் பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சீமான், "தன்னுடைய பரம்பரையில் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் யாருக்கும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

சென்னையில் செவ்வாய் அன்று (டிசம்பர் 31) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தவறு செய்தது அவர்தான். அவர் ஏதோ காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சாதாரண டிஐஜியாக இருக்கிறார். அவர் டிஜிபியாக கூட வரட்டும். அதனால் எங்களுக்கு என்ன? அவர்தான் அந்த தொழிலதிபரை அனுப்பினார்" எனத் தெரிவித்தார்.

தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக வருண்குமார் கூறியுள்ள விமர்சனத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவதூறு செய்வதை நாம் தமிழர் ஆதரிப்பதில்லை. அவ்வாறு செயல்படும் கட்சியினர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக சீமான்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என அவர் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்

பட மூலாதாரம்,BAKKIYARASAN/X

படக்குறிப்பு, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவதூறு செய்வதை கட்சி ஆதரிப்பதில்லை என நாம் தமிழரின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறுகிறார்

பிரச்னை எங்கே தொடங்கியது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் (ஜூலை மாதம்) பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவர் இழிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, தி.மு.க நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தென்காசியில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட அவர் மீது, பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் உள்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அடுத்து வந்த நாட்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குறித்து சீமான் பேசியதாக சில தனிப்பட்ட ஆடியோ பதிவுகள் இணையதளத்தில் வெளியானது. இதன் பின்னணியில் திருச்சி எஸ்.பி., வருண்குமார் (தற்போது திருச்சி சரக டிஐஜி) உள்ளதாக சீமான் குற்றம் சுமத்தினார்.

சாட்டை துரைமுருகன்

பட மூலாதாரம்,@SAATTAIDURAI

படக்குறிப்பு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழரின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இழிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது

எக்ஸ் தளத்தில் மோதல்

சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்தபோது, அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த ஆடியோக்களை பொதுவெளியில் பரப்பியதாக சீமான் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "ஓர் அதிகாரியை எஸ்.பியாக வைத்திருக்கிறீர்கள். அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். எங்கள் மீது அவருக்கு வெறுப்பு உள்ளது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், "துரைமுருகன் மீது வழக்குப் போட்டது குறித்துக் கேட்டால் மேலிடம் அழுத்தம் என்கிறார். இன்னும் எத்தனை நாள் மேலிட ஆதரவில் இருப்பீர்கள்?" என வருண்குமாரை நோக்கி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சில சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு சீமான் விமர்சித்தார்.

இதற்கு தனது தனது எக்ஸ் பக்கத்தில் பாரதியாரின், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாடலை வருண்குமார் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிய வீடியோவை இணைத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் சீமான் விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் தனது வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சீமானுக்கு வருண்குமார் அனுப்பினார். அதை தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார்.

அந்தப் பதிவில், 'சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பொதுவெளியில் சீமான் பேசும் பேச்சுக்களை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.

திருச்சி எஸ்.பி வருண்குமாரின் எக்ஸ் தள பதிவுகள்

பட மூலாதாரம்,VARUNKUMARIPS/X

படக்குறிப்பு, வருண்குமாரின் எக்ஸ் தள பதிவுகள்

பிபிசி தமிழுக்கு சீமான் சொன்ன விளக்கம்

வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் பிபிசி தமிழிடம் பேசிய சீமான், "எனக்கு எந்தவகையிலும் அவர் எதிரி அல்ல. ஐ.பி.எஸ்., படித்தால் அதற்குரிய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தி.மு.க தலைமையிடம் நற்பெயரை பெறும் நோக்கில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன" என்றார்.

"துரைமுருகனை கைது செய்த இரண்டு முறையும் செல்போன்களை பறித்துள்ளனர். அந்த செல்போனில் உள்ள உரையாடல்களை எடுப்பதுதான் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியின் வேலையா?" என சீமான் கேள்வி எழுப்பினார்.

"என்னுடைய கட்சிக்காரர்களிடம் நான் பேசுவதில் இவருக்கு என்ன பிரச்னை? துரைமுருகனின் செல்போனில் இருந்து ஆடியோவை எடுத்து வெளியில் கசியவிட்டதே வருண்குமார் தான்" எனக் கூறினார்.

வழக்கறிஞர் நோட்டீஸை வருண்குமார் அனுப்பியது குறித்து கேட்டபோது, அதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளதாக சீமான் தெரிவித்தார்.

சீமான்

பட மூலாதாரம்,SEEMAN/X

படக்குறிப்பு, திமுக தலைமையிடம் நற்பெயரை பெறும் நோக்கில் வருண்குமாரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்கிறார் சீமான்

சண்டிகர் மாநாடு சர்ச்சை

இதன்பிறகு, சமூக வலைதளங்களில் வருண்குமாருக்கு எதிராக பதிவிடத் தூண்டியதாக சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 22 பேர் மீது திருச்சி தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்பிறகு சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படையான விமர்சனத்தை வருண்குமார் முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், "நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி, அது தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று. அக்கட்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர்." என்றார். அக்கட்சியினரின் சைபர் குற்றங்களால் தானும் தன் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தன் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை மார்பிங் செய்து பொதுவெளியில் நாம் தமிழர் கட்சியினர் பரப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

வருண்குமார்

பட மூலாதாரம்,VARUNKUMARIPS/X

படக்குறிப்பு, சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படையான விமர்சனத்தை வருண்குமார் முன்வைத்தார்

'மோதிப் பார்த்துவிடுவோம்'- சீமான்

இதற்குப் பதில் அளித்த சீமான், "இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக இந்தக் கட்சியை நடத்துகிறோம். தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் உள்ளது. திடீரென பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என்றால் இவர் தான் நாட்டை ஆள்கிறாரே?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், "பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவில் இவர் பேசியது மட்டும் பொதுவெளியில் வருவது எப்படி? மோதுவோம் என்றாகிவிட்டது, மோதிப் பார்த்துவிடுவோம்" என்றார்.

இந்த சூழலில் தொழிலதிபர் மூலமாக தன்னைச் சந்திக்க சீமான் தூது அனுப்பியதாக செய்தியாளர்களிடம் வருண்குமார் கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியினர் மீது திருச்சி சரக டிஐஜி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சீமானிடம் தற்போது விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை.

இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி வருண்குமாரிடம் விளக்கம் கேட்பதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் அழைப்பை ஏற்காததால் வாட்ஸ்ஆப் மூலமாக விளக்கம் கேட்டோம்.

"எது குறித்து?" எனக் கேள்வி எழுப்பிய வருண்குமார், மேற்கொண்டு பதில் அளிக்கவில்லை. அவர் பதில் அளிக்கும்பட்சத்தில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

வருண்குமார் பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சீமான், "தன்னுடைய பரம்பரையில் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் யாருக்கும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா!

பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம்.  மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை' என சீமான் கூறுகிறார்.

large.IMG_7973.jpeg.dc88304bd972febc9590

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா!

பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம்.  மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!

நான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை.

தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள்.

ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள்.

கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்?

தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக  நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த  நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, வாலி said:

அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா!

சீமானின் பெற்றோர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, வாலி said:

பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம்.

கருநாநிதி,எம்ஜிஆர்,ஸ்டாலின்,ஜெயலலிதா,உதயநிதி கதைகள் சொல்லவா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புலவர் said:

 

இந்த துக்கடா கேள்வி கேட்கிற பன்னாடை ஊடக இளைஞரை  என்ன செய்யலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2025 at 11:16, ஏராளன் said:

தொடர்ந்து சில சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு சீமான் விமர்சித்தார்.

நாறப்பயல்….

யார் மீதும் எப்படியும் விமர்சனம் வைக்கலாம்…

ஆனா இப்படி சாதியை இழுத்து பேசுபவர்களுக்கு நாக்கிலேயே சூடு வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பழைய வில்லுப் பாட்டு நகைச்சுவை (தங்கவேலுவோ யாரோ நடித்த படத்தில் இருந்து) 80 களில் ஒலிநாடாவாக உலாவந்தது. அதில் ஹீரோவைப் பற்றி (ஹிற்லர் மீசையுடன் பிறந்தார் எங்கள் ஹீரோ....) இப்படிச் சொல்வார்:

"ஒரு கையில் பென்சிலோடும், மறுகையில் அழிறப்பரோடும் பிறந்தவர், உடனே அழிறப்பரைத் துக்கிக் கடாசி விட்டாராம். ஏன் வீசினார்? தப்பா எழுதினாத் தானே அழிறப்பர் தேவை? ஹீரோ தப்பாவே எழுதமாட்டாரே??"😎

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் கறுப்புக் கண்ணாடிக் காரில் வருவதாகச் சொல்லியிருக்கின்றார்............ இவரும் கறுப்புக் கண்ணாடிக் காரில் வருவதாகச் சொல்லியிருக்கின்றார்.......... அப்புறம் என்ன பிரச்சனை.............

இருவரும் கார்களை பனையூர் பக்கமாக ஓட்டிக் கொண்டு போய், அப்படியே அந்தப் பக்கமாக ஒருவரை ஒருவர் மன்னித்து விடுங்கள்.......... இப்ப பனையூர் தான் ஹாட் & விவிஐபி ஸ்பாட்............

ஆனாலும், என்ன இருந்தாலும் வருண்குமார் இப்படி சொல்லியிருக்கக்கூடாது...........'அவரு மைக்கிற்கு முன்னாடி தான் புலி, மைக்கிற்கு பின்னாடி அவரு ஒரு எலி...............' என்று வருண் சீமானை வாரியிருக்கக்கூடாது................. இது ஒருவரின் தொழிலை, சீவனத்தை அழிப்பது போல...........😜.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

நாறப்பயல்….

யார் மீதும் எப்படியும் விமர்சனம் வைக்கலாம்…

ஆனா இப்படி சாதியை இழுத்து பேசுபவர்களுக்கு நாக்கிலேயே சூடு வைக்க வேண்டும்.

சாதிகள் இல்லையென்றால் தலித் கட்சிகள் எதற்கு? எல்லாவற்றையும் கலைத்து விட்டு தமிழர் என்ற ஒரு நிலைக்கு வரலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
 
 
471988314_513432198408770_76319908308817
 
 
471826783_513432245075432_58167597319359
 
 
 
ஒரு official officer அரசியல்வாதி போல மீடியாக்களை சந்திப்பது சட்டப்படி தவறு.
தற்போது அண்ணா பல்கலைகழக பாலியல் மற்றும் FIR விடயத்தில் மநாகர கமிசனர் அருண் அவர்கள் மீடியாக்களை சந்தித்தது தவறு என உயர்நீதிமன்றம் கடிமையாக கண்டித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இது ஒரு புறம் இருக்க,
எவ்வளவு காங்கிரசுக்கு பிஜேபிக்கும் தமிழகத்தில் அரசியல் சண்டைகள் அதிகாரிகளோடு சண்டைகள் சச்சரவு ஏற்பட்டு இருக்கிறது,
இதை போல திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வளவோ கீழ்த்தரமான மேடைப்பேச்சுகள் சண்டைகள் சச்சரவுகள் அதிகாரிகளோடு மோசமான வார்த்தைகளும் அதிகாரிகளை திமுக அதிமுக ஆட்சியாளர்கள் சட்டையை பிடித்து அடித்த விடயங்களும் இங்கேயும், வட நாட்டிலும் நடைபெற்று இருக்கிறது.
ஆனால் எந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல் கட்சித் தலைவர் மீது கிரிமினல் வழக்கு அதாவது தனி வழக்கு பிரைவேட் கேஸ் என்று கூறுவார்கள் / பெரும்பாலும் பதிவு செய்ய மாட்டார்கள் / அது அவர்களுக்கு அவமானம் ஏனென்று சொன்னால் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கக் கூடிய நபர்கள் நாசுக்காக விலகி சென்று விடுவார்கள்,
ஆனால் வருண் ஐபிஎஸ் க்கு செந்தமிழன் சீமான் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவு போட்ட உட்சபட்ச அதிகாரம் படைத்த திராவிட ஆட்சியாளர்கள் யார்?
திராவிட அதிகார மையம் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய சொல்லாமல், வருண் ஐபிஎஸ் சால் -நிச்சயமாக செய்ய முடியாது?
ஆனால் ஒன்று மற்றும் நிச்சயமாக நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிமுகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து ஜெயலலிதா பேச்சை கேட்டு ஆடிய டிஜிபி முத்து கருப்பன் மற்றும் அலெக்சாண்டர் அவர்களின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் கலைஞர் கருணாநிதி பேச்சைக் கேட்டு சர்வ அதிகாரத்தின் உச்ச பட்சம் ஆட்டம் போட்ட ஐஜி சாபர் சேட் என்ன ஆனார் ?
அதேபோல ராஜேஷ் தாஸ் IPS என்ன ஆனார், ?
அதேபோல அதிகாரம் மட்டத்தில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டு காவல்துறையின் அனைத்து அடியாள் வேலை செய்த என்கவுண்டர் (Special) வெள்ள துரை ஏடிஎஸ்பி கடைசி கட்டத்தில் என்ன ஆனார்,
இதே போல ஒவ்வொரு ஆட்சியாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்களுடைய அதிகாரத்திற்கு மயங்கி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு விளங்கும்....
நாங்கள் 2009 ஐஜி ஜாபர் சேட் காலத்திலிருந்து தமிழ் தேசிய அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்,
தமிழ் தேசிய அரசியலை முளையோடு கிள்ளி எரிகிற வேலையை கருணாநிதி அன்றே ஐஜிசாபர்செட் மூலம் செய்தார் ...
அதையெல்லாம் எடுத்து எறிந்து உண்மையும் நேர்மையுமாக மக்கள் முன் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் அவர்கள் தன்னுடைய குழந்தைகளையும் தன்னுடைய மனைவியையும் கொச்சையாக முகநூலில் பதிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.
அப்படி கொச்சயாக முகநூலில் எழுதுவது என்பது தவறுதான்...
தாங்கள் ஒரு அதிகாரி என்று மறந்து ஒரு அரசியல் கட்சித் தலைவர் போல செயல்பட்டால் இதுபோல விடயம் நடக்கும்.
அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும் அவரது தாய், தந்தை,அக்கா, மனைவி அத்தனை பேரையும் கடுமையாக மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கொச்சையாக மேடையிலும் மார்பிங் பண்ணி முகநூல் தளத்திலும் வெளியிட்டு பரப்பி வருகிறார்கள் தினம் தினம்.
என்ன செய்யலாம். ?
நீங்களும் தான் சம்பந்தமே இல்லாமல் தீரன் திருமுருகன் என்ற பெயரை நரி முருகன் என்று உங்கள் RMD காவல்துறையால் உருவாக்கிய ஐடிவிங்கில் பதிவு விட்டீர்கள்...
சட்டப்படி என்னோடு மோத முடியாமல் புறவழி வாசலில் என்னல்லாம் நீங்கள் வேலை செய்தீர்கள் என்று எமக்கு நன்றாக தெரியும் அதுவும் ராமநாதபுரம் பத்திரிகையாளர்களை அழைத்து என்னெல்லாம் நீங்கள் பேசினீர்கள் என்று எமக்கு தெரியும்..
சர்வ அதிகாரத்தையும் ஒருங்கிணைத்து என் மீது நீங்கள் திணித்தீர்கள் அடக்குமுறை செய்தீர்கள்,
அப்போது உங்களுக்காக என்னிடம் சில பத்திரிக்கையாளர்கள் சில சாதிய சங்கங்கள் என்னிடம் அவரோடு ஏன் மோதல் போக்கு நீங்கள் மோதுகிறீர்கள் அவர் எங்க ஆளு அதனால் அவரை கொஞ்சம் விட்டு விடுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்....!
சர்வ அதிகாரம் படைத்த வருண் ஐபிஎஸ் அவர்கள் அதிகாரமே இல்லாத எங்களிடத்தில் மோதுவது நியாயமா?
மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்
மக்கள் சக்திக்கு முன்னாடி நீங்கள் எல்லாம் ....
நீங்கள் அல்ல யாருமே ஒரு ஆள் கிடையாது,
செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டின் சொத்து அவருக்கு ஒன்று என்றால் அவர் கூப்பிடாமலே நான் வருவேன் சட்டப் பூர்வமாகவும் களத்துக்கும்.
போன உசுருதாண்டா அது 2009 லேயே போய்டுச்சு.
அன்புடன்
மக்கள் வழக்கறிஞர்
தமிழர் கட்சி.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ யாழ் களத்தில் கூட DMK தனது IT wing (retired) ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகத் தோன்றுகிறது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சாதிகள் இல்லையென்றால் தலித் கட்சிகள் எதற்கு? எல்லாவற்றையும் கலைத்து விட்டு தமிழர் என்ற ஒரு நிலைக்கு வரலாமே? 

ஆயிரம் ஆண்டுகாலமாக சாதியால் ஒதுக்கப்பட்டவன் - தனக்கென அடையாள அரசியல் செய்ய ஒரு கட்சியை ஸ்தாபிப்பது வேறு.

தனக்கு ஒருவர் மீது தனிப்பட்ட பகை என்பதால் அவரின் சாதியை இழுத்து கதைப்பது வேறு.

இரெண்டுக்குமான வித்தியாசம் ஒருவருக்கு புரியவில்லை என்றால் - unconscious bias அதாவது இச்சையின்றிய சார்பு-வாதம் போல, இச்சையின்றிய சாதியவாதத்தால் அவர்கள் அவதிபடுகிறார்களோ என நான் அஞ்சுவதுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

ஆயிரம் ஆண்டுகாலமாக சாதியால் ஒதுக்கப்பட்டவன் - தனக்கென அடையாள அரசியல் செய்ய ஒரு கட்சியை ஸ்தாபிப்பது வேறு.

ஆயிரம் ஆண்டுகளாக  சாதி பாதிப்பால் இருக்கிறவன்  அடையாள கட்சி வைத்திருந்தால்..... எதிரியும் தனக்கென ஒரு அடையாள கட்சி வைத்திருப்பான்.

முதலில் நான் திருந்த/ என் அடையாளத்தை அழிக்க வேண்டும். அதன் பின் எதிரியை எதிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கட்சியை பிரிவினைவாதக்கட்சி என்று சொல்லி வழக்குப் போட்டு அதை;தடை செய்யும் நோக்தை விட்டு விட்டுட காவல்துறை அதிகாரி தன்னுடைய கடமைககைளைச்; செய்ய வேண்டும் மாறாக திமுக கட்சிக்கு வேலை செய்யக் நகூடாது. போய் அந்த யார் அந்த சார் அவரைப் பிடிக்கிற வேலையைப் பார்க்கச் சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்

` ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு, சென்னை மாநகர கமிஷனர் அருண் விளக்கம் அளித்தபோதும், அ.தி.மு.க அதையே பேசிக்கொண்டிருப்பது அரசியல் நோக்கமாகப் பார்க்கப்படாதா?”

``பாலியல் துன்புறுத்தலின்போது, குற்றவாளியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது என்பதுதான் பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு. ஆனால், முழுமையாக விசாரணையை முடிக்காமலேயே, போன் ஃப்ளைட் மோடில் இருந்ததாகச் சொல்கிறார் கமிஷனர் அருண். ‘விசாரணை முடியட்டும்’ என்றுகூட பதில் சொல்லாமல், ‘இல்லை... இல்லை...’ எனத் தொடர்ந்து வலிய வந்து இவர்கள் மறுப்பதுதான் மர்மமாக இருக்கிறது. வேறொருவர் புகார் கொடுக்க வந்துவிடக் கூடாதென்று அரசும், அதிகார வர்க்கமும் கைகோத்துத்தான் எஃப்.ஐ.ஆரை லீக் செய்தார்களோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.”

முதலில் சம்பவம் நடந்த நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்குநிலையில் இருந்த மொபைல் போன்நம்பர்களை வவத்தே முதற்கட்டமாக சிலரைக்கைது செய்ததாக காவல்துறை சொன்னது.இப்பொழுது குற்றங்சாட்டப்பட்டவரின் போன் ஃப்ளைட் மோடில் இருந்ததாகச் சொல்கிறார் கமிஷனர். யாரைக் காப்பாற்ற இப்படிச் சொல்கிறார். வழக்கை திசை திருப்ப சீமான் விவகாரத்தை வேண்டும் என்றே கையில் எடுக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

“ ‘இந்த விவகாரத்தில் வேறு எந்தப் புகாரும் வரவில்லை’ என கமிஷனர் அருண் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாரே?”

``புகார் வரவில்லை எனச் சொல்ல அவர் எதற்கு... ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வேறு யாரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என விசாரணையை நீட்டித்திருக்க வேண்டியதுதானே அவரின் பணி... தோரணையான உடல்மொழியுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திய கமிஷனர் அருண், `வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், தைரியமாக வெளியே வாருங்கள். அடையாளம் வெளிவராமல் பாதுகாப்போம்’ என ஒரு வார்த்தை சொன்னாரா?

ஆளும் தரப்புடன் நெருக்கமாக இருப்பதோடு, அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடத்திலும் இருக்கும் குற்றவாளி ஞானசேகரன். ‘அவன் அன்றைக்குக் காலையில்தான் பிறந்தான்; உடனே பல்கலைக்குள் சென்று தவறு செய்தான்; பிடித்துவிட்டோம்’ என்பதுபோலக் கதை சொல்லிக்கொண்டிருப்பவர்கள், விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என எப்படி நம்புவது... உயர் நீதிமன்றமே காவல்துறையை நம்பாமல், விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருக்கும்போது, எங்களை நம்பச் சொல்வது வேடிக்கையாக இல்லையா!”

`அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துபவர்களைக் கைதுசெய்வதுதானே நடைமுறை... உடனே, ‘காவல்துறை குற்றவாளியைக் காப்பாற்றுகிறது…’ என்று சொல்வதா?”

`` `யார் அந்த சார்?’ என்ற போஸ்டரை அனுமதி வாங்காமல் ஒட்டிவிட்டால், அதற்காக வழக்குகள் பதிவதுதான் நடைமுறை. போஸ்டரைக் கிழிப்பது போலீஸின் வேலையா... அவதூறாகப் பேசினால், வழக்கு பதிவுசெய்யட்டும். ஊடகங்களில் பேசினால், அச்சுறுத்துவதா... எதிர்க்கட்சிகளின் செய்தி, மக்களை அடைந்துவிடக் கூடாதென போலீஸ் பதற்றமடையக் காரணம் என்ன என்பதே என் கேள்வி!”கல்யாணசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2025 at 00:55, goshan_che said:

இரெண்டுக்குமான வித்தியாசம் ஒருவருக்கு புரியவில்லை என்றால் - unconscious bias அதாவது இச்சையின்றிய சார்பு-வாதம் போல, இச்சையின்றிய சாதியவாதத்தால் அவர்கள் அவதிபடுகிறார்களோ என நான் அஞ்சுவதுண்டு.

👆👇

 

On 3/1/2025 at 01:06, குமாரசாமி said:

ஆயிரம் ஆண்டுகளாக  சாதி பாதிப்பால் இருக்கிறவன்  அடையாள கட்சி வைத்திருந்தால்..... எதிரியும் தனக்கென ஒரு அடையாள கட்சி வைத்திருப்பான்.

முதலில் நான் திருந்த/ என் அடையாளத்தை அழிக்க வேண்டும். அதன் பின் எதிரியை எதிர்க்க வேண்டும்.

உங்களுக்கும் பச்சை இட்டவருக்கும் - பதில் முன்பே எழுதப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

👆👇

 

உங்களுக்கும் பச்சை இட்டவருக்கும் - பதில் முன்பே எழுதப்பட்டு விட்டது.

எனக்கு பொலிஸ்ல இருந்து கூட உப்புடி காட்டமாய் கடிதங்கள் வந்ததில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புலவர் said:

வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், தைரியமாக வெளியே வாருங்கள். அடையாளம் வெளிவராமல் பாதுகாப்போம்’ என ஒரு வார்த்தை சொன்னாரா?

அவருக்கு அந்த தைரியம் இருக்கா? பாதிக்கப்ட்ட, முறைபாடளித்த பெண்ணின் எல்லா விபரங்களையும் வேண்டுமென்றே வெளியிட்டுவிட்டு, அது தொழில் நுட்ப்ப கோளாறு என எந்த வருத்தமும், மன்னிப்பும் இல்லாமல்,  தெனாவட்டாக கூறும் இவரால், உத்தரவாதம் கொடுக்க முடியுமா? யாராவது இவரை நம்பி முன்வருவார்களா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.