Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.

இன்று ரம்பின் புளோரிடா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கிறீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவதைப் பற்றி விபரமாக கூறினார்.

கனடாவையும் அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்தையும் வரவேற்றுக் கூறினார்.

நான் பதவி ஏற்பதற்கிடையில் கமாசால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாமல் மிகப் பெரிய அழிவு மத்திய கிழக்கில் நடக்கும் என்று பயமுறுத்தியுள்ளார்.

1959 ம் ஆண்டிற்குப் பின் அமெரிக்க வரைபடத்தில் மாற்றங்களைக் காணலாம்.

குறுகிய நேரத்தில் மிகப் பெரிய குண்டுகளைப் போட்டுள்ளார்.

பூட்டினுக்கு போட்டியாக ரம்பும் தொடங்கப் போகிறாரோ?

President-elect Donald Trump on Tuesday intensified his push for American expansionism, refusing to rule out using military force to add Greenland to the United States and retake control of the Panama Canal.

In a wide-ranging news conference at Mar-a-Lago — his second since winning the 2024 election — he also said he could use “economic force” to turn Canada into the United States’ 51st state.

“You get rid of that artificially drawn line and you take a look at what that looks like — and it would also be much better for national security,” Trump said at his Florida estate.

The imperialistic land grabs Trump is floating — which, if he follows through and succeeds, would represent the first major changes to the American map since Hawaii’s statehood in 1959 — are a dramatic break from the foreign policy approaches of presidents in both parties in recent decades. And they come as Western leaders have opposed Russia’s attempts at expansion into formerly Soviet territory, including its war in Ukraine.

During his hour long remarks, Trump also stewed over a series of grievances — including the legal cases brought against him, the Biden administration’s handling of the transition and energy efficiency and environmental regulations that he doesn’t like.

Asked about his pledge to issue pardons over convictions in connection with the January 6, 2021, attack on the US Capitol, Trump said he’d be “making major pardons,” although he didn’t answer a question about whether that would include those who attacked police.

He also threatened Hamas, saying it must release the hostages kidnapped in Israel during the October 7, 2023, attack.

“If those hostages aren’t back … by the time I get into office, all hell will break out in the Middle East — and it will not be good for Hamas and it will not be good, frankly, for anyone,” Trump said. “All hell will break out. I don’t have to say anymore, but that’s what it is.”

Military action on Panama, Greenland

As he continues to push for American territorial expansion, Trump would not rule out military action to take control of Panama and Greenland, an autonomous territory of Denmark.

Asked directly whether he would rule out using “military or economic coercion” to see through his goal of gaining those territories, the president-elect responded, “No.”

“No, I can’t assure you on either of those two, but I can say this: We need them for economic security,” he said.

Trump has frequently, in public appearances and social media posts in recent weeks, raised the prospect of adding both to the United States.

He said Denmark should give up its control of Greenland or it would also face steep tariffs. He also suggested the people of Greenland could vote for independence or to join the United States.

“I’m talking about protecting the free world,” Trump said.

He again criticized Panama’s management of the Panama Canal, which he said was “built for our military.”

The US-built canal was opened in 1914 and controlled by the United States until a 1977 agreement provided for its eventual handover to Panama. The canal was jointly operated by both countries until the Panamanian government retained full control after 1999.

https://www.cnn.com/2025/01/07/politics/trump-news-conference-key-lines/index.html

f_webp

  • கருத்துக்கள உறவுகள்

சைனாக்காரர்களால் வைரஸை நிற்பாட்ட முடியாது..........

ரஷ்யர்களால் உக்ரேனை நிற்பாட்ட முடியாது...............

மத்திய கிழக்கால் இஸ்ரேலை நிற்பாட்ட முடியாது..............

அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

செனட்டும் காங்கிரசும் தலையாட்ட இருக்கும் போது

ரம் இதுவும் செய்வார் இதற்கு மேலும் செய்வார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

சைனாக்காரர்களால் வைரஸை நிற்பாட்ட முடியாது..........

ரஷ்யர்களால் உக்ரேனை நிற்பாட்ட முடியாது...............

மத்திய கிழக்கால் இஸ்ரேலை நிற்பாட்ட முடியாது..............

அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............

உண்மையில் நீங்கள் உள்ளுக்குள்  அழுவது தெரிகிறது 😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

உண்மையில் நீங்கள் உள்ளுக்குள்  அழுவது தெரிகிறது 😁

🤣.............

நான் படிச்சு படிச்சு, விழுந்து விழுந்து, உருண்டு உருண்டு, பிரண்டு பிரண்டு சொன்னேனே, விசுகு ஐயா......... இந்த ஆள் வேண்டாம் என்று.

இவர் வந்தால் உலகத்திற்கு இன்னும் கேடு என்றால், என்ன கேடு என்று எதிர்க் கேள்வி தான் கேட்டார்கள்.

மருத்துவர் அர்ச்சுனா புத்திசாலி, ஆனால் பைத்தியக்காரர் போலவும் கதைப்பார், தெரிவார்............ ஆனால், நம்ம தல உள்ளும் புறமும் ஒன்றே...............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

🤣.............

மருத்துவர் அர்ச்சுனா புத்திசாலி, ஆனால் பைத்தியக்காரர் போலவும் கதைப்பார், தெரிவார்............ ஆனால், நம்ம தல உள்ளும் புறமும் ஒன்றே...............

அவரவர் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்கள் இருக்கும் தானே?🤣

WWE

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பூட்டினுக்கு போட்டியாக ரம்பும் தொடங்கப் போகிறாரோ?

புட்டின் சொன்னதை டிரெம்ப் செய்கிறார்.

போன முறை பைடன் வெல்லும் போதே யாழில் எழுதியதுதான்.

கிரீன்லாந்து - டென்மார்க்-ஈயூ,

கனடா -

நடப்பு அரசின் மீது குறைபாடு - பிரித்தானியா….

நேட்டோவை சல்லி சல்லியாக உடைப்பதே புட்டின் டிரம்புக்கு கொடுத்துள்ள அசைண்ட்மெண்ட்.

இந்த மூன்றையிம் செய்யா விடிலும் இதன் மூலம் நேட்டோவை ஆட்டம் காண வைப்பார்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

புட்டின் சொன்னதை டிரெம்ப் செய்கிறார்.

போன முறை பைடன் வெல்லும் போதே யாழில் எழுதியதுதான்.

கிரீன்லாந்து - டென்மார்க்-ஈயூ,

கனடா -

நடப்பு அரசின் மீது குறைபாடு - பிரித்தானியா….

நேட்டோவை சல்லி சல்லியாக உடைப்பதே புட்டின் டிரம்புக்கு கொடுத்துள்ள அசைண்ட்மெண்ட்.

இதை செய்யா விடிலும் இதன் மூலம் நேட்டோவை ஆட்டம் காண வைப்பார்.

நோட்டோவுக்கு 60 வீதமான பணம் செலவு செய்வது அமெரிக்கா தானே.

ஆனபடியால் உடைந்தாலும் அமெரிக்காவுக்கு லாபம் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரசோதரன் said:

அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............

1 hour ago, ஈழப்பிரியன் said:

செனட்டும் காங்கிரசும் தலையாட்ட இருக்கும் போது

ரம் இதுவும் செய்வார் இதற்கு மேலும் செய்வார்.
 
1 hour ago, விசுகு said:

அவரவர் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்கள் இருக்கும் தானே?🤣

WWE

அமெரிக்க மக்களின் சுக போகங்களுக்காக  உலகமக்கள் அழிந்து செத்தாலும் பரவாயில்லை என்ற கருத்துடையவர்களா நீங்கள்?

1 hour ago, ரசோதரன் said:

இவர் வந்தால் உலகத்திற்கு இன்னும் கேடு என்றால், என்ன கேடு என்று எதிர்க் கேள்வி தான் கேட்டார்கள்.

டொனாட் ரம் நான்கு வருடம் ஆட்சி செய்ததில் உலகிற்கு என்னென்ன கேடுகள் நடந்தது ஐயா?

2 hours ago, ஈழப்பிரியன் said:

பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.

ஏற்றுமதி/ இறக்குமதி பொருட்களின் அடாவடி விலையேற்றங்களுக்கு பனாமா கால்வாயும் முக்கிய இடம் வகிக்கின்றது.

உங்களுக்கு நேரம் பொன்னானது என்றால் தயவு செய்து....பதில் எழுத வேண்டிய கட்டாயமில்லை.

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க மக்களின் சுக போகங்களுக்காக  உலகமக்கள் அழிந்து செத்தாலும் பரவாயில்லை என்ற கருத்துடையவர்களா நீங்கள்?

டொனாட் ரம் நான்கு வருடம் ஆட்சி செய்ததில் உலகிற்கு என்னென்ன கேடுகள் நடந்தது ஐயா?

அமெரிக்கா மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் என்னவானாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற நிலைப்பாடு தான் அமெரிக்காவில் இருக்கும் ட்ரம்பினதும், ட்ரம்பின் ஆதரவாளர்களினதும் கொள்கை, அண்ணா. அந்தக் கொள்கையைத் தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். 

அது சீனா, மெக்சிக்கோ, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளுடனான ஒரு மறைமுக, வர்த்தக யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகளுடனான, முக்கியமாக ஈரானுடனான, நேரடி யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம்.

நேட்டோ வேண்டும் என்கின்றோம். அணு ஆயுத ஒப்பந்தங்கள் வேண்டும் என்கின்றோம். ஐநாவிற்கும், உலக ஸ்தாபனங்களிற்கும் அமெரிக்காவின் பெரிய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்கின்றோம். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் இருக்கின்றது என்கின்றோம்............

இப்பொழுது புதிதாக, பனாமாக் கால்வாய் பனாமாவிற்கும், கிரீன்லாந்து டென்மார்க்கிற்கும், கனடா கனடாவிற்கும் ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்கின்றோம், அண்ணா.............   

  • கருத்துக்கள உறவுகள்

90 -100 வயது ஆட்களை பார்க்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் கதைகளை சொல்வார்கள். அவர்களிடம் கேட்க விஷயம் இருக்கும், ஆனால் இப்போது 65 வயதில் உள்ளவர்களிடம் எம்மிடம் பகிர பெரிய வசீகரமான சம்பவக் கதைகள் எதுவும் இல்லை. ஒரே boring அவர்கள்.

இந்தப் பிரச்சனை எங்களுக்கு வரக்கூடாது. ஆகவே எங்களுக்கு எங்கள் கண் முன் சம்பவங்கள் நடக்க வேண்டும் 

ஆகவே கிரீன்லண்ட் பனாமா கால்வாய், canada போன்ற இடங்கள் அமெரிக்காவுடன் சேர்க்கப்பட வேண்டும் 

எப்போதும் 100-200 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியை மட்டுமே வரலாறாக வாசிக்கும் எங்கள் தலைமுறையில் சில சம்பவங்கள் நடந்தால்த் தான் 100 வருஷம் கழித்து இப்பொழுது வாழும் நபர்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

நோட்டோவுக்கு 60 வீதமான பணம் செலவு செய்வது அமெரிக்கா தானே..

இல்லை. Fact டு, செக்கிடு👇

https://www.reuters.com/fact-check/us-contributes-16-nato-annual-budget-not-two-thirds-2024-05-31/#:~:text=VERDICT,about our fact-checking work.

நேட்டோவின் செலவில் 16% சதவீதம்தான் அமெரிக்காவினது.

நீங்கள் சொல்லும் 60% - ஒட்டு மொத்த அமெரிக்க பாதுகாப்பு பஜெட்டையும் நேட்டோவிற்கான செலவு என பொய்யான கணக்கு காட்டும் - சோசல் மீடியா உருட்டு.

——

நேட்டோ உடைந்தால் முதல் பாதிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு.

அடுத்த பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான். 

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் உள்ளே ஒரே வித்தியாசம் - இராணுவ பலம். அமெரிக்காவின் இராணுவ பலமே அதன் பொருளாதார பலத்தின் அச்சாணி.

நேட்டோவை உடைப்பது இந்த அச்சாணியை உடைப்பற்குச் சமன்.

3 minutes ago, பகிடி said:

90 -100 வயது ஆட்களை பார்க்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் கதைகளை சொல்வார்கள். அவர்களிடம் கேட்க விஷயம் இருக்கும், ஆனால் இப்போது 65 வயதில் உள்ளவர்களிடம் எம்மிடம் பகிர பெரிய வசீகரமான சம்பவக் கதைகள் எதுவும் இல்லை. ஒரே boring அவர்கள்.

இந்தப் பிரச்சனை எங்களுக்கு வரக்கூடாது. ஆகவே எங்களுக்கு எங்கள் கண் முன் சம்பவங்கள் நடக்க வேண்டும் 

எப்போதும் 100-200 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியை மட்டுமே வரலாறாக வாசிக்கும் எங்கள் தலைமுறையில் சில சம்பவங்கள் நடந்தால்த் தான் 100 வருஷம் கழித்து இப்பொழுது வாழும் நபர்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும் 

🤣

இனி எங்களை Dads Army என உள்ளூரில் சென்ரி பார்க்கும் வேலைக்குத்தான் எடுப்பார்கள்.

ஆனால் எமக்கு அடுத்த தலைமுறை பெரும் பாடு பட வேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா என்னதான் உலகை ஆட்டைய போட்டாலும் அவர்களையே ஆட்டையப்போடுபவர்கள் இந்தியர்கள், 2022 இல் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியர்கள் இந்தியாவில் இருந்தவாறே ஏமாற்றியுள்ளார்கள் என கூறுகிறார்கள்.

வல்லவனுக்கு வல்லவன்,மோடிஜி இன் டியிட்டல் இந்தியா😁 .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

செனட்டும் காங்கிரசும் தலையாட்ட இருக்கும் போது

ரம் இதுவும் செய்வார் இதற்கு மேலும் செய்வார்.
 
இரண்டு வருடங்களில் இதில் ஒன்று இல்லாமல் போகும்,....போகலாம்” 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவப் பலப் பிரயோகத்தை பாவிக்கப்போவதாக  Trump கூறியதாக கட்டுரையில் எங்கேயும் கூறப்படவில்லை. பாவிக்க மாட்டேன் என்று என்னால் உறுதிபடக் கூற முடியாது என்றுதான் கூறியுள்ளார்.

Asked directly whether he would rule out using “military or economic coercion” to see through his goal of gaining those territories, the president-elect responded, “No.”

 (Trumpன்) நோக்கத்தை  நிறைவேற்றுவதற்கு  இராணுவ அல்லது பொருளாதார அழுத்தம் பிரயோகிப்பதை,  (முற்றிலும்) தவிர்ப்பீர்களா?” எனக்   கேட்டபோது, “இல்லை” என பதிலளித்தார்.

“இல்லை, அந்த(இராணுவ /பொருளாதார ரீதியான) அழுத்தம் இரண்டையும் (பாவிக்க மாட்டேன் என்று) உங்களுக்கு உறுதியளிக்க முடியாது: (அதற்கு சாதகமாகப் பதிலளிக்கவில்லை)

 “No, I can’t assure you on either of those two, but I can say this: We need them for economic security,” he said.

ஆனாலும் பொருளாதார பாதுகாப்பிற்காக அவை (பனாமா கால்வாய் + கிரீன்லன்ட்) இரண்டும்  எங்களுக்கு(USA) தேவை” என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஒழுங்குமுறை மாற்றம் பெறத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது 

ரஷ்யா வுக்கு ukraine இன் பகுதிகளை விட்டுக்கொடுக்க தயாரான அமெரிக்கா பதிலுக்கு கிரீன்லாந்து, கனடா மற்றும் பனமா கால்வாயைக் கேட்கிறது, இஸ்ரேல் மத்திய கிழக்கில் இதுவரை உரிமை கோராத பகுதிகளில் குடியேற்றங்களை தொடங்கவிருப்பதாக சொல்கிறது,

சீனா தீபெத், தாய்வான் என்று போகின்றது 

இதைப் பார்த்து இந்தியா இனி தமிழர்களை காக்கப் போகின்றோம் என்ற போர்வையிலும் 13ம் சட்டத் திருத்தத்தை இலங்கை மதிக்கவில்லை என்று காரணம் காட்டியும் அதை தன்னுடன் சேர்த்துக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

1 - அமெரிக்க மக்களின் சுக போகங்களுக்காக  உலகமக்கள் அழிந்து செத்தாலும் பரவாயில்லை என்ற கருத்துடையவர்களா நீங்கள்?

2 - டொனாட் ரம் நான்கு வருடம் ஆட்சி செய்ததில் உலகிற்கு என்னென்ன கேடுகள் நடந்தது ஐயா?

3 - ஏற்றுமதி/ இறக்குமதி பொருட்களின் அடாவடி விலையேற்றங்களுக்கு பனாமா கால்வாயும் முக்கிய இடம் வகிக்கின்றது.

4 - உங்களுக்கு நேரம் பொன்னானது என்றால் தயவு செய்து....பதில் எழுத வேண்டிய கட்டாயமில்லை.

1 - இல்லை தவறான புரிதல்.

ஒரு சிலரின் ஆட்டத்தில் இந்த உலகின் அமைதி காணாமல் போய் விடும். அதிலும் புட்டினும் ட்ரம்பும் சேரவே கூடாது. ஒருவருக்கு உக்ரைன் வேண்டும் இன்னொருவருக்கு கனடா வேண்டும். உருப்படுமா உலகு???

2 - அந்த நான்கு வருடங்களில் செய்ய உலகம் அவரை அனுமதிக்கவில்லை. இன்று அவரின் கூட்டாளி புட்டினுக்கும் அதே நிலை. இருவரும் சேர்ந்து பழைய பாக்கிகள் எல்லாவற்றையும் தூசி தட்டி எழுப்பி கணக்கு தீர்த்து வைக்க இந்த உலகம் அனுமதிக்காது என்று தான் இன்றும் நம்புகிறேன்.

3 - அதாவது நமக்கு விலை ஏற்றக்கூடாது. 

4 - நேரம் பொன்னானது தான். அது ட்ரம் மற்றும் புட்டின் போன்ற உலக அமைதி மற்றும் மனித பண்புகளை அழிப்பவர்களுக்காக போய் விடக்கூடாது .

Edited by விசுகு
எழுத்துப்பிழை

அமெரிக்காவில் இப்ப தேர்தல் வைத்தால். ட்ரம்.  வெல்வாரா   ???? 

10 hours ago, ஈழப்பிரியன் said:

நோட்டோவுக்கு 60 வீதமான பணம் செலவு செய்வது அமெரிக்கா தானே.

ஆனபடியால் உடைந்தாலும் அமெரிக்காவுக்கு லாபம் தானே.

குறுகிய நோக்கில் மட்டுமே இலாபம்.
நேட்டோவின் நோக்கங்களில் ஒன்று ஐரோப்பாவைப் பாதுகாப்பது. ஏன் பாதுகாக்க வேண்டும் ? அமெரிக்காவின் வர்த்தகத்தில் ஐரோப்பா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்றுமதி மற்றும் சேவைகள் மூலம் ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் வருமானம் (ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத நாடுகள் தவிர்த்து) மட்டும் 870 பில்லியன் டொலர்கள். இரு தரப்பிலும் 10 மில்லியன் பேர் இடம்பெயர்ந்து வர்த்தகம் செய்கிறார்கள். ஆகவே அமெரிக்காவுக்கு ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாக்கும் கடமைப்பாடு உண்டு. அதே வேளை ஏனைய நாடுகளைவிட அதிக பணம் செலவளிப்பதால் ஐரோப்பாவை ஒருவகையில் தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.

இன்று ரம்பின் புளோரிடா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கிறீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவதைப் பற்றி விபரமாக கூறினார்.

கனடாவையும் அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்தையும் வரவேற்றுக் கூறினார்.

நான் பதவி ஏற்பதற்கிடையில் கமாசால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாமல் மிகப் பெரிய அழிவு மத்திய கிழக்கில் நடக்கும் என்று பயமுறுத்தியுள்ளார்.

1959 ம் ஆண்டிற்குப் பின் அமெரிக்க வரைபடத்தில் மாற்றங்களைக் காணலாம்.

குறுகிய நேரத்தில் மிகப் பெரிய குண்டுகளைப் போட்டுள்ளார்.

பூட்டினுக்கு போட்டியாக ரம்பும் தொடங்கப் போகிறாரோ?

President-elect Donald Trump on Tuesday intensified his push for American expansionism, refusing to rule out using military force to add Greenland to the United States and retake control of the Panama Canal.

In a wide-ranging news conference at Mar-a-Lago — his second since winning the 2024 election — he also said he could use “economic force” to turn Canada into the United States’ 51st state.

“You get rid of that artificially drawn line and you take a look at what that looks like — and it would also be much better for national security,” Trump said at his Florida estate.

The imperialistic land grabs Trump is floating — which, if he follows through and succeeds, would represent the first major changes to the American map since Hawaii’s statehood in 1959 — are a dramatic break from the foreign policy approaches of presidents in both parties in recent decades. And they come as Western leaders have opposed Russia’s attempts at expansion into formerly Soviet territory, including its war in Ukraine.

During his hour long remarks, Trump also stewed over a series of grievances — including the legal cases brought against him, the Biden administration’s handling of the transition and energy efficiency and environmental regulations that he doesn’t like.

Asked about his pledge to issue pardons over convictions in connection with the January 6, 2021, attack on the US Capitol, Trump said he’d be “making major pardons,” although he didn’t answer a question about whether that would include those who attacked police.

He also threatened Hamas, saying it must release the hostages kidnapped in Israel during the October 7, 2023, attack.

“If those hostages aren’t back … by the time I get into office, all hell will break out in the Middle East — and it will not be good for Hamas and it will not be good, frankly, for anyone,” Trump said. “All hell will break out. I don’t have to say anymore, but that’s what it is.”

Military action on Panama, Greenland

As he continues to push for American territorial expansion, Trump would not rule out military action to take control of Panama and Greenland, an autonomous territory of Denmark.

Asked directly whether he would rule out using “military or economic coercion” to see through his goal of gaining those territories, the president-elect responded, “No.”

“No, I can’t assure you on either of those two, but I can say this: We need them for economic security,” he said.

Trump has frequently, in public appearances and social media posts in recent weeks, raised the prospect of adding both to the United States.

He said Denmark should give up its control of Greenland or it would also face steep tariffs. He also suggested the people of Greenland could vote for independence or to join the United States.

“I’m talking about protecting the free world,” Trump said.

He again criticized Panama’s management of the Panama Canal, which he said was “built for our military.”

The US-built canal was opened in 1914 and controlled by the United States until a 1977 agreement provided for its eventual handover to Panama. The canal was jointly operated by both countries until the Panamanian government retained full control after 1999.

https://www.cnn.com/2025/01/07/politics/trump-news-conference-key-lines/index.html

f_webp

ட்ரம்பின்...  பனாமா கால்வாய் செய்தியும், 
கனடாவை... அமெரிக்காவுடன் இணைக்கும் செய்தியும்  தான்,
இங்குள்ள ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தை உலுக்கிய ட்ரம்பின் ஊடகவியலாளர் சந்திப்பு!

சர்வதேசத்தை உலுக்கிய ட்ரம்பின் ஊடகவியலாளர் சந்திப்பு!

வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்துள்ளார்.

அதேநேரம், கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தினார்.

எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை (07) புளோரிடாவில் உள்ள Mar-a-Lago ரிசார்ட்டில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது இதனைக் கூறினார்.

மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்கா வளைகுடா” என்று மறுபெயரிடுவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.

கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக்கும் திட்டம்

2024 நவம்பர் 5 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்ததில் இருந்தே, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றும் யோசனையில் மூழ்கியுள்ளார்.

அவர் பல சமூக ஊடக இடுகைகளில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பதிவுகளில், திங்களன்று இராஜினாமா செய்த பிரதமரை “கவர்னர் ட்ரூடோ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கனடாவை அமெரிக்காவிற்குள் உள்வாங்குவதற்கான தனது யோசனையை நிறைவேற்ற இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவீர்களா என்று ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்காவை ஒன்றாக இணைக்க “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதை பரிசீலிப்பதாக கூறினார்.

அத்துடன், கனேடிய பொருட்களுக்கான அமெரிக்க செலவுகள் மற்றும் நாட்டிற்கான இராணுவ ஆதரவையும் ட்ரம்ப் இதன்போது குறை கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், ட்ரம்ப் பதவியேற்றவுடன் இரு அண்டை நாடுகளும் அமெரிக்காவுக்குள் குடியேறும் மற்றும் போதைப்பொருள் ஓட்டத்தை நிவர்த்தி செய்யாவிட்டால் கனேடிய மற்றும் மெக்சிகன் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ட்ரம்பின் கருத்துக்கு கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கனடாவின் வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.

நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றார்.

அதேபோல் ட்ரூடோ கூறும்போது, “அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

Donald Trump Says Canada Should Be '51st State' as Justin Trudeau Resigns

கிரீன்லாந்தின் பனாமா கால்வாய் கையகப்படுத்தும் முயற்சி

செவ்வாயன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், பனாமா கால்வாயை மீட்டெடுப்பது மற்றும் டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்தும் பேசினார்.

மேலும் தனது விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்த இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் நிராகரிக்க மறுத்து விட்டார்.

மத்திய அமெரிக்க வர்த்தகப் பாதை மற்றும் டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும்போது, இராணுவ அல்லது பொருளாதார வற்புறுத்தலைப் பயன்படுத்த மட்டோம் என்று உலகிற்கு உறுதியளிக்க முடியுமா என்று ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “இல்லை, என்னால் அது தொடர்பில் உறுதியளிக்க முடியாது.

பனாமா கால்வாய் எங்கள் இராணுவத்திற்காகக் நிர்மாணிக்கப்பட்டது என்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, ட்ரம்ப் பனாமா கால்வாயை இணைக்கும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் கடந்த மாதம் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரையும் சாடிப் பேசிய அவர், ஜிம்மி கார்ட்டர் மேற்கொண்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 51 மைல் நீர்வழியின் முழு கட்டுப்பாட்டையும் பனாமாவுக்கு வழங்கியதாக கூறினார்.

மேலும், கிரீன்லாந்தை வாங்குவதற்கான தனது விருப்பத்தை டென்மார்க் எதிர்த்தால், அது “அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது” என்றும் ட்ரம்ப் கூறினார்.

இதற்கு பதிலளித்த டென்மார்க், கிரீன்லாந்து “விற்பனைக்கு இல்லை” என்று கூறியது.

“நாங்கள் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளாக இருக்கும்போது நிதி ரீதியாக ஒருவருக்கொருவர் சண்டையிட இது ஒரு நல்ல வழி அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் செவ்வாய் இரவு கூறினார்.

Riviera - News Content Hub - Panama Canal increases draft and number of transits

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றும் திட்டம்

அதே செய்தியாளர் கூட்டத்தில், ட்ரம்ப் தனது நிர்வாகம் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை “அமெரிக்கா வளைகுடா” என்று மாற்ற முயற்சிப்பதாக அறிவித்தார்.

“மெக்ஸிகோ வளைகுடாவின் பெயரை அழகான வளையத்தைக் கொண்ட அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்கா வளைகுடா! என்ன அழகான பெயர். அது பொருத்தமானது” என்று அவர் கூறினார்.

பெட்ரோலியம் நிறைந்த மெக்ஸிகோ வளைகுடா நீர்நிலை உலகின் ஒன்பதாவது பெரியதாகும்.

மேலும் 1500 ஆம் ஆண்டுகளில் இருந்து அது மெக்ஸிகோ வளைகுடா என வரைபடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மெக்சிகோ வளைகுடாவை மறுபெயரிடுவதற்கான ட்ரம்பின் வாக்குறுதியானது, வட அமெரிக்காவின் மிக உயரமான மலை சிகரமான தெனாலியின் பெயரை மவுண்ட் மெக்கின்லி என மாற்றுவதற்கான அவரது முந்தைய சபதத்தையும் எதிரொலித்தது.

பூர்வீக அமெரிக்கர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அலாஸ்கன் மலையின் பெயரை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மாற்றினார்.

NOAA reveals a declining Gulf of Mexico 'dead zone'

பணயக்கைதிகள் விடயத்தில் ஹமாஸுக்கு எச்சரிக்கை

2023 ஒக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்த போது சிறைபிடித்த அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், தான் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் நேரத்தில், “மத்திய கிழக்கில் அனைத்தும் மோதல்கள் வெடிக்கும்” என்ற தனது அச்சுறுத்தலை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தினார்.

அத்துடன் இது ஹமாஸுக்கும், வெளிப்படையாக யாருக்கும் நல்லதாக அமையாது என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலின் போது, சுமார் 250 பணயக்கைதிகள் காஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களில் 96 பேர் எஞ்சியுள்ளனர். இதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Hostages released in Israel, Hamas cease-fire deal

நேட்டோ செலவு

நேட்டோ உறுப்பினர்கள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவிட வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார், இது தற்போதைய 2 சதவீத இலக்கில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.

பதவியேற்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி, பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் நியாயமான பங்கை செலுத்தவில்லை என்று அடிக்கடி முறைப்பாடு அளித்தார்.

மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார்.

https://athavannews.com/2025/1415682

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.