Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

US-ஐ சோதிக்கும் இயற்கை: பற்றி எரியும் California; பனியில் உறைந்த Texas - என்ன நடக்குது?

அமெரிக்காவின் ஒருபகுதியில் கடும் பனி மக்களை வாட்டி வதைக்க, மற்றொரு பகுதியில் காட்டுத் தீ கடும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. 

தெற்கு கலிஃபோர்னியாவில் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அங்குள்ள வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது. 

தற்போது வரை 10 ஆயிரம் வீடுகளில் இருந்து குறைந்தது 30 ஆயிரம் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  லட்சக்கணக்கான மக்கள் செங்கொடி எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். அதாவது தீ விபத்துக்கான அதிகப்படியான ஆபத்தில் அவர்கள் உள்ளனர். 

லாஸ் ஏஞ்சல்ஸின்  பசிபிக் பாலசேட்ஸில் 10 ஏக்கரில் இருந்த காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 2,900 ஏக்கருக்கும் பரவியதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் தீப்பற்றும் ஆபத்து இருப்பதால் வேறு வழியின்றி வெளியேறியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

Strong winds fuelled a massive fire in southern California, flattening homes, overtaking roads and and forcing at least 30,000 to evacuate. The fire in Pacific Palisades exploded from 10 acres to more than 2,900 acres in mere hours. Los Angeles declares a state of emergency. 

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Replies 105
  • Views 4.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள். இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவசர அவசரமாக தே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும்  கலிபோர்ணியா தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. 

வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு.

இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.

ஆத்தை படுற பாடு இதுக்குள்ள குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆத்தை படுற பாடு இதுக்குள்ள குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.

🤣....................

அண்ணா, உங்களின் பெற்ற மனது பதைபதைத்துக் கொண்டே இருக்கும். எல்லாம் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்..................

பல வருடங்களின் முன், மகனின் பல்கலைக் கழக முதல் வருடம் பாஸ்டன் நகரில். அந்த வருடம் ஒரு நாள் அடித்த பனியில் அந்த நகரமே மூடப்பட்டது. எதுவுமே வேலை செய்யவில்லை. மகனுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நாங்கள் நாட்டின் ஒரு மூலையில், பிள்ளை இன்னொரு மூலையில்.

இறுதியில் ஒருவாறு அந்தப் பல்கலைக் கழக போலீஸுடன் தொடர்பு கொண்டோம். அவர்கள் அங்கு ஒரு விடுதியில் ஒன்றாக தங்க வைக்கப்பட்டிருந்த பல மாணவர்களில் மகனை கண்டுபிடித்து, எங்களுடன் கதைக்கவிட்டனர்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் ஆடித்தான் போனோம்.............. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரசோதரன் said:

கப்பலில் போனவர்கள் திரும்பி வரும்போது வெள்ளை மா கொண்டு வந்ததாகச் சொல்வார்கள்...............🤣.

இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம், அமெரிக்காவின் அப்கானிஸ்தான் விலகலின் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் போதைவஸ்து உற்பத்தி செய்யப்பட்ட  விளைநிலங்களில் 95% மீண்டும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக  மாறிவிட்டமையால் மீண்டும் அமெரிக்க போதை பொருள் நடவடிக்கைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனால் CIA  இயின் முன்னய போதை பொருள் கடத்தல் நாடான பர்மாவிலிருந்து இந்திய எல்லை பகுதியினூடாக போதை பொருள் கடத்தலுக்கு (மிசோராம், மணிப்பூர் என நினைவுள்ளது) இந்தியரசு தனது சோதனையினை அதிகரித்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசியாவில் மேற்கொள்ள விரும்ம்பும் செயற்பாட்டுகளுக்கான நிதி வழங்கலை இந்தியா கட்டுப்படுத்துவதனை விரும்பாதமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார்.

நீங்கள் கூறும் அமெரிக்க வெள்ளை மா அதுவாக இருக்குமோ😁?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம்

அதர்மத்திற்கு, அநியாயத்துக்கு யோசித்தே தீருவம் என்று சிலர் பிடிவாதமாக பிறந்திருக்கின்றார்கள்....... அந்த இந்திய நண்பரைச் சொல்லுகின்றேன்........🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு.

இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.

அடி ஆத்தி, இதுக்குத்தானா நாங்கள் இவ்வளவு அலறித்துடிக்கிறோம்? ஐயாவுக்கு குசும்பு கூடிப்போச்சு. கால நேரந்தெரியாமல் விளையாடத்துடிக்கிறார். விமானம் குண்டு போட்டு அழிச்ச இடத்துக்கு முதலாளாய் ஓடினவராச்சே.  

On 9/1/2025 at 00:48, ஈழப்பிரியன் said:

இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது.

தழைத்தோங்கின மரங்களை பருவகாலம் மாறமுதல் கத்தரித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டாம்? மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை கொடுத்து,  உடனடியாக அவர்களை வெளியேற்றும், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். என்ன அரசாங்கங்களோ? தேவையில்லாதவற்றுக்கு  செலவழிப்பார்கள், மக்களின் பாதுகாப்பை கவனத்திற் கொள்ளவில்லை. பிறகு இயற்கையை குற்றம் சொல்லுறது!  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அதர்மத்திற்கு, அநியாயத்துக்கு யோசித்தே தீருவம் என்று சிலர் பிடிவாதமாக பிறந்திருக்கின்றார்கள்....... அந்த இந்திய நண்பரைச் சொல்லுகின்றேன்........🤣

அதே இந்திய நண்பர் இலங்கையினை சீனாதான் கடன் கொடுத்து சீரழித்தது என்பார், ஆரம்பத்தில் இலங்கை கடன் வாங்கினார்கள் அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினாலும் விடுவதாக இல்லை ஒரு நாள் சீனா இலங்கையினை நாசமாக்கவில்லை உங்கள் இந்தியாதான் இலங்கையின் தற்போதய நிலைக்கு காரணம் என கடந்தகால வரலாற்றினை கூறினேன் அதற்கு எதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டிருந்தார் (அவருக்கே உண்மை தெரியும் போல இருக்கிறது அவர் 60 களில் உள்ளவர் என நினைக்கிறேன்).

அனால் அதன் பின்னர் கூட சந்தர்ப்பம் ஏற்படும்போது மீண்டும் சீனாதான் இலங்கையின் சீரழிவிற்கு காரணம் என்பார்😁.

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள்; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ

Published By: RAJEEBAN   09 JAN, 2025 | 12:04 PM

image

லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

los_angeles_fire.jpg

இதேவேளை காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் நிம்மதியடைந்துள்ள போதிலும் ஆபத்து இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

ஹொலிவூட் ஹில்ஸ் பகுதியில் புதிதாக காட்டுதீ மூண்டுள்ளதாக  தெரிவித்துள்ள அதிகாரிகள் லொஸ் ஏஞ்சல்ஸின் சன்டா மொனிகாவில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆயிரம் கட்டிடங்கள் அனேகமாக வீடுகள் முற்றாகதீக்கிரையாகியுள்ளன. நகரப்பகுதியிலிருந்து 13000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பசுபிக் கரை  முதல் பசெடானா வரையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாங்கள் இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து விடுபடவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்துள்ளார்.

los_angles_fire_6.jpg

பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள்

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டு தீ ஆபத்து செல்வாய்கிழமையே உருவானது.

ஒரு சக்திவாய்ந்த காற்று புயல் இயற்கை எழில் கொஞ்சும் பசுபிக்கின் பாலிசோட்ஸ் சுற்றுப்புறத்தில் தீப்பிழப்புகளை மூண்டெழச்செய்த போது ஆயிரக்கணக்காணவர்கள் அங்கிருந்து தப்பி விரைவாக வெளியேறவேண்டிய நிலை உருவானது.

கடும் காற்றுகாரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் திணறியதால் இரவில் அவசரநிலைமை தீவிரமடைந்தது. அந்த இரவை நகரின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான திகிலூட்டும் இரவு என அதிகாரியொருவர் வர்ணித்துள்ளார்.

அந்த பகுதியை சுற்றிவளைத்திருந்த நான்கு காட்டுதீயை  கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக மறுநாள் காலை கலிபோர்னியாவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காட்டுதீ காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்களிற்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

நான்கு பகுதிகளில் இவ்வளவு ஆக்ரோசமாக பரவிவரும் காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்தார். நாங்கள் இரண்டு மூன்று காட்டுதீ பரவலிற்குதான் தயாராகயிருந்தோம் நான்கு ஐந்தை எதிர்பார்க்கவில்லை,அன்று மாலை அது ஆறாக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

பாலிசேட்ஸ் காட்டுதீயே லொஸ்ஏஞ்சல்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒன்று என அதிகாரிகள் கருதுகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 50 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

தீயினால் அந்த பகுதியின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன. அதிகரித்த தேவை காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில இடங்களில் நீரை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

பொதுமக்களை நீரை சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

los_angles_fire_1.jpg

லொஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் காட்டுதீ மிகவேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள்  தாங்கள் கார்களை விட்டுவிட்டு  இறங்கி ஓடவேண்டிய நிலைக்கும் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

ஹெலிக்கொப்டரிலிருந்து காட்டுதீயை அணைப்பதற்காக நீர் வீசப்பட்டவேளையே எனக்கு எங்கள் பகுதியில் காட்டுதீ மூண்டுள்ளமை தெரியும் என அந்த பகுதியை சேர்ந்த ஷெரீஸ் வலஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார். எனது சகோதரி என்னை அழைத்து அதனை தெரிவித்தார் என்கின்றார் அவர்.

நான் மழை பெய்கின்றது என நினைத்தேன்  என தெரிவிக்கும் அவர் எனது சகோதரி இல்லை உங்கள் பகுதியில் காட்டு தீ மூண்டுள்ளது அதனை அணைக்க முயல்கின்றனர் நீங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என தெரிவித்தார்  என வலஸ் தெரிவித்துள்ளார்.

நான் வீட்டு கதவை திறந்ததும் காட்டுதீக்கு எதிரே நின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/203378

  • கருத்துக்கள உறவுகள்

எதுவென்றாலும்,எல்லாருக்கும் அவரவரின் தேவைகள்.

விளையாட்டோ,எதுவோ

எத்தனை கலியாணம் நடந்தது இந்த அமளிதுமளியில்? 

 நான்  யோசிக்கிறேன் இப்படி இயற்கை சீறும்  போது  அதன் அருகில்  கலியாணம் போன்றவை நடத்தும் சேவையை ஆரம்பிக்கலாம் என்று (சிலருக்கு இவை போன்றவற்றில் நாட்டம்), ஏனெனில் காடு எரிவது புதுப் பிறவி எடுக்கத்தானே - அதுக்குள் போய் இருந்து  கொண்டு எரிகிறது என்பது? 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை குறைந்தது 10 பேர் உயிரிளந்துள்ளனர்.

400000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இத்தனை அனர்த்தத்துக்குள்ளும் களவுக்கென்றே பலர் திரிகிறார்கள்.

சிலர் பிடிபடுகிறார்கள்.

 Four major wildfires are raging across Los Angeles County. At least 10 people have died, with officials warning the true toll won’t be clear until it’s safe for investigators to go into neighborhoods. Tens of thousands have been urged to flee since the blazes began this week, while a countywide evacuation warning accidentally sent to millions of residents has compounded already sky-high stress.

• Whole neighborhoods have been devastated, with as many as 10,000 structures destroyed by the coastal Palisades Fire, expected to be the costliest in US history, and the Eaton Fire. Curfews are in place as police patrol for and arrest looters.

• Firefighting teams are expecting more wind and dry conditions to continue to complicate efforts into next week. If winds are too strong, firefighting aircraft won’t be able to take off. Here’s why California is uniquely susceptible to the worst effects of the human-caused climate crisis.

https://www.cnn.com/weather/live-news/los-angeles-wildfires-palisades-eaton-california-01-10-25-hnk/index.html

President-elect Donald J. Trump on Wednesday blamed California’s Democratic governor for the failure to contain fires engulfing parts of the Los Angeles area, turning a still-evolving natural disaster into a political opportunity and accusing the state’s government of letting environmental policies run amok.

In a post on his social media site, Mr. Trump mocked Gov. Gavin Newsom, calling him “incompetent” and claiming that the governor had blocked an infusion of water to Southern California because of concern about the impact on a threatened fish.

“He wanted to protect an essentially worthless fish called a smelt, by giving it less water (it didn’t work!), but didn’t care about the people of California,” Mr. Trump wrote on Truth Social. “Now the ultimate price is being paid.”

The post was vintage Trump, who rarely passes up an opportunity to blame natural disasters on his political enemies. It was also a return to his denunciations of California, which has been a frequent target of his ire.

In 2019, Mr. Trump accused San Francisco of allowing used needles from drug users to be washed into the ocean, saying the city was in “serious violation” of environmental rules and demanding that officials “clean it up.”

“We can’t have our cities going to hell,” he said.

That Christmas, Mr. Trump tweeted: “Governor Gavin N has done a really bad job on taking care of the homeless population in California. If he can’t fix the problem, the Federal Govt. will get involved!” The next year, Mr. Trump blamed Mr. Newsom’s administration for failing to do enough to prevent forest fires, which were then raging through the state.

“They’re starting again in California,” Mr. Trump said at a rally. “I said, you got to clean your floors, you got to clean your forests — there are many, many years of leaves and broken trees and they’re like, like, so flammable, you touch them and it goes up.”

Mr. Trump’s angry commentary on Wednesday about the latest fires, including a call for Mr. Newsom to resign, came even as Southern California residents were fleeing three separate blazes. At least two people have been confirmed to have died from the fires, and the authorities were warning the area’s residents to be ready to evacuate their homes at a moment’s notice.

President Biden, who was in the Los Angeles area for a previously scheduled event, visited a fire station and was briefed by the state’s fire officials.

“We’re doing anything and everything and as long as it takes to contain these fires to make sure you get back to normal,” Mr. Biden said. “It’s going to be a hell of a long way. It’s going to take time. It’s astounding what’s happening.

https://www.nytimes.com/2025/01/08/us/trump-newsom-california-fires.html

இத்தனைக்குமிடையில் கலிபோர்ணியா கவர்ணரை ரம் வெளுத்து வாங்குகிறார்.

கிடைத்த சந்தர்ப்பத்தை அவரும் நழுவவிடுவதாகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

“They’re starting again in California,” Mr. Trump said at a rally. “I said, you got to clean your floors, you got to clean your forests — there are many, many years of leaves and broken trees and they’re like, like, so flammable, you touch them and it goes up.”https://www.nytimes.com/2025/01/08/us/trump-newsom-california-fires.html

இத்தனைக்குமிடையில் கலிபோர்ணியா கவர்ணரை ரம் வெளுத்து வாங்குகிறார்.

கிடைத்த சந்தர்ப்பத்தை அவரும் நழுவவிடுவதாகவில்லை.

ட்ரம்பிற்கு மூளையில் நிரந்தரமாகத் தங்கி விட்ட சில விடயங்கள் இருக்கின்றன, அவற்றுள் ஒன்று இந்த "காட்டுத் தீ வராமல் இருக்க, காட்டின் நிலத்தைக் கூட்ட வேண்டும்!" என்ற ஐடியா.

ஒரு தும்புத் தடியால் தன் வீட்டையே கூட்டியிருக்காத ட்ரம்பிற்கு கலிபோர்னியா, ஒறிகன் பகுதிகளின் அடர்ந்த மலைக்காடுகளைக் கூட்டிப் பெருக்குவது எவ்வளவு செலவு பிடித்த வேலை எனத் தெரியாமல் இருப்பது அதிசயமில்லை😂.

எங்கேயோ சிறிய ஐரோப்பிய நாட்டில், குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் மலைக் காடுகளை அவர்கள் கூட்டிப் பெருக்குவதைக் கண்டு விட்டுத் தான் அலட்டிக் கொண்டு திரிகிறார்!

4 minutes ago, Justin said:

இங்கு காடுகளை ஊடறுத்து அகலமான பாதை அமைக்கின்றனர். ஒரு பகுதியில் தீ பிடித்தால் எல்லாப் பகுதிகளுக்கும் பரவாமல் இது தடுக்கும். ஆனால் அதையும் மீறி சில வேளைகளில் தீ பரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

அடி ஆத்தி, இதுக்குத்தானா நாங்கள் இவ்வளவு அலறித்துடிக்கிறோம்? ஐயாவுக்கு குசும்பு கூடிப்போச்சு. கால நேரந்தெரியாமல் விளையாடத்துடிக்கிறார். விமானம் குண்டு போட்டு அழிச்ச இடத்துக்கு முதலாளாய் ஓடினவராச்சே.  

🤣...............

இந்திய இராணுவ காலங்களில் நடந்த ஒரு விசயம். மாரிகாலம் தவிர்த்து மற்றைய நாட்களில் தீருவில் மைதானத்தில் தான் விளையாடுவோம். மாரிகாலத்தில் வெள்ளம் மைதானத்தை நிரப்பிவிடும்.

மைதானம், அதனை ஒட்டி தெற்குப் பக்கமாக வயலூர் முருகன் கோவில், அதன் பின்னால் குமரப்பா, புலேந்திரன் மற்றும் போராளிகள் ஞாபகத் தூபி அமைக்கப்பட்ட இடம், அதன் பின்னால் பனங்கூடல்கள் என்று தீருவில் வயல்வெளி அந்த நாட்களில் இருந்தது.

ஒரு நாள் காலை விளையாடிக் கொண்டிருக்கும்  போது, படபடவென்று பல ஜீப்புகள் மைதானத்தின் வடக்குப் பக்கமாக வந்து நின்றன. இந்திய இராணுவத்தின் பரா துருப்புகள். எங்கள் எல்லோரையும் மைதானத்தில் விழுந்து படுக்கச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல முன்னரே நாங்கள் பலர் நிலத்தோடு நிலமாகக் கிடந்தோம்.

துப்பாக்கிகளை நீட்டிக் கொண்டே மைதானத்தின் ஊடாக ஓடி, முருகன் கோவிலைத் தாண்டி, வெளியால் ஓடி பனங்கூடலுக்குள் ஓடினார்கள். சில இராணுவத்தினர் எங்களுடன் நின்றார்கள்.

ஓடிய இராணுவத்தினர் திரும்பி வரும் போது, ஒருவரைக் கைது செய்து கொண்டு வந்தனர். அவர் இன்று வேறு ஒரு நாட்டில் மிக நன்றாக இருக்கின்றார்.

வீட்டில் நாங்கள் சொல்லவேயில்லை. அடுத்த நாள் காலையிலும் அதே மைதானத்தில் விளையாடினோம். ஊரிலிருந்து வெளியே போகும் வரை அதே மைதானத்தில் தான்................

இதைவிட மிக இலகு இங்கு வந்து போகும் நெருப்பு....................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

ட்ரம்பிற்கு மூளையில் நிரந்தரமாகத் தங்கி விட்ட சில விடயங்கள் இருக்கின்றன, அவற்றுள் ஒன்று இந்த "காட்டுத் தீ வராமல் இருக்க, காட்டின் நிலத்தைக் கூட்ட வேண்டும்!" என்ற ஐடியா.

ஒரு தும்புத் தடியால் தன் வீட்டையே கூட்டியிருக்காத ட்ரம்பிற்கு கலிபோர்னியா, ஒறிகன் பகுதிகளின் அடர்ந்த மலைக்காடுகளைக் கூட்டிப் பெருக்குவது எவ்வளவு செலவு பிடித்த வேலை எனத் தெரியாமல் இருப்பது அதிசயமில்லை😂.

எங்கேயோ சிறிய ஐரோப்பிய நாட்டில், குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் மலைக் காடுகளை அவர்கள் கூட்டிப் பெருக்குவதைக் கண்டு விட்டுத் தான் அலட்டிக் கொண்டு திரிகிறார்!

காடுகளில் சருகுகள் விழுந்து விழுந்து பெரியமெத்தை போல இருக்கிறது.

31 minutes ago, இணையவன் said:

இங்கு காடுகளை ஊடறுத்து அகலமான பாதை அமைக்கின்றனர். ஒரு பகுதியில் தீ பிடித்தால் எல்லாப் பகுதிகளுக்கும் பரவாமல் இது தடுக்கும். ஆனால் அதையும் மீறி சில வேளைகளில் தீ பரவும்.

இங்கு அதிவேக காற்றினாலேயே மற்றைய இடங்களுக்கும் பரவியுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

காடுகளில் சருகுகள் விழுந்து விழுந்து பெரியமெத்தை போல இருக்கிறது.

இதை ஏதாவது பாரிய இயந்திரங்கள் வைத்து அகற்றுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். நிலத்தோடு கலக்க வேன்டிய சேதனப் பொருள் இன்னொரு இடத்திற்கு அகற்றப் படுகிறது (landfill குப்பையாக?). மழை வந்து தண்ணீர் ஓடும் போது மண்ணின் மேற்படையும் இல்லாமல் போய் கலிபோர்னியாவில் இருக்கும் காட்டுப் படுகைகள் 50 வருடங்களில் மறைந்து நெவாடா போல ஆகி விடும்.

காட்டுத் தீ வராது. ஆனால் காடும், நீர்ச்சுழற்சியும், மழை வீழ்ச்சியும் கூட இருக்கப் போவதில்லை.

இது  ட்ரம்பின் தூர நோக்கில்லாத உசார் மடையன் குணாதியசத்தைக் காட்டும் ஒரு ஐடியா😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளதாம்.

கடந்த சில நாட்களாக நுணாவைக் காணம் என்று தேடும் போது வரவில்லை....அதனால் நுணா இண்டைக்கும் யாழ் பக்கம் வராட்டி செய்தி ஏதாவது கொண்டு வந்து எடுத்த இடம் இல்லாமல் போட்டால்  வருவார் என்று நினைச்சனான்.எல்லாம் இந்த கலிபோர்ணியா தீயால் தான் தேடினோம்.🖐️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

🤣...............

இந்திய இராணுவ காலங்களில் நடந்த ஒரு விசயம். மாரிகாலம் தவிர்த்து மற்றைய நாட்களில் தீருவில் மைதானத்தில் தான் விளையாடுவோம். மாரிகாலத்தில் வெள்ளம் மைதானத்தை நிரப்பிவிடும்.

மைதானம், அதனை ஒட்டி தெற்குப் பக்கமாக வயலூர் முருகன் கோவில், அதன் பின்னால் குமரப்பா, புலேந்திரன் மற்றும் போராளிகள் ஞாபகத் தூபி அமைக்கப்பட்ட இடம், அதன் பின்னால் பனங்கூடல்கள் என்று தீருவில் வயல்வெளி அந்த நாட்களில் இருந்தது.

ஒரு நாள் காலை விளையாடிக் கொண்டிருக்கும்  போது, படபடவென்று பல ஜீப்புகள் மைதானத்தின் வடக்குப் பக்கமாக வந்து நின்றன. இந்திய இராணுவத்தின் பரா துருப்புகள். எங்கள் எல்லோரையும் மைதானத்தில் விழுந்து படுக்கச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல முன்னரே நாங்கள் பலர் நிலத்தோடு நிலமாகக் கிடந்தோம்.

துப்பாக்கிகளை நீட்டிக் கொண்டே மைதானத்தின் ஊடாக ஓடி, முருகன் கோவிலைத் தாண்டி, வெளியால் ஓடி பனங்கூடலுக்குள் ஓடினார்கள். சில இராணுவத்தினர் எங்களுடன் நின்றார்கள்.

ஓடிய இராணுவத்தினர் திரும்பி வரும் போது, ஒருவரைக் கைது செய்து கொண்டு வந்தனர். அவர் இன்று வேறு ஒரு நாட்டில் மிக நன்றாக இருக்கின்றார்.

வீட்டில் நாங்கள் சொல்லவேயில்லை. அடுத்த நாள் காலையிலும் அதே மைதானத்தில் விளையாடினோம். ஊரிலிருந்து வெளியே போகும் வரை அதே மைதானத்தில் தான்................

இதைவிட மிக இலகு இங்கு வந்து போகும் நெருப்பு....................

அவுஸ்ரேலியாவிலும் இந்த காட்டுத்தீ ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது, முன் ஆயத்த நடவடிக்கையாக தீ அபாயம் உள்ள பகுதிகளை குளிர்காலத்தில் அவர்களாகவே தீ பரவாமல் தகுந்த பாதுகாப்புடன் எரிப்பார்கள், இந்த முன்னேற்பாடுகள் மற்றும் அவசர பாதுகாப்பு ஊழியர்கள் இவற்றுக்கென நிதி ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

2019 இல் அப்போதிருந்த அரசு அந்த நிதியத்தினை  குறைத்திருந்தது, அபோது ஏற்பட்ட தீ விபத்தில் 34 மக்கள் பலியானார்கள் பல இலட்சக்கணக்கான உயிர்னங்கள் கொல்லப்பட்டன பல மில்லியன் கெக்டெயர் நிலங்கள் தீக்கு இரையாயின.

3 hours ago, இணையவன் said:

இங்கு காடுகளை ஊடறுத்து அகலமான பாதை அமைக்கின்றனர். ஒரு பகுதியில் தீ பிடித்தால் எல்லாப் பகுதிகளுக்கும் பரவாமல் இது தடுக்கும். ஆனால் அதையும் மீறி சில வேளைகளில் தீ பரவும்.

தீ பரவும் போது தொடர்ச்சியற்று காற்றின் உதவியினால் தீ தாவி பரவியது, அப்போது வெப்பம் 40 களில் இருந்தத்டு என நினக்கிறேன்.

அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு தீ பரவல் தொடர்பான தெளிவு இருந்தும் சிலர் அந்த தீயில் சிக்கி கொண்டார்கள்.

தீ ஏற்பட்ட போது அப்போதிருந்த அவுஸ்ரேலிய பிரதமர் தனது விடுமுறியினை களிப்பதற்கு வெளிநாடு சென்றுவிட்டார், திரும்பி வந்து ஊடகங்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மாட்டிக்கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

அனால் அதன் பின்னர் கூட சந்தர்ப்பம் ஏற்படும்போது மீண்டும் சீனாதான் இலங்கையின் சீரழிவிற்கு காரணம் என்பார்😁.

🤣............

எனக்கும் இந்த வகையான ஒரு சில இந்திய நண்பர்கள் இருக்கின்றார்கள், வசீ.

கொகா கோலா என்ன சுவை, பெப்சி என்ன சுவை என்று தெரிந்து தானே அந்தச் சோடாக்களை குடிக்க ஆரம்பிக்கின்றோம், அது போலவே தான் சில மனிதர்களும்................ இப்படித்தான் கதைப்பார்கள் என்று முன்னரே தெரிந்துள்ளபடியால் தயாராகவே இருக்க வேண்டியது தான்............

சினிமா, கதாநாயகர்கள் வழிபாடு, அவர்களின் உள்ளூர் அரசியல் சழக்குகள் என்றில்லாமல் சிலர் இருப்பதால் ஒரு வித மேதாவித் தன்மையும் இவர்களிடம் இருக்கக்கூடும். ஒருவர் மேதாவி என்று தன்னை நினைப்பதில் தவறு எதுவும் இல்லை, ஆனால் அப்படி தங்களை நினைப்பவர்கள் பலர் சுற்றி இருப்பவர்களை கொஞ்சம் குறைவான ஆவிகளாக நினைப்பார்கள்......... அது தான் சிக்கல்...............😜.

இலங்கை நாங்களே அழிகின்றோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு தேசம். சீனா தான் கடன் கொடுத்து அழித்திருக்க வேண்டும் என்றில்லை..............

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவின் இயற்கை மரமான யுகலிப்ஸ் (Eucalyptus) இயல்பிலேயே எரியக்கூடிய ஒன்று அது காட்டுத்தீ ஏற்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கின்றது, 

இந்த மரத்தினை கலிபோர்னியாவிற்கு அவுஸ்ரேலியா விற்றதாக கூறுகிறார்கள்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

அவுஸ்ரேலியாவின் இயற்கை மரமான யுகலிப்ஸ் (Eucalyptus) இயல்பிலேயே எரியக்கூடிய ஒன்று அது காட்டுத்தீ ஏற்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கின்றது, 

இந்த மரத்தினை கலிபோர்னியாவிற்கு அமெரிக்கா விற்றதாக கூறுகிறார்கள்.

யுகலிப்ஸ் மரங்களை சஞ்சீவி மரங்கள் என்று ஊரில் சொல்லுவோம். இவை தென் கலிஃபோர்னியாவில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் மிகக் குறைவு. இங்கிருப்பவை சவுக்கு மரங்களின் பல்வேறு வகைகள். மிகவும் உலர்ந்த பாலைநிலத்துக்கான மரங்கள். அதனால் காலநிலைக்கேற்ற பசுமையற்ற, ஆனால் எண்ணெய் பிடிப்புக் கொண்ட மரங்கள். எங்கள் ஊர் ஆமணக்கு, சவுக்கு போன்ற சில குணாதிசயங்கள் கொண்ட, ஆனால் பெரும் விருட்சங்கள். இவை எரிய ஆரம்பித்தால் நின்று எரிந்து கொண்டேயிருக்கும்.

இங்கு எரியும் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் செய்வதில்லை. தீ பரவாமல் இருப்பதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

இங்கு பெரும்பாலானவர்களின் வீடுகளில் இந்த மரம் உள்ளது ஆனால் எமது வீட்டில் இந்த மரம் இல்லை.

19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அவுஸ்ரேலியா இந்த மரங்களை கலிபோரனியாவிற்கு விற்றதாக கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vasee said:

19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அவுஸ்ரேலியா இந்த மரங்களை கலிபோரனியாவிற்கு விற்றதாக கூறுகிறார்கள்.

அந்தக் காலத்திலேயே 'எரியப் போகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம்...........' என்று கலிஃபோர்னியாவிடம் இருந்து எடுத்திருக்கின்றீர்கள்.................🤣.

மத்திய மற்றும் வட கலிஃபோர்னியாவில் சில சஞ்சீவி மரங்களைக் கண்டிருக்கின்றேன். இலங்கையில் கூட ஒரு காலத்தில் இந்த மரங்கள் ஏதோ ஒரு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு மிக வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில் இருந்து தான் இலங்கைக்கும் வந்ததா என்று ஞாபகமில்லை. ஆனால், அமெரிக்கர்கள் போலவே ஆஸ்திரேலியர்களும் கொல்லன் தெருவிலேயே ஊசி விற்று விடுவார்கள் போல.................😜

இந்த மரங்கள் நிலத்தடி நீரை மிக ஆழச் சென்று அதி வேகமாக உறிஞ்சி, பூமியை கட்டாந்தரையாக்கி விடுபவை என்று பின்னர் சொன்னார்கள். இப்பொழுது இந்த மரங்களை ஒருவரும் அவ்வளவாக நாடுவதில்லை என்று நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.