Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர்

புல‌வ‌ர் அண்ணா இன்னும் மூன்று நாள் தான் இருக்கு

சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ அண்ணா...................

@சுவைப்பிரியன்

சுவைப்பிரிய‌ன் அண்ணா சுவிஸ்சுக்கு வ‌ந்து விட்டிங்க‌ளா

அல்ல‌து இப்ப‌வும் ஊரிலா

இன்னும் சில‌ நாட்க‌ள் தான் இருக்கு போட்டிக்கான‌ அனும‌தி அண்ணா.......................

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வீரப் பையன்26 said:

@புலவர்

புல‌வ‌ர் அண்ணா இன்னும் மூன்று நாள் தான் இருக்கு

சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ அண்ணா...................

@சுவைப்பிரியன்

சுவைப்பிரிய‌ன் அண்ணா சுவிஸ்சுக்கு வ‌ந்து விட்டிங்க‌ளா

அல்ல‌து இப்ப‌வும் ஊரிலா

இன்னும் சில‌ நாட்க‌ள் தான் இருக்கு போட்டிக்கான‌ அனும‌தி அண்ணா.......................

@புலவர், @Ahasthiyan, @சுவைப்பிரியன், @பிரபா, @P.S.பிரபா@நீர்வேலியான்@Eppothum Thamizhan,   @கல்யாணி,  @வாதவூரான், @theeya,  @கந்தப்பு  ஆகியோர் வழமையாக உற்சாகத்துடன் கலந்து கொள்கின்ற ஆட்கள். ஏன் இன்னும் தாமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை பையன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250214-165029-Collage-Maker

@மோகன்

வழ‌மை போல‌ யாழ்க‌ள‌ போட்டி என்றால் சிரிப்புக்கும் புள்ளிக்கும் தான் முக்கியத்துவ‌ம் யாழில்.......

குமார‌சாமி தாத்தா போன்ற‌வ‌ர்க‌ள் இப்படியா திரிக‌ளுக்குள் க‌ருத்து எழுதினால் இன்னும் காமெடியா இருக்கும்...............ஆனா ப‌டியால் எங்க‌ளுட‌ன் சிரிச்சு ம‌கிழ்ந்து எழுத‌ தாத்தாவையும் அனும‌தியுங்கோ மோக‌ன் அண்ணா

ந‌ன்றி🙏...............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

மோகன் அண்ணா…  பையனின் கருத்தே எனதும்.
குமாரசாமி அண்ணைக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டை தயவு செய்து தளர்த்தி விடவும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

@புலவர், @Ahasthiyan, @சுவைப்பிரியன், @பிரபா, @P.S.பிரபா @நீர்வேலியான் ஆகியோர் வழமையாக உற்சாகத்துடன் கலந்து கொள்கின்ற ஆட்கள். ஏன் இன்னும் தாமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை பையன். 

ஓம் த‌மிழ்சிறி அண்ணா இவ‌ர்க‌ள் எல்லாரும் ஆர்வ‌த்தோட‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிற‌வ‌

இன்னும் மூன்று நாள் இருக்கு தானே அத‌ற்க்குள் க‌ல‌ந்து கொள்ள‌க் கூடும்🙏👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் த‌மிழ்சிறி அண்ணா இவ‌ர்க‌ள் எல்லாரும் ஆர்வ‌த்தோட‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிற‌வ‌

இன்னும் மூன்று நாள் இருக்கு தானே அத‌ற்க்குள் க‌ல‌ந்து கொள்ள‌க் கூடும்🙏👍.........................

ஓம் பையா…   இன்னும்  மூன்று நாட்கள் உள்ள படியால்,
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் லீவு நேரத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா தேர்வுக்குழு முட்டாள் த‌ன‌மாக‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்ய‌ மாட்டின‌ம் அண்ணா

ஜ‌ந்து சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்யும் போது தெரிந்து விட்ட‌து சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளை வைத்தே எதிர் அணியின‌ர‌ தோக்க‌டிக்க‌ போகின‌ம் 

த‌மிழ‌க‌ சுழ‌ல்ப‌ந்து வீச்சாள‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி அன்மைக் கால‌மாய் விக்கேட் வேட்டை ந‌ட‌த்துகிறார்..............க‌ட‌சி நேர‌த்தில் தான் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்திய‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் சேர்த்த‌வை🙏👍.....................

ஆனால் போட்டியின் போது இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை அதிக பட்சமாக பயன்படுத்துவார்கள் என கருதுகிறேன்.

குளிர் காலமாக இருப்பதால் பந்து ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதனால் வழுக்கி வரும் Skiddy, ஆடுகளத்தில் பந்து திரும்பாது சுழல் பந்து வீச்சாளர்களுக்கு, காரணம் ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு பந்தினை வழுவ (no grip) அனுமதிப்பதால் பந்து திரும்பாது.

ஆனால் மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் குல்தீப் மற்றும் வருணிற்கு பந்து ஓரளவு திரும்பும்.

இந்த மாதிரி ஈரலிப்பு உள்ள ஆடுகளம் இரண்டு வேகம் கொண்ட ஆடுகளமாக இருக்கும், பந்து சுழல் பந்து வீச்சாளருக்கு திரும்பாது ஆனால் சில பந்து வேகமாக வழுக்கி வரும் சில பந்து தரையில் நின்று வரும், அத்துடன் பந்து உயர்ந்தும் தாழ்ந்தும் வரும், மட்டையாளர்கள் இதனை எதிர்கொள்ள நேர் கோட்டில் விளையாட முற்படுவார்கள், முக்கியமாக மெதுவான கையினை பயன்படுத்தி விளையாடாவிட்டால் மிக சிரமாக இருக்கும்.

ஜடேயாவுடன் குல்தீப் இனை இந்தியா இறக்க்க கூடும், சில வேளை ஆடுகளம் மோசமாக இருந்தால் இரண்டு விரல் சுழற்பந்து வீச்ச்சாளர்களான ஜடேயா மற்றும் அக்சர் விளையாட கூடும்.

இரண்டு வேக பந்து வீச்சாளருடன் பாண்டியாவினை மூன்றாவது வேக பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்தக்கூடும்.

3 வேக பந்து வீச்சாளர்கள் + 2 சுழல் பந்து வீச்சாளர்கள், ஆனால் பாண்டியா முழுவதுமாக 10 ஓவர் போடுவாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ஆஸ்திரேலியா கப் வெல்லப்போகுது என்று கணித்தவர்கள் எல்லோருக்கும் ஆப்பு இருக்கு. ஸ்ரீலங்காவோடை 107 ஆல் அவுட்.

இந்தியாவும் இலங்கையில் தொடரை இழந்துதான் சென்றவர்கள் 2-0 அல்லது 3-0 என கருதுகிறேன்), இந்த அவுஸ்ரேலிய அணி புதியணி, அனுபவமற்ற அணி இந்த ஆடுகளத்தில் மெதுவான கையில் விளையாட வேண்டும், ஆனால் அவுஸ்ரேலிய அணி விரைவாக தனது தவறுகளை அடையாளம் கண்டு திருத்திவிடும் அணி அதனால் பதட்டமடைய தேவையில்லை.

2006 மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலக கோப்பையில் இலங்கை அணிக்கெதிராக கில் கிறிஸ்ட் மெதுவான் கையினை பயன்படுத்தி விளையாடுவதற்காக தனது கையுறைக்குள் கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறுவார்கள், கடந்த உலக கிண்ணத்தில் இந்தியணிக்கு இடது புறத்தில் 5 வீரர்களை களத்தடுப்பு வைத்து ஒரு ஆபத்தான (Risky) திட்டத்துடன் வந்து வென்றார்கள்.

அவர்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் சரியான திட்டமிடலுடனே வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vasee said:

இல‌ங்கை இந்தியா தொட‌ர் 2-0 இல‌ங்கை வென்ற‌து ஒரு விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து..............ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ருக்கு தெரிவான‌ அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது..............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
5 hours ago, வீரப் பையன்26 said:

மோகன் அண்ணா…  பையனின் கருத்தே எனதும்.
குமாரசாமி அண்ணைக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டை தயவு செய்து தளர்த்தி விடவும். நன்றி

5 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250214-165029-Collage-Maker

@மோகன்

வழ‌மை போல‌ யாழ்க‌ள‌ போட்டி என்றால் சிரிப்புக்கும் புள்ளிக்கும் தான் முக்கியத்துவ‌ம் யாழில்.......

குமார‌சாமி தாத்தா போன்ற‌வ‌ர்க‌ள் இப்படியா திரிக‌ளுக்குள் க‌ருத்து எழுதினால் இன்னும் காமெடியா இருக்கும்...............ஆனா ப‌டியால் எங்க‌ளுட‌ன் சிரிச்சு ம‌கிழ்ந்து எழுத‌ தாத்தாவையும் அனும‌தியுங்கோ மோக‌ன் அண்ணா

ந‌ன்றி🙏...............

குமாரசாமியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு நானும் @மோகன்  ஐ கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பம்பலாகக் கலந்திருக்கும் இந்நேரத்தில் கட்டுப்பாட்டைத் தளர்த்தி  அவரும் பங்குபற்றினால்  நன்றாக இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன்  .........!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஆனால் போட்டியின் போது இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை அதிக பட்சமாக பயன்படுத்துவார்கள் என கருதுகிறேன்.

குளிர் காலமாக இருப்பதால் பந்து ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதனால் வழுக்கி வரும் Skiddy, ஆடுகளத்தில் பந்து திரும்பாது சுழல் பந்து வீச்சாளர்களுக்கு, காரணம் ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு பந்தினை வழுவ (no grip) அனுமதிப்பதால் பந்து திரும்பாது.

ஆனால் மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் குல்தீப் மற்றும் வருணிற்கு பந்து ஓரளவு திரும்பும்.

இந்த மாதிரி ஈரலிப்பு உள்ள ஆடுகளம் இரண்டு வேகம் கொண்ட ஆடுகளமாக இருக்கும், பந்து சுழல் பந்து வீச்சாளருக்கு திரும்பாது ஆனால் சில பந்து வேகமாக வழுக்கி வரும் சில பந்து தரையில் நின்று வரும், அத்துடன் பந்து உயர்ந்தும் தாழ்ந்தும் வரும், மட்டையாளர்கள் இதனை எதிர்கொள்ள நேர் கோட்டில் விளையாட முற்படுவார்கள், முக்கியமாக மெதுவான கையினை பயன்படுத்தி விளையாடாவிட்டால் மிக சிரமாக இருக்கும்.

ஜடேயாவுடன் குல்தீப் இனை இந்தியா இறக்க்க கூடும், சில வேளை ஆடுகளம் மோசமாக இருந்தால் இரண்டு விரல் சுழற்பந்து வீச்ச்சாளர்களான ஜடேயா மற்றும் அக்சர் விளையாட கூடும்.

இரண்டு வேக பந்து வீச்சாளருடன் பாண்டியாவினை மூன்றாவது வேக பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்தக்கூடும்.

3 வேக பந்து வீச்சாளர்கள் + 2 சுழல் பந்து வீச்சாளர்கள், ஆனால் பாண்டியா முழுவதுமாக 10 ஓவர் போடுவாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

குல்தீப் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம் அண்ணா..............குல்தீப்ப‌ விட‌ வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரிட‌ம் திற‌மை அதிக‌ம் இருக்கு இந்தியா முன்ன‌னி விக்கேட் போனால் நிதான‌மாக‌ நின்று விளையாடி ர‌ன்ஸ்ச‌ மெதுவாய் கூட்டுவார் அதோட‌ ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கையும் ப‌ந்து போட‌க் கூடிய‌வ‌ர்...............வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி விளையாட்டை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல‌க் கூடிய‌வ‌ர்................

ஜ‌டேயா

அஸ்ச‌ர் ப‌ட்ட‌ல்

சுந்த‌ர் இந்த‌ மூன்று பேருக்கும் ப‌ந்து போட‌வும் தெரியும் ம‌ட்டையால் அதிர‌டியா விளையாடி ஓட்ட‌ங்க‌ளை குவிக்க‌வும் தெரியும்..................இந்தியா அணிய‌ குறை சொல்ல‌ ஒன்றும் இல்லை அண்ணா ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் எல்லாரும்🙏👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ மூன்று பேருக்கும் ப‌ந்து போட‌வும் தெரியும் ம‌ட்டையால் அதிர‌டியா விளையாடி ஓட்ட‌ங்க‌ளை குவிக்க‌வும் தெரியும்.................

இந்திய அணியில் மற்ற எட்டு பேருக்கும் எதுவுமே தெரியாது என்று தான் நானும் நினைத்தனான்........... அதனால் தான் பாகிஸ்தான் பக்கம் போய் நிற்கின்றேன்...............🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்:

1 ஈழப்பிரியன்
2 ஏராளன்
3 வீரப் பையன்26
4 சுவி
5 அல்வாயன்
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 ரசோதரன்
9 நுணாவிலான்
10 வசீ
11 வாத்தியார்
12 நந்தன்
13 செம்பாட்டான்
14 குமாரசாமி
15 நியாயம்
16 வாதவூரான்

பலரின் பதில்களில் திருத்தம் வேண்டும். ஒவ்வொருவராகச் சொல்லுகின்றேன் 😃

On 22/1/2025 at 06:02, ஏராளன் said:

24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

Yashasvi Jaiswal

On 22/1/2025 at 06:02, ஏராளன் said:

26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mitchell Starc

@ஏராளன் இருவரும் விளையாடாததால் வேறு பெயர்களைத் தாருங்கள்.

On 10/2/2025 at 10:54, suvy said:

30)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?
                    PAT CUMMINS 

@suvy ஐயா, இவர் விளையாடவில்லை. வேறு பதிலைத் தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2025 at 17:56, நிலாமதி said:

30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

    வீரர்? J.  BUMRAH

@நிலாமதி அக்கா, இவர் விளையாடவில்லை. வேறு பெயரைத் தாருங்கள்.

On 11/2/2025 at 17:56, நிலாமதி said:

 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

    வீரர்? ROHIT SHARMA

Rohit Sharma வா அல்லது பின்னர் கூறியது போல Hardik Pandya வா?
ஒரு பதிலைத் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

இந்திய அணியில் மற்ற எட்டு பேருக்கும் எதுவுமே தெரியாது என்று தான் நானும் நினைத்தனான்........... அதனால் தான் பாகிஸ்தான் பக்கம் போய் நிற்கின்றேன்...............🤣

குருநாதா

நீங்க‌ள் பிழையா விள‌ங்கி விட்டிங்க‌ள்............முன்ன‌னி ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் வேறு இந்த‌ மூன்று பேரும் சுழ‌ல் ப‌ந்தும் போடுவின‌ம் அதோட‌ ம‌ட்டையாலும் அடிச்சு ர‌ன்ஸ் குவிக்கும் திற‌மை ப‌டைச்ச‌வை...............தெரிவு செய்த‌ 15 வீர‌ர்க‌ளும் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் ஆனால் குல்டிப்புக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமோ தெரியாது👍.....................

  • கருத்துக்கள உறவுகள்

முத்தரப்பு போட்டி ஒன்று பாகிஸ்தானில் இன்று முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணி பாகிஸ்தானை மிக இலகுவாக வீழ்த்தி வெற்றியைப் பெற்றது.  

நியுசிலாந்து வழமைபோலவே ஓர் கறுப்புக்குதிரைதான். 

இத்தொடரில் விளையாடிய மூன்றாவது அணியான தென் ஆபிரிக்காவும் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. அவர்களின் பந்துவீச்சு அணி முழுவதுமாக இத்தொடரில் இறங்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2025 at 01:01, ரசோதரன் said:

31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

Shaheen Shah Afridi

@ரசோதரன், அணியின் பெயரைக் குறிப்பிடுங்கள் 🙃

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்:
 
1 ஈழப்பிரியன்
2 ஏராளன்
3 வீரப் பையன்26
4 சுவி
5 அல்வாயன்
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 ரசோதரன்
9 நுணாவிலான்
10 வசீ
11 வாத்தியார்
12 நந்தன்
13 செம்பாட்டான்
14 குமாரசாமி
15 நியாயம்
16 வாதவூரான்

பலரின் பதில்களில் திருத்தம் வேண்டும். ஒவ்வொருவராகச் சொல்லுகின்றேன் 😃

வழமையான கடும் போட்டியாளர்கள் சிலர் இன்னும் மிஸ்ஸிங்.............

டெம்பிளேட் பதில்கள் பல தாராளமாக ஏற்கனவே இருக்கின்றன, இலகுவாக ஒன்றை எடுத்து, அதை ஒரு கலக்கு கலக்கி கலந்து கொள்ளுங்கள்:

இந்தியா பக்கம் நின்று களப் போட்டியில் கீழே போக ---> வீரப்பையன் டெம்பிளேட்

ஆஸ்திரேலியா பக்கம் நின்று அதைவிட கீழே போக --> வசீ டெம்பிளேட்

பாகிஸ்தான் பக்கம் நின்று புகழின் உச்சிக்கு போக --> ரசோதரன் டெம்பிளேட்

..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

முத்தரப்பு போட்டி ஒன்று பாகிஸ்தானில் இன்று முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணி பாகிஸ்தானை மிக இலகுவாக வீழ்த்தி வெற்றியைப் பெற்றது.  

நியுசிலாந்து வழமைபோலவே ஓர் கறுப்புக்குதிரைதான். 

இத்தொடரில் விளையாடிய மூன்றாவது அணியான தென் ஆபிரிக்காவும் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. அவர்களின் பந்துவீச்சு அணி முழுவதுமாக இத்தொடரில் இறங்கவில்லை. 

முத்தரப்பு போட்டியில் உற‌வே

தென் ஆபிரிக்கா முன்ன‌னி வீர‌ர்க‌ள் சில‌ர் விளையாட‌ வில்லை

ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் ப‌ல‌மான‌ அணியா தென் ஆபிரிக்கா அணி தெரியும்..............ரப்பாடா , அக்ர‌ம் , ரிக்ட‌சொன் , ஜ‌ன்சென் போன்ர‌ வீர‌ர்க‌ள் முத்தரப்பு போட்டியில் விளையாட‌ வில்லை.................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

@ரசோதரன், அணியின் பெயரைக் குறிப்பிடுங்கள் 🙃

30ம், 31ம் விடைகள் மாறிவிட்டன, கிருபன். 

30 வது கேள்விக்கான விடை: Shaheen Shah Afridi

31 வது கேள்விக்கான விடை: PAK

பச்சைக் கலர் முக்கியம்.............................🤣.

11 minutes ago, வீரப் பையன்26 said:

குருநாதா

நீங்க‌ள் பிழையா விள‌ங்கி விட்டிங்க‌ள்............முன்ன‌னி ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் வேறு இந்த‌ மூன்று பேரும் சுழ‌ல் ப‌ந்தும் போடுவின‌ம் அதோட‌ ம‌ட்டையாலும் அடிச்சு ர‌ன்ஸ் குவிக்கும் திற‌மை ப‌டைச்ச‌வை...............தெரிவு செய்த‌ 15 வீர‌ர்க‌ளும் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் ஆனால் குல்டிப்புக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமோ தெரியாது👍.....................

👍..............

பையன் சார், எண் சாத்திரப்படி எட்டாம் நம்பர் எங்கேயோ போகுமாம். இங்கு களத்தில் தான் சில நாட்களின் முன் இந்த சாத்திரத்தை சொன்னார்கள். பங்குபற்றுபவர்களின் வரிசையை ஒரு தடவை பார்த்துக் கொள்ளுங்கள், குறிப்பாக யாருடைய பெயர் எட்டாவதாக இருக்கின்றது என்று...................😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எல்லோரும் பம்பலாகக் கலந்திருக்கும் இந்நேரத்தில் கட்டுப்பாட்டைத் தளர்த்தி  அவரும் பங்குபற்றினால்  நன்றாக இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன்  .........!  

த‌லைவ‌ரே ந‌ல‌மா🙏

தாத்தா போட்டியில் க‌ல‌ந்து விட்டார் ஆனால் உட‌னுக்கு உட‌ன் விளையாட்டு திரியில் க‌ருத்து எழுத‌ முடியாது.................

கிரிக்கேட்ட‌ ப‌ற்றி அரைகுறையா தெரிந்து வைத்து இருக்கும் தாத்தா இப்ப‌டியான‌ திரிக்குள் வ‌ந்து எழுதினால் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இருக்காது😁.............2019உல‌க‌ கோப்பையில் இருந்து இதை நான் க‌வ‌னித்த‌ நான்....................

அவ‌ர் கால்ப‌ந்து பிரிய‌ர் எங்க‌ள‌து விருப்ப‌த்துக்காக‌ தான் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்................நாங்க‌ள் ஜாலியா எழுதி சிரிக்கும் போது தாத்தா த‌னிமையில் இருப்ப‌து என‌து ம‌ன‌துக்கு ச‌ரி என்று ப‌ட‌ வில்லை த‌லைவ‌ரே ,  அது தான் மோக‌ன் அண்ணாவிட‌ம் கேட்டு இருந்தேன் த‌டைய‌ நீக்க‌ சொல்லி...............இப்போது ப‌ல‌ர்  கேட்டு இருக்கின‌ம் மோக‌ன் அண்ணா அதை ச‌ரி செய்வார் என‌ ந‌ம்புவோம் த‌லைவ‌ரே🙏👍........................

13 minutes ago, ரசோதரன் said:

30ம், 31ம் விடைகள் மாறிவிட்டன, கிருபன். 

30 வது கேள்விக்கான விடை: Shaheen Shah Afridi

31 வது கேள்விக்கான விடை: PAK

பச்சைக் கலர் முக்கியம்.............................🤣.

👍..............

பையன் சார், எண் சாத்திரப்படி எட்டாம் நம்பர் எங்கேயோ போகுமாம். இங்கு களத்தில் தான் சில நாட்களின் முன் இந்த சாத்திரத்தை சொன்னார்கள். பங்குபற்றுபவர்களின் வரிசையை ஒரு தடவை பார்த்துக் கொள்ளுங்கள், குறிப்பாக யாருடைய பெயர் எட்டாவதாக இருக்கின்றது என்று...................😜

அந்த‌ ந‌ம்ப‌ரில் நீங்க‌ள் தான் இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தெரியும் குருநாதா நீங்க‌ள் சுமை தாங்கியா அல்ல‌து நான் சுமை தாங்கியா என‌ ஹா ஹா😁...................யாழ்க‌ள‌ போட்டியில் நான் சுமை தாங்கியா ஒரு போதும் வ‌ந்த‌தில்லை என‌க்கு கீழ‌ யாராவ‌து ஒரு உற‌வு எப்ப‌வும் நிப்பின‌ம் ஹா ஹா😁👍.................

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

@நிலாமதி அக்கா, இவர் விளையாடவில்லை. வேறு பெயரைத் தாருங்கள்.

Rohit Sharma வா அல்லது பின்னர் கூறியது போல Hardik Pandya வா?
ஒரு பதிலைத் தாருங்கள்

Rohit Sharma    Rohit  sharma  என எடுத்துக் கொள்ளுங்கள். .   
  
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வீரப் பையன்26 said:

முத்தரப்பு போட்டியில் உற‌வே

தென் ஆபிரிக்கா முன்ன‌னி வீர‌ர்க‌ள் சில‌ர் விளையாட‌ வில்லை

ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் ப‌ல‌மான‌ அணியா தென் ஆபிரிக்கா அணி தெரியும்..............ரப்பாடா , அக்ர‌ம் , ரிக்ட‌சொன் , ஜ‌ன்சென் போன்ர‌ வீர‌ர்க‌ள் முத்தரப்பு போட்டியில் விளையாட‌ வில்லை.................

ரபாடா வாறாரு. தெறிக்கவிடப் போறாரு. இறுதிப் போட்டியில் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை இந்தியா தொட‌ர் 2-0 இல‌ங்கை வென்ற‌து ஒரு விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து..............ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ருக்கு தெரிவான‌ அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது..............................

ஆம் 2-0.

4 hours ago, வீரப் பையன்26 said:

குல்தீப் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம் அண்ணா..............குல்தீப்ப‌ விட‌ வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரிட‌ம் திற‌மை அதிக‌ம் இருக்கு இந்தியா முன்ன‌னி விக்கேட் போனால் நிதான‌மாக‌ நின்று விளையாடி ர‌ன்ஸ்ச‌ மெதுவாய் கூட்டுவார் அதோட‌ ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கையும் ப‌ந்து போட‌க் கூடிய‌வ‌ர்...............வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி விளையாட்டை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல‌க் கூடிய‌வ‌ர்................

ஜ‌டேயா

அஸ்ச‌ர் ப‌ட்ட‌ல்

சுந்த‌ர் இந்த‌ மூன்று பேருக்கும் ப‌ந்து போட‌வும் தெரியும் ம‌ட்டையால் அதிர‌டியா விளையாடி ஓட்ட‌ங்க‌ளை குவிக்க‌வும் தெரியும்..................இந்தியா அணிய‌ குறை சொல்ல‌ ஒன்றும் இல்லை அண்ணா ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் எல்லாரும்🙏👍.........................

இந்தியணி பவர்பிளேயிலேயே அடித்து விளையாட விரும்பும் என போகிளே கூறுகிறார், அதனால் நீண்ட ஒரு துடுப்பாட்ட நீளம் இருப்பதனை இந்தியா விரும்பும் எனும் தொணிபட கூறுகிறார்.

அதனால் இந்த 3 சகலதுறை ஆட்டக்காரர்களுள் ஒருவரையும், சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ஒருவரையும் இந்தியா தெரிவு செய்யும்.

நீங்கள் கூறுவது போல சுந்தரையும் அக்சரையும் எடுப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன்.

பந்தினை அடித்து விளையாடுவதன் மூலம் பந்தின் swing & seam இனை கட்டுப்படுத்தி பந்தினை விளையாடுவதற்கு இலகுவாக்க முடியும், அதே நேரம் களத்தடுப்பில் உள்ள கட்டுப்பாட்டினை பயன்படுத்தி நல்ல ஆரம்பத்தினையும் வழங்கலாம், அதனால் ரோகித்தின் அடித்தாடும் முயற்சி பெரும்பாலும் கைகொடுக்கும் ஆனால் ஆடுகளம் சிறிது உயிர்ப்பாக இருந்தால் ரோகித் மற்றும் கில்லால் விளையாடுவது கடினமாக இருக்கும்.

சுந்தர் விரல் சுழல் பந்து வீச்சாளர், இந்த துபாய் ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே விரும்பும்.

ஆடுகளம் காய்ந்து மின் ஒளியில் பந்து இலகுவாக வரும், dew (புல் பனியினால்) பந்து ஈரமாகி பந்தினை பிடிக்க முடியாது கடினமாகி விடும், அதே நேரம் பந்து வழுக்கி வரும் என்பதால் மட்டையாளருக்கு சாதகமாகி விடும்.

சுந்தரினால் பவர் பிளேயில் பந்து வீச முடியும், ஆனால் ஆட்டத்தின்  நடுப்பகுதியில் பந்து பெரிதாக சுந்தருக்கு திரும்பாது ஆனால் இந்த  ஆடுகளத்தில் flat & quicker (கிடையாகவும் வேகமாகவும்) வீசும் ஜடேயா (விரல் சுழல் பந்து வீச்சாளர்) சிறப்பான தெரிவு, அத்துடன் இரண்டு மணிக்கட்டு பந்து வீச்சாளர்களில் ஒருவரான் குல்தீப் இந்தியாவின் முதல் தெரிவாக இருக்கும் (வருணிடம் பல தெரிவுகள் இருந்தாலும்), அதற்கு அவரது அனுபவமும் முற்று முழுதான மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் என்பதால் நான் நினைக்கிறேன் ஜடேயா, குல்தீப் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கலை இந்தியணி தெரிவு செய்யலாம்.

4 hours ago, ரசோதரன் said:

வழமையான கடும் போட்டியாளர்கள் சிலர் இன்னும் மிஸ்ஸிங்.............

டெம்பிளேட் பதில்கள் பல தாராளமாக ஏற்கனவே இருக்கின்றன, இலகுவாக ஒன்றை எடுத்து, அதை ஒரு கலக்கு கலக்கி கலந்து கொள்ளுங்கள்:

இந்தியா பக்கம் நின்று களப் போட்டியில் கீழே போக ---> வீரப்பையன் டெம்பிளேட்

ஆஸ்திரேலியா பக்கம் நின்று அதைவிட கீழே போக --> வசீ டெம்பிளேட்

பாகிஸ்தான் பக்கம் நின்று புகழின் உச்சிக்கு போக --> ரசோதரன் டெம்பிளேட்

..................🤣.

காணொளி

அவுஸ்ரேலிய முன்னால் ஆட்டக்காரான கிளார்க்கின் கருத்துப்படி பார்த்தால் பையனின் டெம்ப்பிளேட் தான் சிறந்தது.

துபாய் ஆடுகளம் இந்தியணிக்கு சாதகமாக இருப்பதற்கான காரணத்தினையும் கூறுகிறார், இந்தியணி ஒரே ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவது மற்றது வெவ்வேறு ஆடுகளத்திற்காக பயணிக்க தேவையில்லை என கூறுகிறார்.

இந்தியணியே வெல்லும் எனவும், சிறந்த ஆட்டக்காரராக ரோகித்தையும் சிறந்த பந்து வீச்சாளாராக ஆர்ச்சரையும் கூறுகிறார்.

அவரது அணி வரிசை (அவர் இந்த வரிசையில் கூறவில்லை பொதுவாக கூறினாலும் அவர் மனதில் உள்ளது)

IND

AUS

Pak

NZ

SA

ENG

AFG

BAN

அவரின் கருத்துப்படி பார்த்தால் உங்கள் கருத்து அப்படியே தலைகீழாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.