Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
 

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது.

அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

வரி விதிப்பு குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ராணுவ விமானங்கள் மூலம் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்த முறை, கொலம்பியா தனது விமானப் படையின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவரை திருப்பி அழைத்து வந்தது.

ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளது.

நாடு கடத்தப்படும் 205 இந்தியர்கள்

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை.

இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை புறப்பட்ட விமானம், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார்.

பஞ்சாப் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார்.

இது மிகவும் தீவிரமான விவகாரம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் 205 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்து இறங்குவார்கள் என்றும் தான் அங்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் ஊடகத்திடம் கூறுகையில், மாநில முதலமைச்சர் பகவத் சிங் மான் உடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இந்தியர்கள் பஞ்சாப் அரசாங்கத்தால் சிறந்த முறையில் வரவேற்கப்படுவர் என்றும் கூறினார்.

பிபிசிக்காக செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின், இந்தியா வருபவர்களுள் சிலர் தங்களுடைய கிராமங்களுக்கு காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

பஞ்சாப் அரசு மற்றும் காவல்துறை கூறுவது என்ன?

பஞ்சாப் அமைச்சர் தலிவால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பஞ்சாப் அமைச்சர் தலிவால்

பஞ்சாப் மாநில அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது மிகவும் தீவிரமான விவகாரம் எனக் கூறியுள்ளார். இதை மத்திய அரசும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பஞ்சாபின் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான தலிவால், அமெரிக்காவின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியர்கள் பலரும் பணி அனுமதி பெற்றே அமெரிக்கா சென்றதாகவும், ஆனால் பின்னர் அது காலாவதியாகிவிட்டதாகவும், அதனாலேயே அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற பிரிவின்கீழ் வந்ததாகவும் கூறினார்.

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளதாகவும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தலிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகச் செல்ல வேண்டாம் என்று பஞ்சாப் மாநில மக்களை தலிவால் கேட்டுக் கொண்டார்.

பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், "இதுதொடர்பாக, நாங்கள் மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். இது குறித்த மேலதிக தகவல்கள் வந்தவுடன் அவற்றைப் பகிர்வோம்" என்றார்.

"இந்தியா வருபவர்களின் அடையாளம் குறித்த எந்த விவரங்களும் தெரிய வரவில்லை. மத்திய அரசின் முகமைகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்."

மேலும் அவர் கூறுகையில், "உறுதி செய்யப்படாத பல தகவல்கள் உள்ளன. பெருமளவிலான மக்கள் இங்கு வருவதாகவும் கூறப்படுகிறது."

குடியேற்றம் தொடர்பான டிரம்பின் உத்தரவுகள்

அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக குடியேற்ற விவகாரம் இருந்து வந்தது. "குடியேற்ற விதிகளை கடுமையாக்குவோம், 'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்" என்பன டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.

டிரம்ப் அதிபரான முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. "அமெரிக்க வரலாற்றில் நாட்டைவிட்டு பெருமளவில் நிகழ்த்தப்படும் வெள்யேற்றத் திட்டத்தை" அதிபராகத் தனது முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

எல்லையை மூடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப் பொருட்கள், மனிதக் கடத்தல், எல்லையைக் கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாகக் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களை அந்நிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தினார்.

அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்கத் தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்சிகோவை சேராதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் பஞ்சாப்பில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் பஞ்சாப்பில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 100 இந்திய பிரஜைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க நாடு கடத்தல் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (04) பிற்பகுதியில் டெக்சாஸிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம், சற்று முன்னர் அமிர்தசரஸ் நகரில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தின் மூலமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 13 குழந்தைகள் உட்பட 104 இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜனவரி 20 அன்று ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக தொடங்கிய பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவ்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்திய சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறை.

டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து புறப்பட்ட சி-17 அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 1.59 மணிக்கு ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

US C-17 Aircraft Deporting 205 Indian Nationals Lands in Amritsar

79 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கிய 104 நபர்களை வரவேற்க காவல்துறை மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதியும் விமான நிலையத்தில் இருந்தார்.

ஆதாரங்களின்படி, நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடத்தப்பட்டவர்கள் இந்தியாவில் குற்றவாளிகள் அல்ல, ஏனெனில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற சட்டப்பூர்வ வழியைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இந்திய சட்டங்களை மீறவில்லை என்பதால் அவர்களை கைது செய்வதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

https://athavannews.com/2025/1419967

  • கருத்துக்கள உறவுகள்

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம்

06 Feb, 2025 | 11:10 AM

image

புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு 104 பேர் வந்தடைந்தனர்.

“கடந்த ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைந்தபோது அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் என்னை பிடித்தனர். முறையான விசா மூலம் என்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொல்லிய டிராவல் முகமை நிறுவனம் என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. அமெரிக்கா செல்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று செலவு செய்துள்ளேன்.

us_deportation11.jpg

நான் பிரேசிலில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு 11 நாள் காவலில் இருந்த நிலையில் நாடு திரும்பி உள்ளேன். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது எங்களின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்கள் பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டது. நாங்கள் வந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே சங்கிலி அகற்றப்பட்டது” என்று 36 வயதான ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தை சேர்ந்தவர்.

“அமெரிக்க அதிகாரிகள் எங்களை வேறொரு முகாமுக்கு அழைத்து செல்வதாக சொல்லி பயணத்தை தொடங்கினர். ஆனால், செய்தி மூலமாக நாங்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்தோம். வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவலாம் என்ற எங்களது கனவு இப்போது தகர்ந்தது” என்கிறார் ஜஸ்பால் சிங்கின் உறவினர் ஜஸ்பீர் சிங்.

பின்னணி என்ன? - அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்படி, பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு திரும்பிய 104 பேரில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உ.பி.யை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் அடங்குவர். முன்னதாக அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், இந்தியர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசினார். பின்னர் ட்ரம்ப் கூறுகையில், ‘‘சட்டவிரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். அந்த விஷயத்தில் எது சரியோ அதை இந்தியா செய்யும் என்று தெரிவித்தார்’’ என்று கூறினார். இதையடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

us_deportation_india.jpg

இதற்கிடையில், வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புளூர்பெர்க் கடந்த மாதம் புள்ளி விவரம் வெளியிட்டது
 

https://www.virakesari.lk/article/205942

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of aircraft and text

 

கதற வைக்கும் கனவு தேசம்.


ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக  குடியேறுவது என்பது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான்.

பல நூற்றாண்டுகள் வரலாறுகள் கொண்ட மன்னர் ஆட்சி காலத்திலும் இவையெல்லாம் நடக்காமல் இல்லை.
பொதுவாக நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குள ஒரு குடிமகன் நுழைகிறான் என்றால் அதற்கான காரணங்களை சுலபத்தில் பட்டியலிடலாம்.

உள்நாட்டு குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு அரசியல் பிரச்சினையால் வாழ முடியாமல் வாழ்வாதாரத்தை தேட, அதிக அளவில் பொருள் சம்பாதிக்க எனக் காரணங்கள் பல உண்டு.  
இப்படிப்பட்ட நிலையில் எந்த ஒரு நாடும் சட்ட விரோதமான குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாது..அப்படி ஏற்றுக் கொள்வது உள்நாட்டு மக்களுக்கு எதிரான செயல்.

ஒரு நாட்டு அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கால் உயிருக்கு அஞ்சி அகதிகளாய் தஞ்சம் புகும் மக்களை மனிதாபிமானம் என்று வரும்போது அவர்களை அடித்து விரட்ட முடியாது,  அதே நேரத்தில் வாருங்கள் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று வாரி அணைத்து விடவும் முடியாது. அப்படி அணைக்கத் தொடங்கினால் அகதிகள் பெருகி உள்நாட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே பெரும் பிரச்சனை மூளு ம்.

இதைப் பற்றி பேசினால் விரிவாக விரிவாக போய்க் கொண்டே இருக்கும்.
ஆனால் அதிக பொருளீட்டும் ஆசையால் திட்டமிட்டே கள்ளத்தனமாய் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவும் நபர்கள் விவகாரம் என்பது மிகவும் வில்லங்கமானது.

வேலை தருகிறேன் என்று சொல்லி அழைத்து போய் ஏமாற்றி கைவிடப்படும் அப்பாவிகளிலிருந்து இந்த திட்டமிட்ட ஊடுருவல்காரர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
துரதிஷ்டவசமாக, சட்டவிரோத குடியேற்றம் என்று வரும்போது பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் இந்த பேதங்களை எல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை.
ஆனால் சட்டவிரோத குடியேறிகளை கையாளும் விவகாரத்தில் அடுத்த எடுப்பிலேயே காட்டத்தை காட்டாமல் உண்மையான போக்கில் ஆரம்பிப்பார்கள்.

எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து பராமரிப்பு என்பது பெரும் பொருட் செலவு பிடிக்கும் என்பது மட்டுமல்லாமல் தேவையற்றதும் கூட என்று கருதுவார்கள்.

அதனால்தான் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போது, ஒட்டுமொத்த வகையில் பொது மன்னிப்பு கொடுத்து, நாட்டை விட்டு சுயமாக வெளியேற கால அவகாசம் தருவார்கள்.
இன்னொரு பக்கம் உங்கள் நாட்டில் இருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகளை, குடிமகன்களை  நீங்களே உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அழைப்பு விடுவார்கள்.
இந்த வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் அலட்சியப்படும் பட்சத்தில்தான் வலுக்கட்டாய வெளியேற்றத்தை நிகழ்த்துவார்கள்.

அப்போது கூட மனிதர்களை கால்நடைகளைப்போலவோ பொருட்களை போலவோ கருதாமல்  அடிப்படை வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வழியாகத்தான் வெளியேற்றம் செய்வார்கள்.

நம்ம ஊரிலேயே எடுத்துக் கொள்வோமே..
தேடுதல் வேட்டையின் போது தொலைதூரத்தில் கைது செய்யப்படும் கூடிய குற்றவாளிகளை க்கூட, ஒன்று காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்வார்கள். அல்லது பயணிகள் பயணிக்கும்  பேருந்து ரயில் போன்ற பொது போக்குவரத்தில் கொண்டு செல்வார்கள்.

ஆடு மாடுகளைப் போல அடைத்து சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள்.
ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு இப்படிப்பட்ட கொடுஞ்செயலைத்தான் செய்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டே தீருவார்கள் என்று சொன்னதோடு, மின்னல் வேகத்தில் 104 இந்தியர்களை பயணிகள் விமானத்தை தவிர்த்து ராணுவ விமானத்தில் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளது.
அதுவும் எப்படி? கைவிலங்கிட்டு.

சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு சுமார் 20 மணி நேர பயணம்.
104 பேர் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அனைவரும் ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 

இத்தனைக்கும் பயணிகள் விமானத்தில் அனுப்புவதை விட ராணுவ விமானத்தை பயன்படுத்துவது ஐந்து மடங்கு செலவு பிடிக்கும் என்கிறது கார்டியன் பத்திரிகை.
ஆகையால் இது வெளியேற்ற நடவடிக்கை என்பதைவிட, இந்தியர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவே அமெரிக்கா நிர்மாணிக்கிறது.

பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், மேலும் சில ராணுவ விமானங்கள் இதுபோல இந்தியர்களை அள்ளி வந்து கொட்டி விட்டு போகும் என்பதை மறுக்க இயலாது என்றும் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் இதே போன்று ராணுவ விமானங்களில் சட்டவிராத குடியேறிகள் என்று அள்ளிக் கொண்டு போன இரண்டு ராணுவ 2 அமெரிக்க ராணுவ விமானங்களை இறங்க அனுமதி மறுத்து விட்டது கொலம்பியா.. 
ஆயிரம் இருந்தாலும் தங்கள் நாட்டு குடிமக்களை கண்ணியமற்ற முறையில்  கை விலங்கிடப்பட்டு கால்நடைகள் போல் அடைக்கப்பட்டு கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று சீறினார் கொலம்பியா அதிபரான கஸ்ட்ராவோ பெட்ரோ.

பின்னர் தங்கள் நாட்டு விமானங்களை அனுப்பி அமெரிக்காவிலிருந்து கௌரவமாக அழைத்து வரச் செய்தார் அந்த அதிபர்.

நாம்தான்  நமது அரசாங்க விமானங்களை விற்பனை பிரியர்கள் கையில் எப்போதோ தாரை வார்த்து விட்டு விட்டோமே.

Ezhumalai Venkatesan 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'JUST IN புதிய தலைமுறை " "இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என கூறியுள்ளோம்" "கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர்; இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் 06|02|2025 06|02|2025-02:30PA 02:30 PM www.puthiyathalaimurai.com'

 

 'உருக்கமான கண்டனம்' 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆடு மாடுகளைப் போல அடைத்து சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள்.
ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு இப்படிப்பட்ட கொடுஞ்செயலைத்தான் செய்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டே தீருவார்கள் என்று சொன்னதோடு, மின்னல் வேகத்தில் 104 இந்தியர்களை பயணிகள் விமானத்தை தவிர்த்து ராணுவ விமானத்தில் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளது.
அதுவும் எப்படி? கைவிலங்கிட்டு.

சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு சுமார் 20 மணி நேர பயணம்.
104 பேர் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே

இலங்கையில் இருந்து உயிருக்கு பயந்து வாழமுடியாமல் இந்தியாவுக்கு சென்று அகதி தஞ்சம் கேட்ட தமிழரை எப்படி இந்திய நடுவண் அரசு  நடாத்தியது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அரசியல் POST அரசியல் SUN !NEWS ரத்தம் கொதிக்கிறது "ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலை பாதகர்களா? அவர்கள் எல்லாருமே குஜராத், ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது" நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு அமைச்சர் ஆர் ராஜா கண் கண்டனம் XSUNNEWSTAMIL 1 SUNNEWS sunnewslive.in 06 6FEB2025 FEB 2025'

தமிழ்நாட்டு மீனவனை சிங்களவன் சுட்டு கொன்ற போது ரத்தம் கொதிக்கல...
இப்ப குஜராத்திக்காக... இரத்தம்  கொதிக்குதாம்.

குகன் அருமைநாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டு மீனவனை சிங்களவன் சுட்டு கொன்ற போது ரத்தம் கொதிக்கல...
இப்ப குஜராத்திக்காக... இரத்தம்  கொதிக்குதாம்.

கொஞ்சம் உயரத்துக்கு போனால் தமிழனுக்கு மூளை முழம் காலுக்குள் போயிடும் தன்னினம் எக்கேடு கெட்டாலும் திரும்பி பார்க்காதுகள் அது வழமையான ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'JUST IN புதிய தலைமுறை " "இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என கூறியுள்ளோம்" "கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர்; இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் 06|02|2025 06|02|2025-02:30PA 02:30 PM www.puthiyathalaimurai.com'

 

 'உருக்கமான கண்டனம்' 😂

 

கொலம்பிய அரசு போல உங்கள் விமானத்தை அனுப்பி கெளரவமாக கூட்டி வந்திருக்கலாமே?

இலங்கையில் இருந்து போன அகதிகளை கெளரமாக நடாத்த முடியவில்லை.

அங்கு பிறந்த பிள்ளைகளுக்கு குடியுரிமை கொடுக்க விருப்பமில்லை.

அங்கு படித்த பிள்ளைகளுக்கு மேற்படிப்பு படிக்க முடியாது.

இந்த இக்கட்டான நேரத்தில் எமது அகதிகளையும் யோசிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'JUST IN புதிய தலைமுறை " "இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என கூறியுள்ளோம்" "கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர்; இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் 06|02|2025 06|02|2025-02:30PA 02:30 PM www.puthiyathalaimurai.com'

 

 'உருக்கமான கண்டனம்' 😂

சீ.  ....போங்கய்யா    வரவுசெலவு திட்டத்தில்   இலங்கைக்கு   கோடி கணக்கில் பணம்  ஒதுக்கீடு செய்ய  முடிகிறது    

தமிழ்நாடு பணம் கேட்டால் கொடுக்க முடியாது 

அமெரிக்காவில் உள்ள இந்தியார்களையும்.  எற்றிவர விமானங்களை அனுப்பவும். முடியவில்லையா. ??   

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா முன் கேவலப்பட்டு நிற்கின்றது இந்து தேசம். கனடாவுடன் அரசியல் முறுகல் வந்தவுடன் கனடா இந்திய தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேற்றியபோது பதிலுக்கு இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால் இங்கே கடைசி அமரிக்க தூதரை அழைத்தாவது கண்டனம் தெரிவிக்க வக்கில்லை. அப்படிச் செய்தால் நிஜ்ஜார் கொலையில் அமித்ஷாவின் வகிபாகம் உறுதிசெய்யப்பட்டுவிடும். பாவம் இந்தியனுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சீ.  ....போங்கய்யா    வரவுசெலவு திட்டத்தில்   இலங்கைக்கு   கோடி கணக்கில் பணம்  ஒதுக்கீடு செய்ய  முடிகிறது    

தமிழ்நாடு பணம் கேட்டால் கொடுக்க முடியாது 

அமெரிக்காவில் உள்ள இந்தியார்களையும்.  எற்றிவர விமானங்களை அனுப்பவும். முடியவில்லையா. ??   

 

இதனால் ஏதாவது லாபம் இருந்தாலே இந்திய அரசு செயல்ப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of aircraft and text

 

 

எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து பராமரிப்பு என்பது பெரும் பொருட் செலவு பிடிக்கும் என்பது மட்டுமல்லாமல் தேவையற்றதும் கூட என்று கருதுவார்கள்.

அதனால்தான் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போது, ஒட்டுமொத்த வகையில் பொது மன்னிப்பு கொடுத்து, நாட்டை விட்டு சுயமாக வெளியேற கால அவகாசம் தருவார்கள்.
இன்னொரு பக்கம் உங்கள் நாட்டில் இருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகளை, குடிமகன்களை  நீங்களே உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அழைப்பு விடுவார்கள்.
இந்த வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் அலட்சியப்படும் பட்சத்தில்தான் வலுக்கட்டாய வெளியேற்றத்தை நிகழ்த்துவார்கள்.

அப்போது கூட மனிதர்களை கால்நடைகளைப்போலவோ பொருட்களை போலவோ கருதாமல்  அடிப்படை வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வழியாகத்தான் வெளியேற்றம் செய்வார்கள்.

 

Ezhumalai Venkatesan 

😂 ஏழுமலையான் எந்த உலகத்தில் இருந்து எழுதுகிறார் என விளங்கவில்லை. சட்ட விரோதமாக இருப்போரை "வந்து அழைத்துப் போங்கோ" என்று நாடுகளுக்கு அறிவிப்பார்களாம். நாடுகளும் வந்து கௌரவமாக அழைத்துப் போகுமாம். எந்த நாட்டில் இது நடக்கிறது😂?

அமெரிக்காவில் இவ்வளவு சட்ட விரோதக் குடியேறிகள் தேங்கக் காரணம், பிடித்து அடைத்து வைக்காமல், பெயரைப் பதிந்து விட்டு வழக்கைப் பின் போட்டு விடுவர். பிணையில் வெளியே விடப் பட்டவர், வழக்கிற்கு வராமல் ஒளித்து வாழ்ந்து கொண்டிருப்பார். இதை going underground என்பார்கள்.

இதற்கு ஒரே வழி, கைது செய்து, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றி விடுவது தான். உடனடியாக வெளியேற்றா விட்டால், சட்டத்தரணி நீதி மன்றில் தடையுத்தரவு வாங்கி, ஒரு குடிவரவு நீதிபதியின் முன் ஆஜராக்கக் கோர முடியும். நீதிபதியப் பொறுத்து அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் படும் அல்லது மேலும் பரிசீலிக்கப் படும். இதனால் தான் உடனடியாக அனுப்பப் படுகிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து சுய விருப்பில் (voluntary) வெளியேறும் குடியேறிகள் மட்டும் தான் பயணிகள் விமானத்தில் பயணிப்பர். ஏனையோர் காலா காலமாக சரக்கு விமானங்களில் கிடைக்கும் ஓரிரு ஆசனங்களில் அமர்த்தப் பட்டுத் தான் நாடு கடத்தப் படுவர். இந்த C-17 இராணுவ விமானம், துருப்புகள் பயணிக்கும் விமானம். முன்னேற்றம் (upgrade) என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2025/02/07/world/video/india-protest-trump-effigy-burnt-ldn-digvid

இந்தியாவில் ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் உருவபொம்மையும் எரிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா!

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து இந்தியா தனது கவலையை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் முதல் சில உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.

புதிய நிர்வாகம் பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள் பிரதமர், அமெரிக்காவுக்கு வருகை தர அழைக்கப்பட்டிருப்பது, இந்திய - அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. புதிய நிர்வாகத்துடன் பரஸ்பர ஆர்வமுள்ள அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவதற்கு இந்தப் பயணம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக இருக்கும். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த பிரமுகர்களும் பிரதமர் மோடியைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வணிகத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் அவர் பெறுவார்.

அதிபர் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இந்த முறை, அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்களில் ஒருவர். பதவியேற்புக்குப் பிறகு பிரதமர் மீண்டும் அவரை அழைத்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்" என்று தெரிவித்தார்.

அப்போது, அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, "நாடு கடத்தல் பிரச்சினையில் இந்தியா தனது கவலைகளை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. இதில், உண்மையான பிரச்சினை என்பது சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள அப்பாவிகளைத் தவறாக வழிநடத்துவதுதான். இதைச் செய்பவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். நாடு கடத்தப்படுபவர்களை அழைத்துக் கொண்டு மேலும் பல அமெரிக்க விமானங்கள் வரக்கூடும். 487 இந்திய குடிமக்கள் இப்போது நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

பின்னணி என்ன? - அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, “வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை, கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்” என்று தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத நாடு திரும்பிய இந்தியர்கள் கூறும்போது, “சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை” என்றார்.

அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின இதுதொடர்பாக அமெரிக்க அரசுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா! | MEA flags mistreatment of Indian illegal migrants deported from US says Vikram Misri - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'US return மாப்ளலாம் இல்ல.. Returned by US மாப்ள தான் இருக்கு வேணுமா'

  • கருத்துக்கள உறவுகள்

USA

Colombia sends air force planes to bring home migrants deported from the US

 
This handout picture released by the Colombian Aerospace Force press office shows a Boeing 737-700 aircraft before preparing to take off to San Diego, California, to bring back people deported by the U.S., at the Military Air Transport Command CATAM in Bogota on Jan. 27, 2025.

This handout picture released by the Colombian Aerospace Force press office shows a Boeing 737-700 aircraft before preparing to take off to San Diego, California, to bring back people deported by the U.S., at the Military Air Transport Command CATAM in Bogota on Jan. 27, 2025.

A Colombian Air Force jet was expected to land back in the country early Tuesday carrying 110 Colombians deported from the United States.

The flight from San Diego, along with another traveling from Houston back to Colombia, follows a dispute sparked Sunday when Colombian President Gustavo Petro refused to allow U.S. military planes to send deported Colombians back home.

Petro said such treatment was disrespectful. His refusal prompted U.S. President Donald Trump to threaten to impose tariffs, which Petro said he would reciprocate before the two countries announced they had reached an agreement to defuse the situation.

Colombia’s president tangles with Trump over accepting deportees

Petro said the Colombian Air Force flights would allow the migrants to travel home “without being handcuffed.”

"This provision: dignity for deportees, will be applied to all countries that send deportations to us,” Petro said.

Trump has quickly moved to carry out deportations, one of his campaign pledges, since taking office last week. He said Monday that if countries do not accept their migrants fast, “they’ll pay a very high economic price, and we’re going to immediately install massive tariffs.”

While Colombia balked at the U.S. military flights, Guatemala has accepted several U.S. Air Force flights carrying Guatemalan migrants deported from the United States in recent days.

The latest flight took place Monday, with 64 Guatemalans returning home.

Guatemala’s Vice President Karin Herrera said Monday she was monitoring the care and condition of migrants arriving from the United States.

"Guatemalan migrants are people with rights and dignity. Our commitment is to guarantee that their arrival in the country, to their land, is in the best conditions,” Herrera said.

U.S. deportation flights are not new, with U.S. Immigration and Customs Enforcement carrying out hundreds of the flights each year. But the use of military flights is new, with the agency previously using commercial and chartered flights to deport people who are illegally in the United States.

Some material for this article came from The Associated Press, Agence France-Presse and Reuters.
https://www.voanews.com/amp/colombia-sends-air-force-planes-to-bring-home-migrants-deported-from-the-us/7952750.html

  • கருத்துக்கள உறவுகள்

'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள்

ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குஷ்ப்ரீத் சிங், ஆறு மாதங்களுக்கு முன்பு 45 லட்சம் ரூபாய் செலவழித்து அமெரிக்கா சென்றிருந்தார்.

குஷ்ப்ரீத் சிங்கின் தந்தை, தனது நிலம், வீடு மற்றும் கால்நடைகள் மீது கடன் வாங்கி குஷ்ப்ரீத்தை அமெரிக்காவுக்கு அனுப்பினார். ஆனால், தற்போது அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்தியர்களில் குஷ்ப்ரீத் சிங்கும் ஒருவர்.

ஜனவரி 22-ம் தேதி, தான் எல்லை தாண்டியதாகவும், பிப்ரவரி 2-ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குஷ்ப்ரீத் கூறுகிறார்.

"தண்ணீர் குடித்துவிட்டு காட்டைக் கடக்கச் சொன்னார்கள். யாராவது பின்னால் விழுந்தால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் பாதையில் முன்னோக்கிச் செல்லுங்கள், வழிகாட்டி செல்பவரைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே பாதையைக் கடக்க முடியும், பின்னால் விழுபவர்கள் எப்போதும் அங்கேயே தான் இருப்பார்கள்." என்று அவர்கள் கூறியதை விவரிக்கிறார் குஷ்ப்ரீத்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம்,Kamal Saini/BBC

படக்குறிப்பு,குஷ்ப்ரீத் தனது பாஸ்போர்ட்டைக் காட்டி, அதில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்

அமெரிக்காவில் பிடிபட்ட குஷ்ப்ரீத் 12 நாட்கள் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

இதுகுறித்து பேசிய அவர், "முதல் நாளில் எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் எங்களை கேலி செய்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள், நாங்கள் தான் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டோம்." என்கிறார்.

ராணுவ விமானத்தில் அவர் எப்படி ஏற்றப்பட்டார், அப்போது எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்து குஷ்பிரீத் விவரித்தார்.

"அவர்கள் எங்களுக்கு கைவிலங்கிட்டபோது, சூழலின் தீவிரத்தை உணர்ந்தோம். முதலில் அவர்கள் எங்களை வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள்.

நாங்கள் அங்கேயே விடப்படுவோம் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தரையிறங்கியபோது, எங்கள் முன் ஒரு ராணுவ விமானம் நிற்பதைக் கண்டோம்" என்று விவரிக்கிறார்.

குஷ்பிரீத் கடந்த சில நாட்களில் தான் எதிர்கொள்ள நேர்ந்ததை நினைத்து மிகவும் கவலையடைந்தவராகக் காணப்பட்டார்.

அமெரிக்காவை அடைய நிறைய பணம் செலவானது, மேலும் "எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெற்றால், நாங்கள் இங்கே ஏதாவது வேலை செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆனால் இப்போது நாங்கள் வெளியே வேலை தேட மாட்டோம்" என்றும் கூறினார்.

குஷ்பிரீத் சிங்கின் தந்தை உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார். அழுதுகொண்டே, "எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், முழுத் தொகையையும் கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பாதியையாவது கொடுங்கள்" என்றார்.

'வழியில் இறந்த உடல்களையும் பார்த்தேன்'

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,Pradeep Sharma/BBC

படக்குறிப்பு,சுக்பால் சிங் நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டை விட்டு வெளியேறினார்

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் உர்மர் தாண்டாவைச் சேர்ந்த சுக்பால் சிங், காடுகள் மற்றும் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்ததாகக் கூறினார்.

சுக்பால் சிங், பிபிசி நிருபர் பிரதீப் சர்மாவிடம், வீட்டை விட்டு வெளியேறி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்.

வழியில் உள்ள சிரமங்களைப் பற்றி அவர் கூறுகையில், "யாரும் தவறான பாதையில் செல்ல வேண்டாம், முடிந்தால் அங்கு செல்லவே வேண்டாம் என்று எல்லோரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இங்கே உணவு கிடைத்தால் அதை மட்டும் சாப்பிடுங்கள். அங்கு உணவு இல்லை. மேலும், அவர்கள் உங்கள் பணத்தை பறித்துச் செல்கிறார்கள், பாதுகாப்பும் இல்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் எங்களை முதலில் இத்தாலிக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் எங்களை லத்தீன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் சுமார் 15 மணிநேரம் ஒரு படகில் பயணம் செய்தோம். மலைகளில் 45 கிலோமீட்டர் தூரம் நடந்தோம், அங்கே யார் விழுந்தாலும், அவர்களை அங்கேயே விட்டுவிடுவார்கள். வழியில் பல சடலங்களைப் பார்த்தோம்" என்று பகிர்ந்தார்.

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,Pradeep Sharma/BBC

படக்குறிப்பு,அமெரிக்கா செல்ல ஹர்விந்தர் சிங் ரூ.42 லட்சம் செலவளித்துள்ளார்

ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தாசுவா நகரைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்கின் கதையும் இதே போன்றதுதான்.

முதலில் டெல்லிக்கும், பின்னர் கத்தாருக்கும், அங்கிருந்து பிரேசிலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.

"நான் பிரேசிலில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன், பின்னர் அவர்கள் என்னிடம் பெருவிலிருந்து உங்களுக்கு விமானம் இருப்பதாக சொன்னார்கள், நாங்கள் பேருந்தில் பெரு சென்றோம், ஆனால் அங்கு விமானம் இல்லை, அங்கிருந்து நாங்கள் டாக்ஸியில் சென்றோம்." என்றார்.

இதற்கு 42 லட்சம் ரூபாய் செலவிட்டதாக ஹர்விந்தர் சிங் கூறுகிறார்.

"நாங்கள் பனாமாவை அடைந்தபோது சிக்கிக்கொண்டோம். அங்கு ஒன்றிரண்டு பேர் இறந்தனர், ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார், இன்னொருவர் காட்டில் இறந்தார்," எனக் குறிப்பிடுகிறார் ஹர்விந்தர் சிங்.

செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,Gurminder Grewal/BBC

படக்குறிப்பு,முஸ்கானுக்கு செல்லுபடியாகும் இங்கிலாந்து விசா இருந்தது, ஆனாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக்ரோன் பகுதியைச் சேர்ந்த முஸ்கான் என்பவர் மூன்றாண்டு படிப்பு விசாவில் பிரிட்டன் சென்றிருந்தார்.

அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கான விசா மீதமுள்ளது, ஆனால் அவர் அமெரிக்கா சென்றவுடன், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

பிபிசிக்கு செய்திகள் வழங்கும் நிருபர் குர்மிந்தர் கிரேவாலின் கருத்துப்படி, அவர் ஜனவரி 5, 2024 அன்று பிரிட்டனுக்குச் சென்றார்.

முஸ்கான் கூறுகையில், "நாங்கள் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள துஹாவானாவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தோம். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வந்து எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினர். அவர்கள் எங்களை 10 நாட்கள் தங்களுடனேயே வைத்திருந்து, எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "கலிஃபோர்னியா காவல்துறையினர் எங்களை அழைத்துச் செல்ல வந்தார்கள். பிறகு எங்களை இந்தியாவுக்கு அனுப்பினர். இங்கு வந்த பிறகுதான் நாங்கள் இந்தியாவுக்கு வந்திருப்பதையே உணர்ந்தோம். அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டோம்.

நாங்கள் முறையான விசாவில் தான் சென்றோம். எந்த எல்லையையும் தாண்டவோ அல்லது எந்த சுவற்றிலும் ஏறியோ செல்லவில்லை" என்கிறார் முஸ்கான்.

அது மட்டுமின்றி, "செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா என்னிடம் உள்ளது, ஆனால் நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு எங்கும் செல்ல முடியாது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றும் குறிப்பிட்டார்.

"குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் அவரை அனுப்பியிருந்தோம், ஆனால் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் இப்போது இதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கி குழந்தையை அனுப்பியுள்ளோம்" என்று கவலை தெரிவித்தார் முஸ்கானின் தந்தை ஜெகதீஷ் குமார்.

முஸ்கானின் வீட்டுக்குச் சென்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சரப்ஜித் கவுர் மனுகே, "இன்னும் இரண்டு வருடம் செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா அந்தப் பெண்ணிடம் இருந்தாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

முஸ்கானின் குடும்பத்துடன் தங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக மனுகே கூறுகிறார். "எங்கள் மகள் துஹாவானாவைப் பார்க்கச் சென்றார், அவர்களே அவரை அங்கு அழைத்துச் சென்றார்கள்,

அதன் பிறகு எல்லாம் நடந்துள்ளது.

அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிலிருந்து இதுபோன்ற விஷயங்களை எதிர்பார்க்கவில்லை" என வருத்தம் தெரிவித்தார்.

11 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றவர்

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,BBC/Gurpreet Chawla

படக்குறிப்பு,ஜஸ்பால் சிங் அமெரிக்காவை அடைந்து 11 நாட்கள் தான் ஆகியிருந்தது

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் பகுதியைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டபோது அமெரிக்காவில் 11 நாட்கள் மட்டுமே இருந்துள்ளார்.

பிபிசி செய்தியாளர் குர்பிரீத் சாவ்லாவிடம் பேசிய அவர், "அமெரிக்கா செல்லும் கனவு கலைந்து விட்டது" என்று கனத்த இதயத்துடன் கூறினார்.

அவரது அமெரிக்க பயணம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இந்தக் கனவுக்காக அவர் 40 லட்ச ருபாய் இழந்துள்ளார்.

புதன்கிழமையன்று, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த 104 இந்தியர்களில் ஜஸ்ப்ரீத்தும் ஒருவர்.

2022 ஆம் ஆண்டு பார்வையாளர் விசாவில் இங்கிலாந்து சென்றதாகவும், அங்கு ஸ்பெயினில் இருந்து பஞ்சாபி ஏஜென்ட் ஒருவரை தொடர்புகொண்டதாகவும் ஜஸ்பால் சிங் கூறுகிறார்.

பின்னர் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐரோப்பாவை அடைந்தார் ஜஸ்பால் சிங்.

இதற்குப் பிறகு, வெவ்வேறு நாடுகளில் சுமார் 6 மாதங்கள் கழித்த பிறகு, பனாமா காடுகளின் வழியாக அமெரிக்காவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

ஜஸ்பால் சிங் கூறுகையில், "கழுதையில் பயணம் செய்த அனுபவம் மிகவும் ஆபத்தானது. அங்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெண் குழந்தைகளின் உடல்கள் உருண்டு கிடப்பதையும் கண்டேன், எலும்புக்கூடுகளையும் பார்த்தேன். பயணத்தின்போது எங்களுக்கு சிறிது ரொட்டியும், ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளும் மட்டுமே கிடைத்தன" என தனது பயணத்தை விவரித்தார்.

அமெரிக்க எல்லையைத் தாண்டியதும், அமெரிக்க ராணுவம் தன்னைக் கைது செய்ததாக ஜஸ்பால் கூறுகிறார்.

மேலும் " பல வழிகளில் நாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம். விமானத்தில் ஏறிய பிறகு, கைகளும் கால்களும் கட்டப்பட்டன. விமானம் பல இடங்களில் நின்றது, ஆனால் அமிர்தசரஸை அடைந்த பிறகுதான் என் கைகளும் கால்களும் விடுவிக்கப்பட்டன" என தெரிவித்தார் .

"நிலத்தை விற்ற பிறகும், என் மகனால் எங்கும் செல்ல முடியவில்லை"

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,Kamal Saini/BBC

படக்குறிப்பு,தனது கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக ராபின் ஹண்டா கூறினார்

ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ராவில் வசிக்கும் ராபின் ஹண்டாவும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக 7 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில், அவரும் திருப்பி அனுப்பப்பட்டார்.

ஹண்டா கணினி பொறியியல் படித்துவிட்டு சிறந்த எதிர்காலத்தைத் தேடி அமெரிக்கா சென்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் அமெரிக்கா செல்வதற்காக 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினேன். ஒரு மாதமாக வழியில் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டேன். வழியில் பல சிரமங்களை சந்தித்தேன். சில சமயங்களில் எனக்கு உணவு கிடைத்தது, சில சமயங்களில் கிடைக்கவில்லை.

கடலிலும், சில நேரங்களில் படகுகளிலும் இருந்தேன்.

சில இடங்களில் பலர் என் பணத்தைப் பறித்துச் சென்றனர், இதுபோல பல வகையான பிரச்னைகளை எதிர்கொண்டேன்"

என ஹரியாணாவைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் கமல் சைனியிடம் ராபின் ஹண்டா தெரிவித்தார்.

"ஜனவரி 22-ம் தேதி நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். பின்னர் நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடித்து ராணுவத்திடம் சரணடைந்தோம். அவர்கள் எங்களை ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம்" என்றும் குறிப்பிட்டார் ராபின் ஹண்டா .

அதன் பிறகு, "முகாமிலிருந்து எங்களை எங்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, எங்கள் கைகளும் கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன. எங்கள் முன் ராணுவ விமானம் நிற்பதைப் பார்த்தபோது, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்பதையும் அவர் பகிர்ந்தார்.

மேலும், "நான் யாரையும் இந்த வழியில் வெளியே செல்ல அறிவுறுத்த மாட்டேன். இது மிகவும் கடினமான பாதை." என ஹண்டா இப்போது கூறுகிறார்.

தனது மகனை அனுப்புவதற்காக ரூ.45 லட்சம் செலவு செய்ததாக ராபின் ஹண்டாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

ராபின் ஹண்டாவின் தந்தை கூறுகையில், "ஏஜென்சி எங்களை ஏமாற்றி விட்டது. மகன் ஒரு மாதத்தில் வந்து விடுவான் என்று சொன்னார்கள், ஆனால் நாங்கள் 6-7 மாதங்கள் வீடு வீடாக அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் எங்களை சித்திரவதை செய்தனர், மின்சார அதிர்ச்சி கூட கொடுத்தனர்." என்கிறார்.

"எங்கள் குழந்தையை அடிக்கும் வீடியோக்களும் எங்களிடம் உள்ளன. நல்ல வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, எங்கள் நிலத்தை விற்றோம், ஆனால் அது நடக்கவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

நடந்தவற்றை அவர் விவரிக்கும்போது, ராபின் ஹண்டாவின் பாட்டி பியார் கவுர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

"பசியாலும் தாகத்தாலும் என் மகன் அவதிப்பட்டார்" என்றும் கூறினார்.

மேலும், "அவர் நிலத்தை விற்று ராபின் ஹண்டாவை அனுப்பினார். நிலத்தை விற்றதால் ஹண்டாவின் தாத்தாவும் நோய்வாய்ப்பட்டார். இது அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது அவருக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்தார்.

'அமெரிக்கா செல்ல 50 லட்ச ரூபாய் செலவழித்தேன்'

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், இந்தியா, அமெரிக்கா
படக்குறிப்பு,ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டபோது 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவை அடைந்திருந்தார்

பஞ்சாபின் ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள கஹான்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங், அக்டோபர் 2024 இல் அமெரிக்கா சென்றார்.

"இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகளால், ஜஸ்விந்தர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்," என ஜஸ்விந்தர் சிங்கின் மாமா கர்னைல் சிங் பிபிசியிடம் கூறினார்.

'நாங்கள் அமெரிக்காவிலிருந்து கைவிலங்குகள் போடப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டோம்' என அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்ட 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ஜஸ்விந்தர் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவரது உடல்நிலை மோசமாக உள்ளது, ஒருவேளை அவர் மன அழுத்தத்தில் இருக்கலாம்" என்று கர்னைல் சிங் கூறுகிறார்.

இந்நிலையில், ஜஸ்விந்தர் சிங்குக்கு காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"முகாமில் சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், பாதி ஆப்பிள் அல்லது ஜூஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் எப்போதாவது மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் ஜஸ்விந்தர் குடும்பத்தினரிடம் கூறினார்," என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஜஸ்விந்தர் சிங்குக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார், இரு சகோதரர்களுக்கும் சொந்தமாக நிலம் உள்ளது. அங்கே அவர் விவசாயம் செய்து வந்தார்.

அதனையடுத்து, கடந்த ஆண்டு ஒரு ஏஜென்ட் மூலம் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்.

அமெரிக்கா செல்ல அவரது குடும்பம் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"இந்தப் பணத்துக்காக, நாங்கள் எங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உறவினர்களிடமிருந்து நிறைய பணம் கடன் வாங்கியிருந்தோம்" என வருத்தத்துடன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c863dvqeq87o

  • கருத்துக்கள உறவுகள்

‘Treated like criminals’: Shackling of Indians aboard 40-hour migrant flight sparks new outrage against Trump

US officials kept around 100 deported Indian migrants in shackles for their 40-hour flight home, including during bathroom breaks, in the latest incident to spark anger overseas at President Donald Trump’s migration crackdown.

Indian lawmakers demonstrated outside parliament on Thursday, some wearing shackles and others mocking the much-touted friendship between Trump and Indian Prime Minister Narendra Modi.

Elsewhere in New Delhi, members of the youth wing of India’s main opposition party burned an effigy of Trump.

Last month, the spectacle of Colombian deportees being shackled as they boarded a US deportation flight sparked a bitter dispute between the two countries, with Colombian president Gustavo Petro initially refusing the military plane permission to land.

The anger in India comes days ahead of an expected visit by Modi to meet Trump – whom he has called a “true friend” – at the White House.

S. Kuldeep Singh Dhaliwal, a government minister in the western state of Punjab, where the deportation flight landed, urged Modi to “now use his friendship to resolve the issue.”

Dhaliwal also questioned “the usefulness of this friendship if it cannot help Indian citizens in need,” his office said in a statement.

The flight to India was the longest in distance since the Trump administration began deploying military aircraft for migrant deportations, according to a US official.

“Our hands were cuffed and ankles tied with chains before we took the flight,” said 23-year-old Akashdeep Singh, who arrived in Punjab on Wednesday with 103 other deportees.

“We requested the military officials to take it off to eat or go to the bathroom but they treated us horribly and without any regard whatsoever,” Singh added.

“The way they looked at us, I’ll never forget it… We went to the bathroom with the shackles on. Right before landing, they removed (the shackles) for the women. We saw it. For us, they were removed after we landed by the local police officials.”

US Border Patrol Chief Michael W. Banks posted a video of the Indian deportees being put onto a plane on X. In the video, shackles are seen on the wrists and ankles of several men who shuffle slowly up the ramp.

CNN has reached out to the Pentagon and US Customs and Border Protection for comment on whether the deportees were held in shackles for the duration of the flight.

‘Better life, better future’

Deportee Sukhpal Singh, 35, also said the shackles were kept on throughout the flight, including during a refueling stopover on the Pacific island of Guam.

“They treated us like criminals,” he said. “If we would try to stand because our legs were swelling due to the handcuffs they would yell at us to sit down.”

Young Indians looking for work opportunities have made up a sizeable portion of undocumented migrants in the US, many after making the dangerous trek through Latin America to reach the US southern border.

Many say they see no future at home where a jobs crisis is stifling young hopes in the world’s most populous country.

In just four years, the number of Indian citizens entering the US illegally has surged dramatically — from 8,027 in the 2018-19 fiscal year to 96,917 during 2022-23, government data showed.

Families have previously told CNN how they sold off land to raise the tens of thousands of dollars charged by “travel agents” to take migrants on the risky journey to the US.

“I had gone for work, for better life, for a better future,” said Sukhpal Singh, who has a son and daughter and hoped to better provide for them by getting a job in the US.

“You see it in movies and you hear from people around you that there’s work there and people are successful there so that’s why I also wanted to go.”

https://www.cnn.com/2025/02/07/india/india-trump-shackles-deportations-intl-hnk/index.html

 
 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அமெரிக்கா மாப்பிள்ளைகுத்தான் உன் பொண்ணை கொடுப்பேன்னு ஒத்தக் காலில நின்னியே..... இப்ப ஒரு லோடு வந்து இறக்கிட்டாய்ங்க... வேணும்னா அதுல ஒருத்தன செலக்ட் பன்னு NOW NOW'

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2025 at 10:24, Justin said:

😂 ஏழுமலையான் எந்த உலகத்தில் இருந்து எழுதுகிறார் என விளங்கவில்லை. சட்ட விரோதமாக இருப்போரை "வந்து அழைத்துப் போங்கோ" என்று நாடுகளுக்கு அறிவிப்பார்களாம். நாடுகளும் வந்து கௌரவமாக அழைத்துப் போகுமாம். எந்த நாட்டில் இது நடக்கிறது😂?

 

Colombia sends air force planes to pick up migrants deported from US

https://a2news.com/english/rajoni-bota/bota/kolumbia-dergon-avione-te-forcave-ajrore-per-te-marre-emigrante-i1139000

Gustavo Petro said Colombian migrants will travel "without handcuffs," on Colombian Air Force planes.

"This provision, dignity for deportees, will apply to all countries that deport them," he said.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2025 at 11:19, Maruthankerny said:

Colombia sends air force planes to pick up migrants deported from US

https://a2news.com/english/rajoni-bota/bota/kolumbia-dergon-avione-te-forcave-ajrore-per-te-marre-emigrante-i1139000

Gustavo Petro said Colombian migrants will travel "without handcuffs," on Colombian Air Force planes.

"This provision, dignity for deportees, will apply to all countries that deport them," he said.

அமெரிக்க குடிவரவுத் திணைக்களம் "கொலம்பியாவை வந்து கூட்டிப் போகுமாறு அழைத்ததாக" எந்த ஆதாரமும் செய்தியில் இல்லை. இந்தியர்களைக் கொண்டு போனது போல அமெரிக்க C-17 இராணுவ விமானத்தில் அனுப்பி வைத்த போது, தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பியது கொலம்பியா, பின்னர் தாமே தம் விமானத்தை அனுப்பினர். இது வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகளில் அனுபவம் கொண்ட உங்களுக்கு புரியாத விடயமாக இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவில் இருந்து இப்படி களவாக மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுபவர்களால் கிந்தியா பல பொருண்மிய நன்மைகளை அடைகிறது. அதனால் தான் இதனை தடுக்காமல்.. தொடர்ந்து வருகிறது.

சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான ரம்பின் முடிவுகள் வரவேற்கத்தக்கவை. கிந்தியவோ எந்த நாடோ சட்டவிரோத குடியேறிகளை.. பொய் அகதிகளை வெளியேற்றுவது நல்லது. உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பொய்யும் புரட்டும் செய்து சம்பாதித்தவர்கள் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.