Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

நாடளாவிய ரீதியில் மின் தடை!

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1420451

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு – நோயாளர்கள் அவதி

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு – நோயாளர்கள் அவதி.

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும்,  மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,  புதிதாகக் கொண்டு வரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1420455

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிப்பின் காலப்பகுதி குறைக்கப்படுகின்றதா?

திடீர் மின் தடை-காரணம் வெளியானது!

பாணந்துறை  துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் பல இடங்களில் மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதேவேவை தற்போது நிலைமையை மீட்டெடுக்கும் பணியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு  ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1420459

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம்!

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக  எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச் சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனினும்  கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1420481

  • தமிழ் சிறி changed the title to நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்துண்டிப்பு கால எல்லை  குறையும்  சாத்தியம்

சில பகுதிகளில் வழமைக்குத் திரும்பி வரும் மின்சார விநியோகம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மாலை 4 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420489

  • கருத்துக்கள உறவுகள்

மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை

மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை

கூரைகளில் சூரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு மின்க்தி அமைச்சு விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=199901

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம்!

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக  எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச் சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனினும்  கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1420481

நம்ம முன்னோர்களுக்கு...சனிமாற்றம் ..குருமாற்றம் பிழை போல இருக்கு...தேங்காயில் தப்பி ..இப்ப கரண்டில் நிக்கினம்...எதுக்கும் முனெச்சரிகையாய்..மகிந்தவின் கட்சியில் சேர்ந்தால் ...வழக்கை..போட்டு அவை காப்பாத்துவினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது

Published By: DIGITAL DESK 2

09 FEB, 2025 | 05:20 PM
image
 

நாட்டில் சுமார் 80 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/206245

  • கருத்துக்கள உறவுகள்

மின்வெட்டு தொடர்பில் நாளை வௌியாகவுள்ள தகவல்

மின்வெட்டு தொடர்பில் நாளை வௌியாகவுள்ள தகவல்

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மின்சக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது.

கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட் மற்றும் 2021 டிசம்பர் மாதமும் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=199913

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இரவு 8.30 மணியில் இருந்து தற்போது வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்கு வழமைக்குத் திரும்பும் என மின்சாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 9.26 ற்கு மின்சாரம்வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மின்சார விநியோகம் தடை

 

Untitled.png
 
இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

மேற்படி பகுதிகளுக்கு மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அட இங்கையும் குரங்கு பாய்ந்துவிடதா..😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, alvayan said:

மீண்டும் மின்சார விநியோகம் தடை

 

Untitled.png
 
இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

மேற்படி பகுதிகளுக்கு மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அட இங்கையும் குரங்கு பாய்ந்துவிடதா..😆

சீனாவால் கட்டப் பட்ட நுரைச்சோலை மின் நிலையம் ஒரு வாழ் நாள் நோயாளி. என்ன நேரத்தில் அடிக்கல் நாட்டினார்களோ.. அ ரில் இருந்து இன்று வரை பிரச்சினைதான்.

அது கட்டிய செலவை விட… திருத்திய செலவு அதிகம் என்று சொல்வார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

சீனாவால் கட்டப் பட்ட நுரைச்சோலை மின் நிலையம் ஒரு வாழ் நாள் நோயாளி. என்ன நேரத்தில் அடிக்கல் நாட்டினார்களோ.. அ ரில் இருந்து இன்று வரை பிரச்சினைதான்.

அது கட்டிய செலவை விட… திருத்திய செலவு அதிகம் என்று சொல்வார்கள். 😂

டொலர் கடை சாமான்மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சீனாவால் கட்டப் பட்ட நுரைச்சோலை மின் நிலையம் ஒரு வாழ் நாள் நோயாளி. என்ன நேரத்தில் அடிக்கல் நாட்டினார்களோ.. அ ரில் இருந்து இன்று வரை பிரச்சினைதான்.

அது கட்டிய செலவை விட… திருத்திய செலவு அதிகம் என்று சொல்வார்கள். 😂

இதையும் சென்னை விமான நிலையத்தையும் ஒரு ஆட்கள் தான் கட்டியிருப்பார்களோ?

1 hour ago, alvayan said:

டொலர் கடை சாமான்மாதிரி

 

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் தட்டுப்பாடு - குரங்குகள்தான் காரணம்.

மின்சாரம் தடை - குரங்குகள்தான் காரணம்.

உது அனுமார் காலத்து நெருப்பு கண்டியளோ…🤣

#பின்னரிட்ட தீ தென்னிலங்கையிலே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குரங்கு காணும் நாட்டையழிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில இடங்களில் குரங்குகள் பாய்ந்து எரிந்து போவது  வழமை அதற்குப் பதிலாக சப் ஜெனரேட்டர்கள் என்ன செய்கின்றன ?

சிலவேளை நம்ம வன்னியன் சார் தான் வந்து விளக்க்கம் தரனும் . @வன்னியன்அண்ணா  இங்கு  அழைக்கபடுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஒரு குரங்கு காணும் நாட்டையழிக்க.

சிங்களம் வழக்கம் போலவே நினைக்குது எப்பாடு பட்டாவது தமிழரின் அபிலசைகள் வேட்ட்கைகள்  எப்பாடு பட்டாவது தணிப்பது அதன்பின் அதே புலம் பெயர் தமிழர்பணத்தின்  மூலம் இலங்கையை தன்னிறைவு பெற்ற நாடாக்குவது அதன் பின் ஆதே தமிழரை கொதி தூளில் போடும் தாரில் எரிப்பது இதுதான் அவர்களின் ஒரே நோக்கம் .

முடிந்தால் இந்த அனுராவால் பயங்கரவாதஉலகளவில்  தடை செய்யப்பட்ட பயங்கரவாத  தடை சட்டத்தை நீக்க சொல்லுங்க பார்க்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் முக்கிய இயங்கு மையங்களில் மின் உற்பத்தி விநியோக மையங்களும் அடங்கும். அதனை குரங்கு.. குளறுபடிகள் இன்றி அனுர அரசாலும் செயற்படுத்த முடியாமலா இருக்கிறது, இவர்களும் பழைய அரசுகளின் பாதையில் தான் ஆட்சி செய்கிறார்கள் போல. ஒரு மணி நேர மின் வெட்டால் கூட கெவ்வளவு பொருண்மிய இழப்பு என்பதை ஜே வி பி கணக்கிட முடியாமலா இருக்கிறது...?

  • கருத்துக்கள உறவுகள்

மின் தடைக்கு காரணம் முந்தைய அரசாங்கங்களே!

 

தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று மின்சக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கங்களின் திட்டமிடப்படாத மற்றும் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகளே மின் தடைக்கு வழிவகுத்ததாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

“பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்தத் தவறிய முந்தைய அரசாங்கங்களின் குறுகிய பார்வை கொண்ட செயல்களாலும், தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத மோசமான வழிகாட்டுதலாலும் இந்த நிலைமை ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

இருப்பினும், இந்த நிலைமைக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, இது மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

மின் விநியோகத் தடையால் பெரிதும் இன்னல்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் மின்சார அமைப்பை மீட்டெடுப்பதில் கடினமாக உழைத்து எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.”

 

https://www.samakalam.com/மின்-தடைக்கு-காரணம்-முந்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு!

சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு!

இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது.

இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது.

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (0600 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டிருந்தது.

முதலில் தொழில்நுட்பக் கோளாறாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறெனினும் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர்.

படிப்படியாக மின்சாரம் நேற்று மாலையாகும் போது வாமைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் மின் துண்டிப்பின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை தூண்டியிருந்ததுடன், பல்வேறு நாடுகளின் பிரதான தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தது.

அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

 

May be a doodle of rat and text

 

May be a doodle of windmill and text

 

 

May be an illustration of ‎text that says '‎直1 リ ۱۱١ ۲ من لا M ١ தமிழ் தமிழ் o Απαιοειάe. 10.02.2025‎'‎

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சீனா!

இலங்கையில் இருந்து சென்ற குரங்குகள் அங்கு என்ன குளறுபடிகள் செய்கின்றனவோ??🐒😳

  • கருத்துக்கள உறவுகள்

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - மின்சக்தி அமைச்சரிடம் பிரதான எதிர்க்கட்சி கேள்வி

10 FEB, 2025 | 05:44 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக கடந்த 8 வாரங்களாக மின்சாரசபை பொறியியலாளர்களால் மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு அபாகரமான நிலைமை ஏற்படவிருந்தமையை அறிந்திருந்தும் அமைச்சரால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார்.

இன்று திங்கட்கிழமை (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு குரங்குகள் தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. 

அதன் பின்னர் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. இறுதியில் நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகளின் செயலிழப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மின்சக்தி அமைச்சர் இவை அனைத்துக்கும் அப்பால் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்தார். 

அவ்வாறெனில் இவ்வாறான நிலைமை ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் சூரிய மின் உற்பத்தியின் ஊடாக 1,300 மெகாவோல்ட் மின்சாரத்தை இணைத்தமை தவறான தீர்மானமா?

கடந்த ஆட்சி காலங்களில் இந்த துறையில் பொறுப்புக்களை வகித்தவர்கள் என்ற ரீதியில் எம்மால் கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

கடந்த 8 வாரங்களாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. ஒருபுறும் ஞாயிற்றுக்கிழமை மின்சாரப் பாவனை குறைவடைந்து காணப்பட்டதோடு, மறுபுறம் சூரிய மின் உற்பத்தி அதிகபட்சமாகக் காணப்பட்டது.

தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக அது குறித்து நாளாந்தம் கண்காணித்து வந்த பொறியியலாளர்கள் அமைச்சருக்கு புதுப்பிக்கப்பட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். 

அந்த வகையில் இரு மாதங்களாக இது தொடர்பில் மின் சக்தி அமைச்சரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முன்னரே அறிந்திருந்த தகவல்களின் அடிப்படையில் மக்களை அறிவுறுத்தியிருந்தால் அசௌகரியங்களையாவது குறைத்திருக்கலாம். ஆனால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்தமையை தேசிய குற்றமாக்கும் வகையிலேயே இவர்களது கருத்துக்கள் காணப்படுகின்றன. 

தொடர்ச்சியாக 8 ஞாயிற்றுக்கிழமைகளாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலை ஏற்படுவதை அறிந்திருந்தும் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

உண்மையில் இந்த பிரச்சினைக்கு அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை. மின்சார பொறியியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/206330

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.