Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்

Featured Replies

போலிகளாக இராமல் தாம் கொண்ட கொள்கைக்காக தன்னலமின்றி வீரமுடன் தற்கொடை செய்த போராளிகளுக்கு தலைவணங்குகிறேன்.

அதே நேரம் தோல்வியில் முடிந்த அல்லது கவனஈர்ப்பு தாக்குதலில் வவுனியா முன்னரங்கில் கொல்லப்பட்ட புகைப்படங்களோ பெயர் விபரங்களோ தெரியாத 7 பெண் போராளிகளுக்கும் தலை வணங்குகின்றேன்.

இராணுவ சாதனைகளுக்கான காத்திருப்புகளில் கடந்த சில மாதங்களில் பலியிடப்பட்ட 4000 பொது மக்களையும், புங்குடுதீவு மாணவி உட்பட காணமற் போனவர்களையும் மற்றும் சிறையிலும் சித்திரவதை கூடங்களிலலும் துன்புறும் உறவுகளையும் இங்கு நினைவு கூறுகின்றேன்.

மேலும் நேற்றைய தினம் சூழ்நிலை காரணமாக தமிழில் பதிவிட முடியாத காரணத்தினால் இன்று சில கருத்துகளுக்கு பதில்தருகின்றேன்.

how dare use the word MR sanakkiyan?

சா, எனது அடிமதில் மாவீரர்கள் தப்பி மீண்டும் பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னை போன்றவர்களிடம் இருந்தது வெறும் பகல் கனவே.ஏனெனில் கட்டு நாயக்கா விமான நிலைய தாக்குதலில் தப்பியவர்(களில்) ஒருவர் பின்னர் கருணாவால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே.

அடுத்டு சாணக்கியன் பாவித்த சொற்கள் (அது வேறு செய்தியூடக செய்தியாகவிருந்தாலும்) வன்மையாக கண்டிக்கிறேன்.இச்செய்தியை அனுமதித்த மட்டுறுத்தினர் கனவு காண்கிறாரா?

நண்பர் நுணாவிலான்,

மக்களில் ஒருவனாக உண்மைகளை சொல்வதில் யாழ்களத்தில் நான் பின்நிற்கத் தேவையில்லை!

செய்திகளை எந்த மாற்றமின்றி முலத்துடன் இணைத்துள்ளேன்.

"புலிப் பயங்கரவாதிகள்" என்று வரும் இலங்கை அரச செய்தியை பிரசுரித்தமைக்காக என் மீது போர் தொடுக்கும் நீங்கள், நீங்கள் வதியும் நாடுகளின் அரசாங்கங்கள் புலிகளை அவ்வாறே "பயங்கரவாதிகள்" எனப் பட்டிலிட்டமைக்கு எதிராக மேற்கொண்ட தனிப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட முடியுமா.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=354351

மேற்படி பதிவில் நான் கட்டமிடாத பகுதியை நீங்கள் கட்டமிட்டு காட்டுவதன் பிரதான நோக்கம் என்ன?

எனக்கும் அவர் அந்த சொல்லுக்கு மட்டும் கட்டம் கொடுத்து பிடிக்கவில்லை ஆனாலும் இது அவரின் சொந்த கருத்து இல்லை போல் இலங்கை அரசின் செய்தியை தான் இனைத்துள்ளார் போல்.

நண்பர் சசி,

ஒருவர் கூறுகின்றார் என்பதற்காக அன்றி உண்மையை ஆராய்ந்து அறிவது சிறந்தது.

ஆமாம் சசி அது சாணக்கியனனின் கருத்தில்லை என்பது 100% எனக்கு தெரியும்.ஆனால் அவர் தனது கருத்தை இணைக்கும் போது சாணக்கியன் அக்கருத்துடன் ஒத்து போகின்றார் என்பது அவரது செய்தி இணைப்பு சொல்லி நிற்கிறது. இதற்கு யாழ்கழ மட்டுறுத்தினர்கள் எத்தனை பேரின் செய்தியை வெட்டி எறிந்தார்கள் என நெஞ்சை திறந்து சொல்லுங்கள் நண்பர்களே?

யாழ் களத்தில் நீண்ட கால உறுப்பினர் அன்பின் சாணக்கியன் நாசுக்காக இச்செய்தியை கசியவிட்டுள்ளார் என்பது தான் எனது உய்த்தறிவு.

21 இன்னுயிகளை எமது மண்ணுக்காக ஈர்த்த அந்த வீர மறவர்கட்கு .......

வீரர்களின் சாதனைகளுக்கிடையே ஒளித்து நின்று தாக்குதல் நடத்துவது தகுமா?

மட்டுறுத்துனர்க்கு ஒரு வேண்டுகோள்:

எனது பதிலை கண்டவுடன், தொடர்புபட்ட செய்திகளையும் எனது பதிலையும் மட்டுறுத்தல் செய்யவேண்டாம்! அவர்களுக்கு கொடுத்தது போல் எனக்கும் ஒரு நாள் அவகாசம் தரவும்.

அன்புடன்,

Edited by சாணக்கியன்

  • Replies 175
  • Views 38.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வித்தகி போன விடுதலை வீரர்களுக்கு வீரவணக்கம்....

மீண்டும் களம் திரும்பி விட்டார்களாம் என்று சொல்லபட்டபோத மகிழ்சி அடைந்தேன்...ஆனால் வித்தகி போய்விட்டார்கள்...மீண்டும் எமது மண்ணில் துளிர் விடுவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வான் மற்றும் தரைக் கரும்புலிகளின் துணிகர "எல்லாளன்" படை நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசின் அநுராதபுர விமானப்படை தளத்தில் அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட வானூர்திகளின் விபரம் வருமாறு..

2107crashedplanes_J.jpg

எம் ஐ 24 வகை உலங்கு வானூர்திகள் - 2

எம் ஐ 17 வகை உலங்கு வானூர்திகள் - 2

கே - 8 பயிற்சி யுத்த விமானம் - 1

searcher2_02_46878_200.jpg

ஆளாலில்லா உளவு விமானம் (UAV) - 3

பயிற்சிக்குரிய PD6 சிறியரக விமானம் - 8

அமெரிக்க தயாரிப்பு நவீன உளவு விமானம் (Beechcraft surveillance plane) - 1

(இந்த விமானம் பேச்சுக்களுக்கு முன்னர் ஐ தே க அரசால் அமெரிக்காவிடம் இருந்து பெற ஓடர் வழங்கப்படது)

தாக்குதல் களத்துக்கு வெளியே வீழ்ந்து நொருங்கிய பெல் 212 - 1

எல்லாளன் படை நடைவடிக்கையின் போது சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்ட இழப்பு $40 மில்லியன்.

"Among the planes allegedly damaged or destroyed was a Beechcraft surveillance plane worth 14 million, two Mi17 helicopters, two Mi24 helicopters, three unmanned aerial vehicles, a K-8 jet and eight PD6 propeller trainer aircraft,"the paper reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23574

http://www.telegraph.co.uk/news/main.jhtml...3/wlanka123.xml

Edited by nedukkalapoovan

eelanatham11pn0.jpg

eelanatham22zs0.jpg

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இரும் பறைமுழக்கம்"

மற்றொரு குயில் கூவத்தொடங்கிற்று

ஆயிரங்கால் மண்டபம் மேல்

அடர்ந்த பனிப்புகார்

நிழலின்றிச் சரிகின்றன

சங்கமித்தையின் அரசமரங்கள்

எரிமலைகள் வெடிக்கின்ற நேரமிது

அதிகாலை விடிவெள்ளி முளைக்கும் வேளையில்

ஓர் யுத்தப்பிரகடனம்

முற்றுப்புள்ளியில்லா கேள்விக்குறியாய்

எங்கள் மெய் தொலைத்துப் பதறினோம்

எக்காளமிட்டது நரிகள்

பூக்காது எரிக்கப்படும் மலர்களுக்காய்

ஊன் உடல் உருகினோம்

தரையினுள் பாதாளம் வரை

மெல்ல மெல்ல புதைந்துபோனது ஆத்மா

ஐயகோ மேனி சிலிர்க்கிறது

மீண்டுமொருமுறை

எல்ளாளன் எங்கள் விழிதடவினான்

சாவிற்குள் வாழ்வதாய் சேதி சொன்னவர்களே

கொஞ்சம் கண்திறந்து பாருங்கள்

மௌனங்கள் வெடிக்கின்றன

மற்றவர்கள் வாழ்விற்காய்

மரணிக்கும் தேசமிது

ஒருசில புழுக்களால் உடைத்துப் போடமுடியாது

மறுபடியும் கரிய இரும்புலிகள்

காவியம் எழுதத் தொடங்குகிறார்கள்

ஈழ வரலாற்றில் வான்பறவை பக்கங்கொள்கிறது

பூமியும் வானும் கைகோர்த்து ஆர்ப்பரிக்கின்றன

என் தாய் வயிற்றுப் பிறப்புகளே

இனி புன்னகை பூசுங்கள்

தேசம் பூக்கத் தொடங்குகிறது

வேட்கைமீறி மொழியிழந்து

பேசாப்பொருளாய் நான் மறைந்துகொண்டிருக்கிறேன்

இப்போது என்னுள்

எண்ணிலடங்காப் பிரசவங்கள்

என் நேராத் தலைவனின் மௌனத்தை

கிளறிய தேசங்களே

கொஞ்சம் உறங்கிடுங்கள்

பகலவன் விழிதிறந்து பகைபொசுக்கி

ஒளிபரவும் காலமிது

நாங்கள் பேசத் தொடங்குவோம்

உணர்வின் ஊமைகளை உடைத்தெறிவோம்

எங்கள் முகங்களில் சிரிப்பைத்தடவி

உயிர் கலந்து போனார்கள் மறவர்கள்

எங்கள் வீரப்புதையல்களே

உங்கள் கரங்களைக் கொஞ்சங் காட்டுங்கள்

என்னால் முடிந்தது ஓரிருமுத்தங்கள்.

முரசத்திற்காக

சாமிசுரேஸ் (சுவிஸ்)

22.10.2007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் முந்தி ஒருக்கா சொன்னமாதிரி........................ பொருளாதாரத்த குறிவைச்சுத்தான் அண்மையில நடந்த ஓரளவு பெரிய தாக்குதல்கள் எல்லாம் நடந்திருக்கு..................................... இலங்கை அரசாங்கத்துக்கு விழுந்திருக்கிற ........ இனி விழப்போற பொருளாதார அடி சிங்கள மக்கள அரசாங்கத்துக்கெதிரா திருப்பபோது............ சர்வதேசத்தின்ர அழுத்தங்களும் அதிகரிக்க போது..................

காவியமான சோதரர்களுக்கு வீரவணக்கங்கள்

இவ்வெற்றியை கண்டு உவக்கும் அதே நேரம் இவ் வெற்றியின் பின்னால் உள்ள எம் மாவீரர்களின் அர்ப்பணிப்புகளையும் எம்மால் உணர்ந்திடக் கூட முடியாத இக் கரும்புலி வீரர்களின் மனவோட்டங்களையும் மனதில் கொண்டு, என்ன நோக்கத்திற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்தார்களோ அவ் விடிவை விரைவாக்கிட நாம் அனைவரும் ஒன்றாகி உழைப்போம் என்று திடசங்கற்பம் பூண்போமாக.

(எவ்வளவுக் கெவ்வளவு உலகத் தமிழர் அனைவரும் விரைவாக அனைவரும் ஒருமித்த குரலாகி, ஒரே இலட்சியத்தோடு எம் முயற்சிகளை அனைத்து வழிகளிலும் விரைவு படுத்துகிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு எமது உறவுகளின் உயிர் இழப்புக்களை தவிர்த்து, எமது விடுதலையை விரைவு படுத்திக் கொள்ளலாம்.)

அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக கனடிய தமிழ்ச்சோலை வானொலிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே.பாலகுமாரன் தெரிவித்த கருத்துக்கள்-ஒலி வடிவம்

Edited by தமிழினீ

மாவீரர்களிற்கு வீர வணக்கம்...

Edited by gowrybalan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தரை, ஆகாய மார்க்கத்தில் தாக்குதல்

[23 - October - 2007] [Font Size - A - A - A]

* அநுராதபுர படைத்தளத்தில் 20 புலிகள், 17 படையினர் பலி 3 வானூர்திகள் சேதமடைந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது நேற்று திங்கட்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகள் பாரிய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மூன்று வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன், தேடுதல் நடத்தச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து நொருங்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதிலும், தங்களால் எட்டு வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் விமான நிலைய வீதியிலுள்ள விமானப் படைத்தளம் மீதே நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இந்தப் பாரிய தாக்குதல் இடம்பெற்றது.

தரைவழியாக அதிகாலை 3.15 மணியளவில் விமானப் படைத்தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்த அதேவேளை, சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் இரு விமானங்கள் இந்தத் தளத்தின் மீது பலத்த குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் அணி நாலாபுறத்திலிருந்தும் கடும் தாக்குதல் தொடுக்கவே இரு தரப்புக்குமிடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி.க்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் சகிதமே புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

கரும் புலிகளின் அணி விமானப்படைத் தளத்தினுள் ஊடுவியதையடுத்து உள்ளே பாரிய வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. கரும்புலிகள் ஆர்.பி.ஜி.க்களால் தாக்குதல்களை நடத்தியதுடன், கைக்குண்டுகளையும் வீசித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

படைத்தளத்தினுள் முன்னேற முற்பட்ட கரும்புலிகளை படையினர் தடுத்துநிறுத்த முற்பட்டபோது, கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படைத்தளத்திற்கு வந்த புலிகளின் இரு விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.இந்தக் குண்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்து பாரிய சத்தத்துடன் வெடித்தபோது, அங்கு பெரும் சேதங்களேற்பட்டன. புலிகளின் இரு விமானங்களும் இரு குண்டுகளையே வீசித் தாக்கியதாக படையினர் கூறுகின்ற போதும், அவை நான்கிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலை நடத்திய புலிகளின் இரு விமானங்களும் உடனடியாக அங்கிருந்து அகன்ற அதேநேரம், கரும்புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விமானப்படைத்தளத்தின் உட்புறத்தே கடும் தாக்குதலை நடத்தியதாகப் தெரிவிக்கப்படுகிறது.

கடும் நேரடி மோதலாலும் புலிகளின் வான்வழித் தாக்குதல்களாலும் விமானப்படைத் தளத்தினுள் நீண்டநேரம் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

இந்தச் சத்தங்களால் அநுராதபுரம் நகரும் அதனை அண்டிய பல கிலோமீற்றர் தூரமும் நீண்டநேரம் அதிர்ந்து கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

விமானப்படைத்தளத்தினுள் பாரிய மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அநுராதபுரம் இராணுவ படைத்தளத்திலிருந்து பெருமளவு படையினர் விமானப்படைத்தளம் நோக்கி விரைந்து சென்றதுடன், உள்ளே தாக்குதல் நடத்திய புலிகள் தப்பிச் செல்லாதவாறு விமானப்படை முகாமைச் சூழ்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதல்கள் மற்றும் புலிகளின் விமானத் தாக்குதல்களையடுத்து அநுராதபுரம் மாவட்டம் முழுவதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இந்த உக்கிரச் சமர் அதிகாலை 5 மணிவரை நீடித்ததாகவும் அதன் பின்னரும் சில மணிநேரம் முகாமினுள் ஆங்காங்கே பலத்த வெடிச்சத்தங்களும் குண்டுச் சத்தங்களும் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

21 கரும்புலிகள்

மூன்று பெண் கரும்புலிகள் உட்பட 21 கரும்புலிகளைக் கொண்ட படையணியே தரைவழித் தாக்குதலை நடத்தியதாகவும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மேலாக இவர்கள் படைத்தளத்தினுள்ளேயிருந்தவா

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம், தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு சர்வதேச நாடுகளும் இதைக் கண்டிக்கவில்லை.

போட்டி போட்டுக்கொண்டு கண்டன அறிக்கைவிடும் இந்தியாவும் அமெரிக்காவும் இன்னும் தயக்கம் காட்டுகிறதே.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம், தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு சர்வதேச நாடுகளும் இதைக் கண்டிக்கவில்லை.

போட்டி போட்டுக்கொண்டு கண்டன அறிக்கைவிடும் இந்தியாவும் அமெரிக்காவும் இன்னும் தயக்கம் காட்டுகிறதே.

காரணம் தேடுகிறார்கள் - கண்டிப்பதற்கும், அறிக்கை விடுவதற்கும். காரணம் இல்லையெனின் - கண்டுபிடிப்பதற்கு - ஆய்வுகள் செய்வார்கள். அதனால் தான் இந்தத் தாமதம். :D

எந்த மூஞ்சியோடு கண்டிபார்கள் இது முழுக்க முழுக்க இராணுவ இலக்கு வாயை பொத்தி கொன்டுதான் இருக்க வேண்டும் இன்று புரியுது புலிகளின் பொறுமையின் காரணம்

சந்தடி சாக்கில் சமாதானக் கதவையும் அரசாங்கம் மெதுவாகத் திறந்து விட்டுள்ளது.

http://www.abc.net.au/news/stories/2007/10/23/2068309.htm

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலிடம் 4 வருடம் தமிழ் மக்கள் ஏமாளிகளாக இருந்தது போதும்.அடுத்து மகிந்தவிடம் பேச்சு வார்த்தையா? காலம் காலமாக தமிழ் மக்கள் மாங்காய் மடையர்களாக்கப்படுகிறார்கள்.

எப்போது எல்லாம் அரசு பேட்டி கொடுக்கும் போது சமாதாண கதவும் திறந்து இருப்பதாக சொல்லும்

ஏன் இன்னுமா அந்த கதவு குண்டு பட்டு உடையவில்லை?

Oct 23, Colombo: Based on sources close to the Liberation Tigers of Tamil Ealam (LTTE), a pro government Sinhala nationalist website has revealed a plot to assassinate President Mahinda Rajapaksa at the earliest possible opportunity once the setting has been decided.

The website close to the government ally Jathika Hela Urumaya (JHU) says that the LTTE's Intelligence Wing in Colombo are considering two likely methods either to use a suicide bomber or an elite super sniper to gun down the President.

It further said the sources indicated that LTTE is now coming out from a self-imposed non-active period having used this time to draw up various plans to confront the Sri Lankan Forces.

“President Rajapaksa will be attending a political rally on the 10th of November at a public meeting in Nittambuwa organized by the ruling SLFP for their political propaganda at which he is expected to make a key address to the nation.”

Our sources believe that the LTTE will target the President at this rally. It is important to note that a few LTTE intelligence cadres are located in the area having moved there a few months ago,” the website said.

Colombo Page

இந்த கரும்புலி மாவீரருக்கு எம் வீர வணக்கம்.

செய்தியை வாசித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் போராளிகளை எண்ணும் போது மிகவும் வேதனையாய் இருந்தது. ஆனால் இப்பொழுதோ படங்களை பார்க்க மனம் பொறுக்குதில்லை.

தயகவிடிவிற்காய் வித்தாகிய மாவீரகண்மணிகளுக்கு வீரவணக்கங்கள்

விழ விழ எழுவது தமிழன் மரபு.யாரும் சோராதீர்

தலைவன் கையை இறுகப்பற்றுங்கள்

The last words of the pilot

“Take this chain and give it to my wife, because I can’t be sure if I will return alive,” were the last words of the Air Force pilot who flew the ill fated Bell 212 helicopter which crashed while pursuing the LTTE aircraft involved in the attack on the Anuradhapura airbase on Monday.

The pilot, Squadron Leader Amila Mohotty, had handed the chain to a friend before taking off to give chase to the two LTTE light aircraft, accompanied by another helicopter, only to face fire from anti aircraft guns on the ground which hit his helicopter and brought it down in Mihintale, some 12km from the airbase, killing all four Air Force personnel on board, according to his grieving colleagues.

The Bell 212 helicopter was shot down by an anti aircraft gun within the perimeter of the airbase and investigators will have to find out whether the gun was fired by a member of the security forces who had mistaken the helicopter for an LTTE aircraft, or by LTTE cadres who had infiltrated the base.

Air Force colleagues of the pilot of the ill fated helicopter, who did not wish to be identified, also claim that the authorities in Colombo had asked the Anuradhapura airbase to fire at any aircraft in the sky as none of the government owned planes were in the Anuradhapura air space at the time.

The miscommunication between Colombo and Anuradhapura could have led to the security forces shooting down the Bell 212 in the dark, sources said.(031)

http://www.dailymirror.lk/2007/10/24/front/02.asp

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளின் எல்லாளன் படை நடவடிக்கையின் போது சிறீலங்கா வான் படையின் உயர்நிலை அதிகாரிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

Wing Commander AMILA MOHOTTI,

Squadron Leader RUWAN WIJERATNE,

Flight Lieutenant A.B.M.SILVA,

Flying Officer S.R.SIYAMBALAPITIYA,

Warrant Officer KPS DAYARATNE,

Corporal M.P.W. DEEGALLA, Corporal W.M.WARNAKULASURIYA, Corporal .M.W.DISSANAYAKE, Corporal E.P.N. DAYARATNE, Corporal PREETHIKUMARA,

Lance Corporal H.E.N.D.FERNANDO, Lance Corporal GUNAWARDANE of the Air Force and Lance Corporal R.J.S. RATNAYAKE of Gajaba Regiment of the Army.

Sergeant ASVEDDUMA

---------------------

விமானப்படை அதிகாரிகள் தரங்கள்.

officer_ranks.jpg

விமானப்படை இதர தரங்கள்.

airman_ranks.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம், தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு சர்வதேச நாடுகளும் இதைக் கண்டிக்கவில்லை.

போட்டி போட்டுக்கொண்டு கண்டன அறிக்கைவிடும் இந்தியாவும் அமெரிக்காவும் இன்னும் தயக்கம் காட்டுகிறதே.

அவுஸ்திரெலியாவில் கைதான தமிழர்களுக்கு உதவும் தமிழர்களின் வழக்கில், சரத்பொன்சேகா மீது கொழும்பில் மேற்கொண்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று அவுஸ்திரெலியா நீதிமன்றம் அறிவித்ததாக நண்பர் ஒருவர் சொன்னார் (உறுதிப்படுத்த முடியவில்லை). அதாவது இராணுவ நிலைகள் மீது தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், பொதுமக்கள் மீது தாக்குதல் தான் பயங்கரவாதத்தாக்குதல் என்று அவ்வழக்கில் சொல்லப்பட்டதாகவும் அந்த நண்பர் எனக்குச் சொன்னார். அனுராதபுரத்தாக்குதலில் பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை.

அவுஸ்திரெலியாவில் கைதான தமிழர்களுக்கு உதவும் தமிழர்களின் வழக்கில், சரத்பொன்சேகா மீது கொழும்பில் மேற்கொண்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று அவுஸ்திரெலியா நீதிமன்றம் அறிவித்ததாக நண்பர் ஒருவர் சொன்னார் (உறுதிப்படுத்த முடியவில்லை). அதாவது இராணுவ நிலைகள் மீது தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், பொதுமக்கள் மீது தாக்குதல் தான் பயங்கரவாதத்தாக்குதல் என்று அவ்வழக்கில் சொல்லப்பட்டதாகவும் அந்த நண்பர் எனக்குச் சொன்னார். அனுராதபுரத்தாக்குதலில் பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை.

நானும் கேள்விப்பட்டேன் சிறீலங்கா அரசாங்கம் சாட்சி சொல்லுறன் என சொல்லி செய்மதி ஊடகா வாக்குமூலங்கள் கொடுக்க அதனை நீதிமன்றம்மறுத்து இப்படியான கருத்துகளை சொல்வதானது எமக்கு சாதகமானதே.பதிவில் இருக்கும் இவை எமக்கு உதவும்.புலிக்கொடியானது கடந்த ஒருவருடமாக ஏற்றபடாமல் இருந்தது பின் இந்த கைதுவிவகாரத்தில் புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் அல்ல என நீதிம்ன்றம் தெரிவித்ததால் திலீபன் அண்ணாவின் நினைவு தினத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.ஆகவே தடைகளை நீக்கும் கருவியாக சிறீலங்காவே இருக்கும்

21 கரும்புலி மாவீரர்களும் அநுராதபுதர மண்ணில் விதைக்கப்பட்டு துயில் கொள்கின்றனர்

எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவைடைந்த 21 கரும்புலி மாவீரர்கள் அநுராதபுர மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள்.

இம் மாவீரர்களை விடுதலைப் புலிகளிடம் வழங்க மறுத்த சிறீலங்கா அரசாங்க படைகள் நீதிமன்றின் உத்தரவின் பெயரிலேயே இவர்கள் அநுராதபுர பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விதைக்கப்பட்ட மாவீரர்கள் அநுராதபுர மண்ணில் மீளாத்துயில் கொள்கின்றனர்.

நன்றி-பதிவு.

அநுராத புரத்தில் வசிக்கும் சிங்களவன் ஒருவன் தாக்குதல் சம்பவம் அதன் சேதம் பற்றி ஒரு சிங்கள தளத்தில் எழுதியது

A'pura LTTE attack on air base- Actual Story[Read]

--------------------------------------------------------------------------------

I don’t know whether u r already aware of this. This is the in4mation what I got from 4 people. 1 a journalist another who was living in the camp premises [AF quarters] n another2 who lived nearby. So this is not to let down our forces or to support the LTTE. This is just to let no bout the actual story.

How they entered the camp

The carders have cum walking from a long distance dressed in army uni4ms. On the way they have shot down number of dogs(11) using snipers [to avoid the disturbance of their barking]. Then they have entered the camp by cutting the fence. Their z a area of about 8 ft where land mines are buried n the carders have successfully disabled the mines on their way…

There are 4-5 points surrounding the camp with army /AF persons in it are having a close observation on the area [sorry to say that they haven’t seen the carders entering]. Then they have used the snipers to shoot down the men at the point and entered the points.

Nature of the attack

At the same time they have taken some of our weapons at started firing. Some AF ppl have rushed to the points to support them but unfortunately they were the victims of the carders. Then SLAF have broke fire using shell and RPG which shocked the whole area.

They also have entered n killed the ppl in the radar and disabled the aircraft firing system.

Then came the two light aircrafts and bombed the runaway. Our ppl were unable to figure out the planes due to the bad weather [it was cloudy @ that time].

Any way their main target of blowing off the armory was successfully avoided with the support of the Army n the STF. If the armory was blown off …..I wouldn’t be here to post this n whole of the A’pura town wud have been in a disaster…

The Actual Damage caused

Any way the actual damage was for 21 aircrafts [17 fully destroyed n the rest with gun shots on the body]

13 people of the forces

The Bell 212 crash landed due to misfiring of SLAF

The buildings in the camp are severely damaged including the runaway [the hanger is completely destroyed]

One of the bombs landed on an adjoining cattle shed had killed at least 25 cattle.

Bottom line - we have to admiited that the attack is 80% success for the LTTE. [rest of the 20% 4 not blowing off the armory]

http://elakiri.com/forum/showthread.php?t=49088

black_tigers_anuradhapura.jpg

என்றும் உங்கள் (மாவீரர்) நினைவுகளுடன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.