Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2025 at 07:52, தமிழ் சிறி said:

அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள்.

சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது.

செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.

இதை நாம் மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதும் போது நிர்வாக‌த்தில் இருப்ப‌வ‌ர் ஓவ‌ரா துள்ளினார் ,

புட்டின‌ கைது செய்ய‌னும் என்று கூவின‌ கூட்ட‌ம் எல்லாம் வாய் அடைத்து போய் நிக்கின‌ம்...............மான்புமிகு புட்டின் என்று எழுத‌க் கூடாதாம்

இப்ப‌ இத‌ற்க்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌ போகின‌ம்.................தேவை இல்லாம‌ யாழில் விரிச‌ல‌ உருவாக்கின‌து அவ‌ர்க‌ள் தான்

இதை சாட்டி யாழில் இருந்து ப‌ல‌ரை த‌டை செய்து வெளியில் அனுப்ப‌ முய‌ன்ற‌வ‌ர் ஒருவ‌ர்..............மோக‌ன் அண்ணா மீண்டும் எங்க‌ளை அழைத்த‌துக்கு ந‌ன்றி சொல்ல‌ க‌டைமைப் ப‌ட்டு உள்ளோம் த‌மிழ் சிறி அண்ணா

ர‌ஸ்சியா அடிச்ச‌ காணொளிக‌ள் யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ ஏலாது த‌டை

ஆனால் உக்கிரேன் ப‌டை நேட்டோ ப‌டைக‌ள் சேர்ந்து ர‌ஸ்சியா மீது சிறு தாக்குத‌ல‌ செய்து விட்டு பார்த்தியா ர‌ஸ்சிய‌ இராணுவ‌ம் ஓடுது அது இது என்று புல‌ம்பின‌ கூட்ட‌ம்

மூன்று வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ போரில் ர‌ஸ்சியா உக்கிரேனின் ப‌ல‌ இட‌ங்க‌ளை பிடித்து விட்ட‌து

இனி பேச்சு வார்த்தை என்று வ‌ந்தால் இப்ப‌ ர‌ஸ்சிய‌ ப‌டை நிக்கும் இட‌ங்க‌ள் எல்லாம் ர‌ஸ்சியாவுக்கே சொந்த‌மாகிடும்

ர‌ம் வைச்சார் பெரிய‌ ஆப்பு

இனி ஜ‌ரோப்பிய நாடுக‌ளும் வில‌கி நிக்க‌ தான் பாப்பின‌ம்

போல‌ந் மற்றும் சில‌ நாடுக‌ள் உக்கிரேனுக்கு ஆத‌ர‌வாய் நிக்கின‌ம்......................

  • Replies 65
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு ம

  • கிருபன்
    கிருபன்

    உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரசோதரன் அண்ணா சொல்லி 4 மணித்தியாலம் முடியவில்லை பாதிக்கபட்ட ஒரு இனத்தை சேர்ந்தவர் ஒருஆக்கிரமிப்பாளன் சர்வாதிகாரியை எப்படி கொண்டாடுகிறார்

மான்புமிகு புட்டின்

வெற்றி நாய‌க‌ன் புட்டின்

உற‌வே உங்க‌ளின் க‌ருத்தை என‌க்கு நேராக‌வே தெரிவிக்க‌லாமே , நான் என்ன‌ கோவ‌ப் ப‌ட‌வா போகிறேன் லொள் 😁👍...............

அப்ப‌டியே ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது...............ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்களுக்கு யாழில் ஆத‌ர‌வாய் எழுதின‌ ஒரு சில‌ரில் நானும் ஒருவ‌ன்......................இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ந‌ர‌க‌ வேட்டை ஆடின‌தை உல‌க‌ ம‌க்க‌ள் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம்

நெல்சன் மண்டேலா பிற‌ந்த‌ தென் ஆபிரிக்கா நாடு தான் ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் நின்று நெத்த‌னியாகு செய்வ‌து போர் குற்ற‌ம் என்று வெளிப்ப‌டையாய் அறிவித்த‌து...............நெத்த‌னியாகுவை அமெரிக்கா ப‌ல‌ சிக்க‌ல்ல‌ இருந்து காப்பாற்றி விட்ட‌து................புட்டினால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ உக்கிரேன் ம‌க்க‌ளை விட‌ நெத்த‌னியாகுவால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் 50 ம‌ட‌ங்கு அதிம்...................

எப்ப‌வும் ந‌டுநிலை முக்கிய‌ம் உற‌வே🙏👍......................

டென்மார்க் நாடு அமெரிக்கா கூட‌ ந‌ல்ல‌ ந‌ட்பில் தான் அந்த‌க் கால‌ம் தொட்டு இருந்த‌து , ர‌ம் டென்மார்க் அர‌சையே மிர‌ட்ட‌ தொட‌ங்கி விட்டார்.................இங்க‌த்தை வெள்ளைய‌லுக்கு இப்ப‌ தான் சிறு தெளிவு வ‌ந்து இருக்கு

கிரின்லாந்த‌ ர‌ம் த‌ன‌க்கு வேனுமாம் இதில் இருந்து தான் இரு நாட்டுக்கும் இப்போது சிறு ப‌கை

நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இங்க‌த்தை வெள்ளையளோட‌ இருந்து தான் வ‌ள‌ந்தேன் ப‌ழ‌க‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள் , எதுக்கு எடுத்தாலும் அமெரிக்கா இருக்கு அமெரிக்கா இருக்கு என்று வார்த்தைக்கு வார்த்தை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இங்க‌த்தை வெள்ளைய‌ல் சொல்லி இருக்கின‌ம்

இப்ப‌ அமெரிக்கா டென்மார்க்கு எதிரி நாடு மாதிரி

இது தான் உல‌க‌ம்...................சில‌ வ‌ருட‌ம் க‌ழித்து புட்டின் ம‌ற்ற‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளுக்கு போனால் சிவ‌ப்பு க‌ம்ப‌ல‌ம விரித்து வ‌ர‌வேற்ப்பின‌ம்😁............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

மேற்கு ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்திற்க்கா புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இங்கு யாழ்களத்தில் புளங்காகிதம் அடைத்துக்கொண்டு இருந்த அரசியல் விற்பன்னர்கள் ...... இப்போ தடுமாறி நிற்கிறார்கள் ......... இங்கிருக்கும் கருத்துக்களை வாசிக்க எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. உண்மையில் விழுந்து விழுந்து சிரிக்கிறேன்

மீசையில் மண் ஓட்ட போகிறது என்றதும் ....... இப்போ ட்ரம்பை சர்வாதிகாரி ஆக்கிவிடால் மண் ஒட்டிடாது என்று கிளம்பி இருகிறார்கள் என்று எண்ணுகிறேன். சூப்பர் ! பாலஸ்தீனத்தில் ௪௦ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த நிதன்யாகுவிற்கு யாழ்களத்தில் சிலை வைக்காத குறையாக விக்கிக்கொண்டு இருந்தார்கள் ......... கொக்குவில் தவடியில் சாதியை ஒழிக்க சித்தார்த்தன் என்று ஒரு கோமாளி பெரியாருக்கு சிலை வைக்க போகிறதாம். அது சீமானுக்கு எதிரான செயலக இருக்கும்போது ஏன் அந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டும்? அவருடன் கூடி நித்தன் யாகுவிற்கும் சேர்த்து சிலை வையுங்கள் புட்டினையும் பழிவாங்கியதாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய புகழும் இருக்கும்

நீங்கள் "விழுந்து விழுந்து" சிரிக்காத திரியே யாழில் இல்லைப் போல இருக்கிறதே? இப்படி அடிக்கடி விழுந்து எழுவதால் , ஏனையோர் எழுதுவதைத் தலைகீழாகப் புரிந்து கொண்ட ஒருவராக இருக்கிறீர்கள் என அஞ்சுகிறேன்😎.

நெரன்யாஹுவுக்கு யார் சிலை வைத்தார்கள் இங்கே? நன்னிச் சோழன் இஸ்ரேல் செய்வது சரி என்று தீவிரமாக ஆரம்பத்தில் கருத்திட்ட போதே, இங்கே எதிர்த்து எழுதியவர்கள், புரின் விசிறிகள் அல்ல, உக்ரைனின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்ட யாழ் உறவுகள் தான் நெரன்யாஹுவையும் நன்னிச் சோழனையும் கண்டித்தார்கள்.

இதே நிலைப்பாடு தான் இப்போதும் இருக்கிறது. உக்ரைன் பக்கம் நியாயம், ரஷ்யாவின் பக்கம் அநியாயம். உங்கள் "விருப்ப நாயகனான" ட்ரம்ப் புரின் பக்கம் சாய்வது எப்போதோ எதிர்பார்க்கப் பட்டது. இதெல்லாம், மாறவில்லை.

இந்த நிலைப்பாடுகளுக்குப் பின்னால் அறவுணர்வு இருப்பதால் இவை எப்போதும் மாறாமல் இருக்கும்! ஆனால், உடைந்த அறித்திசைகாட்டியோடு உலாவரும் சிலரால் திரிக்கேற்ப நாணல் போல சாய்ந்து கொள்ள முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நியாயம் said:

நீங்கள் வரலாற்று புத்தகங்கள் வாசிக்கவில்லை, வரலாற்று புஸ்தகங்கள் வாசித்தது போதாது என அங்கீகாரம் பெற்ற வித்துவான்கள் கூறப்போகின்றார்கள்.

வரலாற்றுப் புத்தகங்களை மட்டுமல்ல, கேஸ் கோப்புகள்😎, தரவுகள் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும். அதன் பிறகு அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்ளலாம்!

எதையும் வாசிக்காமல் "முகப் புத்தகத்தை" மட்டும் வாசித்தால் இப்போது அமெரிக்கா இருப்பது போல முழு உலகமும் மாறுவதைத் தடுக்க இயலாது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது. உக்ரேனை முழுதாகவே கொள்ளை அடிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் எழுதும் அமெரிக்கா, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் உக்ரேன் என்றொரு நாடே இருக்காது என்ற எச்சரிக்கை.

கனடாவிற்கு எச்சரிக்கை, பனாமாவிற்கு எச்சரிக்கை, மெக்சிகோவிற்கு எச்சரிக்கை....... முழு ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை. உள்நாட்டு கணக்கு வழக்கை சரிசெய்ய, முழு உலகையுமே அடித்துப் பறிக்க வேண்டுமா...... இது தான் எல்லோரும் எதிர்க்க வேண்டிய ஏகாதிபத்தியம்.

இன்றும் கூட இலங்கைக்கு எதிராக ஐநாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒரு நாடு ரஷ்யா, வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் அல்லது தீர்மானத்திகு ஆதரவாக வாக்களிக்கும் நாடு உக்ரேன். இலங்கைக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதில் உக்ரேன் தான் எங்களுக்கு அழிவு செய்தது, ரஷ்யா எங்களைக் காப்பற்றியது என்ற ஈழத்தமிழர்களின் நிலைப்பாடும், அதனால் உக்ரேன் அழிந்து போகட்டும் என்றும் நினைப்பது எங்களை கண்களை எங்கள் விரல்களாலேயே நாங்கள் குத்துவது போல.

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் 2/3 பங்கு ஐரோப்பா வங்கிகளின் பொறுப்பிலேயே இருக்கின்றது. மிகுதி தான் அமெரிக்காவின் வசம் இருக்கின்றது. ரஷ்யாவின் மிகப் பெரிய வியாபார பங்குதாரர் ஐரோப்பாவே, அமெரிக்கா அல்ல. இன்று பலவீனப்பட்டிருக்கும் ரஷ்யாவால் ஐரோப்பாவிற்கு எதிராக இன்னொரு யுத்தத்தை நடத்தவே முடியாது. ஆகவே, முழு ஐரோப்பாவும் ஒன்றிணைந்து, அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு, உக்ரேனிய மக்களுக்காக ஓரணியில் நிற்கவேண்டும்.

ரஷ்யா மீதான, முக்கியமாக புட்டின் மீதான வசீகரம் என்பது “சுத்தி சுத்தி அடிப்பேன்; ஏயார்ல பாய்ந்து பாய்ந்து அடிப்பேன்” என்ற கதாநாயகனின் மீதான வழிபாடு போன்றது.. தோல்வியால் துவண்ட இனத்திற்கு ஒரு கதாநாயகன் எப்போதும் தேவை!

இதில் ஏன் உக்கிரேனுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று யாழில் பக்கம் பக்கமாக எழுதிக்கிடக்கு. அதற்கு எதிர்ப்பாகவும் பக்கம் பக்கமாகக் கருத்துக்கள் உள்ளன.

இப்போது ட்ரம்ப் (ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டவர்) பின்பற்றுவது முதலாளித்துவம், ஏகாதிபத்யம் என்பதற்குள் எல்லாம் வராது.. வெறும் ரியல் எஸ்டேட் டீல்.. ஒரு கொள்கை எல்லாம் கிடையாது.. அதிகாரம் கொடுக்கும் போதையில் திளைப்பது மட்டும்தான் ட்ரம்ப் செய்வது.. அடுத்த நாலு வருடங்களில் உலகம் எவ்வளவு காலம் பின்னோக்கி நகர்கின்றது என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்குள் ஈழம்,ரஷ்யா,உக்ரேன்,அமெரிக்கா என பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்.....

டொனால்ட் ரம்ப் அவர்கள் சென்ற தேர்தலில் அமெரிக்க மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவர் என்பதை மறக்க முடியாது. அதன் படி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் படியே தற்போதைய உலக அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை நம்பினால் இப்படித்தான் நடக்கும்.பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கி தலிபான்களின் ஆட்சிக்கு இடமளித்தது பொன்ற நிலையே இன்று உக்கிரைனில் நடந்துள்ளது.உக்கிரைன் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி இன்றைய ரஸசியாவின் அண்ட நாடு. அது ரஸ்யாவைச் சீண்டும் விதமாக நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய முயற்சித்த காரணத்தினாலேயே ரஸ்யா உக்கிரன் மீது போர் தொடுத்தது. தனது எல்லையில் நேட்டோவின் படைகளை நிலைநிறுத்துவது அதன்பாதுகாப்பு கருதி அது செயற்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியமே வேண்டாம் என்று பிரிந்த பிரிட்டன் உக்கிரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஆதரிப்பதுதான். இன்று எல்லோராலும் கைவிடப்பட்டு உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் பெற்றரதுதான் உக்கிரைன் கண்ட மிச்சம். இனி ஒருவரும் உக்கிரைனனைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அமெரிக்கா பாலஸதீனத்தை ஆக்கிரமித்தால் புட்டினினும் கண்டு கொள்ள மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

வரலாற்றுப் புத்தகங்களை மட்டுமல்ல, கேஸ் கோப்புகள்😎, தரவுகள் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும். அதன் பிறகு அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்ளலாம்!

எதையும் வாசிக்காமல் "முகப் புத்தகத்தை" மட்டும் வாசித்தால் இப்போது அமெரிக்கா இருப்பது போல முழு உலகமும் மாறுவதைத் தடுக்க இயலாது!

நியாயம் அவர்கள் செய்திகள் கேட்கவோ வாசிக்கவோ இல்லையோ

ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்ற டொனால்ட் ரம்பின் கேவலமான வசைபாடலுக்கு எதிராக உலகம் திகிலுடன் எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றது.

1 hour ago, வீரப் பையன்26 said:

உற‌வே உங்க‌ளின் க‌ருத்தை என‌க்கு நேராக‌வே தெரிவிக்க‌லாமே , நான் என்ன‌ கோவ‌ப் ப‌ட‌வா போகிறேன் லொள் 😁👍...............

🤗 ஒகே

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளார் - கனிமங்கள் குறித்து உக்ரைன் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் - வெள்ளை மாளிகை

21 Feb, 2025 | 11:23 AM

image

உக்ரைனின் கனிமங்களை  அமெரிக்கா பயன்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மீண்டும் ஈடுபடவேண்டு;ம் என வேண்டுகோள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அவமதிக்கும் வார்த்தைகளை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்து வெள்ளை மாளிகை ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆதரவிற்கான இழப்பீடாக அல்லது பரஸ்பர உதவிக்காக உக்ரைன் தனது அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் உக்ரைனிற்கு மிகச்சிறந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கினோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அரிய கனிமங்களை தன்னுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என விடுத்த வேண்டுகோள்களை உக்ரைன் ஜனாதிபதி ஏற்கனவே நிராகரி;த்துள்ளார் எனது தேசம் விற்பனைக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள அபூர்வமானகனிமங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள  உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது,எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஸ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள  உக்ரைன் ஜனாதிபதி  அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது  குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்

https://www.virakesari.lk/article/207271

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எமக்குள் ஈழம்,ரஷ்யா,உக்ரேன்,அமெரிக்கா என பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்.....

டொனால்ட் ரம்ப் அவர்கள் சென்ற தேர்தலில் அமெரிக்க மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவர் என்பதை மறக்க முடியாது. அதன் படி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் படியே தற்போதைய உலக அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார் என நினைக்கின்றேன்.

உண்மை தான் அண்ணா

ஜனநாயகத்தின் ஓட்டைகளை சில நரிகள் மிகத் திட்டமிட்டு புகுந்து ஆட்கொண்டு விடுகிறார்கள். இதில் கட்சியின் செல்வாக்கு, முதல் இருந்த கட்சிக்கான மாற்றீடு, முதல் இருந்த ஜனாதிபதியின் தவறுகள் மற்றும் ட்ரம்க்கு எதிராக நின்றவரின் பலவீனம் என்ற காரணிகளோடு முக்கியமாக ட்ரம் போன்ற அடாவடித்தன மனநிலை கொண்டவர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதிகரித்து விட்டார்கள். இதனை நாம் தற்போது கண்டிக்காமல் விட்டு விட்டால் எம் அடுத்த தலைமுறையின் கதவுகள் இவர்களால் தட்டி உடைக்கப்படும்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புலவர் said:

அமெரிக்காவை நம்பினால் இப்படித்தான் நடக்கும்.பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கி தலிபான்களின் ஆட்சிக்கு இடமளித்தது பொன்ற நிலையே இன்று உக்கிரைனில் நடந்துள்ளது.உக்கிரைன் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி இன்றைய ரஸசியாவின் அண்ட நாடு. அது ரஸ்யாவைச் சீண்டும் விதமாக நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய முயற்சித்த காரணத்தினாலேயே ரஸ்யா உக்கிரன் மீது போர் தொடுத்தது. தனது எல்லையில் நேட்டோவின் படைகளை நிலைநிறுத்துவது அதன்பாதுகாப்பு கருதி அது செயற்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியமே வேண்டாம் என்று பிரிந்த பிரிட்டன் உக்கிரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஆதரிப்பதுதான். இன்று எல்லோராலும் கைவிடப்பட்டு உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் பெற்றரதுதான் உக்கிரைன் கண்ட மிச்சம். இனி ஒருவரும் உக்கிரைனனைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அமெரிக்கா பாலஸதீனத்தை ஆக்கிரமித்தால் புட்டினினும் கண்டு கொள்ள மாட்டார்.

ப்றெக்சிற் பிரிட்டன் மக்களின் முடிவு! அதை கொள்கையளவில் எதிர்த்தாலும், தொழிற்கட்சி அதை நிராகரிக்கவோ மாற்றவோ முயற்சிக்கவில்லை.

ப்றெக்சிற்றுக்கு முன்னரே, உக்ரைன் மக்கள் "ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவில் சேர்தல்" ஆகியவற்றிற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் - இது அவர்களின் முடிவு! ஆனால், பிரிட்டன் கேஸ் போல அங்கே நடக்கவில்லை. ரஷ்யாவின் கைப்பொம்மையான அப்போதைய உக்ரைன் தலைவர் மக்கள் தீர்ப்பை நிராகரித்து சட்டமியற்ற முயன்ற வேளையில், மக்களும் உக்ரைன் நாடளுமன்றப் பிரதிநிதிகளும் சேர்ந்து அவரைப் பதவி நீக்கி, மொஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

வேறொரு நாட்டின் மக்களின் தீர்ப்பை, ஆயுத பலம் கொண்டு மாற்ற முயல்கிறது ரஷ்யா என்ற ஜனநாயக அமைப்பு சீர் குலைந்த நாடு. இதை சகஜமாக்குவதால் வரும் ஆபத்துக்களை யோசிக்காமல் எம்மவரும் புரின், ரஷ்யா விசிறிகளாக வலம் வருவது வேடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

உண்மை தான் அண்ணா

ஜனநாயகத்தின் ஓட்டைகளை சில நரிகள் மிகத் திட்டமிட்டு புகுந்து ஆட்கொண்டு விடுகிறார்கள். இதில் கட்சியின் செல்வாக்கு, முதல் இருந்த கட்சிக்கான மாற்றீடு, முதல் இருந்த ஜனாதிபதியின் தவறுகள் மற்றும் ட்ரம்க்கு எதிராக நின்றவரின் பலவீனம் என்ற காரணிகளோடு முக்கியமாக ட்ரம் போன்ற அடாவடித்தன மனநிலை கொண்டவர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதிகரித்து விட்டார்கள். இதனை நாம் தற்போது கண்டிக்காமல் விட்டு விட்டால் எம் அடுத்த தலைமுறையின் கதவுகள் இவர்களால் தட்டி உடைக்கப்படும்.

அண்னே உங்கள் மனசாட்ச்சிக்கு உட்பட்டு நீங்கள் இதற்குமட்டும் பதில் சொல்லுங்கள்

காசாவில் எந்த ஈவிரக்கமும் அற்று 40 ஆயிரம் அப்பாவி மக்களையும் சிறுவர்களையும் குண்டு போட்டு கொன்ற அமெரிக்க ஜனாதிபதி பைடன்

உண்மையிலேயே உக்ரைன் மக்களில் கரிசனை கொண்டுதான் உக்ரைனுக்கு உதவி இருப்பானா?

"White House Insists Ukraine Hand Over $500 Billion in Mineral Wealth and Stop Criticizing Trump"

ட்ரம்பை ஏன் அடாவடி என்று சொல்கிறீர்கள்? அமேரிக்கா கொடுத்ததைதானே அவர் திருப்பி கேட்க்கிறார்?

யாழ்களம் ஆறலை பேர்ந்தவர்கள் அறம் பற்றி பேசும் களமாகவும் ரசியாவை உலகப்படத்தில் பார்க்காதவன் ரசிய இராணுவ பலத்தை பற்றி பேசும் குப்பையாக போய்விட்ட்து. இங்கே ஒரு நேர்த்தியான விவாத்தை இனி முன்னிறுத்த முடியாது குழுவாதம் மட்டுமே இங்கே செய்யலாம் என்றாகி விடடது.

எனக்கு சரி / பிழைதான் உண்டு குழுக்கள் இல்லை ஆதலால் இங்கே விவாதம் செய்ய முடியாது. உங்களிடம் கேள்விக்கான பதிலை மட்டும் எதிர்பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

மருதர், நீங்கள் ரஷ்யாவை உலக வரை படத்தில் மட்டுமல்ல, 90 களில் மொஸ்கோவில் இறங்கியும் பார்த்தவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இங்கே குழு வாதம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், மிக்க நன்றி😂! அது உங்களிடமிருந்து தான் அதிகம் உருவாகிறது என நான் நினைக்கிறேன்! அதை விடுங்கள்!

பைடன் உக்ரைனுக்கு உதவியது, ரஷ்யா இராணுவ பலம் மூலம் ஐரோப்பாவை ஆட்டையைப் போட்டு ஹிற்லர் 2.0 ஆக உருவெடுக்காமல் தடுப்பதற்குத் தான். இந்தப் பாதுகாப்பு அச்சம் தான் நேட்டோவுக்கு மேலும் இரண்டு ஸ்கண்டினேவிய நாடுகளை உறுப்பினர்களாகச் சேர்த்திருக்கிறது.

பலஸ்தீன விடயத்தில் அமெரிக்கா மட்டுமல்ல யாரும் எதுவும் ஒரு எல்லைக்கு மேல் செய்ய இயலாது. ஹமாஸ், ஈரான், ஹிஸ்பல்லா என எல்லாப் பக்கமும் இருந்து வரும் இஸ்ரேல் மீதான் அச்சுறுத்தல் நீங்கினால் ஒரு தீர்வுக்கான இடை வெளி கிடைக்கலாம், மற்ற படி எந்த முன்னேற்றமும் யாரும் வெளியே இருந்து ஏற்படுத்த முடியாது.

அமெரிக்கா கொடுத்த 500 பில்லியனுக்கு மேலான விலை அது உக்ரைனின் கனிம வளத்தில் 50% இனைக் கேட்பது. பைடனும் எதிர்பார்த்திருப்பார், ஆனால் இப்படி "நாட்டைஎனக்கு விற்று விடு! இல்லா விட்டால் புரின் என்ற வேட்டை நாயை அவிட்டு விடுவேன்!" 😎 என்று மிரட்டியிருக்க மாட்டார். இது தான் "அறளை பேர்ந்த யாழ் கள அறம் பேசுவோரின்" நிலைப்பாடென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பை விட பைடன் இஸ்ரேல் மீது அதிக ஆதரவு உள்ளவர் என்று நினைக்கின்றேன்.

மருதர் ரஷ்ய அமெரிக்க rare earth minerals கம்பனிகளில் பங்கு வாங்குவதில் நேரத்தை செலவழிக்காமல் ஏன் அறளை பெயர்ந்தவர்களுடன் மெனக்கெடுகின்றார்? உக்கிரேனியர், பலஸ்த்தீனியர்கள் மேலான அக்கறையில் என்றுதான் நினைக்கின்றேன்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அண்னே உங்கள் மனசாட்ச்சிக்கு உட்பட்டு நீங்கள் இதற்குமட்டும் பதில் சொல்லுங்கள்

1- காசாவில் எந்த ஈவிரக்கமும் அற்று 40 ஆயிரம் அப்பாவி மக்களையும் சிறுவர்களையும் குண்டு போட்டு கொன்ற அமெரிக்க ஜனாதிபதி பைடன்

2- உண்மையிலேயே உக்ரைன் மக்களில் கரிசனை கொண்டுதான் உக்ரைனுக்கு உதவி இருப்பானா?

"White House Insists Ukraine Hand Over $500 Billion in Mineral Wealth and Stop Criticizing Trump"

3- ட்ரம்பை ஏன் அடாவடி என்று சொல்கிறீர்கள்? அமேரிக்கா கொடுத்ததைதானே அவர் திருப்பி கேட்க்கிறார்?

யாழ்களம் ஆறலை பேர்ந்தவர்கள் அறம் பற்றி பேசும் களமாகவும் ரசியாவை உலகப்படத்தில் பார்க்காதவன் ரசிய இராணுவ பலத்தை பற்றி பேசும் குப்பையாக போய்விட்ட்து. இங்கே ஒரு நேர்த்தியான விவாத்தை இனி முன்னிறுத்த முடியாது குழுவாதம் மட்டுமே இங்கே செய்யலாம் என்றாகி விடடது.

4- எனக்கு சரி / பிழைதான் உண்டு குழுக்கள் இல்லை ஆதலால் இங்கே விவாதம் செய்ய முடியாது. உங்களிடம் கேள்விக்கான பதிலை மட்டும் எதிர்பார்க்கிறேன்

1- இஸ்ரேல் தான் உலகை ஆள்கிறது. இதில் பைடன் என்ன ட்ரம் என்ன வெறும் பூச்சியமே.

2- உலகில் எவருமே தனிமனிதர்களே பிரதிபலனை பாராது எவருக்கும் உதவுவதில்லை. ஆனாலும் உலக போர்களின் போது அமெரிக்கா பல தடவைகள் ஐரோப்பாவை காத்திருக்கிறது. அந்த வகையில் இன்றும் அந்த நன்றிக் கடனும் ஆபத்தான நேரங்களில் இன்றும் உதவலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டல்லவா?

3- எனக்கு அவர் அப்படி தான் அறிமுகமானார். இன்றும் எனதளவில் அப்படியே தான் பேசுகிறார் இருக்கிறார்.

4- ட்ரம்ஆ புட்டினா மருதங்கேணியா என்றால் என் தம்பி மருதங்கேணி தான் என்பது தான் எனது முடிவாக இருக்கும். நன்றி தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ட்ரம்பை விட பைடன் இஸ்ரேல் மீது அதிக ஆதரவு உள்ளவர் என்று நினைக்கின்றேன்.

மருதர் ரஷ்ய அமெரிக்க rare earth minerals கம்பனிகளில் பங்கு வாங்குவதில் நேரத்தை செலவழிக்காமல் ஏன் அறளை பெயர்ந்தவர்களுடன் மெனக்கெடுகின்றார்? உக்கிரேனியர், பலஸ்த்தீனியர்கள் மேலான அக்கறையில் என்றுதான் நினைக்கின்றேன்.

Because Nothing Surprise me anymore

நான் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன் சென்று வாசியுங்கள் .... சேலன்ஸ்கி ஒரு கோமாளி சொந்த நாடடை அழிக்கபோகிறான் (உக்ரைன் அவனது சொந்த நாடுகூட கிடையாது அது வேறு)

அமெரிக்காவின் இலக்கு உக்ரைன் கனிமவளம்

மற்றது உலகத்தில் உணவு பஞ்சத்தை உருவாக்கி தனது தானியங்களை விற்பது ( அவர்களது ஜிஎம்பொ GMO விவசாயத்தை உலகம் பூராக பரப்புவது)

அப்போது இதை அமெரிக்கவா தொடங்கியது? ரசியாதானே தொடங்கியது? என்று காவடி ஆடினார்கள் .... சேலன்ஸ்கி அதிபர் ஆனதுமே உக்ரைன் ரசிய போர்பற்றி உக்ரைன் பத்திரிகைகளே எழுதியிருப்பதை பதிந்தேன் ரசியா இராணுவத்தை எல்லைக்கு கொண்டுவர முன்பே அமெரிக்க பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் உக்காரைனில் முகம் இட்டு இருந்தார்கள் எல்லாவற்றையும் உக்ரைன் உள்ளூர் பத்திரிகைகள் எழுதிக்கொண்டு இருந்தன

இப்போது 13 மில்லியன் உக்ரைனியர்கள் அகதிகளாகி இருக்கிறார்கள்

பாதிக்கு மேற்படட உக்கரைன் போரால் அழிந்து கிடக்கிறது

கனிமவளங்களை அமேரிக்கா கையாட போகிறது இதைவிட 1994 (Budapest) புடாபெஸ்ட் ஒப்பத்ததின் அடிப்படையிலேயே இருந்திருக்கலாமே?

அமெரிக்க ஊடங்கள் மூடி மூடி மறைகிறது அதனால் ஆதாரத்துடன் நிறுவ முடியாது அமெரிக்க ஊடகங்களின் அடிப்படையில் பார்த்தால்கூட போர் தொடங்கிய பின்பு செலென்ஸ்கியின் வருமானம் பல மில்லியனாக உயர்வடைந்துதான் இருக்கிறது ( உக்ரைன் செய்திகளின்படி பில்லியன் என்கிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன்)

உக்ரைன் நாட்டில் ரசிய மக்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள் இவர்கள் மீது இன அழிப்பு வேலையையும் கொலையையும் உக்ரைன் செய்துகொண்டுதான் இருந்தது அதுபற்றி எந்த ஜனநாயக விண்ணர்களும் இங்கே எழுதுவதில்லை .... அது சர்வதேச மன்னிப்பு சபையில் கூட பதிவாகி இருக்கிறது ஒரு எல்லைக்கு பின்புதான் அவர்கள் ஆயுதம் எடுத்து போராட தொடங்கினார்கள்.

உக்கரைன் மீதான உங்கள் முதலை கண்ணீர் கூட வெறும் வேசம்தான் ... நீதி உண்மையை தாண்டி பிடித்த கொப்பில் நின்று ஆடியே தீரவேண்டும் என்ற அக்கறையே தவிர ... அவர்கள் மீதான அக்கறை அல்ல

சிரியா

சோமாலிய

லிபிய

ஈராக்

கொசோவா

செச்செனியாவில்

ஆப்கனிஸ்தானில் என்ன நடந்ததோ அதுதான் உக்ரைனிலும் நடந்தது

அடுத்து ஜோர்டான் லெபனானில் நடக்கும்போது கைதட்டும் எகிப்திற்கு அதுதான் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

தொடர்ந்து எழுதுங்கள் தம்பி. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

நியாயம் அவர்கள் செய்திகள் கேட்கவோ வாசிக்கவோ இல்லையோ

ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்ற டொனால்ட் ரம்பின் கேவலமான வசைபாடலுக்கு எதிராக உலகம் திகிலுடன் எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றது.

🤗 ஒகே

திகிலுடன் எதிர்வினை ஆற்றுகின்றார்களா? @வாலி இன் செத்தகிளி சிறகடித்து பறக்கின்றது. சரி பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

1- இஸ்ரேல் தான் உலகை ஆள்கிறது. இதில் பைடன் என்ன ட்ரம் என்ன வெறும் பூச்சியமே.

2- உலகில் எவருமே தனிமனிதர்களே பிரதிபலனை பாராது எவருக்கும் உதவுவதில்லை. ஆனாலும் உலக போர்களின் போது அமெரிக்கா பல தடவைகள் ஐரோப்பாவை காத்திருக்கிறது. அந்த வகையில் இன்றும் அந்த நன்றிக் கடனும் ஆபத்தான நேரங்களில் இன்றும் உதவலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டல்லவா?

3- எனக்கு அவர் அப்படி தான் அறிமுகமானார். இன்றும் எனதளவில் அப்படியே தான் பேசுகிறார் இருக்கிறார்.

4- ட்ரம்ஆ புட்டினா மருதங்கேணியா என்றால் என் தம்பி மருதங்கேணி தான் என்பது தான் எனது முடிவாக இருக்கும். நன்றி தம்பி.

குமாரசாமி அண்ணர் தமிழசிறி அண்ணர் ஆகியோர் அண்ணளவாக இதே கருத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து எழுதி இருகிறார்கள்

ஆனால் தங்களை அறிவாளிகளாக காட்ட வேண்டும் என்றால் இன்னொருவனை மூடன் ஆக்க வேண்டும் என்பதால். ஊரில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதுக்கு இன்னொரு எளியவனை பிடித்து நீ தாழ்ந்த சாதி என்று கொடுமை செய்யும் அதே மனநிலைதான் அப்படி செய்தவர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தானே வேண்டும்?. அதுபோல ஒருவனை பிடித்து புட்டின் ஆதரவாளன் என்று மொடடை அடித்து விடுவது இன்னொருவனை பிடித்து உக்ரைன் எதிர்பாளன் என்று பச்சை குத்தி விடடால்தான் தாங்கள் நீதிமான்கள் கதிரைகளில் இருந்துகொண்டு ஒரு ஜால்ரா அடிக்கிற குழுவையும் வைத்துக்கொண்டு எழுதி தள்ளலாம். அப்படிதான் எந்த திரியை எடுத்தாலும் இந்த யாழ்களம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

உக்கரைன் போர் தொடங்கி 3 வருடத்தில் என்றாலும் பழியை ட்ரம்மில் தூக்கி போடும் மனநிலைக்கு பலர் வந்திருப்பதே அதிசயம்.

முள்ளிவாய்க்காலில் வைத்து எங்கள் மக்களுக்கு அடித்தவனும்

உக்கரைன் மக்களுக்கு அடித்தவனும் ஒரே ஆட்கள்தான் எங்களுக்குத்தான் ஞாபக மறதி. அடித்தவனையே மறந்துவிடுகிறோம் .......

எனக்கும் உங்களுக்கும் இலக்கு ஒன்றுதானே நாங்கள் சேர்ந்துதான் இருந்தாக வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செலென்ஸ்கி நாட்டை விட்டு ஓடலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனும் பாணியில் செய்தி ஒன்று ஜேர்மன் பத்திரிகையில் உலாவுகின்றது.

ஆதாரம்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

செலென்ஸ்கி நாட்டை விட்டு ஓடலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனும் பாணியில் செய்தி ஒன்று ஜேர்மன் பத்திரிகையில் உலாவுகின்றது.

ஆதாரம்

அவர் நாட்டை விட்டு ஓடினாலும் ட்ரம்மும் புட்டினும் ஓன்றாகி குடும்பம் நடாத்தினாலும் ஐரோப்பா நிம்மதியாக நித்திரை கொள்ள போவதில்லை....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

Because Nothing Surprise me anymore

நான் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன் சென்று வாசியுங்கள் .... சேலன்ஸ்கி ஒரு கோமாளி சொந்த நாடடை அழிக்கபோகிறான் (உக்ரைன் அவனது சொந்த நாடுகூட கிடையாது அது வேறு)

மற்றது உலகத்தில் உணவு பஞ்சத்தை உருவாக்கி தனது தானியங்களை விற்பது ( அவர்களது ஜிஎம்பொ GMO விவசாயத்தை உலகம் பூராக பரப்புவது)

அப்போது இதை அமெரிக்கவா தொடங்கியது? ரசியாதானே தொடங்கியது? என்று காவடி ஆடினார்கள் .... சேலன்ஸ்கி அதிபர் ஆனதுமே உக்ரைன் ரசிய போர்பற்றி உக்ரைன் பத்திரிகைகளே எழுதியிருப்பதை பதிந்தேன் ரசியா இராணுவத்தை எல்லைக்கு கொண்டுவர முன்பே அமெரிக்க பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் உக்காரைனில் முகம் இட்டு இருந்தார்கள் எல்லாவற்றையும் உக்ரைன் உள்ளூர் பத்திரிகைகள் எழுதிக்கொண்டு இருந்தன

யாழ் களத்திற்கு மீண்டும் "மறு மலர்ச்சிக் காலம்" இப்போது!

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், மடகஸ்கார் ஊடகங்கள் எல்லாம் அடக்கி, மறைத்து வைக்கும் "ஆதாரங்களை" வைத்து அப்படியே பின்பக்கத்தால் உருவி, புதிய பார்வையாக யாழ் வாசகர்களுக்கு மருதர் தருகிறார்!

மேலோட்டமாகப் பார்த்தால் "சதிக்கதைகள்" போல தெரியும், ஆனால் உற்றுப் பார்த்தால் எல்லாம் ஏற்கனவே ரஷ்ய ஊடகங்களில் வந்து சக்கை போடு போட்டவை தான்.

செலன்ஸ்கியின் பாரம்பரிய பிறப்பிடம் கூட உக்ரைன் கிடையாது😎, ஏனெனில் அவரது பேரன் வழி யூதர்கள்!

The Jewish Chronicle
No image preview

How Jewish is Volodymyr Zelensky? Ukrainian president's h...

Looking at Zelenksy’s Jewish upbringing, it's not always clear how observant the Ukraine president is

இதே யூத வழி வந்த செலன்ஸ்கி "யூதர்களைக் கொன்ற நாசிகளின் பக்கம் நிற்கிறார், நாசி அழிப்பிற்காக ரஷ்யா உக்ரைனை ஆட் கொள்ள வேண்டும்!" என்று எழுதிய பிறகு அது ஒட்டாமல் போக, பின்னர் "உணவுப் பஞ்சத்தை உருவாக்க அமெரிக்கா தான் தனது ஸ்லீப்பர் ஏஜென்டான புரின் மூலம் உக்ரைன் மீது போர் தொடுத்தது" என்றும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.

ஆதாரம்?? அமெரிக்கா மறைப்பதால் தர முடியாது😂!

2 hours ago, Maruthankerny said:

குமாரசாமி அண்ணர் தமிழசிறி அண்ணர் ஆகியோர் அண்ணளவாக இதே கருத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து எழுதி இருகிறார்கள்

ஆனால் தங்களை அறிவாளிகளாக காட்ட வேண்டும் என்றால் இன்னொருவனை மூடன் ஆக்க வேண்டும் என்பதால். ஊரில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதுக்கு இன்னொரு எளியவனை பிடித்து நீ தாழ்ந்த சாதி என்று கொடுமை செய்யும் அதே மனநிலைதான் அப்படி செய்தவர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தானே வேண்டும்?. அதுபோல ஒருவனை பிடித்து புட்டின் ஆதரவாளன் என்று மொடடை அடித்து விடுவது இன்னொருவனை பிடித்து உக்ரைன் எதிர்பாளன் என்று பச்சை குத்தி விடடால்தான் தாங்கள் நீதிமான்கள் கதிரைகளில் இருந்துகொண்டு ஒரு ஜால்ரா அடிக்கிற குழுவையும் வைத்துக்கொண்டு எழுதி தள்ளலாம். அப்படிதான் எந்த திரியை எடுத்தாலும் இந்த யாழ்களம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

உக்கரைன் போர் தொடங்கி 3 வருடத்தில் என்றாலும் பழியை ட்ரம்மில் தூக்கி போடும் மனநிலைக்கு பலர் வந்திருப்பதே அதிசயம்.

முள்ளிவாய்க்காலில் வைத்து எங்கள் மக்களுக்கு அடித்தவனும்

உக்கரைன் மக்களுக்கு அடித்தவனும் ஒரே ஆட்கள்தான் எங்களுக்குத்தான் ஞாபக மறதி. அடித்தவனையே மறந்துவிடுகிறோம் .......

எனக்கும் உங்களுக்கும் இலக்கு ஒன்றுதானே நாங்கள் சேர்ந்துதான் இருந்தாக வேண்டும்

நீங்களும் சரி, நீங்கள் குறிப்பிட்ட இரு கள உறுப்பினர்களும் சரி, விசுகர் மேலே எழுதியதற்குக் கிட்டவாகத் தன்னும் எழுதவில்லை உக்ரைன் விடயத்தில்.

எந்த நாட்டின் எதிர்ப்பாளர்களாகவும் இருப்பதில் பெருமை, சிறுமை இல்லை! ஆனால், தரவுகளை வைத்து உரையாடாமல் சதிக்கதைகளையும், "அமெரிக்கா பதுக்கிய" ஆதாரங்களை மட்டும் வைத்து உரையாடும் போது அது சவாலுக்குள்ளாகும்! இது யாழில் இருக்கும் சிறப்பியல்புகளில் ஒன்று!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமார், நொண்ணாமார் எல்லாருக்கும் நான் ஒரு வாபஸ் அறிக்கை கொடுக்க விரும்புகிறேன்.

  1. உங்களை புட்டின் காதலர்கள், மேற்கு வெறுப்பாளர்கள் என நான் எழுதியது தவறு…தவறு…தவறுதான்.

  2. நீங்கள் புட்டின் காதலர்கள் எண்டால் - இப்போ டிரம்ப் செய்வதை வரவேற்பீர்கள்.

  3. நீங்கள் மேற்கின் ஏகாதிபத்தியத்தினை எதிர்பவர்கள் என்றால் செலன்ஸ்கி தன் நாட்டை “எழுதி கொடுக்கும்படி” டிரம்ப் கேட்பதை எதிர்ப்பதை ஆதரிப்பீர்கள்.

  4. நீங்கள் இது இரெண்டுமே அல்ல. நீங்கள் செலன்ஸ்கி/உக்ரேனிய வெறுப்பாளர்கள். செலென்ஸ்கியை அமெரிக்கா ஆதரித்தாலும், எதிர்கிறீர்கள். செலென்ஸ்கி அமெரிக்காவை எதிர்த்தாலும் எதிர்கிறீர்கள்.

  5. ஏன்…இப்படி என யோசித்துப்பார்த்தால் - ஒரே ஒரு காரணம் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.

    பொறாமை….

    நாம் செய்ய முடியாததை, உக்ரேனியர்கள் செய்துவிடுவார்களோ என்ற அழுக்காறு, நமக்கு உதவாத மேற்கு அவர்களுக்கு உதவுகிறதே என்ற கறுவியம்.

  6. அடுத்து சொல்ல போவதற்கு கடும் எதிர்வினை வரும் என தெரியும். ஆனாலும் சொல்கிறேன். தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை, எங்கே செலன்ஸ்கி செய்து விடுவாரோ எண்டு அங்கலாய்ப்பு.

  7. ஊரில் சில காதல் தோல்வி தாடி கேசுகள் இருக்கும். இவர்களையும் அண்ணா என்றே அழைப்பார்கள். இந்த அன்ணாக்கள் தமக்கு ஆப்பு அடிபட்டு விட்டது என்பதால் - ஊரில் இருக்கும் ஏனைய பெடியளையும் கூட்டி வச்சு கொண்டு “பொம்பிளைய நம்பாத தம்பி” என அவர்கள் வாழக்கையையும் சீரழிப்பார்கள்.

    எவனாவது ஒருவன் ஒரு பிகரை செட் பண்ண முயற்சித்தால் - அதை கெடுக்க தம்மால் ஆனசகலதையும் செய்வார்கள் இந்த அண்ணாமார். எதுவும் முடியாவிட்டால் வம்பளப்பார்கள்.

  8. இதுதான் நீங்கள்.

    தோல்வியை வெற்றியின் படிகட்டு ஆக்கலாம். அல்லது அதே படிக்கட்டில் இருந்து மேலே ஏறும் ஏனையரை கால்தடம் போட்டு விழுத்தலாம்.

    இப்படி

    கால்தடம் போடும் பரிதாப ஜீவன்கள் நீங்கள்.

  9. அடுத்து செலன்ஸ்கி பற்றி - நீங்களும், டிரம்ப்பும் செலன்ஸ்கியை கோமாளி எனலாம்.

  10. ஆனால் புட்டினை எதிர்த்த அதே தீரத்துடனும், நேர்மையுடனும் டிரம்பையும் எதிர்க்கிறார் செலன்ஸ்கி.

ஏன்?

தன் நாட்டின், இனத்தின் நலன்.

மிக சுலபமாக டிரம்ப்கேட்பதை ஒத்து கொண்டு, அதில் தானும் சில பத்து பில்லியன்களை லபக்கி கொண்டு செட்டில் ஆகி இருக்கலாம்.

ஆனால் இன்றும் துருக்கிக்கு போகிறார், ஈயூவை உந்த முயல்கிறார், எப்படியாவது தன் இனத்தை தன் நாட்டின் வளங்களை காக்க முயல்கிறார்.

எனக்கு, இது இலங்கை பேரினவாதம், இந்திய வல்லாதிக்கத்தின் இடையே தன் சின்னம் சிறிய இனத்தை காக்க முனைந்த என் தலைவரையே நினைவுபடுத்துகிறது.

  1. காக்கைகள் கரைந்து பொழுது விடிவதில்லை. சொந்த இனத்தின் வரலாற்று போரை தவிர்த்து வெளிநாடு ஓடி வந்த நாம் செலன்ஸ்கிக்கு கொடுக்க போகும் பட்டங்கள் நிலைக்கப்போவதில்லை. வரலாறு அதை பார்த்து கொள்ளும்.

    பேடிகள் கோமாளி பட்டம் கொடுக்க தகுதியற்றவர்கள்.

  2. செலன்ஸ்கி தோற்கலாம், வெல்லலாம், கொல்லப்படலாம், ஆனால் அவர் மேற்கின் பொம்மை அல்ல என்பதை அவரின் டிரம்ப் எதிர்ப்பு நிறுவியுள்ளது.

  3. இங்கே என்னையும் ஏனையோரையும் நாம் உக்ரேனை ஆதரிப்பது மேற்கின் மீது கொண்ட மோகத்தாலே என்றோரின் கதையும் புஸ்வாணமாக போய் விட்டது.

    நாம் எப்படி புட்டினை அவரின் உக்ரேன் மீதான கொள்ளையை எதிர்தோமோ, அப்படியே டிரம்பினையும் அவரின் உக்ரேன் மீதான கொள்ளையையும் எதிர்கிறோம்.

    செய்வது ரஸ்யாவா, மேற்கா என்பல்ல எம் கருதுபொருள்.

    செயல் அறமானதா இல்லையா என்பதே கருது பொருள்.

  4. நான் அப்பவே சொன்னேன், எங்க அண்ணா அப்பவே சொன்னார் எண்டு அரிவரி பிள்ளை கணக்கா எழுதும் வளர்ந்த குழந்தைக்கு - டிரம்ப் வந்தால் இது நடக்கும் என நாம் எல்லோரும் எழுதினோம்.

  5. அது மட்டும் அல்ல - 2025 இல் டிரம்ப் வெல்ல கூடும் என்பதால் - 2022 இல் புட்டின் ஆக்கிரமிப்பதை செலன்ஸ்கி சும்மா பார்த்து கொண்டிருக்க முடியாது.

    அப்போ அமெரிக்கா உதவியது பெற்றார். இப்போ துருக்கி கூப்பிடுகிறது போய் பேசுகிறார்.

    நோக்கம் எப்போதும் தன் நாட்டின் இறையாண்மையை பேணுவதே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அவர் நாட்டை விட்டு ஓடினாலும் ட்ரம்மும் புட்டினும் ஓன்றாகி குடும்பம் நடாத்தினாலும் ஐரோப்பா நிம்மதியாக நித்திரை கொள்ள போவதில்லை....

விசுகர்!

நான் புட்டினின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை. டொனால்ட் ரம்பின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை.செலென்ஸ்கியின் கொள்கைக்காக உழைத்து பாடுபடவுமில்லை.

இன்றைய அரசியலில் எது நடக்கின்றதோ அதை வைத்தே என் கருத்துக்களை எழுதினேன்.உக்ரேன் போரை எதிர்த்தவர்கள் காசா அழிவை ஆதரித்தார்கள் அல்லது வேடிக்கை பார்த்தார்கள். அவ்வளவுதான்.நாம் அந்த இரு யுத்தங்கள் பற்றி கருத்துக்கள் எழுதலாமே ஒழிய வரலாறுகள் எதுவுமே படைக்கப்போவதில்லை.அது முடியாத விடயம்.

இந்த பிரச்சனை ஐரோப்பாவிற்கு புதிதான ஒன்றல்ல. டொனால்ட் ரம் முதல் நான்கு வருடம் ஆட்சியில் இருந்த போதும் அல்லல் பட்டதுதான்.ரம்ப் அன்று விட்ட குறையை இன்று தொடர்கின்றார்.அவ்வளவுதான். அடுத்த நான்கு வருடங்களுக்கு பல்லைக்கடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

மற்றும்படி ரஷ்யா ஐரோப்பாவை தன் கைக்குள் கொண்டு வரும் என்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு வித தேவையில்லாத பகல் கனவுகள் தான்.

அன்று நான் ரஷ்யா சார்பாக கருத்துக்கள் எழுதியிருக்கா விட்டால்....... பந்தி பந்தியாக உக்ரேன்,ரஷ்ய,ஐரோப்பிய வரலாறுகள் ஆவேசமாக எழுதப்பட்டிருக்காது.மாற்றுக்கருத்துக்கள் எழுதப்பட்டதால் தான் நல்லகெட்ட கருத்துக்கள் வெளியே வந்தது. நீங்களும் நானும் ஒரே மாதிரியாக எழுதினால் சுவாரசியம் இருக்குமா விசுகர்? 🤣

இப்போது ஏதோ காணி,கதியால்,வரம்பு பிரச்சனை மாதிரி உக்ரேன் பிரச்சனை எமக்குள் வந்து நிற்கின்றது.😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, goshan_che said:

அண்ணாமார், நொண்ணாமார் எல்லாருக்கும் நான் ஒரு வாபஸ் அறிக்கை கொடுக்க விரும்புகிறேன்.

  1. உங்களை புட்டின் காதலர்கள், மேற்கு வெறுப்பாளர்கள் என நான் எழுதியது தவறு…தவறு…தவறுதான்.

  2. நீங்கள் புட்டின் காதலர்கள் எண்டால் - இப்போ டிரம்ப் செய்வதை வரவேற்பீர்கள்.

  3. நீங்கள் மேற்கின் ஏகாதிபத்தியத்தினை எதிர்பவர்கள் என்றால் செலன்ஸ்கி தன் நாட்டை “எழுதி கொடுக்கும்படி” டிரம்ப் கேட்பதை எதிர்ப்பதை ஆதரிப்பீர்கள்.

  4. நீங்கள் இது இரெண்டுமே அல்ல. நீங்கள் செலன்ஸ்கி/உக்ரேனிய வெறுப்பாளர்கள். செலென்ஸ்கியை அமெரிக்கா ஆதரித்தாலும், எதிர்கிறீர்கள். செலென்ஸ்கி அமெரிக்காவை எதிர்த்தாலும் எதிர்கிறீர்கள்.

  5. ஏன்…இப்படி என யோசித்துப்பார்த்தால் - ஒரே ஒரு காரணம் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.

    பொறாமை….

    நாம் செய்ய முடியாததை, உக்ரேனியர்கள் செய்துவிடுவார்களோ என்ற அழுக்காறு, நமக்கு உதவாத மேற்கு அவர்களுக்கு உதவுகிறதே என்ற கறுவியம்.

  6. அடுத்து சொல்ல போவதற்கு கடும் எதிர்வினை வரும் என தெரியும். ஆனாலும் சொல்கிறேன். தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை, எங்கே செலன்ஸ்கி செய்து விடுவாரோ எண்டு அங்கலாய்ப்பு.

  7. ஊரில் சில காதல் தோல்வி தாடி கேசுகள் இருக்கும். இவர்களையும் அண்ணா என்றே அழைப்பார்கள். இந்த அன்ணாக்கள் தமக்கு ஆப்பு அடிபட்டு விட்டது என்பதால் - ஊரில் இருக்கும் ஏனைய பெடியளையும் கூட்டி வச்சு கொண்டு “பொம்பிளைய நம்பாத தம்பி” என அவர்கள் வாழக்கையையும் சீரழிப்பார்கள்.

    எவனாவது ஒருவன் ஒரு பிகரை செட் பண்ண முயற்சித்தால் - அதை கெடுக்க தம்மால் ஆனசகலதையும் செய்வார்கள் இந்த அண்ணாமார். எதுவும் முடியாவிட்டால் வம்பளப்பார்கள்.

  8. இதுதான் நீங்கள்.

    தோல்வியை வெற்றியின் படிகட்டு ஆக்கலாம். அல்லது அதே படிக்கட்டில் இருந்து மேலே ஏறும் ஏனையரை கால்தடம் போட்டு விழுத்தலாம்.

    இப்படி

    கால்தடம் போடும் பரிதாப ஜீவன்கள் நீங்கள்.

  9. அடுத்து செலன்ஸ்கி பற்றி - நீங்களும், டிரம்ப்பும் செலன்ஸ்கியை கோமாளி எனலாம்.

  10. ஆனால் புட்டினை எதிர்த்த அதே தீரத்துடனும், நேர்மையுடனும் டிரம்பையும் எதிர்க்கிறார் செலன்ஸ்கி.

ஏன்?

தன் நாட்டின், இனத்தின் நலன்.

மிக சுலபமாக டிரம்ப்கேட்பதை ஒத்து கொண்டு, அதில் தானும் சில பத்து பில்லியன்களை லபக்கி கொண்டு செட்டில் ஆகி இருக்கலாம்.

ஆனால் இன்றும் துருக்கிக்கு போகிறார், ஈயூவை உந்த முயல்கிறார், எப்படியாவது தன் இனத்தை தன் நாட்டின் வளங்களை காக்க முயல்கிறார்.

எனக்கு, இது இலங்கை பேரினவாதம், இந்திய வல்லாதிக்கத்தின் இடையே தன் சின்னம் சிறிய இனத்தை காக்க முனைந்த என் தலைவரையே நினைவுபடுத்துகிறது.

  1. காக்கைகள் கரைந்து பொழுது விடிவதில்லை. சொந்த இனத்தின் வரலாற்று போரை தவிர்த்து வெளிநாடு ஓடி வந்த நாம் செலன்ஸ்கிக்கு கொடுக்க போகும் பட்டங்கள் நிலைக்கப்போவதில்லை. வரலாறு அதை பார்த்து கொள்ளும்.

    பேடிகள் கோமாளி பட்டம் கொடுக்க தகுதியற்றவர்கள்.

  2. செலன்ஸ்கி தோற்கலாம், வெல்லலாம், கொல்லப்படலாம், ஆனால் அவர் மேற்கின் பொம்மை அல்ல என்பதை அவரின் டிரம்ப் எதிர்ப்பு நிறுவியுள்ளது.

  3. இங்கே என்னையும் ஏனையோரையும் நாம் உக்ரேனை ஆதரிப்பது மேற்கின் மீது கொண்ட மோகத்தாலே என்றோரின் கதையும் புஸ்வாணமாக போய் விட்டது.

    நாம் எப்படி புட்டினை அவரின் உக்ரேன் மீதான கொள்ளையை எதிர்தோமோ, அப்படியே டிரம்பினையும் அவரின் உக்ரேன் மீதான கொள்ளையையும் எதிர்கிறோம்.

    செய்வது ரஸ்யாவா, மேற்கா என்பல்ல எம் கருதுபொருள்.

    செயல் அறமானதா இல்லையா என்பதே கருது பொருள்.

  4. நான் அப்பவே சொன்னேன், எங்க அண்ணா அப்பவே சொன்னார் எண்டு அரிவரி பிள்ளை கணக்கா எழுதும் வளர்ந்த குழந்தைக்கு - டிரம்ப் வந்தால் இது நடக்கும் என நாம் எல்லோரும் எழுதினோம்.

  5. அது மட்டும் அல்ல - 2025 இல் டிரம்ப் வெல்ல கூடும் என்பதால் - 2022 இல் புட்டின் ஆக்கிரமிப்பதை செலன்ஸ்கி சும்மா பார்த்து கொண்டிருக்க முடியாது.

    அப்போ அமெரிக்கா உதவியது பெற்றார். இப்போ துருக்கி கூப்பிடுகிறது போய் பேசுகிறார்.

    நோக்கம் எப்போதும் தன் நாட்டின் இறையாண்மையை பேணுவதே.

நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கரெக்டு....

அதிலும் ஒரு சிக்கல் பாருங்கோ..

செலென்ஸ்கி தனி ஆளாக நின்று அமெரிக்காவை அதாவது டொனால்ட் ரம்ப எதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ரம்ப் அவர்களின் உக்ரேன் கொள்கையை எதிர்க்கின்றது.அதனோடு சேர்ந்து செலென்ஸ்கியும் முட்டுக்கொடுக்கின்றார் அவ்வளவுதான். டொனால்ட் ரம்பின் முன்னைய ஆட்சியில் பத்திரிக்கையாளர் முன்பே வைத்து செலென்ஸ்கியின் மூக்கை உடைத்தவர் ரம்ப். அதாவது உங்களுக்கு பிரச்சனை என்றால் ரஷ்ய புட்டினுடன் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என முகத்தில் அடித்தாற்போல் வாங்கிக்கட்டியவர் செலென்ஸ்கி. அப்போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது ஐரோப்பிய ஒன்றியம் பின்னால் நிற்கின்றது என்றவுடன் நெஞ்ச நிமித்துகின்றார்.என்றாலும் ரம்ப் இரும்பு வரி அந்த வரி இந்தவரி என உயர்த்தா விட்டால் ஐரோப்பிய ஒன்றியமும் வாய்மூடிக்கொண்டுதான் இருந்திருக்கும்.

நாம் செய்ய முடியாததை உக்ரேனியர்கள் செய்து முடிப்பார்கள். ஏனென்றால் எமது நாட்டு பிரச்சனை வேறு. உக்ரேனியர்களின் பிரச்சனை வேறு. ஏனென்றால் உக்ரேனியர்கள் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். நேட்டோ ஆசையில் நனைச்சு சுமப்பதற்கு யாரும் எதுவும் செய்யமுடியாது.

என்னது தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை!?!?!?!?!?!

தலைவர் எதை செய்து காட்டவில்லை என்பதை இங்கே சொல்லித்தொலையுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.