Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுவாங்கள். எனக்கு அடிக்கனும் என்றா, இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும் என்று. அப்பிடி ஒருத்தன் வந்திருக்காண்டா. இசாந் தனது அறிமுகத்தைச் செய்யும் போது அவன் பிறக்கவே இல்லை. இன்று, போட்டுப் பிளந்து கொண்டிருக்கிறான் பையன்.

வைபவ் சூரியவம்சி

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

Vaibhav Suryavanshi* 

(lhb)

51

17

3

6

300.00

Gujarat Titans FlagGujarat Titans

209/4

Rajasthan Royals FlagRajasthan Royals

(5/20 ov, T:210) 81/0

RR need 129 runs in 90 balls.

Current RR: 16.20 • Required RR: 8.60

Win Probability: RR 81.70% • GT 18.30%

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி அரைச்சதம். அதுவும் 17 பந்துகளில். இந்த பருவகாலத்தின் வேகமான அரைச்சதம். வயதோ 14.

  • கருத்துக்கள உறவுகள்

பயமறியா வயது. எல்லா சுதந்திரமும் குடுத்திருக்கினம் போல. நீ அடிச்சு ஆடு. பாத்துக்கலாம் என்று ட்ராவிட் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன்.

இணைப்பாட்டம் 100 ஓட்டங்களைக் கடந்து...

  • கருத்துக்கள உறவுகள்

அடின்னா அடி. என்னா அடி.

கரிமின் பந்து வீச்சில் 30 ஓட்டங்களைப் பெற்றான் பையன்

  • கருத்துக்கள உறவுகள்

கானக் கண் கோடி வேணும் பையனின் அடியைப் பார்க்க.

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி சதம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் ஆறு அடித்தான்.

வைபவ் சூரியவம்சி

வந்தான். வென்றான். சென்றான். அப்பிடி ஒரு ஆட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

அணித் தலைவரையே impact subஆக மாத்தி விட்டாங்கள். சுப்மான் கில்லுக்குப் பதிலாக இசாந்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாம விட்ட பூசை, வேலை செய்திருக்கு. தொடர்ந்து அதே பூசையைப் போடுவம்.

வேற ஆருக்காவது அந்தப் பூசை வேணுமென்டா, பார்த்துப் பண்ணிக் குடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, செம்பாட்டான் said:

கன்னி சதம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் ஆறு அடித்தான்.

வைபவ் சூரியவம்சி

வந்தான். வென்றான். சென்றான். அப்பிடி ஒரு ஆட்டம்.

இன்று புள்ளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை

அந்தப் பையனின் விளையாட்டிற்கு ஒரு சல்யூட் 💥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 47வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுப்மன் கில்லும், ஜொஸ் பட்லரும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 11 சிக்ஸர்கள், 7 நாலுகள் என 35 பந்துகளில் புயல்வேகத்தில் அடித்த கன்னிச் சதத்துடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேகமாக அடித்தாடி ஆட்டமிழக்காமல் எடுத்த 70 ஓட்டங்களுடனும் சவாலான வெற்றி இலக்கை இலகுவாக 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. சூர்யவன்ஷி இரண்டாவது வேகமான ஐபிஎல் சதத்தை எடுத்து சாதனை புரிந்துள்ளார். கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அடித்த வேகமான சதம் இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0742.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

வைபவ் சூரியவம்சி ........ பொடியன் நாய் பேய் அடி அடிக்கிறான் ......... 100 ஐ தாண்டி விட்டார் ....... எல்லா கேமராக்களும் அவர் மீதுதான் . .......சொந்த கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் எல்லோருமே பாராட்டுகிறார்கள் . ...... கட்டிளங் கன்னிகளின் பார்வை எல்லாம் அவன் மேலேதான் ........! 😂

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

சொல்லுவாங்கள். எனக்கு அடிக்கனும் என்றா, இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும் என்று. அப்பிடி ஒருத்தன் வந்திருக்காண்டா. இசாந் தனது அறிமுகத்தைச் செய்யும் போது அவன் பிறக்கவே இல்லை. இன்று, போட்டுப் பிளந்து கொண்டிருக்கிறான் பையன்.

வைபவ் சூரியவம்சி

புல்லரித்துப்போனது...அற்புதமான குழந்தை...பால் வடியும் முகம் ...வண்டியும் தொழதொழப்பும் ...பார்க்கவே சந்தோசம்

1 hour ago, வாத்தியார் said:

இன்று புள்ளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை

அந்தப் பையனின் விளையாட்டிற்கு ஒரு சல்யூட் 💥

உண்மைதான் வாத்தியார்...சந்தோசமான பொழுது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இன்று புள்ளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை

அந்தப் பையனின் விளையாட்டிற்கு ஒரு சல்யூட் 💥

18 minutes ago, alvayan said:

புல்லரித்துப்போனது...அற்புதமான குழந்தை...பால் வடியும் முகம் ...வண்டியும் தொழதொழப்பும் ...பார்க்கவே சந்தோசம்

உண்மைதான் வாத்தியார்...சந்தோசமான பொழுது

விளையாட்டு இரசிகனின் வார்த்தைகள்.

எனக்கு இரட்டிப்புச் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லோரும் புழுகி தள்ளுகிறீர்கள்.

எனக்கு பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

சரி எங்காவது யுரியூப் மாட்டாமலா போகப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா எல்லோரும் புழுகி தள்ளுகிறீர்கள்.

எனக்கு பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

சரி எங்காவது யுரியூப் மாட்டாமலா போகப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா எல்லோரும் புழுகி தள்ளுகிறீர்கள்.

எனக்கு பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

சரி எங்காவது யுரியூப் மாட்டாமலா போகப் போகுது.

அடிச்சது 101. எல்லைக் கோட்டைத் தாண்டின வகையில் 94 ஓட்டங்கள். மொத்தம் 38 பந்துகளில், 18 தடவை எல்லைக் கோட்டைத் தாண்டி. எத்தினை யுரியூப் போட்டாலும், காணாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை செவ்வாய் 29 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

DC எதிர் KKR

06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • நுணாவிலான்

  • எப்போதும் தமிழன்

  • அகஸ்தியன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? mosquito_1f99f.png

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையஜலே இன்றைய போட்டி இரண்டு அணிகளும் நன்றாக விளையாடினர் சின்னப்பையன் எந்தவித பயமுமில்லாம் சரமாரியாக வாணவேடிக்கை காட்டினான். தோனிபோல் கிழடுகள் எல்லாம் விளைளயாடிக் கொண்டீந்தால் எத்தனையோ இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வராமலே போய் விடுவார்கள்.

https://www.iplt20.com/video/61991/ipl-2025-m47-rr-vs-gt---match-highlights?tagNames=2025?utm_source=video&utm_medium=onebox&utm_campaign=ipl2025

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

பயமறியா வயது. எல்லா சுதந்திரமும் குடுத்திருக்கினம் போல. நீ அடிச்சு ஆடு. பாத்துக்கலாம் என்று ட்ராவிட் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன்.

இணைப்பாட்டம் 100 ஓட்டங்களைக் கடந்து...

3 hours ago, சுவைப்பிரியன் said:

கானக் கண் கோடி வேணும் பையனின் அடியைப் பார்க்க.

இந்தப் பையனிடம் இருக்கும் திறமையை இன்னும் மெருகூட்ட வேண்டும்

நீ தான் இனி எங்கள் தலை என்று பாப்பாவில் ஏத்திவிடாமல் ...

மெல்ல மெல்ல அவரை ஒரு முழுமையான விளையாட்டு வீரனாக வளர்க்க வேண்டும்

இளங்கன்று பயம் அறியாது தான் ஆனாலும் இன்று உண்மையிலேயே

அவர் ஒரு அனுபவம் மிக்க விளையாட்டு வீரன் போலத் தான் செயற்பட்டார் .

அவர் கிரிக்கெட்டில் மென்மேலும் சிறப்பாக விளையாடி தன்னை ஒரு திடமான ஆளுமையான வீரனாக நிலை நிறுத்த வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்❤️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இணைப்புக்கு நன்றி நுணா.

25 minutes ago, வாத்தியார் said:

இந்தப் பையனிடம் இருக்கும் திறமையை இன்னும் மெருகூட்ட வேண்டும்

நீ தான் இனி எங்கள் தலை என்று பாப்பாவில் ஏத்திவிடாமல் ...

மெல்ல மெல்ல அவரை ஒரு முழுமையான விளையாட்டு வீரனாக வளர்க்க வேண்டும்

இளங்கன்று பயம் அறியாது தான் ஆனாலும் இன்று உண்மையிலேயே

அவர் ஒரு அனுபவம் மிக்க விளையாட்டு வீரன் போலத் தான் செயற்பட்டார் .

அவர் கிரிக்கெட்டில் மென்மேலும் சிறப்பாக விளையாடி தன்னை ஒரு திடமான ஆளுமையான வீரனாக நிலை நிறுத்த வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்❤️

அடுத்த வருட ஐபிஎல் இல் அதிகூடிய தொகைக்கு எடுப்பார்கள்.

இனிவரும் போட்டிகளிலும் பிரகாசிக்க வேண்டும்.

1 hour ago, செம்பாட்டான் said:

அடிச்சது 101. எல்லைக் கோட்டைத் தாண்டின வகையில் 94 ஓட்டங்கள். மொத்தம் 38 பந்துகளில், 18 தடவை எல்லைக் கோட்டைத் தாண்டி. எத்தினை யுரியூப் போட்டாலும், காணாது.

உங்கள் வர்ணனை நன்றாக இருந்தது.அதை வாசிக்கவே விளையாட்டைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • நுணாவிலான்

  • எப்போதும் தமிழன்

  • அகஸ்தியன்

மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறம். இன்று போட்ட மந்திரம் உதவி செய்யட்டும்.

சிவ சிவ என்றிட நற்கதிதானே!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி நுணா.

அடுத்த வருட ஐபிஎல் இல் அதிகூடிய தொகைக்கு எடுப்பார்கள்

இல்லை. அடுத்த இருவருடங்கள் மினி ஏலம். இவர் ராஜஸ்தான் அணியில் இதே குறைந்த சம்பளத்துடன் விளையாடுவார் . 2027 இலும் இதே போல சிறப்பாக விளையாடினால் 2028 ஐபிஎல்லுக்கான மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி அதிக பணம் குடுத்து இவரை தக்கவைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானுக்கு இனி 4 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. மிகுதி 4 போட்டிகளிலும் இதே மாதிரி விளையாடி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறலாம். 14 புள்ளிகள் எடுத்தால் அடுத்த சுற்றுக்கு செல்ல சிலவேளை சந்தர்ப்பம் இருக்கும் .சென்ற வருடம் பங்களூர் அணி கடைசி 6 போடிகளில் வென்று 14 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோற்று இருந்தால் 2025 இல் அடுத்த சுற்றுக்கு தெரிவாகாத முதல் அணி ராஜஸ்தானாக இருந்திருக்கும். இதுவரை 10 அணிகளில் ஒரு அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பது உறுதிப்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

நாங்கள்தான் முடிவு பண்ணிட்டமே. கீழ இருக்கிற நாலு பேரும் அடுத்த வருசத்துக்கு இப்பவே தயாராகத் தொடங்க வேண்டியதுதான்.

மிகுதி நாலு போட்டியையும் ராஜஸ்தான் வெல்லவேணுமே. அடுத்த போட்டி மும்பையோட. அத வென்றால், அதுக்கு அடுத்த மூன்றும் இலகுவாக இருக்கும்: KKR. CSK, PBKS.

இப்போ இருக்கும் புள்ளிகள் அடிப்படையில் 14 புள்ளிகள் காணாது என்றுதான் நினைக்கிறேன். அதோட அவர்களுக்கு மேலே உள்ள அணிகளுடன் போட்டிகள் இல்லை. அவர்களை அடித்தால்தான் இவர்களுக்குச் சந்தர்ப்பம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.