Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

12 MAR, 2025 | 10:49 AM

image

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.

நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

IMG_20250312_093844.jpg

IMG_20250312_093542.jpg

IMG_20250312_093339.jpg

IMG_20250312_093731.jpg

IMG_20250312_093913.jpg

IMG_20250312_093016.jpg

IMG_20250312_093231.jpg

https://www.virakesari.lk/article/208962

  • கருத்துக்கள உறவுகள்

doctor.jpg?resize=626%2C375&ssl=1

பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை – GMOA அறிவிப்பு.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)  தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424889

  • கருத்துக்கள உறவுகள்

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் - வௌியான திடுக்கிடும் தகவல்கள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

மேலும், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

34 வயதுடைய குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு, அவர் கல்னேவ விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். 

இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் இல்லாததால், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் கல்னேவ, எலபதுகம பகுதியில் மறைந்திருந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர், நேற்று முன்தினம் (10) இரவு வழக்கம்போல் பணிக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார். 

குறித்த வைத்தியர், தனது கடமையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார். 

வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு நபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர், வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்த முடியாதபடி கட்டிய சந்தேக நபர், உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச் சொல்லி, வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார். 

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

பின்னர் சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கையடக்க தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளார். 

சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர், தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cm85hf2ob001j10a6ddznnod5

  • கருத்துக்கள உறவுகள்

483913393_1058685609629744_5364305310793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்

Published By: VISHNU

12 MAR, 2025 | 03:28 AM

image

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது பணியிடத்திற்குள் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் மருத்துவர் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலை மேற்கொண்ட சந்தேகநபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவும், தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறோம்.

இந்த துரதிர்ஷ்டவசமான, அருவெருக்கத்தக்க செயலுக்கு ஆளான மருத்துவரின் தனியுரிமை மற்றும் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வைத்தியர்களுக்கான பணியிடங்களின் பாதுகாப்பை விரைவில் உறுதி செய்ய வேண்டும்.  இல்லையேல் வைத்தியர்கள் தமது பணிகளைத் தொடர்வது சவாலான விடயமாக அமையலாம். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டும் ஒன்று என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் தங்கள் கடமைகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதேவேளை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் செவ்வாய்க்கிழமை (11) காலை 10. 00 மணி முதல் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காலவரையரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதுடன் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விதானகே தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208955

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம் 

Published By: DIGITAL DESK 3

12 MAR, 2025 | 11:17 AM

image

சுகாதார அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ  அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (12)  விஜயம் செய்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின்  பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து   நபரொருவர் பெண் வைத்தியர் ஒருவரை பாலியஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம்  திங்கட்கிழமை (10)  இரவு இடம்பெற்றுள்ளது.

பெண் வைத்தியர் பாலியஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளர். 

இந்நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ  அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  விஜயம் செய்துள்ளார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் துணை பணிப்பாளர் உள்ளிட்ட  வைத்தியக்குழுவிடம் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/208974

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பெண் வைத்தியர் பாலியஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளர்.

தமிழருக்கெதிராக திட்டமிட்டு வளர்த்தது, இப்போ தன் இனத்தையே மேயுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தமிழருக்கெதிராக திட்டமிட்டு வளர்த்தது, இப்போ தன் இனத்தையே மேயுது.

தமிழ் மருத்துவராம்! (உறுதியாகத் முடியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

பின்னர் சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கையடக்க தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளார். 

நல்லவேளை தொலைபேசியை திருடியது.

இல்லாவிட்டால் ஆளைக் கண்டுபிடிக்கவே இயலாது போயிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுராதபுரம் வைத்தியசாலையில் பணிபுரிந்த தமிழ் வைத்தியரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த முன்னாள் ராணுவ வீரர்,முன்னாள் பௌத்த பிக்கு இவர் தானாம்.

Gl1q8-TTWw-AAUB3k.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகநபர் இரண்டு நாட்களுக்கு முன்புதான்… விளக்கமறியலில் இருந்து வந்த முன்னாள் இராணுவ வீரராம். இப்படிப் பட்டவர்களை வெளியில் நடமாட விடுவதே ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லவேளை தொலைபேசியை திருடியது.

இல்லாவிட்டால் ஆளைக் கண்டுபிடிக்கவே இயலாது போயிருக்கும்.

அண்ணை இது என்ன???? அமெரிக்கா பொலிஸாரா. ....?? உலகிலேயே குற்றங்கள் குறைந்த இலங்கையின் பொலிஸார் தொலைபேசி எடுக்க விட்டாலும் கூட 24 மணிநேரத்தில் எந்தவொரு குற்றவாளியையும். கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவார்கள்.

குறிப்பு,....குற்றவாளிகள் பெரும்பாலும் முன்னாள் ஆயுதப்படையைச்சேர்ந்தவர்கள் தான் ஆகவே அவர்களுக்கு இந்த குற்றவாளிகளை பிடிப்பது பெரிய வேலை இல்லை பகுதி நேர வேலையாக இன்றைய அரச பாதுகாப்பு துறையினர் கொள்ளை கொலை,......செய்வதும் உண்டு” 🤣

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-166.jpg?resize=750%2C375&ssl

பெண் வைத்தியர் மீதான பாலியல் வன்புணர்வு; சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, 37 வயதுடைய பெண்ணும், 27 வயதுடைய ஆணும் நேற்றிரவு இரவு கல்னேவவின் நிதிகும்பயாய பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபரான கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர், இன்று (13) அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கல்னேவ பொலிஸாரும் அனுராதபுரம் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, கல்னேவ காட்டுப் பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலின் போது பெண் மருத்துவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை பொலிஸார் மீட்டனர்.

சந்தேக நபர் தற்போது அனுராதபுரம் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1424959

  • கருத்துக்கள உறவுகள்

484334649_1059458032885835_4734416138011

483873116_1059453896219582_1501845818933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது

13 MAR, 2025 | 10:55 AM

image

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மற்றைய சந்தேக நபர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

37 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பிரதான சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (13) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/209069

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

தமிழ் மருத்துவராம்! (உறுதியாகத் முடியவில்லை)

யாழ்ப்பாணத்தான் தப்பு செய்தால் ஊடகத்தில் பகிரங்கமாக செய்தி போடும் ஊடகவியாளாலர்கள் எங்கே ?...நித்தா கொள்கின்றனரா? பக்கம் பக்கமாக க்ருத்து எழுதும் புத்து ஜீவீகள் எங்கே/

2 hours ago, putthan said:

யாழ்ப்பாணத்தான் தப்பு செய்தால் ஊடகத்தில் பகிரங்கமாக செய்தி போடும் ஊடகவியாளாலர்கள் எங்கே ?...நித்தா கொள்கின்றனரா? பக்கம் பக்கமாக க்ருத்து எழுதும் புத்து ஜீவீகள் எங்கே/

புத்தா, நீங்கள் தான் நித்தா கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இலங்கை ஊடகங்கள் அனைத்தும் இந்த வல்லுறவு தொடர்பான செய்தியை கண்ணியமான முறையில் வெளியிட்டு வருகின்றன. அனுராதபுரத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையை எதிர்த்து வன்னி மருத்துவமனை மருத்துவர்கள் கூட வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். பல ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முழுதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்களின் மீது இச் சம்பவம் ஒரு குவியப்புள்ளியாக அமைந்து இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்

இலங்கை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணிப்புரியும் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இலங்கையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது.

போதனா மருத்துவமனை

படக்குறிப்பு,அநுராதபுரம் போதனா மருத்துவமனை

நடந்தது என்ன?

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவர் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இதை செய்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

"அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் விசேட மருத்துவ நிபுணராக பயிற்சி பெற்று வரும் 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அவர் தனது கடமைகளை நிறைவு செய்துள்ளதுடன், அதன்பின்னர் மருத்துவமனைக்கு முன்பாக உள்ள மருத்துவர்களின் விடுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பெண் மருத்துவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், விடுதிக்கு அருகில் வைத்து பெண் மருத்துவரின் கழுத்தில் கத்தியொன்றை வைத்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

அதன்பின்னர் பெண் மருத்துவரை, கடும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, சந்தேகநபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மருத்துவரின் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக்கொண்டே, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பின்னர், மருத்துவமனைக்கு வருகைத் தந்த பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை தொலைபேசியிலிருந்து தனது பெற்றோருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.

அதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், போலீஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது", என்று போலீஸ் ஊடக பிரிவு பிபிசி தமிழிடம் தெரிவித்தது.

மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

இந்த சம்பவத்தை அடுத்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் மார்ச் 11 ஆம் தேதி உடனடியாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

''இந்த இடத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலைமை குறித்து நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். எனினும், இவ்வாறான அசம்பாவிதமொன்று இடம்பெறும் வரை, இந்த மோசமான சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு அதிகாரிக்கும் இயலுமை கிடைக்கவில்லை.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த பிரச்னை முடிவுக்கு வராது. வேலை செய்யும் சுகாதார அதிகரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் டாக்டர் ஷஷிக்க விதானகே தெரிவித்தார்.

போதனா மருத்துவமனை

படக்குறிப்பு,அநுராதபுரம் போதனா மருத்துவமனை

எதிர்கட்சி கடும் எதிர்ப்பு

பெண் மருத்துவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்ப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் மார்ச் 11 ஆம் தினம் உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

''இந்த சம்பவத்தை அடுத்து, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய பிரச்னையொன்று உருவெடுத்துள்ளது. பெண் மருத்துவர் எதிர்கொண்ட இந்த பாலியல் துஷ்பிரயோகத்தை அடுத்து, அரச சேவையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. உண்மையில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பாரிய பிரச்னை எழுந்துள்ளது.

எனக்கும் பெண் குழந்தையொன்று உள்ளது. அதனால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டங்களை கொண்டு வருவதற்கு நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்'' என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சந்தேகநபர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச் 12) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்நேவ பகுதியில் வைத்து இந்த சந்தே கநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்காக 5 போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துகின்றமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பௌத்த துறவியாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா போலீஸின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தவிர்ப்பு பிரிவின் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்படி, 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2252 முறைகளும், 2024 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2785 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx29l49jwp2o

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்

இலங்கை

போதனா மருத்துவமனை

.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துகின்றமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பௌத்த துறவியாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cx29l49jwp2o

நல்ல வளர்ச்சி ..பவுத்த துறவியாகி ..பின்னர் இராணுவமாகி ..அதிலிருந்து விட்டோடி...இப்ப போதவஸ்துடன் ..சிறைசென்று ..பிணையில் விடுதலையாகி ..டாக்டர் பாலியல் வல்லுறவு....இந்த பெரும்பான்மையின குடிமனுக்கு எங்கு நல்வழி புகுத்தப் பட்டுள்ளது..இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

புத்தா, நீங்கள் தான் நித்தா கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இலங்கை ஊடகங்கள் அனைத்தும் இந்த வல்லுறவு தொடர்பான செய்தியை கண்ணியமான முறையில் வெளியிட்டு வருகின்றன. அனுராதபுரத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையை எதிர்த்து வன்னி மருத்துவமனை மருத்துவர்கள் கூட வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். பல ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முழுதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்களின் மீது இச் சம்பவம் ஒரு குவியப்புள்ளியாக அமைந்து இருக்கு.

நன்றி நிழலி,விழித்துவிட்டேன்🤣🤣நான் இவர் எந்த சமுகம்,பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியத்தான் கேட்டேன்...சிறிலங்கன் ஒற்றுமையாக போராடுகிறார்கள் என்பதை..அறிந்து மிக்க மகிழ்ச்சி ...

எனது சிங்கள பெண் மருத்துவ் உறவினர் ஒருவர் ,வட்சப் பதிவை அனுப்பி நடந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க சொல்லி முகப்புத்தக லிங்கை அனுப்பியிருந்தார்.இந்தியா வைத்தியசாலைகளில் நடப்பதை போன்று எமது வைத்தியசாலைகளிலும் நடக்க வேணுமா என எழுதியிருந்தார்....

இந்திய வெறுப்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பௌத்த துறவியாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் பெரும்பாலான குற்றவாளிகள்

சித்தசுவாதீனமற்றவர்கள் என்று வைத்தியசாலையில் இருந்துவிட்டு வெளியே வந்து குற்றம் செய்கிறார்கள்

அல்லது

குற்றம் செய்தபின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்

முடிவில் குற்றவாளி சித்தசுவாதீனமுடையர் என்று வழக்கை முடிக்கிறார்கள்.

குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள்.

இதேமாதிரி இலங்கையில் குற்றவாளிகள் பெளத்த துறவியாக இருந்திருக்கிறார்கள்

அல்லது

குற்றம் செய்யதபின் பொளத்த துறவியாகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

நல்ல வளர்ச்சி ..பவுத்த துறவியாகி ..பின்னர் இராணுவமாகி ..அதிலிருந்து விட்டோடி...இப்ப போதவஸ்துடன் ..சிறைசென்று ..பிணையில் விடுதலையாகி ..டாக்டர் பாலியல் வல்லுறவு..

குற்றவாளி படிப்படியாக குற்றச்செயல்களை கற்றுத்தேர்ந்திருக்கிறார். குற்றங்கள் எங்கே எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதற்கு இவர் சாட்சி. இதில பௌத்தம் உயர்வானது, இது பௌத்தநாடு, ஒழுக்கம் நிறைந்த இராணுவம் என பெருமை வேறு. இத்தனை பெண்கள் வடக்கில் போரில் கற்பழிக்கப்படும்போது குரல் கொடுக்காத சஜித், இப்போ தனக்கு பெண் குழந்தை இருப்பதால் குரல் கொடுக்கிறாராம். இதுவே முன்னைய அரசாங்கமாயிருந்தால் செய்தியே வெளிவந்திருக்காது. வரப்பிரசாதங்களையும், சுதந்திரத்தையும் தகுதியற்றவர்களுக்கு அள்ளி வழங்கினால்; துஸ்பிரயோகம் செய்யத்தான் செய்வார்கள். இந்த அரசாங்கத்தால் அவைகள் நிறுத்தப்படவேண்டும். நேற்று பாத்தேன், பிக்கு ஒண்டு கெல்மெற் போடாமல் பயணம் செய்திருக்கிறது. போலீசார் கேள்விகேட்டபோது, பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க தேவையில்லையாம், தங்களுக்கு வரப்பிரசாதங்கள் அளிக்கப்பட்டிருக்கிறதாம். பார்த்தீர்களா, இதுவே முன்னொரு தடவை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கெல்மெற் போடவில்லையென்று தூசணப்பிக்கர் தெருவில் நின்று தாண்டவக்கூத்தாடியது. ஒழுக்கம், பணிவு, தர்மம் கற்பிக்க வேண்டியவர்கள் என்னத்தை கற்பித்திருக்கிறார்கள் என்பதை இந்த பிடிபட்டவர் நிரூபித்திருக்கிறார். தங்களாலேயே மதத்தை அழிக்கப்போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பெண் மருத்துவரின் வாக்குமூலம் பதிவானது

editorenglishMarch 14, 2025

Anuradhapura-Teaching-Hospital.jpg

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றன.

 குற்றவாளி நேற்று   அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது சம்பவம் தொடர்பில் காவல்துறையினா்  ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை  காவல்துறையின  நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

“நான் 10 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணி வரை தான் வேலை செய்ததாகவும் என் சேவையை முடித்துக்கொண்டு, ருவன்வெலிசேயவுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு மாலை 6:30 மணியளவில் முச்சக்கர வண்டியில் விடுதிக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது.

தனது அறைக்குள் நுழைய கதவைத் திறந்தபோது, தனக்குப் பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்ததாகவும்,   சாய்ந்து நின்ற ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து, மற்றொரு கையால் தனது வாயைப் பொத்தி, கத்த வேண்டாம் என்றும், கதவைத் திறக்கவும் சொன்னார், தான் பயந்து போய் கதவைத் திறந்ததும் அறைக்குள் தள்ளியதாக தெரிவித்துள்ளார்.

என்  கைபேசியின் கடவுச்சொல்லை அகற்றச் சொன்ன நபர்  அதில்  இந்தி பாடல்களை ஒலிக்க செய்தார். அவர், ‘சத்தம் போடாதே, இல்லாவிட்டால் நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுப்பேன்’ என்றார்.”

“ஒரு கட்டத்தில், நான் அந்த நபரை அவர் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றேன். என் கை வெட்டப்பட்டது. நான் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, அந்த நபர் மிகவும் கோபமடைந்தார். பின்னர் நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன்.”

“சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர்  , ‘நான் கைபேசியை எடுத்துட்டுப் போறேன். இனிமே இது கிடைக்காது. நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துள்ளேன். யாரிடமும் சொல்லாதே. சொன்னா, உனக்குதான் பிரச்சனைதான் வரும் மன்னிக்கவும்.” என்று கூறியதாக தெரிவித்தார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தனது முறைப்பாட்டின் மூலம் காவல்துறையினருக்கு இது குறித்து தெரிவித்ததாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரியவிடம் தெரிவித்தனர்.

வைத்தியர் காவல்துறையில் அளித்த முறைப்பாடு தொடர்பாக காவ்ல்துறையின‌ரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

பாலியல் வன்கொடுமைக்கு முன், சந்தேகநபர் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை ஔிரச்  செய்து, சுற்றுப்புறங்களைச் சரிபார்த்து, பின்னர் குளியலறையில் மட்டும் விளக்குகளை ஔிரச் செய்துள்ளார்.

“நான் இராணுவத்திலிருந்து தப்பியுள்ளேன். காவல்துறை என்னைத் தேடுகிறது. கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் போயிடுவேன். உன்னை எதுவும் செய்ய மாட்டேன். சத்தம் போடாதே. நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுத்துடுவேன். அது எனக்குப் பெரிய பிரச்சனை இல்ல.” என குறித்த நபர் கூறியதாக வைத்தியர் தனது சுய வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேக நபர் தன்னை, கட்டிப்போட்டு  பாலியல் வன்கொடுமை செய்து விட்டுச் சென்றதாகவும், பின்னர் தானே முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று தான் பணிபுரிந்த வார்டில் உள்ள வைத்தியரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர்,  தனது தந்தைக்கும்,  வெளி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் பணிபுரியும் தனது நெருங்கிய நண்பருக்கும், குறித்த வைத்தியரின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றத்தைச் செய்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்றும் அவர் காவல்துறையின‌ரிடம் கூறியுள்ளார்.

காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையின‌ருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்து, பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, அநுராதபுரம் தலைமையக காவல்துறையின‌ருக்கு உத்தரவிட்டார்.

இந்தக் குற்றத்தின் பிரதான சந்தேக நபரான கல்னேவ புதிய நகரப் பகுதியைச் சேர்ந்த நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சந்தேக நபர் நீதவான் முன்  முன்னிலைப்படுத்தப்பட்டபோது, காவல்துறையின‌ரால் தான் கொடூரமாக தாக்கப்பட்டதாக நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2025/213378/

  • கருத்துக்கள உறவுகள்

அ’புரம் சம்பவம்: சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு

2025 மார்ச் 14 , பி.ப. 12:22

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு காவி உடை, தேரர்கள் வைத்திருக்கும் விசிறி, ஒரு போர்வை மற்றும் ஒரு தாள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பைக்குள் இருந்து இந்த கைக்குண்டை பொலிஸார் கண்டுபிடித்தனர்.AN

https://www.tamilmirror.lk/செய்திகள்/அ-புரம்-சம்பவம்-சந்தேக-நபர்-வீட்டிலிருந்து-கைக்குண்டு-மீட்பு/175-353735

  • கருத்துக்கள உறவுகள்

25-67d24e85d915e.jpg?resize=600%2C375&ss

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, வைத்தியர் எம்.எம்.ஐ.யு கருணாரத்ன அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425182

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.