Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

14 MAR, 2025 | 03:37 AM

image

(ஆர்.ராம்)

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13)  நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நேற்று மாலை, அமெரிக்கத்தூதரகத்தில் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குடன் சுமந்திரன் சந்திப்பை நடத்தியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேறியுள்ள நிலையில் தமிழ் தரப்பினர் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதாக கூறினார்.

அத்துடன், நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தமைக்கான தொழில்நுட்பக் காரணத்தினையும் அமெரிக்கத் தூதுவரிடத்தில் தெளிவுபடுத்தியதோடு அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் கருத்துப்பகிர்வு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான பயணத்தில் அமெரிக்காவின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக நீடிக்கும் என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/209141

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் சார்பாக சந்திக்கும் போது, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். சுமந்திரனில் இந்தப் பழக்கம் அறவே இல்லை.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது, தனிப்பட்ட சந்திப்புக்கள் இரகசிய பேரம் பேசுதல் போன்றன நடப்பதாகவே சந்தேகிக்கப் படும்.

இவ்வளவு காலமும் இப்படியான சந்திப்புக்கள் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகளையும் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இல்லாவிடில்.... வழக்கம் போல், நானும் கச்சேரிக்குப் போனேன்.. என்ற விதத்தில், பத்திரிகைகளுக்கு பல்லைக் காட்டிக் கொண்டு எடுத்த, படம் காட்டலாகவே இருக்கும்.

வர வர... கோமாளிக் கூத்துக்கள் கூடிக் கொண்டே போகின்றது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

சந்தித்து ....? நெடுகத்தான் சந்திக்கிறார். எதற்காக சந்திக்கிறார், என்ன சாதித்தார் என்றுதான் இதுவரை வெளிவரவில்லை.  போய் கதவைத்தட்டினால் வந்திருப்பவர் யாரென்று பார்க்க வீட்டுக்காரர் கதவை திறப்பது வழமைதானே. இவர் ஏன் அவசரமாக ஓடுப்பட்டுத்திரியிறார்.? தேர்தல் வருவதால் மக்களுக்கு படம் காட்டுகிறார், தான் ஒரு செயல்வீரரென. இவரது செயலை மக்களும் அறிவர், தூதுவர்களும் அறிவர், இவர்மட்டுந்தான் அறியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒரு இனத்தின் சார்பாக சந்திக்கும் போது, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். சுமந்திரனில் இந்தப் பழக்கம் அறவே இல்லை.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது, தனிப்பட்ட சந்திப்புக்கள் இரகசிய பேரம் பேசுதல் போன்றன நடப்பதாகவே சந்தேகிக்கப் படும்.

இவ்வளவு காலமும் இப்படியான சந்திப்புக்கள் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகளையும் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இல்லாவிடில்.... வழக்கம் போல், நானும் கச்சேரிக்குப் போனேன்.. என்ற விதத்தில், பத்திரிகைகளுக்கு பல்லைக் காட்டிக் கொண்டு எடுத்த, படம் காட்டலாகவே இருக்கும்.

வர வர... கோமாளிக் கூத்துக்கள் கூடிக் கொண்டே போகின்றது. 😂 🤣

அது ஒன்றுமில்லை தேர்தல் செலவுக்கு காசு வாங்கப் போயிருப்பார்........🤣🤣. அது சரி நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். ??? ...இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் வாக்கு போட்டால் எவரும் பாராளுமன்றம் போகலாம்” ......

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டாலும் குற்றம். கால்பட்டாலும் குற்றம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ்நாட்டில் ஸ்டாலினை 1௦௦௦ பேரில் கூட்டதோடு கூட்டமாய் நின்று செல்பி எடுத்து விட்டு இங்கு வந்து தமிழர் பிரச்சனையை பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கதைத்தோம் என்று அடித்து விட்ட தமிழர்களை ஏமாற்றும் சோணகிரி .

அங்கு அமெரிக்க அவுஸ் தூதரங்களில் டொய்லெட் அடைப்பு எடுத்து இருக்கும் இவர் விழுந்தடித்து நாலு பிளம்பருடன் போய் அடைப்பெடுத்து விட்டு விட்டு வெளியாலை வந்து சமகால தமிழர்களின் விடயம் பற்றி கதைத்தேன்என்று அடித்து விட்டுருப்பார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழ்நாட்டில் ஸ்டாலினை 1௦௦௦ பேரில் கூட்டதோடு கூட்டமாய் நின்று செல்பி எடுத்து விட்டு இங்கு வந்து தமிழர் பிரச்சனையை பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கதைத்தோம் என்று அடித்து விட்ட தமிழர்களை ஏமாற்றும் சோணகிரி .

கலந்துரையாடும்போது எடுத்த படத்தை போட்டிருக்கலாமே, இது ஏதோ போற வழியில எட்டிப்பாத்து சுகம் விசாரித்த மாதிரியிருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

தேல்தலில் வென்றிருந்தால் இவரைப் பிடித்திருக்கேலாது.

தற்போது சிறிய கூட்டமைத்திருக்கும் ஆட்களை பிரிப்பது பற்றி மும்முரமாக வேலை நடக்கிறதாம்.

செல்வத்தையும் சித்தரையும் தட்டித் தூக்கிற அலுவல் நடக்குதாம்.

எதுக்கு வந்தார்களோ அதை செவ்வனே செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அது ஒன்றுமில்லை தேர்தல் செலவுக்கு காசு வாங்கப் போயிருப்பார்........🤣🤣. அது சரி நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். ??? ...இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் வாக்கு போட்டால் எவரும் பாராளுமன்றம் போகலாம்” ......

சுமந்திரன்உள்ளூராட்சி தேர்தலுக்கு... புலம் பெயர் தேசத்தில், காசு சேர்க்கப் போனால்....

காலில் உள்ளதை கழட்டி அடிக்க வருவார்கள் என்பதால்,

அமெரிக்க, அவுஸ்திரேலிய தூதுவர்களிடம்... டொலரில் காசு வாங்கப் போயிருக்கிறார் போலுள்ளது.

😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இறக்கிவிட்டவர்களிடம் தானே போய் நிற்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இறக்கிவிட்டவர்களிடம் தானே போய் நிற்கணும்.

செய்த செயலுக்கு... சன்மானம் வாங்கப் போயிருப்பாரோ....

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தனித்தனியாக தனியப்போய்ச் சந்திக்க ஆசைதான் ஆனால் அமெரிக்க மற்றும் ஆஸி தூதுவர்களுக்குத் தமிழ் தெரியாதே!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

எங்களுக்கும் தனித்தனியாக தனியப்போய்ச் சந்திக்க ஆசைதான் ஆனால் அமெரிக்க மற்றும் ஆஸி தூதுவர்களுக்குத் தமிழ் தெரியாதே!😂

ஏன் தேசியத் தலைவரை சந்தித்த உலக தலைவர்கள் எல்லாம் தமிழ்படித்து பட்டம் வாங்கிய பிற்பாடா போய் சந்தித்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் தேசியத் தலைவரை சந்தித்த உலக தலைவர்கள் எல்லாம் தமிழ்படித்து பட்டம் வாங்கிய பிற்பாடா போய் சந்தித்தார்கள்?

🤣நீங்கள் இப்படியான அறிவு பூர்வமான கேள்விகளை கேட்டு எங்களை கொதிப்படைய வைக்க வேண்டாம என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் சுமோ&அனுரா தேசிய கூட்டமைப்பு😅

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மக்களால் வெளியேற்றப்படுகிறார். அவரை மட்டும் தனியே உலகம் சந்திக்கிறது. அவ்வளவு அக்கறை இரு பகுதிக்கும் மக்கள் மேல்....?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஒருவர் மக்களால் வெளியேற்றப்படுகிறார். அவரை மட்டும் தனியே உலகம் சந்திக்கிறது. அவ்வளவு அக்கறை இரு பகுதிக்கும் மக்கள் மேல்....?

மக்களால் வெளியேற்றப் பட்டவரை விடுங்கள். மக்களால் தேர்வு செய்தல் நிகழும் தேர்தலில் நிற்காத தலைவர்களைக் கூட வெளிநாடுகள் சந்தித்திருக்கின்றனவே? எனவே இந்த "தேர்தலில் வென்றவன் தான் சந்திப்புக்குப் போக வேண்டும்" என்ற உங்கள் விதி பாரபட்சமாகப் படுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

மக்களால் வெளியேற்றப் பட்டவரை விடுங்கள். மக்களால் தேர்வு செய்தல் நிகழும் தேர்தலில் நிற்காத தலைவர்களைக் கூட வெளிநாடுகள் சந்தித்திருக்கின்றனவே? எனவே இந்த "தேர்தலில் வென்றவன் தான் சந்திப்புக்குப் போக வேண்டும்" என்ற உங்கள் விதி பாரபட்சமாகப் படுகிறது!

உங்கள் அளவுக்கு எனக்கு விளங்கிக் கொள்வது கடினமாக உள்ளதால் யார் யாரை அவ்வாறு சந்தித்தார்கள் என்று சொல்லமுடியுமா? மேலும் ஒருவரை மட்டுமே சந்தித்தல் எங்காவது நடந்திருந்தால் போனஸ் தகவலாக அதையும் குறிப்பிடவும்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உங்கள் அளவுக்கு எனக்கு விளங்கிக் கொள்வது கடினமாக உள்ளதால் யார் யாரை அவ்வாறு சந்தித்தார்கள் என்று சொல்லமுடியுமா? மேலும் அவரை மட்டுமே சந்தித்தல் எங்காவது நடந்திருந்தால் போனஸ் தகவலாக அதையும் குறிப்பிடவும்.

ஓம், இது போன்ற விடயங்கள் உங்களுக்கு விளங்காது என்பது நம்பக் கூடியதாகத் தான் இருக்கு😂. தனியே சந்திப்பு வன்னியில் நடக்கவில்லை, ஆனால் லண்டனில் இருந்த ஆட்களோடு கமெராவுக்கு தெரியாத சந்திப்புகள் நடந்திருக்கின்றன என்று தான் "போரும் சமாதானமும்" சொல்கிறது. எனவே, தேர்வு செய்த பிரதிநிதிகள் மட்டும் தான் சந்திக்க வேண்டுமென்ற நியதி நியாயமும், முன்னுதாரணமும் அற்றது தானே? ஏன் ஒரு கட்சியின் பதில் செயலாளருக்கு மட்டும் இந்த விதி பிரயோகமாக வேணுமென நினைக்கிறீர்கள்? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

லண்டனில் சந்தித்தவர் ஒரு தூதுவராக கணிக்கப்பட்டிருக்கத்தான் அன்றைய சூழ்நிலை காரணமாக இருக்கலாம். இன்று இவர் தனியே என்பது தான் கேள்வி. சும்மா எல்லாவற்றிலும் குற்றமும் குறையும் காணும் அவசரத்தில் எழுதாமல் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டு சுயமாக கருத்து எழுதுங்கள். ஒன்றும் அவசரமில்லை.. நான் இங்கே தான் நிற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

குற்றமும் குறையும் கண்டு பிடித்தது யார் இந்த திரியில்? தமிழரசுக் கட்சி தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய கட்சி. அதன் பதில் செயலாளரை இரண்டு தூதுவர்கள் தனியே சந்தித்தார்கள். இதில் குற்றமும் குறையும் கண்டு பிடித்தது யார்? நீங்கள் எழுதியதையே மறந்து விட்டு நீங்கள் இங்கை பாய் போட்டுப் படுத்திருப்பதில் என்ன பயன் விசுகர்😂?

பேசாமல் "பதில் செயலாளர் விக்கிரகத்தைத் தலையில் சுமக்காத காரணத்தினால் அவர் வேண்டாப் பெண்டாட்டி"😎 என்று ஒப்புக் கொண்டு விட்டு இளைப்பாறுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் தேசியத் தலைவரை சந்தித்த உலக தலைவர்கள் எல்லாம் தமிழ்படித்து பட்டம் வாங்கிய பிற்பாடா போய் சந்தித்தார்கள்?

உங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்க தேசியத் தலைவரை இழுத்துக்கொண்டு வந்து விட்டீர்கள். தேசியத் தலைவரை வைத்துக்கொண்டு கொச்சைப்படுத்தும் பாலியல் வக்கிரன் சீமானைக் கண்டிக்க உங்களால் முடியாது. தேசியத் தலைவர் இருந்திருந்தால் சீமான் என்ற வக்கிரனை எப்பவோ காடாத்தி இருப்பார். தயவுசெய்து உங்கள் அலப்பறைகளுக்கு தேசியத் தலைவரை கொண்டுவந்து முடிவதை நிறுத்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒருவர் மக்களால் வெளியேற்றப்படுகிறார். அவரை மட்டும் தனியே உலகம் சந்திக்கிறது. அவ்வளவு அக்கறை இரு பகுதிக்கும் மக்கள் மேல்....?

அவ்வளவு அக்கறை சிறிலங்கா அரசியலில் ...எங்கே எப்ப வேட்டு வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ...ஜெ.வி.பி தமிழ் எம்.பிக்களை விட சுமத்திரனின் தமிழ் தேசிய ஆதரவு பயன் தரலாம்...என நான் நினைக்கிரேன்...ஜெ.வி.பி தமிழ் எம்.பிக்கள் அவர்களது தலமை/மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ற வகையில் தான் கருத்து சொல்ல முடியும் ஆனால் நம்ம சுமோ சொந்தமாக செயல்பட முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

உங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்க தேசியத் தலைவரை இழுத்துக்கொண்டு வந்து விட்டீர்கள். தேசியத் தலைவரை வைத்துக்கொண்டு கொச்சைப்படுத்தும் பாலியல் வக்கிரன் சீமானைக் கண்டிக்க உங்களால் முடியாது. தேசியத் தலைவர் இருந்திருந்தால் சீமான் என்ற வக்கிரனை எப்பவோ காடாத்தி இருப்பார். தயவுசெய்து உங்கள் அலப்பறைகளுக்கு தேசியத் தலைவரை கொண்டுவந்து முடிவதை நிறுத்துங்கள்!

அன்றைக்கு வெள்ளையனுக்கு அடியாகி இன்னும் வெளியே வரலை.

நீங்க ஏன் சீமானை இதுக்குள்ள இழுக்குறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

அன்றைக்கு வெள்ளையனுக்கு அடியாகி இன்னும் வெளியே வரலை.

நீங்க ஏன் சீமானை இதுக்குள்ள இழுக்குறீர்கள்?

அப்ப நீங்கள் ஏன் தலைவரை இழுக்குறீங்கள்?

இங்க பார்ரா அயோக்கியன் சீமானைச் சொன்னோண்ண அண்ணுக்கு கோவம் வந்திட்டுது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kavi arunasalam said:

வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டாலும் குற்றம். கால்பட்டாலும் குற்றம்

இப்படியான சந்திப்புகளை பகிரங்கப்படுத்தினால் சந்திப்பிற்கான விளக்கங்களை கொடுக்க வேண்டும். இல்லையேல் சந்திப்புக்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். மொட்டையாக அவரை சந்தித்தோம் இவரை சந்தித்தோம் என அறிக்கை விடுவதன் பின்னணி என்ன?

காரணத்தை நீங்களாவது சொல்லுங்கள்? 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.