Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

494500126_1129176192558571_3282122515645

பலவருட பலகோடி தங்கம் இன்று வெளியில் கொண்டு வரப்பட்டது!

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

ltte.jpg?resize=750%2C375&ssl=1

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையகத்தில் இன்று (02) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையால் அதன் பெறுமதி மதிப்பிடப்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

தங்க ஆபரணங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டால் அவற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க தயார் எனவும் இலங்கை இராணுவம் இதன்போது தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1430374

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ராஜபக்ஷ குடும்பம் விற்பனை செய்து தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடவில்லையா.?? இன்றைய நிலையில் அர்ச்சுனா விடம். ஒப்படைத்தால். அவர் உரிமையாளர்களுக்கு. கொடுக்கும் ஒழுங்குக்குகளை செய்வார் ...இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.

சரியாக சொன்னீர்கள்.

பட்ட துன்பம் போதாது என்று... புதிதாக துன்பப் படுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சரியாக சொன்னீர்கள்.

பட்ட துன்பம் போதாது என்று... புதிதாக துன்பப் படுத்துவார்கள்.

இந்த அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டு..ஒரு கிழமையில் இதனை தனதாக்கிக் கொள்ளும்...அல்ல்து மதுபானப் போத்தல் அழிப்பின் பேரில் தேயிலைச்சாயம் அழித்ததுபோல்...கில்லிட்டு நகைகள் வெளிவரும் ..அவ்வளவுதான் தமிழன் வாழ்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

இந்த அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டு..ஒரு கிழமையில் இதனை தனதாக்கிக் கொள்ளும்...அல்ல்து மதுபானப் போத்தல் அழிப்பின் பேரில் தேயிலைச்சாயம் அழித்ததுபோல்...கில்லிட்டு நகைகள் வெளிவரும் ..அவ்வளவுதான் தமிழன் வாழ்க்கை

பொது மக்களின் உறுதி உள்ள காணியையே வருடக் கனக்காக பிடித்து வைத்துக் கொண்டு தராதவர்கள்… இந்த நகைகளை அடையாளம் காட்டினால் தருவார்களாம். நம்பும் படியாகவா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.

4 hours ago, தமிழ் சிறி said:

சரியாக சொன்னீர்கள்.

பட்ட துன்பம் போதாது என்று... புதிதாக துன்பப் படுத்துவார்கள்

புலிகளிடம் இருந்தது என்பதால் மட்டும் அவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தம் என்று கூறிவிட முடியாது.

அடையாளம் காட்டுபவர்கள் தங்கள் நகைகளை

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது

என்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, வாத்தியார் said:

புலிகளிடம் இருந்தது என்பதால் மட்டும் அவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தம் என்று கூறிவிட முடியாது.

அடையாளம் காட்டுபவர்கள் தங்கள் நகைகளை

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது

என்று நினைக்கின்றேன்

மக்கள் தான் புலிகள்

புலிகள் தான் மக்கள் என்ற சம்பவங்கள் இருக்க.....

விடுதலைப்புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என உரிமை கோர வெளிக்கிடும் போது....

இன்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெறும் வாயை அசை போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அவலும் பஞ்சாமிர்தமும் தானாக வாயில் விழுந்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஐம்பத்து வீதமானவற்றை உடனடியாக வட கிழக்கில் போரினால் அங்கவீனமுற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு ( முன்னாள் போராளிகள் உட்பட) பிரித்து வழங்க வேண்டும் .

எஞ்சிய அரைவாசியை , ஓரிரு வருடங்களுக்குள் உரிமை கோரப்படாவிட்டால் , அவற்றையும் இவ்வாறே செய்ய வேண்டும் .

( இப்ப யாரவது புத்திசாலி ஓருவன் வந்து , முதல் குடுத்த அரைவாசிக்குள் யாராவது உரிமை கோரினால் என்ன செய்வது எண்டு கேட்டால் .. கொலை தான் விழும் - கேக்கிற ஆளை )

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

புலிகளிடம் இருந்தது என்பதால் மட்டும் அவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தம் என்று கூறிவிட முடியாது.

அடையாளம் காட்டுபவர்கள் தங்கள் நகைகளை

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது

என்று நினைக்கின்றேன்

வாத்தியார் உங்கள் கருத்துகள் புலிகள் கொள்ளையார்கள். என்று சொல்லுது உண்மையில் புலிகள் கொள்ளையார்களா?? நான் அறிய. ஒரு பவுன் சேர்ந்த போது நிறைய பேர். வளிய. தன்னிச்சையாக கொடுத்தார்கள்… எனவே தயவுசெய்து வேறு யோசனைகளை முன் வையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது

3 hours ago, alvayan said:

..கில்லிட்டு நகைகள் வெளிவரும் ..அவ்வளவுதான் தமிழன் வாழ்க்கை

இவை உண்மையான தங்கந்தானா என்பது யாருக்குத் தெரியும்? மஹிந்தவின் காலத்தில் ஒருவருக்கு இந்த நகை அளிக்கப்பட்டது, அதை பரிசோதித்த போது அது போலியானது என பத்திரிகைகளில் வெளிவந்தது. இவ்வளவுகாலமும் வெளிவராத நகை இப்போ வெளிவந்ததன் பின்னணி என்ன? போலியானாலும் மக்கள் திரும்பப்போய் கேட்பார்களா வாங்கியவர்கள்? அதை திருப்பி அவர்கள் மேல் பழிபோட மாட்டார்களா? இவ்வளவையும் இழந்த பின்னும் புலிகளை வணங்குபவர்கள், புலிகள் கொள்ளையடித்தார்கள் என்று சொல்வார்களா? சுமந்திரன் தனக்கு முன்னாள் விடுதலைப்புலிகளால் உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறி, இராணுவபாதுகாப்பு கோரியதையே ஆதாரமாக வைத்து பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய முடியாதென சர்வதேசத்துக்கு அறிக்கை விட்ட முன்னைய அரசாங்கம், இதனையும் ஆதாரமாகக் கொண்டு தம் போர்க்குற்றங்களை நிஞாயப்படுத்தும். ஏதோ ஒரு அவசரம் அவர்களை இப்படி ஒரு கதையை உருவாக்க வைத்துள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றி, போர்க்குற்றங்களை, மக்களை பாதுகாப்பதற்கே போர் புரிந்தோம் அது குற்றமாகாது மக்களே சாட்சி என்று இந்த சம்பவத்தை ஆதாரமாக வைக்கலாம். தேர்தல் வெற்றி. அரசாங்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக யோசிக்கின்றன தம்மை பாதுகாக்க. ஆனால் நம்ம தலைமைகளும், அவர்களோடு சல்லாபிக்க மக்களை பணயம் வைக்கின்றனர். மக்களின் வீட்டு கதவு, யன்னல்களை திருடிக்கொண்டுபோன இராணுவம், நிலத்தை கிண்டி நகை தேடிய இராணுவம், இத்தனைகாலம் தமிழரின் நகைகளை பாதுகாத்து வைத்திருந்ததாம், நம்பிற்றோமில்ல. அவர்கள் எடுத்தது இவ்வளவு தங்கம் அவ்வளவும் இங்குள்ளது என்று நிரூபிப்பயது யார்?     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, சாமானியன் said:

இதில் ஐம்பத்து வீதமானவற்றை உடனடியாக வட கிழக்கில் போரினால் அங்கவீனமுற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு ( முன்னாள் போராளிகள் உட்பட) பிரித்து வழங்க வேண்டும் .

பிரித்து வழங்கப்பட வேண்டியது புலம்பெயர் நாடுகளில் நாட்டிற்கான நிதி என சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணங்கள். 👈

அங்கு செய்திகளுக்காக சோடிக்கப்படும் பணங்களோ நகைகளோ அல்ல.👎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பிரித்து வழங்கப்பட வேண்டியது புலம்பெயர் நாடுகளில் நாட்டிற்கான நிதி என சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணங்கள். 👈

அங்கு செய்திகளுக்காக சோடிக்கப்படும் பணங்களோ நகைகளோ அல்ல.👎

அஃது அண்ணை நேரில் வந்தபின் தான் ரிலீஸ் எண்டு சொல்லீற்றங்களே பொஸ் ..🙂

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மண்மீட்பு நிதி என குடும்பத்துக்கு ஒரு பவுண் வாங்கினார்கள். ஆனால் இப்படி ஆபரணங்களாக அவர்கள் சேர்க்கவில்லை.

கொள்ளை அடிக்கவும் இல்லை.

பணத்தை தங்க கையிருப்பாக (நாட்டின்/ அமைப்பின் திறைசேரி) சேமித்தால் கூட, உருக்கி தங்க கட்டியாக அல்லவா வைத்திருப்பார்கள்.

இதென்ன மார்ர்வாடி கடை போல் இருக்கிறது ?

தமிழீழ வைப்பகத்தில் மக்கள் வைத்திருந்த நகைகளின் ஒரு தொகுதியை கணக்கு காட்டிவிட்டு, தங்க கட்டிகளாக புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகை தங்கத்தை ஆட்டையை போட்டு விட்டார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

புலிகள் மண்மீட்பு நிதி என குடும்பத்துக்கு ஒரு பவுண் வாங்கினார்கள். ஆனால் இப்படி ஆபரணங்களாக அவர்கள் சேர்க்கவில்லை.

கொள்ளை அடிக்கவும் இல்லை.

பணத்தை தங்க கையிருப்பாக (நாட்டின்/ அமைப்பின் திறைசேரி) சேமித்தால் கூட, உருக்கி தங்க கட்டியாக அல்லவா வைத்திருப்பார்கள்.

இதென்ன மார்ர்வாடி கடை போல் இருக்கிறது ?

தமிழக வைப்பகத்தில் மக்கள் வைத்திருந்த நகைகளின் ஒரு தொகுதியை கணக்கு காட்டிவிட்டு, தங்க கட்டிகளாக புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகையை தங்கத்தை ஆட்டையை போட்டு விட்டார்கள்.

பல நூறு கிலோ தங்கம் இருக்கும் என்று முன்பு சொன்னவர்கள்.

இப்போ காட்டியது... ஒரு பொட்டலத்தில் உள்ள கொஞ்ச நகைகள் தானாம்.

மிகுதியை, மகிந்த... உகண்டாவில் கொண்டு போய் பதுக்கி விட்டார் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம்

17 hours ago, தமிழ் சிறி said:

சரியாக சொன்னீர்கள்.

12 hours ago, குமாரசாமி said:

புலிகள் தான் மக்கள் என்ற சம்பவங்கள் இருக்க.....

12 hours ago, வாத்தியார் said:

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால்.......

கந்தையா அண்ணை உங்களின் இந்த வசனத்தின்படி புலிகள் பயங்கரவாதிகள் என நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்கள் எனவும் நான் வாதாடலாம்

அதை சிறி அண்ணை சரியான கருத்து எனக் கூறினார் எனவும் வாதாடலாம்

எழுதியதை சரியாக விளங்கிக் கொண்டால் சரி

பிழையாக விளங்கிக் கொண்டால் பிழை 🙏

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.

புலிகள் புலிகள் என் சிங்கள தேசியவாதிகள் சிங்கள மக்களை ஏமாற்றியது போல......

தமிழ்த் தேசியவாதிகளும்...... எல்லோரும் அல்ல ஒரு சில தேசியம் பேசும் அரசியல்வாதிகள்......

விடுதலைப் புலிகளை முன் வைத்து..... பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அப்படியான கருத்தாகவே கந்தையா அண்ணையின் கருத்தும் இருக்கின்றது .

இன்றைய நிலையில் ......

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மிகுதியை, மகிந்த... உகண்டாவில் கொண்டு போய் பதுக்கி விட்டார் போலுள்ளது. 😂

இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கு பல மில்லியன் வாரிசில்லா சொத்து கிடைத்துள்ளது, வங்கி கணக்கு விபரம் அனுப்புங்கள் என்று நைஜீரியாவில் இருந்து வரும் இமெயில் போல் உகண்டாவில் இருந்து வந்தால் உடனே டிலீட் பண்ண கூடாது.

உண்மையாகவும் இருக்கலாம்😂.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்த வெற்றிக்காக என று கூறி மக்களிடம் இருந்து புலம் பெயர் தேசியவாதிகள் என்று அழைப்பவர்களால் 2008/2009 காலப்பகுதியில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான ஈரோ பணமும் இப்படி பொட்டலம் கட்டி வைத்திருந்தால் பிடிபட்டிருக்கும். 😂 😂 மக்களுக்கு சிறு பகுதியேனும் திரும்ப கிடைத்திருக்கலாம். ஆனால் கெட்டிக்காரர்கள் என்றதால் பினாமிகள் பெயரில் பல் வேறு இடங்களை கைமாற்றப்பட்டு அத்தனை பணமும் பணத்தை சேர்ததவர்களாலே ஆட்டையை போடப்பட்டது. பணத்தை சேர்தத நோக்கம் நிறைவேறாமல் விட்டாலும் கிடைத்த பணத்தை அப்படியே அமுக்கியதில் வெற்றி பெற்று விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரிய முறையில் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்

04 MAY, 2025 | 05:19 PM

image

எமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் வசமிருந்த தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகள் தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மத்திய வங்கியினால் குறித்த நகைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையில் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சார அடையாளமாக பேணப்பட்டு வந்த சொத்துக்களை இல்லாமல் செய்து தமிழ் மக்களை  நிர்க்கதியாக்கிய பேரினவாத சிந்தனை கொண்ட அரசுகள் தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்திருக்கின்றது.

இந்த நிலையில் நகைகளை வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள வங்கிகளில் அடகு வைத்த மக்கள் தமது நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் தமது முதலீடுகள் அனைத்தையும் இழந்திருப்பதனால் பெரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலைமையில் தற்போதைய அரசு தேர்தல் நலனுக்கானதாக இருந்தாலும் அந்த நகைகள் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை வெளிப்படுத்தியமையை வரவேற்கின்றேன்.

எனினும் குறித்த நகைகளை உரியவர்கள் இல்லை என்ற காரணங்களை காட்டி அரசுடைமையாக்காது நகைகளுக்கு உரித்தான தமிழ் மக்களிடம்  ஒப்படைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை பொதுமக்களும் தங்களிடம் குறித்த நகைகளை அடகு வைத்த பற்றுச்சீட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை வெளிப்படுத்தி தமது நகைகளை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கும் முன் வர வேண்டும்.

பற்றுச்சீட்டுக்கள் உள்ளவர்கள் அதன் பிரதிகளை என்னிடம் வழங்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரியவர்கள் இந்த நகைகளை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும்.

அத்துடன் அரசாங்கமானது வங்கிகளில் அடகு வைத்த பற்றுச் சீட்டுக்கள் பல பொது மக்களிடம் இல்லாத நிலை தற்போது காணப்படுகின்றது. 

அது மாத்திரமன்றி அடகு வைத்த பலர் இன்று இயற்கை எய்தியும் உள்ளதால் அவை தொடர்பில் ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

எனவே, அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த  நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர நகைகளை அரசுடைமையாக்கி தமிழ் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யக்கூடாது என்றார். 

https://www.virakesari.lk/article/213662

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2025 at 17:03, வாத்தியார் said:

புலிகளிடம் இருந்தது என்பதால் மட்டும் அவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தம் என்று கூறிவிட முடியாது.

அடையாளம் காட்டுபவர்கள் தங்கள் நகைகளை

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது

என்று நினைக்கின்றேன்

சொல்கிறேன் என்று கோவிக்காதீர்கள்..ஒவ்வொரு யுத்த கால கட்டங்களிலும் மக்கள் எங்கு போவது என்று தெரியாமல் தங்கள் உடைமைகளை பொதுவாக வீட்டுப் பத்திரம், நகை என்று தாட்டு வைத்து விட்டு ஓடிய மக்களும் உண்டு அண்ண..ஆகவே புலிகள் மிரட்டி அபகரித்தார்கள் என்று சொல்லுமளவுக்கு அனேக மக்கள் போக மாட்டார்கள்..இப்போ இந்த நகைகளுக்கு உரியவர்கள் இருக்கிறார்களோ, இல்லயோவும் தெரியாது இல்லயா..இதே புலிகள் ஒரு காலத்தில் வறுமை கோட்டுக்கு கீளே இருந்தவர்களுக்கு மற்றும் உடல் நலம் பாதிக்கபட்டவர்களுக்கு என்று உதவி செய்த காலங்களும் உண்டு.உங்களைப் போன்றவர்கள் மறந்தாலும் யுத்தத்தோடையே வாழ்ந்த மக்கள் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.நன்றி.

On 2/5/2025 at 18:19, Kandiah57 said:

வாத்தியார் உங்கள் கருத்துகள் புலிகள் கொள்ளையார்கள். என்று சொல்லுது உண்மையில் புலிகள் கொள்ளையார்களா?? நான் அறிய. ஒரு பவுன் சேர்ந்த போது நிறைய பேர். வளிய. தன்னிச்சையாக கொடுத்தார்கள்… எனவே தயவுசெய்து வேறு யோசனைகளை முன் வையுங்கள்

புலிகள் கொள்ளையர்கள் அல்ல. ஆனால் இந்த தங்கம் வாங்கும் விடயத்தில் சில இடங்களில் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் நடந்து கொண்ட சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

எம் அயலில் கணவனை இளம் வயதில் இழந்த, அக் கணவனின் ஓய்வூதியத்தில் 2 பெண் பிள்ளைகளை வளர்த்து கொண்டிருந்த என் உறவுகார பெண்மணியை கடுமையாக திட்டி, அப் பெண் பிள்ளை போட்டிருந்த சின்னஞ்சிறு தோட்டை கழற்றிக் கொடுக்க சொல்லு வற்புறுத்தி வாங்கிச் சென்றார்கள். 90 இன் ஆரம்பத்தில் பாண்டியந்தாழ்வு பகுதியில் இது நிகழ்ந்தது.

இவ்வாறு மிரட்டி பணம் பெறுவதை சமாதான கால கட்டத்தில் வேறு விதமாக செய்தனர். இங்கு கனடாவில் நிதி அளிக்க மறுத்த பலர் ஊருக்கு போகும் போது A9 வீதியில் புளியங்குளம் பகுதியில் இருந்த புலிகளின் முதலாவது சோதனைச் சாவடியில் வைத்தே கைது செய்து மிரட்டி கனடாவில் உள்ள குடும்ப அங்கத்தவர் காசு கொடுத்த பின் விடுவிக்கப்பட்டனர்.

என் நெருங்கிய நண்பனின் அப்பாவுக்கும் இது நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

ஆகவே புலிகள் மிரட்டி அபகரித்தார்கள் என்று சொல்லுமளவுக்கு அனேக மக்கள் போக மாட்டார்கள்.

ஒருவர் நகைகளைக் கேட்டால் பிரச்சனை வரும் என்கிறார்

இன்னொருவர் திரும்பக் கேட்பவர்கள் சிறைக்குப் போக வேண்டும் என்கிறார்

நான் பாவப்பட்ட மக்கள் சிறைக்குச் செல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள

என்ன செய்யலாம் எனக் கூறினேன்.

இதை விளங்காமல் பலரும் பல மாதிரி விளக்கம் தருகின்றார்கள்

1 hour ago, நிழலி said:

இங்கு கனடாவில் நிதி அளிக்க மறுத்த பலர் ஊருக்கு போகும் போது A9 வீதியில் புளியங்குளம் பகுதியில் இருந்த புலிகளின் முதலாவது சோதனைச் சாவடியில் வைத்தே கைது செய்து மிரட்டி கனடாவில் உள்ள குடும்ப அங்கத்தவர் காசு கொடுத்த பின் விடுவிக்கப்பட்டனர்.

என் நெருங்கிய நண்பனின் அப்பாவுக்கும் இது நடந்தது

நிழலி கூறியது போல 2002 இல் எனக்கு நேரடியாக மிரட்டல் வந்தது

அடுத்த முறை இந்தப்பாதையால் நீங்கள் யாழ் செல்வதாக இருந்தால்

உங்கள் பெயர் எங்கள் பட்டியலில் நிதி உதவி அளிப்பவர் என இருக்க வேண்டும் என்றார்கள் .

நானும் சரி எனக் கூறிவிட்டு கடந்து சென்று விட்டேன்.

பின்னர் எங்களிடம் நிதி சேகரிக்க வந்த அந்த நல்ல மனிதர்

2009 க்குப் பின்னர் கேரளாவில் பல கோடி வியாபாரம் செய்து வருகின்றார்.

அதில் எனது பங்கும் இருக்கும் ஆனால் கேட்டாலும் திரும்பாத தரமாட்டார்😂

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பவுண் கொடுக்க மறுத்தவர்கள் பதுங்குகுழியினுள் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.