Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ரஸ்யாவினுள் உக்ரேன் மேற்கொண்ட தாக்குதல்களில் இருந்து வேறுபட்டதும், வீரியம் கூடியதுமான தாக்குதல் ஒன்றை உக்ரேன் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் மூலோபாய விமானங்கள் என அழைக்கப்படும் நீண்ட தூரம் பறக்க கூடிய, அதிக எடையான வெடிபொருட்களை காவக்கூடிய ரஸ்யாவின் 41 விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக/அழிக்கப்பட்டதாக உக்ரேன் கூறுகிறது.

BBC News
No image preview

Ukraine drone attack hits more than 40 Russian bomber pla...

A major operation has been launched by Ukraine using drones to destroy Russian bomber planes, according to the Ukrainian security service.

பார ஊர்திகளின் கூரையில் டிரோன்கள் பதுக்கி வைக்கப்பட்டு - தாக்குதலில் ஈடுபடுத்தபட்டனவாம்.

தாக்குதல் முடிவில் பார ஊர்திகள் தானியங்கியாக அழிந்தனவாம்.

  • Replies 79
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்த

  • goshan_che
    goshan_che

    இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் க

  • வைரவன்
    வைரவன்

    ஐயா, நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என சொல்ல முடியுமா? அல்லது, நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின் தமிழில் பொழிப்புரை யை சுருக்கமாகவேனும் தர முடியுமா? நான் ஒரு பாமரன் எனக்கு மண்டை காயுது ஐயா கரு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்


நமது சிறப்பு நிருபர்

ஜூன் 01, 2025 07:10 PM

Latest Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 40 போர் விமானங்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என தெரிகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போர் நடந்து கொண்டு உள்ளது.

இதனிடையே, இன்று ரஷ்யாவில் இரண்டு பாலம் இடிந்து விழுந்தது. அதில் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதற்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இருக்கலாம் என ரஷ்யா சந்தேகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 40போர் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.

குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற டியு 95 மற்றும் டியு -22 ரக போர் தளவாடங்களும் சேதம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில் இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது உறுதிப்படும் பட்சத்தில், ரஷ்யா தாக்குதலை துவக்கிய பிறகு, அந்நாட்டின் முக்கிய ராணுவ தளம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் முக்கியமானதாக இது இருக்கும்.

https://www.dinamalar.com/news/world-tamil-news/40-russian-aircraft-downed-in-ukraines-massive-drone-attack-on-air-base-report/3945552

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோட உக்ரேன் போர் முடிவுக்கு வரும்... 😎

  • கருத்துக்கள உறவுகள்

வரிசையாக ரஎரிந்துகொண்டிருக்கும் ரஸ்ஸியாவின் நெடுந்தூர குண்டுவீச்சு விமானங்களின் ஒளிநாடா இணைக்கப்பட்டிருக்கிறது.

Ukraine-Russia war live: Drones 'emerged from trucks' before strikes on bombers during major attack in Russia - BBC News

ரஸ்ஸியாவின் நான்கு விமானத் தளங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 41 குண்டுவீச்சு விமானங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. தனது விமானத்தளங்கள் தாக்கப்பட்டதை ரஸ்ஸியா ஒத்துக்கொண்டிருக்கிறது.

Watch moment Ukrainian drone strikes 'enemy bombers' after audacious attack inside Russia

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமானங்கள் உண்மையில் இழக்கப்பட்டிருப்பின் ரஸ்யாவின் குரூஸ் ஏவுகணை ஏவும் வல்லமை கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்கிறனர்.

நான் முன்பே பலதடவை சொல்லி இருக்கிறேன் உக்ரேனின் இராணுவ நகர்வுகள் பல புலிகளை ஒத்ததாக இருப்பதாக எனக்கு படுகிறது என.

இது அப்படியே கட்டுநாயக்க தாக்குதலை நினைவுக்கு கொண்டு வந்தது.

BBC News
No image preview

Video appears to show Ukraine drone attack in Russia

Footage shows attack drones homing in on their targets as they sit on the tarmac.
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இது அப்படியே கட்டுநாயக்க தாக்குதலை நினைவுக்கு கொண்டு வந்தது.

கட்டுநாயக்க மற்றும் அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை ஆகியவையும் நினைவிற்கு வந்துபோகின்றன.

ஒரே வித்தியாசம் இது ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. எமது தாக்குதல்கள் போராளிகள் மூலம் நடத்தப்பட்டவை.

Video appears to show Ukraine drone attack in Russia

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளி சரண் அடைகிறது செத்தகிளிக்கு நல்லது!😎

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ரஞ்சித் said:

ஒரே வித்தியாசம் இது ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. எமது தாக்குதல்கள் போராளிகள் மூலம் நடத்தப்பட்டவை.

அப்பொழுதும் இருந்த இடத்தில் இருந்தபடி இலக்கை தகர்க்கும் ஆயுதங்கள் சந்தையில் இருந்தவை தான். ஆனால் நம்மிடம் தான் மனமில்லை பணமில்லை....

அதனால் ஆயுதத்துக்கு பதிலாக எம் உடன்பிறந்தாரை அனுப்பிக் கொண்டே இருந்தோம்

😭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

கட்டுநாயக்க மற்றும் அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை ஆகியவையும் நினைவிற்கு வந்துபோகின்றன.

ஒரே வித்தியாசம் இது ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. எமது தாக்குதல்கள் போராளிகள் மூலம் நடத்தப்பட்டவை.

Video appears to show Ukraine drone attack in Russia

2 minutes ago, விசுகு said:

அப்பொழுதும் இருந்த இடத்தில் இருந்தபடி இலக்கை தகர்க்கும் ஆயுதங்கள் சந்தையில் இருந்தவை தான். ஆனால் நம்மிடம் தான் மனமில்லை பணமில்லை....

அதனால் ஆயுதத்துக்கு பதிலாக எம் உடன்பிறந்தாரை அனுப்பிக் கொண்டே இருந்தோம்

இதை தலைவரே சொல்லி உள்ளார் - வளமில்லாத நலிந்த இனமொன்றின் மிகபெறுமதியான, ஆயுங்கள் கரும்புலிகள் என.

இன்றுவரை மேற்கில் நான் பேசும் பலருக்கு இதை விளங்கவைக்க என்னால் முடியவில்லை. அவர்கள் தற்கொலை என்ற வட்டத்தை தாண்டி சிந்திக்க தயாரில்லை.

ஆனால் சாவு நிச்சயம் என தெரிந்தும் முன்னேறிய தாக்கிய தம் வீரர்களை மெச்சுவார்கள்.

இரெண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது உறைப்பதே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இனத்தின் விடுதலைப்போரை எதனுடன் ஒப்பிடுவது என விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

உக்ரேன் போருக்கும் எமது இன விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? உக்ரேனுக்கு இருப்பது வேறு பிரச்சனை. எம் இனத்திற்கு இருப்பது வேறு பிரச்சனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அப்பொழுதும் இருந்த இடத்தில் இருந்தபடி இலக்கை தகர்க்கும் ஆயுதங்கள் சந்தையில் இருந்தவை தான். ஆனால் நம்மிடம் தான் மனமில்லை பணமில்லை....

புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது?

அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது?

அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.

2003 கடைசிவரை பணத்தட்டுப்பாடும் கடன்களுமே தான் இயக்கத்திடம் புலத்தில் இருந்தன. (முக்கியமாக பிரான்சில்). இது எனக்கு நன்கு தெரிந்த விடயம். அதன் பின்னர் தாயகத்திலிருந்து வந்தவர்களால் புலத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே அதன்பின்னர் நடந்தவை எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. ஒரு காலத்தில் காற்று புக முடியாத இடமெல்லாம் நாம் புகுவோம் என்ற எமது பெரும் பலமாக கருதப்பட்ட ஒரு விடயம் நம்மையே புகமுடியாத விடயமாக்கியது தான் முடிவுரையானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது?

அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.

எனது நண்பன் 2000 யூரோ  கேட்க 6000. யூரோ  கொடுத்தவன். ஆனாலும் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும். அவன் அதைப்பற்றி கதைப்பதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

எனது நண்பன் 2000 யூரோ  கேட்க 6000. யூரோ  கொடுத்தவன். ஆனாலும் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும். அவன் அதைப்பற்றி கதைப்பதில்லை

ஒரு கால கட்டத்தில் இயக்க வேற்றுமை இல்லாமல் எல்லா புலம்பெயர் உறவுகளும் கொடுத்தார்கள் என நினக்கின்றேன்.

நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையாலும் மனமின்மையாலும் போராட்டம் தடைப்படவில்லை என்பதை மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஒரு கால கட்டத்தில் இயக்க வேற்றுமை இல்லாமல் எல்லா புலம்பெயர் உறவுகளும் கொடுத்தார்கள் என நினக்கின்றேன்.

நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையாலும் மனமின்மையாலும் போராட்டம் தடைப்படவில்லை என்பதை மட்டுமே.

உண்மை தான் இவற்றை கதைப்பதால். ஏதாகினும் நன்மைகள் உண்டா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kandiah57 said:

உண்மை தான் இவற்றை கதைப்பதால். ஏதாகினும் நன்மைகள் உண்டா???

போராட்டம் தோல்வியடைந்து விட்டது எனும் போது அதுவும் பேசப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எமது இனத்தின் விடுதலைப்போரை எதனுடன் ஒப்பிடுவது என விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

உக்ரேன் போருக்கும் எமது இன விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? உக்ரேனுக்கு இருப்பது வேறு பிரச்சனை. எம் இனத்திற்கு இருப்பது வேறு பிரச்சனை.

வாசிப்பதில் பிரச்சனையா?

கிரகிப்பதில் பிரச்சனையா?

எமது பிரச்சனையை உக்ரேனோடு ஒப்பிடவில்லை ( ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி ஒரு ஒப்பிலக்கணம் எழுதலாம் - ஆனால் அதுவல்ல இங்கே எழுதப்பட்டது).

இங்கே இரு வேறு காலங்களில் நடந்த தாக்குதல் வியூகங்களே ஒப்பிடபட்டன.

புலிகளின் பிரசுரங்களிலேயே நோமண்டி, குடாரப்பு தரையிறக்கள் ஒப்பிட பட்டுள்ளன.

அதன் அர்த்தம் ஈழ யூத்தமும் இரண்டாம் உலக யுத்தமும் ஒருமாதிரியான பிரச்சனைகள் என்பதல்ல.

42 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையாலும் மனமின்மையாலும் போராட்டம் தடைப்படவில்லை என்பதை மட்டுமே.

இது உண்மைதான்.

ஆயுத பற்றாகுறை ஒரு பெரிய காரணி. ஆனால் அது வாங்குதிறன் இன்மையை விட , வாங்க முடியாமை, வாங்கியதை வழங்க முடியாமைதான் ஏற்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போது டிரோன்கள் இல்லை. உள்ளதில் சிறியது எனில் கிளைடர்கள். அதனை அடுத்து சிறிய ரக விமானங்கள்தான் வான்வழி போரின் கருவிகள். அவற்றை புலிகள் வாங்கி இருந்தார்கள். புலிகள் வன்னியில் வைத்திருந்தது சியாமாசெட்டி விமானங்கள் இரெண்டு என நினைக்கிறேன். இதை 1986 இல் இலங்கை பயன்படுத்தியது.

முன்னர் ஒரு திரியில் இலங்கை கிபிர்களை, மிக்குகளை வைத்து கொண்ட போது, புலிகள் “ அவிஸ்ரேலிய விவசாயிகள் மருந்தடிக்கும் விமானங்களினை” வைத்து கொண்டு தம் சக்திக்கு மேலாக இலங்கைக்கு போக்கு காட்டினர் என எழுதினேன்.

அப்போ மருதர் தலைமையில் ஒரு குரூப் எனக்கு ஒண்டும் தெரியாது எண்டும், புலிகள் அதைவிட பெரிய விமானங்களை எல்லாம் வாங்கி இருந்தனர். என கூறினர்.

மருதர் ஏர்கிராப்ட் மெயிண்டனன்ஸ் வேலை என்பதால் - நான் அடக்கி வாசித்தேன்.

ஆனால்… அப்படி வாங்கியமைக்கு எந்த ஆதாரமும் இதுவரை வெளி வரவில்லை.

9/11 பின்னான காலத்தில் அது சாத்தியமாயும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துல்லியமான திட்டமிட்ட தாக்குதல்.

பிரச்சனை பூட்னின் பதிலடி எப்படி இருக்கப் போகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, goshan_che said:

வாசிப்பதில் பிரச்சனையா?

கிரகிப்பதில் பிரச்சனையா?

எல்லாம் என் தலை விதி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

40 போர் விமானங்கள் அழிப்பா? ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி யுக்ரேன் டிரோன் தாக்குதல்

யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,SBU SOURCE

படக்குறிப்பு,போர் விமானங்களை டிரோன்கள் தாக்கியதாக வெளியான காணொளி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பால் ஆடம்ஸ்

  • பதவி, ராஜாங்க செய்தியாளர்

  • 2 ஜூன் 2025, 03:07 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஞாயிறு அன்று, ரஷ்யாவில் உள்ள நான்கு விமான தளங்களில் உள்ள 40 ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட "ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)" என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, குரூயிஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூடிய 34% போர் விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக எஸ்பியூ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. இதில் டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் மீது தூரத்தில் இருந்தே இயக்கக்கூடிய கூரைகள் உடன் விமானப்படை தளங்கள் அருகே கொண்டு வரப்பட்டு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது.

ஐந்து பிராந்தியங்களில் யுக்ரேனின் தாக்குதல்களை உறுதிபடுத்தியுள்ள ரஷ்யா இதனை "பயங்கரவாத செயல்" என விமர்சித்துள்ளது. இந்நிலையில் தங்களின் எல்லைக்குள் நள்ளிரவில் பலமான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,SBU SOURCE

படக்குறிப்பு,டிரோன் தாக்குதல்

திங்களன்று துருக்கியின் இஸ்தான்புலில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த ரஷ்ய - யுக்ரேன் அதிகாரிகள் செல்லும் நிலையில் தான் இவை அனைத்துமே நடக்கின்றன. ஆனால் சண்டையிடும் இரண்டு நாடுகளுக்கும் இடையே இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால் பேச்சுவார்த்தை மீது குறைவான எதிர்பார்ப்புகளே உள்ளன. 2022-ல் பிப்ரவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கினார். 2014-ல் ரஷ்யா ஆக்கிரமித்த யுக்ரேனிய பகுதியான கிரைமியா உடன் சேர்த்து தற்போது 20% யுக்ரேன் நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எஸ்பியூ தலைவர் வாசில் மலியுக்கை இந்த ஆபரேஷனின் "அட்டகாசமான முடிவிற்காக" பாராட்டியதாக ஸெலன்ஸ்கி ஞாயிறு அன்று சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 117 டிரோன்களுக்கும் தனித்தனி பைலட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"மிகவும் சுவாரஸ்யமான, நாங்கள் வெளியே தெரிவிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஆபரேஷனுக்கான எங்களுடைய அலுவலகம் ரஷ்யாவின் பிராந்தியங்கள் ஒன்றில் அதன் எஃப்.எஸ்.பி-க்கு அடுத்தே இருந்தது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். எஃப்.எஸ்.பி என்பது ரஷ்யாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

இந்தத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட நபர்கள் அதற்கு முன்பே பாதுகாப்பாக ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றார் ஸெலன்ஸ்கி.

யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட இடங்கள்

ரஷ்ய விமானப்படைக்கு 7 பில்லியன் டாலர் (5 பில்லியன் யூரோ) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்பியூ மதிப்பிட்டுள்ளது. மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் அது உறுதியளித்துள்ளது. யுக்ரேனின் கூற்றுகள் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.

யுக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நான்கு ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை எஸ்பியூ தெரிவித்தது.

தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரேன் தெரிவித்துள்ள இடங்கள்

  • இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெலாயா, சைபீரியா

  • மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒலென்யா, ரஷ்யாவின் வட கிழக்கு எல்லை

  • மத்திய ரியாசான் பிராந்தியத்தில் உள்ள தியாகிலெவோ

  • மத்திய இவாநோவா பிராந்தியத்தில் உள்ள இவாநோவா

தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என எஸ்பியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் "தளவாட ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது" என அவர்கள் விவரித்துள்ளனர்.

யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,SBU SOURCE

"எஸ்பியூ முதலில் எஃப்பிவி டிரோன்களை ரஷ்யாவுக்குள் கடத்திச் சென்றது, அதன் பின்னர் மரப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த பிறகு இந்த டிரோன்கள் இந்த மரப் பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டன. அவை சரக்கு வாகனங்களில் வைக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் "சரியான நேரத்தில் தொலைவில் இருந்தே இந்த மரப்பெட்டிகள் திறக்கப்பட்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்க டிரோன்கள் புறப்பட்டுச் சென்றன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இர்குட்ஸ்க் கவர்னர் இகோர் கோப்சேவ் சைபீரியாவின் ஸ்ரெட்னியில் உள்ள பெலாயா ராணுவத் தளத்தை தாக்கிய டிரோன்கள் ஒரு லாரியில் இருந்து தான் ஏவப்பட்டன என்பதை உறுதி செய்தார்.

தாக்குதலுக்கு உள்ளான இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் கோப்சேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இதர தாக்குதல்களும் இதே போல லாரிகளில் இருந்து கிளம்பிய டிரோன்களில் இருந்து தான் நடந்தன என்று ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு பெட்ரோல் நிலையத்தில் அருகில் இருந்த லாரியில் இருந்து டிரோன்கள் பறந்து சென்றதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

மர்மன்ஸ்கில் நடந்த தாக்குதலைப் பதிவு செய்துள்ள ரஷ்ய ஊடகங்கள் வான் பாதுகாப்பு வேலை செய்ததாகவும் தெரிவிக்கின்றன. இர்குட்ஸ்க் மீது நடந்த தாக்குதலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிபடுத்தியது.

யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,SBU SOURCE

இவாநோவா, ரியாசான் மற்றும் அமூர் பிராந்தியங்களில் ராணுவ விமானப்படை தளங்களில் அனைத்து தாக்குதல்களும் தவிர்க்கப்பட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி தளம் எஸ்பியூ தரப்பினால் குறிப்பிடப்படாத ஒன்று.

டர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பிராந்தியங்களில் "டிரோன்கள் ஏவப்பட்ட பிறகு பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீ அணைக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. "இந்த பயங்கரவாத தாக்குதல்களில் பங்கு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு யுக்ரேன் மீதான தொடர் தாக்குதல்களில் 472 டிரோன்கள், 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தான் தற்போது வரை ரஷ்யா நிகழ்த்திய மிகப்பெரிய ஒற்றை டிரோன் தாக்குதலாக உள்ளது. 385 வான் பொருட்களை அழித்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

ஒரு பயிற்சி மையத்தின் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj09d1np8g9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பிரச்சனை பூட்னின் பதிலடி எப்படி இருக்கப் போகிறது?

சிறிய அளவிலான தந்திரோபாய அணு ஆயுத பாவிப்பு கூட இருக்கும் என பல மேற்கில் இருக்கும் புட்டின் ஆதரவு ஆட்கள் எழுதுகிறார்கள்.

அதேபோல் இஸ்தான்புல் பேச்சுகளும் இன்று தொடருமாம்.

உக்ரெய்னிடம் விளையாடுவதற்குத் துரும்புச் சீட்டு எதுவும் இல்லை என்று ட்றம்ப் சில நாட்களுக்கு முன் உக்ரெய்னைக் கேவலப்படுத்தியிருந்தார். உக்ரெய்ன் நேற்று தன்னிடமுள்ள சீட்டு ஒன்றை விளையாடிக் காட்டியுள்ளது. இத் தாக்குதல் புதியதும் அல்ல உயர் தொழில்நுட்பமானதும் அல்ல, தந்திரோபாயமானது மட்டுமே.

நேரடி யுத்தநிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் புதின் இப்போதாவது வந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

(உடனடியான கேள்வி, என் திறந்த வெளியில் விமானங்கள் தரித்து வைக்கப்பட்டு இருந்தன என்று.)

இவை அணு ஆயுத, குண்டுகளை கொண்டுசெல்லக்கூடிய விமானங்கள்.

இந்த போர்மானங்கள் குளிர் யுத்த முடிவு ஒப்பந்த படி (treaty), திறந்த வெளியில் (open hanger) இல் தரிக்கப்பட்டு இருக்க வேண்டும் (செய்ம்மதியாலும், நேரடியாகவும், தரவு பரிமாற்றத்தாலும்) சரி பார்பதற்கு; ருசியா சில சரிபார்க்கும் அம்சங்களை இடைநிறுத்தி இருந்தாலும்.

அதனாலேயே இவை திறந்த வெளியில் தரிக்கவைக்கப்பட்டு இருந்தன, சண்டை களத்தில் இருந்து கிட்டத்தட்ட 7000 மைல்களுக்கு அப்பால், பாதுகாப்பும் குறைவு.

இப்போது இவை தாக்கப்பட்டு இருப்பது, குறித்த குளிர் யுத்த முடிவு ஒப்பந்தமும் (treaty) உம் முடிவுக்கு வருகிறது. ருசியா வேறு ஒப்பந்தங்களையும் கைவிடக் கூடும்.

இது மேற்கின் (உதவியுடன்) விளையாட்டு. எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.