Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி தாக்கியதன் மூலம் புதின், டிரம்புக்கு யுக்ரேன் சொல்லும் சேதி என்ன?

ரஷ்யா - யுக்ரேன், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,UKRAINE PRESIDENTIAL PRESS SERVICE/EPA-EFE/SHUTTERSTOCK

படக்குறிப்பு,வாசில் மல்யுக்குடன் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பால் ஆடம்ஸ்

  • பதவி, ராஜ்ஜீய செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்யாவின் விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு யுக்ரேன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது.

மிகவும் தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும், யுக்ரேன் திட்டமிட்டு நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், எவ்வளவு துணிச்சலானது அல்லது புத்திசாலித்தனமானது என்பதை விவரிப்பது கடினம் தான்.

இந்தத் தாக்குதல்களால் 7 பில்லியன் டாலர் (5.2 பில்லியன் யூரோ) அளவுக்கு சேதம் விளைவித்து விட்டதாக யுக்ரேன் கூறியுள்ளதை நம்மால் உறுதி செய்ய முடியாவிட்டாலும், "ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்" என்பது, தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வெற்றிகரமான நடவடிக்கையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.

யுக்ரேனியர்கள் இந்தத் தாக்குதலை, ரஷ்யாவின் முழுமையான படையெடுப்புக்குப் பிறகு கிடைத்த மற்ற முக்கிய ராணுவ வெற்றிகளுடன் ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

அதாவது 2022-ஆம் ஆண்டில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையின் முக்கிய கப்பலான மோஸ்க்வாவை மூழ்கடித்தது, கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதல், அடுத்த ஆண்டில் செவாஸ்டோபோல் துறைமுகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போன்றவையும் அதில் அடங்கும்.

யுக்ரேனின் ராணுவ உளவுத்துறையான எஸ்பியூவின் மூலம் (SBU) ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த சமீபத்திய நடவடிக்கை இதுவரை யுக்ரேன் நடத்திய தாக்குதல்களில் மிகப் பெரிய ஒன்றாக கருதப்படுகின்றது.

இதற்கான திட்டமிடல் முதல் அதனைச் செயல்படுத்துவது வரையிலான முன்தயாரிப்புப் பணிகள் 18 மாதம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. பல சிறிய டிரோன்கள் ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்டு, சரக்கு லாரிகளின் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி, குறைந்தது நான்கு தனித்தனி இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர், அருகிலுள்ள விமானத் தளங்களை நோக்கி அந்த டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன.

"உலகில் இதற்கு முன்பு எந்த உளவுத் துறையும் இதுபோன்ற எதையும் செய்ததில்லை," என்று பாதுகாப்பு ஆய்வாளர் செர்ஹி குசான், யுக்ரேனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துளார்.

ரஷ்யா - யுக்ரேன், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

"சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று, நீண்ட தூரம் ஏவக்கூடிய ரஷ்யாவின் போர் விமானங்கள் எங்களுக்கு எதிராக நீண்ட தூர தாக்குதல்களை நடத்தும் திறன் வாய்ந்தவை," என்று கூறிய அவர், "ரஷ்யாவிடம் அத்தகைய 120 போர் விமானங்களே உள்ளன. அவற்றில் நாங்கள் 40-ஐ தாக்கியிருக்கிறோம். அது நம்ப முடியாத எண்ணிக்கை" என்று அவர் குறிப்பிட்டார்.

சேதத்தை மதிப்பிடுவது கடினமாக இருந்தாலும் இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம் மிகப் பெரியது என்று யுக்ரேனிய ராணுவச் செய்திகளைப் பதிவு செய்பவரான ஒலெக்சாண்டர் கோவலென்கோ கூறுகிறார்.

" ரஷ்யாவின் ராணுவ-தொழில்துறை அமைப்பு, தற்போதுள்ள நிலையில் அதை விரைவில் சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளார்.

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சுமந்து சென்று, நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்கள் ரஷ்யாவால் தற்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், அவற்றை பழுதுபார்ப்பது சவாலானதாக இருக்கும், அவற்றை மாற்றுவதும் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, சூப்பர்சோனிக் Tu-160 ரக போர் விமானத்தின் இழப்பு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

"இன்று, ரஷ்ய விமானப்படை தங்களின் இரண்டு சக்தி வாந்த விமானங்களை மட்டுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் ஈடுசெய்ய முடியாத இரண்டு விமானங்களையும் இழந்துவிட்டது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

யுக்ரேனின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம், இங்குள்ள ஆய்வாளர்கள் கூறுவது போல் பெரிதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால் 'ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்' ரஷ்யாவிற்கு மட்டும் அல்லாமல், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் மற்றொரு முக்கியமான செய்தியைத் தருகிறது.

பிபிசி யுக்ரேனிய சேவைக்காக பணியாற்றிவரும் எனது சக ஊழியர் ஸ்வயடோஸ்லாவ் கோமென்கோ, சமீபத்தில் கீயவில் ஒரு அரசு அதிகாரியுடன் நடந்த சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

அந்த அதிகாரி மிகுந்த விரக்தியுடன் காணப்பட்டுள்ளார்.

"நாங்கள் ஏற்கனவே போரில் தோற்றுவிட்டோம் என்று அமெரிக்கர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அந்த எண்ணத்திலிருந்தே மற்ற அனைத்தும் பார்க்கப்படுகின்றன. அதுதான் மிகப் பெரிய பிரச்னை" என்று ஸ்வயடோஸ்லாவிடம் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

யுக்ரேனிய பாதுகாப்புப் பத்திரிகையாளர் இல்லியா பொனோமரென்கோ, யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த சர்ச்சையான சந்திப்பை சுட்டிக்காட்டி, வேறொரு கோணத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"யுக்ரேனுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன, உங்களுக்கு வேறு வழிகள் இல்லை, ரஷ்யாவை தோற்கடிக்க முடியாததால் அமைதிக்காக சரணடையுங்கள் என்பன போன்ற அனைத்து வகையான எச்சரிக்கைகளையும் தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு எதிர்கொள்ளும்போது இதுதான் நடக்கும்". என்கிறது அந்தப் பதிவு.

பிசினஸ் யுக்ரேன் எனும் காலாண்டு இதழ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த ட்வீட் இன்னும் சற்று துல்லியமாக இதனைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.

"யுக்ரேனுக்கு சில வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது. இன்று டிரோன்களின் ராஜாவாக ஸெலன்ஸ்கி தோன்றினார்" என்று அந்த இதழ் பதிவிட்டிருந்தது.

அதாவது, 'யுக்ரேன் இன்னும் போராடிக் கொண்டுள்ளது' என்பது தான் ரஷ்ய பிரதிநிதிகளுடன் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்தான்புல் சென்றுள்ள யுக்ரேனியப் பிரதிநிதிகள் எடுத்துச் செல்லும் செய்தியாக உள்ளது.

"எங்களுக்காக பேசுவதாக இருந்தால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தாத சரணடைதலை உறுதி செய்வதே என்பது போல் அமெரிக்கர்கள் நடந்து கொள்ள தொடங்கிவிட்டனர்" என்று அந்த அரசாங்க அதிகாரி ஸ்வயடோஸ்லாவ் கோமென்கோவிடம் பகிர்ந்துள்ளார்.

"நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லாதபோது அவர்கள் கோவப்படுகிறார்கள். ஆனால் நிச்சயமாக நாங்கள் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்று நாங்கள் நம்பவில்லை."

டான்பாஸ் போர்க்களங்களில் ரஷ்யா மெதுவாக முன்னேறி வந்தாலும், தங்களுக்குள்ள வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்று ரஷ்யாவுக்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் யுக்ரைன் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdr5228y6jmo

  • Replies 79
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்த

  • goshan_che
    goshan_che

    இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் க

  • வைரவன்
    வைரவன்

    ஐயா, நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என சொல்ல முடியுமா? அல்லது, நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின் தமிழில் பொழிப்புரை யை சுருக்கமாகவேனும் தர முடியுமா? நான் ஒரு பாமரன் எனக்கு மண்டை காயுது ஐயா கரு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இது உண்மைதான்.

ஆயுத பற்றாகுறை ஒரு பெரிய காரணி. ஆனால் அது வாங்குதிறன் இன்மையை விட , வாங்க முடியாமை, வாங்கியதை வழங்க முடியாமைதான் ஏற்பட்டது.

தவறு

இது இறுதி யுத்த காலநிலை மட்டுமே.

2 hours ago, Kadancha said:

இப்போது இவை தாக்கப்பட்டு இருப்பது, குறித்த குளிர் யுத்த முடிவு ஒப்பந்தமும் (treaty) உம் முடிவுக்கு வருகிறது. ருசியா வேறு ஒப்பந்தங்களையும் கைவிடக் கூடும்.

இது மேற்கின் (உதவியுடன்) விளையாட்டு. எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தவறான தகவல்.

இவ்வாறான ஒப்பந்தம் இருக்குமோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ரஸ்யா அதனை நடைமுறைப் படுத்துவதற்காக விமானங்களை வெளியே வைத்திருக்காது.

இதற்கு வேறு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, வல்லரசு நாடு தனது அணுவாயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய விமானங்கள் எப்போது தயார் நிலையில் உள்ளன என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும். இவற்றின் அசைவுகள் எதிரி நாடுகளினால் செய்மதி மூலம் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

அடுத்தது, வெளியில் நிற்கும் விமானங்கள் விரைவாகக் கிளம்பி தாக்குதலை மேற்கொள்ளலாம். ஒரு விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று அறிந்தால் விரைவாக இவற்றை நகர்த்தவும் முடியும்.

Tu-160, Tu-95 போன்ற பாரிய விமானங்களை பங்கருக்குள் வைப்பதில் செலவும் அதிகம்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இவ் விமானங்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்தனவே தவிர ஒப்பந்தத்தால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

இவ்வாறான ஒப்பந்தம் இருக்குமோ தெரியவில்லை.

(அணுஆயுத்தம் எனும் போது அணுஆயுதம் மட்டும் அல்ல, அவற்றை வழங்க கூடிய அமைப்புகளும் உள்ளடக்கம்.)

us சொல்லுவது.

United States Department of State
No image preview

New START Treaty - United States Department of State

Treaty Structure: The Treaty between the United States of America and the Russian Federation on Measures for the Further Reduction and Limitation of Strategic Offensive Arms, also known as the New...

Edited by Kadancha

22 minutes ago, Kadancha said:

மேலோட்டமாக வாசித்ததிலிருந்து, நேரடியான சோதனைகள் (Onsite Inspections) பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்மதிக் கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. அதற்காக விமானங்களை வெளியே நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது பற்றித் தெளிவாக எதுவும் இல்லை.

விடயம் அதுவல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒப்பந்தம் இருந்தாலும் ரஸ்யா தனது விமானங்களை வெளியில் நிறுத்த ஒப்பந்தம் காரணமில்லை. இந்த ஒப்பந்தத்தால்தான் ரஸ்யா பாதிக்கப்பட்டது என்பது போல் நீங்கள் எழுதிய தகவல் தவறானது.

நீங்கள் மீண்டும் தாக்குதலுக்குத் தொடர்பற்ற இந்த அறிக்கையை இழுத்து எழுதினால் அதற்குப் பதில் தரப்போவதில்லை.

அதுமட்டுமில்லை, இந்த ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் காலாவதி ஆகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

மேலோட்டமாக வாசித்ததிலிருந்து, நேரடியான சோதனைகள் (Onsite Inspections) பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்மதிக் கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. அதற்காக விமானங்களை வெளியே நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது பற்றித் தெளிவாக எதுவும் இல்லை.

விடயம் அதுவல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒப்பந்தம் இருந்தாலும் ரஸ்யா தனது விமானங்களை வெளியில் நிறுத்த ஒப்பந்தம் காரணமில்லை. இந்த ஒப்பந்தத்தால்தான் ரஸ்யா பாதிக்கப்பட்டது என்பது போல் நீங்கள் எழுதிய தகவல் தவறானது.

நீங்கள் மீண்டும் தாக்குதலுக்குத் தொடர்பற்ற இந்த அறிக்கையை இழுத்து எழுதினால் அதற்குப் பதில் தரப்போவதில்லை.

சரி அப்படியே வைத்து இருங்கள். ஏனெனில், நீங்கள் தானே treaty விபரங்களை US, ரஷ்யா இடத்தில இருந்து ஒருவராக தீர்மானிப்பது.

(இதில் சொல்லப்பட்டு இருபத்து மிக உயர்நிலை ஒப்பந்த அமைப்பு.)

சிறு கேள்வி:

எங்கு எது நிலைகொண்டுள்ளது என்பது தெரியாமல், எப்படி எந்த முறையாலும் சரி பார்ப்பது?

இப்படியான ஒப்பந்தம், இந்த அளவு குறுகிய பக்கங்களில், இந்த அளவு குறுகிய விபரங்கள் மட்டுமா இருக்கும்?

Edited by Kadancha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறான வீடியோ

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் sitting ducks என்பார்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல், வரிசையில் விமானங்கள் அடி வாங்கியுளன.

இந்த மூலோபாய விமான இழப்பு ரஸ்யாவின் அணு ஆயுத மிரட்டலை கூட கேள்விக்குள்ளாக்கி உள்ளதாம். ஏன் என்றால் தொலைதூர நாடுகளை அணு ஆயுதம் கொண்டு தாக்க இப்படியான விமானங்கள் வேண்டுமாம்.

ஆப்(பு)ரேசன் சிந்தூரில் பாக் இந்திய விமானங்களை மேலே எழும்பவிடாமல் ஆக்கிய போது இந்தியாவுக்கும் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அதனால்தான் ஜெயாங்கரும், அஜித் தோவாலும் வாசிங்கடனுக்கு போனை போட்டு அணுயுத்தம் (பிரம்மோஸ் மூலம்) வர வாய்புண்டு என சொல்லி ஒரு வழியாக டிரம்ப்மூலம் தாம் தொடங்கிய போரை தாமே முடிவுக்கு கொண்டு வந்தனர்.

3 hours ago, விசுகு said:

தவறு

இது இறுதி யுத்த காலநிலை மட்டுமே.

விடுதலை புலிகளுக்கு வந்த முதலாவது ஆயுத கப்பல் சர்வதேசபரப்பில் வைத்து எப்போ மூழகடிக்கபட்டது?

ஏவுகணை வாங்க அமெரிக்கா போய் பிடி பட்டவர்கள் எப்போ பிடிபட்டார்கள்?

இந்த திகதிகளை மீட்டு பார்த்தால் - சமாதான ஒப்பந்தத்தோடு வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டு விட்டது என்பது தெளிவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kadancha said:

சரி அப்படியே வைத்து இருங்கள். ஏனெனில், நீங்கள் தானே treaty விபரங்களை US, ரஷ்யா இடத்தில இருந்து ஒருவராக தீர்மானிப்பது.

(இதில் சொல்லப்பட்டு இருபத்து மிக உயர்நிலை ஒப்பந்த அமைப்பு.)

சிறு கேள்வி:

எங்கு எது நிலைகொண்டுள்ளது என்பது தெரியாமல், எப்படி எந்த முறையாலும் சரி பார்ப்பது?

இப்படியான ஒப்பந்தம், இந்த அளவு குறுகிய பக்கங்களில், இந்த அளவு குறுகிய விபரங்கள் மட்டுமா இருக்கும்?

இப்படிப் பட்ட ஒரு நடைமுறை இருப்பதாக பனிப்போர் காலங்கள் பற்றி நான் வாசித்த எந்த நூலிலும் காணவில்லை (நீங்கள் கேட்க முதல், அவை அனைத்தும் அமெரிக்கர்களால் எழுதப் பட்ட நூல்களும் அல்ல!). ஆனால், "எழுத்தில் இருக்காது, நடைமுறையில் இருக்கும்" என்ற உங்கள் ஏனைய வாதங்கள் போல இதுவும் என நினைக்கிறேன்.

விமானங்கள் வெளியே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தமைக்கு மிகவும் எளிமையான இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று தயார் நிலை (readiness), இரண்டாவது இது போன்ற விமானங்களை hangar இனுல் நிறுத்தி வைப்பது மிகவும் செலவும், சிக்கலும் கூடிய ஒரு வேலை. எனவே தான் எதிரிப் படைகள் இலகுவில் அணுக இயலாத தொலை தூரத் தளங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வான் கண்காணிப்பும் இலகு.

தாக்குதல் நடந்த இரு இடங்கள் சைபீரியாவின் தூர கிழக்கு-Far East மூலையில் இருக்கின்றன. அமுர் (Amur) நதிக்கு அண்மையான இந்த இடங்களில் வெளியார் கண்காணிப்பில்லாமல் நடமாடுவதே கடினம். இங்கேயே ட்ரக்கில் வைத்து ஏவியிருக்கிறார்கள் என்றால், உக்ரைன் மொஸ்கோவைத் தாக்காமல் பொறுமை காத்து வருகிறது என்று தான் நான் நினைக்கிறேன்😂.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இப்படிப் பட்ட ஒரு நடைமுறை

உங்கள் நூல்களில் treaty ஏதாவது முழுமையாக இருந்ததா?

அல்லது ஏதாவது ஒரு treaty ஐ முழுமையாக வாசித்து இருக்கிறீர்களா?

ஒவ்வொரு treaty க்கும் விபரங்களின் தன்மை, அளவு வேறுபடும்.

இதில் விபரமாக இருக்கும் - எப்படி சரி பார்ப்பது என்ற முறை கூட.

அநேகமாக அது மட்டும் தான் அல்ல என்பதும் இருக்கும் என்று நினைக்கிறன்.

இதில் உ.ம். செய்ம்மதி கண்காணிப்பு வார்த்தையால் முழு ருசியா / அமெரிக்காஅரச நிலபுலத்துக்கும்.

(இது ஒரு உ.ம். ஒன்றும் சொல்லாமல் (வேறு முறைகள், அல்லது குறிப்பிட்ட இடங்கள என்று சொல்லாமல் ) கருத்து (இதில்) சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவது.)

இப்பொது ஈரானோடு நடக்கும் இழுபறியை பாபார்த்தால் இது வெளிப்டையாகத் தெரியும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kadancha said:

வரலாற்று நூல்களை வாசித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். நூல்களில் ஒப்பந்தம் அப்படியே இருக்காது (ஏனெனில் ஒப்பந்தமே ஒரு நூல் சைசில் இருக்கும்😂). ஆனால்,புத்தகங்கள் ஒப்பந்தத்தின் இப்படியான விடயங்களைத் தொட்டுச் செல்லும். இது போன்ற சுவாரசியமான விடயங்கள் வரலாற்று நூல்களில் இருக்கும்.

உங்கள் கேள்வியின் படி நீங்கள் இப்படியான விடயத்தைக் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை வாசித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன். ஆனால், இங்கே இணைக்கும் படி நான் கேட்கப் போவதில்லை! ஏனெனில் பிரின்டில் வாசித்திருப்பீர்கள், அப்படித் தானே😎?

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரேனின். அடி எப்படி என்று மட்டும் எழுதுங்கள் உந்த. ஒப்பந்தம்கள் பற்றி பிறகு கதைக்கலாம். 🤣. வல்லரசுகள். ஒப்பந்தம்களை மதிப்பது இல்லை மாறாக அதை ஒரு ஆயுதமாகபயன்படுத்துவார்கள் இப்ப உககிரேனகூட ஒரு வலலரசு தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

விடுதலை புலிகளுக்கு வந்த முதலாவது ஆயுத கப்பல் சர்வதேசபரப்பில் வைத்து எப்போ மூழகடிக்கபட்டது?

ஏவுகணை வாங்க அமெரிக்கா போய் பிடி பட்டவர்கள் எப்போ பிடிபட்டார்கள்?

இந்த திகதிகளை மீட்டு பார்த்தால் - சமாதான ஒப்பந்தத்தோடு வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டு விட்டது என்பது தெளிவாகிறது.

சகோ

நாங்கள் கரும்புலிகள் உருவான காலம் பற்றி பேசுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளிய விட செத்தகிளி ஆதரவு இந்தியன்களின் கதறல்கள்தான் அதிகமாயிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

வரலாற்று நூல்களை வாசித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். நூல்களில் ஒப்பந்தம் அப்படியே இருக்காது (ஏனெனில் ஒப்பந்தமே ஒரு நூல் சைசில் இருக்கும்😂). ஆனால்,புத்தகங்கள் ஒப்பந்தத்தின் இப்படியான விடயங்களைத் தொட்டுச் செல்லும். இது போன்ற சுவாரசியமான விடயங்கள் வரலாற்று நூல்களில் இருக்கும்.

உங்கள் கேள்வியின் படி நீங்கள் இப்படியான விடயத்தைக் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை வாசித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன். ஆனால், இங்கே இணைக்கும் படி நான் கேட்கப் போவதில்லை! ஏனெனில் பிரின்டில் வாசித்திருப்பீர்கள், அப்படித் தானே😎?

உங்கள் நூல்களில் வரவில்லை என்றால் அப்படி இல்லை என்பது தானே நீங்கள் சொல்வது.

பின்பு ஏன் treaty ஐ நீங்கள் பார்க்க வேண்டும்?

ஏன் அரசுகளில் இருக்கும் (கபட சிந்தனை) போல (மறைக்க) சிந்திக்க வேண்டும், அல்லது மறைப்பதை கண்டுபிடிக்க அல்லது குறைக்க சிந்திக்க வேண்டும், குறிப்பாக அணு ஆயுதத்துக்கு வரும் போது?

நீங்கள் உங்கள் நூல்களோடு இருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சகோ

நாங்கள் கரும்புலிகள் உருவான காலம் பற்றி பேசுகிறோம்.

கரும்புலிகள் உருவான போது புலிகளிடம் சீருடையே இருக்கவில்லை அண்ணை.

அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்தது கடற்புறா எனும் இரு அதிவேக அவுட் போர்ட் மோட்டார் பூட்டிய படகு மட்டுமே.

அப்போ விமானத்தை எதிர்க்க 50 கலிபர் கொடு என பூரியையிம் நட்வர் சிங்கையும் கேட்டு கொண்டிருந்த காலம்.

அந்த காலத்தில் விமானம் வாங்கவில்லை என்பது தவழும் குழந்தை ஒலிம்பிக் 100மீட்டரில் தங்கம் வெல்லவில்லை என ஆதஙப்படுவது போல்.

இங்கே ஒப்பிட கூடிய காலம் - அனுராதபுர, கட்டுநாயக்கா தாக்குதல் காலங்கள் மட்டுமே.

இரெண்டு காலத்திலும், மனம், பணத்துக்கு அப்பால்….

கீழ் கண்ட காரணங்களே பெரிதும் பங்களித்தன

  1. அப்போ கிளைடர், இலகு ரக விமானம், கனரக போர்/சரக்கு விமானம் என்பனவே இருந்தன. இதில் கிளைடர் ஆனையிறவு காலத்தில் வன்னியில் ஒன்றாவது இருந்தது. இலகு விமானம் இரெண்டாவது அதன் பின் வந்தது.

    கனரக விமானங்களை வாங்கும், பேணும், மறைத்து வைக்கும் இயலுமை எப்போதும் இருக்கவில்லை.

  2. பேச்சுவார்த்தையின் பின் இவற்றிர்கான வழங்கல் கூட பெரிதும் முடக்கப்பட்டது.

    ஆகவே புலிகளும் விமானம் வாங்கி ஓட்டி இருப்பார்கள் மக்களிடம் மனம்/பணம் இருக்கவில்லை என்பது சரியான காரணம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இங்கே விமானங்கள் பற்றி நான் எதுவும் பேசவில்லை. மில்லர் சென்று வெடித்து தான் அந்த இடத்தை தகர்க்கவேண்டும் என்ற நிலை அன்றே இருக்கவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

உங்கள் நூல்களில் வரவில்லை என்றால் அப்படி இல்லை என்பது தானே நீங்கள் சொல்வது.

பின்பு ஏன் treaty ஐ நீங்கள் பார்க்க வேண்டும்?

ஏன் அரசுகளில் இருக்கும் (கபட சிந்தனை) போல (மறைக்க) சிந்திக்க வேண்டும், அல்லது மறைப்பதை கண்டுபிடிக்க அல்லது குறைக்க சிந்திக்க வேண்டும், குறிப்பாக அணு ஆயுதத்துக்கு வரும் போது?

நீங்கள் உங்கள் நூல்களோடு இருங்கள்.

ஒருவர் வானத்தை அண்ணாந்து பார்த்து "எருமை மாடு பறக்கிறது பார்" என்கிறார். நான் அண்ணாந்து பார்க்காமலே "எருமை மாடு பறக்காது" என்கிறேன். அவரோ, "ஏன் எருமை மாடு பறப்பதை மறைக்க முயல்கிறீர்கள்? நீங்கள் பார்க்கா விட்டால் பறக்காது என்று அர்த்தமா?"😎 என்கிறார்!

இது தான் உங்கள் கருத்தின் சாராம்சமாக இருக்கிறது. இங்கே மட்டுமல்ல, எந்த திரியிலும் இதே தான் உங்கள் கருத்தாடல்.

வாசிப்பு என்பது குறைவான ஒருவருக்கு தகவல்கள் எப்படி வரலாற்று நூல்களில் இடம்பெறும் என விளக்குவது கடினம். உங்கள் கருத்துக்களின் படி, நீங்கள் fringe site களில் வரும் விடயங்களை வைத்து நுனிப் புல் மேய்ந்து வரும் ஒருவர் என ஊகிக்கிறேன்.

treaty என்றாலே எழுத்தில் இருக்க வேண்டும் ஐயா. இந்த அடிப்படை கூட தெரியாமலா நீங்கள் பற்றி இங்கே treaty எழுதுகிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

இங்கே விமானங்கள் பற்றி நான் எதுவும் பேசவில்லை. மில்லர் சென்று வெடித்து தான் அந்த இடத்தை தகர்க்கவேண்டும் என்ற நிலை அன்றே இருக்கவில்லை.....

மில்லர் தாக்குதல் நடத்தியது 87 இல் அல்லவா? அந்த நேரம் மேற்கு நாடுகளிலேயே robotics வளர்ந்திருக்கவில்லை. அமெரிக்காவின் முதலாவது ஆளில்லா விமானம் (Predator) 1995 வரை பாவனைக்கு வரவில்லை. நிலைமை இப்படி இருக்க புலிகள் போன்ற அமைப்புகளுக்கு இவையெல்லாம் பணம் இருந்திருந்தால் கிடைத்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் இணைத்த எக்ஸ் தள வீடியோவைப் பார்த்தவுடன் ஒருகணம் உண்மையென்று எண்ணிவிட்டேன். ஆனால் அது வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி என்று பின்னர்த்தான் படித்து அறிந்தேன். என்றாலும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வீடியோ கேமின் இப்பகுதிக்கும் அதிக வேறுபாடில்லை. ஒருவேளை இதனை வைத்துத்தான் இத்தாக்குதலை அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.

ரஸ்ஸியாவின் நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களின் பலத்தில் 34% வீதம் அழிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றரை வருடங்களாகத் திட்டமிட்டு, சிறிய ட்ரோன்களை ரஸ்ஸியாவினுள் கடத்திவந்து, அங்கிருந்தே அவற்றினை இயக்கி அழித்திருக்கிறார்கள். கில்லாடிகள்தான். புலிகளின் தாக்குதல் உத்திகளும் உக்ரேனியர்கள், பலம்பொறுந்திய ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களும் ஒரேமாதிரியானவை. குண்டு நிரப்பிய படகுகளால் மோதுவது, குண்டுநிரப்பிய ட்ரோன்கள் (இது புலிகளுக்குக் கிடைக்கவில்லை) கொண்டு அழிப்பது என்று தமக்குக் கிடைக்கும் வளங்களைப் பாவித்து எதிரியை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

ரஸ்ஸியாவுக்கு விழுந்த அடியைப் பார்த்து ரஸ்ஸியர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் பலர், "ஏன் ரஸ்ஸியா தனது விஸ்வரூபத்தைக் காட்டவில்லை, ஏன் புட்டின் ஐயா பொறுமை காக்கிறார்? ஏன் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுப்போராக மாற்றவில்லை? ஏன் அணுவாயுதத்தைப் பாவிக்கவில்லை?" என்று கோபம்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள். விட்டால் புட்டின் ஒரு கையை பின்னால் மடித்துக்கொண்டு, மற்றைய கையினால் மட்டுமே போராடி வருகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால், இந்திய அமைதிப்படை அப்படித்தான் இலங்கையில் போராடியதாம்!

1 hour ago, விசுகு said:

மில்லர் சென்று வெடித்து தான் அந்த இடத்தை தகர்க்கவேண்டும் என்ற நிலை அன்றே இருக்கவில்லை.....

நெல்லியடி மத்திய கல்லூரித் தாக்குதலில் பாரவூர்தியை கல்லூரிக் கட்டடத்தின் உட்பகுதிக்குள் செலுத்திவிட்டு சாரதி வெளியேறியேறி வந்துவிடவேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டமாம். ஆனால் பாரவூர்தி உள்ளே வருவதைப் பார்த்துவிட்ட இராணுவத்தினர் அதன்மீது தாக்குதல் நடத்தவே அதனை எப்படியாவது உள்ளே செலுத்திச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு, சாவு வருமென்று தெரிந்துகொண்டே மில்லர் அவர்கள் தொடர்ந்து உள்ளிருந்தார் என்று அறிந்தேன். இதுபற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே விமானங்கள் பற்றி நான் எதுவும் பேசவில்லை. மில்லர் சென்று வெடித்து தான் அந்த இடத்தை தகர்க்கவேண்டும் என்ற நிலை அன்றே இருக்கவில்லை.....

மில்லர் நெல்லியடி மவி யில் இருந்த முகாமை தகர்தார். அந்த முகாமை தகர்க்க ஒரு லாரி நிறைந்த வெடிமருந்து தேவைப்பட்டது.

ஒரு கரும்புலியை அனுப்பாமல் வேறு என்ன வகையில் அந்த முகாமை தகர்திருக்கலாம். 1987 இல் புலிகள் வாங்கி பாவித்திருக்க கூடிய, சந்தையில் இருந்த அந்த ஆயுதம் அல்லது கருவி என்ன என்பதை சொல்வீர்களா?

48 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் இணைத்த எக்ஸ் தள வீடியோவைப் பார்த்தவுடன் ஒருகணம் உண்மையென்று எண்ணிவிட்டேன். ஆனால் அது வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி என்று பின்னர்த்தான் படித்து அறிந்தேன். என்றாலும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வீடியோ கேமின் இப்பகுதிக்கும் அதிக வேறுபாடில்லை. ஒருவேளை இதனை வைத்துத்தான் இத்தாக்குதலை அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.

தகவலுக்கும் பிழை திருத்தத்துக்கும் நன்றி.

வீடியோவை டிலீட் பண்ணி உள்ளேன்.

அனைவரும் அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எப்படி வரலாற்று நூல்களில் இடம்பெறும் என விளக்குவது கடினம். உங்கள் கருத்துக்களின் படி, நீங்கள் fringe site களில் வரும் விடயங்களை வைத்து நுனிப் புல் மேய்ந்து வரும் ஒருவர் என ஊகிக்கிறேன்.

treaty என்றாலே எழுத்தில் இருக்க வேண்டும் ஐயா. இந்த அடிப்படை கூட தெரியாமலா நீங்கள் பற்றி இங்கே treaty எழுதுகிறீர்கள்

இதை செய்வது நீங்கள் நானல்ல.

சொல்லிய அனைத்தும் உங்களிடம்.

வரலாற்று நூல்களில் (இந்த விடயத்தில், கலவாதியாகிய பழைய) treaty வரலாற்று பார்வையில், நியாதிக்கத்தில்.

அதை ஒரு இப்போதைய treaty (இதில், பொதுவாகவும் ) காற்றுபுகமுடியாத (அரச) இறுக்க தன்மையான பார்வை, கடப்பாடுகள், நிபந்தனைகலோடு ஒப்பிடுவது.

(வரலாற்று நூலில் வந்த புரிவினால் தான் தான் உங்களை அறியாமலே உங்களுக்கு இந்த குழப்பம். அதுவும் அறியாது. நீங்கள் வரலாற்று நூல் சொல்லுவதை தூக்கிப்பிடிப்பதன் காரணம்)

அத்துடன் தொழில்நுட்பத்திலும் பாரிய மாற்றம் (இதில் குறிப்பாக)

(நீங்கள் சொல்லும் வரலாற்று நூல் treaty அந்த நேரத்துக்கு சரியாக இருக்கும்.)

இது போன்றவற்றை அறியாது கதைப்பது.

பொதுவாக இப்பொது இருப்பதை (treaty), வரலாற்று நூல் சொல்லுவது பழைய treaty க்கு ஒப்பிட முடியாது / கூடாது என்பதை கூட தெரியாது ....

தான் செய்வது. பின் மற்றவர்கள் செய்வதாக சொல்வது.

குறிப்பு:

இப்பொது வாசிப்பது மட்டும் தான் என்று இல்லை. உண்மையில் வேறு வடிவ கிரகிப்பு அதே வரலாற்று நூல்களுக்கு முன்பு ஏற்பட்டு இருக்காதா பார்வையை உருவாக்கும், ஏனெனில் வாசிப்பு ஒரு பரிமாணம் மட்டுமே. உ.ம். இப்போது youtube இல் இருக்கும் தெனாலி ராமன். தெனாலி ராமனுக்கு வேறு பார்வை, புரிதலை உருவாகும். வாசிப்பில் தெனாலி விகடன் (கவி) மாத்திரம் என்ற பார்வை மட்டுமே உருவாகும். இது உதாரணத்துக்கு.

Edited by Kadancha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவுக்கு விழுந்த அடியைப் பார்த்து ரஸ்ஸியர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் பலர், "ஏன் ரஸ்ஸியா தனது விஸ்வரூபத்தைக் காட்டவில்லை, ஏன் புட்டின் ஐயா பொறுமை காக்கிறார்? ஏன் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுப்போராக மாற்றவில்லை? ஏன் அணுவாயுதத்தைப் பாவிக்கவில்லை?" என்று கோபம்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள். விட்டால் புட்டின் ஒரு கையை பின்னால் மடித்துக்கொண்டு, மற்றைய கையினால் மட்டுமே போராடி வருகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால், இந்திய அமைதிப்படை அப்படித்தான் இலங்கையில் போராடியதாம்!

🤣 மோடிக்கு பாக்கிஸ்தான் வைச்ச செந்தூரப்பொட்டையே நம்பாமால் தாம் வென்று விட்டதாக மனப்பால் கிடைக்கும் ஆட்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

54 minutes ago, ரஞ்சித் said:

நெல்லியடி மத்திய கல்லூரித் தாக்குதலில் பாரவூர்தியை கல்லூரிக் கட்டடத்தின் உட்பகுதிக்குள் செலுத்திவிட்டு சாரதி வெளியேறியேறி வந்துவிடவேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டமாம். ஆனால் பாரவூர்தி உள்ளே வருவதைப் பார்த்துவிட்ட இராணுவத்தினர் அதன்மீது தாக்குதல் நடத்தவே அதனை எப்படியாவது உள்ளே செலுத்திச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு, சாவு வருமென்று தெரிந்துகொண்டே மில்லர் அவர்கள் தொடர்ந்து உள்ளிருந்தார் என்று அறிந்தேன். இதுபற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்

போரில் பின்வாங்கும் கட்டளை வரும் வரை முன்னேறி தாக்குவதுதான் படையினன் முறை. ஆகவே போரில் முன்னேறி தாக்கி அதன் போது சாவடைந்த அனைவரும் கரும்புலிகள் என ஆகிவிடும் என நினைக்கிறேன்.

கப்டன் மில்லர் அதிஸ்டவசாமாக வாய்ப்பு வரின் தப்பிப்பேன், இல்லை என்றால் சாவு என்ற நிலையில், நிலைப்பாட்டில் உள்ளே போனதால்தான் அவர் முதல் கரும்புலி என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மில்லர் தாக்குதல் நடத்தியது 87 இல் அல்லவா? அந்த நேரம் மேற்கு நாடுகளிலேயே robotics வளர்ந்திருக்கவில்லை. அமெரிக்காவின் முதலாவது ஆளில்லா விமானம் (Predator) 1995 வரை பாவனைக்கு வரவில்லை. நிலைமை இப்படி இருக்க புலிகள் போன்ற அமைப்புகளுக்கு இவையெல்லாம் பணம் இருந்திருந்தால் கிடைத்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை.

14 minutes ago, goshan_che said:

மில்லர் நெல்லியடி மவி யில் இருந்த முகாமை தகர்தார். அந்த முகாமை தகர்க்க ஒரு லாரி நிறைந்த வெடிமருந்து தேவைப்பட்டது.

ஒரு கரும்புலியை அனுப்பாமல் வேறு என்ன வகையில் அந்த முகாமை தகர்திருக்கலாம். 1987 இல் புலிகள் வாங்கி பாவித்திருக்க கூடிய, சந்தையில் இருந்த அந்த ஆயுதம் அல்லது கருவி என்ன என்பதை சொல்வீர்களா?

தகவலுக்கும் பிழை திருத்தத்துக்கும் நன்றி.

வீடியோவை டிலீட் பண்ணி உள்ளேன்.

அனைவரும் அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்.

இராணுவத்தினர் தற்கொலையாளிகளை கொண்டா புலிகளின் முகாம்களை தகர்த்தனர். அவர்களிடம் இருந்த அனைத்தையும் நாமும் பெற்றிருக்க முடியும். ஏன் வாங்காமல், ஆட்பலம் இல்லாதபோதும் ஆட்களை கொடுத்தோம் மனிதர்களை அனுப்பினோம் என்றால் ஒரே விடை மட்டுமே பணபலமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இராணுவத்தினர் தற்கொலையாளிகளை கொண்டா புலிகளின் முகாம்களை தகர்த்தனர். அவர்களிடம் இருந்த அனைத்தையும் நாமும் பெற்றிருக்க முடியும். ஏன் வாங்காமல், ஆட்பலம் இல்லாதபோதும் ஆட்களை கொடுத்தோம் மனிதர்களை அனுப்பினோம் என்றால் ஒரே விடை மட்டுமே பணபலமில்லை

இல்லை.

அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் கிடைத்த பயிற்சியிம். இதில் பலதும் இனாமாக வேறு நாடுகள் கொடுத்தவை.

இவை எதையும் வாங்கும் திறன் எந்த ஈழத்தமிழரிடமும் அப்போ இருந்ததில்லை. புலம்பெயர்ந்தோரே மிக சொற்பம் அவர்களும் கூட நிரந்தரமற்ற நிலையில்தான் இருந்தனர்.

அதே போல் பணம் இருந்திருந்தாலும், அதை மனமுவந்து கொடுத்திருந்தாலும் - நான் மேலே சொன்ன வளங்கள எதையுமே வெளியார் சந்தையில் வாங்க முடிந்திராது, அப்படி வாங்கி இருந்தாலும் அதை இலங்கக்கு கொண்டு வர முடிந்திராது, அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை பாதுகாத்திருக்க முடியாது, அப்படியே பாதுகாத்து விட்டாலும் தனியே கேணல் சங்கரை மட்டும் வைத்து கொண்டு ஒரு விமான படையணிதை அமைத்திருக்க முடியாது.

புலிகள் ஏன் கரும்புகளில் நம்பி இருக்கும் நிலை வந்தது என்பதற்கு பல புறச்சூழல் காரணிகளே முக்கிய பங்காற்றின.

பணம்/மனம் இல்லை.

புலிகள் கடைசிவரை ஒரு சமச்சீர் அற்ற நிலையில் இருந்து கொண்டே - ஒரு வலுசமநிலை தோற்றப்பட்டை உருவாக்கினார்கள். அதுதான் அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்று.

அதை அவர்களே நம்ப ஆரம்பித்தது வீழ்சியின் காரணிகளில் ஒன்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.