Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன்.

அது மதம்.

கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே -

ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு கடவுள் இருப்பின் அவரின் மார்க்கமாக, ஏஜென்சிகளாக இப்போ நாம் அறியும் எந்த மதமும் இல்லை. சகல மதங்களும் மனிதரால், மனிதரை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட செயன்முறைகளே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

நானாக தேடிப்போவதில்லை ஆனால் கோவில்கள், சர்சுகள், மசூதிகள், விகாரைகள் போக வாய்ப்பு வரும் போது போகாமல் தவிர்ப்பதும் இல்லை. கண்மூடுவதும் உண்டு, கை கூப்புவதும் உண்டு.

ஆனால் எல்லாமுமே எந்த இலயிப்பும் இல்லாமல்தான். மனதில் பிரார்தனைகள் வைப்பதும் மிக குறைவு. இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம். எந்த மத குருவையும் பார்த்து 1% கூட பக்தியோ, பயமோ, மரியதையோ வருவதில்லை.

அதே போல் ஒரு அணுகுமுறைதான் சாத்திரம், பிதிர்கடன், குறித்த நாட்களில் மரக்கறியாய் இருப்பது, போன்றவற்றிலும். சிலதை பெற்றோர் சொல்லியபடி செய்ய வேண்டியது கடமையாகிறது. சிலது பழக்கதோசமாக தொடர்கிறது. சிலது கொஞ்சம் open minded ஆகத்தான் இருந்து பார்ப்போமே என்ற எண்ணத்தால் ஆர்வம் காட்டுவது.

இதே போல் சில மூடபழக்கம் என தெரிந்தும் கைவிடாதவை உண்டு, எவர் கையாலும் நல்லெண்ணை வாங்க தயங்குவது, மாலை மங்கிய பின் பணத்தை கொடுக்காமல் விடுவது இப்படி சில.

ஆனால் இவை எதையும் உண்மைதான் என முட்டு கொடுத்து என்னால் வாதாட முடியாமல் இருக்கிறது.

இவை உண்மையா, புரட்டுக்களா என சொல்லியே ஆக வேண்டும் என நிர்பந்தித்தால் - புரட்டு என்பதே என் பதிலாக வரும்.

அநேகமாக சிறுவயதில் இருந்து என்னை condition படுத்தியதால் இவற்றை கைவிட முடியாது ஒரு ஆழ்மன பயத்தால் தொடருகிறேன் என்றே நினைக்கிறேன்.

ஆனால் இப்படி வாழ்வது இலகுவாக இருக்கிறது.

நாம் அனைவரும் ஏற்கும் உண்மை நம் காலம் மட்டுப்பட்டது என்பதே - அதை கொஞ்சம் இலகுவாக கழித்து விட்டு போனால்தான் என்ன?

Edited by goshan_che

  • Replies 58
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • goshan_che
    goshan_che

    என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன். அது மதம். கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே - ஆனால் நிச்சயமாக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன்.

அது மதம்.

கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே -

ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு கடவுள் இருப்பின் அவரின் மார்க்கமாக, ஏஜென்சிகளாக இப்போ நாம் அறியும் எந்த மதமும் இல்லை. சகல மதங்களும் மனிதரால், மனிதரை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட செயன்முறைகளே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

நானாக தேடிப்போவதில்லை ஆனால் கோவில்கள், சர்சுகள், மசூதிகள், விகாரைகள் போக வாய்ப்பு வரும் போது போகாமல் தவிர்ப்பதும் இல்லை. கண்மூடுவதும் உண்டு, கை கூப்புவதும் உண்டு.

ஆனால் எல்லாமுமே எந்த இலயிப்பும் இல்லாமல்தான். மனதில் பிரார்தனைகள் வைப்பதும் மிக குறைவு. இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம். எந்த மத குருவையும் பார்த்து 1% கூட பக்தியோ, பயமோ, மரியதையோ வருவதில்லை.

அதே போல் ஒரு அணுகுமுறைதான் சாத்திரம், பிதிர்கடன், குறித்த நாட்களில் மரக்கறியாய் இருப்பது, போன்றவற்றிலும். சிலதை பெற்றோர் சொல்லியபடி செய்ய வேண்டியது கடமையாகிறது. சிலது பழக்கதோசமாக தொடர்கிறது. சிலது கொஞ்சம் open minded ஆகத்தான் இருந்து பார்ப்போமே என்ற எண்ணத்தால் ஆர்வம் காட்டுவது.

இதே போல் சில மூடபழக்கம் என தெரிந்தும் கைவிடாதவை உண்டு, எவர் கையாலும் நல்லெண்ணை வாங்க தயங்குவது, மாலை மங்கிய பின் பணத்தை கொடுக்காமல் விடுவது இப்படி சில.

ஆனால் இவை எதையும் உண்மைதான் என முட்டு கொடுத்து என்னால் வாதாட முடியாமல் இருக்கிறது.

இவை உண்மையா, புரட்டுக்களா என சொல்லியே ஆக வேண்டும் என நிர்பந்தித்தால் - புரட்டு என்பதே என் பதிலாக வரும்.

அநேகமாக சிறுவயதில் இருந்து என்னை condition படுத்தியதால் இவற்றை கைவிட முடியாது ஒரு ஆழ்மன பயத்தால் தொடருகிறேன் என்றே நினைக்கிறேன்.

ஆனால் இப்படி வாழ்வது இலகுவாக இருக்கிறது.

நாம் அனைவரும் ஏற்கும் உண்மை நம் காலம் மட்டுப்பட்டது என்பதே - அதை கொஞ்சம் இலகுவாக கழித்து விட்டு போனால்தான் என்ன?

200% என் ரத்தமையா நீ..

இந்த எனது நிலைப்பாட்டால் தானே என்னவோ மூத்தமகன் முழு விஞ்ஞானி இளையவன் முழு மெய்ஞானி 😄

மக்களுக்கும் அதே. நீயே தேடு. படி அனுபவி கண்டுகொள்.

ஆனால் ஒரு மதத்தை விட இன்னொன்று சிறந்தது என்று சொன்னால் கோபம் வரும். உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று தான் பதில் சொல்லப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??

சோதிடத்தில் முனைவர் பட்டம் இருப்பதாக இன்று தான் அறிகிறேன். எந்த உயர் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

எண் சோதிடம். இவற்றை பொய் என்று உங்களால் நிறுவ முடியுமா??

இந்த திரியின் மூலக் கட்டுரையே சோதிடம், சாதகம் பொய் என்று விஞ்ஞான முறைமையால் நர்லிகர் நிரூபித்திருக்கிறார் என்பதைப் பற்றியது தான். அதை வாசிக்காமல் கடந்து வந்து இப்படி கேட்கிறீர்கள்😂?

  • தொடங்கியவர்

எண் சோதிடம் பற்றி பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிலும் இந்தியர்கள் / தமிழர்கள் / இந்துக்கள் அதிகம் எண் சோதிடத்தை நம்புகின்றனர். உண்மையில் எனக்கு ஆச்சரியம் தரும் விடயமும் இதுதான். இவர்களால் எவ்வாறு இதனை நம்ப முடிகின்றது என.

ஏனெனில் எண் சோதிடம், நாம் பிறந்த திகதியின், மாதத்தின்,ஆண்டின் அடிப்படையில் கணிக்கப்படுவது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டரின் அடிப்படையில் இது கணிக்கப்படுகின்றது.

நாம் இன்று பயன்படுத்தும் இந்த காலண்டர் Gregorian Calendar ஆகும். இது 1582 இல் போப்பாண்டவர் Gregory XIII இனால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காலண்டர்.

இவ்வாறான ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய (கத்தோலிக்கர்கள்) முக்கிய தலைவர் ஒருவரால், அதுவும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படுவது எப்படி சரியாகும்?

ஒரு இந்துவோ, ஒரு சைவரோ,ஒரு பெளத்தரோ, ஒரு நாத்திகரோ, ஒரு ஆத்திகரோ இதனை எப்படி நம்புகின்றனர்? இவர்கள் தம் காலண்டரின் அடிப்படையில் அல்லவா எண் சாத்திரத்தை கணிக்க வேண்டும்? உதாரணமாக இந்து ஒருவர், இந்துக் காலண்டரின் அடிப்படையில் அமைந்த திகதியை அல்லவா, கணிப்பீட்டுக்கான திகதியாக கொள்ள வேண்டும்?

நான் எண் சாத்திரத்தை நம்புகின்ற சக சைவர்களை நோக்கி கேட்கும் கேள்வி "நீங்கள் இந்து மதம் சார்ந்த சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு எவ்வாறு கத்தோலிக்க மதத்தை சார்ந்த காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படும் எண் சாத்திரத்தையும் நம்புகின்றீற்கள் என.

யாராவது இதற்கு பதில் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

யாராவது இதற்கு பதில் தர முடியுமா?

நான் முழுதாக நம்புவோர் லிஸ்டில் வரவில்லை.

ஆனாலும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் அறிந்தவரை எண் சோதிடம் என இப்போ பார்க்கப்படுவதே - ஐரோப்பிய இறக்குமதிதான்.

தமிழர்களிடம் இருந்த தமிழ் எண்கணித முறை ஐரோப்பா போய், அங்கே ஆங்கில எண் கணிதமாகி மீண்டும் எம்மிடையே பரவியது.

இங்கே முக்கியம் நாட்களின் எண்தான்.

ஆகவே கிரெகேரியன் கலண்டரில் 3 திகதி பிறந்தவர் தமிழ் காலண்டரில் 7ம் திகதி பிறந்தால் - கணிப்பும் மாறும்.

ஆனால் இப்படியான குழப்பங்கள் சோதிடத்துக்கு புதிதல்ல.

இந்த முறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனி 2025 மேயில் மாறி விட்டது. திருக்கணிதப்படி 2026 மேயில்தான் மாறும்! கிட்டதட்ட ஒரு வருட வித்தியாசம்.

இதே போல் எமது ராசிப்படி ஒரு ராசியில் இருக்கும் நபர் ஆங்கில ராசிப்படி வேறு ராசியில் இருப்பார்.

சாத்திரம் கலையே தவிர, விஞ்ஞானம் அல்ல.

கலைக்குரிய முரண்கள் இதிலும் இருக்கும்.

அதை பொழுதுபோக்காக பார்த்து விட்டு நகர்ந்து விடல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

"செவ்வாய் தோஷம்" என்று திருமணங்களைத் தாமதமாக்குதல், அல்லது சாதகத்தை முன்னிலைப் படுத்தி வெறும் பயலுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்தல், இது போன்ற துன்பகரமான பின் விளைவுகளும் இருக்கின்றன. இவற்றைக் கடந்து போகாமல், ஏறி மிதித்து விட வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

"செவ்வாய் தோஷம்" என்று திருமணங்களைத் தாமதமாக்குதல், அல்லது சாதகத்தை முன்னிலைப் படுத்தி வெறும் பயலுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்தல், இது போன்ற துன்பகரமான பின் விளைவுகளும் இருக்கின்றன. இவற்றைக் கடந்து போகாமல், ஏறி மிதித்து விட வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து!

மாற்று கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

ஒவ்வொரு மனிதனின் குறிப்பு, கைரேகை, எண் சோதிடம் இவற்றை பொய் என்று உங்களால் நிறுவ முடியுமா?? இவற்றை சொல்பவர் இந்த விடயங்களை அறிவு அற்றவர் என்று ஏன் இருக்க முடியாது??

அண்ணா,

அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது நியூட்டனின் வகை பௌதீக விதிகள் போன்றோ இந்த நம்பிக்கைகளை நிறுவமுடியாது. இப்படியான நம்பிக்கைகளில் ஒன்று சோதிடம். கடவுள் நம்பிக்கையும் அவ்வாறானதே. இன்னும் ஏராளமான அமானுஷ்ய விடயங்களும் இப்படியே இங்கு நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன.

இப்படியான ஒரு விடயத்தை ஒரு ஆசிரியர் எப்படி நிறுவினார் என்று ஒரு வேடிக்கையான சம்பவம் இருக்கின்றது. நான் சிறு வயதில் இருக்கும் போது ஊரில் நடந்தது. அடுத்த பதிவில் அதை எழுதுகின்றேன்.

பொதுவாகவே இயற்கையில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு normal distribution ஆகவே இருக்கின்றது. முற்றிலும் எழுந்தமானமாக நூறு நூறு ஆட்களாக எடுத்து அவர்களின் பாடல் பாடும் திறமையையோ அல்லது பந்தடிக்கும் திறமையையோ கணித்தோம் என்றால், ஆச்சரியமேயில்லாமல் அவை கிட்டத்தட்ட ஒரு முடிவையே மீண்டும் மீண்டும் தரும். ஐந்து பேர்கள் நன்றாக பந்தை அடிப்பார்கள். ஐந்து பேர்களுக்கு அது சரியே வராது. ஓரளவு விளையாடக் கூடியவர்கள் என்று நடுவில் ஒரு ஐம்பது பேர்கள் இருப்பார்கள். இப்படியே தான் ஒவ்வொரு நிகழ்வின் ஒவ்வொரு தொகுதியும் இருக்கும்.

இதற்கும் நாள் - நட்சத்திரம் - கைரேகை போன்ற பிறப்பால் வரும் அடையாளங்கள் எவற்றுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதையே தான் நர்லிகர் அவர்களும் இன்னொரு விதமாகச் சொல்லி, அதை தரவுகளின் அடிப்படையில் நிரூபித்தும் இருக்கின்றார். என்னுடைய அனுபவங்களும், எண்ணமும் கூட இதுவேயாகவே எப்போதும் இருந்து வருகின்றது.

இதில் மிகவும் ஆபத்தான ஒரு நிலையும் இருக்கின்றது. நாங்கள் பிறக்கும் கணமும், பிறப்பில் கிடைக்கும் அடையாளங்களுமே பலவற்றை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது என்றால், ஸ்மிருதிகளும், வர்ணாசிரமக் கோட்பாடுகளும், சாதிய பாகுபாடுகளும் கூட சரியென்று ஆகிவிடும் அல்லவா. இந்தப் பாகுபாடுகளை, தீண்டாமைகளை கைக்கொள்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களின் ஆதராமே ஒவ்வொருவரின் பிறப்பே அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது என்பதே. தாழ்த்தப்பட்ட ஒரு வீட்டில் பிறந்தால், அதுவே தலைவிதி அல்லது கர்மவினைப் பயன் என்றும், அதை இந்தப் பிறவியில் அப்படியே வாழ்ந்து கடந்து விட வேண்டும் என்றல்லவா அவர்கள் சொல்கின்றார்கள். இதை ஏற்றுக் கொள்ளாமல், தீண்டாமைகளை எதிர்க்கும் நாங்கள், பிறப்பால் மட்டுமே கிடைக்கும் இன்னொரு தலைவிதியை மட்டும் சரியென்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்....

அண்ணா, உலகத்தை நோக்கிய என்னுடைய ஒரு கருத்தே இது. உங்களையோ அல்லது வேறு எவரையுமோ தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கும் பார்வையில் இதை நான் எழுதவில்லை.

ஒருவிடயம் உண்மையாக இருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும். ஒரே பிறப்பு எண்ணைக் கொண்ட பத்தாயிரம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் குறைந்தபட்சம் 75வீதம் - 7500 பேராவது தமது திகதி எண்ணுக்குரிய ஒரே தன்மையான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும். 9 எண்கள் மட்டுமே உள்ளதால் இது மிகவும் இலகுவானது

இதில் பிறந்த திகதி எண்ணுடன் கூட்டெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் 1 வீதம் இருந்தால்கூட 100 பேர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

திகதி எண், கூட்டெண், பெயர் ஆகிய மூன்றும் பொருத்தமான 100 நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை ஆராய வேண்டும். இவ்வாறு யாராவது செய்திருக்கிறார்களா ?

ஒவ்வொரு எண்ணுக்கும் பொதுப் பலன்கள் கூறும்போது பணக்காரன் ஆகுவார், உயர் பதவியில் இருப்பார், பிரபலமானவராக இருப்பார், கடுமையாக உழைத்து முன்னேறுவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கும். ஏழையாக இருப்பார், வாழ்க்கை முழுவதும் தோல்வியடைவார், முட்டாளாக இருப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்காது.

ஒருவரது வாழ்வில் பல ஆயிரம் நிகழ்வுகள் நடந்திருக்கும். பலன்களை வாசிக்கும் ஒருவர் தன்னோடு தொடர்புடைய நிகழ்வுகள் சில ஒத்துப் போகிறது என்றால் மீதியான நிகழ்வுகளைப் புறம்தள்ளி அதனை நம்ப ஆரம்பித்து விடுவார்.

எண்ணுக்கேற்றவாறு பெயரை வைத்துவிட்டால் எல்னோரும் வாழ்வில் வெற்றியடைந்துவிடுவார்களே. நிலமை அப்படி அல்ல. தெற்கசியாவை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்கள் அடக்குமுறைக்குள்ளும் வறுமைக் கோட்டுக்குக் கீழும், துன்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சோதிடத்தில் முனைவர் பட்டம் இருப்பதாக இன்று தான் அறிகிறேன். எந்த உயர் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது?

இப்படி காணொளிகள், தொலைக்காட்சிகளில் பலரை பார்த்துள்ளேன். இதனால் தான் கேள்வியும் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எண் சோதிடம் என இப்போ பார்க்கப்படுவதே - ஐரோப்பிய இறக்குமதிதான்.

இதை கண்டால் ஐரோப்பிய ஆரய்ச்சி கண்டு பிடிப்பு தான் எண் சோதிடம் என்று முகநூலில் ஆராய்ச்சி கட்டுரை எழுத தொடங்கிவிடுவார்கள்

5 hours ago, goshan_che said:

பொழுதுபோக்காக பார்த்து விட்டு நகர்ந்து விடல் வேண்டும்.

இதை விட சீமானின் பேச்சுக்களை பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சோதிடத்தில் முனைவர் பட்டம் இருப்பதாக இன்று தான் அறிகிறேன். எந்த உயர் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது?

ஜோதிடத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறுவது ஒரு கடினமான ஆனால் சாத்தியமான செயல்முறை ஆகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சி, அகாடமிக் திறன்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன.

ஜோதிடத்தில் Ph.D. பெறுவதற்கான படிகள்:

1. தகுதிகள்:

  • அடிப்படை தகுதி: ஜோதிடம் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலை (M.A. / M.Sc.) பட்டம்.

  • குறைந்தபட்ச மதிப்பெண்: பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் 55% (அல்லது CGPA 6.0) தேவைப்படுகிறது.

  • ஆராய்ச்சி திறன்: UGC-NET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கிடைக்கும் (இந்தியாவில்).

2. ஆராய்ச்சி தலைப்பு தேர்வு:

  • ஜோதிடத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை (எ.கா., கிரகங்களின் மனோதத்துவ தாக்கம், வர்த்தக ஜோதிடம், மருத்துவ ஜோதிடம்) தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • ஆராய்ச்சி தலைப்பு புதுமையானதாகவும், ஏற்கனவே உள்ள ஆய்வுகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

3. பல்கலைக்கழகம்/வழிகாட்டி தேர்வு:

  • பல்கலைக்கழகம்: இந்தியாவில், பீகார் ராஷ்டிரிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் போன்றவை ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன.

  • வெளிநாடுகளில்: சில அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் "மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்" (Religion & Cultural Studies) பிரிவில் ஜோதிடம் தொடர்பான ஆராய்ச்சியை அனுமதிக்கின்றன.

  • வழிகாட்டி: ஜோதிடத்தில் நிபுணத்துவம் உள்ள பேராசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. சேர்க்கை செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு & நேர்காணல்: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் Ph.D. நுழைவுத் தேர்வு நடத்துகின்றன.

  • ஆராய்ச்சி முன்மொழிவு (Research Proposal) சமர்ப்பித்தல்: உங்கள் ஆராய்ச்சி திட்டத்தை விளக்கும் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்.

5. பாடப்பிரிவு & ஆராய்ச்சி:

  • பாடப்பிரிவு வேலை: சில பல்கலைக்கழகங்கள் 6-12 மாத கோர்ஸ் வேர்க் (Course Work) தேவைப்படுத்துகின்றன.

  • ஆராய்ச்சி & தரவு சேகரிப்பு: ஜோதிட நூல்கள், குறிப்புகள், நேரடி ஆய்வுகள் (ஜாதக பகுப்பாய்வு) மூலம் தரவுகளை சேகரிக்க வேண்டும்.

6. ஆய்வறிக்கை & ஆய்வு:

  • ஆய்வறிக்கை (Thesis): 3-5 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

  • வாய்மொழி தேர்வு (Viva Voce): ஒரு குழு முன்பு உங்கள் ஆராய்ச்சியை பாதுகாக்க வேண்டும்.

7. Ph.D. வெளியீடு:

  • ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்கலைக்கழகம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும்.

நன்றி:ஆழமான தேடல்

  • கருத்துக்கள உறவுகள்

👇"மருத்துவ சோதிடம் - Medical Astrology " என்ற துறையில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் போட்டிருக்கிறார். ஆனால் "மருத்துவ சோதிடம்" என்ற துறையே மருத்துவத்திலோ, விஞ்ஞானத்திலோ ஒரு துறையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை (இப்படி செயற்கை நுண்ணறிவு சொல்கிறது). செயற்கை நுண்ணறிவு இப்படிச் சொல்லாமலே, இது கஞ்சா கப்சா என்று முனைவர் பட்ட ஆய்வு பற்றிப் பரிச்சயம் உள்ளோர் எவரும் உடனே கண்டு பிடித்து விடுவர்.

1 hour ago, nunavilan said:

இப்படி காணொளிகள், தொலைக்காட்சிகளில் பலரை பார்த்துள்ளேன். இதனால் தான் கேள்வியும் வந்தது.

1 hour ago, nunavilan said:

ஜோதிடத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறுவது ஒரு கடினமான ஆனால் சாத்தியமான செயல்முறை ஆகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சி, அகாடமிக் திறன்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன.

ஜோதிடத்தில் Ph.D. பெறுவதற்கான படிகள்:

1. தகுதிகள்:

  • அடிப்படை தகுதி: ஜோதிடம் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலை (M.A. / M.Sc.) பட்டம்.

  • குறைந்தபட்ச மதிப்பெண்: பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் 55% (அல்லது CGPA 6.0) தேவைப்படுகிறது.

  • ஆராய்ச்சி திறன்: UGC-NET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கிடைக்கும் (இந்தியாவில்).

2. ஆராய்ச்சி தலைப்பு தேர்வு:

  • ஜோதிடத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை (எ.கா., கிரகங்களின் மனோதத்துவ தாக்கம், வர்த்தக ஜோதிடம், மருத்துவ ஜோதிடம்) தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • ஆராய்ச்சி தலைப்பு புதுமையானதாகவும், ஏற்கனவே உள்ள ஆய்வுகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

3. பல்கலைக்கழகம்/வழிகாட்டி தேர்வு:

  • பல்கலைக்கழகம்: இந்தியாவில், பீகார் ராஷ்டிரிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் போன்றவை ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன.

  • வெளிநாடுகளில்: சில அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் "மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்" (Religion & Cultural Studies) பிரிவில் ஜோதிடம் தொடர்பான ஆராய்ச்சியை அனுமதிக்கின்றன.

  • வழிகாட்டி: ஜோதிடத்தில் நிபுணத்துவம் உள்ள பேராசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. சேர்க்கை செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு & நேர்காணல்: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் Ph.D. நுழைவுத் தேர்வு நடத்துகின்றன.

  • ஆராய்ச்சி முன்மொழிவு (Research Proposal) சமர்ப்பித்தல்: உங்கள் ஆராய்ச்சி திட்டத்தை விளக்கும் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்.

5. பாடப்பிரிவு & ஆராய்ச்சி:

  • பாடப்பிரிவு வேலை: சில பல்கலைக்கழகங்கள் 6-12 மாத கோர்ஸ் வேர்க் (Course Work) தேவைப்படுத்துகின்றன.

  • ஆராய்ச்சி & தரவு சேகரிப்பு: ஜோதிட நூல்கள், குறிப்புகள், நேரடி ஆய்வுகள் (ஜாதக பகுப்பாய்வு) மூலம் தரவுகளை சேகரிக்க வேண்டும்.

6. ஆய்வறிக்கை & ஆய்வு:

  • ஆய்வறிக்கை (Thesis): 3-5 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

  • வாய்மொழி தேர்வு (Viva Voce): ஒரு குழு முன்பு உங்கள் ஆராய்ச்சியை பாதுகாக்க வேண்டும்.

7. Ph.D. வெளியீடு:

  • ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்கலைக்கழகம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும்.

நன்றி:ஆழமான தேடல்

இதெல்லாம் எடு கோள் எடுத்து ஆராய இயலாத விடயம். நீங்கள் குறிப்பிட்ட பல்கலைகள் எந்த சோதிடருக்காவது முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறதாமா? "தமிழர் வாழ்வில் சோதிடத்தின் பங்கு" என்று ஒருவர் சமூகவியல் ஆய்வு செய்தால் , அது "சோதிடத்தில் முனைவர் பட்டம்" என்று கொள்ளப் பட வும் முடியாது. "சமூகவியல் முனைவர் பட்டம்" என்று தான் எடுத்துக் கொள்ளப் படும்.

சுருக்கமாக, சோதிடர் ஒருவர் தனக்கு சோதிடத்தில் PhD இருக்கிறது என்று சொன்னால், அதை "permanent head damage" 😎என்று எடுத்துக் கொண்டு நகர்ந்து விடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

அதை "permanent head damage"

எங்கள் நாட்டில் பனியன் of the highest degree என்றே வழங்குவோம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

ஒருவிடயம் உண்மையாக இருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும். ஒரே பிறப்பு எண்ணைக் கொண்ட பத்தாயிரம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் குறைந்தபட்சம் 75வீதம் - 7500 பேராவது தமது திகதி எண்ணுக்குரிய ஒரே தன்மையான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும். 9 எண்கள் மட்டுமே உள்ளதால் இது மிகவும் இலகுவானது

இதில் பிறந்த திகதி எண்ணுடன் கூட்டெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் 1 வீதம் இருந்தால்கூட 100 பேர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

திகதி எண், கூட்டெண், பெயர் ஆகிய மூன்றும் பொருத்தமான 100 நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை ஆராய வேண்டும். இவ்வாறு யாராவது செய்திருக்கிறார்களா ?

ஒவ்வொரு எண்ணுக்கும் பொதுப் பலன்கள் கூறும்போது பணக்காரன் ஆகுவார், உயர் பதவியில் இருப்பார், பிரபலமானவராக இருப்பார், கடுமையாக உழைத்து முன்னேறுவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கும். ஏழையாக இருப்பார், வாழ்க்கை முழுவதும் தோல்வியடைவார், முட்டாளாக இருப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்காது.

ஒருவரது வாழ்வில் பல ஆயிரம் நிகழ்வுகள் நடந்திருக்கும். பலன்களை வாசிக்கும் ஒருவர் தன்னோடு தொடர்புடைய நிகழ்வுகள் சில ஒத்துப் போகிறது என்றால் மீதியான நிகழ்வுகளைப் புறம்தள்ளி அதனை நம்ப ஆரம்பித்து விடுவார்.

எண்ணுக்கேற்றவாறு பெயரை வைத்துவிட்டால் எல்னோரும் வாழ்வில் வெற்றியடைந்துவிடுவார்களே. நிலமை அப்படி அல்ல. தெற்கசியாவை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்கள் அடக்குமுறைக்குள்ளும் வறுமைக் கோட்டுக்குக் கீழும், துன்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படித்தானே பொதுவாக இருக்கிறது 9 எண்ணுக்கும் வேறு வேறு குணங்கள் எழுதப்பட்டு இருக்கிறது அதுபோலவேதானே அவர்கள் குணாமாசங்களும் இருக்கிறது?

ஒரே மாதிரி வாழக்கை இருக்கவேண்டும் என்பதன் பொருள் சரியாக புரியவில்லை அவர் அவர் வாழ்வு அமையும் இடத்திற்கு ஏற்பத்தானே வாழக்கை இருக்கும் அந்த குறிப்பிடட பகுதியில் வாழும் மக்கள் கூடடத்தில் அவர்கள் தமக்கான குணாம்சங்களை கொண்டிருப்பார்கள். பணக்காரர் ஆவார்கள் என்று சொன்னால் எல்லோரும் எலன் மாஸ்க் ஆகுவார்கள் என்று அர்த்தம் ஆகுமா?

பெயருக்கான பலன்கள் இராசிபலன் கைச்சாத்திரம் போன்றவை பலவீனமான மனங்களை ஏமாற்றுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் அதில் எண்பது வீதம் என்றாலும் ஏமாற்று வேலை இருப்பதை ஓரளவுக்கு உணர முடியும். ஆனால் இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நான் மிக நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன் ஓரளவு உண்மை இருக்கிறது அல்லது அதை பொய் என்று நிறுவ கூடிய எதையும் நான் இன்னமும் காணவில்லை.

மேல பலர் காலண்டர் முறைமையை கூறி இருக்கிறார்கள் எந்த காலண்டர் இருந்தாலும் பூமி ஒருமுறை சுற்றுவது ஒரு நாள் அதை காலண்டரை வைத்து மறுக்க முடியாது. ஆகவே அந்த குறிப்பிடட தேதி அல்லது நாள் என்பது அது அதுவாகத்தான் இருக்க போகிறது நாம் அடையாள படுத்தும் முறைமை வேண்டுமானால் வேறாக இருக்கலாம்.

இவற்றில் எனக்கும் பெரிதான நம்பிக்கை இல்லை அனால் குறித்த இராசியில் உள்ள பொது குணாம்சங்கள் குறித்த திகதியில் பிறந்தவர்களின் குணாம்சங்கள் ஒன்றாக இருப்பதை நான் கவனித்து வருகிறேன். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு இங்கும் யாரும் சரியான பதில் எழுதி அதை பொய் என நிரூபிக்கவில்லை வேறு இடங்களிலும் நான் வாசிக்கவில்லை

5 hours ago, Maruthankerny said:

80 வீதம் ஏமாற்று வேலை இருப்பதை நீங்களே சொல்கிறீர்கள். ஒரு விடயம் இருக்கிறதா இல்லையா என்பதை நிறுவ வேண்டுமானால் இருக்கின்றது என்பதையே நிறுவ வேண்டும். சுலபமானதும் கூட. இல்லாததை இல்லை என்று நிறுவுவது கடினம்.

இதே திரியில் எழுதியவர்களில் அரைவாசிப் பேர் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். 50 வீதம் என்பது உண்மை ஆகாது, அது நிகழ்தகவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன்.

ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

80 வீதம் ஏமாற்று வேலை இருப்பதை நீங்களே சொல்கிறீர்கள். ஒரு விடயம் இருக்கிறதா இல்லையா என்பதை நிறுவ வேண்டுமானால் இருக்கின்றது என்பதையே நிறுவ வேண்டும். சுலபமானதும் கூட. இல்லாததை இல்லை என்று நிறுவுவது கடினம்.

இதே திரியில் எழுதியவர்களில் அரைவாசிப் பேர் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். 50 வீதம் என்பது உண்மை ஆகாது, அது நிகழ்தகவு.

சோதிடம் கூறும் ஒரு சாமியாரிடம் சேர்ந்து வேலை செய்த நபர் ஒருவர் வழங்கிய பேட்டி ஒன்று பார்ததேன். பிறக்கப்போகும் பிள்ளை ஆணா, பெண்ணா என்று யாராவது தம்பதிகள் வந்தால் ஒரு துண்டு சீட்டில் பெற்றோர் பெயருடன் பெண்பிள்ளை என்று எழுதி அதை ஒரு உறையில் போட்டு பூஜை செய்துவிட்டு, தம்பதியினரிடம் மாற்றி கூறுவாராம். அதாவது ஆண்பிள்ளை என்று கூறுவாராம். பின்னர் அந்த கவரை கடவுள் சிலைக்கு கீழ் வைத்து விட்டு உங்கள் குழந்தைக்காக தினமும் பூஜை செய்யப்போவதாக கூறுவாராம். ஆண்பிள்ளை பிறந்தால் அவர் சொன்னது பலித்து விட்டது என்று அந்த கவரை திரும்ப உடைக்காமல் அப்படியே அமுக்கிவிடுவாராம். தற்செயலாக பெண்பிள்ளை பிறந்தால் அவர்களிடம் நான் பெண்பிள்ளை என்று தானே உங்களுக்கு கூறினேன் என்று கதையளப்பாராம். பெற்றோர் நம்பவில்லை என்பதால் கவரை அவர்கள் முன்பாகவே பிரித்து அதில் பெண்பிள்ளை என்று எழுதியிருப்பதை காட்டுவாராம். பெற்றோரும் நாம் தான் தவறாக விளங்கி விட்டோம் சாமி சரியாக தான் சொல்லியிருப்பார் என்று திருப்தியடைவார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன்.

ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.

உண்மை தான் 13. வெள்ளிக்கிழமை எனில்நல்ல நிகழ்வுகள் எதுவும் செய்வதில்லை

சோதிடம். தெரிந்தால் மட்டுமே பிழை என்று கூற முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்த புதிதில் ஜேர்மனியில் ஒரு இலங்கை தமிழன். பல சிற்றிகளில். பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள் அன்று இந்த கையடையாளம். எடுப்பது வளர்ச்சி அடையவில்லை ஆனால் இன்று அப்படி செய்ய முடியாது உடனுக்குடன் பிடித்து விடுவார்கள் ஏனெனில் கையடையளம். பதிவது வளர்ச்சி அடைந்து விட்டது அதேபோல சோதிடக்கலை வளர இடமுள்ளது வளரும் எனவே சோதிடம்பிழை என்பது ஏற்க முடியாது

9 hours ago, Kandiah57 said:

உண்மை தான் 13. வெள்ளிக்கிழமை எனில்நல்ல நிகழ்வுகள் எதுவும் செய்வதில்லை

சோதிடம். தெரிந்தால் மட்டுமே பிழை என்று கூற முடியும்

ஐரோப்பியர்கள் 13 இனை ஒதுக்கக் காரணம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. அது அப்படியே பரவி விட்டது.

எங்கள் ஊரில் 13 இப்படி இல்லையே.

சீனாவில் 13 கூடாத இலக்கம் இல்லையாம். மாறாக 4 இனை ஒதுக்குகிறார்கள். பழைய எகிப்த், கிரேக்கத்தில் 7 ஒதுக்கப்பட்டதாம். இந்தியாவில் 8 இனை ஒதுக்குகிறார்கள். எண் சாத்திரம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அல்லது மதத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடுமா ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2025 at 10:07, குமாரசாமி said:

உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள்

எனக்கு தெரிந்த ஒருவருக்கு 2000 ம் ஆண்டு, ஜனவரி 1 இல் குழந்தை பிறந்தது. எல்லோரும் பையன் பின்னுவான் பாருங்களேன் எண்டு சொன்னார்கள்.

சின்ன வயதில் இருந்த அவரிடம் இதற்கான அறிகுறியை நானும் தேடிப்பார்த்தேன் காணவில்லை.

இப்போ இளந்தாரி - வாழ்க்கையில் ஒரு விடயத்தில் மட்டும் உச்சமடைந்துள்ளார். அது என்னத்தில் என்பதை சொல்லாமலே விளங்கும் என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

எனக்கு தெரிந்த ஒருவருக்கு 2000 ம் ஆண்டு, ஜனவரி 1 இல் குழந்தை பிறந்தது. எல்லோரும் பையன் பின்னுவான் பாருங்களேன் எண்டு சொன்னார்கள்.

முதலாம் எண், சிம்ம ராசி இப்படியான ஒரு சிங்கத்தை நான் சிறு வயதில் இருந்தே மிக நன்றாக அறிந்திருந்தேன். அந்தச் சிம்மம் என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ அவ்வளவாக முயற்சி எதுவும் செய்யவில்லை. அந்த மனிதனின் கடைசி இரு நாட்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அவர் வாயாலேயே, வாயால் மட்டும், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று எல்லா கோள்களுக்கும் போய் வரும் ஆற்றல் கொண்டிருந்தார். ஞாயிறில் கூட (சூரியன்......!) இறங்கி ஏறுவேன் என்பார்.

ஒரு மண்டைதீவுச் சாத்திரியார் பற்றி முன்னரே இங்கு களத்தில் எழுதியிருக்கின்றேன். ஒரு பக்கம் மண்டைதீவுச் சாத்திரியார், இன்னொரு பக்கம் சிம்மம்.................. தப்பிப் பிழைத்ததே ஒரு சாதனை தான்.......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

ஐரோப்பியர்கள் 13 இனை ஒதுக்கக் காரணம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. அது அப்படியே பரவி விட்டது.

எங்கள் ஊரில் 13 இப்படி இல்லையே.

சீனாவில் 13 கூடாத இலக்கம் இல்லையாம். மாறாக 4 இனை ஒதுக்குகிறார்கள். பழைய எகிப்த், கிரேக்கத்தில் 7 ஒதுக்கப்பட்டதாம். இந்தியாவில் 8 இனை ஒதுக்குகிறார்கள். எண் சாத்திரம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அல்லது மதத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடுமா ? 😂

இல்லை ....ஒருபோதும் இல்லை நீங்கள் மேலே சொன்ன அனைத்தும் எண் சோதிடப்படி தான் செய்யப்படுகிறதா?? இல்லை ..அவர்களுக்கு எண் சோதிடம் என்றால் என்ன என்றே தெரியாது

பூனை இடம் போனால் கூடாது என்றார்கள் இது அனுபவம் சோதிடமில்லை

ஒரு அலுவலாக. போகிறோம்,.வழியில் காணும் நண்பர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் அந்த காரியம் தோல்வியாக முடியும் இது நம்பிக்கை சோதிடமில்லை

நீங்கள் எண் சோதிடம் படித்து உள்ளீர்களா ?? இல்லை என்றால் எப்படி பிழை என்று கூற முடியும் ??? முடியாது,.....அப்படி சொன்னால் அது பிழை ஆகும்

மேலும் பூச்சியம். தொடக்கம் ஒன்பது வரை பத்து எண்களில் உலகிலுள்ள அனுவருக்கும். சொல்வது சரியா?? என்று எப்படி கேட்க முடியும் ??? இந்த கோடானுகோடி எண்கள் மேற்படி பத்து எண்களில் தான் உருவாகிறது அந்த எண்கள் இல்லாமல் ஒரு எண்ணை கூற முடியுமா??? முடியாது,........ஒருவராலும். முடியாது இந்த பத்து எண்களிலிருந்து கோடிக்கணக்கில் எண்கள் பிறக்கும் என்றால்,....ஏன் இந்த பத்து எண்களை வைத்து கோடிக்கணக்கானவர்களில். பலனை கூற முடியாது ......முடியும் நான் நம்புகிறேன் உங்களை நம்பும்படி கூறவில்லை .....

முதலாவது எண்ணில் பிறந்தவர் முதலாவது எண்காரர் என்பது தவறு சிலசமயம்.

அவர் பிறந்த தேதி,..மாதம் வருடம் ...ஆகியவற்றின் கூட்டு எண். ஐந்து என்றால் ஐந்தாவது எண் ஆக இருக்க முடியம் அதாவது 1விட. வல்லமையுள்ளதாக இருக்கும் ஆகவே அவர் ஐந்தாவது எண்காரர். ஆவார் மேலும் இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் சோதிடர். சொன்னது பிழை என்கிறார்கள்,......எற்றுக்கொள்ளலாம். ...உங்களை போல் அவருக்கும். எண் சோதிடம் தெரியவில்லை .....இதை வைத் எப்படி எண் சோதிடம். பிழை என்று கூறலாம் ??

பௌதிகத்தில். ஒரு பெயில். பண்ணி விட்டார் பௌதிகம். பிழை ஆகுமா?? அல்லது அவருக்கு பௌதிகம். தெரியவில்லலையா ???

2 hours ago, ரசோதரன் said:

முதலாம் எண், சிம்ம ராசி இப்படியான ஒரு சிங்கத்தை நான் சிறு வயதில் இருந்தே மிக நன்றாக அறிந்திருந்தேன். அந்தச் சிம்மம் என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ அவ்வளவாக முயற்சி எதுவும் செய்யவில்லை. அந்த மனிதனின் கடைசி இரு நாட்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அவர் வாயாலேயே, வாயால் மட்டும், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று எல்லா கோள்களுக்கும் போய் வரும் ஆற்றல் கொண்டிருந்தார். ஞாயிறில் கூட (சூரியன்......!) இறங்கி ஏறுவேன் என்பார்.

ஒரு மண்டைதீவுச் சாத்திரியார் பற்றி முன்னரே இங்கு களத்தில் எழுதியிருக்கின்றேன். ஒரு பக்கம் மண்டைதீவுச் சாத்திரியார், இன்னொரு பக்கம் சிம்மம்.................. தப்பிப் பிழைத்ததே ஒரு சாதனை தான்.......................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.